வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

வாத்தியாரின் சரிதாயணம், சிரிதாயணமே!





     வலையுலக நண்பர்களே!  சில நாட்களுக்கு முன், “சரிதாயணம் எனும் நூலை எழுதிய எழுத்தாளர் பாலகணேஷ் அவர்களை எதிர்த்து கு.வா.க (குழப்ப வாதிக் கட்சி) “அவர் தனது நூலில் “அரசியல் வாதிகள் எல்லோருமே கோமாளிகள் என்று சொல்லியதால் நாங்கள் அதை வன்மையாகக் கண்டித்து ஒரு நாள் முழுவதும் தலைவி சரிதாவின் பெயரில் “உண்ணும் விரதம்” இருப்போம்.”  என்று ஆர்பாட்டத்தைத் தொடங்கியிருக்கின்றார்கள் என்ற செய்தியை வெளியிட்டோம். http://thillaiakathuchronicles.blogspot.com/2015/01/Vayai-Moodi-Pesavum.html இதை அறிந்ததும், வெங்கட்ஜி, டிடி போன்றவர்கள் “எங்கள் வாத்தியார் எதையும் எதிர்கொள்வார்.  இது அவருக்கு ஜுஜூபி” என்று ரஜனி ஸ்டைலில் சொல்லிக் கிளம்ப, வலையுலக நண்பர்கள் அனைவரும் வாத்தியாரின் சிஷ்யக் கோடிகளான சீனு, ஆவி, அரசன், ஸ்கூல்பையன், கார்த்திக் சரவணன், ரூபக், குடந்தையூரார் தலைமையில் வாத்தியாருக்காக அணிவகுத்து நின்றார்கள். நாங்கள் விடுவோமா? செய்தி வெளியிட அங்கு சென்றுவிட்டோம். நம் நண்பர் ஸ்ரீராமும், சகோதரி மைதிலியும் கூட ஆதரவு கொடுத்துக் கலந்து கொண்டனர். 

கு.வா.க. கட்சியின், தலைவி சரிதாவின் மைசூர்பாகு ஒரு புறம் அடுக்கப்பட்டிருந்ததால், போராட்டத்திற்கு ஆள் சேராமல் நமுத்துப் போகும் நிலையில் இருந்ததால், “உண்ணும் விரதப் போராட்டம்” ஆயிற்றே, நாங்கள் கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பா சொல்லலாமா (அப்பத்தானே போராட்டம் வலுக்கும் எங்களுக்கும் அவல் கிடைக்கும்) என்று யோசித்த வேளையில் நண்பர் ஸ்ரீராமும், “சரிதாயணம் புத்தகத்தை எதிர்த்து நானும் தொடர்ந்து கிருஷ்ணா ச்வீட் மைசூர்பா சாப்பிடும் போராட்டத்தை அறிவிக்கிறேன்... யாராவது வாங்கிக் கொடுத்தால்!” என்று சொல்லிவிட, “ஆஹா அருமையான வாய்ப்பு” என்று சொல்லி கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பா பார்சல்/இலவசம் என்று கூவி கட்சியை அறிவிக்கச் சொன்னோம். இப்போது அங்கு போராட்டப் பந்தலிலிருந்து நேரடிச் செய்திகள்.

“எங்கள் தலைவி சரிதா வாழ்க! அவரது செம்மொழிப் பணி வாழ்க!” என்ற கோஷம் காதைப் பிளக்கின்றது.  கணேஷ் அண்ணாவிற்குச் செய்தி பறக்கின்றது.  “ஸார், அண்ணியின் மைசூர்பாகு இல்லையாம், கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பாவாம்.  அதனால தைரியமா வாங்க சார்” என்று ஆவி தனக்கும் இனிப்பு பிடிக்கும் என்பதால் ஃபோன் போட, கணேஷ் அண்ணா,  “நீங்கள் போராட்டத்தைச் சமாளிச்சுக்கங்க.  நான் க்ளைமாக்ஸ் ஃபைனல் என்ட்ரிதான், நம்ம தமிழ் படங்களைப் போல” என்று சொல்லிவிட, வாத்தியார் அணி தயாரானது.  இப்போது லைவாக…

கு.வா.க : எங்கள் தலைவிக்கு, ஹிந்தி, பொது அறிவு இல்லை என்பதை ஹைலைட் செய்து “அடியே..பையன் இல்லடி.  பய்யான்னா இந்தில சகோதரான்னு அர்த்தம்” என்றும், டி வி ஷோவில், கப்பு கேட்ட பொது அறிவுக் கேள்விகளுக்கு எங்கள் தலைவிக்குப் பதில் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். எங்கள் தலைவி வேண்டுமென்றேதான், சரியான பதில் தெரிந்திருந்தும் சொல்லவில்லை.  அவர்கள் நோக்கம் அதுவல்ல. எங்களில் ஒருவராகத்தான் அவர் இருக்கின்றார். என்பதை மிகத் தெளிவாக, “எங்களுக்கு ப்ரொக்ராம்ல கலந்துக்கறதை விட “கப்பு”வைப் பாக்கறதுக்குதான் ஆசை.  அதனால வருத்தமில்லை” என்று எப்போதும் தோல்வி கண்டு பழக்கப்பட்டுப் போன எங்கள் தலைவி பெருந்தன்மையுடன் சொல்லியதை இங்கு சொல்லிக் கொள்கின்றோம். மட்டுமல்ல எங்கள் தலைவியை ஏதோ ரஷ்யப் பெண்மணி போல் “யெஸ்கிவ்” என்றிருக்கின்றார்.  அவர் வீரத் தமிழ் பெண் என்று அவருக்குத் தெரியாதா?

வாத்தியார் அணியிலிருந்து அரசன் : யோவ் முட்டா பசங்களா, அடிப்படை இங்கிலிஷ் தெரியாதவனுங்க எல்லாம் கட்சி கட்டிக்கிட்டு வந்துட்டானுங்க.  “யெஸ்கிவ்” நா என்னானு அர்த்தம் தெரியுமா? சரி-யெஸ்-தா-கிவ் இப்படித்தான்யா எங்க வாத்தியாரு அழகா, செல்லமா அண்ணிய சொல்லிக் கூப்பிடுவாரு.  இது கூடத் தெரியாத கேனப் பசங்க.

(இரு அணிகளும் வாத்தியாரின் வரிகளை வைத்தே சரிக்குச் சரி மோதுகின்றார்கள்)

கு.வா.க.: எங்கள் தலைவி ஹோட்டலில் புதியதாய் ஒரு அயிட்டத்தை “ஹூக்குவெஜி-ட்ரைமா சாப்பிட்டால் அது உப்புமா என்று உங்கள் வாத்தியார் கிண்டல் செய்கிறார். “இப்ப மட்டும் என்ன மூணு பொண்டாட்டியா வெச்சிருக்கேன்? ஒண்ணையே சமாளிக்க முடியலையே” என்று வீட்டு ஓனரிடம் எங்கள் தலைவியை பற்றிச் சொல்லுதல், எங்கள் தலைவியின் கண் நன்றாக இருந்தாலும் அதை “கண் செக்கப் பண்ணி கண்ணாடி போடணும் உனக்கு” என்று சொல்லுதல், அவர் நண்பர் குழந்தைகள் வந்து அதகளம் செய்யலாம் ஆனால் எங்கள் தலைவியின் அண்ணன் குழந்தைகள் மட்டும் வரக்கூடாது என்று சொல்லுவது எல்லாம் நியாயமல்ல.  அது மட்டும் இல்ல, எங்க தலைவிய “அம்மாவைப்’ பார்க்கும் அ.தி.மு.க. அமைச்சரைப் போல பயத்துடன் அவளை ஏறிட்டேன்” என்று சொல்லி மற்ற கட்சித் தலைமையுடன் ஒப்பிட்டுருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

வாத்தியாரணி: யோவ் எங்க வாத்தியார வீடு மாத்த வைக்கறது நியாயமா.  ஏன், அண்ணி ஸ்கூட்டர் ஓட்டக் கத்துக்க வைச்சு பல பேர ஆஸ்பத்திரிக்குப் போக வைச்சாலும் கத்துக் கொடுத்தாரு. இப்ப கார் வேற ஓட்டக் கத்துக் கொடுத்துருக்காரு இல்லன்னா எங்க வாத்தியார் குடும்ப பரம்பரையையே வம்புக்கு இழுபாங்கன்னு. கார் ஓட்டக் கத்துக்கிட்டு ஸ்கூட்டரை அவங்க அண்ணனுக்கு வித்து மாசா மாசம் 100 ரூபாய் தர வைத்து எங்க வாத்தியாரின் மண்டையை வீங்க வைத்ததுக்கு அண்ணிய பதில் சொல்லச் சொல்லுங்க..

கு.வா.க: எங்கள் தலைவியின் பாட்டையும், நடனத்தையும் கலாய்த்தது எங்கள் மனதை நோகடித்தது.  எங்கள் தலைவி எவ்வளவு அக்கறை மிக்கவர், உங்கள் வாத்தியாரின் உடல் நலனில்.  அக்கறையாகத் தேனும், பச்சைக்காய் வகைகளையும் கொடுத்து, தனது எடை 70 திலிருந்து 88 ஆனாலும் பரவாயில்லை என்று உங்கள் வாத்தியாரின் எடையை 65 லிருந்து 45 ஆகக் குறைத்தாரே! இதற்கு என்ன சொல்லுகின்றீர்கள்?

வாத்தியாரின் அணி: எங்க வாத்தியார் மயங்கி விழுந்தது உங்களுக்குத் தெரியாதுல்ல வாயப் பொத்துங்க.. எங்க வாத்தியார் எவ்வளவு பெரிய எழுத்தாளர்! அவரு ஒரு பேய் கதை எழுதலாம்னு சொன்னப்ப, “சுயசரிதம் எழுதறதுக்கு உங்களுக்கு அவ்வளவு ஆசையா?” நு கேட்டாங்களே தலைவி அது மட்டும் கிண்டல் இல்லையா?

கு.வா.க.: அதான் அவரு “ஆமா” னு சொல்லி மாட்டிக்கிட்டாருல்ல...”டியர்! லைஃப்ல முதல் தடவையா ஒரு பஞ்ச் அடிச்சிட்ட...”நு ஒத்துக்கிட்டாருல்ல!  அது எங்கள் தலைவியின் வெற்றி!!  எங்கள் தலைவி வாழ்க!  எங்க தலைவி மிருகங்களின் மேல் அன்பு கொண்டவர். அவர் நாய் குட்டி ஒண்ணு வளர்க்க, அது தூங்குவதற்குக் கஷ்டப்பட, உங்க வாத்தியார், “நீ வேணா தாலாட்டுப் பாடித் தூங்க வையேன் ..” என்று சொல்லி நகைத்தார். எங்கள் தலைவியின் டார்லிங்கை/செல்லத்தை அவர்களுக்குத் தெரியாமல் வெளியே அனுப்ப அவர் செய்தது எங்களுக்குத் தெரியாதாக்கும்?
எங்கள் தலைவி செம்மொழி வளர்க்க எத்தனை பாடுபட்டார் தெரியுமா? வீட்டிலும் செம்மொழியில், “நாதா, மாலை அலுவலகத்திலிருந்து விரைவாய் திரும்பி விடுங்கள்.  நாம் கடற்கரைக்குச் சென்று, பின் பெரிய அங்காடிக்குச் செல்லலாம். அங்கே நம் இல்லத்திற்காய் பொருட்களும், எனக்கு சில அழகுசாதனப் பொருட்களும் வாங்கி வர வேண்டும்.” என்றும், வீட்டில் மட்டுமல்ல வெளியிலும், பேருந்தில் கூட “ஐயா, பனிக்கூழ் இல்லத்துக்கு ஒரு சீட்டு தாருங்கள்” என்று கேட்டு அசத்தியவர்!
உங்க வாத்தியார், எங்க தலைவியின் டேபிள் ஃபேனைச் சரி பண்ணுகின்றேன் பேர்வழி என்று டுர்..டுர் என்று சத்தம் வரும் படி செய்ததையும், “கோலப்பொடியில உப்புமா” செஞ்சத..ஹஹஹஹ்....எங்க தலைவி எழுதியதும், உடனே, அவரு எங்க தலைவிய எழுதுவதை நிறுத்துனு சொல்லிட்டாரு. எங்கள் தலைவியின் உரிமையை பறித்ததை, கு.வா.க. வின் பெண்கள் குழுவாகிய நாங்களும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

வாத்தியார் அணி சார்பாக கார்த்திக் சரவணன்: அதானே பார்த்தோம்! எங்க வாத்தியார் கரெக்டாத்தான் சொல்லிருக்காரு. “உலக அரசியல்ல நிறைய கோமாளிங்க இருக்காங்க.  அது மாதிரி இந்திய அரசியல்ல இருக்கற சிறந்த கோமாளி யாருன்னு நீங்க சொல்லணும். இதான் உங்களுக்கானக் கேள்வி. நாலு ஆப்ஷன் தர்றேன்” அப்படினு.  இங்க பார்வையாளர் யாராவது சொல்லுங்களேன்.

பார்வையாளர்: என்ன சொல்றதுன்னே புரியலை.  எல்லாருமே கோமாளி மாதிரிதான் இருக்காங்க.  ஒரே குழப்பமா இருக்கு ஸார்”

வாத்தியார் அணி சீனு: பாத்தீங்கல்ல, மக்களே என்ன சொல்றாங்கன்னு...

கு.வா.க: மக்களா..ஹ்ஹஹஹ் அவங்களுக்கு என்ன தெரியும்?! உங்க வாத்தியாருக்கு, எங்கத் தலைவி தீபாவளிக்கு வாங்கித் தரச் சொன்ன சாமான் கூட சரியா வாங்கத் தெரியல இதுல நையாண்டி வேற “எனக்கெல்லாம் சோப்பு ஒரு மாசம்தாண்டி வருது.  நீ எப்படி அதே சோப்பை ரெண்டு வருஷமா தேய்ச்சுக் குளிச்ச?” அப்படினு.

வாத்தியார் அணி டிடி: அண்ணியோட அம்மா செஞ்ச அல்வா சாப்டு எங்க வாத்தியார் நாக்கு ஒட்டி பேச முடியாம எப்படிக் கஷ்டப்பட்டார் தெரியுமா? அதையெல்லாம் பொறுத்துக் கொண்டாரே எங்கள் வாத்தியார். வெங்கட்ஜி: டெல்லியில் வாத்தியார் என்னுடன் வண்டியில் பயணித்ததையும் என்னுடன் உணவகத்தில் உணவு உண்டதையும் மிகவும் பெருமையாகக் கருதுகின்றேன். உங்க கட்சித் தலைவியின் மாமா நரசிம்ம சாஸ்திரிகள், ஏர்போர்ட்ல கஸ்டம்ஸ் ஆஃபீசர் “நீங்க சைவமா”னு கேட்டதற்கு, “சைவமாவது? நான் வைஷ்ணவன்மா.  நெத்தில பாரு எவ்ளோ பெரிசா ஸ்ரீசூர்ணம் இட்டுண்டிருக்கேன்” என்று நெற்றியைக் காட்டி எங்கள் வாத்தியாருக்குத் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியதை தலைவி கண்டுகொள்ளவே இல்லை.

கு.வா.க.: அது சரி உங்க வாத்தியார் ஏன், தலைவி மாமா ஃபோட்டோல “நாமம் போடாம, பட்டைய போட்டுருக்காரு”

வாத்தியார் கட்சி மைதிலி: நீங்க பக்கா அரசியல் வாதிங்கனு கரெக்ட்டா காமிச்சுட்டீங்க...நாமம், பட்டைனு சாதிய ஏன் கொண்டு வர்ரீங்க இங்க? ஏற்கனவே யானைக்கு என்ன நாமம் போடறதுனு சண்டை நடந்து ஓஞ்சுருச்சு...இப்ப நீங்க ஆரம்பிச்சீங்கனு வையுங்க.....உடனே வாத்தியார் கட்சி ஸ்ரீராம் அவர்கள் தொடர்ந்து, “உங்க மாமா “ஐயையோ...ப்ளேனே பரவாயில்லை போலயே...இந்தக் கட்டேல  போறவன் ப்ளெனை விட வேகமாப் பறக்கறானே” நு சொல்லி எங்க வாத்தியார பாடாய் பாடு படுத்தினாரே.

(பாலகணேஷ் சார் உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட்!  இந்த “சரிதாவும், ஏரோப்ளேனும், பின்னே ஞானும்” எங்களுக்கு மௌலியின் ஃப்ளைட் நம்பர் 172 வை நினைவு படுத்தியது!  மட்டுமல்ல சரிதாவின் மாமா நீலுவாகவும், அவர் அந்த டயலாக் பேசுவது போலவும் தோன்றியது! )

கு.வா.க: உங்க வாத்தியார் என்ன கேலி செஞ்சாலும், எங்க தலைவிதான் அந்த பரந்தாமன் மாமாவை “சபதம் போட்டு” வீட்டை விட்டு அனுப்பியது. அவருக்கு வெற்றிதானே!  எங்க தலைவிய மோகினிப் பிசாசுனு சொன்னாலும் அந்த மோகினிப் பிசாசை அடித்து விரட்டிய வீராங்கனை எங்கள் தலைவி! எங்க தலைவி “ஏசி போடுனா”  அதை ஏசிப்போடுன்னு வேணும்னு அர்த்தம் பண்ணிக்கிட்டு தாறுமாறா திட்டியதை எதிர்க்கின்றோம்.  ஏன் எங்க தலைவி பிடிவாதம் பிடிச்சு ஏ.சி. வாங்கினா தப்பா?  டி.வி சீரியல்ல நடிச்சது தப்பா?  உங்க வாத்தியார், “ஹூம் ஒரு காலத்துல டெலிஃபோன்ல டிவி சேனலுக்குப் பேசி கப்ஸி ரமாவையே அழவெச்சவ நீ! இந்த டைரக்டர் உங்கிட்ட என்ன பாடுபடப் போறானோ? என்று கப்சி ரமாவிடம் பேசியதைக் கலாய்த்திருக்கிறார்.  எங்க தலைவி செல் ஃபோன்-ஸ்மார்ட் ஃபோன் கேட்டது தப்பா? ஏன், உங்க வாத்தியார் எங்க தலைவியோட உறவினர் நாணாவின் மூக்கைக் கேலி செய்தாலும், எங்க தலைவிதானே பொருவிளங்கா உருண்டையால அடித்து, ரௌடிகள்கிட்டருந்து உங்க வாத்தியாரக் காப்பாத்தினாங்க!  அது தெரியுமா?  அதான் டெல்லி வரை போயிருக்காங்க..

வாத்தியார் அணி: அண்ணிக்கு செல்ஃபோன் யூஸ் பண்ணவே தெரியாது. கால் கட் பண்றதுக்குப் பதிலா ஸ்விட்ச் ஆஃப் செய்யறது வழக்கம். இதுல வேற ஐஃபோன் கேக்குதாக்கும், எங்க வாத்தியாருக்குத் தண்ட செலவு!. உங்க கட்சியே கேனை! அதுக்கு ஒரு தலைவி? அர்விந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மிங்கற கட்சியோட தலைவர்னு கூடத் தெரியாம......இவங்க எல்லாம் எம்.பியாம். சீனு தொடர்கிறார்: அண்ணி, எங்க வாத்தியாரத்தான் எம் பி பதவிக்கு நிக்கச் சொன்னாங்க, ஆனா நான் தான் “அண்ணி சூப்பர் ஐடியா!  ஆனா ஒரு சின்னத் திருத்தம்.  சாருக்குப் பதிலா நீங்களே நிக்கணும்.  அவரை விட நீங்கதான் ஃபேமஸ்.  உங்கள வைச்சுத்தான் அவரே பேரு வாங்கி இருக்கார்?!  அப்படினு சொல்லி உங்கத் தலைவிக்கு, எங்க அண்ணிக்கு, நான் எம்பி பிச்சை சாரி பிட்டைப் போட்டது....அப்புறம் நாங்க எல்லாரும் தான், மேல சொன்னவங்க போக, மதுமதி, பிரபாகரன், மெட்ராஸ் பவன், செல்வின், ஆரூர்மூனா, சேட்டைக்காரன், கே.ஆர்.பி செந்தில், மதுரைத் தமிழன், தமிழ்வாசி னு படையே கூடி, மகளிர் அணியைக் கூட்டியது, இப்போ எம்.பி ஆக்கியது எல்லாம் நாங்கதான் தெரிஞ்சுக்கங்க... சரி, அதனால இப்ப என்ன பண்ணனும்றீங்க?

கு.வா.க: நிறுத்தணும்! எல்லாம் நிறுத்தணும்! எங்க தலைவிக்கு உங்க வாத்தியார் அவர ரௌடிகள்கிட்டருந்து காப்பாத்தின உடனே, “உனக்கு என்ன வேணும்னாலும் கேளு, தர்றேன்” நு சொல்ல “அப்படியா? அப்படின்னா இனிமே என்னையும் என் ஃபேமிலியையும் கலாய்சுக் கதை எழுதறத நீங்க நிறுத்தணும்,  வாக்குக் கொடுத்திருக்கீங்க.  மீறக் கூடாது” நு சத்தியம் வாங்கிருக்காங்க.

வாத்தியாருக்கு நியூஸ் பறந்தது. அவர் உடனே, அப்பப்போ மூச்சு வாங்கி நிற்கும் தனது ஜெட் மயில் வாகனம் போன்ற வண்டியில் ஸ்டைலாகக் கிளம்பி ஸ்பாட்டுக்கு வந்தார்.
வாத்தியார்: ஏலேய்! கு.வா.க கட்சசிக்காரங்களே!  நீங்க யாராவது உங்க தலைவி சரிதாவப் பாத்துருக்கீங்களாலே? எப்படி நீங்க பாக்கமுடியும்? பாக்காத ஒருத்தர தலைவியா வைச்சு எப்படியா போராட்டம் பண்ணுவீங்க? அதான் உங்கள நான் கோமாளிங்கனு சொன்னது! அந்த சரிதா என் மனசுக்குள்ள இருக்கற நாயகிலே!! அவ எனக்கே எனக்குத்தான்! அவள உங்க யாராலயும் பாக்க முடியாது! நான் அப்படித்தான் எழுதுவேன். கேட்டுக்கங்க தில்லைஅகத்தாரே, நீங்க என்னதான் எனக்கும், சரிதாவுக்கும் இடைல கோள் மூட்டிக் கொடுத்து இந்த மாதிரி பிட் போட்டு எதிர்க்க வைச்சாலும், என் நாயகியப் பத்தியும், அவ குடும்பத்தைப் பத்தியும் இனியும் எழுதுவேன்.  உங்களால நிறுத்த முடியாது! ஆகுற சோலியப் பாருங்கலேய்! அவதான் என் நாயகி! வேற யாரும் கிடையாது!

       இருந்தாலும் கு.வா.க க்கு என் நன்றிகள்! நான் என் சரிதாவின் மைசூர்பாகு உங்களுக்குக் கொண்டு வந்துருக்கேன், இவ்வளவு நேரம் கத்தி, இப்படிப் போராட்டம் பண்ணி, உலகுக்குக் காமிச்சு என் சரிதாவின் டிஆர்பி ரேட்டைக் கூட்டினதுக்கு! போற போக்குல தின்னுட்டுப் போங்கலேய்!

       சரிதாவின் மைசூர்பாகு என்றவுடன், தலைவி என்று கூடப் பாராமல், கூட்டம் பல்பு வாங்கி துண்டைக் காணோம், துணியக் காணோம்னு ஓடி விட்டது!  க்ருஷ்ணா ஸ்வீட் மைசூர்பா ஒரு பிட்டுக் கூடக் காணவில்லை. நண்பர் ஸ்ரீராமிற்கு வருத்தம் மைசூர்பா கிடைக்கவில்லையே என்று! “ழே” என்று முழித்துக் கொண்டிருந்தது சரிதாவின் மைசூர்பாகுகள்!

வாத்தியார் அவர்களின் இந்தப் புத்தகங்களை நீங்கள் எல்லோரும் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம். நிச்சயமாகச் சிரித்து, சிரித்துப் புண்ணாகும் உங்கள் வயிறு என்பது கியாரண்டி! அப்படி ஒரு நகைச்சுவை! இப்போது படத்தில் வரும் காமெடி ட்ராக்குகள் எல்லாம் ஒன்றுமே இல்லை! இதற்கு இணையாக!  இதனுடன் சிரித்திரபுரமும் இருக்கின்றது.  அதுவும் சிரிப்புக் கண்ணி வெடிகளைக் கொண்டது! வாசித்துப் பாருங்களேன்! சிரியுங்கள்! கவலைகளை மறந்து, சிரித்துக் கொண்டே இருங்கள்!  நன்றி வாத்தியார் பாலகணேஷ் அவர்களுக்கு.  அருமையான  புத்தகம் தந்ததற்கு!

பின் குறிப்பு:  இது நகைச்சுவைப் பகுதி என்பதால் “நான் இருக்கிறேன் அம்மா” இங்கு பேசப்படவில்லை.  அது பிறிதொரு தருணத்தில்!

சரிதாயணம் சிரிதாயணம் 2 - நான் இருக்கிறேன் அம்மா – ரூ. 70

சரிதாயணம் – சிரித்திரபுரம் ரூ. 60

கிடைக்கும் இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர், வெஸ்ட் –பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்.


      


47 கருத்துகள்:

  1. எல்லோரையும் இணைத்து நல்லாவே கலாய்த்து இருக்கிறீர்கள் நானும் சரிதாயணம் வாங்க வேண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே! மிக்க நன்றி! அப்போ எப்புடி அன்று உங்கள் பதிவில்?!?!?!

      நீக்கு
  2. ஹாஆஹா :) சிரிதாயணம் ...அருமையான விமரிசனம் ..ஊருக்கு வரும்போது வாங்கணும் கண்டிப்பா ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் தளத்தில் என் போன் நம்பரும், மின்னஞ்சல் முகவரியும் இருக்கு ஏஞ்சல்... ஊருக்கு வர்றப்ப தகவல் சொல்லும்மா... நான் வந்து பார்த்து புத்தகம் தர்றேன்.

      நீக்கு
    2. மிக்கனன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  3. ஆசானே ! உங்களுக்கே இது அடுக்குமா?
    எனக்கேத் தெரியாமல் எங்க ஊர் கெஸ்ட் ஹவுஸில்
    புத்தகம் விற்க ஏற்பாடா?
    நூலைத் தராமல் என்னை நூடுல்ஸ் ஆக்கி விட்டீர்களே அய்யா!
    கேட்க ஆளில்லை என்று நினைத்து விட்டீர்களா?
    இதைக் கேட்டால் கொடுவா மீசை அண்ணாச்சி கொதித்து எழுந்து வருவார் தெரியுமா?
    (எவ்வளவு நாள்தான் சீரியசாகவே எழுதுவது அதான் நாமளும்........ ஹி!!!!!!!!)
    புத்தக விற்பனை களை கட்டட்டும். வாழ்த்துகள்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! நூல் பாண்டிச் சேரி கெஸ்ட் ஹவுசில் அல்ல. அதன் அருகே உள்ள டிஸ்கவரி புக் பேலஸில். புத்தகம் எழுதியவர் வலையுலக வாத்தியார் அண்ணன் பாலகணேஷ் அவர்கள்!

      ஹஹஹஹ கொடுவா மீசை அண்ணாச்சி வரதுக்குள்ள போராட்டம் முடிஞ்சுருச்சு. நாங்களும் அவரக் கூப்பிடுறதாத்தான் இருந்தோம்...போராட்டம் முடியலனா....

      நீங்களும் நகைச் சுவை எழுதுங்களேன் ஐயா!

      உங்கள் வாழ்த்துக்கள் பால கணேஷ் அண்ணாவிற்கு!

      மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  4. ஆகா அருமையான நூல் விமர்சனம்
    அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! ரசித்ததற்கும், வாசிக்கப்போவதற்கும்!

      நீக்கு
  5. ஹா.....ஹா....ஹா.....சேம மாஸ்:))) ஒரு நூல் விமர்சனத்தை இப்படியும் எழுதலாமா!!! ஆனாலும் நாம அண்ணா கொஞ்சம் ஓவர்தான் இல்லையா. நானும் , பதிவர் மாலதி டீச்சரும் பேசிகொண்டிருந்தோம். அவரிடம் சரிதாயணம் படுசுட்டீங்களா என கேட்டது தான் தாமதம், அய்யயோ, பஸ்ல போகும்போதோ , பொதுவெளியில் இருக்கும்போதோ படிச்சுடகூடாது பா என்றார்:)))) ஏன்னா அவரும் நல்ல ஜோக்கை படித்தால் என்னைப்போல் இடம் பொருள் ஏவல் இல்லாமல் அடக்கமுடியாமல் கெக்கேபிக்கே என சிரித்துவிடும் வகையை சேர்ந்தவர்:))))) பதிவும் சேம காமெடி:)) வாழ்த்துகள் சகாஸ்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ ! தோழி நம்ம அண்ணா ஓவர்தான்...ஹஹஹஹ்ஹ ஐயோ பல சமயங்களில் நானும் சிரித்துக் கொண்டேதான் இருக்கின்றேன்....பல இடங்களில் நினைவுக்கு வருகின்றது....நானும் உங்கள் கட்சிதான்...இடம் பொருள் ஏவல் பாராமல் கெக்கே பிக்கெ என்று சிரிப்பதில்....சேம் பிஞ்ச்....ஹை எனக்கு ஸ்வீட் இது இரண்டாவது....

      நீக்கு
  6. வணக்கம்
    அண்ணா

    புத்தக விமர்சனம்... நன்று வாங்கி படிக்கத்தான் கிடைக்க வில்லை பகிர்வுக்கு நன்றி த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி. சொல்லுங்கள் அண்ணாவின் புத்தகம் அனுப்பித் தருகின்றோம்....மிக்க நன்றி தம்பி!

      நீக்கு
  7. சிரிதாயணம்....படிக்க மேலும் ஆசை வலுக்கிறது. வரும்போது வாங்கிவிட வேண்டும்.ரசித்தேன்
    நன்றி சகோஸ். தம் 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் தளத்தில் என் போன் நம்பரும், மின்னஞ்சல் முகவரியும் இருக்கு தோழி... ஊருக்கு வர்றப்ப தகவல் சொல்லுங்க... நான் வந்து பார்த்து புத்தகம் தர்றேன்.

      நீக்கு
    2. வாத்தியாரே நான் ஊருக்கு வரும்போது சொன்னால் தருவீங்களா ?

      நீக்கு
    3. யோவ்... நீயெல்லாம் கேட்டுத்தான் வாங்கணுமா...?

      நீக்கு
    4. மிக்க நன்றி சகோதரி! தங்கள் ரசனைக்கு!

      நீக்கு
    5. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி பால கணேஷ் சார்.

      நீக்கு
  8. எத்தனை சரளமான நடை... அணி அணியாப் பிரிச்சு வெச்சு, பாயிண்ட் பாயிண்ட்டாப் பேசி அக்கக்கா அலசி உங்கள் ரசனையை உரக்கச் சொல்லிட்டீங்க,,,, படிச்சதும் சந்தோஷத்துல ஒரு சுத்து பெருத்துட்ட ஃபீல் எனக்கு தில்லையகத்தாரே... (அதனால இனி என்னை வெச்சு குறும்படம் எடுக்கு முடியாது. ‘பெரும்’ படம்தான் எடுக்கணும். ஹி... ஹி... ஹி.) தாமதமா இந்தப் பகிர்வைக் கவனிச்சாலும பூரிக்க/சப்பாத்திக்க வெச்சுட்டீங்க. நன்றியோ நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தங்களிடமிருந்து கிடைக்கும் இந்தப் பாராட்டிற்கு! மிக்க மகிழ்ச்சி! ஆஹஹஹ் ஏன் எங்கள் படம் எந்த சைசையும் தாங்கும் சக்தி கொண்டது...ஹஹ பெரும் படம் எடுத்தாப் போச்சு.....ஹை! பூரி சப்ப்பாத்தி எல்லாம் தந்தோமா....

      மிக்க நன்றி!

      நீக்கு
  9. ஹா......ஹா........ஹா...... சரிதாயணம் புத்தகம் Vs உங்களின் விமரிசனம் எதில் நகைச்சுவை வெடிகள் அதிகம் என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! நீங்களும் தான் நகைச் சுவை எழுதுவதில் கில்லாடி! மிக்க நன்றி தாங்கள் ரசித்தமைக்கு!

      நீக்கு
  10. இப்படியும் ஒரு புத்தகத்தை விமரிசிக்க முடியும் என்று காட்டி விட்டீர்கள். பேஷ் பேஷ். ரொம்ப நன்னாயிருக்கு. நானும் சரிதாயணம் வாசித்து இருக்கிறேன் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்! தங்களின் பாராட்டிற்கும், வாழ்த்திற்கும்!

      நீக்கு
  11. அடேடே..... இது புதுமையா இருக்கே...

    எனக்குத் தெரியாமலேயே என்னிடம் சொல்லாமலேயே மைசூர்பா சாப்பிட ஸ்ரீராம் அங்கு வந்து பல்பு வாங்கியதை அவசியம் சொல்லியிருக்கணுமா! :))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே!

      அட! அதானே உங்களுக்குத் தெரியாமல் எப்படி ஸ்ரீராம் அங்கு வந்தார்....பல்பு வாங்கியதைச் சொல்வதிலதானே சுவாரஸ்யம்.....ஹஹஹஹஹ்

      நீக்கு
  12. வித்தியாசமான நடையில் புத்தக விமர்சனம்! அசத்திட்டீங்க! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. மறுபடியும் புத்தகத்தை வாசித்ததை போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் :)
    த ம +!(காலையிலேயே போட்டாச்சு )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜி! முதலிலேயே வாக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி! ஹப்பா வாக்கிற்கு எவ்வளவு சின்சியர்....கு.வா க ட்சிக்கா? எங்களுக்கா உங்கள் ஓட்டு?!!!

      நீக்கு
  14. ஹஹஹா.. இருங்க.. கொஞ்சம் சிரிச்சுட்டு வர்றேன்.. இரு அணிகளும் நிஜமாவே சண்டை போட்டா எப்படியிருக்கும்னு ஒரு கற்பனை வேறு பண்ணிப் பார்த்தேன்.. ஆவ்சம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ்ஹஹஹ் மிக்க நன்றி ஆவி! தங்களின் பாராட்டிற்கு! ரசித்தமைக்கும்!

      நீக்கு
    2. நண்பர் ஸ்ரீ ராமுக்கு கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பா கிடைக்கலை....உங்களுக்காவது கிடைச்சுதா?ஹஹஹ்

      நீக்கு
  15. இதுவே அருமையான கதை போல இருக்கே. இப்படி ஒரு அட்டகாமான நகைச்சுவை விமர்சனம் நான் எதிர் பார்க்கவில்லை . கணேஷின் எழுத்தக்கள் எப்படிப் பட்டவருக்கும் நகைச்சுவை உணர்வை ஏற்படுத்தி விடும் என்னோட நகைச்சுவை உணர்வையும் தூண்டி எம்.பிஆகிறாள் சரிதா கதைய எழுத வச்சவர் ஆச்சே. .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் பாராட்டிற்கு! ஆம்! அவரது புத்தகம் தான் ஊக்கம் அளித்தது இப்படி எழுதுவதற்கான கற்பனையையும் தந்தது!

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  16. சுவாரசியமான ஒரு சண்டை! சிறப்பான பதிவு. ரசித்தேன் நண்பரே.

    பதிலளிநீக்கு
  17. இன்றைய வலைச்சரத்தில் உங்களின் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்.

    பதிலளிநீக்கு