புதன், 4 பிப்ரவரி, 2015

வெற்றிக்குப் பரிசு வெள்ளிக் கோப்பை!...தோல்விக்குப் பரிசு...டுமீல்!

https://www.youtube.com/watch?v=veYnZ0JzF4I

      “வெற்றிக்குப் பரிசு வெள்ளிக் கோப்பை!...தோல்விக்குப் பரிசு...டுமீல்!” நல்ல நேரம் திரைப்படத்தில் மேஜ சுந்தர்ராஜந்தன் தன் யானை ஓட்டப் பந்தயத்தில், எம்ஜிஆரின் யானையிடம் தோல்வி அடைந்ததால், ஆத்திரமடைந்து, தன் யானையைத் துப்பாக்கியால் சுடும் முன் சொல்லும் வசனம் தான் இது. வெற்றி இனிமையானது. அது ஒரு தனிமனிதனின் உழைப்பால் கிடைத்ததாகக் கூட இருக்கலாம்.  இருந்தாலும், அதைப் பகிர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கானவர்கள் இருப்பார்கள்; எப்பொதும், எந்த இடத்திலும். ஆனால், தோல்வி என்பது கசப்பானது. அதற்குக் காரணமானவர்களாக ஆயிரக் கணக்கானவர்கள் இருந்தாலும், இறுதியில் அதற்கு பலியாடாவது எப்போதும் இது போல் துரதிர்ஷ்டம் பிடித்த ஏதாவது ஒரு ஜீவியாகத்தான் இருக்கும்.

https://www.youtube.com/watch?v=EnRiYirXmJk
Dancing their way to a Guinness record

      கடந்த தினங்களில் நடந்த இரு சம்பவங்கள் இதை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதால் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வது நல்லது என்று தோன்றுகின்றது.  கேரளா திருச்சூர் அருகே, இரிங்ஞாலக்குடயிலுள்ள க்ரைஸ்ட் கல்லூரி ஸ்டேடியத்தில் 5,211 பேர் பங்கெடுத்த திருவாதிரை நடனம் நடைபெற்றது. இதற்கு முந்தைய கின்னஸ் சாதனையில் பதிவு செய்யப்பட்டது, மும்பையில் 3,640 பேர் அடங்கிய குழு நடத்திய திருவாதிரை நடனம். கின்னஸ் சாதனையை உறுதிப்படுத்த லண்டனிலிருந்து பரிசோதகரான ஃபார்ச்சுனா பர்கும் இதைக் கண்காணிக்க இரிங்ஞாலக்குடாவுக்கு வந்திருந்தார். ஏறத்தாழ 17 நிமிடங்கள் நடை பெற்ற திருவாதிரைக் களியை கண்டு களித்த ½ மணி நேரத்திற்குள் ஃபார்ச்சுனா, இரிங்ஞாலக்குடா திருவாதிரை நடனம் கின்னஸ் சாதனையானதாக அறிவித்தார்.  அவ் வெற்றி நடனமாடிய 5,211 பேரது வெற்றியோ, அதற்கான ஏற்பாடுகள் மற்றும் தேவையான உதவிகள் செய்த ஆயிரக் கணக்கானவர்களது வெற்றியோ மட்டுமல்ல, இரிங்ஞாலக்குடை எனும் இடத்தில் வசிக்கும் எல்லோரது வெற்றியாகவே கருதப்படுகிறது. 

இது போல் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள எல்லோரும் வருவது போல், தோல்விகள் ஏற்படும் போது எவரும் வருவதில்லை. அதற்குக் காரணமான ஒவ்வொருவரும், தோல்வியை மற்றவர்களின் தலையில் வைத்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் முயல்வார்கள். அப்படி இறுதியில் ஒருவர் அதற்கான பொறுப்பேற்று (பொறுப்பேற்காவிட்டால் எல்லோரும் அவர் தலையில் தவறைக் கட்டி வைத்து) தண்டனையை ஏற்று மற்றவர்களைக் காப்பாற்றுவதுதான் வழக்கம். 

     

    27 வருடங்களுக்குப் பிறகு, கேரளாவில் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவிற்கு ஏ.ஆர். ரஹ்மானின் நிகழ்ச்சியை ஏறத்தாழ 5 ½ கோடி செலவழித்து நடத்த முயன்றும், அது நடக்காமல் போனதால் “லாலிசம்” எனும் ஒரு பாடல் மற்றும் ஆடல் குழுவை உருவாக்கி அதை அறிமுகப்படுத்த தக்க சமயம் வரக் காத்திருந்த, பாரத் மோஹன்லாலிடம் சென்று, அதை தேசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் ஏன் உட்படுத்தக் கூடாது என்று கேட்டு வற்புறுத்தி அவரை சம்மதிக்க வைத்திருக்கின்றார்கள். அப்படிச் சம்மதிக்க வைத்தவர்களில் கேரளா முதல்வர் உம்மன் சாண்டியும், விளையாட்டுத்துறை அமைச்சர் திருவஞ்சியூர் ராதாக்கிருஷ்ணனும், கமிட்டி சேர்மன் ஆன இயக்குனர் பிரியதர்ஷனைப் போன்றவர்களும் இருந்தார்கள் தான்.


“லாலிசத்தில்” உட்படுத்தவிருக்கும் எல்லா நிகழ்ச்சிகளையும் தொடக்கவிழாவில் உட்படுத்த முடியாது என்றும், அவற்றில் சிலவற்றையும், அதனுடன் போர்ச்சுகீசியர்களை எதிர்த்துப் போராடிய குஞ்ஞாலி மரைக்கார் பற்றிய “ஷோ” வை உட்படுத்துகிறேன் என்றும் சொன்ன மோஹன் லால், தனக்கு அதற்காகப் பணம் ஏதும் வேண்டாம், ஆனால், மற்ற கலைஞர்களுக்கும், ஒலி, ஒளி அமைப்பிற்கும் தேவையான செலவுக்கான பணம் மட்டும் போதும் என்றும் சொல்லி இருக்கிறார். ஹரிஹரன், உதித் நாராயணன் போன்ற பாடகர்கள் பங்கெடுத்தும், மோஹன் லாலுடன் “லாலிசத்தின்” இயக்குநரான ரத்திஷ் வேகாவும், நூற்றுக் கணக்கானக் கலைஞர்களும் பல நாட்கள் பயிற்சிகள் நடத்தி, வேர்வை சிந்தி, உழைத்து உயிர் கொடுத்த அந்நிகழ்ச்சி ஆரம்பித்த ½ மணி நேரத்திற்குள், “தரக்குறைவானது” லாலிசம், லொலிசம் ஆகியது என ஊடகங்கள் வாயிலாக எல்லோரும் அறிய நேர்ந்தது. 

நல்ல நிகழ்ச்சிகள் என்பதை எல்லோரும் மெதுவாகத்தான் பரப்ப முயல்வார்கள்.  ஆனால், மோசமான நிகழ்ச்சி என்றால், உண்ணாமல், உறங்காமல் அதைப் பரப்ப எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு முயல்வது இயல்புதானே.  அப்படி லாலிசம் பாழிசம் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது. விளைவோ, நிகழ்ச்சி முடிந்த உடனேயே, “இவ்வளவு மோசமான ஒரு நிகழ்ச்சியை, கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து தொடக்க விழாவில் உட்படுத்தியதின் பின் ஊழல் நடந்திருக்கிறது” என்று எதிர்க்கட்சியினர் கூச்சல் போட, அதைக் காங்கிரஸ்காரர்களான முரளிதரன், பந்தளம் சுதாகரன் போன்றோர் ஆமோதிப்பது போல் பேசவும் தொடங்கிவிட்டார்கள்.  கல்யாண சமயலிடையே உணவை கிளறிக் கொண்டிருந்த அகப்பை உடைந்து உண்டானப் பிரச்சினையால் கல்யாணமே நின்று போன கதை போல் லாலிசத்தால் தேசிய விளையாட்டுப் போட்டியே நின்று விடுமோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. ஒவ்வொருவராக “இதற்குப் பொறுப்பு நானல்ல” என்று கை கழுவத் தொடங்கிவிட்டார்கள்.

பாவம், மோஹன்லால் எனும் மனிதர்!. அதிகம் விவாதங்களில் படாமல், அதிகம் பேசாமல், தானுண்டு, தன் நடிப்புண்டு என்று இருப்பவர்.  எல்லோரது ஏளனத்தையும் கேட்டு வருந்திய அவர் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்.  நிகழ்ச்சிக்குச் செலவான தொகை ஒரு கோடி 63 லட்சத்து 77 ஆயிரத்து 600 ரூபாயையும் தான் திரும்பத் தந்து விடுவதாகவும், இனி இதைப் பற்றிய விவாதம் வேண்டாம் என்றும் சொல்லியிருக்கின்றார்.  விளையாட்டுத் துறை அமைச்சரான திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பியக் கடிதத்தில் “கடந்த 3 வாரங்களாக இரவும் பகலும், இன் நிகழ்ச்சிக்காக செலவழித்த என் உழைப்பையும், அர்ப்பணிபையும் உதாசீனப்படுத்துபவர்கள் மற்றும் அரசின் பணத்தை அபகரித்துவிட்டேன் என என் மீது குற்றம் சாட்டுபவர்களிடம் எனக்குக் கோபமோ, விரோதமோ இல்லை. ஆனால், இது போன்று என் மீது அன்பு பொழிந்து என்னை நானாக்கிய என் அன்பார்ந்த ரசிகர்கள் மற்றும் என் நலன் விரும்பிகளுக்கு, என் மேல் சின்ன சந்தேகத்தின் நிழல் கூட படக் கூடாது என்பதற்காகவே நான் இப்பணத்தை திருப்பிக் கொடுக்க முடிவு செய்திருக்கிறேன்.  ஒரு நடிகன் எனும் நிலையில் மட்டும் கடந்த 36 வருடங்களாக எல்லோரது அன்பிற்கும் பாத்திரமாகி, இந்நிலைக்கு வந்த என்னை, இனிமேலாவது இவ்விவாதத்திலிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும்.”  என்றுக் குறிப்பிட்டுருக்கின்றார்.


      பணம் பாராமல் சமயோஜிதமாக மோஹன்லால் எடுத்த இத் தீர்மானம் எல்லாவகையிலும்  மிகச் சிறந்த தீர்மானமேதான். பணமேதான் பிரச்சினை என்றால், “இதோ பணம்! என்னை விடுங்கள்,” என்று சொல்லி, தன் தனித் தன்மையை சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் காண்பித்து அதை நிரூபித்திருக்கிறார். அப்படித் தன் தோல்வியை, படு தோல்வியாக மாற்ற முயற்சிப்பவர்களது செயல்களை முறியடித்து அதை தன்மானமும், சமயோஜித புத்தியுமுள்ள ஒரு மனிதனின் வெற்றியாக மாற்றியிருக்கிறார் லெஃப்டினன்ட் கர்னல் மோஹன்லால்.

படங்கள்: இணையம் : காணொளிகள் : யூட்யூப் 

38 கருத்துகள்:

  1. மோஹன்லால் அவர்களின்
    மன உயரம் காட்டும்
    அற்புதமான செய்கை
    இதுவரை அறியாத செய்தி
    விரிவாக அருமையாகப் பதிவு செய்து
    அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மோகன்லால் பாராட்டிற்கு உரியவர்.
    இந்த உலகமே இப்படித்தான், அடுத்தவர்களை எதில் எப்படி, குறை சொல்லாம் என்று
    காத்திருக்கும்.
    யார் குறை சொல்கிறார்கள் என்று பார்த்தால், எந்த விதத்திலும், எந்த பணியினையும் செய்யாத, வேடிக்கைமட்டுமே பார்ப்பர்கள்தான், வேலை செய்பவர்களை குற்றம் கூறி,
    அப்பணி நடைபெறாமல் பார்த்துக் கொள்வதோடு, சொந்த அலுவல்களைத் துறந்து, பாடுபட்ட செயல் வீரர்களை புழுதி வாரித் தூற்றுகிறார்கள்
    மோகன் லால் உண்மையிலேயே பாராட்டிற்கு உரியவர்
    ஒரு பெரிய பாடத்தினை கற்றிருக்கிறார்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! நண்பரே! யார் குறை சொல்கிறார்கள் என்று பார்த்தால், எந்த விதத்திலும், எந்த பணியினையும் செய்யாத, வேடிக்கைமட்டுமே பார்ப்பர்கள்தான், வேலை செய்பவர்களை குற்றம் கூறி,
      அப்பணி நடைபெறாமல் பார்த்துக் கொள்வதோடு, சொந்த அலுவல்களைத் துறந்து, பாடுபட்ட செயல் வீரர்களை புழுதி வாரித் தூற்றுகிறார்கள்// உண்மையே!

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  3. நல்ல நேரம் படத்தில் யானையைச் சுடும் அதே மேஜர்தான் தேவரின் யானை சீரிஸ் படங்களின் ஆரம்பப் படத்து ஹீரோ!

    பாராட்டப்படவேண்டிய மனிதர் மோகன்லால். செய்தித் தாளில் நான்கூட இந்தச் செய்தி படித்து வியந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல நேரம் படத்தில் யானையைச் சுடும் அதே மேஜர்தான் தேவரின் யானை சீரிஸ் படங்களின் ஆரம்பப் படத்து ஹீரோ!//

      ஓ! தகவலுக்கு நன்றி நண்பரே! கருத்திற்கும்!

      நீக்கு
  4. புழுதி வாரித் தூற்றுபவர்கள் இணையத்தில் அதிகம் இருக்கின்றனர். அவர்கள், எப்போதும் யாரையேனும் குறை சொல்வதையே வழக்கமாகக் கொண்டவர்கள். அன்றைய பொழுதுக்கு, அவர்களுக்கு மோகன்லால் சிக்கிக் கொண்டார். ஒரு மனிதர், நாயகன் ஆவதும், வில்லன் ஆவதும், அவர்தம் செய்கைகளில்தான் இருக்கிறது. தான் எப்போதும் நாயகன்தான் என்பதை மோகன்லால் நிரூபித்து விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! நண்பரே! எதிர்மறை வேகம் பரவும். நேர்மறை எளிதில் பரவுவதில்லை. மிக்க னன்றி தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  5. திரு.மோகன் லால் அவர்கள் உண்மையிலேயே பாராட்டிற்குரியவர்.

    காலங்களினால் ஆகும் காரியங்களை - முன்னிறுத்தியது பதிவு!..
    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    அண்ணா

    தன்மானமும், சமயோஜித புத்தியுமுள்ள ஒரு மனிதனின் வெற்றியாக மாற்றியிருக்கிறார் லெஃப்டினன்ட் கர்னல் மோஹன்லால். அருமையாக நல்ல கருத்தாடல் மிக்க பதிவு பகிர்வுக்கு நன்றி த.ம4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. மோகன்லால் அவர்கள் நிஜத்திலும் ஹீரோ...

    நம்ம "ஆட்களை" நினைத்தால்... க்கும்... 0

    பதிலளிநீக்கு
  8. ஓரளவுக்கு இந்த செய்தி பற்றித் தெரிந்திருந்தது. விளக்கமாக எடுத்துக் கூறியதற்கு பாராட்டுக்கள்.5 1/2 கோடி செலவு செய்யத் தயாரா இருந்தும் அது சரிவராமல் போக ரூ.1 1/2 கோடிக்குள் சிறபாகச் செய்ததற்கு பாராட்டுக்கள் இல்லையென்றாலும் தூற்றாமல் இருந்திருக்கலாம். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் சார், போற்ற வேண்டாம்...தூற்றாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதற்குத்தான் நம்மூரில் நிறைய பேர் உள்ளனர். மிக்க நன்றி சார்! தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  9. இந்த பதிவில் தோல்வி பற்றிய கருத்தினை படித்தபோது ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது...

    சினிமாவில் யானை கொல்லப்பட்டதை போல உண்மையிலேயே ஒரு கால்பந்தாட்டவீரர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று உண்டு... என்பதுகளில் என ஞாபகம் ! உலக கால்பந்தாட்ட போட்டியில் தவறுதலாக தன் அணிக்கு எதிராக கோல் அடித்து வெற்றியை இழக்க காரணமான ஒரு இலத்தீன் அமெரிக்க நாட்டு வீரர் ( நாடு மறந்துவிட்டது ! ) நாடு திரும்புபோது விமானநிலையத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார் !

    பாவம் மோகன்லால் ! இன்னும் அரசியல் தெரியாத நடிகர்களில் ஒருவர் ! இதில் நம் ஊடகங்களின் பிரச்சனை பூதகரமானது ! பரபரப்புக்காக வார்த்தைகளில் விளையாடி தலைப்பிடுவது !! அதே போல எதிர்கட்சிகளில் " ஊழல் அலறலிலும் " உடனடி அரசியல் ஆதாயம் ! மொத்தத்தில் பாதிக்கப்படுவது மோகன்லால் போன்ற எந்த அரசியல் சார்புநிலையும் அற்ற மனிதர்கள்தான் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! நீங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவம் படிக்கையில் பயங்கரமாக இருக்கின்றது. எப்போதுமே வெளிச்சத்தில் இருப்பவர்களுக்கு இது போன்றவை நிகழத்தான் செய்கின்றது. மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு.

      நீக்கு
  10. மோன்லால் தக்க சமத்தில் சமயோஜிதமாக முடிவு எடுத்து, தன்னை நிருபித்துக் காட்டி விட்டார். நல்ல பண்பு.தோல்வி என்றால் யாரும் உடன் இருக்க மாட்டார்கள். இன்றைய நிலை...

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம் ஆம் சகோதரி! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  11. நல்ல கருத்தினை இப்போதெல்லாம் சமூகம் உள்வாங்க மறுக்கின்றது எனலாம் என்ன இருந்தாலும் மோகன்லாலின் உழைப்பை சமூகம் மதிக்கத்தவறிவிட்டது எனலாம் நல்ல நடிகர் மட்டும்மல்ல நல்ல எடுத்துக்காட்டு அவரின் செயல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தனிமரம்! நல்லவற்றை சமூகம் உள்வாங்க மறுக்கத்தான் செய்கின்றது தற்போதைய காலகட்டத்தில்...போட்டியும் பொறாமையும் சூழ்ந்துவிட்டாதாலும் இருக்கலாம்...மிக்க நன்றி! கருத்திற்கு!

      நீக்கு
  12. தமிழ் மணம் - நலரத்தினம்
    மீண்டும் வருவோம்ல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே! நீங்கள் எப்போ வந்தாலும் எங்களுக்கு மகிழ்வே! யு ஆர் ஆல்வேஸ் வெல்கம்!!!!! நலரத்தினம்?!!!!?

      நீக்கு
  13. மோகன்லால் எப்பொழுதுமே சமயமறிந்து செயல் படுபவர் அவர் பெண்கள் விசயத்தில் மோசமானவர் 80 உலகறிந்த விசயம் இது நமக்கு அவசியமில்லாத வேலை சாதாரணப்பட்டவனே மோசமாக வாழும் சூழலில் பணமும், பலமும், சந்தர்ப்பமும் சுலபமாக அமைபவனுக்கு இது சாதாரணம் குறை சொல்ல முடியாதுதான்.
    நான் சொல்ல வரும் விடயமே இனிதான்.

    நிருபர் –
    தாங்கள் இதுவரை 2000 பெண்களுக்குமேல்.....
    (என்று நிருபர் கேட்க வேறொருவனாக இருந்தால் சண்டை போட்டிருப்பான், பேட்டி தர முடியாது எனச்சொல்லி விட்டியிருப்பான் ஆனால் ?)
    மோகன்லால் –
    இல்லை உங்களுடைய கணக்கு தவறு நான் இதுவரை 2500 ரைத்தாண்டி.....

    எப்படி ? இதுதான் மோகன்லால் பாணி கேட்டவன் மூஞ்சி எப்படி ? போயிருக்கும், இந்த பண விசயத்தில் மோகன்லாலின் செயல் பாராட்டப்படவேண்டும் 80 உண்மையே.....

    எந்த நடிகனும் என்னை மயக்கிவிட முடியாது அதேநேரம் நல்லசெயலை பாராட்ட வேண்டும் 80ம் எமது கருத்து.
    நான் மலையாளப்பத்திரிக்கையும் படிப்பவன்.
    குறிப்பு - மோகன்லால் சிறந்த நடிகர் 80 குறிப்பிடத்தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோகன்லால் சிறந்த நடிகர்தான்...அவரது இந்த செயல் பாராட்டப்பட வேண்டியதுதான்....மற்ற படி அவரைப் பற்றியவை தனிப்பட்டவை...நமக்கெதற்கு....திரையில் மட்டும் பார்த்தால் போதும்.... பின் வேண்டாமே....

      எங்களையும் எந்த நடிகரும் மயக்க முடியாதுங்கோ....நல்லவை என்றால் நல்லவை. கெட்டவை என்றால் கெட்டவை....

      தங்கள் தகவலும் அறிந்ததே.....அவரைப் பற்றியது....

      நீக்கு
  14. மோகன்லால் மக்களின் மனதில் இமயம்போல் உயர்ந்துவிட்டார் !அவர் அரசியலில் ஈடுபட்டு அயோக்கிய அரசியல்வாதிகளின் முகத் திரையை கிழிக்க வேண்டும் !
    த ம 10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்ம் மிக்க நன்றி பகவான் ஜி! தங்கள் கருத்திற்கு....மோகன்லாலுக்கு இது கேட்டிருக்குமா?!!

      நீக்கு
  15. திருவாதிரை நடனத்தை முகநூலில் பார்த்தேன்... வாவ்... அற்புதம் துளசி சார்...
    மோகன்லால் சிறந்த மனிதர்...
    பாவம்... அரசியல் விளையாட்டில் அவர் பகடைக்காயாய்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! ஆம் அற்புதமான காணொளி! ம்ம்ம் பகடைக் காய்தான்....

      நீக்கு
  16. அன்பு தமிழ் உறவே!
    ஆருயிர் நல் வணக்கம்!

    இன்றைய வலைச் சரத்தின்,
    திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
    "வலை - வழி - கைகுலுக்கல் - 2"
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துகள்!

    வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
    உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
    உவகை தரும் பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
    தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! தங்களின் தகவலுக்கு! உடன் சென்று கண்டோம். தங்களுக்கும் வாழ்த்துக்கள்! தங்களையும் அறிமுகத்தில் கண்டோமே!!!!

      நீக்கு
  17. ஆசானே வணக்கம்.
    மோகன்லால் அவரை லெப்டினன்ட் கார்னலாக சென்ற மாதம் குடியரசு தின விழாவில் டெல்லியில் பார்த்ததுதான் நினைவில் நிற்கிறது.
    த ம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
  18. தான் நல்ல நடிகன் மட்டுமில்லை; ஒரு நல்ல மனிதனும் கூட என்று நிருபித்துவிட்டார் மோகன்லால். இந்த செய்தியை தினசரிகளிலும் வாசித்து வியந்தேன்! தோல்வியை சுமக்க யாரும் முன்வருவதில்லை என்பது ரொம்பவும் உண்மை.

    பதிலளிநீக்கு
  19. எல்லாவற்றிலும் அரசியல் புகுந்து விளையாடுகிறது. பணம் முழுவதும் தந்து விடுகிறேன் என்று சொன்ன மோகன்லால் பாராட்டுக்குரியவர்.

    பதிலளிநீக்கு