செவ்வாய், 16 டிசம்பர், 2014

அந்நியர்கள்


    
     தலைப்பைப் பார்த்ததும் அயல்நாட்டு மனிதர்களைப் பற்றிய பதிவோ என்ற எண்ணம் வரலாம்.  இல்லை. இது உலகம் முழுவதும் உள்ள அந்நியர்களைப் பற்றியது.  உளவியல் சார்ந்த ஒரு பதிவு. “அளவுக்கு மீறினால், அமிர்தம் மட்டுமல்ல, அன்பும் நஞ்சே!” என்ற எங்கள் இடுகைக்கு, சகோதரி மைதிலி அவர்கள் கொடுத்திருந்த பின்னூட்டம்

நீங்க கணவர் என்று சொல்லும் முன் தோன்றிய விஷயத்தை சொல்கிறேன் தோழி! கொள்கைக்காக வாழ்கிறவர்களுக்கு ஊதியம் இரண்டாம் பட்சம். இதுபோன்ற ஒரு சூழலில் அந்த பணியை தூக்கி எறிந்து விட்டு மற்றொன்றை தேடிக்கொள்ளும் துணிவும் தெளிவும் உங்க உறுதுணையும் இருப்பது பெரிய விஷயம் இல்லையா??

ஒரு நல்ல பெற்றோராய், நல்ல முன்மாதிரியாய் இருக்கிறீர்கள் தோழி!! வாழ்த்துகள்!”

      பின்னூட்டம் மகிழ்வைத் தந்தது என்பதில் எந்த மறுதலிப்பும் இல்லைகொள்கைக்காக வாழ்கிறவர்களுக்கு ஊதியம் இரண்டாம் பட்சம் என்பது மிகவும் சரியே!  உயர்வான ஒரு வாழ்க்கை என்பதில் எந்த ஐயமும் இல்லை.  உடன்பாடே!.  அதற்கு அடுத்த்தாக்ச் சொல்லியிருக்கும் விடயமும் சரியே. பெரிய விசயம்தான். ஆனால், ஒரு நாணயத்திற்கு மறுபக்கம் என்று ஒன்று இருக்கின்றதே. அது நடைமுறைக்கு, யதார்த்த வாழ்வியலுக்கு ஒவ்வாது என்பதே எனது கருத்து. நேர்மையாகவும், கொள்கைகளைக் கட்டிக்காப்பதும், அதற்காகச் சில தியாகங்கள் செய்ய வேண்டி வருவதும் நடப்பதுதான். நம்மில் பலர் நேர்மையாகவும், கொள்கைகளுடனும் இருக்கத்தானே செய்கின்றோம்!  ஆனால், யதார்த்தத்தை விட்டு விலகாமல், அதையும் மனதில் உட்கொண்டு அதே சமயம் நமது நேர்மையையும், கொள்கைகளையும் கட்டிக் காப்பது என்பது சர்க்கஸ் வித்தைக்காரர் ஒரு கயிற்றின் மேல் நடப்பதற்குச் சமமாகும். அது ஒரு தனிக் கலை. அதற்குத் தனித் திறமை வேண்டும்.  டாக்டிக்ஸ் வேண்டும். யதார்த்தத்தை உள் வாங்க மனது மறுத்தால், நம் மன நிலை பிறழ்ந்து போகும்.

      நாம் நினைப்பது போல் இந்த சமூகம் இல்லை.  சமூகத்தைப் பற்றி நாம் நம் மனதில் ஒரு கட்டம்/சட்டம் போட்டு அதற்குள் நாம் நினைப்பது போல் இந்த சமூகம் இருக்க வேண்டும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும். அந்த ஏமாற்றத்தை நாம் சரியான வகையில், வழியில் கையாளத் தெரியவில்லை என்றால் நம் மன நிலை பிறழ்ந்து போகும்.

      நீங்கள் எல்லோருமேஅந்நியன்திரைப்படம் பார்த்திருப்பீர்கள்அந்தத் திரைப்படத்தைப் பற்றிய விமர்சனமோ, நடிப்பைப்பற்றியக் கருத்தோ, இங்கு நான் கேட்கவில்லை. பேசப் போவது இல்லை. அதில் வரும் முக்கியக் கதாபாத்திரத்தைப் பற்றியக் கேள்விஅந்தப் படத்தைப் பார்த்ததும், அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றியத் கருத்து யாது? அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி என்ன எண்ணினீர்கள்? அந்தக் கதாபாத்திரம் உங்கள் மனதில் தோற்றுவித்த பாதிப்பு என்ன?

       நமக்கு முதலில் தோன்றும் எண்ணம், ! எப்படி ஒரு நேர்மையான பாத்திரம்! இப்படி அல்லவா ஒவ்வொரு மனிதனும் இருக்க வேண்டும். நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் ஒரு கதாபாத்திரத்தை யாருக்குத்தான் பிடிக்காது. சமூகத்தில் நடக்கும் அநீதிகளை, குற்றங்களைத் தட்டிக் கேட்கத்தானே வேண்டும். அவன் செய்வது சரிதானே!  தவறு இல்லையே! என்றுதான் தோன்றும். ஆனால், அந்தக் கதாபாத்திரம் யதார்த்தத்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள முடியாமல், dissociative identity disorder, பொதுவாகச் சொல்ல வேண்டும் என்றால்; மன நிலை பிறழ்ந்து வாழும் கதாபாத்திரம். 


 


உங்களுக்குத் தெரியுமா? இது போன்றும், மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, மாயையிலும், மாயத் தோற்றத்திலும் ஸ்கிசோஃப்ரினியா என்ற மன நோய்க்கு ஆளாகி, அந்நியர்கள் பலர் இந்த சமூகத்தில் வாழ்கின்றார்கள் என்று?! அவர்களும் பரிதாபத்துக்குரியவர்கள்தாம். அவர்களை இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை. அதுவும் கிராமங்களிலும், சிறு சிறு நகரங்களிலும் இவர்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வரவில்லை. பைத்தியம் என்று முத்திரைக் குத்தப்பட்டு புறக்கணிக்கப்படுகின்றார்கள். இதில் அவர்களின் தவறு எதுவுமே இல்லை என்பதுதான்.  குறிப்பிட்ட காரணம் எதுவும் சொல்ல முடியாது என்றாலும், பரம்பரை காரணமாகவும், வளர்ப்பு முறையும், சூழலும், சிறு வயதில் ஏற்படும் வரம்பு மீறிய அதிர்ச்சிகளாலும், சில சமூகங்களில் பின்பற்றப்படும் சமூக கலாச்சாரங்களினாலும், அதாவது அந்தக் கலாச்சாரங்களை, பழக்கவழக்கங்களை நம்பியும், நம்பவும் முடியாமல், அதை ஏற்றுக் கொள்ளவும், தைரியமாக மறுக்கவும் முடியாமல், குழம்பிய மன நிலையினாலும் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம்தான் காரணங்கள் என்று சொல்லலாம். நமது ஊரில் முக்கியமாக சிறு வயது முதலே சமூகக் கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் வலியுறுத்தப்பட்டு வளர்க்கப்படுவதும், சமூகம், பெற்றோரின் புறக்கணிப்பும் சொல்லப்படுகின்றது. புள்ளியியலும் அதைத்தான் சொல்கின்றது. பருவ வயதில்தான் முக்கியமாகத் தொடங்குகின்றது. ஆனால் எப்போது, எப்படி என்பது இன்னும் மில்லியர் டாலர்  கேள்வியாகத்தான் இருக்கின்றது எத்தனை ஆய்வுகள் செய்யப்பட்டாலும். சென்ற கல்வி இடுகையில் ஆசான் விஜு அவர்கள் தனது அனுபவத்தை எழுதியிருந்தார் பின்னூட்டமாக.  அது போன்ற அனுபவங்களும் கூட ஒரு குழந்தையை பருவ வயதில் சிறிது சிறிதாக நத்தை போல் சுருங்கச் செய்து, இந்த சமூகத்திலிருந்து அந்நியராக்க வாய்ப்புகள் அதிகம்.  எனது வேண்டு கோள், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும்: தயவு செய்து பருவ வயதில் குழந்தைகளை அந்நியராக்காதீர்கள்!

 

      சென்ற வருடம் எனது மகனுக்கு வட மாநிலத்திலிருந்து ஒரு அழைப்பு வந்தது. எங்கள் உறவினர் ஒருவர் மூலமாக எனது மகனுக்கு வந்த அழைப்பு.  அழைத்தவர் ஒரு பெண்.  அவர் வக்கீல். அவர் எடுத்துக் கொண்டிருந்த வழக்கிற்கு மருத்துவ சம்பந்தமாக ஒரு சில விடயங்களை உறுதி செய்து கொள்ள வேண்டி வந்த அழைப்பு. அவரது கட்சியாளர் 13 வயதுப் பெண். தொடர்ச்சியாக்ச் சில கொலைகள் செய்திருக்கின்றார்.  போலீசில் சிக்குவதற்கு முன் கடைசியாக ஒரு அலுவலகத்தில் சென்று கொலை செய்துவிட்டு வந்து காரில் ஏறும் முன், அந்த அலுவலகத்தில் இருந்த கேமராவில் அந்தக் கொலை பதிவாகிவிட, போலீசில் பிடிபட்டாள். ஆனால், அவள் காரில் ஏறியதும் மிகவும் சாதாரணப் பெண் போன்று பேசியிருக்கின்றாள். ஆனால், தான் கொலை செய்தது அவளுக்குத் தெரியவில்லை.  போலீஸ் அவளைக் கைது செய்ய முயல, அவள் அந்நியப் பெண் ஆகியிருக்கின்றாள்.

ஆனால், இதற்கு முன்னேயே, அவள் தனக்கு ஏதோ உடம்பு அசதியாக இருக்கிறது என்று மருத்துவரிடம் செல்ல, அவளது பேச்சுக்கள் சந்தேகத்தைத் தோற்றுவிக்க, அந்த மருத்துவர் ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, அவளே தான் கொலைகள் செய்ததாகவும், யாருக்கும் தெரியாமல் ஒரு இயக்கம் இயங்குவதாகவும் அந்த இயக்கம் தான் அவளைக் கொலை செய்யச் சொல்லுவதாகவும் சொல்ல, அந்த மருத்துவர் செய்த தவறு அவளை பரிசோதித்துவிட்டுக் கண்டுபிடித்தவுடன் அவளுக்கு மருந்து கொடுத்துத் தங்கள் மருத்துவமனையிலேயே தங்க வைத்து, போலீசில் அறிவித்து மனநிலை பாதிக்கப்பட்டோருக்கான காப்பகத்தில் ஒப்படைக்காமல், அவளுக்கு மருந்து எழுதிக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பியதுதான். அந்த இடைப்பட்ட கால அவகாசத்தில்தான் சில கொலைகளும், மேற் சொன்ன கொலையும், போலீசில் பிடிபட்டதும். மருத்துவர் தக்க நடவடிக்கை எடுத்திருந்தால், அந்தக் கொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

      அந்தப் பெண்ணின் பெற்றோர் அவளது சிறு வயதிலேயே பிரிந்திருக்கின்றனர்.  தந்தையும் குடிகாரர். அம்மாவிடம் வளர்ந்த குழந்தை, அம்மாவும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியிருந்ததால் கவனிக்கப்படாமல் வளர்க்கப்பட்டதால், சிறு வயதிலேயே பல அதிர்ச்சிகளுக்கு உள்ளாகி மன நிலை பிறழ்ந்து அந்நியராகிப் போனாள். எனவே, மகனிடம் பேசிய வக்கீல் அந்த மருத்துவர் மீது வழக்கு பதிந்து, பெண்ணிற்கு ஆதரவாகப் பேசி மன நிலை காப்பகத்தில் ஒப்படைப்பதற்காக மருத்துவக் குறிப்புகள் பெறுவதற்காக மகனிடம் பேசிய போது அறிந்தவை. ஸ்கிசோஃப்ரினியாவிற்கும், dissociative identity disorder க்கும் மிகச் சிறிய வித்தியாசமே. மனம் சம்பந்தப்பட்ட சில நோய்கள் சாதாரண மனிதர்களால் எளிதில் வித்தியாசப்படுத்திக் கண்டுபிடிக்க இயலாத ஒன்று. அதை மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவரால் மட்டுமே அறியமுடியும். எனவே, சிறிய மன அழுத்தம் ஏற்பட்டு அதனால் செயல்களில் வித்தியாசம் உணர்ந்தால் உடன் ஒரு நல்ல மருத்துவரைக் கண்டுவிட வேண்டும்.  இல்லையேல் அந்நியராகிவிடலாம்.

      இவர்கள் நமது நெருங்கிய உறவினராக இருந்தால், இவர்களுடன் மன நிலை புரிந்து வாழ்வது என்பது மிகவும் ஒரு பெரிய சவால். மருத்துவக் கண்காணிப்பில் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், உடன் இருப்பவர்கள் மிகவும் மனப் பக்குவத்துடன் இருக்க வேண்டும். பல நோயாளிகள் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டு, சிறிது சிறிதாக மருந்து குறைக்கப்பட்டு, மிகக் குறைந்த  அளவு மருந்து கொடுக்கப்பட்டு சாதாரண மனிதரைப் போன்று வாழ மருத்துவர் உதவி புரிந்தாலும், இவர்கள் கண்காணிப்பில் இருந்து கொண்டேதான் இருக்க வேண்டும்.  இல்லையேல், மீண்டும் மன நிலை பிறழ வாய்ப்புகள் அதிகம்.

      ஒரு சில விசயங்களை தமிழில் கொடுக்க இயலாததால் ஆங்கிலத்தில் இதோ.

·         Being a loner and lacking close friends outside of the immediate family
·         Incorrect interpretation of events, including feeling that external events have personal meaning
·         Peculiar, eccentric or unusual thinking, beliefs or behavior
·         Dressing in peculiar ways
·         Belief in special powers, such as telepathy
·         Perceptual alterations, in some cases bodily illusions, including phantom pains or other distortions in the sense of touch
·         Persistent and excessive social anxiety
·         Peculiar style of speech, such as loose or vague patterns of speaking or rambling oddly and endlessly during conversations
·         Suspicious or paranoid ideas, hypersensitivity, and constant doubts about the loyalty and fidelity of others
·         Flat emotions, or limited or inappropriate emotional responses

இவர்களை சமூகம் அந்நியர்களாக்கி விடுகின்றது. குடும்பங்களிலும், குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.  அவர்களைப் புரிந்து கொண்டு வாழ்வது வாழ்க்கை முழுவதுமே தொடரும் ஒன்று. சவாலும் கூட. இவர்கள் குடும்பத் தலைவர்களாக இருந்துவிட்டால் அந்தக் குடும்பம் பலவிதங்களிலும் கஷ்டப்பட வாய்ப்புண்டு. தாயாக இருந்தால் குழந்தைகளும் வளர்க்கப்படுவதில் கஷ்டப்படுவார்கள். இவர்களில் பலர் மத சம்பந்தப்பட்ட தத்துவங்களிலும், நம்பிக்கைகளிலும் தங்களை மிகவும் ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டு (அதுவும் அந்தக் குடும்ப வளர்ப்பு முறையே காரணம். சில மத சம்பந்தப்பட்ட மூட நம்பிக்கைகளில் அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாக விதிக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள்) அதற்கேற்ப தங்கள் செயல்களை மனக் குழப்பத்துடன் வடிவமைத்துக் கொண்டு தங்களையும் துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டு தங்களுடன் வாழ்பவர்களையும் துன்பத்திற்குள்ளாக்குவார்கள். அந்நியன் படத்தில் வருவது போல். இவர்களில் பலர் நேர்மையையும், கொள்கைகளையும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு விதமாக செயல்படுவர். இவர்கள் பேசுவது சரியாக இருக்கலாம்.  ஆனால், யதார்த்தத்தை ஏற்க முடியாமல் மன நிலை பிறழ்ந்து வாழ்க்கையில் தடுமாறுகின்றனர்.  எனவே பெற்றோர்களாகிய நாம், நம் குழந்தைகளை சிறு வயதிலிருந்தே வாழ்க்கையை யதார்த்தரீதியிலும், வாழ்க்கையை அனுபவித்து வாழவும் கற்றுக் கொடுக்க வேண்டும். உற்ற நண்பர்களுடனும், வெளி உலகத்தைச் சமாளிக்கவும், விளையாட்டுகளிலும், கலைகளிலும் ஈடுபடச் செய்து எந்த விடயத்தையும் யாதார்த்த ரீதியில் அணுகக் கற்றுக் கொடுக்க வேண்டும். பரம்பரையால் வந்தால் அது நம் கையில் இல்லை. அனுபவித்தே ஆக வேண்டும்.

 

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இவர்கள் பைத்தியம் என்று முத்திரை குத்தப்படுத்தப்பட்டாலும் பைத்தியம் அல்லர். சாதி வெறியினாலும், பதவி ஆசையினாலும், பணம் ஒன்றே குறியென்று அலையும் கூட்டங்களையும், அரசியல்வாதிகளையும் விடவா அவர்கள் கேவலமானவர்கள்? இந்தக் கூட்டம் தானே பைத்தியங்கள்!? எனவே, மன நிலை பிறழ்ந்தவர்களை நாம் கீழ்தரமாகவும், உதாசீனப்படுத்தியும் பார்க்காமல், அவர்களையும் இந்த சமூகத்தின் அங்கத்தினராகப் பார்ப்போம்.  நம்மால் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்றாலும், அவர்களைப் புறக்கணிக்காமல் இருக்கலாமே. அந்நியர்களாக்காமல் நம்முடன் வாழ்பவர்களாகக் கருதி அன்பு செலுத்த முயற்சிக்கலாமே!

 

(பல மாதங்களாக இந்த தலைப்பில் ஒரு பதிவு எழுத நினைத்திருந்தோம்.  இந்த மன நோய்களைப் பற்றி.  ஆனால், இந்த நோய்களைப் பற்றி அல்ல, அந்த மனிதர்களைப் பற்றி. தற்போது அதை எழுத தோழி மைதிலியின் பின்னூட்டம் தூண்டியது.  மிக்க நன்றி மைதிலி! )

     PICTURES COURTESY GOOGLE


   

39 கருத்துகள்:

  1. க ஆழமான ஒரு பதிவு. யதார்த்த வாழ்க்கைக்கு தேவையான மிகமிக அவசியமான பதிவும் கூட !

    அந்நியன் உதாரணம் முகவும் உண்மை !

    தியாகம் என்றாலே தன்னை சுற்றி வட்டமிட்டுக்கொண்டு, பணம் மட்டுமல்ல, குழந்தை குட்டிகளையும் மறந்து வாழ்வதுதான் என்பதான கொள்கையுடையது நமது சமூகம்.

    நாம் மனதாலும், உடலாலும், பொருளாலும் வளமாக இருந்தால்தான் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதுதான் யதார்த்த உண்மை !

    இந்த பதிவின் முடிவு மனதை தொட்டது !

    ஆமாம் ! சாராசரி மனிதனுக்கும், மனநிலை பிழன்றவர்களுக்கும் ஒரு நூலே வித்யாசம். அந்த நூல் எந்த நேரத்திலும் விடுபடலாம் என்பதை உணர்ந்தாலே அவர்களின் மீதான கரிசனம் கூடிவிடும் !

    மிக அவசியமான ஒரு பதிவை தந்தமைக்கு நன்றி

    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ! சாராசரி மனிதனுக்கும், மனநிலை பிழன்றவர்களுக்கும் ஒரு நூலே வித்யாசம். அந்த நூல் எந்த நேரத்திலும் விடுபடலாம் என்பதை உணர்ந்தாலே அவர்களின் மீதான கரிசனம் கூடிவிடும் !// மிகவும் அருமையான கருத்து. நல்ல கருத்துள்ள பின்னூட்டம் நண்பரே!

      நீக்கு
  2. உளநலம் பற்றிய சிறந்த பதிவு
    நன்றாக அலசி உள்ளீர்கள்
    "மன நிலை பிறழ்ந்தவர்களை நாம் கீழ்தரமாகவும், உதாசீனப்படுத்தியும் பார்க்காமல், அவர்களையும் இந்த சமூகத்தின் அங்கத்தினராகப் பார்ப்போம்." என்ற எண்ணத்தையே எனது சமூகத்திற்கும் கூறிவைக்க விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தாங்களும் எங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டதற்கு!

      நீக்கு
    2. ஓ தாங்கள் உலநலம் குறித்து அல்லவா படித்திருக்கின்றீர்கள்!! புரிந்து கொண்டிருப்பீர்கள். மிக்க மகிழ்ச்சி நண்பரே!

      நீக்கு
  3. அன்பிற்கினிய நண்பர்களே,

    தோழி மைதிலியின் பின்னூஒட்டம் கண்டு உங்கள் மை துளிகள் சிந்திய சிந்தனை முத்துக்கள் பலரது முகம் கூசும் அளவிற்கு ஒளிவீசுகின்றது.

    மன நிலை பாதிக்கப்பட்டவர்களை பைத்தியங்கள் என ஒதுக்கும் இந்த சமூகத்தின் முகத்தில் உங்கள் முத்துக்கள் உமிழ்ந்த விதம் பாராட்டுக்குரியது.

    குறைந்தபட்சம் அவர்களை ஏளனம் செய்து பரிகசிக்காமல் இருப்பதே அவர்களுக்கு இந்த சமூகம் செய்யும் சேவையாகும்.

    உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.

    நன்றி

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி னண்பரே! தங்களது மிக அழகான பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும்!

      நீக்கு
  4. நீண்ட, கனமான பதிவு.

    சமூகக் காரணங்களால் அல்லாமல், சொந்தப் பிரச்னக்களால் இதமாதிரி அவஸ்தைப் பட்டவர்கள் எங்கள் குடும்பத்தில் உண்டு. அவர்களைப் பார்த்துக்கொண்ட அனுபவமும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! சொந்தப் பிரச்சினைகளாலும் ஏற்படுவதுண்டு. அப்ப நீங்களும் இந்த சைடுதானா.... சொந்த அனுபவம்தான். நண்பரே! - கீதா.

      நீக்கு
  5. ஆழமாக சிந்தித்து எழுதியிருக்கிறீர்கள்.
    "// பெற்றோர்களாகிய நாம், நம் குழந்தைகளை சிறு வயதிலிருந்தே வாழ்க்கையை யதார்த்தரீதியிலும், வாழ்க்கையை அனுபவித்து வாழவும் கற்றுக் கொடுக்க வேண்டும்.//"
    குழந்தை வளர்ப்பு என்பதே ஒரு கலை என்று சொல்லுவார்கள். அந்த கலையில் இந்த அம்சம் முக்கிய பங்கு வகிக்கிறது.
    நீங்கள் சொல்வது போல் இந்த மாதிரியானவர்கள் நம் நெருங்கிய உறவினர்களாக இருந்தால், நம்முடைய கண்காணிப்பிலேயே அவர்களை வைத்துக்கொண்டால், மனநல காப்பகம் என்று ஒன்று தேவையே இல்லாமல் போய்விடும்.
    அந்த கடைசி பத்தி எல்லோரும் பின்பற்ற வேண்டிய பத்தியாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தை வளர்ப்பு ஒரு கலை. மட்டுமல்ல அது மிகவும் கடினமான கலையும் கூட...அதில் மனம் சார்ந்தும் வருவதால்...

      மிக மிகச் சரியே மன நலக் காப்பகம் தேவை இல்லைதான் எப்படி முதியோர் இல்லம் தேவை இல்லையோ அப்படி நாம் பார்த்துக் கொண்டால். மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  6. மனிதனாய் பிறந்து விட்டால் பேச வேண்டும்
    ஒவ்வொருவரும் தனக்கென்று நண்பர் ஒருவரைத் தேர்ந்தெடுத்தக் கொண்டு,
    தனது பிரச்சினைகளை விவாதிப்பாரேயானால், இது போன்ற நிலைமை தோன்றாது என்பத என் கருத்து. இன்றைய மனிதர்கள் தனித் தனி தீவுகளாகவே உள்ளனர். வீட்டில் பெற்றோர்களிடம் மனம் விட்டுப் பேசுவதில்லை, வெளியில் நண்பர்களிம் மனம் விட்டுப் பேசுவதில்லை.
    வாய்விட்டுப் பேசினால், பல பிரச்சினைகள் காற்றோடு கலந்து போகும் என்பது என் எண்ணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் நல்ல கருத்து நண்பரே! ஆம்! சரியே! ஆனால் இதையும் மீறியும் வருகின்றது பரம்பரையாலும்...என்ன செய்ய மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  7. எல்லோரும் ஒரு வகையில் மன நோயாளிகள் தான்...

    பதிலளிநீக்கு
  8. கவனமும் கண்காணிப்பும் என்றும் தேவை... அதை விட என்ன வேலை...?

    பதிலளிநீக்கு
  9. மனநோய்களுக்கு உற்ற மருந்து ஆறுதலான வார்த்தைகளும் அன்பான கண்காணிப்பும்....பகிர்விற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. மிகவும் ஆழமான அலசல்.நம்மில் பலருக்கு அவர்களைப் பற்றி நின்று யோசிக்கக் கூட நேரமில்லை.இந்நிலை மாற வேண்டும்.அவர்களைக் கவனித்துக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை.அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை என்பதை புரிந்து கொண்டால் சரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! உண்மையஏ! வீட்டில் உள்ள அன்நியர்கள் கூட புறக்கணிக்கப்படுகின்றார்கள் அதனால் உறவுகளையும் இழக்கின்றார்கள்...அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை ஆனால் புரிந்து கொள்ளப்படுவதில்லை...வேதனைதான். மிக்க நன்றி! சகோதரி!

      நீக்கு
  11. அந்நியன் சினிமாவில் வேண்டுமானால் வெற்றி பெறலாம் ,நடைமுறையில் அவனும் ஒரு மன நோயாளியே !அவனுக்கு தேவை அன்பும் ஆதரவும்தான் !
    த ம 4

    பதிலளிநீக்கு
  12. அடேயப்பா
    பெரிய செய்திகள்
    எப்படி திரட்டினீர்கள்

    பதிலளிநீக்கு
  13. மனத்தில் ஆழப் பதிந்துகொண்ட நல்ல உளவியற்பதிவு சகோதரரே!
    பகிர்விற்கு மிக்க நன்றி!

    எனக்குத் தெரிந்த வரையில் நம் நாட்டுப் பிரச்சனையால் மண்ணையும்
    சொந்த பந்தங்களையும் விட்டு உடுத்த துணியோடு உயிரையும் உடலையும்
    காவிக்கொண்டு அந்நிய நாடுகளுக்கு வந்து இங்குள்ள மொழி, கலாச்சாரங்களுடனும்
    காலநிலை, உழைப்பு, வருமானம் என்பவற்றுடனும் போட்டியிட முடியாமலும்
    திரும்பவும் நாட்டிற்குப் போக முடியாமலும் இங்கேயே இருக்கவும் பிடிக்காத
    மனநிலைப் போராட்டங்களால் அந்நியராகி வாழும் பல உறவுகள் உள்ளனர்.

    வளரும் பிள்ளைகளைக் கொண்டவர்கள் அவர்கள் எதிர்காலம் பற்றிய பயம்
    (கலாச்சாரம், பழக்க வழக்கம், மதம் இப்படியானவற்றால்) மனதை மிகவே பாதிக்கவே
    வெளியே சொல்லாமல் மனத்துள்ளேயே குமைவதால் பாதிக்கப்பட்டுள்ளனர் பலர்.

    வேலைக்குச் செல்பவர்கள் கொஞ்சம் பரவாயில்லை.
    இன்றும் வயதாகி நோயுற்றோ அன்றி வேறு காரணிகளால் வீட்டிலேயே முடங்குபவராயின் அவர்களும் இக்கொடுமையிலேயே சிறைப்படுகின்றனரே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம் மனம் மிகவும் வேதனைப் பட்டது சகோதரி! நாட்டுப் பிரச்சனையால் சொந்தங்களை விட்டு அந்நியர்களாக வேறு நாட்டில் அந்நியராக மாறி வாழ்தல் எத்தனை வேதனையானது! புரிகின்றது தங்களின் உள்ளமும், கருத்தும். ஆம்! கொடுமைதான்...மிக அழகிய விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோதரி!

      நீக்கு
  14. மிக நீண்ட பதிவு என்றாலும் சகோதரி மைதிலியின் பின்னூட்டத்தால் எழுதிய பகிர்வு என்றாலும் மிக முக்கியமான பகிர்வு...
    அனைவரும் வாசித்து அறிய வேண்டிய பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களது கருத்திற்கு! சில கனமான பதிவுகள் நீண்டு விடுகின்றன....ம்ம்

      நீக்கு
  15. அந்நியர்கள் என்றவுடன் எனக்கும் குழப்பம்தான். பதிவினுள்ளே “அந்நியன்” தலை காட்டிய பின்புதான் குழப்பம் தீர்ந்தது.

    த,ம.5

    பதிலளிநீக்கு
  16. முதலில் என்னை மன்னிக்கவேண்டும் சகாஸ்!! இத்தனை தாமதமான பின்னூட்டத்திற்கு:(( போகிற போக்கில் ஒரு கருத்தை தட்டிவிடக்கூடாது என இத்தனை தாமதம்.

    அப்புறம் நன்றி!! எனக்கு இப்படி ஒரு ஆழமான கட்டுரையை பரிசளித்தமைக்கு, என்னை குரிபிட்டமைக்கும்:))

    பொதுவாக பெண்கள் பேய் பிடித்து ஆடுவதில் மட்டுமல்ல சாமியாடுவது கூட இவ்வகை தான் இல்லையா! ஒரு குடிகார கணவனுக்கு வாக்கப்பட்ட அண்ணி மனம் நொந்து ( மனம்பிறழ்ந்து) பேய் பிடித்து ஆடிய கதைகள் எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன். அந்த சிறுமி பாவம் தான். நம் ஊரில் இன்னமும் இந்த அவார்நெஸ் வளரவே இல்லை என்பது மிகுந்த துரதிர்ஷ்டமான ஒன்று தான். இப்போது தான் இங்கு பள்ளிகளுக்கான மன நல ஆலோசகர்கள் நியமிக்கபட்டிருகிறார்கள். விரைவில் அவர்கள் பயனுள்ள பணி செய்வார்கள் என ஆவலோடு காத்திருக்கிறேன். உண்மையில் இதுவும் ஆசிரியராக நீங்களிட்ட பதிவுகளிலேயே மிக சிறப்பாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதற்கு மன்னிப்பு எல்லாம்...தோழி.....எப்போது உங்களுக்கு நேரம் கிடைக்கின்றதோ அப்போது வாருங்கள் தோழி மைதிலி...

      ஆம் பெண்கள் சாமியாடுவது எல்லாம் இவ்வகை நோயே...சந்தேகமே இல்லை...இது நியூரோ சைக்கியாற்றியிலும் வரும்...

      பரவாயில்லையே பள்ளிகளுக்கு மன நல ஆலோசர்கள்!!!! மிக நல்ல விசயம் தோழி. மிகவும் அவசியமும் கூட....மிக்க நன்றி தோழி!

      நீக்கு
  17. ஆசானே ,
    எல்லாத்துறையும் புகுந்து வருகிறீர்கள்.
    மனிதனின் அந்திமத் துடிதுடிப்பைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டே அநாயாசமாகக் கவளம் இறக்கும் வாழ்க்கைச் சூழல்.
    அன்பின் விழுமியங்களைச் சக மனிதர்களைப் புரிந்து கொள்வதைக் கற்றுக் கொடுக்காத கல்விமுறை!
    உங்கள் பதிவுகளின் கேள்விகள் உள்ளம் உள்ளவர்களைத் தொடும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எல்லாம் இல்லை ஆசானே! நாங்கள் இதை நெடு நாட்களாக பதிவிட வேண்டும் என்று நினைத்து எப்படி ஆரம்பிப்பது என்ற ஒரு தயக்கத்தில் இருந்த சமயம், கல்வி பற்றிய இடுகைக்கு உங்களின் அனுபவப் பின்னூட்டம், சகோதரி மைதிலியின் பின்னூட்டம் இரண்டும் இந்த இடுகையை பதிவிடத் தூண்டியது என்றால் அது மிகையல்ல.

      தாங்கள் சொல்லி இருக்கும் சூழல் மிகச் சரியே. கவளம் இறக்குவது மட்டுமல்ல, அதை உடனே முகநூலில் இட்டு லைக் போடுவதும் சர்வசாதாரணமாகிவிட்டது.

      அன்பை வலியுறுத்தி, அதைக் கற்றுக் கொடுக்காத கல்வி முறை...ஆம். போட்டிகளும், பணம் நாடிச் செல்லுவதாகவும் அமைந்துள்ளதற்கு பெற்றோரும் உறுதுணையாக இருப்பது மிகவும் வேதனைக்குரியது...ஆசானே!
      மிக்க நன்றி ஆசானே!

      நீக்கு

  18. ஒரு மிக சிறந்த நல்ல கட்டுரை என் கண்ணில் இருந்து தப்பிவிட்டது. சிறு வேண்டுகோள் உங்களின் வலைத்தளத்தில் வலது பக்கத்தில் வலைப்பக்கம் காப்பகம் என்பதில் நீங்கள் பதிவிட்ட நாட்கள்தான் வருகின்றன. அதற்கு பதிலாக பதிவுகளின் தலைப்பு வரும்படி செய்யவும் அப்போதுதான் உங்கள் பக்கம் வரும் போது படிக்காத தலைப்புகள் இருந்தால் அங்கு சென்று படிக்க உதவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாகச் செய்கின்றோம் தமிழா! மிக்க நன்றி தமிழா உங்களின் கட்டுரையைக் குறித்தக் கருத்திற்கும், சஜஷனுக்கும்.

      நீக்கு