நண்பர்கள் எல்லோருக்கும் இனிய கிறிஸ்த்மஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நாங்கள் இருவருமே நேரமின்மை காரணமாக வலைத்தளங்களுக்கு வருகை தர இயலவில்லை. தவறாக எண்ண வேண்டாம். பொருத்துக் கொள்ளவும். நண்பர் கோவை ஆவியின் குறும்படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் இருப்பதால். நண்பர்களே! திங்கள் கிழமையிலிருந்து தங்கள் வலைத்தளங்களுக்கு வருகின்றோம்.
இந்தக் கிறிஸ்துமஸ், புத்தாண்டிலிருந்தாவது, மனித நேயத்துடனும், பிற உயிர்களின் மீதும் அன்பு செலுத்தி வாழக் கற்றுக் கொள்வோம். இந்த பூமியில் எல்லா உயிர்களுக்கும் வாழ உரிமை உண்டு. (இப்படி நான் சொல்லுவதற்கு நிச்சயமாக விவாதங்கள் வரலாம் அதாவது, பிற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என்றால், அசைவ உணவு உண்ணுபவர்களை என்ன சொல்லுவீர்கள் என்று! சைவ உணவு உண்பவர்கள் எல்லோரும் நிஜமாகவே சைவம் தானா போன்ற கேள்விகள் எழத்தான் செய்யும். ஏனென்றால் நாம் எடுத்துக் கொள்ளும் ஆங்கில மருந்துகளில் ஒரு சில விலங்குகள் சார்ந்தவை. மாத்திரைகளின் அட்டையில் பார்த்தால் சிவப்புக் கலர் புள்ளி இருக்கும். இப்படிப் பல பொருட்கள் மறைமுகமாக விலங்குகளைச் சார்ந்துவருவதால் இந்தக் கேள்விகள் எழுத்தான் செய்கின்றன. இதைப் பற்றி என்னால் எழுத முடியும் என்றாலும் தற்போது நேரமின்மையால் எழுத இயலவில்லை. இந்தப் பதிவும் நீண்டுவிடும். இந்தப் பதிவின் நோக்கமும் அதுவல்ல. எனவே பின்னர். இதற்கான பின்னூட்டங்களும் வரலாம். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நல்ல கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்போது நாம் விஷயத்திற்கு வருவோம்.
இந்த நிஜ ஹீரோக்களைப் பாருங்கள்! இவர்கள் எல்லோரும் மனிதர்களாகிய நம் எல்லோருக்கும் முன்பே இந்த உலகில் தோன்றியவர்கள். பரிணாம வளர்ச்சியில் மனிதர்களாகிய நாம் தான் இறுதிக் கட்டத்தில் உருவானவர்கள். பரிணாம வளர்ச்சியில் ஆறறிவு , பகுத்தறிவு, நல்லது கெட்டது ஆராயத் தெரிந்தவர்கள் என்று நம்மை நாமே பெருமை பேசிக் கொண்டு மார் தட்டிக் கொண்டாலும், சாதி, மத வெறி, பண வெறி, அந்தஸ்து வெறி பிடித்து அலைகின்றோம். விலங்குகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன. நாய் புத்தி, நரித்தந்திரம், எருமைச் சோம்பேறி என்பது மனிதர்களாகிய நாம் உருவகப்படுத்தியதுதான். நமது அறியாமையை வெளிப்படுத்துவதுதான் அல்லாமல் அவை அப்படிப்பட்டவை அல்ல. அப்படிப்பார்த்தால் ஒரன்ங்கட்டான், சிம்பன்சி, கொரில்லா குரங்குகள் , டால்ஃபின்கள் நம்மை விட அதி புத்திசாலிகள். பல கடினமான கணக்குகளைக் கூட எளிதாகத் தீர்க்கும் திறன் படைத்தவையாம். உணர்வுகள் மிக்கவர்கள். ஏன் நாம் அவர்களை நம்முடன் ஒத்துப்பார்ப்பதில்லை?!
எனவே, தயவு செய்து யாரையும் நாய், நரி, பன்றி, எருமை என்று வசை பாட வேண்டாம். அது விலங்குகளைக் கேவலப்படுத்துவது மட்டுமல்ல, நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்வதும் ஆகும். இப்போது இந்த நிஜ டூப் போடாத ஹீரோக்களைப் பாருங்கள்!! அவர்களையும் வாழ்த்திப் போற்றுவோம்!
இத்துடன் இங்கு நிறுத்திக் கொள்கின்றோம். காணொளிகள் பல இருந்தால் பல சமயங்களில் அவை அப்லோட் ஆக சமயம் எடுக்கலாம். அதனால்.
எல்லோருக்கும் எங்கள் இனிய கிறித்துமஸ் வாழ்த்துக்கள்!
காணொளிகள்: நன்றி: யூட்யூப்.
அருமையான தொகுப்பு ,மனிதர்களிடம் இருக்கும் மதம்தான் மனிதனை விலங்குகளுக்கும் கீழாய் ஆக்கி விடுகிறது :)
பதிலளிநீக்குத ம 1
மிக்க நன்றி பகவான் ஜி! உண்மையே தங்கள் கருத்து!
நீக்குஇனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். மற்றும் அட்வான்ஸ் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇந்தக் காணொளிகள் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். எங்கள் வெள்ளிக்கிழமை வீடியோவுக்காக இவை எல்லாம் பார்த்து, சில தேர்ந்தெடுத்தும் வைத்திருக்கிறேன்!
:))))
நீங்க்ள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள் என்று தெரியும்! உங்களையும் சகோதரி ஏஞ்சலினையும் நினைத்துக் கொண்டுதான் போட்டோம் இந்த வீடியோக்களை! நீங்க்ளும் வைத்திருப்பீர்கள் என்பதும் தெரியும் நண்பரே!
நீக்குமனித நேயத்துடனும், பிற உயிர்களின் மீதும் அன்பு //எப்பொதுஎ இருந்தால் நன்று அல்லது இப்போதே மாறவேண்டும் அதுவே நன்று
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே தங்கள் கருத்திற்கு!
நீக்குநேயம் உடைய எல்லா உயிர்களுக்கும் - உயர்திணையோ அன்றி அஃறிணையோ -
பதிலளிநீக்குநல்வாழ்த்துக்கள்!..
மிக்க நன்றி ஐயா தங்கள் கருத்திற்கு !
நீக்குஆம் நிஜ ஹீரோக்கள்தான்
பதிலளிநீக்குகாணொளிகள் அருமை
இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்
இனிய கிறிஸ்மஸ் புதுவருட வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவிலங்குகள் என்று நாம் அவற்றை மிக மலிவாக எடைபோடக்கூடாது!
அற்புதமான உணர்வுகள் கொண்டவை அவை! என் அனுபவத்திற் கண்டேன்!
இன்றும் என்னுடன் இருக்கும் `மீரா` என்னும் எனது பூனைக்குட்டிதான் என் மகிழ்வே!..
அருமையான காணொளிப் பகிர்வுகள்! நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!
த ம.+
மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கும் வாழ்த்துக்களுக்கும்!
நீக்குஹை மீரா எனும் பூனைக்குட்டியா! மகிழ்ச்சியாக இருக்கின்றது சகோதரி!
நீக்குசிறப்பான காணொளிகளின் தொகுப்பு. உங்களுக்கு என் இதயம் நிறைந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி வாத்தியாரெ! உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் வாழ்த்துக்களுக்கும்!
நீக்குநிஜ ஹீரோக்கள் யாராக இருக்கும் என்று யோசனையுடன் வந்தால் காணொளிகளை கொடுத்து அசத்தி விட்டீர்கள்! சிறப்பான் காணொளிகள்! நன்றி!
பதிலளிநீக்குஹ்ஹஹஹஹ் மிக்க நன்றி சுரேஷ் நண்பரே! தாங்கள் ரசித்ததற்கு.....
நீக்குஆஹா உண்மையான நிஜ ஹீரோக்களைப்பற்றி தெரிந்து கொண்டாகிவிட்டது.
பதிலளிநீக்குஅவர்களை கண்டிப்பாக போற்ற வேண்டும் .
"//ஆங்கில மருந்துகளில் ஒரு சில விலங்குகள் சார்ந்தவை.//" - புதிய செய்தி.
எனக்குத் தெரிந்தது மீன் மாத்திரை தான்.
ஒவ்வொரு கானொலியும் நமக்கு நிறைய விஷயங்களை புரிய வைக்கிறது.
நல்லதொரு பகிர்வு.
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
"//ஆங்கில மருந்துகளில் ஒரு சில விலங்குகள் சார்ந்தவை.//" - புதிய செய்தி.
நீக்குஎனக்குத் தெரிந்தது மீன் மாத்திரை தான்..//
நிறைய மாத்திரை அட்டைகளில் ப்ரௌன் அல்லது சிவப்பு வண்ணத்தில் பெரிய புள்ளி இருக்குமே நண்பரே! அங்கு எப்படி என்று தெரியவில்லை. இந்தியாவில் அப்படித்தான் இருக்கும்.
மிக்க நன்றி நண்பரே!
மிருகங்களுக்கு இருக்கும் மனிதநேயம் மனிதனுக்கு இல்லாமல் போனதுதான் வேதனை
பதிலளிநீக்குகாணொளிகளின் தொகுப்பு அருமை
த.ம.6
மிக்க நன்றி கில்லர் ஜி! தங்களின் கருத்திற்கு! ரசித்ததற்கும்!
நீக்குஉண்மையிலேயே இவர்கள்தான் நிஜ ஹீரோக்கள்
பதிலளிநீக்குஆம்! உண்மையே! மிக்க நன்றி நண்பரே!
நீக்குகாணொளிகளிலும் கலக்குகிறீர்கள் ஆசானே !
பதிலளிநீக்குதொகுத்துத் தந்தது அருமை!
நன்றி
மிக்க நன்றி ஆசானே! நீங்கள் அசத்துவதை விடவா?!!!!
நீக்குஅருமையான தொகுப்பு சார்...
பதிலளிநீக்குஇனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி நண்பரே! தாங்கள் ரசித்ததற்கு...
நீக்குகாட்டு விலங்காண்டி (காட்டுமிராண்டி) என இனியும் எந்த விலங்கையும் திட்டக்கூடாது போலத் தோன்றுகிறது. திரைப்படத்தில் “டுப்“ போடுகிறவர்தான் உண்மையில் மாடியிலிருந்து குதிப்பார், சுமமா குதிப்பதுபோல நடிப்பவரை நாயகன் என்றும் உண்மையாகக் குதிப்பவரை டுப் என்றும் சொல்லிப் பழக்கியதே நாம்தானே? மனித நேயததை விட விலங்கின்நேயம் உயர்ந்தது எனபதை, வைரமுத்து “ஐந்துபெரிது, ஆறுசிறிது” என்று கவிதையில் சொல்வார். நீங்கள் உரை-ஒலி-ஒளியில்..நன்றி
பதிலளிநீக்குஆம்! மிகவும் சரியே ஐயா!
நீக்குவைரமுத்து “ஐந்துபெரிது, ஆறுசிறிது” என்று கவிதையில் சொல்வார்// அட!! மிக்க நன்றி ஐயா தாங்கள் இந்த வரிகளைச் சுட்டியதற்கு!
மிக மிக அருமையான காணொளிகள் ..கான்பூர் ரயில் நிலையத்தில் நம் மூதாதையர் பங்காளி ரெண்டு நாள் முன் தன் சகாவை காப்பாற்றிய வீடியோ பார்த்தீங்களா . ....மனம் நெகிழ்ந்தது . .நாம் அனைவரும் இவர்களிடம் நிறைய கற்கணும் .
பதிலளிநீக்குநாங்கள் இந்த இடுகை இடும்போதே நண்பர் ஸ்ரீ ராமையும் உங்களையும் நினைத்துக் கொண்டேதான் போட்டோம் சகோதரி! ஆம் னம் மூதாதையர் பங்காளியின் வீடியோவைப் பார்த்தோம்...மனம் நிஜமாகவே நெகிழ்ந்துதான் போனது. நிறைய கற்க இருக்கின்றது சகோதரி! மிக்க நன்றி!
நீக்குஅன்பிற்கினிய நண்பர்களே,
பதிலளிநீக்குபதிவும் பார்வைக்கு தந்த காணொளி தொகுப்பும் நல்ல தேர்வுகள்.
மாமிசம் என்பது விலங்குகளின் தசை, தாவரங்கலென்பது(காய் கனி,இலைகள் கீரைகள்,தழைகள்,கிழங்குகள் )விலங்குகளின் உணவுகள்.
விலங்குகளின் மீது அன்பு காட்டுவதாக எண்ணி நாம் அவைகளின் உணவினையும் சேர்த்து சாப்பிட்டு விலங்குகளை உயிரோடு கொள்கின்றோமோ என்று எண்ண தோன்றுகின்றது.
தாவரங்களும் உயிருள்ளவையே!
தேனும் பாலும் நமக்கான உணவுகளல்லவே, அவை தங்களுக்கும் தங்களின் குழந்தைகளுக்குமானது. அவற்றை உண்ணும் நாம் எப்படி ஜீவா காருண்யம் பற்றி சிந்திக்க முடியும்.
மிருகங்களுக்குள்ளேயே ஒன்றை ஒன்று அடித்து புசித்துதானே வாழ்கின்றன அதுதானே வாழ்வியல் நியதி. அதுபோலவே மனிதனை மனிதன் அடித்து சாப்பிடாதவரை உலகியல் - வாழ்வியல் நியதிக்கு கட்டுப்பட்டு வாழும் வரை எந்த தீட்டும் இல்லை என்று நினைக்கின்றேன்.
நானும் மிருக "வதைக்கு" எதிரானவன் தான்.
பாராட்டுக்கள்.
உங்களுக்கும் உங்களிரு குடும்பத்தினருக்கும் எமது இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
நட்புடன்
கோ
தாவரங்களும் உயிருள்ளவையே!
நீக்குதேனும் பாலும் நமக்கான உணவுகளல்லவே, அவை தங்களுக்கும் தங்களின் குழந்தைகளுக்குமானது. அவற்றை உண்ணும் நாம் எப்படி ஜீவா காருண்யம் பற்றி சிந்திக்க முடியும்.//
மிகவும் சரியெ நண்பரே! நாம் செடிகளை வளர்த்துவிட முடியும். ஆனால், விலங்குகளின் சந்ததியை நாம் வளர்க்க முடியாதே நண்பரே! இது 5 அறிவிற்கும் ஓரறிவிற்கும் உள்ள வித்தியாசம் அல்லவா....பால் கன்று குட்டி குடித்த பிறகு மிஞ்சுவதைத்தான் நாம் பருக வேண்டும் சரியே. கன்றுகுட்டியும் அதிகம் குடிக்கக் கூடாது என்பதும் இருக்கின்றது அல்லவா.
நம்மால் முழுவதும் பின்பற்ற முடியாதுதான்.
//மிருகங்களுக்குள்ளேயே ஒன்றை ஒன்று அடித்து புசித்துதானே வாழ்கின்றன அதுதானே வாழ்வியல் நியதி.//
உண்மையே ஆனால் மனிதன் ஆறறிவு படைத்தவன்....இல்லையா...
மிக்க நன்றி நண்பரே விரிவான கருத்திற்கு!
ஹை! so க்யூட்:)) so பாரதி சொன்ன "உயிர்களிடத்தில் அன்பு வேணும் "அதானே.... ஆனாலும் குரங்கு கடிபட்டும் அவற்றை இன்னும் அன்போடு வளர்த்து வரும் நீங்க சொன்ன சரியா தான் இருக்கும்:)
பதிலளிநீக்குஹஹஹஹஹ் தோழி! உண்மையே ! அந்தக் குரங்கிற்கு என்ன தெரியும் சொல்லுங்க!? மனிதன் ஆறு அறிவை வைத்துக் கொண்டு நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளாமல், சக மனிதனையே கொல்கின்றானே!
நீக்குமிக்க நன்றி தோழி! தாங்களும் ரசித்ததற்கு!
நிஜ ஹீரோக்கள் தான்... சந்தேகமே இல்லை...
பதிலளிநீக்குஇனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்
ஆம் டிடி!! மிக்க நன்றி தங்கள் வாழ்த்திற்கும் கருத்திற்கும்!
நீக்குகாணொளியில் காண்பதால் இவர்கள் நிழல் ஹீரோக்கள் என்பது விலங்கினம்
பதிலளிநீக்குநிஜ ஹிரோக்கள் என்றால் பெருமிதம்! அருமை அய்யா!
(எங்கே குழலின்னிசை கேட்டு கேட்டு சலித்து போய் விட்டதா அய்யா அவர்களுக்கு?°
நன்றியுடன்,
புதுவை வேலு
ஐயோ இல்லை ஐயா! குழலிசை கேட்டு எப்படி சலிப்பு வரும்?!! இனிமையாக இருக்கும் போது ? நேரமின்மை காரணமாக வர இயலவில்லை ஐயா! ஆவியின் குறும்பட வேலைகள் போய்க் கொண்டிருப்பதால்....வருகின்றோம் ஐயா நிச்சயமாக!!
நீக்குமிருக வதையே நீ சிதைந்து போ!
பதிலளிநீக்குபுதுவை வேலு
ஆஹா!!!!! அருமை அருமை!!!!
நீக்குமிக்க நன்றி ஐயா!
Thanks for the wishes..
பதிலளிநீக்குtha ma ++
a very happy new year wishes for you both..
lvu
mathu
ஹை தோழரே! மிக்க நன்றி தங்களின் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு!
நீக்கு" மனிதர்கள் தங்களையும் விலங்குகளாக நினைத்துக் கொண்டிருந்த வரையிலும், நெருப்பும் சக்கரமும் கண்டுபிடிக்கப் பட்டிராத, ஆற்றுப்படுகைகளை ஆக்கிரமித்து நாகரீக வளர்ச்சி அடைந்திராத வரையிலும், காமம் கழிக்க மட்டுமே கட்டியணைத்த வரையிலும் ஆதி காடு சுகமாகத்தான் இருந்தது. அங்கே வாழ்ந்த அத்தனை உயிரினங்களும் அதனதன் தேவை கருதி ஒரு பல்லுயிர்ச் சுழற்சியை நிகழ்த்தி வந்தன. காட்டிற்கு ராஜா சிங்கம் என அதற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கானகத்தின் வேட்டையன் புலியும் தந்திரக்கார நரியும் வெறும் புலியும் நரியுமாகத்தான் உயிர் வாழ்ந்திருக்க வேண்டும். "
பதிலளிநீக்குமேலே குறிப்பிட்டது நண்பர் சீனுகுருவின் திடங்கொண்டு போராடு தளத்தில் படித்த கதையின் வரிகள்.
http://www.seenuguru.com/search?updated-max=2014-12-26T19:18:00%2B05:30&max-results=1
உங்கள் பதிவை படிக்கும் போது அந்த ஞாபகம்தான் எழுந்தது !
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
மிகவும் சரியே! நண்பரே! சீனுவின் ஆதிவனம் பதிவை வாசித்தோமே! அவர் அருமையாக இலக்கியத் தரத்துடன் படைத்திருந்தார். படைப்பவரும் கூட!!! அருமையான பதிவு! எல்லாமே மனிதன் செய்வதுதானே நண்பரெ!
நீக்குமிக்க நன்றி அழகிய வரிகளைச் சுட்டிச் சொல்லியதற்கு!
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குஉண்மையான ஹீரோக்கள் .... பற்றி காணொளி மூலம் காட்டி அசத்தியது அருமை . உயர்திணை என்று தங்களை எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு அஃறிணை பற்றி... அதன் நேயத்தைப் பற்றிக் காட்டியது மிகவும் நன்றாக இருந்தன.
‘நாயே! ’ என்று இழிவு என்று நினைத்துச் கேவலமாக பேசுவது... நம்மை நாமே இழிவுபடுத்திக்கொள்வதுதான்! நம்மைவிட நாய் மேலானது.
விலங்குகளின் மீது தங்களுக்கு அலாதி பிரியம்தான் அய்யா.
நன்றி.
மிக்க நன்றி நண்பரே! ஆம் ! அலாதிப் பிரியம்தான்...அவர்களிடமிருந்துக் கற்க நிறைய விஷயங்கள் இருக்கின்றதே!
நீக்குமிக்க நன்றி ஐயா!
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇன்றுதான் இந்த பதிவினில் உள்ள் வீடியோ காட்சிகளை பொறுமையாகக் காண நேரம் கிடைத்தது. இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகளில் நடுரோட்டில் தனது சகாவை காப்பாற்ற நினைக்கும் நாய், பூனை காட்சிகள் மனதைத் தொட்டன. டால்பின் மீன்கள் அந்த நீச்சல் குளத்திற்கென்று பழக்கப் பட்டவை என்று நினைக்கிறேன்.
நீக்கு(அன்புள்ள தில்லைஅகத்து V.துளசிதரன் அவர்களுக்கு வணக்கம். உங்கள் பதிவினில் நீங்களும் சகோதரி கீதா அவர்களும் எழுதி வருகின்றீர்கள். நன்று. ஆனாலும் சிலசமயம் இருவரில் யார் எழுதியது என்ற் பெயர்க் குழப்பம் வருகிறது. காரணம் Posted by என்ற இடத்தில் தங்கள் பெயர் மட்டுமே வருகிறது. எனவே வரும் புத்தாண்டு முதல், Settings இல் Admin என்ற பகுதியில் மாற்றம் செய்யவும்.)
த.ம.11
தாங்கள் வீடியோ காட்சிகளை கண்டதற்கு மிக்க நன்றி ஐயா!
நீக்குதங்களின் கருத்தை ஏற்றுக் கொள்கின்றோம். பல சமயங்களில் துளசி சொன்னாலும் கீதா தன் பெயரைப் போடாமல் பதிவேற்றம் செய்து விடுவதால் ...இனி பெயர் போடுகின்றோம் ஐயா.....
மிக்க நன்றி ரமணி சார்! தங்கள் கருத்திற்கும் ஓட்டிற்கும்!
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
பதிலளிநீக்குடால்பின்களைப் பார்த்ததும் எனக்கும் அவை பழக்கப்பட்டவை என்றே தோன்றியது. மற்ற காணொளிகளும் நன்றாக இருந்தன.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், உங்களுக்கும், சகோதரி கீதாவிற்கும்.
உங்கள் தளத்தில் எனது மின்னஞ்சல் பதிவு செய்திருக்கிறேன். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு வருவதில்லையே. என்ன செய்வது?