புதன், 17 டிசம்பர், 2014

லிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.

    

       லிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார்  தமிழ் நாட்டிற்கும் கேரளாவிற்கும் இடையே புதுப் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் படத்தைக் கையாளப் போகிறார் என்ற ஐயமும் கூடவே பயமும் படத்தை நேற்றுக் காணும் வரை இருக்கத்தான் செய்தது. பார்த்த பின் தான் அவ் ஐயமும், பயமும் மாறியது.  ரவிக்குமாருக்கும், அவருக்கு லிங்கா கதையை உருவாக்க உதவிய கதை இலாகா நண்பர்களுக்கும், இலைக்கும், முள்ளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் கதையைச் சொல்லிச் சென்றதற்கு முதலில் நன்றி சொல்லியே ஆக வேண்டும். 


      அதுமட்டுமல்ல, அமிதாப்பச்சனைப் போல் படப்பிடிப்பின் போது ஆரோக்கியப் பிரச்சினை வந்து, இனி கோச்சடையான் படத்தில் தோன்றியது போல்தான்  ரஜனி தோன்றுவாரோ என்று வருந்திய எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில், மிகக் குறைந்த கால அளவில் ரஜனியின் ஆரோக்கியத்திற்கு சவாலாகாத முறையில் படப்பிடிப்பை முடித்து எளிதான அதே நேரம் ரஜனியிடம் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் ஒரு சேர படத்தில் கொண்டுவந்து, அமிதாப் போல் ரஜனியும் இனி படங்கள் பல செய்து சாதனை படைப்பார் என்று நிரூபித்துக் காட்டிய ரவிக்குமாருக்குப் பாராட்டுக்கள். ரஜனியைப் பற்றி என்ன சொல்ல? நம் பதிவர் நண்பர் விசுAwesome சொல்லுவது போல் தலைவர் தலைவர்தான். அவருடைய கண்களும், மூக்கும், பார்வையும், அசைவும், பாலசந்தருக்கு ஆச்சாரிய ரஜனீஷை நினைவுக்குக் கொண்டுவந்ததால் தானே பாலசந்தர் அவருக்கு ரஜனி என்ற பெயரே வைத்தார். எப்போதும், எல்லோரையும் தன் பால் ஈர்க்கும் சக்தி உடைய ரஜனி ரஜனிதான்.

 

      சந்தானம் குழுவுடன் கும்மாளம் போடும் போதும், அனுஷ்காவுடன் ஆடிப்பாடும் காட்சிகளிலும், அரசனாக வரும் காட்சிகளிலும் அணை கட்டும் பணியில் ஏற்படும் காட்சிகளிலும் அவருக்கே உரித்தான பாணியில் அசத்துகிறார்.  சத்திரத்தில் பசித்தோருக்கு உணவளித்துப் பசி போக்கும் காட்சியிலும், கிராமத்தினர் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டு கிராமத்தை விட்டுத் துரத்தும் காட்சியிலும், காண்போரின் கண்களில் நீர் நிரம்ப வைக்கின்றார். படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஆர்ட் டைரக்டரும், ஒளிப்பதிவாளரும் தங்கள் திறமையைக் காண்பித்திருப்பதுக் குறிப்பிடத்தக்கது. இவற்றிற்கெல்லாம் மேலாக கிராஃபிக்ஸின் அற்புதங்கள் அங்கங்கே நிகழ்ந்து நம்மை பிரமிக்க வைக்கிறது.  பாடல்களும், இசையும் தங்கள் பங்கைக் குறைவின்றிச் செய்திருக்கின்றன.

      கலெக்டர் லிங்கேஸ்வரனை இந்தியன் என்று அறியாமல் ரயில் பயணத்தினிடையே அவரைக் கொல்ல வரும் வன்முறைவாதிகளான சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் தனியே போராடி வென்ற பின், அவர் இப்படியெல்லாம் செய்யாமல், காந்தியுடனோ, சுபாஷ் சந்திர போசுடனோ சேர்ந்து சுதந்திரத்திற்காகப் போராட அறிவுரை கூறி அவர்களை விடுதலை செய்யும் இடமும், கட்டிக் கொண்டிருக்கும் அணைக்கட்டின் உச்சியில் பறக்கும் மூவண்ணக் கொடியை வெள்ளையனான வில்லன் கலெக்டர் சுட்டு வீழ்த்தும் போது, நூற்றுக் கணக்கான அணை கட்டும் பணி செய்யும் தொழிலாளர்கள் தங்களது மார்பில் குத்தியிருக்கும் மூவண்ணக் கொடிகளைக் காண்பித்து லிங்கேஸ்வரன் தைரியமிருந்தால் அதைச் சுடச் சொல்லும் இடமும், படத்தில் வரும் அருமையானக் காட்சிகள். மட்டுமல்ல, அவை, படத்தில் வரும் காட்சிகள் இந்தியா சுதந்திரம் பெறும் முன் நடந்தவை என்பதை உணர்த்த போதுமானவையாகவும் இருக்கிறது.


http://thillaiakathuchronicles.blogspot.com/2014/03/ToVishnuNamboothiriSir.html

பென்னிகுயிக்கிற்குப் பதிலாக லிங்கேஸ்வரன் எனும் இந்திய ஐசிஎஸ் காரரை படத்தின் நாயகனாக்கினாலும், லிங்கேஷ்வரன் பென்னி குயிக்கைப் போல் சிவில் எஞ்சினியரிங்க் படித்தவர் என்பதும், தன் மாளிகை மற்றும் சொத்துக்களை மட்டுமல்ல, தன் கட்டில்கள், மற்றும் படுக்கைகளை வரை விற்றுத்தான் பென்னிக் க்விக் முல்லை பெரியாறு அணை கட்டினார் என்பது போல லிங்கேஷ்வரன் தன் அரண்மனை மற்றும் நகைகளை விற்று அணை கட்டுவதைக் காண்பித்தும், வருடங்களுக்குப் பின் பென்னி குயிக்கின் பேரக் குழந்தைகளைத் தமிழகம் அழைத்து வந்து கௌரவித்ததைப் போல லிங்கேஷ்வரனின் பேரனைக் கிராமத்தினர் மரகத லிங்கேஸ்வரர் கோவிலைத் திறக்கக் கொண்டுவருவதாகக் காண்பித்தும், பென்னி குயிக் எனும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து “தெயத்துள் வைக்கப்பட்ட” மாமனிதரை இலை மறையாகக் காண்பித்தது மனதுக்கு இதமாக இருந்தது.  அப்படி கடந்த நூற்றாண்டில் 2 ½ லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் நட்த்தவும், நான்கு மாவட்டங்களின் தண்ணீர் பற்றாக் குறையைப் போக்கவும் தன் செல்வத்தை எல்லாம் செலவிட்டு முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னி குயிக் எனும் ஒரு புண்ணியாத்மாவைத் தமிழகம் மறக்கவில்லை என்பதை உலகிற்கு உணர்த்தும் ஒரு படமும் கூட என்ற சிறப்பும் இந்த லிங்காவுக்கு உண்டு.

“குண நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் – மிகை
 நாடி மிக்கக் கொளல்” எனும் வள்ளுவன் வாக்கிற்கு இணங்க மேற்சொன்ன பல மிகைகள் உள்ளதால் குறைபாடுகள் இருப்பினும் படம் பார்க்கலாம் தான்.


பின் குறிப்பு :  கேரளாவில் முதல் ஆண்டு உயர் மேல் நிலை வகுப்பில் கற்பிக்கப் படும் ஆங்கிலப் புத்தகத்தில் “The Trip of Le Horla” எனும் பாடத்தில் பிரபல ஃப்ரென்ச் எழுத்தாளரான “Maupassant” தான் மேற்கொண்ட ஒரு பலூன் யாத்திரையை விவரிக்கிறார். நெட்டிலிருந்து ஒரு பலூன் ட்ரிப் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு காண்பிக்க முடிவு செய்திருந்தேன்.  லிங்காவின் க்ளைமாக்ஸ் காட்சி அதற்கு அவசியமில்லாமல் செய்தே விட்டது.  எனவே மாணவர்களிடம் கிறிஸ்மஸ் விடுமுறையின் போது லிங்கா பார்க்க நேர்ந்தால் பலூன் யாத்திரையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்று சொல்லியிருக்கின்றேன்.  இனி அந்தப் புத்தகம் மாறும் வரை லிங்காவை Le Horla பலூன் யாத்திரையுடன் “லிங்க்” செய்து எளிதாகப் பாடத்தை எடுக்கலாம். அபடி லிங்கா எனக்குத் தனிப்பட்ட முறையிலும் உதவியாக இருக்கின்றது என்பதையும் இங்கு சொல்லியே ஆக வேண்டும்...ஹிஹி... கோபப்பட வேண்டாம் ஆசிரிய நண்பர்களே!
படங்கள் : இணையம்

47 கருத்துகள்:

 1. லிங்கா விமரிசனம் அருமை.
  நாங்கள் பொருத்திருந்து தான் படம் பார்க்க வேண்டும்.
  தம.1

  பதிலளிநீக்கு
 2. இணையத்தில் கலவையான விமர்சனங்கள்...
  இப்போ 26 நிமிட படத்தை வெட்டியிருக்கிறார்கள்.
  ரசினி ரசிகரான நண்பரே படம் பார்த்து விட்டு வந்து புலம்பினார்.
  நான் இன்னும் பார்க்கவில்லை...
  இருப்பினும் நிறைமட்டுமல்லாது குறைகளும் இருந்தாலும் பார்க்கலாம் என்று சொன்ன தங்கள் விமர்சனம் நன்று.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ! வெட்டப்பட்டிருக்கிறதா..அப்போ பார்த்தது? வெட்டப்பட்டதா? வெட்டப் படாததா...தெரியவில்லையே...

   மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 3. அன்பிற்கினிய நண்பர்களே,

  பொதுவாக திரைப்படங்களை வேலை மெனைகெட்டு திரை அரங்கம் சென்று பார்க்கும் ஆர்வம் அண்மைகாலமாக என்னிடம் அவ்வளவாக இல்லை அதற்க்கு காரணம், இங்கு தமிழ் திரைப்படங்கள் எப்போது வருகிறது எப்போது போகின்றது என்பதெல்லாம் அவ்வளவாக விளம்பரபடுத்தபடுவதில்லை.

  அதுவும் சில படங்கள் சில காட்சிகள் மட்டுமே திரையிடப்படும் அதுவும் ஓரிரு நாட்கள் மட்டுமே, எனவே அவற்றை எல்லாம் நினைவில் வைத்து நேரம் ஒதுக்கி படம் பார்பதென்பது சாத்தியமல்ல.

  எனினும் திரு ரஜினிகாந்த் நடித்த லிங்கா பற்றிய உங்கள் பார்வையும் அதன் பகிர்வும் நன்றாக இருந்தது.
  ஒரு பொறுப்புள்ள ஆசிரியர் நீங்களே மாணவர்களை இந்த படம் பார்க்கும்படி அறிவுரை வழங்கியதிலிருந்தே அந்த படத்தின்- கதையின் -காட்சி அமைப்புகளின் சிறப்பை உணர முடிந்தது.
  கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய ஊக்குவிக்க மாட்டீர்கள் என்பதில் உங்கள் மேல் அதீத நம்பிக்கையுடயவனாக இருக்கின்றேன்.

  பகிர்வுக்கு நன்றி

  நட்புடன்

  கோ


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில படங்கள் சில காட்சிகள் மட்டுமா...அது சரி...

   நண்பரே! அதான் சொல்லிட்டோமே ஆசிரிய நண்பர்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள் என்று.....

   இறைவனுக்குப் பால் அபிஷேகம் செய்வதையே விரும்பாதவர்கள்....நாங்கள்...நடிகருக்கா....நோ நெவர்!

   நீக்கு
 4. படத்தில் வரும் சிறந்த காட்சிகளையெல்லாம் சொல்லி படத்தை பார்க்காதவர்கள் சீக்கிரம் பாருங்கள் என்று கூறிவிட்டீர்கள்.
  அடுத்த வார சிறிஸ்துமஸ் விடுமுறை நாளில் தான் படத்தை பார்க்கலாம் என்று இருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே! பாருங்கள் என்று சொல்லவில்லை....ஹஹ் பார்த்ததைப் பற்றி ஒரு சிறு கண்ணோட்டம் அவ்வளவே பார்ப்பதும் பார்க்காததும் அவரவர் விருப்பம்...

   நீக்கு
 5. இன்னும் படம்.பார்க்கவில்லை. கிடைக்கவில்லை@!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டிக்கெட் கிடைப்பது கஷ்டம்தான்...ம்ம்ம்

   நீக்கு
  2. ஹி.... ஹி.... ஹி..... டிக்கெட் கிடைக்கவில்லை என்று சொல்லவில்லை. ஸிடி!

   நீக்கு
  3. கிடைக்கவில்லை !!!! என்று போட்டிருந்தது.....புரிந்தது நீங்கள் சொன்னது.... எப்போது?!!!.. புரியும் போது முதலில் அடித்த கமென்ட் உள்ளே போய்விட்டது....ஹஹா சரி போனால் போகட்டும் என்று விட்டுவிட்டோம்....

   நீக்கு
 6. Nice review!

  A positive approach! You must be some kind of "Rajini fan" whether you would like to admit that or not! :)

  Nobody wrote a review in this perspective. I feel sorry for people those who could not appreciate this movie. As a patriot, one who loves his/her country can appreciate the "flash back"! As a spiritual person one can appreciate the "grandpa Rajini" and his philosophical thoughts. As a fun-loving person one can enjoy the duet songs especially Anushka- Rajini chemistry which I liked better. I dont understand why people are not able to appreciate this movie! The climax is like a "Jame-bond" movie kind. One should take that easy!

  My tamil fonts did not work! Please pardon my English!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Very Glad to see you Friend! Thanks a lot! for your encouraging words.. Please no words like pardon....Nothing wrong...It happens for everyone right?!

   What you say is right! your views about the movie....

   mmmm yeah Rajini Fan.....what is there to admit it frankly!!

   Thanks a lot our dear friend...visit us and encourage us if we give good ones....

   Thanks for coming .!!

   நீக்கு
 7. நல்லதையை மட்டும் எடுத்துக் கொள்வதற்கு பாராட்டுக்கள்... நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 8. என்னைக் கேட்டால் படத்தினை பென்னி குயிக் அவர்களுக்கு அர்ப்பணித்திருக்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி! நண்பரே! ஓ! அப்படியும் செய்திருக்கலாமோ?!!!

   நீக்கு
 9. திரைப் படத்தினை விமர்சித்து பாராட்டியிருக்கும் விதம் அருமை!.. நன்றி..

  பதிலளிநீக்கு
 10. நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும்,அதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் காட்டிய உங்களுக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 11. நேற்றுதான் பார்த்தேன் படம் .... அருமையான விமர்சனம்

  பதிலளிநீக்கு
 12. கேரளாவில் இந்த படத்திற்கு வரவேற்பு எப்படி என்பதையும் சொல்லுங்க ஜி !
  த ம 4

  பதிலளிநீக்கு
 13. ஐயா, நான் ரசித்த ரஜினி படையப்பாவோடு sari. அதற்கு பின் அவர் படம் எதையும் நான் காணவில்லை.

  நல்ல பதிவு, ரசித்து படித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! நணப்ரே! நீங்கள் கூட ஒரு பதிவில் எழுதியிருந்ததாக நினைவு....ஆனாலும் ரசித்துப் படித்ததற்கு மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 14. வணக்கம்
  அண்ணா

  விரிவான விளக்கம் கருத்துகள் நிறைந்த விமர்சம் ரஜினி படத்தை பார்த்தாச்சி.... பகிர்வுக்கு நன்றி
  த.ம 5
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:

  கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரூபன் தம்பி! பார்த்தாச்சா......மிக்க நன்றி...வருகின்றோம் தங்கள் பதிவிற்கு ....

   நீக்கு
 15. "லிங்கா" திரைப் படத்தை இவ்வளவு விமர்சையாக யாரும் விமர்சிக்காத வகையில் விமர்சனம் செய்துள்ளீர்கள்!.
  சூப்பர் ஸ்டார் பட விமர்சனம் சூப்பர்ஜீ!
  நன்றி!
  புதுவை வேலு
  எனது இன்றைய பதிவு "நாராய்! இளந் நாராய்" கவிதையை நோக்கி வாராய்! அய்யா! வாரய்!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா! தங்கள் கருத்திற்கு. வருகின்றோம் தங்கள் தளத்திற்கு..

   நீக்கு
 16. அன்புள்ள அய்யா,

  ‘லிங்கா‘ திரைப்பட விமர்சனம் அருமையா இருந்தது. படம் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. பென்னி குயிக் அவர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 17. மாப்பசான்ட் பாடம் தேடிப் படிக்கிறேன்..
  நல்ல விமர்சனம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மது நண்பரே! நீங்கள் எல்லாம் விமர்சிப்பது போலா?!!! நீங்கள் மிகவும் அருமையாக விமர்சிப்பீர்கள்....இது ஏதோ எங்களுக்கு எட்டியவகையில்.....மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 18. இன்னும் படம் பார்க்கவில்லை... வரும் சனி, ஞாயிறும் பிரான்ஸில் இன்னும் லிங்கா தொடர்ந்தால் பார்க்க முயற்சிப்பேன் !

  ரசித்து வம்ர்சனம் எழுதியிருக்கிறீர்கள் !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 19. ரவிக்குமார் அவர்களைப் பாராட்டலாம்
  சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 20. பென்னி குயிக் எனும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து “தெயத்துள் வைக்கப்பட்ட” மாமனிதரை இலை மறையாகக் காண்பித்தது மனதுக்கு இதமாக இருந்தது.

  அருமையான விமர்சனம்.

  பதிலளிநீக்கு
 21. மிக அருமையான விமர்சனம் சகோ ! சென்னை வரும்போது பார்க்கணும். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!

   நீக்கு