புதன், 4 ஜூன், 2014

கின்னஸ் ரெக்கார்டுக்குச் சமமான,......ஆனால் வித்தியாசமான பயணம்!      திரைப்படங்களில் கதாநாயகர்களும், வில்லன்களும் ரயிலுக்கு அடியில் ஊர்ந்து சென்றுத் தங்களது எதிரிகளுடன் போராடுவதையும், எதிரிகளிடமிருந்துத் தப்பிச் செல்வதையும் பார்த்திருக்கின்றோம். அவை எல்லாம் திரைப்படங்களில் வந்தக் காட்சிகள்.  அவற்றை எல்லாம் திரைப்பமாக்க எவ்வளவோ பாதுகாப்பான நடவடிக்கைகள் எடுத்த பின் படமாக்கப்பட்டவை.  அதில் கொஞ்சம் கடினமான வேலைகளைச் செய்ய சாக்சம் புரியும் டூப் நடிகர்கள் இருந்திருப்பார்கள்.  ஆனால், அவர்கள் கூட ஏராளமானத் தற்காப்பு முறைகளின் உதவியுடன்தான் அது போன்ற காட்சிகளில் நடித்திருப்பார்கள்.


     ஆனால், உயிருக்குப் பயந்து ஒரு மனிதன் வேறு வழியின்றி புகைவண்டியின் சக்கரங்களைப் புகைவண்டியின் பெட்டியுடன் இணைக்கும் ஃபௌண்டேஷனுக்கும் (வீல் செட்), புகைவண்டிப் பெட்டியின் அடித் தட்டிற்கும் இடையே உள்ள ஒரு சிறிய இடைவெளியில் நுழைந்து படுத்த படி நீண்ட 4 மணி நேரம், எர்ணாகுளத்திலிருந்து திருவனந்தபுரம் வரை, வஞ்சிநாடு விரைவு வண்டியில் பயணம் செய்திருக்கிறான்.  பாவம்!..... ஏதோ ஒரு வேகத்தில் எடுத்த முடிவாக இருந்தாலும், இடையே அங்கிருந்துவெளியே வர முடியாத நிலையில், மனம் மற்றும் உடல் வலுவிழந்த நிலையில், வேகமாகப் புகைவண்டி ஓடிய பொழுது உண்டாகும் தூசியைச் சுவாசித்ததாலும், தொடர்ந்து இடைவெளி இல்லாமல் 4 மணி நேரம் தன் உடல் மேலும், கீழும் உள்ள சூடான இரும்புத் தட்டில் அடி பட்டதனாலும், தளர்ந்த அம்மனிதன் திருவனந்தபுரத்திற்குப் புகைவண்டி சென்றடைந்த பின்னும் 1 மணி நேரம் வரை அசைவின்றி மயங்கிய நிலையிலேயே கிடந்திருக்கின்றான்.

     இப்படிப்பட்ட, யாருமே சிந்தித்துக் கூடப் பார்க்க முடியாத ஒரு பயணம்!  எந்த நிமிடத்திலும் தெரித்து புகைவண்டிக்கும், தண்டவாளத்திற்கும் இடையே சிக்கி, உடல் பல துண்டுகளாகச் சிதைந்து போகக் கூடிய வாய்ப்புள்ள பயணம்!  இப்படிப்பட்டப் பயணத்தை மேற் கொள்ள வேண்டி வந்த அந்த பரிதாபத்திற்கு உரிய 23 வயது இளைஞனின் பெயர் டியோல் பதமட்டாரி.  அஸ்ஸாமிலுள்ள தலபாரி மாவட்டத்திலுள்ள பக்னாரி எனும் இடத்தைச் சேர்ந்தவர்.  எர்ணாகுளதிலிருந்து தன் நண்பர்களுடன் திருவனந்தபுரத்திற்குப் புகைவண்டி ஏற வந்த இவர், தன் நண்பர்களுடன் எதிர்பாராத விதாமாகச் சண்டையிட வேண்டியதானது.  அவர்களுடன் சேர்ந்து பயணம் செய்வதற்குப் பயந்து, இந்த முடிவிற்கு வந்திருக்கிறார்.  புகைவண்டி ஓடத் தொடங்கியதும்தான் பாவம், அதிலுள்ள ஆபத்தை உணர்ந்திருக்கின்றார்.  உணர்ந்த போதோ ஒன்றும் செய்ய இயலாத நிலை.  அப்படியே மயங்கிக் கிடந்திருக்கிறார்.     திருவனந்தபுரம் சென்ட்ரல் புகைவண்டி நிலையத்தை அடைந்து, ஒரு மணி நேரத்திற்குப் பின், புகைவண்டிப் பெட்டிகளைச் சுத்தம் செய்ய “யார்டுக்கு, வண்டியைக் கொண்டு சென்ற போதுதான் ப்ரேக்கை விடுவிக்க, ரயில் பெட்டிக்கு அடியில் சென்ற ஒரு மெக்கானிக் ரயில் சக்கரத்திற்கு மேலாக ஒரு “காலைக் கண்டிருக்கின்றார்.  இப்படிச் சுத்தம் செய்யும் போது, மனித மற்றும் மிருகங்களின் உடல் பாகங்கள், புகைவண்டிச் சக்கரங்களின் மேல் பகுதிகளில் சிக்கியிருப்பது இடையிடையே நடக்கும் ஒன்றானதால் அவர் “அதை அங்கிருந்து கீழே தள்ளி விட முயன்றிருந்திருக்கிறார்.  ஆனால், திடீரென அந்தக் கால் உள்ளே இழுக்கப்பட்டதும் பயந்து போன அவர், கூச்சல் போட்டு மற்ற தொழிலாளர்களை வரவழைத்து பரிசோதித்த போதுதான், உள்ளே ஒரு மனிதன் சிக்கிக் கிடப்பதைக் கண்டிருக்கிறார்கள்.  எப்படியோ, எல்லோரும் மிகவும் கஷ்டப்பட்டு கரியின் தூசும், கிரீசும் நிறைந்து தீக்காயங்களுடன் கூடிய ஒரு கரிக்கட்டை மனிதனைப் போல தோற்றம் அளித்த பதமட்டாரியை வெளியே எடுத்து புகைவண்டி நிலைய காவல்துறையினரின் உதவியுடன் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். இறையருளால், பதமட்டாரி குணமாகி வருகின்றார்.

     இந்தச் சம்பவம், ரயில்வே துறைக்கு வேறு ஒரு பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறது.  இனி ரயில் பெட்டிகளின் அடிபாகத்தையும், புகைவண்டி புறப்படும் முன் பரிசோதிக்க வேண்டும் என்ற நிலை.  முன்பு எப்போதோ, ஆந்திராவிலிருந்து வந்த ஒரு புகைவண்டியின் பெட்டியின் அடியிலுள்ள இப்பகுதியில் கஞ்சா வைத்துக் கடத்தப்பட்டிருக்கிறதாம்.  இப்போது இதைப் பற்றி அறியும் தீவிரவாதக் கும்பல்கள் இந்த இடத்தை உபயோகித்து, தீவிரவாதச் செயல்கள் செய்ய வாய்ப்பு உள்ளதால் இனி ரயில் பெட்டிகளின், அடி, முடி, உள் இப்படி எல்லா பாகங்களையும் பரிசோதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இப்போது ரயில்வே துறைக்கு இதனால் ஏற்பட்டுள்ளது.  கவனமாக இருக்கத்தான் வேண்டும்!

                           

36 கருத்துகள்:

 1. வணக்கம்
  ரயில்வே துறைக்கு நல்ல விழிப்புணர்வுப் பதிவு மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  தமிழ் மணத்தில் இணைத்து விட் டேன்.....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  த.ம +1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் தம்பி ரூபன்! இணைத்ததற்கு மிக்க நன்றி ! நாங்களும் தமிழ் மணத்தில் இணைத்தோம்! என்னாயிர்று என்று தெரிய வில்லை! நன்றி!

   தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி !

   நீக்கு
 3. சினிமா மாதிரியான பதிவுகளைத் தொடர்ந்து வெளியிடுவதன்மூலம் சினிமாப் பதிவர்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட முடிவு செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.- இராய செல்லப்பா (சான் டியாகோ விலிருந்து.)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹாஅ......சார்! தங்கள் ஹாஸ்ய உணர்வுடன் கூடிய கருத்திற்கு மிக்க நன்றி! தங்கள் பயணம் எப்படி உள்ளது! பயணம் சிறப்பாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்!

   ஹப்பா! பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து ஒரு கருத்து! எங்கு சென்றாலும் இணையம் இணைக்கின்றது உலகம் சுருங்கி விட்டது! சார் விமானத்தில் பறந்து கொண்டே கூட தட்டி விடலாமே!!

   மிக்க நன்றி!

   நீக்கு
 4. பதில்கள்
  1. மிக்க நன்றி! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!

   தங்கள் இணையதளத்தில் கருத்திட்டோம் கருத்து செல்லவில்லை! ப்ளகர் பிரச்சினை செய்துவிட்டது! தொடர்கின்றோம்!

   நீக்கு
 5. கூடுதல் வேலைதான் என்ற போதிலும்
  கவனம்தேவையல்லவா
  தம 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கரந்தையாரே! தங்கள் கருத்திற்கு!

   நீக்கு
 6. ஒளிந்து கொள்ள வேறு இடமா கிடைக்கவில்லை...? ஏதேனும் ஆகியீருந்தால்...? நெஞ்சம் பதறுகிறது... பதமட்டாரி அவர்கள் மனநிலையும் விரைவில் சரியாகட்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன செய்ய இப்படி எல்லாம் கூட பயணம்! எப்படித்தான் உயிர் பிழைத்தாரோ!!! மிரக்கிள்தான்!

   மிக்க நன்றி! DD!

   நீக்கு
 7. படிக்கையிலேயே பதட்டமாய் இருக்கிறது
  எப்படித்தான் பயணித்தாரோ
  ஆச்சரியமாகத்தான் இருக்கிறது

  பதிலளிநீக்கு
 8. அடப்பாவமே.. பிழைத்துவிட்டானே.. அப்பாடா!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஆவி! நிஜமாகவே மிரக்கிள்தான்! மிக்க நன்றி!

   நீக்கு
 9. நினைச்சிப் பார்க்கவே கொடூரமா இருக்கு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொடூரமான பயணம்தான்! சீனு! எப்படித் தாங்கினாரோ!!!?

   மிக்க நன்றி!

   நீக்கு
 10. அதிர வைக்கும் சம்பவம். கற்பனை செய்யும்போதே கைகால்கள் உதறுகின்றன.

  பாவம் பதமட்டாரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கற்பனைகூட செய்து பாரிக்க முடியாத ஒரு பயணம்தான்! நண்பரே!

   மிக்க நன்றி!

   நீக்கு
 11. இது ஒரு பெரும் புத்தி கெட்ட செயல்!! இறைவன் அருளால் அந்தப் பையனின்
  உயிர் காக்கப்பட்டுள்ளது விரைவில் குணமடையவும் வேண்டும் .மிக்க நன்றி
  சகோதரா பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோதரி! மிகவும் புத்தி கெட்ட உணர்ச்சி பூர்வமான ஒரு செயல்! காக்கப்பட்டதே ஒரு மிரக்கிள்தன்!

   மிக்க நன்றி!

   நீக்கு
 12. பதில்கள்
  1. மிகச் சரியாகச் சொன்னீர்கள்! சுப்பு! இது ஒரு படத்தில் இடம் பெற்றாலும் பெறலாம்! இல்லை ஒரு படமாகவே கூட வரலாம்! அதிசயமில்லை!

   மிக்க நன்றி!

   நீக்கு
 13. சகோதரி அம்பாளடியாள் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன், மேலும் அவருக்கு நீண்ட ஆயுள் இருக்கிறது என நம்புவோமாக..........
  www.killergee.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கில்லர் ஜி! நம்புவோம்! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!

   நீக்கு
 14. மருத்துவ மனையிலிருந்து வந்ததும்
  அந்த ஆளைக் குறைந்தது ஒரு மாதமாவது சிறையில்
  போட்டு கண்டிக்கச் சொல்லுங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! மிகவும் வித்தியாசமான சிந்தனைக் கருத்து! சகோதரி! ஆம் வெளி நாட்டில் எல்லாம் இது போன்ற செயல்கள் வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றன!

   மிக்க நன்றி சகோதரி! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!

   நீக்கு
  2. நான் சொன்னதும் சரிதான் ஆனால் ? இந்தசகோதரி அருணா சொல்றதும் நல்லாத்தான் இருக்கு.
   Killergee

   நீக்கு
 15. படிக்கப்படிக்க திகீர் னு இருந்தது.
  இனி இதை வைச்சு எத்தனை படம் வரப்போகுதோ!!
  அழகா விவரிச்சிருக்கீங்க சகா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா! அதேதான் சகோதரி! எத்தனை படமோ? எந்த டைரக்டர் கையில் சிக்கப் போகுதோ? நம்மூர் இயய்க்குனர்கள் இதில் கூட ஒரு டூயட் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

   மிக்க நன்றி சகோதரி!

   நீக்கு
 16. இப்படி பயணிக்க எப்படித்தான் துணிந்தாரோ? விவரமில்லாமல் முடிவெடுத்திருப்பார் என்று தோன்றுகிறது! ரயில்வேக்குத்தான் எத்தனை சிக்கல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துணிச்சல் என்று சொல்லுவதை விட, உணர்ச்சி வேகத்தில் விவரமில்லாமல் எடுக்கப்பட்ட முடிவுதான்....ரயில்வேக்குத் தலைவேதனைதான்.....இன்னும் கவனமாக இருக்க வேண்டிய நிர்பந்தம்!

   மிக்க நன்றி சுரேஷ்!

   நீக்கு
 17. இது என்ன அசட்டுத்தனமான பயணம்.... இப்படியுமா செய்வார் ஒருவர்.

  நல்ல வேளை பிழைத்துக் கொண்டாரே..... கொஞ்ச நாள் உள்ளே இருந்தால் தான் சரிப்படும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்! மிகவும் அசட்டுத்தனமான ஒரு பயணம்! இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களே !! தங்கள் கருத்து சரியே!

   மிக்க நன்றி!

   நீக்கு