வியாழன், 26 ஜூன், 2014

சட்டம் செய்யாததை சமூகம் செய்யக் கூடாதா?!




 


        
 

      நாம் எந்த நூற்றாண்டில் வசித்துக் கொண்டிருக்கின்றோம் என்ற சந்தேகம் அடிக்கடி வருகின்றது! 21ஆம் நூற்றாண்டில்தானே? எந்த யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்?  விஞ்ஞான யுகம்தானே?  அப்படித்தானே சொல்லிக் கொண்டிருக்கின்றோம்? சந்திரனுக்கு "சந்திராயன்" ஏவும் நம் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது, நாம் உண்மையாகவே ராக்கெட் யுகத்தில் தான் இருக்கின்றோமா?  இல்லை இன்னும் சிக்கி முக்கி கற்களை உரசும், மனித மனம் முதிர்வடையாத, பண்படாத கற்காலத்தில் வாழ்கின்றோமா என்ற சந்தேகம் வருகின்றது!

      ஏன் இப்படிக் கேள்விகள்?  என்று நீங்கள் கேட்பது தெரிகின்றது!  இதோ இந்த நிகழ்வுகளை வாசியுங்கள்.  அப்போது புரியும் எங்கள் கேள்விகளின் அர்த்தம்.  நீங்களும் அதை ஆமோதிப்பீர்கள்!

நிகழ்வு 1. கர்நாடகத்தில், பெல்லாரியில், ஒரு ஊரில் தலித்துகளுக்கு சலூனில் முடி வெட்டக் கூடாதாம்!  ஆதிக்கச் சாதியினரின் கொக்கரிப்பு!  அதை மீறி முடித் திருத்தம் செய்த சலூன் கடைக்காரர்கள் 5 பேரை ஆதிக்கச் சாதியினர் தாக்கி, கடைகளைச் சேதப்படுத்தியிருக்கின்றனர்!  இந்த "So called"  ஆதிக்கச் சாதியினர், "தலித்துகள் முடிவெட்டிக் கொண்ட சலூனில் முடி வெட்டிக் கொள்ள மாட்டோம்" என்று தங்களுடைய சாதி சங்கங்களில் தீர்மானமும் எடுத்தார்களாம்! 
     ஏன் தலித்துகளும் மனிதர்கள்தானே? அவர்கள் வயலில் இறங்கி, விளைவிக்கும் தானியங்களைத்தானே நீங்கள் தின்கின்றீர்கள்?  கூலி வேலைகளுக்கு மட்டும் ஆதிக்கச் சாதியினர் இவர்களைப் பயன்படுத்திவிட்டு, உரிமைகள் என்று வரும் போது தள்ளி வைப்பது, "Use and Throw" இல்லையா?!  இந்தக் காலகட்டத்திலும் இப்படி சாதி பார்க்கும் கூட்டம் இருக்கும் போது இந்தியா சந்திராயன் விட்டால் என்ன? விண்வெளியில் மனிதர் பறந்து மிதந்தால் என்ன?  மனிதர்க்கு மனிதர் சம உரிமை இல்லாத நாட்டில், சாதி பேசும் நாட்டில், வளர்ச்சி, முன்னேற்றம், வல்லரசு என்றுக் கூறிக் கொள்ள வெட்கித் தலை குனிய வேண்டும்! 

      சமூக நலத்துறை எடுத்த முயற்சியால் கர்நாடக அரசு சலூன்காரர்களுக்கு  ரூ 50,000 வழங்கி, தொடர்ந்து தலித்துகளுக்கு முடி வெட்ட வேண்டும் என்றும் சொல்லி இருக்கின்றது!  சரி... கேள்வி இதுதான் ..நஷ்ட ஈடு கடை சேதமானதற்கும், தாக்கப்பட்டதற்கும்......முடி வெட்ட வேண்டும் என்றும் அரசு சொல்லியிருக்கின்றது......உயிர் சேதம் ஏற்பட்டால் என்ன நஷ்ட ஈடு வழங்கும் அரசு? எதைச் சரி செய்ய வேண்டுமோ அதைச் சரி செய்ய முயலாத, இயலாத அரசு, அது மத்திய அரசானாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி...இப்படித் தவறுவதால்தான் இன்னும் நம் நாட்டில் சாதி ஒழியவில்லை!  ஒரு வேளை கற்காலத்தில் இருந்திருந்தால் இந்த சாதிப் பிரச்சினைகள் இருந்திருக்காதோ?

 











நிகழ்வு 2 : இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் முஸ்லிம் பெண்களுக்குத் தலைக் கவசம் அணிவது கஷ்டமாக இருப்பதால் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டி கோரிக்கை, தலைநகரில்!  டெல்லியில் சீக்கியப் பெண்களுக்கு விதி விலக்கு அளிக்க அரசு உத்தேசித்து வருகிறதாம்.  அதனால், முஸ்லிம் அமைப்புகள், பெண்கள் பர்தாவும் அணிந்து, தலைக்கவசமும் அணிவது கஷ்டமாக இருப்பதைக் காரணமாகச் சொல்லி இந்தக் கோரிக்கை!  அரசும் உத்தேசிக்கின்றதாம்.  விபத்து நேரங்களில் உயிர் சேதம் அடையாமல் இருக்க வேண்டி அணிய வேண்டிய தலைக் கவசத்தைப் பெண்கள் அணிவதற்கு மத வழக்கம் தடையாக இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது! தலைக்கவசம் பாதுகாப்பிற்காகத்தானே அணிய வலியுறுத்தப்படுகின்றது! பர்தா அணிந்து தலைக்கவசமும் உபயோகிப்பது கஷ்டம் என்றால் எதை விடுப்பது நல்லது?  இரண்டையுமே விலக்காமல் சமயோசிதமாக சிந்திக்கலாமே!  வீட்டிலிருந்து இறங்கும் சமயம், பர்தாவை மட்டும் விலக்கி விட்டு தலைக்கவசம் அணிந்து வண்டி ஓட்டி, இறங்கும் சமயம் தலைக்கவசத்தை எடுத்துவிட்டு மீண்டும் பர்தாவை இட்டு முகத்தை மூடிக்கொள்ளலாமே! பர்தாவும் அப்படித்தானே தைக்கப்பட்டிருக்கும்!  இதை ஏன், முஸ்லிம் அமைப்புகள் சிந்திக்கவில்லை




நிகழ்வு 3: கல்வி என்பது எல்லோருக்கும் பொதுதானே! அது நிராகரிக்கப்படலாமா? கூடாது இல்லையா? இலங்கை அகதிகள் ஈரோடு முகாமைச் சேர்ந்த நந்தினி என்ற மாணவிக்கு ஏற்பட்ட நிலை மிகவும் வருத்தமான ஒன்று! ஏற்கனவே, தாயகம் விட்டு அகதியாக வேறொரு தேசத்தில் வாழும் நிலைமை. அவரது தந்தை, இலங்கை வட மாகாணத்தில், ஜாஃப்னாவைச் சேர்ந்தவர். இலங்கையில் ஈழத்துப் பிரச்சினை ஆரம்பித்து, போர் ஆரம்பித்த 1990 ஆம் வருடம் ஈரோடு அகதி முகாமில் வாழத் தொடங்கியவர். நந்தினி இங்குதான் பிறந்திருக்கின்றார்.  இங்கு தமிழ் நாட்டில்தான் ஆரம்பப் பள்ளியிலிருந்து படித்திருக்கின்றார். 
  
    அகதியாக வாழும் ஒரு சூழ்நிலையிலும் +2 தேர்வில் 1170 மதிப்பெண்கள் எடுத்து, (தமிழ்-187, ஆங்கிலம்-192, இயற்பியல்-198, வேதியியல்-198, கணிதம்-198, உயிரியல் -197) மருத்துவம் படிக்க விரும்பும் இந்த மாணவியை, மருத்துவப்படிப்பிற்கான கட் ஆஃப் மதிப்பெண்  197.50 இருந்தும், நம் மருத்துவப் பல்கலைக் கழகம் சேர அனுமதிக்காமல் கைவிரித்துவிட்டது!  காரணம், இந்தியக் குடியுரிமை இல்லையாம்!  ஆனால், பொறியியல் கல்வியில் சேரலாமாம்!  அதெப்படி? குடியுரிமை இல்லாமல் பொறியியல் கல்வியில் சேரலாம் என்றால், ஏன் மருத்துவப் படிப்பிற்கு அனுமதி இல்லை?  இரண்டு பல்கலைக் கழகங்களும் இதே நாட்டில்தானே இருக்கின்றன குடியுரிமை இல்லை என்றால் அகதி என்ற பெயரிலாவது கல்வி வழங்கலாமே!  இல்லை என்றால் நம் நாடு ஈழத்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதைப் பற்றிச் சிந்தித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்.ஏன் இந்த பாராபட்சம்? நந்தினியின் நிலை என்ன?  

    மருத்துவம் சேர்வதற்கான மதிப்பெண்கள் இருந்தும் சேர முடியாத நிலை! பாவம், மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கும் அந்தப் பெண்ணிற்கு நம் தமிழகம் வழி செய்யுமா?  முதல்வரிடம் கோரிக்கை மனு வைக்கப் போவதாகச் சொல்லி இருக்கின்றார்.  முதல்வர் இதற்கு கண்டிப்பாக ஒரு நல்ல முடிவு எடுத்து நந்தினிக்கு மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்!  இது போன்று எந்த நாட்டுக் குடியுரிமையும் இல்லாமல் அவதியுறும் ஈழத்துக் குழந்தைகளை நினைத்தால் மனம் வெம்புகின்றது.  நாம் எந்த நூற்றாண்டில் வசிக்கின்றோம்?!

படங்கள்: இணையம்

27 கருத்துகள்:

  1. தாங்கள் எழுப்பிச் செல்லும் கேள்விகள்
    அனைத்தும் மிக நியாயமானவை
    நேர்மையான தீர்வுகள் நிச்சயம்
    உடன் காணப்படவேண்டும்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சார்! தங்கல் வருகைக்கும், கருத்திற்கும்!

      நீக்கு
  2. என்னத்தைச் சொல்லுறது....

    நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்...

    மனிதர்க்கு மனிதர் சம உரிமை இல்லாத நாட்டில், சாதி பேசும் நாட்டில், வளர்ச்சி, முன்னேற்றம், வல்லரசு என்றுக் கூறிக் கொள்ள வெட்கித் தலை குனிய வேண்டும்!

    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்!

      நீக்கு
  3. மூன்று மட்டுமா...? இன்னும் எவ்வளவோ இருக்கின்றன... மூன்றும் சிந்திக்க வேண்டியவை + மாற்றம் வர வேண்டியவை... வரும்... வர வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! இன்னும் நிறைய இருக்கின்றன...ம்ம்ம்..! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் DD !

      நீக்கு
  4. வணக்கம்
    அண்ணா.

    ஒவ்வொரு கட்டம் கட்டமாக மிக அருமையாக தகவலை சொல்லியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்
    எல்லாவற்றையும் கொஞ்சம் மத்தி யோசிக்கவேண்டும் போல உள்ளது
    த.ம 4வதுவாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தம்பி ரூபன் தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!

      நீக்கு
  5. அருமையான கேள்வி! சட்டத்தை காட்டி சமூகம் ஒளிந்து கொள்வதுதான் வேதனை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ் அதங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!

      நீக்கு
  6. பேப்பர்ரை பார்த்தாலே டென்சன் ஆகுது சகா:(( உங்களை போல சிலர் கவலைப்பட்டு கொண்டிருகிறீர்கள். மாற்றி யோசித்தால் என்பது வாக்கு சாவடியோடு முடியக்கூடாது அல்லவே ? நல்ல சிந்தனை!! வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேப்பர்ரை பார்த்தாலே டென்சன் ஆகுது சகா:((//

      அதுவும் முதல் பக்கத்திலேயே! ? மிக்க நன்றி சகோதரி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!

      நீக்கு
  7. நியாயமான கேள்விகள், ஆதங்கங்கள் நண்பரே
    தீர்வு கிடைக்குமா
    தம5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தையாரே! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!

      நீக்கு
  8. அனைத்தும் நியாயமான கேள்விகள் மாற்றம் வரவேண்டியவை .
    அகதிகளுக்கு எத்தனையோ நாடுகள் புகலிடமும் குடியுரிமையும் வழங்கவில்லையா? அங்கெல்லாம் அரசியலிலும், பொறியியலிலும், டாக்டர் தொழிலிலும்.....இன்னும் பல .... நிபுணத்துவம் பெறவில்லையா? இத்தனை வருடங்களாக இருப்பவர்களுக்கு இந்தியா ஏன் குடியுரிமை வழங்கக் கூடாது. நந்தினியின் ஆசையை நிறைவேற்றவும் அவர் கல்விக்கு தகுந்த மதிப்பும் அளிக்க அரசு ஏன் ஆவன செய்யக்கூடாது. பார்க்கலாம் சகோ வேதனை தரும் விடயங்கள் நல்ல பதிவு எடுத்து வந்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்து மிக நியாயமானதே! சகோதரி! மிக்க நன்றி தங்கல் வருகைக்கும் கருத்திற்கும்!

      நீக்கு
  9. நியாயமான கேள்விகள்......

    ஏற்கனவே சீக்கிய பெண்மணிகளுக்கு ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு கிடைத்துவிட்டது. பாதுகாப்பு கவசம் அணிவது அவர்களுடைய நல்லதற்கு என்பதை புரிந்து கொள்ளாத வரை என்ன பயன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! சீகிய பெண்மணிகளுக்கு கிடைத்துவிட்டதை அறிந்தோம்!

      மிக்க நன்றி தங்கள் கருத்திற்கும், வருகைக்கும்! நண்பரே!

      நீக்கு
  10. பாவம் நந்தினி, அம்மா உதவுவார்களா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா உதவினால் மிகவும் நல்லது! போற்றத் தக்கது!

      தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  11. உண்மைதான் ஐயா ஓட்டுப்போடுவது நமது குடியுரிமை எனபீற்றிக்கொள்ளும் நாம் உரிமைகளை பெறமட்டும் கையாளாகாத தனமாக தலைகுனிந்து நிற்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக நல்ல கருத்தைப் பதிந்தமைக்கு மிக்க நன்றி கில்லர் ஜி!

      நீக்கு
  12. மனதில் உறுதி வேண்டும் படத்தில் வரும் கேரக்டரை போன்றே இந்த நந்தினியும்நினைத்ததை அடைந்து வெற்றி பெறுவார் !
    த ம 7(தாமதம்தான் மன்னிக்கவும் )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா அப்படி நடந்தால் எவ்வளவு நல்லது ஜி! மிக்க நன்ரி தங்கள் கருத்திற்கும், வருகைக்கும்!

      நீக்கு
    2. பரவாயில்லை ஜி! தாமதமானாலும்! எங்களுக்கும் இப்போது கணினி பிரச்சினை, இணையம் பிரச்சினை, என்று இருப்பதால் எங்களால் எல்லா தளங்கலுக்கும் உடனுக்குடன் வந்து வாசித்து பின்னூட்டம் இட முடியவில்லை ஜி! அதனால் ஒரு தளம் வந்தால் அங்கு புது இடுகை மட்டுமன்றி பழைய இடுகைகளையும் வாசித்து கருத்துகொடுக்கின்றோம்!

      பரவாயில்லை ஜி!

      நீக்கு