சனி, 21 ஜூன், 2014

வாசித்ததில் ரசித்தது! இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

நமது பதிவர், சகோதரி திருமதி மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்கள் தன் வலைத் தளத்தில் 10 கேள்விகள் கொடுத்து அதற்கு பதில் அளிக்குமாறு எங்களையும் கேட்டுக் கொண்டதால், இதோ கொடுத்திருக்கின்றோம் எங்கள் பதில்களை.  மிகவும் ரசித்தோம் கேள்விகளை!  பதில்கள் எங்கள் சிற்றறிவிற்கு எட்டியபடி கொடுத்திருக்கின்றோம்!  மிக்க நன்றி சகோதரி! சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைச் சொல்லிக் கொள்கின்றோம்!

1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

100 வயதா?! தாங்காதுப்பா......இருக்கும் வரை ஆரோக்கியமாக இருந்து விட்டு, நம்முடன் இருப்பவர்களைச் சாராது, அவர்களுக்கு எந்த விதக் கஷ்டமும் கொடுக்காமல் அன்புடன் வாழ்ந்தாலே போதும்!  100 வது பிறந்த நாள் எல்லாம் கொண்டாடும் உத்தேசமே இல்லையப்பா!

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

கற்றது கைவிரல் (கை அளவு கூடப் பெரிசுங்க) நக அளவு...கல்லாதது உலக அளவு இருக்கும் போது........இருந்தாலும்......நம்மால் முடியாத விஷயத்திற்கு "NO" சொல்லவும், எந்தவித எதிர்பார்ப்புமின்றி அன்பு செய்யவும், நாங்கள் நாங்களாகவே இருக்கவும் கற்றுக் கொள்ள விரும்புகின்றோம்!

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவரின் வழிப்படி இருக்கும் போது "கடைசி" என்ற வார்த்தைக்கு இடமே இல்லை!

4. 24மணி  நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

ஆஹா! ஒரு நாளாவது இயற்கையோடு ஒன்றி வாழக் கிடைத்ததே என்று சந்தோஷப்படுவோம்! குழந்தைகளுடன், குடும்பத்தாருடன் நேரம் செலவழிக்க கிடைக்கும் போது மனம் கசக்கவா செய்யும்?! (நாங்கள் தொலைக் காட்சி பார்க்கா விட்டாலும், நம்முடன் இருப்பவர்களுக்கு, மற்றவர்களுக்கு இப்படி , ஹொலைக்காட்சி இல்லாமல், கணினி இல்லாமல் நேரம் கிடைத்தால்தானே உண்டு!)

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?

மணவாழ்க்கை அர்த்த நாரீஸ்வரர் போன்று அதாவது மனைவி பாதி, கணவன் பாதி .....சக்தியில்லையேல் சிவம் இல்லை...சிவம் இல்லையேல் சக்தி இல்லை...., அன்பில்லாத இல்வாழ்க்கையில்லை!   இல்வாழ்க்கையைப் பற்றி வள்ளுவர் சொல்லாததா?  அதைச் சொல்வோம் மகனிடமும், மகளிடமும்.....

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

யதார்த்தமாகச் சிந்தித்தால் தனி ஒருவரால் உலகப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது!  என்றாலும்  தீர்க்க விரும்புவது....தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்.  கொடியது கொடியது வறுமை கொடியது.  உலகில் நடக்கும் பல துன்பங்களுக்கும், வன்முறைக்கும் காரணம் வறுமைதான்.  எனவே....

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

அனுபவங்கள் கற்றுக் கொடுத்த/கொடுக்கும் பாடங்களும், இறை நம்பிக்கையும் சுயமாகச் சிந்தித்து முடிவு எடுக்க உதவும் போது......

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

போங்கடா வெண்ணை....எங்களுக்கு அதற்கெல்லாம் நேரமில்லைங்க.......ஓ அப்ப நம்ம ஊர்ல வேலை வெட்டி இல்லாம நிறைய பேரு இருக்காங்க?!

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

மரணம் என்பதுதான் இந்த உலகிலேயே உண்மையான ஒன்று! அதை ஏற்று உன் குழந்தைகளுக்கு (அவர்கள் சிறியவராக இருந்தாலும் சரி...பெரியவர்களாக இருந்தாலும் சரி!) ஒரு தாயாகவும் இருக்கும் பாக்கியம் கிடைத்ததே என்று சந்தோஷமாக இனிமையாக அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்! 

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

தனிமையிலே இனிமை காண முடியுமா?!  இனிமை காண முடியுமே! நமக்கான நேரம் என்று மனதுக்குப் பிடித்தவற்றைச்(நல்ல விஷயங்களைத்தான்) செய்து மனதை நேர்மறை எண்ணங்களுடன் உற்சாகப் படுத்தி, வலுவுடனும், சக்தியுடனும், சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்வது! 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க....

  • நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்

  • அர்த்தமில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை விடுங்கள் (Loose talks)

  • எந்தப் பிரச்சினையையும், விஷயத்தையும் நாசுக்காகக் கையாளுங்கள். (Diplomacy). விட்டுக் கொடுக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். (compromise)

  • சில நேரங்களில், சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணருங்கள். (tolerance)

  • எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும், அவர்களுக்குச் சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

  • உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொண்டு மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்கவும், ஆராயவும் கற்றுக் கொள்ளுங்கள். (Flexibility)

  • மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும்.  இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள். (Courtesy)

  • புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

  • பிரச்சினைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்/பதிவுலகம்......என்று நாங்கள்  வாசித்து ரசித்த நல்ல விஷயங்களைக் கொடுத்துள்ளோம்!  என்ன ரசித்தீர்களா...?  நண்பர்களே?!!

44 கருத்துகள்:

  1. கேள்விகளுக்கான பதில்கள் சுவாரஸ்யம். அதன் கீழே தந்துள்ள யோசனைகளை பயனுள்ளவை. அருமையானவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் அவர்களே! பதிவை ரசித்ததற்கு! வலை உலகைச் சுற்றி வரும் கேள்விகளின் பதில்களும் தங்களை சுவாரஸ்யப்படுத்தியதற்கும், கருத்து தெரிவித்தறற்கும்.....

      நீக்கு
  2. எதார்த்தமான அறிவுபூர்வமான பதில்கள்.

    படித்து மகிழ்ந்தேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! எங்கள் பதில்களையும் வாசித்து மகிழ்ந்ததற்கு! கருத்தும் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  3. சந்தோஷமாக இனிமையாக ஏற்றுக் கொள்ளும் பொறுப்பு உட்பட பதில்கள் அனைத்தும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி DD! தாங்கள் ரசித்ததற்கும், கருத்திற்கும்!

      நீக்கு
  4. அட அட நான் விரித்த ( ''இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? ')
    வலையில் நீங்களும் விழுந்திட்டீங்களா? பதில்கள் அருமை.பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்ட் டூ போட்டதில் முதல் பதிவுக்கு லிங்க் கொடுத்திருந்ததால் சற்று கேர்லெஸ் ஸ இருந்துட்டேன் சகா. சாரி. பார்ட் டூ வில் உங்கள மேன்சன் மறுபடி மேன்சன் பண்ணிருக்கணும்:( இந்த எல்.போர்டை மன்னிக்கவும்.

      நீக்கு
    2. மதுரைத் தமிழா நீங்கள் தான் வலை விரித்தீர்கள் என்று பின்புதான் தெரிந்தது! தாங்கள் விரித்த வலை நல்ல வலையாக உள்ள பொது அதில் விழுந்தால் என்ன?!

      ஒரு நல்ல ஆக்கபூர்வமான விளையாட்டைத் தொடங்கி வைத்துவிட்டீர்கள்! நல்ல சுவாரஸ்யமான பதில்கள், சிந்திக்கத் தூண்டும் பதிலகள், வித்தியாசமான, நகைச்சுவையான பதில்கள் வாசிக்கக் கிடைக்கின்றன! அதற்கு மிக்க மிக்க நன்றி மதுரைத் தமிழா!

      தங்கள் பாராட்டிற்கும் மிக்க நன்றி! மிகவும் சந்தோஷம்!

      நீக்கு
    3. ஆஹா! மென்சன் (mention) அப்டின்னு தட்டினதா தான் ஞாபகம், சே! மேன்சன் னு டைப் பண்ணிருக்கேன்:( தெளிவா மன்னிப்பு கேட்கிறேன்.ரெண்டாம் பகுதியில் லிங்க் தந்து விட்ட நினைப்பில் தங்கள்(தமிழன்) பெயரை குறிப்பிடாமல் கவனக்குறைவாய் இருந்துட்டேன்.சாரி.

      நீக்கு
  5. மிகவும் அற்புதமாக தங்களின் பதில்களையும் கூடவே நற் சிந்தனைகளையும்
    கொடுத்து அசத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள் சகோதரா .எனது அழைப்பு பிந்தி விட்டது
    இருப்பினும் என்ன தங்களின் விடைகள் இவ்வாறு தான் இருக்கும் என்று அறிந்து
    மகிழ்ச்சியுற்றேன் .மொத்தத்தில் இந்த எலியும் மாட்டிக்கொண்டது போதாதா என்ன ?..:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை சகோதரி! பிந்தினால் என்ன? நாங்கள் தான் பதில் கொடுத்துவிட்டோமே! நாம் எல்லோரும் பதிவர் குடும்பமாய் ஒரே குடும்பமாய் நினைத்து இருக்கும் போது....என்ன சொல்கின்றீர்கள் சகோதரி!....ம்ம்ம்ம்ம்ம் மதுரைத் தமிழன் பூரிக்கட்டையை (அடி வாங்காமல்) காட்ச் செய்து அதைக் கேள்விக் கணையாக்கி பதிவுலகம் முழுவதும் தொடுத்துவிட்டார்! என்னது தாங்கள் எலியா? தங்கள் பதில்கள் எல்லாமே மிக அருமையாக இருக்கும் போது.....ரசித்தோம்.....

      மிக்க நன்றி சகோதரி! தங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு!

      நீக்கு
  6. வலையுலகை சுத்தி வரும் பூமராங் பூரிக்கட்டை அடி உங்களுக்கும் விழுந்திருச்சா...
    பதில்களில் உங்கள் இயல்பு தெரிகிறது..
    நன்றி தோழர்
    www.malartharu.org

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஆம் நண்பரே! அது பூரிக்கட்டையிலிருந்து தொடங்கியது என்று பின்புதான் தெரிந்து கொண்டோம்! பரவாயில்லை! நல்ல அடிதான் அதனால் வாங்கிக் கொள்ளலாம்! ஆசிரியனிடமிருந்து மாணவர் வாங்குவது போல.......கேள்விகள் கேட்டுத் தொடங்கியது அவர்தானே! மாணவர் போன்று நாம் எல்லாம் பதில் உரைக்க......நல்ல அழகான பதிவுலகச் சுற்று விளையாட்டு! நாங்கள் ரசித்துக் கொண்டிருக்கின்றோம் ஆனால் இன்னும் பல வலைத் தளங்கள் செல்ல வேண்டும்!.....

      எங்கள் பதில்கள் கண்டு தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

      நீக்கு
  7. வணக்கம் ஐயா
    தங்களின் பதில்கள் அனைத்தும் மிகவும் ரசிக்கும் படியும் வாழ்க்கையைப் பற்றிய புரிதல்களையும் விளக்குகிறது. நல்லவற்றை விரும்பிப் படிக்கும்/ தேடும் உங்களிருவரின் நற்குணத்திற்கு என் அன்பான நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாண்டியன் தம்பி அவர்களுக்கு மிக்க நன்றி! தங்கள் வலைப்பூவை இனிதான் படிக்க வேண்டும் தங்கள் பதில்களை வாசிக்க ஆர்வமுடன் இருக்கின்றோம்! கணினி, னெட் பிரச்சினைகள் இருப்பதால் தாம்தாமாகின்றது!

      தங்கள் இனிய கருத்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  8. வணக்கம்

    தங்களின் பதில் அனைத்தும் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் இறுதியில் நல்ல கருத்தையும் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி! தாங்கள் எங்கள் பதில்களை ரசித்ததற்கு! தாங்களும் மிக அழகான மனம் தொடும் வகையில் பதில்கள் கொடுத்துள்ளீர்கள்!

      மிக்க நன்றி1

      நீக்கு
  9. வணக்கம்
    த.ம 6வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. நிஜமான வாழ்க்கையை அனுபவித்து புரிந்து பதில்கள் தந்துள்ளீர்கள் ரசிக்கும் படியாக. அத்துடன் வாழ்கைக்கு இன்றியமையாத நற்போக்கு விடயங்கள் அழகாக தந்துளீர்கள். சிந்தைக்கு நல் விருந்து அது நன்றி சகோதரரே. வாழ்த்துக்கள் .....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இனியா சகோதரி தங்கள் அழகிய கருத்திற்கு! ரசித்ததற்கும்! பாராட்டிற்கும்!

      நீக்கு
  11. அருமையான பதில்கள்! அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா சுறேஷ் நண்பரே! மிக்க நன்றி தங்கள் பாராட்டிற்கு!

      நீக்கு
  12. பதில்கள் அனைத்தும் ரசிக்கும் விதமாய் கொடுத்திருந்தீர்கள் சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் பதில்களை ரசித்ததற்கு மிக்க நன்றி சரவணன் சார்!

      நீக்கு
  13. தமிழன் சகா தொடங்கி வைத்த இந்த விளையாட்டில் என் அழைப்பை ஏற்று கலந்து கொண்டமைக்கு நன்றி சகாஸ் :) பதில்கள் உங்கள் வழக்கம் போல் தெளிவோ தெளிவு !!
    நட்பால் இணைந்திருப்போம். நன்றி!!
    http://makizhnirai.blogspot.com/2013/04/camouflage.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு! ஆம் தமிழன் தொடங்கி எல்லோரையும் தெளிவாக்கி விட்டரோ?!!!!!! எங்க்ளுக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்து அழைத்தமைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  14. #இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவரின் வழிப்படி இருக்கும் போது "கடைசி" என்ற வார்த்தைக்கு இடமே இல்லை!#
    இடுக்கண் என்பது என் பதிவுகள்தானே துளசிதரன் ஜி ?
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ஜி! வந்து விட்டீர்களா? பயணம் நன்றாக இனிமையாக இருந்ததா ஜி?!!

      ஜி! என்ன ஜி? தங்கள் பதிவுகள் இடுக்கண் அல்ல......இடுக்கண் வரும்போது மனதை இலகுவாக்கும் பதிவுகளாக இருக்கும் போது சிரித்துக் கொண்டே இருக்கலாமே!...."கடைசி" என்பதே இல்லையே! அப்படியும் எடுத்துக் கொள்ளலாம் இல்லையா ஜி?!!!!!!!

      நீக்கு
  15. அழகான பதிலுரைகள்.....வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. மிக்க நன்றி கிங்க் ராஜ் நண்பருக்கு! தங்கள் பாராட்டிற்கும், வருகைக்கும்!

    பதிலளிநீக்கு
  17. உங்கள் பதிவுகள் மற்றும் பின்னூட்ட பதில்கள் மூலம் நீங்கள் வாழ்க்கையை அதன் எதார்த்தத்தை நன்றாக புரிந்தவர் என்று மனதில் யூகித்து இருந்தேன். இந்த கேள்வி பதில் அது சரியென்றே என்று தோன்ற வைத்தது. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோதி சார் வாங்க! மிக்க மிக்க நன்றி சார் தங்கள் மனப்பூர்வமான கருத்திற்கு! தங்களுடைய பதிவுகளைவிடவா சார் எங்கள் பதிவுகள், பதில்கள், பின்னூட்டங்கள்?

      மிக்க நன்றி சார்!

      நீக்கு
  18. ஐயா தங்களின் 6 வது 9 வது பதில்கள் அருமை... நானும் இதில் சிக்கி முழி பிதுங்கி வந்திருக்கிறேன், எனது சிற்றறிவுக்கு எட்டியதை கொட்டியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர் ஜி! தாங்களும் இருக்கின்றீர்கள் என்று தெரியும்! இனிதான் தங்கள் வலைத்தளம், ஜோதிஜி சார் வலைத்தளம்...தம்பி பாண்டியன் வலைத்தளம், இன்னும் பலரது வலைத் தளங்களுக்குச் செல்ல வேண்டும்,....நெட் சிறிது நேரம் தான் கிடைக்கின்றது....மிகுந்த பிரச்சினை...கணினி வேறு மெமரி குறைவாக இருக்கின்றது.....அதனால்தான்....தாமதமாகின்றத ...

      வருகின்றோம் கண்டிப்பாக வந்து வாசிக்கின்றோம்! நண்பரே! தங்கள் பதில்கள் காண ஆர்வமாகத்தான் இருக்கின்றோம்!

      மிக்க நன்றி!

      நீக்கு
  19. முத்துக்கு முத்தாக
    பத்துக்குப் பத்தாக
    கேள்வி - பதில்
    நன்றாக இருக்கிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜீவலிங்கம் சார்! தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டிற்கும்!

      நீக்கு
  20. மிகுந்த பாதுகாப்பு உணர்வுடன் பதில் அளித்திருக்கிறீர்கள். உண்மையான பதில்களைப் பிறிதொரு நாளில் எதிர்பார்க்கலாம் அல்லவா?

    பதிலளிநீக்கு
  21. சார்! பாதுகாப்பு உணர்வு எதற்கு சார்! இங்கு? உண்மையாகவே இருவரும் பேசி அவரவர் பதில்களைக் கலந்து வார்த்தைகள் வேறானாலும் 95% க்கு மேல் ஒத்துப் போக, நாங்கள் அப்படியெ கொடுத்தோம் சார்! உண்மையான பதில்களே! மேபி இன்னும் நிறைய விரிவாகக் கொடுத்திருக்கலாம் தேவை இல்லை என்பதால் கொடுக்க வில்லை....உதாரணத்திற்கு...நண்பரின் மனைவி இறந்தால்........அதில் நாமும் வருத்தப் படுவோம் தான்..அவரது துக்கத்தில் பங்கு கொள்வோம் தான்.....ஆனால் அதுவல்ல முக்கியம்..சார்...நாம் என்ன சொல்லித் தேற்றுவோம் என்பதுவே....இந்த பதில் நிஜமாகவே ஒரு நண்பருக்குச் சொன்னதால் அதை அப்படியே இங்குக் கொடுத்தோம்!

    உண்மையான பதில்கள்? எதிர்பார்க்கலாம்......எப்பொதும் ஒன்றே என்பதால்.....

    மிக்க நன்றி . சார்..

    பதிலளிநீக்கு
  22. கேள்விக்கான பதில்களும் கடைசியில் தந்த முத்துகளும் முத்தானவை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டிற்கும்!

      நீக்கு