வெள்ளி, 13 ஜூன், 2014

கண்ணுக்குத் தெரியாத கடவுளை அறிய, உணர, கட .....(உன்).....உள்ளே!!!


      

      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
 பகவன் முதற்றே உலகு.

மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே, வாழ்வில் தேடல்கள் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படிப்பட்டத் தேடல்களில் மிகவும் முக்கியமாக, இன்றளவும் இருந்து வருவதுதான், இறைவன் இருக்கிறாரா? அவர் எங்கிருக்கின்றார்? எந்த வடிவத்தில் இருக்கின்றார் என்பது! 












சூரியன் எனும் நட்சத்திரம்.  அதைக்  கடவுள், இறைவன், நட்சத்திரம், ஒளி, இப்படி எந்தப் பெயரில் வேண்டுமானாலும் நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள். அந்தச் சூரியன் இல்லை என்றால் நாம் இப்பூவுலகில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா? பண்டைய காலத்தில் சூரிய வழிபாடுதான் பல நாடுகளில் இருந்து வந்திருக்கிறது! சூரியனுக்கு மதம் இல்லை, சாதி இல்லை, மொழி இல்லை, நாடு இல்லை. அவன் எல்லோருக்கும் பொதுவானவன். சூரிய வழிபாடு பற்றி எச்.ஜி வெல்ஸ், உலக வரலாறு பற்றிய தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். சூரியனை வெவ்வேறு பெயர்களில், மக்கள் வழிபட்டனர். திராவிடர்கள் வாழ்ந்த பகுதியில், சூரியன் சிவம் என்றும் வழங்கப்பட்டதாக வரலாறு சொல்கின்றது.  சூரியன் சிவந்த நிறத்தவன் என்ற அர்த்தத்தில் சிவம் என்று வழிபட்டனர்.  அப்படியென்றால் இந்தச் சூரியன் தான் இறைவனா?!  இல்லை! சூரியனுக்கும் அப்பாற்பட்ட, சூரியனையும் தோற்றுவித்த சக்தி பிரபஞ்ச சக்தி! சூரியன் அதன் ஒரு துளியே!










இந்தச் சூரிய சக்தியால் இயங்கும், பழந்தமிழர்களின் வேதாந்தக் கருவாகிய, ஐம்பூதங்களாகிய நீர், நெருப்பு, வாயு, பூமி, வானம்  (இங்கு வானம் என்பது வளி மண்டலம் மட்டுமே, பிரபஞ்சம் இல்லை.)) என்ற இயற்கையின் சக்தி நம் மனித சக்திக்கு அப்பாற்பட்டதுதானே! இவற்றைத்தான் நம் மூதாதையர் இறைவன் என்ற பெயரில் வணங்கிவந்தனர். அக்காலகட்டத்தில் கடவுளர்களுக்கு உருவம் கொடுக்காமல், கல் தூண்கள்தான் கடவுளாகப் பாவிக்கப்பட்டு, சாதி, மத, இன பேதம் எதுவும் இல்லாமல், உயர்வு, தாழ்வு பாராமல், ஒரே மதமாகவும், ஒரே கடவுள் கொள்கையுமாக ஒருங்கிணைந்து வணங்கி வந்தனர். மொழி எப்படி ஒவ்வொரு நிலப்பகுதிக்கும், நதி சார்ந்த நாகரிகத்திற்கும் ஏற்ப மாறுபட்டதோ அது போன்று சூரியனின் பெயரும், கடவுளர்களின் பெயரும் மாறுபட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும், அறிவியல் வளர்ச்சி, நிலம், நதி சார்ந்த நாகரிக வளர்ச்சி, வரலாற்றில் ஏற்பட்ட மாறுதல்கள் போன்றவற்றால், கடவுள் கொள்கையும் பல மாறுதல்களுக்கு உள்ளாகியது.

இப்படித் தோன்றிய நாகரீகங்களின் ஒவ்வொரு குழுமமும், பல மதங்கள் எழக் காரணமாகின. ஒவ்வொரு மதத்திலும், ஒவ்வொரு காலகட்டத்தில், பல்வேறு தத்துவ ஞானிகளும், மத குருமார்களும் தோன்றினர். அவர்கள் தாங்கள் புரிந்து கொண்ட இறைத் தத்துவத்திற்கிணங்க சித்தாந்தங்களையும், கோட்பாடுகளையும் வகுக்க, அந்த வேதாந்த சித்தாந்தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், பல மதங்கள், சமயங்கள், சாதிகள் உருவாகின. பிரிந்த குழுமங்கள், தங்களுக்கென்று ஒரு தத்துவத்தை, சித்தாந்தத்தை, கோட்பாடுகளை, ஒரு நோக்கத்தை வகுத்துக் கொண்டு, அதை நிறைவேற்றத் தனிப்பட்ட விதிமுறைகளை அமைத்துக் கொண்டதால், பல கடவுள்கள் உருவாவாக்கப்பட்டனர். “கடவுள் ஒருவர் இல்லாவிட்டால் என்ன? நாமே அதை நம்பிக்கை என்ற பெயரில் உருவாக்கலாமே என்று மேலை நாட்டு அறிஞர்கள் சொல்லியது போல் தோன்றியவைதான் இவை எல்லாம்.

ஒவ்வொரு கடவுளுக்கும், வழிபாட்டு முறைகள், பூஜைகள், மூட நம்பிக்கைகள் என்று வளர்ந்து, சாஸ்திரம் என்ற பெயரில் ஒரு சமூகத்திற்குப் பொதுவானதாக இல்லாத விஷயங்களாகிப் போயின. இப்படி மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்களும், சமயங்களும், சாதிகளும் அதனால் ஏற்படும், கடவுள் சண்டை, மதச் சண்டை, சாதிச்சண்டை யாவும் மனிதனைப் பிரிக்கும் பகை சக்திகளாகவும் விளங்கியதால்தான், கடவுள் மறுப்பு என்ற கொள்கை கொண்டவர்களாக, பகுத்தறியத் தெரிந்தவர்கள் உருவானார்கள். கடவுளுக்கும், இது போன்ற வழிபாட்டு முறைகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கும், சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! என்பதுதான் உண்மை  என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்! 



     இந்த இடத்தில் நாம் கொஞ்சம் பிரபஞ்சவியலைப் பற்றிய இயற்பியல் விஞ்ஞானம் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்!  Big Bang theory பற்றி அதாவது இந்த பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதைப் பற்றி அறிய வேண்டும்! ஆனால் இங்கு அதைப் பற்றி மிகவும் விரிவாகச் சொல்ல முடியாது! இடுகை இன்னும் நீள்வது மட்டுமல்ல, நாங்கள் இயற்பியலிலோ, அறிவியல் அறிவிலோ விற்பன்னர்கள் அல்ல!  ஏதோ எங்கள் சிற்றறிவிற்கு எட்டிய, நாங்கள் புரிந்து கொண்ட, அதாவது விஞ்ஞானமும், மெய்ஞானமும் எப்படி அர்த்தம் கொள்ளப்பட்டு இணைகின்றன என்பதைச் சொல்லுகின்றோம்! இதை, கிறித்தவம், இஸ்லாம், இந்து மதம், எல்லா மதங்களுமே பேசுகின்றன! Moshe Carmeli தனது ஆய்வுக் கட்டுரையில் மிகவும் விரிவாக பைபிளில் இருந்துச் சுட்டிக் காட்டி, இரண்டு ஞானத்தையும் கலந்து கட்டி எழுதி உள்ளார்!



இந்தப் பிரபஞ்சத்தில் Dark Matterஇருண்ட விஷயமும், Dark Energyஇருண்ட சக்தியும் உள்ளதாக விஞ்ஞானம் சொல்லுகின்றது! இந்த dark matter  பொடென்ஷியல் எனர்ஜிDark energy  கைனெடிக் எனர்ஜிDark matter பொட்டென்ஷியல் எனர்ஜி என்பது முழு ஆற்றல்அதைப் பார்க்க முடியாது!  அதைப் பார்க்க முடிவது எப்போது என்றால் அந்த Dark energy - கைனெடிக் எனர்ஜி-இயக்க ஆற்றல் மூலம்தான்







இந்த டார்க் எனர்ஜியால்தான் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே போகின்றது! அதாவது இந்த கைனெடிக் எனர்ஜி அந்த பொடென்ஷியல் எனர்ஜியை இயக்குவதால். இப்படி டார்க் எனர்ஜி – சக்தியால் விரிவடைந்துகொண்டு போகும் பிரபஞ்சம், பிரபஞ்சம் முழுவதும் “மேட்டர் (பருப் பொருள்?) நிரம்பி இருப்பதாலும், புவிக்கு வெளியே உள்ள ஈர்ப்பு சக்தி இந்த மேட்டரை எல்லாம் ஈர்த்து ஒன்று சேர்ப்பதாலும், ஒரு காலகட்டத்திற்கு மேல் வெடித்து புதியதாய் ஒன்று உருவாகும் என்று சொல்லப்பட்டது! இதைத்தான் பிரளயம் என்று எல்லா மதங்களின் மெய்ஞானங்களும் சொல்லுகின்றனவோ?!













ஆனால், நவீன அறிவியல் ஆராய்சிகள், நோவா, சூப்பர் நோவா போன்றவற்றைக் கண்டு, இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டேதான் போகின்றது என்று சொன்னாலும், அதற்கான காரணங்களை இன்னும் முழுமையாக விளக்க முடியாமல் தான் இருக்கின்றன. என்றாலும் அதன் காரணகர்த்தாவாகிய அந்த எனர்ஜியின் பெயரை டார்க் எனர்ஜி என்று சொல்லி முடிக்கின்றார்கள்! நாம் சக்தி என்று சொல்லுவதைத்தான்! இந்த “ஆகாச தத்துவம் என்பதுதான் “சிதம்பர ரகசியம் என்று சொல்லப்படுகின்றது!

இதைத்தான், அந்த டார்க் மேட்டரையே – பொடென்ஷியல் எனர்ஜியை - சிவம் என்றும், டார்க் எனர்ஜியை - கைனெடிக் எனர்ஜியை - சக்தி என்றும் மெய்ஞானம் சொல்லி, சிவமும் சக்தியும் இணைந்துதான் ஒளிப்பிழம்பாகி, ஓம்காரமாகி, (ஒளியும், ஒலியும் கலந்து. ஓம்காரம் என்பது இங்கு சப்தத்தைக் குறிக்கின்றது) நோவா, சூப்பர் நோவா, காலக்சிஸ் எல்லாம் உருவாகி இந்த உலகில் உயிர் தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததாகச் சொல்லப்படுகின்றது!  திருமூலர் சொல்லுவதும் இதைத்தான்!

“எங்கும் திருமேனி, எங்கும் சிவசக்தி
எங்கும் சிதம்பரம், எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய், இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள், தன்விளை யாட்டிதே

வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊனாகி, உயிராகி இருப்பவனே அவன்!  மோன நிலையிலிருக்கும் சிவமுள் உள்ள சக்தி சதா சுழன்று பிண்டம் பிய்த்துப் போட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படி உண்டாகிக் கொண்டிருக்கும்  நட்சத்திரங்களில் ஒன்றே சூரியன்.  அச்சூரியனைச் சிவம் என்கின்றார், திருமூலர். சூரிய குடும்பத்தில் யாவும் நடத்தும் சூரியன் ஆதாரமாகவும், அந்த சூரியனுக்கு அவன் உள்ளிட்ட கோடானு கோடி சூரிய குடும்பங்களுக்கும் அண்டம் ஆதாரமாகவும், கோடானு கோடி அண்டங்களுக்கு ஆதாரமாக அகிலாண்டமும், கோடானு கோடி அகிலாண்டங்களுக்கு ஆதாரமான அந்த அகிலாண்டேஸ்வரனான ஜோதி சொரூபனான சிவசக்தி ஆதாரமாக இருக்கையில் அந்த சிவசக்தியைக் காண்பது என்பது இயலாத ஒன்று!

 அர்த்தனாரீஸ்வரர் தத்துவமும் உருவானது இப்படித்தான்! சக்தி இல்லையேல் சிவம் இல்லை!  சிவம் இல்லையேல் சக்தி இல்லை!  இந்த சிவம் அசைந்தால் தான் இந்த உலகமே இயங்கும்! ஏனென்றால் அந்த சிவம் மிகுந்த ஆற்றல் கொண்ட ஒன்று! அந்த ஆற்றலை இயங்க வைக்க சக்தி தேவை! ஆனால், சிவம் அந்த சக்தியை வெளிப்படுத்தும் நேரத்தில் வெளிப்படுத்திவிட்டு பின்னர் அதை அப்படியே தன்னுள் இழுத்து வைத்துக் கொண்டுவிடும். இரண்டறக் கலந்ததே அது!

அவன் ஒருவனே! அவனன்றி மற்றொருவர் இல்லை'
அவனைப் படைத்தவர் யாரும் இல்லை. அவனுக்கு அழிவும் இல்லை'
அவன் உருவத்தைப் பார்க்க முடியாது.

உருவம் இருந்தால்தானே! அது மிகுந்த ஒளி மயமானது! அது சக்தி வடிவில் இருப்பதால் அதைப் பார்க்கும் சக்தி யாருக்கும் இல்லை!

     இந்தப் பிரபஞ்சமே அந்த சக்தியாக இருக்கும் போது இந்த சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உண்டா என்றால், இல்லை எனலாம். அந்தப் பிரபஞ்ச சக்திக்கு உட்பட்டுத்தான் இந்த உலகமே இயங்குகின்றது!  “திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் “பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலில் “நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற வரி இதைத்தான் குறிப்பிடுகின்றதோ! அந்த சக்தியைத்தான் பரம்பொருள் என்றும், அது உண்மையாதலால் அதை மெய்பொருள் அல்லது உண்மைப்பொருள் என்றும் சொல்லுகின்றோம்! உண்மைப் பொருள் யாவருக்கும் ஒன்றே! 

சித்து செய்வதோ, அதிசயங்கள், அற்புதங்கள் நிகழ்த்துவதோ ஆன்மீகம் அல்ல! பூஜைகள், சடங்குகள் உள்ளடக்கியதும் ஆன்மீகம் அல்ல! இறைவனைத் தொழுபவர்களும், ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களும் கூட குற்றங்கள் செய்கின்றனர், கொலையும் செய்கின்றனர். ஏன் கோயிலே கட்டுகின்றார்கள்! அதிலிருந்தும் கொள்ளை அடிக்கின்றார்கள்! இவை யாவும் இறை உணர்வே அல்ல! ஆன்மீகமும் அல்ல!  ஆன்மீகம் என்பது நம் யதார்த்த வாழ்க்கையில் பல நேர்மறை எண்ணங்களையும், நன்மைகளையும் விளைவிக்கும் ஒரு மாபெரும் சக்தியாகும்! இறைவனிடம் அன்பு கொள்வது மட்டுமே ஆன்மீகம்! இறை நம்பிக்கை!

இங்குதான் மக்கள் குழம்பித் தவறுகின்றனர்! இறைவனைத் தண்டனை தருபவராகவும், பயம் தரும் ஒருவராகவும் உருவகப்படுத்தி “சாமி கண்ணைக் குத்தும்“சாமிக் குத்தம் என்று சொல்லி தம் சந்ததியினரை வளர்க்கின்றனர்! பயத்தினால் வரும் இறை உணர்வு, இறை உணர்வோ, ஆன்மீகமோ அல்ல! அதனால், மூட நம்பிக்கைகள் பெருகி, இளைய தலைமுறையினர் பல கேள்விகள் கேட்கும் போது, நம்மால் அவர்கள் அறிவுக் கேள்விகளுக்குத் தகுந்த அறிவு பூர்வமான விஞ்ஞான, மெய்ஞான விளக்கங்கள் தர முடியாமல், “இவை எல்லாம் நம் மூதாதையர் சொன்னது. நாங்கள் கேள்வி கேட்டதில்லை. அப்படியே பின்பற்றுகின்றோம். நீங்களும் கேள்விகள் கேட்கக் கூடாது. சொல்வதைச் செய்ய வேண்டும் என்று சொல்லி, கண்மூடித்தனமாகப் பின்பற்றும் சடங்குகளையும், பழக்கவழக்கங்களையும் புகுத்தி, இந்த அறிவியல் யுகத்தில், அவர்களையும் பின்பற்றச் சொல்லும் போது, அவர்கள் இறை நம்பிக்கை இல்லாமல் வளரும் நிலைமை ஏற்படுகின்றது!

இராமகிருஷ்ணர் சொல்லுவது “ஓ! மனிதா பகலிலும் நட்சத்திரங்கள் வானில்தான் உள்ளன.  சூரியனின் பிரகாசமான ஒளியால் அவை கண்ணுக்குத் தெரிவதில்லை என்பதால் பகலில் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லமுடியாது இல்லையா அது போலத்தான், உனது அறியாமை உன் மனக்கண்ணை மறைப்பதால் கடவுள் இல்லை என்று சொல்லாதே 

இறைவனை நம்புவது என்பது இறைவனைக் காண்பதல்ல.  ஆத்திகனாக இருந்தாலும் இறைவனைக் காண்பது என்பது இயலாத ஒன்று!  “தூங்கிக் (தவம், தியானம்) கண்டார் சிவ யோகமும், சிவ லோகமும், சிவ போகமும் தம் உள்ளே”.  கண்களுக்குப் புலப்படாத சிறியவை, பெரியவை உண்டு! நம் செவிக்குக் கேட்க இயலாத அலைவரிசை உள்ள சப்தங்கள் உண்டு!  அது போல மனித மனதுக்குப் புலப்படாத, ஆத்மாவால்/ஆழ் மனதினால் மட்டுமே உணர முடிகின்ற ஒன்றுதான் இறைவன்!  இறைவன் எங்கோ இல்லை! நம்முள், நம் ஆத்மாவில்/ஆழ்மனதில் இருக்கின்றார்! தித்திக்கும் தேனின் சுவை அறிய, தேனைச் சுவைத்தால்தான் அறிய முடியும்! தொட்டுப் பார்த்தோ, முகர்ந்து பார்த்தோ அறிய முடியாது! காற்றினைப் பார்க்க முடியாது. அதைக் காண ஒரு ஆதாரம் தேவை! அந்த மறைமுக ஆதாரம்தான் மரங்கள் அசைவது! நுண்ணுயிரிகளைக் கண்ணால் பார்க்க முடியாது! ஆதாரம்? அவற்றினால் ஏற்படும் நோய்களிலிருந்து, அவை எந்த வகை என அறிந்து கொள்ளலாம்!

இந்த நுண்ணுயிரிகள் இருக்கும் எனர்ஜி லெவல் வேறு – சக்தி நிலை என்று சொல்லலாமா? – நம் எனர்ஜி லெவல் வேறு.  நாம் அவற்றைக் கண்ணால் காண வேண்டும் என்றால், அவற்றின் எனர்ஜி லெவலுக்கு நம்மை உயர்த்திக் கொண்டு செல்ல வேண்டும்! அதைப் போலத்தான், காண முடியாத மெய் பொருளாகிய பரம் பொருள் இருக்கும் எனர்ஜி லெவல் மிகப் பெரியது!  அந்த எனர்ஜி லெவலுக்குச் சென்றால், அதாவது, நாம் ஈக்குவிலிபிரியம் நிலை – Equilibrium State - சமனிலை அடையும் போது, அந்த மெய்பொருளை நமது அகக் கண்ணால் கண்டு, உணர்ந்து மகிழ முடியும்! அந்த எனர்ஜி லெவலை அடைய உதவும் பாதை மிகவும் கடினமான  பாதை!

இதைத்தான் நமது மெய்ஞானம், ஐம்புலன்களை அடக்கினால் மட்டும், ஆத்மாவினால்/ஆழ்மனதினால் மட்டும் காணவோ, கேட்கவோ, புரிந்து கொள்ளவோ முடியாத, ஆனால், உணர, ஆனந்தம் அடைய மட்டுமே முடிகின்ற ஒன்றுதான் இறைவன் என்கின்றது! நம் ஆத்மாவையே உணராது இருக்கும் இப்புவி வாழ்வில், காண்பதைக் காணாமலும், கேட்பதைக் கேட்காமலும், உணர்வதை உணராமலும் இருக்கின்றோம்! முதலில் நாம் நம்  ஆத்மாவை/ஆழ்மனதை அறிய வேண்டும். அந்த ஆத்மா நமக்கு நம் அகக் கண்ணில் எங்கும் நிறைந்திருக்கும் சிவசக்தியைக் காட்டும், எங்கும் எதிலும் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் சிவநடனத்தின் (பிரபஞ்சத்தில் எழும் ஒலி) ஓசையைக் கேட்கச் செய்யும். சமனிலை அடைந்த நம் ஆத்மா/ஆழ்மனமும் அவ்விசையில், அந்நடனத்தின் பாகமாகிவிடுவதால் அதோடு ஒன்றிவிடும்! அப்படி ஒன்றிவிடும் அந்நிலைதான் பேரின்பம்!  அப்பேரின்பத்தை அடைந்தவர்தான் முற்றும் துறந்தவர்.  அரண்மனை வாழ்வைத் துறந்த புத்தருக்கும் அப்பேரின்பம் கிடைத்திருக்கின்றது!



அதைத்தான் தத்துவ ஞானிகள் சொல்லுவார்கள். பிரபஞ்ச சக்தி இந்த உலகில் இருக்கும் எல்லா உயிர்களிடத்தும் உள்ளது! அந்தச் சக்தி நம்முள்ளும் குடி கொண்டு (இதைத்தான் குண்டலினி சக்தி என்று சொல்லுவது உண்டு) பொட்டென்ஷியல் எனர்ஜியாக, நிலையாக தூங்கிக் கிடக்கின்றது! அதை, கைனெட்டிக் எனர்ஜியாக முடுக்கித், தட்டி எழுப்பி இயங்கச் செய்தால், நம் ஆத்மா/ஆழ்மனம் அந்தச் சமனிலை அடைந்து, சக்தியை உணரத் தொடங்கும்! பேரானந்தம் அடையும்! தெளிவடையும்! சலனமற்றதாகும்! மனிதன் பேராற்றல் மிக்கவனாக மாறுவான்!

இப்படிப்பட்டப் பேரின்ப நிலை அடைந்த அதிர்ஷ்டசாலிகள் லட்சங்களில் ஓரிருவர்தான்!  அப்படி என்றால், சாதாரண மனிதர்களாகிய நாம் எப்படி இறைவனைக் காண்பது? அவன் அருள் கிடைக்கப் பெறுவது? அதற்கான வழிதான் என்ன? சாதாரண மனிதர்களுக்கும் இருக்கின்றது வழி! அவ்விறையருள் எல்லோருக்கும் கிடைக்கும்! எப்படி? இறைவன் இருக்கின்றான் என்ற நம்பிக்கை!   நம்பிக்கை என்பது ஒரு ஒளி! அந்த ஒளி இல்லை என்றால் மனிதன் கண்கட்டி விட்டது போல் இருளில் அல்லாடுவான்! அப்துல் கலாம் ஐயா சொல்லுவது போல், அந்த நம்பிக்கையால்தான் இந்த உலகமே இயங்குகின்றது!   இந்த நம்பிக்கைதான் தனிமனித ஒழுக்கத்தையும், சமுதாய ஒழுக்கத்தையும் உருவாக்கியதில் பெரும் பங்கு வகிக்கின்றது!

 “தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
 மனக்கவலை மாற்றல் அறிது

அடிமேல் அடியாகப் பிரச்சினைகள் வரும் போது மனிதன் எங்கு செல்கின்றான் என்றால், நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்கின்றது என்ற உலகியல் உண்மையை நோக்கித்தான்! மனம் உணர்வுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது தெளிவாகச் சிந்தித்து தீர்வுகள் காண இயலாத நிலையில் இருக்கும்! மட்டுமல்ல உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுக்கப்படும் தீர்மானங்களோ, முடிவுகளோ நமக்கு இன்பம் தருபவையாக அமைவதில்லை என்பதுதான் உண்மை! நம்மைவிட ஒரு பெரிய சக்தி உள்ளது எனும் போது நம்பிக்கை பிறக்கின்றது! நமது பிரச்சினைகளை அந்த சக்தியிடம் முறையிட்டு, அதைத் தீர்க்க வேண்டும் போது, நம் மனம் அமைதி அடைகின்றது! இறைவன் அதைத் தீர்க்க வழி காட்டுவது மட்டுமல்ல அதைத் தீர்த்தும் வைப்பான்! ஆம்!  நம் மனது உணர்சிப் பிழம்பிலிருந்து விடுபட்டு அமைதி அடையும் போது, தெளிவாகச் சிந்திக்கவும் தொடங்கும்!  தீர்வுகளும் கிடைக்கும்! 

அந்த மெய்பொருளின் மீது ஆணவமற்ற நம்பிக்கை வைத்து வணங்கும் இந்த இறை நம்பிக்கை என்பது நேர்மறை எண்ணமே!  நல்ல வாழ்வினை, மிகவும் உன்னதமான சக்தியுடன் கூடிய ஒரு வாழ்வியலாக மாற்றும் விதத்தில் நல்ல எண்ணங்களை விதைக்கும் ஓர் எண்ணமே! இறையுணர்வு, ஆன்மீகம் என்பதே அன்புணர்வுதான் என்பதால், உலகில் உள்ள எல்லா உயிர்களிடமும், மனித நேயத்துடன் தன்னலமற்ற அன்பு செலுத்தி தொண்டு செய்தால் அதுவே இறைவனுக்குச் செய்யும் தொண்டும் ஆகும்! அன்பு இருக்கும் இடத்தில்தான் அருள் இருக்கும்! “அன்பே சிவம் என்பதும் இதன் அடிப்படையில்தான்!

சாதாரண மக்களாகிய நாம், தன்னலமற்ற அன்புடன், நம்மால் இயன்றதை, இயன்ற விதத்தில், நேர்மையுடன் உதவ வேண்டும்! அப்படி உதவுவதன் மூலம், நம்முள் உறைந்திருக்கும் இறைவனுக்கும் ஆனந்தம்! அந்த இறைவன், நம் வாழ்வில் நலன் பல பெற நமக்கு உதவுவான்! நாம் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும், அதன் பன்மடங்காக நமக்கு நன்மை பயக்க இறைவன் அருள்வான்! நம் கைகள் எப்போதும் அழுபவரின் கண்ணீரைத் துடைக்க, பசித்தவர்க்கு உணவளிக்க, வீழ்ந்தவரைப் பிடித்து உயர்த்த,  வீழப் போவாரை வீழாது தாங்கிப் பிடிக்க உதவும் ஒன்றாக இருந்தால், இவ்வுலக வாழ்வில் நம் உள் உறைந்திருக்கும் இறைவனை நாம் உணர்ந்து பேரின்பம் பெற்று வாழ்ந்து, மரணம் வருகையில் அந்தப் பிரபஞ்ச சக்தியாகிய மெய் பொருளுடன்/இறைவனுடன் இரண்டறக் கலந்து இப்பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்கலாம்! ஆனால், நன்மை பயக்கும் என்றோ, புண்ணியம் என்றோ எதிர்பார்த்து செய்வது இதில் அடங்காது! 

எனவே,  மற்றவர்கள் மேல் தங்களது நம்பிக்கையைப் புகுத்தாமல், அவரவர் தங்கள் நம்பிக்கைக்கு இணங்க, மத, சமய, சாதி, கடவுள் சண்டைகள் இல்லாமல், இவ்வுல்கிற்கே பொதுவான அந்த மெய்பொருளின் மீது நம்பிக்கை வைத்து, மனித நேயத்துடன், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, “அன்பே சிவமாக இந்த உலகை நேசித்து வாழ்ந்தாலே, அதுவே ஆன்மீகம்தான்! இறையுணர்வுதான்!

கண்டவர் விண்டிலர்!  விண்டவர் கண்டிலர்!





44 கருத்துகள்:

  1. எனக்கு எல்லாம் Phd வேண்டாம் வேண்டவே வேண்டாம் நான் கல்லூரியில் படிக்கும் போது கூட இவ்வளவு பெரியயயயயயயயயய் கட்டுரையை படித்தது இல்லை அதனால் இதை நான் படிக்கவில்லை ஆனால் பதிவின் இறுதியில் இருக்கும் பாராவை மட்டும் படித்தேன்... மிக அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா! ....என்ன செய்ய சில கட்டுரைகள் என்று வரும்பொது சில கருத்துக்கள் சொல்லிச் செல்ல வேண்டி உள்ளதால்...அப்படி ஆகிப் போகின்றது!

      ஹப்பா இறுதிப் பாரா அது தானே முக்கியம்...அது தங்களுக்ப் பிடித்ததே! அதுவே போதும்! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  2. அருமையான கட்டுரை துளசிதரன் ஐயா.

    துவக்கத்தில் எங்கே சூரியன் தான் கடவுள் என்று சொல்லிவிடுவீர்களோ.... என்ற எண்ணத்துடன் படித்தேன்.
    “அன்பே கடவுள்“ என்று அழகாக ஆழமானக் கருத்துக்களுடன் முடித்திருக்கிறீர்கள்.

    திருமூலரை நான் மேலும் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி! சூரியனைப் பற்றி ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டோமே!
      திரும்முலரையும் படியுங்கள், போகர் 7000 என்னும் நூல் அது மிகவும் பழந்தமிழில் இருக்கும்! ஒரு அற்புதமான நூல். அதையும் வாசிக்கப் பாருங்கள்! கிடைப்பது மிகவும் அரிது! நாங்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வைத்திருக்கின்றோம் அனுப்பித் தருகின்றோம்!..

      அது போன்று, திருவாசகம் முடிந்தால் படிக்கப் பாருங்கள்! அதிலும் உடற் கூறுகள், விஞ்ஞானம் பற்றி பல செய்திகள் உள்ளன!

      மிக்க நன்றி!

      நீக்கு
  3. வணக்கம்
    அண்ணா

    பல கருத்துக்கள் உள்ளடங்கிய பதிவு. நல்ல விளக்கமும் கூட எல்லாவற்றுக்கும் நீங்கள் இறுதியில் சொல்லிய விடயத்தை ஒவ்வொருவரும் உணர்ந்தால் சரிதான்

    மனித நேயத்துடன், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, “அன்பே சிவமாக” இந்த உலகை நேசித்து வாழ்ந்தாலே, அதுவே ஆன்மீகம்தான்! இறையுணர்வுதான்!
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! தம்பி! ஆன்ம நேயத்துடன், மனித நேயம் இணையும் போது பல அற்புதங்கள் விளைகின்றன!
      மிக்க நன்றி தம்பி!

      நீக்கு
  4. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. ஆழமான கருத்துக்களை அருமையாக
    எளிமையாக விரிவாகச் சொல்லிப் போனவிதம்
    மிக மிக அற்புதம்
    மீண்டும் மீண்டும் படித்துத் தெளிய வேண்டிய
    அற்புதப் பதிவினைத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சார்! தங்களு வருகைக்கும், பாராட்டுகளுக்கும், கருத்திற்கும்!

      நீக்கு
  6. பதில்கள்
    1. வாங்க வக்கீல் சார்! மிக மிக நன்றி சார்! தங்கள் "அருமை" என்ற கருத்திற்கு!

      நீக்கு
  7. அன்பே கடவுள் என்பது தான் உண்மை ஆழப் பதிந்த நற் கருத்தால்
    அகத்தைத் தொட்ட பகிர்வுக்கு என் இனிய வாழ்த்துக்கள் சகோதரா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மிக்க நன்றி சகோதரி! ஆன்மீகத்தில் ஆழ்ந்து, ஆன்மீகக் கவிதைகளை அற்புதமாக, அழகாக, மனம் கவரும் வகையில் எழுதும் தங்களது அகத்தையே, எங்கள் கட்டுரைத் தொட்டிருப்பது எங்கள் மனதுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகின்றது!

      மிக்க நன்றி!

      நீக்கு
  8. திருமூலர் விளக்கம் உட்பட விளக்கங்கள் பிரமாதம்...

    குறள் சிறப்பு...

    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி DD! தங்கள் பாராட்டிற்கு, கருத்திற்கு!

      நீக்கு
  9. எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கிறது ஐயா அன்பே கடவுள் என்பதே சரியானது முடிவை அருமைாக கொடுத்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் எல்லா மதங்களும் அதைத்தான் சொல்லுகின்றன! ஆனால், மனிதன் தான் மதத்தில் ஏறி ஆடுகின்றான்! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  10. நமக்கும் மேலே ஒரு சக்தி! அதையே இறைவன் என்று நம்புகிறோம்! இறுதியில் சொன்னதுபோல கண்டவர் விண்டிலர், விண்டிலர் கண்டிலர் தான்! அருமையான கட்டுரை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ்! தாங்கள் "கோ"யிலில் (உலகிற்கே அரசன் குடியிருக்கும் இல்லத்தில்) அந்த இறைவனுக்கு அன்புடன் தொண்டாற்றுவதால், தாங்கள் இக்கருத்தை மிகவும் நன்றாக உள்வாங்கியிருப்பீர்கள்!

      மிக்க நன்றி! நண்பரே!

      நீக்கு
  11. தம் கட்டி படித்தேன் ...
    ஆசிரமம் ஏதும் ஆரம்பிக்கற ஐடியா வந்திருக்கிறதா?
    விரிவான தகவல்கள்.
    அருமையான படங்கள்.
    நீங்கள் கண்டவர் என்றே நம்பிவிட்டேன்
    அப்புறம் எப்படி விண்டிலர்?
    ஹ ஹ ஹா
    தொடர்க
    மொத்தத்தில் நல்ல எனர்ஜி லெவல் தோழர்.
    http://www.malartharu.org/2014/06/rural-children.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா......மிகவும் நீளம்தான் நண்பரே! ஆசிரமமா? ஐயோ! என்ன நண்பரே எங்களையும் நித்தி லிஸ்டில் சேர்த்துவிட்டீர்கள்!!!!! அந்த வகை ஆன்மீகத்தில் எங்களுக்கு அதில் சுத்தமாக நம்பிக்கை இல்லை! உடன்பாடும் கிடையாது!
      தங்கள் கருத்தை மிகவும் ரசித்தோம்!

      நீக்கு
  12. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எவ்வளவு ஆழ்ந்த கருத்துக்களை அற்புதமாக அலசி எமக்கும் அருமையான விளக்கங்களோடு தெரியப் படுத்தியுள்ளீர்கள். மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும் அளவுக்கு தரம் வாய்ந்தவை. உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். மேலும் இப்படி பதிவுகளை தொடர்ந்து தரும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  13. குழப்பான கருத்துக்களைத்
    தெளிவாக
    எளிமையாக விளக்கயுள்ளீர்கள்
    ஆன்மீகம் இன்று
    ஆடம்பரமாக சடங்காகிவிட்டது
    விநாயகர் ஊர்வலம் ஒன்றே போதும் சாட்சிக்கு,
    திருப்பதி சென்றால் ஆயிரம் ரூபாய் செலுத்தி
    சிறப்பு தரிசனம் செய்ய வேண்டும்
    இதுவா ஆன்மீகம், இதுவா பக்தி
    இதுவா ஆண்டவன் செயல்
    தங்கள் கூறுவதுதான் சரியானது
    அன்பே சிவம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்மீகம் இன்று ஆடம்பரம், விளம்பரம் மிக்கதாக ஆகிவிட்டது! அது ஆன்மீகமே அல்ல! நண்பரே!

      தங்கள் விரிவான கருத்திற்கு மிக்க நன்றி கரந்தையாரே!

      நீக்கு
  14. of course இந்த கட்டுரையோட லெங்க்த் எனக்கு hecticகா இருந்தது சகா.
    அதை எப்டி சொல்லறதுன்னு தெரியலை but தமிழன் கொடுத்த ஐடியா படி படிச்சேன். என் சின்னச்சிறு அறிவுக்கு இது ரொம்ப அதிகம் பாஸ்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னித்து விடுங்கள் சகோதரி! எல்லோருமே இதை வாதித்தவர்கல் எல்லோருமே! ஒரு கட்டுரையின் சில கருத்துக்களை முன் வைக்கும் போது, அதுவும், பல காலமாய், பலர் மனதிலும், அதுவும், நம்புபவர்களின் மனதில் கூட கஷ்டம் வரும் போது எழும் சந்தேகமான ஒரு விஷயத்திற்கு கருத்துக்கள் முன் வைக்கும் போது அறிவியல் பூர்வமாகவும், ஆன்மீக பக்கத்திலிருந்து சொல்ல வேண்டி வந்ததால் பெரிதாதியது!

      anway மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  15. //ஆன்மீகம் என்பதே அன்புணர்வுதான் என்பதால், உலகில் உள்ள எல்லா உயிர்களிடமும், மனித நேயத்துடன் தன்னலமற்ற அன்பு செலுத்தி தொண்டு செய்தால் அதுவே இறைவனுக்குச் செய்யும் தொண்டும் ஆகும்!//

    முழுக்க முழுக்க உண்மை. ஆனால் இங்கே அசைவம் (non-veg) நுழையும்போது இதில் கடவுளின் வெளிப்பாடுதான் என்னவாக இருக்கும் என்கிற சந்தேகம் எழுகிறது.

    கோபாலன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் கோபாலன் சார்! தங்கள் சந்தேஹம் சரியானதே! ஆனால், இறைவன் அருளுக்கும் அதற்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை! உலகில் நடக்கும் சம்பவங்களுக்கும் அதற்கும்! ஆதிகால மனிதன் முதலில், விவசாயம் தொடங்கும் முன் அவனது சாப்பாடு மிருகங்களை வேட்டையாடித்தான்! ஏன், ஒரு கால கட்டத்தில் வேள்விகள் செய்த அந்தணர்கள் கூட அசைவம் உண்டிருக்கின்றார்கள்! அப்படிப்பார்த்தால், சைவம் என்று கூறிக் கொள்ள முடியாது! ஏனென்றால் நாம் சாப்பிடும் மாத்திரை மருந்துகளிலிருந்து, உடுக்கும் உடை (பட்டு என்று எல்லோருமே உடுக்கின்றார்களே) பால், தேன், எல்லாமே அடங்கும் அதில்! அதனால் தான் இப்போது அமெரிக்க போன்ற நாடுகளில், வேகன் என்று ஒரு சாரார் தேன், பால் பால் சம்பந்தப்ப்பட்ட உணவுகள் எதையும் உண்பதில்லை! WHO கூட சென்ற வருடம் இனி மருந்து மாத்திரைகள் எல்லமே தாவர சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்! விலங்குகள் சம்பந்தப் படுத்தப்பட்டதாக இருக்கக் கூடாது என்று மாத்திரைகளில் கூட பச்சைப் புள்ளி கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்! நிற்க இதற்கும் இறையருளுக்கும் சம்பந்தம் இல்லை! இதைப் பற்றி எழுத வேண்டும் என்றால் தனியாக ஒரு இடுகை அவசியம்! நமது நண்பர்கள் பாவம்!
      தாங்கள் எங்கள் கட்டுரையை ஆழ்ந்து படித்தற்கு மிக்க நன்றி! தங்கள் சமயோசிதமான சந்தேகத்தை வெளிப்படுத்தி ஒரு இடுகைக்கு வழி வகுத்ததற்கும்மிக்க நன்றி! யோசிக்கின்றோம்! இல்லை தாங்களே ஒரு இடுகை போடலாமே! நாங்களும் ஆர்வமாக இருக்கின்றோம்!

      நீக்கு
  16. தந்தையர் தின வாழ்த்துக்கள் என் அன்புச் சகோதரனே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்கள் அன்பான வாழ்த்திற்கு!

      நீக்கு
  17. எல்லா நண்பர்களுக்கும், இணையத் தொடர்பில் பிரச்சினை இருந்ததால் தங்கள் இன்னூட்டத்தை வெளியிடவும், கருத்து தெரிவிக்கவும் தாமதாமாகிவிட்டது! மட்டுமல்ல எங்கள் கணினியும் பழுதடைந்துவிட்டது! எனவே தங்கள் வலைப் பக்கத்திற்கு வருவதிலும், பின்னூட்டம் இடுவதிலும் சற்று தாமதம் ஏற்படலாம். தயவு செய்து மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
  18. துளசிதரன் சார், கீதா மேடம் இருவருக்கும் என் வாழ்த்துக்கள் - இந்தக் கட்டுரையை எழுதி முடித்ததற்காக.. :)
    உங்க பதிவுகள பொதுவா ஒரு முறை படிக்கறதோட நிறுத்த மாட்டேன்.. இரண்டு மூன்று முறை படிப்பேன்.. புரியாமல் அல்ல.. நீங்க எப்படி ஒரு விஷயத்தை கொண்டு போறீங்க, அதுவும் அந்த கட்டுரையின் சுவாரஸ்யம் கெட்டுவிடாம ன்னு அப்சர்வ் பண்ணுறதுக்காக.. இதையும் அப்படித்தான் படித்தேன். சுமார் அரை மணி நேரம் எடுத்துக் கொண்டேன்.. (எனக்கும் பிடித்த சப்ஜெக்ட் அல்லவா..) இவ்வளவு பெரிய கட்டுரையை எழுதும் போது விஷயங்களை துண்டு துண்டாக சொல்லாம கோர்வையா சொல்றது தான் ரொம்ப முக்கியம். இதுல அது அழகா வந்திருக்கு. சூப்பர்.. ஆனா உள்ளே Content ல நான் எதிர்பார்த்த ஒண்ணு மிஸ்ஸிங்.. அது என்னன்னு கடைசில சொல்றேன்..

    சூரியன், பிரபஞ்சத்தில் ஆரம்பித்து அறிவியல் வழி சென்று, இறை நம்பிக்கை/மூட நம்பிக்கை இவற்றுக்கும் ஆன்மீகத்துக்கும் உள்ள தொடர்பு.. ஆன்மீகத்தை பற்றிய மக்களின் புரிதலும், கடவுளை பற்றி தப்பாக கற்பிக்கப்பட்ட/ கற்பித்துக் கொண்டிருக்கும் அவலங்களையும் சுட்டிக் காட்டி, திருமூலர், இராமகிருஷ்ணர் போன்ற (தத்துவ) ஞானிகளின் வாக்குகளை பகுத்தாய்ந்து, அதே விஷயங்களை அறிவியலில் Reference கொடுத்து பின் இறை/ஆன்மிகம் பற்றிய உங்க கருத்துகளை முடிவாய்/ தீர்வாய் சொல்லியிருக்கும் இந்தக் கட்டுரை நிச்சயம் ஒரு பொக்கிஷம். காரணம் பகுத்தறிவு-வாதிகளுக்கே பகுத்தறிவு என்றால் என்ன என்பதை பற்றிய அறிவு குறைவாகத் தான் உள்ளது. தவிர இன்றைய தலைமுறை அறிவியலை நம்பும் இளைஞர்களை கொண்டது. ஆதாரம் இல்லாத விஷயங்களை அசால்டாக ஒதுக்கி விட்டு போய்விடுவார்கள்.. எனவே உங்க கட்டுரைய ஆன்மீகவாதி படிச்சாலும் சரி, பகுத்தறிவு வாதி படிச்சாலும் சரி, அறிவியல் சார்ந்திருக்கும் ஒருவர் படிச்சாலும் சரி ஒரே மாதிரி தான் புரிதல் இருக்கும் என்பது என் திண்ணம்..



    இறப்புக்கு பின் என்ன என்ற தேடல் மிஸ்ஸிங்.. இன்றும் இதற்கு விடை சொல்ல அறிவியல் திணறுகிறதே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவி! மிக்க மிக்க நன்றி ஆவி! தங்கள் விரிவான கருத்திற்கும், மிகுந்த கவனத்துடன் எங்களது பதிவுகலை வாசிப்பதற்கும், முதற்கண் எங்கல் நன்றி! மிகுந்த சந்தோஷமாகவும் இருக்கின்றது ஆவி! இது போன்ற அறிவு பூர்வமான, நல்ல கருத்து பரிமாற்றங்களுக்கும், அதைப் பற்றிய விளக்கங்களும், தேடல்களும்! இதை இதைத்தான் எதிர்பார்க்கின்றோம்! அதற்கும் மிக்க நன்றி!

      //பகுத்தறிவு-வாதிகளுக்கே பகுத்தறிவு என்றால் என்ன என்பதை பற்றிய அறிவு குறைவாகத் தான் உள்ளது. // மிக்க சரியே ஆவி! பார்க்கப் போனால் நாங்கள் இந்த இடுகையில் நாத்திகம் என்பதே இந்த உலகில் கிடையாது என்று சொல்லி இருந்தோம்! ஆன்மீகம் என்பது absolute term......நாத்திகம் என்பது relative term என்றும்...எங்கலைப் பொறுத்தவரை நாத்திகம் என்பது இல்லை என்பதை எடுத்துக்காட்டுடன் சொல்லி இருந்தோம்....பின்னர் அதை இன்னும் ஆழமாகச் சொல்ல வேண்டும் என்றும், இந்த இடுகையும் இன்னும் நீண்டு கொண்டே பொகும் என்றும் எடிட் செய்து விட்டோம்!


      ஆம்! இறப்புக்குப் பின் தேடல் இதில் மிஸ்ஸிங் தான்! அறிவியல் திணறுகின்றதுதான்! அதையும் நம் சுஜாதா அவர்கள் கற்றதும் பெற்றதும் ல் அழகாக கொடுத்திருக்கின்றாற்!. அதை இதில் சேர்த்தால் இன்னும் இடுகை பெரிதாகிவிடும்....மட்டுமல்ல இன்னும் நிறைய விஷயங்ககளைப் பற்றி இதில் நாங்கள் சொல்லவில்லை! சேகரித்த விஷயங்கள் நிறைய ஆனால் நிறைய எடிட் செய்துதான் வெளியிட்டோம்!

      இறப்புக்குப் பின்....வருகின்றது! ஆவி! அதைப் பற்றியும் எழுதுகின்றோம்! அறிவியலும் கலந்துதான்! ...

      இன்டெர்னெட் பிரச்சினையும், இத்தனை நாள் ஐசியு வில் இருந்த லாப்டாப் உயிர் விட்டதாலும்......தங்கல் பின்னூட்டத்தை இடுவதற்கும் பதில் கொடுப்பதற்கும் தாமதித்து விட்டது! இன்னும் மற்ற வலைத்தளங்கள் செல்ல வில்லை! அதுவும் எப்போது என்று தெரியவில்லை!...

      ஸோ இன்னும் சில நாட்களில் உங்கல் கேள்விக்கான இடுகை வரும்! ஓகே?!

      அதே போன்று பதிவர் கோபாலன் சார் கேட்டிருக்கும் கேள்விக்கும் பதிலை ஒரு இடுகையாகவே கொடுக்கலாம் என்றிருக்கின்றோம்! அவரது கேள்வி நிஜமாகவே நல்ல சம்யோசிதமான கேள்வி! அதற்கும் விடை உண்டு! ஆனால் அது இடுகையாக வரும்!

      மிக்க நன்றி!

      நீக்கு
  19. மற்றொரு விஷயம் சொல்ல நினைத்தேன்.. இவ்வளவு விஷயங்களை ஒரே மூச்சில் சொல்லாமல் கொஞ்சம் பிரித்து சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஆவி தாங்கள் சொல்லி இருப்பது போல பிரித்து சொல்லி இருக்கலாம்தான்....ஆனால் இப்பொதெல்லாம் 2 பாகமாக இட்டால் வாசிப்பவர்கள் இருப்பார்களோ என்பதால் தான்.....ஏனென்றால் இதைப் போன்று கற்றல் குறைபாடு பற்றிய ஒரு இடுகை 3 பாகமாக வெளியிட்டோம்! முதல் பாகம் மட்டுமே வாசிக்கப்பட்டது....மற்றவை அவ்வளவாக போகவில்லை என்று தெரிந்து கொண்டோம்! அதனால் தான்........இனிமேல் இடுகை பெரிதானால் அவ்வறு செய்கின்றோம்!

      மிக்க நன்றி ஆவி! இறப்புக்குப் பின் தேடலில் உங்கள் உலகமும் வரும்....ஹாஹாஹாஹா...அதாங்க "ஆவி" உலகமும் வரும்........

      நீக்கு
  20. அருமையான கட்டுரை.

    ஆன்மீகம் விளம்பரமாக மட்டுமல்ல அரசியலாகவும் மாறிவிட்டது......

    அன்பே சிவம் - அன்பு மட்டுமே நிச்சயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட் சார்! ஆம் ஆன்மீகம் வியாபரமாகவும் ஆகிவிட்டது! அன்பு ஒன்றுதான் அதுவும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு ஒன்று தான் நிச்சயம்....மிக்க நன்றி தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்!

      நீக்கு