திரு.N.R./ N. ரங்கசாமி திரு நாராயணசாமி
சாமிகள் தான் வரம் கொடுக்கும். ஆனால் இங்கு, பாண்டிச்சேரியில் எந்த சாமிக்கு தாங்கள் கொடுத்த வரம் கிடைக்கப் போகின்றது என்று மே 16ஆம் தேதி, பாண்டிச்சேரி மக்கள் அனைவரும் டி.வி. முன், பரபரப்புடன் அமர்ந்திருந்ததைக் கண்டோம்.
திரு. ராதாகிருஷ்ணன்
எங்களுக்கும்
ஆர்வம் தொற்றிக் கொண்டது, எந்த சாமிக்கு மக்கள் வரம் அருளியுள்ளார்கள் என்று அறிந்து
கொள்ள. விஷ்ணுவின் பெயர்களில் இரண்டைத் தாங்கி நிற்கும் இரண்டு
சாமிகளுக்கும் – அதாங்க N.R என்று அழைக்கப்படும் “ரங்க", “நாராயண" "சாமி”களுக்கு மக்கள் அருளியது
யாது என்று! பாண்டி முதல்வர்
ரங்கசாமியா நின்றார் என்று நீங்கள் வியப்பது புரிகின்றது! அவர்
நிற்கவில்லைதான். அவரது கட்சியான N.R. காங்கிரஸைச் சேர்ந்த, முதல்வருக்கு
நெருக்கமான, பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த, மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் திரு. ராதாகிருஷ்ணன் தான் நின்றார். ஆனால், ராதாகிருஷ்ணனை
அன்று தொலைக்காட்சியில் பார்க்க முடியவில்லை! மக்களும் அவரைப் பற்றிப் பேசவில்லை! எல்லாமே N.R. மயம்தான்.
ஊடக
நண்பரிடமிருந்து 11 மணியளவில் ஒரு செய்தி வந்தது. திரு நாராயணசாமிதான்
முன்னிலையில் இருப்பதாக. ஊடகச் செய்தியாயிற்றே! அதுவும் நண்பரிடமிருந்து!
அடுத்த 45 நிமிடத்தில் சரவெடி காதைப் பிளந்தது. எங்களுக்கு ஆச்சரியம்! ஏனென்றால், நாங்கள் இருந்த
முத்தரையர்பாளையம் ஏரியா, முதல்வர் ரங்கசாமியின் ஏரியா. அவர் இருப்பது அதே
பகுதியில் திலாசுப்பேட்டை என்ற ஏரியாவில், அதாவது ராஜீவ் காந்தி
சிலையிலிருந்து பிரிந்து செல்லும் வழுதாவூர் ரோடில். அவர் சர்வ சாதாரணமாக அருகே
உள்ள சிறிய டீ கடையில், பெஞ்சில் அமர்ந்து டீ குடிப்பதை நாங்கள் பார்த்திருக்கின்றோம்! அப்படி இருக்க, நாராயணசாமிக்குச்
சரவெடியா? இங்கு? சந்தேகம் தலைக்கேறியது! அதை நிவர்த்தி செய்து கொள்ள
-இல்லையென்றால் சிந்து பைரவி திரைப்படத்தில் வரும் ஜனகராஜின் தலை வெடித்துவிடுவது
போல காண்பிக்கப்படுமே அது போன்று எங்கள் தலையும் சூடாகியது - வீட்டை விட்டு வெளியில்
வந்து ரோட்டில் நடந்தோம். ரோட்டில் போவோர், வருவோர், வாகனங்கள், பேருந்து, லாரி முதற்கொண்டு
நிறுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதற்குள் முழு முடிவுகள்
வெளியாகிவிட்டதா என்ற அடுத்த ஆச்சரியத்தில் எங்கள் புருவங்கள் உயர்ந்தன! எனவே அங்கு
பாதுகாப்பிற்காக நின்ற போலீசாரிடம் விசாரித்தோம்!
“இல்லைங்க
இப்பதான் கொஞ்ச முன்னாடி ஊடக நண்பர் சொன்னாரு நாராயணசாமி முன்னிலைலனு...அதாங்க”
“அதெல்லாம்
சும்மா.....அப்படித்தான் சொல்லுவாங்க....”
நின்றது திரு.
ராதாகிருஷ்ணன். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவந்து அறிவிக்கப்படும் முன்னரேயே
தொண்டர்கள் அனைவரும் இனிப்புகள் வழங்கி, ரங்கசாமியின்
உருவப்படத்தைத்தான் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்தனர். இனிப்புகள் பல
ஏரியாக்களிலும் வழங்கி, மேளதாளத்துடன், சினிமாப் பாடல்களுக்கு
நடனம் புரிந்து, ட்ராஃபிக் ஜாம் உருவாக்கி மகிழ்ந்தனர்!
“அப்பா பைத்தியம்
சாமி” (இதுவும் சாமி) சித்தரின் பக்தராகிய ரங்கசாமி (இதுவும் சாமிதான்)
பாண்டியில், கோரிமேட்டில், இந்த சித்தருக்காகக் கட்டியிருக்கும் கோவிலுக்குத் தினமும்
இரவு 9 மணிக்கு மேல் வருகை புரிந்து, பூஜை செய்து, அன்னதானம்
செய்வது வழக்கமாம். அந்த “சாமிதான்” இந்த சாமிக்கு
வரம் கிடைக்க அருளப் பெற்றாரோ?!!! அப்படித்தான் இந்த சாமி சொல்கின்றார்.
தேர்தல் கமிஷனின்
கெடுபிடிகளையும் மீறி, பணம் நிறைய கொடுக்கப்பட்டதாக அறிந்தோம்! எப்படியோ, ரங்கசாமி/ராதாகிருஷ்ணன்
அவர்களுக்கு மக்களிடமிருந்து வரம் கிடைத்துவிட்டது! மக்களுக்கு ரங்கசாமி மேல்
மிகுந்த நம்பிக்கை போலும்! ஒரு தனி மனிதருக்கு, அதுவும் ஒரு
அரசியல்வாதிக்கு இத்தனை ஆதரவா என்று! எங்களுக்கு மிகுந்த ஆச்சரியம்! அப்படித்தான்
தெரிந்தது! சென்ற பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கு தொண்டர்களால் வைக்கப்பட்ட
கட்-அவுட்களும், இப்போது மக்களிடம் பேசிய போது, ரங்கசாமி பல நன்மைகள் செய்திருப்பதாகவும், அவர் தவறே
செய்திருந்தாலும், மக்களுக்கு நல்லதும் செய்கின்றார் என்றும் அதனால்தான், திரு
ராதாகிருஷ்ணன் அவரது கட்சி என்பதால் தான் ஓட்டுப் போட்டோம் என்றும் பெரும்பான்மையான
மக்கள் திரு. ரங்கசாமிக்கான
ஆதரவை வெளிப்படையாகவே பேசுகின்றனர், சாதாரண மக்களும் சரி, படித்தவர்களும்
சரி! இந்த சாமி, இப்படித் தன் மீது மிகுந்த பாசமும், நம்பிக்கையும்
வைத்திருக்கும் பாண்டிமக்களுக்காக, மத்தியில் தனது M.P. ராதாகிருஷ்ணனைப்
பேசவைத்து, மக்கள் அருளிய வரத்தை இருமடங்காக/பலமடங்காகத் திருப்பிக் கொடுப்பாரா?! பார்ப்போம் பொறுத்திருந்து!
இதில் ஒரு
வேடிக்கை! பாண்டிச்சேரி வரைபடத்தைப் பார்த்தவர்களுக்கும், பாண்டியில்
இருந்தவர்களுக்கும் இந்த வேடிக்கைத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு! நாம் பேருந்தில்
பயணித்தால், நேர் ரோடிலேயே, பாண்டிச்சேரி நெருங்கும் சமயம் “பாண்டிச்சேரி எல்லை
வரவேற்கின்றது” என்ற வாசகத்தைக் காணலாம். சிறிது தூரம்
சென்றதும், “தமிழ்நாட்டு எல்லை, காஞ்சிபுரம் மாவட்டம், ஊராட்சி ஒன்றியம்
வரவேற்கின்றது” என்ற வாசகத்தைக் காணலாம். சற்று தூரம் சென்றதும், “தமிழ் நாட்டின்
நன்றி” உரையைக் காணலாம். சற்றுத் தூரம் கடந்ததும், உங்களை
விழுப்புரம் மாவட்டம் வரவேற்கும். 2 கி.மீ. தூரம் கூட கடந்திருக்கமாட்டீர்கள், விழுப்புரம்
நன்றி சொல்லும்.....பாண்டி எல்லை வரவேற்கும். இப்படித் தமிழ்நாடும், பாண்டியும் மாறி, மாறி வரவேற்கும்
நீங்கள் எந்தத் திசையில் பயணித்தாலும்!
பல இடங்களில், மக்கள் நெரிசலாக
வாழும் பகுதிகளிலேயே ஒரு தெரு தமிழ் நாட்டு எல்லைக்குள்ளும், அடுத்த தெரு
பாண்டிச்சேரி எல்லைக்குள்ளும் இருக்கும்! இன்னும் ஒரு வேடிக்கை
என்னவென்றால், கோரிமேட்டில் உள்ள ஒரு பகுதியில், ஒரு வீடு இரண்டு
திண்ணைகளைக் கொண்டது. அந்த வீட்டை இரண்டாகப் பிரித்தால் ஒரு பகுதி, ஒரு திண்ணை தமிழ்நாட்டைச்
சேர்ந்தது. மற்றொரு பகுதி பாண்டியைச் சேர்ந்தது! அது சரி, தெருவில் தண்ணீர்
குழாய் இது போன்று இருக்கின்றது.....தண்ணீர் பிரச்சினை?!!! அதில் வசிக்கும்
அந்தக் குடும்பம் ஒரு கால் தமிழ்நாட்டிலும், மற்றொரு கால்
பாண்டியிலுமாக, இரண்டு ரேஷன் கார்டுகளுடன் வாழ்கின்றார்கள்! அப்படியென்றால் ஓட்டு? அதுவும்
அப்படித்தான் இருக்குமோ? அங்கு ஏதோ ஒரு சாமிக்கும், இங்கு தமிழ்
நாட்டிலும் போட்டிருப்பார்களோ? அப்படித்தான் கேள்விப்பட்டோம்! இது எப்படி
இருக்கு??! அது சரி...ஒரு பெரிய சந்தேகம்! இந்தப் பகுதிக்கு
வேட்பாளர்கள் ஓட்டு கேட்க வந்திருப்பார்களா? வந்திருந்தால் எப்படிக்
கேட்டிருப்பார்கள்?! தமிழ்நாட்டு வேட்பாளரும், பாண்டிச்சேரி
வேட்பாளரும் குழம்பித் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டிருப்பார்களோ?!!!!! ஒரு
குடும்பத்தின் ஓட்டு என்றால் சும்மாவா?!!
பாண்டிச்சேரி
முதல்வர் திரு.ரங்கசாமியோ, அம்மாவோ இதைக் கவனித்தார்களா/கவனிப்பார்களா? இல்லை இது
தங்களுக்கு ஆதாயம்தானே என்று கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்களோ? அப்படி என்றால்
தேர்தல் ஆணையம் இதற்குப் பொறுப்புதானே? இது போன்ற இரு மாநில
எல்லை வாசிகளின் குழப்பத்தைப் போக்கத்தான் Smart Card என்று ஒன்று
வந்ததே! என்னாயிற்று? என்ன பிரயோசனம்? பதில் யாரிடம் உள்ளது?!
கட் அவுட்டுகளைப் பார்த்து அசந்து போனேன் !
பதிலளிநீக்குபுரோட்டா கார்த்தி குறும் படத்தை திரையிட்டீர்களா?வரவேற்பு எப்படி ?
த ம 1
ஜி! ஹாஹா! அப்படித்தான் அங்கு கடவுட்டுகள் வைப்பார்கள்! இம்முறை தடை என்பதால் வைக்கவில்லை!....பரோட்டா கார்த்திக் திரைய்டப்படவில்லை! இப்போதுதான் அது போஸ்ட் ப்ரொடக்ஷனில் உள்ளது! இனிதான். அதற்கு முன்னோட்டமாக பரோல் வெளியிட அனுமதி பெற போயிருந்தோம்! இனிதான் தெரியும்! ஜி!
நீக்குமிக்க நன்றி ஜி! சுடச் சுட பின்னூட்டம் இட்டதற்கு!
பாண்டிச் சேரி குறித்து
பதிலளிநீக்குஅதிகம் தெரியாது
தங்கள் பதிவு ஆச்சரியத்தையும்
இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் எனும்
ஆர்வத்தையும் அதிகரித்துப்போனது
படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
முடிந்தால் அறிந்து கொள்ளுங்கள் சார்! மிகவும் சுவாரசியமாக இருக்கும்! அரசியல் ஒருபக்கம் இருக்கட்டும்....ஊர் மிகச் சிறியது என்பதால் வாழ்க்கை மிக எளிது! மக்களும் மிகத் தன்மையாகப் பழகுவர். எளிமையானவர்கள்! என்ன "குடி" மகன் களுக்கு ஏற்ற ஊர்! தடுக்கி விழுந்தால் ஒரு மதுபானக் கடையின் முன்புதான் கண்டிப்பக விழுவோம்! அந்த அளவுக்கு மதுபானக் கடைகள்!
நீக்குமிக்க நன்றி சார்! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும், பாராட்டிற்கும்!
தலைப்பு வித்தியாசமானது.
பதிலளிநீக்குதமிழ்நாடு-பாண்டிச்சேரி எல்லையில் உருவாகும் குழப்பங்களைக் குழப்பாமல் மிகவும் சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள்.
மிக்க நன்றி! தங்கள் பாராட்டிற்கும், கருத்திற்கும்! எல்லையில் ஏற்படும் குழப்பங்கல் பல! அதுவும் காரைக்கல், மாஹே, யானம் - காரைக்கால், தமிழ்நாட்டில், மாஹே கேரளாவில், யானம் ஆந்திராவில்.....யானம் என்பது மிக மிகச் சிறிய பகுதி! அங்கும் இது போன்று இரண்டு கார்டுகள் வைத்துக் கொண்டு மக்கள் பல சலுகைகளை பெற்று வருகின்றனர்! அதைப் பற்றி ஒரு இடுகை உண்டு!
நீக்குமிக்க நன்றி!
தமிழ் நாட்டு + பாண்டிச்சேரி எல்லை - தகவல்கள் சுவாரஸ்யமாக உள்ளது...
பதிலளிநீக்குஆம் DD! இன்னும் சில உள்ளன எப்படி மக்கள் இரு மானிலச் சலுகைகளையும் பெற்றுக் கொள்கின்றனர் என்று! ஆதாரங்களே உள்ளன என்றாலும், அவை இல்லாமலும் எழுத முடியும்....எழுதுவதாக உள்ளோம்!
நீக்குமிக்க நன்றி!
நேற்றே இந்தப் பதிவை Reader-ல் வாசித்தேன்... தளத்திற்கு வந்து பார்த்தால் இல்லை... ஏன்...? Editing...?
பதிலளிநீக்குஇரவுதான் வெளியிட வைத்திருந்தோம்! அதை அடித்துவிட்டு, காமெராவில் எடுத்த படங்களை ப்ளாகரில் போடும் போது பல பிரச்சினைகள் வந்தன! படங்களும், எழுத்துக்களும் மாறி மாறி ஓடத் தொடங்கின! மௌஸை எப்படிச் செய்தாலும், படங்களும், எழுத்துக்களும் ஒரு இடத்தில் வரிசை மாறாமல் பதிய மறுத்தன! சிறிது நேரத்தில், திடீரென்று பதிவேற்றம் ஆகியது! பின்னர் அதை திரும்பவும் revert to draft கொண்டுவந்து அந்தப் பதிவை நீக்கி விட்டு, system மூடிவிட்டு restart செய்து பதிவை இரவு வெளியிட்டோம்! அதன் பின்னர் எதுவும் ஆனதா என்று தெரியவில்லை!
நீக்குமிக்க நன்றி DD!
ஆச்சரியம் தான்.....
பதிலளிநீக்குஆம் நண்பரே! பாண்டிச்சேரி எல்லையில் பல ஆச்சரியங்கள் உள்ளன! மக்கள் இரு மாநிலங்களின் சலுகைகளையும் எந்தவிதக் குற்ற உணர்வும் இல்லாமல் அனுபவிக்கின்றனர்! கொஞ்சம் ஊழல்கள் கூடுதல்தான்!
நீக்குமிக்க நன்றி!
வணக்கம் ஐயா
பதிலளிநீக்குதங்களின் இந்த பதிவு என்னை ரொம்ப யோசிக்க வைத்தது. படித்ததும் மனதில் ஒட்டிக்கொள்ளும் ரகம். ஒரு பிரச்சனையை இவ்வளவு அழகாக வெளியிடும் முடியும் என்றும் கண்ட காட்சிகளையும் அதற்கான தரவுகளையும் சேகரித்த முனைப்பும் மிகவும் கவர்கிறது. சம்மந்தப்பட்டவர்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் நன்றாக இருக்கும். தங்கள் குறும்படம் பற்றிய செய்திகள் மகிழ்வளிக்கிறது ஐயா. பகிர்வுக்கு நன்றி.
தம்பி பாண்டியன் அவர்களுக்கு மிக்க நன்றி! தங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும்! பிரச்சினைகள் இன்னும் பல உள்ளன! பாண்டிச்சேரி மூன்று மாநிலங்களிலும் உள்ளதால்!
நீக்குமிக்க நன்றி!
மிக்க நன்றி!
பதிலளிநீக்குபாண்டிச்சேரி என்றாலே வித்தியாசமான அனுபவங்கள்தான்! ரங்கசாமி மக்கள் ஆதரவு பெற்றவர் என்பது புரிகிறது! பகிர்வுக்கு நன்றி! குறும்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ் அவர்களே! தங்கள் பின்னூட்டத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!
நீக்குதங்கள் பின்னூட்டத்தை வெளியிட சற்று தாமதமாகி விட்டது! த்யவு செய்து மன்னிக்கவும்! தொடர்கின்றோம்!
தமிழ் நாடு பாண்டிச்சோரி எல்லை சுவாரசியம்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
தங்கள் பின்னூட்டத்தை வெளியிட சற்று தாமதமாகி விட்டது! த்யவு செய்து மன்னிக்கவும்! தொடர்கின்றோம்!
நீக்குஎங்கள் பதிலும் தாமதமாகி விட்டது! மிக்க நன்றிகரந்தையாரே!
பதிலளிநீக்குமுப்படைத்தளபதிகள் விளம்பர பதாகை அருமை ஐயா.....
Killergee
www.killergee.blogspot.com
தங்கள் பின்னூட்டத்தை வெளியிட சற்று தாமதமாகி விட்டது! த்யவு செய்து மன்னிக்கவும்! தொடர்கின்றோம்!
நீக்குஎங்கள் பதிலும் தாமதமாகி விட்டது நண்பரே! மன்னிக்கவும்! மிக்க நன்றிதங்கள் கருத்திற்கு!
ஆகா பாண்டி தேர்தல் களத்தில் அத்துணைப் பரபரப்பையும் இதைவிட யாரும் துல்லியமாக படம்பிடித்திருக்க முடியாது..
பதிலளிநீக்குஅருமை அய்யா ..
http://www.malartharu.org/2013/05/3-3d-print-as-life-saver.html
த.ம 5
பதிலளிநீக்குதங்கள் பின்னூட்டத்தை வெளியிட சற்று தாமதமாகி விட்டது! த்யவு செய்து மன்னிக்கவும்! நண்பரே! இனி தொடர்கின்றோம்!
நீக்குஎங்கள் பதிலும் தாமதமாகி விட்டது நண்பரே! மன்னிக்கவும்! மிக்க நன்றிதங்கள் கருத்திற்கு!
நண்பர்களே நலமா?
பதிலளிநீக்குசெம காமெடி , அந்த வீட்டுக்காரர் எனக்கு ரெண்டு மாநிலத்தில் வீடுயிருக்குன்னு சொல்லிக்கலாம்ல, இல்லை எங்க வீடு தமிழ்நாட்டுல தொடங்கி பாண்டிச்சேரி வரை இருக்கும் னு பெருமை பேசாமல!! ஹா...ஹ...ஹா...
தங்கள் பின்னூட்டத்தை வெளியிட சற்று தாமதமாகி விட்டது! த்யவு செய்து மன்னிக்கவும்! சகோதரி....இனி தொடர்கின்றோம்!
நீக்குஎங்கள் பதிலும் தாமதமாகி விட்டது ! மன்னிக்கவும்!
நலம் சகோதரி! தாங்கள் நலமா? ஹாஹஹா தங்களு கருத்து செம நகைச்சுவை உணர்வுடன்....!!!!! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!
கட் அவுட் ல நம்மாளுங்கள அடிச்சுக்கவே முடியாது..! :)
பதிலளிநீக்குதங்கள் பின்னூட்டத்தை வெளியிட சற்று தாமதமாகி விட்டது! த்யவு செய்து மன்னிக்கவும்! நண்பரே! இனி தொடர்கின்றோம்!
நீக்குரொம்ப சரிங்க! போட்டி வைச்சா பன்னாட்டு அளவுல கூட இவங்கதான் முதல் பரிசு அள்ளுவாங்க! ஒலிம்பிக்ஸ் ல தங்கப் பதக்கம் வாங்கறாங்களொ இல்லையோ இதுல கண்டிப்பாக வாங்கிடுவாங்க ஆவி!
மிக்க நன்றி ஆவி!