கடந்த 6/5/2014 அன்று நம் அன்பிற்குரிய நண்பர் ராஜ சேகரன்
தன் வலைப்பதிவான நண்டு நொரண்டில் “ராமருடன் மோடி உரையாடியது சரியா?” என்று கொடுத்த ஒரு பதிவுக்குப் பின்னூட்டம்
இடச் சென்ற நாங்கள், பின்னூட்டம் பெரிதானதால் அதை ஒரு இடுகையாக்க வேண்டியதானது. அப்படி, உருப் பெற்றதுதான் இந்த இடுகை.
இவ்வுலகில் வென்றோர்கள் எக்காலமும்
வாழ்த்தப்படுவதும், வீழ்ந்தோர்கள் எக்காலமும் இகழ்த்தப்படுதலும் இயல்பே. அது போல் இராம, இராவண யுத்த்த்தில் வென்ற ராமன்
போற்றுதற்குறியவரே! சந்தேகமில்லை. அதற்காக அவர் செய்த தவறுகளைத், தவறல்ல என்று
சொல்லி அவரைப் போற்றிப் பாட வேண்டிய அவசியமில்லை.
அது போல வீழ்ந்த இராவணனைக் கோழையாகக், கயவனாகக் காண வேண்டிய அவசியமும்
இல்லை என்பதே எங்கள் தாழ்மையானக் கருத்து.
இராமர் வாலியை மறைந்திருந்து
கொன்று, உண்மையிலேயே தவறு செய்த சுக்ரீவனுக்கு உதவாமலிருந்தால்......அவரை ஆதர்ஷ
புருஷராக ஒத்துக் கொள்ளலாம்.
அதே போல், இலக்குமணனின் மேலிருந்த தன் விருப்பத்தை (!?) வெளிப்படுத்திய சூர்ப்பனகையின் மூக்கையும், முலையையும் அறுத்த இலக்குமணனை அதைச் செய்ய விடாமல் தடுத்திருந்தால் அல்லது அப்படிச் செய்தது தவறு என்று ஒப்புக் கொண்டிருந்தால்.....அவரைக் கண்டிப்பாக ஆதர்ஷ புருஷராக ஏற்றுக் கொள்ளலாம். இங்கு, ஒரு பெண் தன் விருப்பத்தை ஆணிடம் வெளிப்படுத்துவது தவறா? அதற்கான தண்டனை இதுவா?
ஏதோ ஒரு குடிமகன் சொன்னான் என்பதற்காக, ஒரு நல்ல ஆதர்ஷ அரசன் என்பவன் என்று சொல்லப்படும் ராமர், தன் மனைவி அப்படிப்பட்டவள் அல்ல என்பதை நாட்டிற்கு நிரூபித்து தன் ஆளுமையை நிரூபிக்காமல், கர்ப்பிணியான சீதையை சந்தேகித்துக் காட்டிற்கு அனுப்பாமல் இருந்திருந்தால்.....கண்டிப்பாக அவரை ஆதர்ஷ புருஷராக ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், அவர் அப்படியெல்லாம் செய்யாமல் போனது, அவர் மற்றவர்களுக்காகத் தன் கொள்கைகளைச் சிறிது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உள்ளவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. அப்படிப்பட்ட இராமரை எப்படி ஆதர்ஷ ப்ருஷர் என்று ஏற்றுக் கொள்வது?
அதே நேரத்தில், எத்தனைத் துன்பங்களையும், இன்னல்களையும் எதிர்கொள்ள வேண்டி வந்த போதும், பொய் சொல்லமாட்டேன் என்ற தன் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த ராஜா அரிச்சந்திரனை நாம் கண்டிப்பாக ஒரு ஆதர்ஷ புருஷனாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், தவிர்க்கப்பட வேண்டியிருந்த இத் தவறுகளைத் தவிர்க்காமல் தவறிழைத்த, இப்படிப்பட்ட இராமரை ஒரு ஆதர்ச புருஷர் என்று ஏற்றுக் கொள்ள ஏனோ இயலவில்லை.

மிகவும் சரியான பதிவு. கேடு கெட்ட ராமனையும், கண்ணனையும், இன்னும் பல சூத்திரதாரிகளையும் வணங்கியும் ஆதர்ஷ புருஷராக கொண்டாடும் இந்திய சமூகமே. ஏன் கடைசி வரை உண்மைக்காக மட்டும் வாழ்ந்ததாக கூறப்படும் ஹரிச்சந்திரனையோ, கர்ணனையோ கொண்டாடுவதில்லை என்பது தான் புரியாத புதிர். ராமனை வைத்து அரசியல் செய்யும் அயோக்கியருக்கும், மக்களை ஏமாற்றி பிடுங்கித் தின்னும் சாமிமார்களுக்கும் உண்மையின் ஒளிவிளக்கான ஹரிச்சந்திரனையோ, தியாகத்தின் பிறப்பான கர்ணனையோ கொண்டாட மனம் ஒப்புவதில்லை. அல்லது நளனையோ, தமயந்தியையோ போற்ற வாய் வராதது ஏனோ?
பதிலளிநீக்குநம்மைப் போன்றவர்கள் போற்றுதற்குரியவர்களைப் போற்றத் தொடங்குவோம்! நண்பரே! உண்மைகள் உறங்காதுதானே! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி
நீக்குஒப்பிட்டவிதம் சிறப்பு
பதிலளிநீக்குபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 1
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்! தங்கள் கருத்திற்கு!
நீக்குஇராமனைச் சொல்லி ஓட்டு அரசியல் நடத்தலாம்,
பதிலளிநீக்குஹரிச் சந்திரனைச் சொல்லி ஓட்டுக் கேட்க முடியாதே
தம 2
பதிலளிநீக்குஆமாம் அதுவும் சரிதான்! நல்ல விளக்கம்! மிக்க நன்றி நண்பரே!
நீக்குயாராக இருந்தாலும் செய்த தவறுக்கு தண்டனை உண்டு - மனச்சாட்சியிடமிருந்து...
பதிலளிநீக்குமிக்க நன்றி DD! தங்கள் கருத்து மிகச் சரியே!
நீக்கு//இராமரை ஆதர்ஷ ப்ருஷர் //
பதிலளிநீக்குஉண்மை விரைவில்.
தாங்கள் கூறப்போகும் உண்மையை ஆவலுடன் எதிர்ப்பார்கிறோம் நண்பரே!
நீக்குஅருமையான விளக்கங்கள் !ராமரை தலையில் வைத்து கொண்டாடுபவர்கள் சிந்திப்பார்களா ?
பதிலளிநீக்குத ம 5
நண்பரே! மிக்க நன்றி!
நீக்குகற்பனைகளை கடவுளாக்கி அதிலேயும் ஒரு கண்மூடித்தனமாக இருப்பது வேதனைக்குரியது.நல்லவேளை வடக்கை விட இங்கு குறைவுதான் இந்த ஆதர்ச காய்ச்சல்.
பதிலளிநீக்கு//வடக்கை விட இங்கு குறைவுதான் இந்த ஆதர்ச காய்ச்சல்//. தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!
நீக்குசதீஷ், கற்பனை என்று கூறும் வாதம் தவறு.. அப்படி ஒரு மன்னன் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றனவே? அவரை கடவுளாய், ஆதர்ஷ புருஷனாய் வழிபடும் வழக்கம் மட்டுமே கேள்விக் குறியானது என்பது என் தாழ்மையான கருத்து..
நீக்குஆவி தங்கள் பதில் சரியானதே! முன்மொழிகின்றோம்!
நீக்குதங்கள் கேள்விகள் நியாயமானதே! நன்றி நண்பரே!
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!
நீக்குappatiye potruthalukku uriyavar allaa mattume endrum sollivida vendiyathu thaane
பதிலளிநீக்குமாசியன்னா அவர்களே!! தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!
நீக்குநல்ல விளக்கம்.....
பதிலளிநீக்குமிக்க நன்றி! நண்பரே!
நீக்குமிக்க நன்றி! நண்பரே!
நீக்குவெங்கட் நாகராஜ் சார் உங்களுக்கு க்ளோஸ் பிரெண்டோ? ரெண்டு முறை மிக்க நன்றி நண்பரே ன்னு போட்டிருக்கீங்க? ஹஹஹா..
நீக்குஹாஹா ஆவி! இந்த ப்ளாகர், கொடுத்ததை ஜெராக்ஸ் போட்டுவிட்டது என்று நினைக்கின்றோம்!
நீக்குவென்றோர்கள் எக்காலமும் வாழ்த்தப்படுவதும், வீழ்ந்தோர்கள் எக்காலமும் இகழ்த்தப்படுதலும் இயல்பே.//ஆம் மனித இயல்பே
பதிலளிநீக்குதங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே!
நீக்குஉங்கள் சட்டையின் வண்ணத்தை வைத்து நீங்கள் ஒரு பக்தி பழம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்..
பதிலளிநீக்குநீங்களும் நம்ம பக்கம் தானா ...
ராமாயணம் மகாபாராதம் எல்லாம் ஒரு குலம் வாழ செய்யப்பட்ட ஏற்பாடுகளே
இறை நம்பிக்கை உண்டு. ஆனால் மூட நம்பிக்கைகள் இல்ல அதாவது இந்தப் பதிவில் குறிப்பிட்டது போல்....ஆவியின் கருத்தை இங்கு முன்மொழிகின்றோம்!
நீக்குநண்பரே! மிக்க நன்றி!
வணக்கம்
பதிலளிநீக்குஎடுத்துக்காட்டுக்கள் மூலம் பதிவை எழுதியுள்ளீர்கள்.. கழுதைக்கு திருமணம் செய்து வாழ்கிற காலத்தில் இதையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு சமுதாயம் இருக்கத்தான் செய்யுது...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என்ன செய்ய தம்பி! உண்மை எது, கதை எது என்று மக்கள் ஏற்க வேண்டுமே!
நீக்குஇன்னாபா... இத்து... அநியாயமா கீது... அப்ப ஆதர்சு அட்டை அவுருக்கு கெடயாதா...?
பதிலளிநீக்குஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
//அப்ப ஆதர்சு அட்டை அவுருக்கு கெடயாதா...?//
நீக்குஹஹஹ்ஹா..
ஹாஹா நைனா கேட்டீங்களே ஒரு கேள்வி! நன்றி!
நீக்குஎதிர்காலத்தில் இலக்கியங்களும் மிகப் பெரிய கற்பனையை உருவாக்கி மக்களை சீரழிக்கும் என்று பிளாட்டோ சொன்னது இதனால்தான்....
பதிலளிநீக்குபரிதி சார்! இலக்கியங்கள் வரட்டும்! கதைகள் உண்மையாகவே இருக்கட்டும்! ஆனால், இது போன்ற அரசர்கள், புருஷர்களை கொண்டாடி வழிபடுவதுதான் இங்கே கேள்வியாகின்றது!
நீக்குநான் பல பேரிடம் சொல்லிக் கொண்டிருந்த விஷயங்களை, (சொல்லிய இடங்களிலெல்லாம் அடிவாங்கித் திரும்பி வந்த அனுபவமும் உண்டு) அடி பிறழாமல் அப்படியே தொகுத்துச் சொல்லிவிட்டீர்கள். அருமை..!
பதிலளிநீக்குஆவி! எங்கள் கருத்துடன் இயைந்ததற்கு மிக்க நன்றி! அடி பலமோ!?
நீக்குகடவுள் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து இன்னும் எழுதி முடித்தபாடில்லை. சீக்கிரமே பதிவிடுகின்றோம்!
ராமாயணம் , மஹாபாரதம் எல்லாம் நல்ல கற்பனைகளின் விளைவே, அவர்களுடைய குணாதிசயங்கள் அதை இயற்றியவர்களின் எண்ணங்களைப் பொருத்தது. சில பாத்திரங்கள் நமக்குப் பிடிக்கலாம் , பிடிக்காமல் போகலாம். மேலும் கற்பனைக் கதாபாத்திரங்களுக்கு தெய்வீக சாயம் பூசி கொண்டாடுபவர்களே நம் நாட்டில் அதிகம். ஒரு கதாபாத்திரத்தை விமரிசிக்க நல்லவ்ராகவும் அல்லாதவராகவும் எல்லோருக்கும் உரிமை உண்டு. தெய்வீக சாயம் பூசப்பட்ட கதாபாத்திரங்களை விமரிசிப்பதில் தெய்வக் குற்றம் கூடக் காண முயலலாம். ராமன் எப்படி இருந்தாலும் அவன் ஒரு கதாபாத்திரமே என்று எண்ணுபவர் நம்மில் எத்தனைபேர் உண்டு,?
பதிலளிநீக்குமிக அழகான நேர்த்தியான விளக்கம் ஐயா! மிக்க நன்றி!
நீக்கு