ஞாயிறு, 4 மே, 2014

முல்லைப் பெரியார் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது.....!.....?




முல்லைப் பெரியார் பிரச்சினையை மிகவும் நேர்த்தியாக, சமயோசிதமாக,  இலைக்கும், முள்ளுக்கும் சேதமில்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த திரு.  ஊத்துக்குளி பரமசிவம் M.L.A. அவர்களும், கேரளாவைச் சேர்ந்த திரு. கொச்சுமலையில் குஞ்சுகுஞ்சு M.L.A. அவர்களும், தங்களிடமிருந்த ஒரு சிறப்பான திட்டத்தின்படி தீர்வு கண்டுவிட்டார்கள்  என்ற செய்தி கடந்த இரு தினங்களாக பதிவர்கள் உலகில் பரவலாகப்  பேசப்படுகிறது.


 இச்செய்தி காட்டுத்தீ போல் படர்ந்து கேரளத்திலும், தமிழகத்திலும் உள்ளவர்களுக்கு வீணான குழப்பத்தை உண்டாக்கக்  கூடாது என்பதே எங்களின் இப்பதிவின் நோக்கம்.

முகநூல்களிலும் இவ்விருவரது  நிழற்படங்களும், அவர்களைப் பற்றிய பலவிதமான செய்திகளும்  வந்ததாகத் தெரிகிறது.  எனவே, அதை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம்.  ஊத்துக்குளி பரமசிவம் M.L.A. வைக் கொஞ்சம் உற்றுக் கவனித்தால் உங்களுக்கே புரியும் அதில் ஒளிந்திருப்பது வேறு யாருமல்ல, நம் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர் குடந்தையூர் சரவணன் என்பது.  அது போல் கொச்சு மலையில் குஞ்சுகுஞ்சு என்பவரையும் உற்றுப் பார்த்து கேரளத்தில் உள்ளவர்களில் சிலர், அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. பாலகிருஷ்ணன் எழுவன்தலை என்பதையும் உற்றுப் பார்த்துத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

          இனிமேலும் உங்கள் பொறுமையைச் சோதிக்க தைரியமில்லை.....  ஆம்!  நண்பர்களே!  படப்பிடிப்பிற்கிடையே எடுக்கப்பட்ட நிழற்படங்கள்தான் இவையெல்லாம்.




  நம்  பதிவர்களில் குடந்தையூரார் மட்டுமல்ல,  இமயத்தலைவன் திரு. இராயசெல்லப்பா அவர்களும், தன்  நலம் பாரா பொதுநல விரும்பி திரு, திண்டுக்கல் தனபாலன் அவர்களும் (படப்பிடிப்பில் கலந்து கொள்ள இரு இரவுகள் உறக்கத்தைத தியாகம் செயது, பயணம் செய்து), ஆவிப்பா பாடி நம் உள்ளத்தைக் கவர்ந்த திரு கோவை ஆவி அவர்களும், தங்கள் ஏராளமான அலுவல்களுக்கிடையே, பள்ளி மாணவர்களுக்காக, லாப நோக்கின்றி,  நாங்கள் தமிழிலும், மலையாளத்திலும் உருவாக்கும் "புரோட்டா  கார்த்திக்" எனும் குறும்படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்க  வந்த போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள்தான் அவை.



இந்த நிழற்படங்களை வைத்து திரித்த கதைகள்தான்  இப்படிப்பட்ட குழப்பங்களுக்குக் காரணமாகியிருக்கிறது.



      உங்கள் வாழ்த்துக்கள் மற்றும் நல்லாசியுடன் உருவாக்கப்பட்ட  இக் குறும்படத்தைக் காணத் துடிக்கும் நீங்கள் ஓரிரு மாதங்கள் காத்திருக்கத்தான் வேண்டும். (துடிக்கவேல்லாம் இல்ல.....அந்தக் கண்ட்றாவிய பாத்துத் தொலைக்கணுமேங்கற கடுப்பில இல்ல இருக்கோ ம் நாங்க ..!.. )




 ஜூன், ஜூலை மாதங்களில் "புரோட்டாக் கார்த்திக்"கின் "Preview Show" நடத்தவிருக்கிறோம். (தமிழகத்தில் Preview Show நடத்த பள்ளிகள் தீர்மானிக்கப்படவில்லை.  வலைப்பூவில் இருக்கும் ஆசிரிய நண்பர்களே!, உங்கள் பள்ளியில்   Preview Show நடத்தி, குறும்படத்தைக் கட்டணமின்றிக்  காண்பிக்க, உங்கள் விருப்பத்துடன், உங்கள் பள்ளியின் அனுமதியும் கிடைக்கப் பெற்றால், நாங்கள் குறும்படத்துடன் உங்கள் பள்ளிக்கு வரத் தயாராக இருக்கிறோம்......) Preview Show க்குப் பின் அககுறும்படத்தை எளிதாக எங்கள் வலைத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யலாம், அல்லது  Preview Show நடத்தப்படும் பள்ளியிலிருந்து அதன் குறுந்தகடை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.  

         

53 கருத்துகள்:

  1. அருமையான முயற்சி இக் குறும்படம் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை ஈட்ட
    வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன் மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்கள் மனமார்ந்த வாழ்த்திற்கு ! தங்கள் வலைப்பூவிற்கு வந்து வாசித்துக் கருத்திட முடியாமல் ஆகிவிட்டது. குறும்பட வேலைப் பளுவினால். மன்னிக்கவும் ! சீகிரமே வருகிறோம்!

      நீக்கு
  2. குறும் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தையாரே தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  3. குடந்தை சரவணன் அவர்களை உண்மையாகவே அடையாளம் காண இயலவில்லை
    வலையுலக நடிகர்களுக்கு வாழ்த்துக்கள்
    தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! சரிதான் நண்பரே ! குடந்தையூறார் அன்று நிஜமாகவே M.L.A. வாக தன கதாபாத்திரத்தோடு ஒன்றி விட்டார்! மற்ற நண்பர்களும் மிக நேர்த்தியாக நடித்தார்கள். இந்த அனுபவமே எங்களுக்கு மிக மகிழ்ச்சியைத் தந்தது என்று சொல்ல வேண்டும். வலையுலக நண்பர்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு மிக எளிதாக இருந்தது. தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி !!!

      நீக்கு
  4. இது தான் ஆரம்பம்... இனி மேலும் அசத்துவோம்...

    குறும்படம் மாபெரும் வெற்றி பெறும்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. DD கண்டிப்பாக அசத்துவோம்!

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! DD!

      நீக்கு
  5. தவிர்க்க இயலாத காரணங்களால் வர இயலவில்லை. குறும்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் சார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை ஸ்கூல் பையன் சரவணன்! அடுத்த வருடம் இருக்கிறது. மட்டுமல்ல ஒரு ப்ரிவியூ வேறு இருக்கும். அதற்கு வந்து சிறப்பித்துத் தரலாமே!

      மிக்க நன்றி! நண்பரே! தங்கள் வாழ்த்திற்கு.!!!

      நீக்கு
  6. பெயரில்லா4 மே, 2014 அன்று 9:21 AM

    வணக்கம்

    நல்ல முயற்சி... குறும்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் இத்தோடு நிக்காமல் தொடருங்கள் பயனத்தை...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரூபன் தம்பி மிக்க நன்றி தங்கள் வாழ்த்திற்கு!

      நீக்கு
  7. நேற்றுதான் உங்கள் குறும்படம் பற்றி சகோ .DD அவர்களிடம் கேட்டு அறிந்தேன் ...இப்பவே பசிக்க ஆரம்பித்து விட்டது ,புரோட்டாவுடன் சீக்கிரம் கார்த்திக்கைச் வரச் சொல்லுங்க !
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக பகவான் ஜி ! கார்த்திக் ப்ரெஷ் பரோட்டாவுடன் வருவார்! பரோட்டா செய்ய ஒரு பள்ளி அவசியம், தமிழ்நாட்டில் ! அதற்கான முயற்சிகள் ஆரம்பித்துவிட்டது! வெற்றி அடைந்தால் கண்டிப்ப்பாகச் சுட சுட பரோட்டா!

      மிக்க நன்றி!

      நீக்கு
  8. அட நம்ம சரவணன் சாரா ? கண்டுபுடிக்கவே முடியல.
    குறும்படம் காணக் காத்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  9. சரவணன் சாரை எங்களுக்கே அடையாளம் தெரியவில்லை சார் அன்று! எல்லோருடைய ஒத்துழைப்புடன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது..

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  10. நான் தவறவிட்டுட்டேன்... நிஜமாகவே அறிய வாய்ப்பு.. ஆவி கூறினார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை சீனு! உங்களை மிகவும் எதிர்பார்த்தோம் என்பது உண்மையே! அடுத்த முறை தங்களையும் உட்படுத்திவிட்டால் போச்சு! என்றாலும் இந்த குறும்படத்தின் ஒரு ப்ரிவியூ காட்சி ஒன்று தமிழ் நாட்டில் ஏதாவது ஒரு பள்ளியில் ஏற்பாடு செய்ய முனைகின்றோம். அதற்கு நம் பதிவர்களுக்கு அழைப்பு உண்டு. தாங்கள் கண்டிப்பாக அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம். எப்படியும் ஐந்த நிகழ்வு ஜூலை ஆகஸ்ட் மாதம் ஆகிவிடும்.

      ஆவி, ஆவியின் பெரியம்மா பேரன் விக்னேஷ் ராம், குடந்தையுரார், திரு இராய செல்லப்பா சார், DD எல்லோரும் கலந்து கலக்கியது மிகவும் சந்தோஷமாக இருந்தது எங்களுக்கு. ஒரே குடும்பம் போன்ற ஒரு உணர்வு. வாத்தியார் வர முடியாமல் போனது கொஞ்சம் வருத்தம்தான் இருந்தாலும் அவருக்கு மிக முக்கியமான வேலை வந்து விட்டதால் வர இயலவில்லை என்பதால் புரிந்து கொள்ள முடிந்தது.

      மிக்க நன்றி! சீனு!

      நீக்கு
  11. முகநூலில் இந்த கலாட்டாவை ரசித்தேன்! நல்ல முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சுரேஷ்! மிகவும் கலக்கினார்கள்! ஒரே போட்டோ ஷூட்தான் ! மிகவும் ரசித்தோம்! வித்தியாசமான அனுபவம் எங்களுக்கும்!

      மிக்க நன்றி!

      நீக்கு
  12. பெயரில்லா4 மே, 2014 அன்று 5:48 PM

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக! வருக! தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி! "ஆறுமுக சாமியே" வந்து வாழ்த்தும் போது எங்களுக்கு என்ன கவலை! மிக்க நன்றி வாழ்த்துக்களுக்கு!

      நீக்கு
  13. குறும்பட முயற்சிக்கு வாழ்த்துகள் சாரே......

    படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி திரு . வெங்கட் நாகராஜ் அவர்களே ! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .".பரவாயில்லை", என்றேனும் உங்களைப்போன்ற நண்பர்கள் சொல்லவேண்டும் என்ற பிரார்த்தனைதான் .விரைவில் உங்கள் பொன்னான நேரத்திலிருந்து அரை மணி நேரத்தை அபகரிக்கத்தான் போகிறோம் ,நண்பரே .....!

      நீக்கு
  14. ஆஹ இது நல்ல விடயமாச்சே. மிக்க மகிழ்ச்சி அனைவரையும் அடையாளம் தெரியவில்லை சகோதரர் DD அவர்களையும் இராய செல்லப்பா அவர்களையும் தங்களையும் தான் இனம் கண்டு கொண்டேன். இது பூரண வெற்றியை அளிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். ஆவலோடு காத்திருக்கிறேன்.குறும்படம் காண்பதற்கு. நன்றி வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! நாங்களும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றோம்! உண்ணுங்கள் எல்லோரையும் அழைத்து குறும்படத்தைக் காண்பிக்கவும் தங்கள் கருத்துக்களைக் கேட்கவும்!

      தங்கள் வாஷ்த்துக்களுக்கும், ஆர்வத்திற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  15. மிக்க மகிழ்வு தரும் செய்தி
    ஆவலுடன் காத்திருக்கிறோம்
    வாழ்த்துக்களுடன்....

    பதிலளிநீக்கு
  16. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கு, ஓட்டிற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரமணி சார். நாங்களும் ஆவலுடன் காத்திருக்கின்றோம் உங்கள் எல்லோருக்கும் குறும்படத்தைக் காண்பித்து தங்கள் கருத்துக்களைப் பெற.

      நீக்கு
  17. வாய்ப்பைத் தவறவிட்ட மானவன்போல் நானும் தவிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் கவியாழி! கவலை வேண்டாம். இன்னும் இருக்கின்றதே! அடுத்த வருடம் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு திருவிழாவாகவே கொண்டாடி விடலாம்!

      மிக்க நன்றி!

      நீக்கு
  18. நல்ல முயற்சி. வெற்றி பெற எங்கள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர் ஸ்ரீராம்!

      நீக்கு
  19. வணக்கம் ஐயா
    திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பதிவு மூலம் குறும்படத் தகவல் அறிந்தேன். குறும்படம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். தங்களின் பாராட்டத்தக்க முயற்சி கண்டு மகிழ்வாக இருக்கிறது. அனைவரையும் போல் குறும்படம் பார்க்க ஆவலாக உள்ளேன். தங்கள் முயற்சிக்கும் சீரிய பணிக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் பாண்டியன்! தங்கள் வாழ்த்துக்களுக்கும், ஆர்வத்திற்கும் மிக்க நன்றி! தங்கள் வருகைக்கும் சேர்த்து!

      நீக்கு
  20. முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்! ஆவலுடன் காத்திருக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  21. பதில்கள்
    1. சேஷாத்திரி அவர்களே தங்கள் வாழ்த்துக்களுக்கும், ஆர்வத்திற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  22. படத்தை 3 டி லே வெளியிட போகிறீர்களா ?

    பட உரிமைகள் யாரிடம் ?

    சென்சார் சர்டிபிகேட் வாங்கியாச்சா ?

    கோவை ஆவி தான் தயாரிப்பாளரா ?

    அப்ப நஸ்ரியா மாதிரி யாராச்சும் ?

    காமெடி ட்ராக் யாரு ?

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாத்தா.........................!!!!!!!! உங்கள் நகைச்சுவை, நக்கல் ஹாஅஹாஹா.....தாத்தா நஸ்ரியாவுக்குத்தான் கல்யாணம் ஆகிவிட்டதே! கால்ஷீட் பகத் ஃபாசில்லுகுப் போனபின்.....எப்படிக் கிடைக்கும்? தாத்தா படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கேட்க ஆவலாக இருக்கின்றோம்! தாத்தா....

      மிக்க நன்றி!

      நீக்கு
  23. நான் தான் ரொம்ப லேட்டா வர்றேனா?

    புதிய அனுபவம். நடிக்க வேண்டும் என்ற ஆவல் சிறு வயது முதல் இருந்த போதும், இந்த குறும்படம் வாயிலாகவே அது நிறைவேறியது.. மிக்க நன்றி துளசிதரன் ஸார்.. மேலும் உங்க நடிப்பு மற்றும் இயக்கம் வியக்க வைத்தது. உங்களை மேக்கப்புடன் பார்த்த போது ஜெகதி ஸ்ரீகுமார் போல் இருந்தது என்று கூறினேன். இயக்கம் போது ஒரு மணிரத்னம் வெளிப்பட்டதை கூற மறந்துவிட்டேன்..:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவி! லேட்டா வந்தாலும் இப்படி லேட்டஸ்டா கமென்ட் கொடுத்து எங்கேயோ தூக்கி வைத்துவிட்டீர்களே! மணிரத்தினம்?! ஐயோ ஆவி! இன்னும் பல உயரங்கள் எட்ட வேண்டும்! இது தங்களின் பார்வை!....

      தாங்கள் வந்திருந்து நடித்துக் கொடுத்ததற்கு நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்! இனியும் நாம் நிறைய செய்யலாம் நண்பரே! இப்போது ஒரு நல்ல குழுவே அமைந்து விட்டதே! எல்லோரும் சேர்ந்தால் நாம் நிறைய சாதிக்க முடியும்!

      மிக்க நன்றி!

      நீக்கு
  24. முயற்சி மாபெரும் வெற்றியடைய பட குழுவினர் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! கிங்க் ராஜ்! தங்கள் வாழ்த்திற்கு! எங்கள் படக் குழு அனைவரிடமிருந்தும் நின்றி உரைக்கின்றோம்!

      நீக்கு
  25. DD அவர்களின் வலைப்பூவில் கண்டு வந்தேன். தங்களின் குறும்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். முயற்சி தொடரட்டும். குறும்படம் காண ஆவலாக உள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! உமையாள்! தங்கள் வாழ்த்திற்கு! நாங்களும் மிகுந்த ஆவலாக உள்ளோம் தங்கள் கருத்துக்களைப் பெறுவதற்கு!

      நீக்கு
  26. குறும் படத்தைக் காண்பிக்க என்னென்ன தேவை , என்னென்ன நிபந்தனைகளென்று தெரியப் படுத்தினால் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படத்தைக் காண்பிக்க Over head Projector, Screen, Electricity (without power cut),....ஒரு நல்ல ஹால். பள்ளிக்கூடம். ஏனென்றால் இது பள்ளி மாணவர்களுக்காக எடுப்பதால். வழக்கமாக இதைப் பள்ளி ஒன்றில் காண்பிக்க இதை ஒரு சிறு விழாவாக அதாவது, தலைமை தாங்குபவர், வரவேற்புரை, beneficiaries, felicitation, நன்றி உரை.....பின் படம் காட்டும் முன்னும், காண்பித்த பின்னும் பள்ளி மாணவ, மாணவிகளை வைத்து, (10த், 11த், 12த் மட்டுமே) வைத்து, group discussion, diary entry, interviews, interaction session....இப்படி ,,,அதாவது, வரவேற்புரை, நன்றி உரை எல்லாம் மாணவ மாணவிகள்தான்.....இதை எல்லாம் ஷூட் செய்து மொத படமும் 1.1/2 நமி நேரம் வருவது போல் காட்டுவது வழக்கும்.

      இதுவரை பள்ளிகளில் மட்டுமே செய்துள்ளோம்....ஏதாவது க்ளபுகள் கிடைத்தாலும், பார்வையாளர்கள் பெரியவர்கள் இருந்தாலும் எங்களுக்கு ஓகேதான்........

      முதலில் இந்தப் படம் ரெடியாவதற்கு ஜூலை ஆகஸ்ட் ஆகலாம்...தமிழில்......அதனால் அதற்கு அப்புறமே! அதற்கு முன் எங்கள் முந்தைய படமான parole காண்பிக்க தயாராக இருக்கின்றோம்....தாங்கள் பரோல் பார்க்க வேண்டி இந்த லிங்கைக் கொடுத்துள்ளோம்....எங்கள் இடுகையாகவும் பார்க்கலாம்....youtube லிங்கைப் பார்த்தால் தங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும் எப்படி ப்ரிவ்யூ உள்ளது என்று. pre and post activities...

      https://www.youtube.com/watch?v=4E50nBSZamE

      http://thillaiakathuchronicles.blogspot.com/2013/12/Parole-Shortfilm.html#links எங்கள் இடுகை

      இதில் சென்று பாருங்கள் ஐயா! இதுவரை நாங்கள் எடுத்தவை ஆங்கிலத்தில் ஆங்கிலம், மலையாளம் சப்டைட்டில்களுடன். சென்ற முறை எடுக்கப்பட்டது (Carpenter the Great)தமிழிலும் சப்டைட்டில் உண்டு. அது இன்னும் குழந்தைகள் திரைப்பட விழாவில் திரையிடப்படாததால் வலைத்தளத்தில் தரவில்லை. இனிதான் போட்டியிடப் போகின்றது.

      இந்த முறை எடுக்கப்பட்ட குரும்படம் ஆங்கிலத்தில் இல்லை. அது மலையாளத்திலும்,தமிழிலும். தமிழில் எடுக்கப்பட்டது தமிழ் நாட்டில் ப்ரிவ்யூ ஷோ. மலையாளத்தில் எடுக்கப்பட்டது பாலக்காட்டில் இல்லையென்றால் நிலம்பூரில் பள்ளி ஒன்றில் நடத்தப்படும்.

      தங்களுக்கு வேறு ஏதேனும் இதைப் பற்றிய தகவல்கள் வேண்டுமென்றால்

      துளசிதரன் 09447535880

      கீதா 9940094630 இந்த அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் ஐயா.

      மிக்க ந்ன்றி அயா! தங்கள் ஆர்வத்திற்கும் எங்களுக்கு அளிக்கும் ஊக்கத்திற்கும்!.

      நீக்கு
  27. குறும்படம் வெற்றியடைய எமது வாழ்த்துக்கள் தோழரே,,,,
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தங்கள் வாழ்த்துக்களுக்கு கில்லர் கீ நண்பரே! தங்கள் முதல் வருகைக்கும் நன்றி!

      நீக்கு
  28. குறும்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    அப்புறம் செல் போனிலேயே குறும் படம்
    எடுக்கலாம் என்கிறார்களே எப்படி?

    பதிலளிநீக்கு