ஞாயிறு, 23 மார்ச், 2014

தேர்தல் பணியினிடையே கணினியில் திரைப்படம் பார்த்ததால் வேலை போன அரசு ஊழியர் மனம் உடைந்து தற்கொலை



முளையிலேயேக் கிள்ளி எறியப்படாத தன்மானம் மற்றும் கௌரவப் பிரச்சினைகள் வளர்ந்து உயிரையேக் கிள்ளி எறியும் திறன் பெறுகின்றன.  எர்ணாகுளம் அருகே உள்ள கும்பளங்கியிலுள்ள கிராம அலுவலகத்தில், தேர்தல் நெருங்கியதால், ஞாயிற்றுக்கிழமை அன்றும்(09/03/2014) ஊழியர்கள், வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  எப்போதாவது ஓரிருவர் வந்ததாலோ, மாலை நேரத்தில் எவரும் வர வாய்ப்பில்லை என்று முடிவு செய்ததாலோ என்னவோ, அலுவலகத்தில் இருந்தவர்கள் கணினியில் ஒரு திரைப்படம் காணத் தொடங்கினார்கள்! எதிர்பாராமல் திடீரென பரிசோதனைக்காக அங்கு வந்த ஃபோர்ட் கொச்சியின், மாவட்ட துணை ஆட்சியாளர், ஸ்வாகத் பண்டாரி ரண்வீர் சந்த், ஊழியர்களின் பொறுப்பற்ற இச்செயலைக் கண்டு கோபம் கொண்டு, மாவட்ட ஆட்சி அலுவலரிடம் தெரிவிக்க, தேர்தல் நேரமானதால், உடனே மின்னல் நடவடிக்கை எடுக்கப்பட்டும் விட்டது! கிராம அதிகாரியும், கிராம சேவகர், கே.ஜி. கிருஷ்ணனும் (53) அன்று இரவே தற்காலப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

   தேர்தல் நேரங்களில், தேர்தல் வேலைகள் பிரச்சினையின்றி நடக்க, போலீசார்கள் கூட்டத்தைக் கலைக்க ஆகாயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரிக்கை விடுவது போல், யாரையேனும் ஒருவரைத் தற்காலிக வேலை நீக்கம் செய்து இப்படி எச்சரிப்பது வழக்கமே! அது போல் ஒன்றுதான் இதுவும்!  ஆனால், தொலைக்காட்சிச். சானல்கள், தேர்தல் செய்திகளை வித்தியாசமாகக் கொடுக்க முயன்று கொண்டிருக்கும் வேளையில், அவர்களுக்குக் கிடைத்த அல்வாத் துண்டுதான் இந்த தற்காலிக வேலை நீக்குதல் விவாகாரம்.  எனவே, மாவட்டத் துணை ஆட்சியாளர், மற்றும் மாவட்ட ஆட்சியாளரின் அறிக்கைகளுடன் தற்காலிக வேலை நீக்கம் செய்யபட்ட, இரு அரசு ஊழியர்களின் புகைப்படங்களையும், சம்பந்தப்பட்ட சாட்சிகளையும், எல்லாச் சானல்களும் இடையிடையே காண்பித்து அன்றைய தினத்தைக் கொண்டாடிவிட்டார்கள்! 

திங்கட் கிழமை, மனிதர்கள் முகத்தில் எப்படி விழிப்பது என்ற தன்மானப் பிரச்சினை கிருஷ்ணன் மனதில் பெரிதாகிக் கொண்டிருந்திருக்க வேண்டும். இந்தப் பிரச்சினை, திங்கட் கிழமை நடக்கவிருந்த, +1 படிக்கும் தன் இளைய மகளின் கணக்குத் தேர்வைப் பற்றியோ, செவ்வாய் கிழமை முதல் B.Com.  படிக்கும் தன் மூத்த மகளுக்கு நடக்கவிருக்கும் தேர்வுகளைப் பற்றியோக் கூடச் சிந்திக்க அவரை அனுமதிக்கவில்லை! தன் மரணம் அந்தக் குடும்பத்திற்கு ஏற்படுத்தும் ஈடுசெய்ய முடியாத சேதத்தைப் பற்றியும் அவர் சிந்திக்கவில்லை! அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, தன் மரணத்தால் மட்டுமே முடியும் என முடிவு செய்த அவர், விடியும் முன், தன் அறையில், கயிற்றில் தொங்கி நிற்கும் பிணமாய் மாறிவிட்டார். 

சஹாரா குழுமத்தின் அதிபர் சுப்ரடா ராய்









கோடிக் கணக்கான ரூபாய், பொது மக்களிடமிருந்து வசூலித்து திரும்பக் கொடுக்காததால், மோசடிக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட சஹாரா குழுமத்தின் அதிபர், சுப்ரடா ராய், நீதி மன்றத்திற்குக் கொண்டு செல்லபடும் போது அவர் முகத்தில் மை வீசப்பட, அதைத் துடைத்துப் போன அவர் தற்கொலை முயற்சி ஏதும் செய்ததாகத் தெரியவில்லை! பேட்டியின் போது, கன்னத்தில் அறைவாங்கிய சரத்பவாரும் தற்கொலை முயற்சி செய்யவில்லை! அவர்களுக்கெல்லாம், அந்த எதிர்பாராத சம்பவங்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதை அவர்கள் உணர்ந்து,(செய்தது தவறுதான் என்றாலும்) அதற்கேற்றபடித், தங்கள் சிந்தனைகளை அதன் போக்கில் விடாமல் நேர்முகப்படுத்தி, செயல்பட்டதால் தானே அவர்கள் நம் மத்தியில் உயிர் வாழ்கின்றார்கள்!  இவ்வுலகில் எல்லோரது வாழ்விலும் இப்படிப்பட்ட அவமானப்பட வேண்டிய சில சந்தர்ப்பங்கள் ஏற்படத்தான் செய்யும். அதை எல்லாம் காலத்தின் கைகளில் ஏற்பித்து பொறுமையுடன் காத்திருந்தவர்கள் இப்புவியில் வாழ்வைத் தொடர்கின்றார்கள்! “பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற முதுமொழிக்கிணங்க?! 

ராபர்ட் க்ளைவ்


ஒரு சில நேரங்களில், நீண்ட போராட்டம், போராடுபவர்களை மிகவும் பலவீனப்படுத்தி, இனி போராட முடியாது, போராடிப் பயனில்லை எனும் நிலை அவர்களது வாழ்வில் வரும்போது, அவர்கள் தற்கொலை முடிவுகளை எடுப்பதுண்டு. கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் இங்கிலாந்து நாட்டிற்கு இந்தியாவை ஆள அவசியமான அடித்தளம் கட்டிய ராபர்ட் க்ளைவ் அவர் செய்த சில தவறுகளுக்காக “இம்பீச்செய்யப்பட்டு, அவரது பேரும், புகழும், பதவியும் எல்லாம் நஷ்டமானபோது, தான் நாட்டுக்குச் செய்த நன்மை எல்லாம் மறந்து, தன் தவறை மட்டும் கணக்கில் கொள்வதைக் கண்டு மனம் நொந்து, கத்தியால் தன்னைத் தானேக் குத்திக் கொண்டு இறந்ததும் அது போன்ற ஒரு சம்பவமே.

பேராசிரியர் டி.ஜே. ஜோசஃப்        .           ஸலோமி
                                                        




அது போல, சென்ற வாரம் “பாப்புலர் ஃப்ரண்ட் (Popular Front) எனும் கட்ச்சியைச் சேர்ந்தவர்களால் கை வெட்டப்பட்ட தொடுபுழா நியூமேன் கல்லூரி முன்னாள் பேராசிரியர் டி.ஜே. ஜோசஃபின் மனைவி சலோமி(49) தற்கொலை செய்துகொண்ட சம்பவம். அல்லாவை அவமானப்படுத்தும் விதத்தில், கல்லூரி மாணவர்கள் எழுத வேண்டிய வினாத்தாள் தயாரித்தார் என்பதற்காக, அந்த வினாத்தாள் எழுத உதவிய அவரது வலது கை வெட்டப்பட்டது. மட்டுமல்ல, அவரைக் கல்லூரி நிர்வாகம் வேlலையிலிருந்து நீக்கவும் செய்தது.  மறுபடியும் வேலையில் சேர அவர் எல்லா வழிகளிலும் முயன்று கொண்டிருந்தார்.  ஆனால், திரு ஜோசஃப், ஓய்வு பெறவேண்டிய 2014 மார்ச் 31 க்கு முன் தன் கணவருக்குப் பதவி திரும்பக் கிடைக்காது என்பதை அறிந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியும் அவரது தற்கொலைக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.










கை வெட்டப்பட்ட நாள் முதல் (ஜூலை 4, 2010) தன் கணவருக்கு நெடும் தூணாய் நின்று, அவரைக் காத்தவருக்கு, தன் கணவருக்குச் சாதகமான முடிவை கல்லூரி நிர்வாகம் எடுக்கவில்லையே என்ற வேதனை அவரை அந்த முடிவுக்குத் தள்ளிவிட்டிருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இதில் வேதனைக்குறிய விஷயம் என்னவென்றால், சலோமி இறந்து 3 நாட்களுக்குப் பிறகு கல்லூரி நிர்வாகம் வேறு வழியின்றி அவரை வேலையில் மறுபடியும் சேர்த்துக் கொள்ளத் தீர்மானம் எடுத்திருக்கிறது! (கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம்).














எப்படிப் பார்த்தாலும், ராபர்ட் க்ளைவும், சலோமியும். ஜி.கிருஷ்ணனைப் போல் பிரச்சினை ஏற்பட்ட உடனேயே, முன்பின் சிந்திக்காமல் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர்கள் போராடியிருக்கிறார்கள்.  தோற்றுவிட்டோம் என்ற நிலை வந்தபோது, இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்ற எண்ணம் வந்ததும், தற்கொலை செய்து கொண்டிருந்திருக்கின்றார்கள். இங்கு, ராபர்ட் க்ளைவும், சலோமியும் செய்ததுதான் சரி என்பதல்ல எங்கள் வாதம். அவர்கள் தொடர்ந்து போராடியிருக்க வேண்டும். வெற்றி பெற முடியாவிட்டாலும், இறுதி வரை போராடியிருக்க வேண்டும்.  எர்னஸ்ட் ஹெமிங்க்வே (Ernest Hemingway) எழுதிய  “Old Man and the Sea எனும் நாவலில் வரும் வயதான மீனவரான ‘ஸாண்டியாகோவைப் (Santiago) போல.
 

தற்கொலை என்பது பிரச்சினைகளைக் கண்டு பயந்து ஓடும் கோழைகளின் செயலே!- அது பிரச்சினையைக் கண்டவுடன் பயந்து ஓடிப்போய் செய்துகொண்டாலும் சரி அதனுடன் இயன்ற மட்டும் போராடி, இனி போராடிப் பயனில்லை, என்ற கட்டத்தில் செய்துகொண்டாலும் சரி. அவர்களது பிரச்சினை அவர்கள் நினைப்பது போல் அவர்கள் மரணத்தோடு காணாமல் போவதில்லை! அவர்களது மரணம், அவர்களது பிரச்சினைகளைப் பன்மடங்காக்கி, அவர்களை நம்பியவர்களை, அவர்களை மிகவும் அதிகமாக நேசித்தவர்களை, அதே போல், அவர்கள் மிகவும் அதிகமாக நேசிப்பவர்களைத் துன்பத்தில் ஆழ்த்தி, அவர்கள் முன் அப்பிரச்சினைகளை இட்டுச் சென்றுவிடும்! எனவே, தன் குடும்பத்தினரை உண்மையாக நேசிக்கும் ஒருவரால் ஒரு போதும் பிரச்சினைகளைக் கண்டு பயந்து தற்கொலை செய்து கொள்ள முடியாது! அப்படிப்பட்டவர்கள் தற்கொலை செய்யவும் மாட்டார்கள்!

29 கருத்துகள்:

  1. பரிதாபகரமான மரணம் எனினும் இந்த முடிவானது ஏற்றுக் கொள்ளக்
    கூடியவை அல்ல என்று மேலும் சில நல்ல நல்ல உதாரணங்களைச்
    சுட்டிக் காட்டி ஓர் அருமையான விழிப்புணர்வுப் பகிர்வை எங்களுக்கும்
    தந்துள்ளீர்கள் சகோதரா .அருமையான இப் படைப்பிற்குப் பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் சகோதரா .இறந்தவரின் உள்ளம் சாந்தி பெறவும் பிரார்த்திப்போம் .
    மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  2. தற்கொலை..... கோழைகளின் செயல்.. உண்மை தான்.

    சில சமயங்களில், ஆங்கிலத்தில் சொல்வது போல, fraction of second-ல் எடுக்கப்படும் இந்த முடிவு எத்தனை பெரிய அதிர்ச்சியை அவரது குடும்பத்தினருக்கு தந்து விடுகிறது.

    பதிலளிநீக்கு
  3. என்ன கொடுமைகள்...

    குடும்பத்தினரை விடுங்க... தன்னையே நேசிக்கத் தெரியாதவர்களுக்கு...? ஒரு வினாடி பைத்தியக்காரத்தனம்...

    பதிலளிநீக்கு
  4. நிச்சயமாகத் தற்கொலை என்பது பிரச்சினைகளைக் கண்டு பயந்து ஓடும் கோழைகளின் செயல்தான்.

    பதிலளிநீக்கு
  5. தற்கொலை முடிவை எடுக்கும் போது அரசியல்வாதியை போல் டேக் இட் ஈசி பாலிசியில் எடுத்துக் கொள்ளவேண்டுமென்பது விந்தையான உண்மை !
    த ம 5

    பதிலளிநீக்கு
  6. தற்கொலை எல்லா வகையிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விசயம். தற்கொலைக்கு தூண்டும் மனிதர்கள் அதிக பட்ச தண்டனை பெற வேண்டியவர்கள்.

    பதிலளிநீக்கு
  7. , தன் குடும்பத்தினரை உண்மையாக நேசிக்கும் ஒருவரால் ஒரு போதும் பிரச்சினைகளைக் கண்டு பயந்து தற்கொலை செய்து கொள்ள முடியாது! அப்படிப்பட்டவர்கள் தற்கொலை செய்யவும் மாட்டார்கள்!//
    மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    சொல்லிச் சென்ற சம்பவங்கள் படித்து முடித்தபின்னும்
    வெகு நேரம் மனதைப் பாதித்தபடிதான் இருக்கிறது
    சொல்லிச் சென்ற விதமும் முடித்த விதமும்
    மிக மிக அருமை
    படிப்பினைத் தரும் நற்பதிவினைத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  8. ஒரு நொடியில் முடிவு செய்பவர்களுக்கு அடுத்து வருவதை பற்றி கவலை இல்லாமல் போகிறது! கிருஷ்ணன் தவறு செய்திருந்தாலும் மீடியாக்களும் தவறு இழைத்துவிட்டன. கோழைத்தனமான இந்த முடிவுகள் குடும்பத்தை பாதிக்கும் என்பதைக்கூட உணராத மனிதர்களை என்ன சொல்வது? பரிதாபம்தான் எழுகிறது! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. தற்கொலை பிரச்சனைக்கு தீர்வு ஆகாது தான் அது அன்புக்குரியவர்கள் அனைவரையும் தொடர்ந்து பல தலை முறைகளையே துன்பத்திற்குள்ளாக்கும். ஆண்டவனின் கைகளில் விட்டுவிடு அமைதியாக இருக்கவும் முடியாதபடி சமூகமும் துரத்துவதும் காரணம் தான்.
    பல உதாரணங்களை முன்வைத்து ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அருமையான பதிவுக்கு நன்றி !
    வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  10. +7
    வங்கியில் வாங்கிய கடனுக்காக தற்கொலை செய்துகொள்பவன் விவசாயி!
    வங்கியில் வாங்கிய கடனுக்கு கவலைப்படமால் இருப்பவன் பணக்காரன்!

    ஏழைகள் தற்கொலைக்கு காரணம் யார்? யார் தூண்டுதல்?

    பதிலளிநீக்கு
  11. நம் ஊரில் தான் ஐம்பது ருபாய் லஞ்சம் வாங்கினால் தப்பு .ஐநூறு கோடி தப்பிலையே!!
    டயானா வின் மரணமும் இப்படிப்பட்ட பார்பராசி மீடியாக்கள் கைவண்ணம் தானே!
    ரெண்டு பக்கமும் திருந்தனும்! நல்ல மெச்செஜ் நண்பர்களே ! ஒப்பீடும், கருத்துக்களும் இன்னும் இன்னும் சிந்திக்க வைக்கின்றன! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. மிக்க நன்றி சகோதரி அம்பாளடியாள்! பாராட்டிற்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  13. நண்பர் வெங்கட் நாகராஜ், சரிதான் நீங்கள் சொல்வது போல ஒரு நொடிப்பொழுதில் எடுக்கப்படும் முடிவு எத்தனை விவரீதங்கள் நிகழ்த்துகின்ரது! தாங்களும் இன்று கிட்டத்தட்ட இதேக்கருத்துள்ள ஒரு நல்ல பதிவு குளு குளு பிரதேச இணைப்புடன்!

    நன்றி !

    பதிலளிநீக்கு
  14. ஆஹா! DD என்னமா சொல்லிபுட்டீங்க! தன்னையே நேசிக்கத் தெரியாதவர்களுக்கு? நல்ல கருத்து!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  15. தற்கொலை கோழைத்தனம்தான்.

    போனால் இனி திரும்பி வரப்போவதில்லை என்பதை ஒரே ஒரு கணம் சிந்தித்தால் மனம் மாற வாய்ப்பிருக்கிறது.

    இப்படிப்பட்டவர்களுக்கு சிந்திக்கவே தெரிவதில்லையே, என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் காமக்கிழத்தன்! சிந்திக்கத் தெரியாததினால்தானே இந்தத் தற்கொலை எண்ணமே வருகின்றது! தற்கொலை எண்ணம் கூட உளவியல் டீதியாகப் பார்த்தால் அதுவும் ஒரு மனப்பிரச்சினைதானோ என்ற எண்ணமும் வருகின்றது!

      ஆனால் அதன் விபரீதம் மிகக் கொடுமையே!.

      //போனால் இனி திரும்பி வரப்போவதில்லை என்பதை ஒரே ஒரு கணம் சிந்தித்தால் மனம் மாற வாய்ப்பிருக்கிறது.

      இப்படிப்பட்டவர்களுக்கு சிந்திக்கவே தெரிவதில்லையே, என்ன செய்வது?//

      தங்கள் இடுகைகளை வாசித்தோம்! எல்லாவற்றையும்! புதியதுதான் இன்னும் வாசிக்க வில்லை! வாசித்தவற்றிற்கும் உங்களுக்கு பதில் அனுப்பவில்லை! அனுப்புகின்றோம்!

      நன்றி நண்பரே!

      நீக்கு
  16. கரந்தையாரே மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

    பதிலளிநீக்கு
  17. அட! ஆமாம் ஜி! நல்ல கோணத்தில் சிந்த்னை! "விந்தையான உண்மை" !

    மிக்க நன்றி ஜி!

    பதிலளிநீக்கு
  18. //தற்கொலைக்குத் தூண்டும் மனிதர்கள் அதிக பட்ச தண்டனை பெற வேண்டியவர்கள்//
    மிகச் சரியெ! நமது ஊடகங்கள் அதைச் செம்மையாகச் செய்கின்றன!

    மிக்க நன்றி ஸார்!
    .

    பதிலளிநீக்கு
  19. மிக்க நன்றி ரமணி ஸார்! ஆம் இது போன்ற சம்பவங்களை வாசிக்கும் போது மிகவும் வேதனையாகத்தான் இருக்கின்றது! தங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  20. கிருஷ்ணன் தவறு செய்திருந்தாலும் மீடியாக்களும் தவறு இழைத்துவிட்டன. //

    மிகச் சரியாகச் சொன்னீர்கள் நண்பர் சுரேஷ்! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

    பதிலளிநீக்கு
  21. தற்கொலை பிரச்சனைக்கு தீர்வு ஆகாது தான் அது அன்புக்குரியவர்கள் அனைவரையும் தொடர்ந்து பல தலை முறைகளையே துன்பத்திற்குள்ளாக்கும். ஆண்டவனின் கைகளில் விட்டுவிடு அமைதியாக இருக்கவும் முடியாதபடி சமூகமும் துரத்துவதும் காரணம் தான்.//

    மிக நல்ல கருத்திற்கு மிக்க நன்றி!! ஆனால் இந்தச் சமூகம் அதைச் செய்வதில்லையே சகோதரி!

    நன்றி சகோதரி!

    பதிலளிநீக்கு
  22. வாங்க நம்பள்கி! எங்கள் அகம் வந்து ரொம்பநாள் ஆகிவிட்டது! இப்போது களை கட்டிவிட்டது! பாயாசம் இல்லாமல் கல்யாணமா!!!!?

    வங்கியில் வாங்கிய கடனுக்காக தற்கொலை செய்துகொள்பவன் விவசாயி!
    வங்கியில் வாங்கிய கடனுக்கு கவலைப்படமால் இருப்பவன் பணக்காரன்!//

    போட்டீர்களே ஒரு போடு! தூண்டுதல் யாரென்று கேட்டு!! தெரிந்து சும்மா இருப்பதுதானே சமூகம்!

    மிக்க நன்றி நம்பள்கி வருகைக்கும், கருத்திற்கும், ஓட்டிற்கும்!

    பதிலளிநீக்கு
  23. தங்கள் முதல் வரி, அன்னியன் படத்தை நினைவூட்டுகிறது! டயானாவின் மரணம் என்பது மிக மிக வேதனையானது! தங்கள் கருத்து மிக அருமை! சகோதரி! நல்லதொரு பின்னூட்டம்!

    நன்றி!

    பதிலளிநீக்கு
  24. இராபட் கிளைவ் தற்கொலை செய்து கொண்டு இறந்தார் என்று தான் படித்த ஞாபகம். நிச்சயம் இது புதிய தகவல். அழகாக தேவையான தகவல்களைத் பொறுப்புணர்வோடு தரும் உங்களுக்கு மனங்கனித்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    வெட்கம், மானம் ,சூடு, சொரணை இருக்குதா என்று சராசரி வாழ்க்கை வாழ்பவர்களைப் பார்த்த கேட்டு இருப்பீங்க. நான் இங்கே அதிகமாக பணம் உள்ளவர்களிடம் பழகிக் கொண்டிருப்பதால் அவர்களின் வாழ்க்கையை ஊன்றி கவனிப்பதால் அவர்களின் மொத்த வாழ்க்கையிலும் இது போன்ற வார்த்தைகள் தேவையற்றது என்கிற நிலையில் தான் அவர்களின் மொத்த வாழ்க்கை பழக்கவழங்களும் உள்ளது. நீங்க குறிப்பிட்டுள்ள நபர்களை மட்டுமல்ல மானங்கெட்டு பிழைப்பு வாதியாக வாழும் அரசியல்வாதிகளைப் பார்க்கும் போது அவர்கள் நாக்கு தடுமாறும் கணங்களை காணும் போது நீங்க சொல்லிவாறு மனதிற்குள் நினைத்துக் கொள்வதுண்டு.

    பதிலளிநீக்கு
  25. //நான் இங்கே அதிகமாக பணம் உள்ளவர்களிடம் பழகிக் கொண்டிருப்பதால் அவர்களின் வாழ்க்கையை ஊன்றி கவனிப்பதால் அவர்களின் மொத்த வாழ்க்கையிலும் இது போன்ற வார்த்தைகள் தேவையற்றது என்கிற நிலையில் தான் அவர்களின் மொத்த வாழ்க்கை பழக்கவழங்களும் உள்ளது.//

    அவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் எல்லாம் வருவது என்பது மிகவும் அபூர்வம்! சாதாரண குடிமக்கள்தான் இத் போன்ற முடிவுகளை எடுத்து விடுகின்றார்கள்!

    இதில் விதி விலக்காக ஒரு சிறுமிகூட தற்கொலை செய்து கொண்டதாக பதிவர் பாண்டியன் எழுதியுள்ளார்! அதை வாசித்த போது மனது மிகவும் வேதனை அளித்தது! தற்கொலை / உயிர் என்பது எவ்வளவு மலிந்து விட்ட்டது என்ற எண்ணம் தோன்றியது! ஒரு உயிர் இந்த உலகில் ஜனிக்க எவ்வளவு கஷ்டம் இருக்கிறது! ஆனால் அதை இயற்கைக்கு மாறாக அழித்துக் கொள்வது எளிதாகி அதன் மதிப்பை மலிவாக்கி விட்டது போல் தோன்றுகின்றது!

    மிக்க நன்றி தங்கள் அழ்கான, ஆழமான பின்னூட்டத்திற்கு! பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  26. இன்னாது...? நம்ப ராபட்டு சூசைடா பண்ணிக்கின்னான்...? புச்சா கீதேபா மேட்டரு...?

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    பதிலளிநீக்கு
  27. ஆமாம் நைனா! ராபட்டு சுசைடுதான்னு ஹிஸ்டரில எங்கியோ சொல்லிகினாங்கபா!

    ரொம்ப டேங்க்ஸ்பா!

    பதிலளிநீக்கு