திங்கள், 24 நவம்பர், 2025

தலக்காடு - 1 - காவிரி பீச்

 

கடைசியாகப் பார்த்த தலக்காடைப் பற்றித்தான் இப்பதிவு. பின்னர் முடிந்தால், என் மனம் ஒத்துழைத்தால் இடையில் விட்ட பகுதியைப் பற்றி எழுதுகிறேன்.

தலக்காடு - தலக்காட்டைப் பற்றிச் சொல்ல கொஞ்சம் விஷயங்களும் படங்களும் இருக்கின்றன. 4, 5? பகுதி வரை போகக்கூடும்.

இந்த இடத்தில் கொஞ்சம் ஃப்ளாஷ்பேக். நாங்கள் 2002 ல் பெங்களூரிலும் சென்னையிலுமாக இருந்த போது மகனின் அரையாண்டுத் தேர்வு முடிந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில், நானும் மகனும்  கர்நாடகா சுற்றுலாத்தலங்கள் பற்றிய புத்தகம் மேப் வைத்துக் கொண்டு, இப்பகுதிகளுக்குச் செல்வதற்குத்  திட்டமிட்ட போது பொதுப்போக்குவரத்து என்பதால் மத்தியரங்கம் மட்டும் பார்க்க முடிந்தது. சிவனசமுத்திரமும், இந்த லுஷிங்டன் பாலமும் தலக்காடும் விடுபட்டுப் போனது. அப்போதிலிருந்தே இவை என் மனதில் ஓர் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு படுத்தியவை.

அப்போது சுற்றுலா புத்தகத்தில் தலக்காடு பற்றித் தெரிந்து கொண்ட விஷயங்கள், அதன்பின் தலக்காடு என் லிஸ்டில் பல வருடங்கள் இருந்ததால் சமீப வருடங்களில் மீண்டும் தலக்காடு  மிஸ் ஆகக் கூடாது என்று தேடிய போது கிடைத்த சில விஷயங்கள் என்று பகிர்கிறேன். 

மத்தியரங்கம் காவிரி லுஷிங்டன் பாலத்திலிருந்து தலக்காடு நோக்கிப் போகிறோம். சென்று சேர்வதற்கு முன் தலக்காடு பற்றிக் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.

புதிதாக இடப்பட்டிருக்கும் சாலை நல்லாருக்குல்ல? இருபுறமும் காட்சிகளுடன்...என்றாலும்....

பழைய சாலை - எனக்கு இச்சாலை பிடித்தது. படம் - நன்றி விக்கி 

மார்ச்சில் சென்றதால் இப்படிக் காய்ந்துகிடக்கிறதோ? மழைக்காலத்தில் எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசை

இந்த வீடு திண்ணை, தூண்களோடு அழகாக இருக்கு இல்லையா? திண்ணை தூண்களோடு இருக்கும் வீடு எனக்கு ரொம்பப் பிடிக்கும். பிடிச்சிருக்குனா சொல்லுங்க வாங்கிடலாம்!!!!!

ஓட்டுநர் ஸ்ரீதர், தான் வேறு ஒரு வழியை எடுப்பதாகச் சொல்லி, சிறு கிராமங்கள் இருக்கும் பகுதி வழியாக ஓட்டிச் சென்றார். அப்படி இக்கிராமம் வழி சென்ற போது வீடுகள் பிடித்திட டக்கென்று ஒரு காணொளி!!

தலக்காடு காவிரி பாயும் கரையில் அமைந்திருக்கும் மிகவும் பழைய புகழ்பெற்ற வரலாற்று நகரம். சமுத்திரகுப்தர் தென்னிந்தியாவை (கிபி 350க்கு முன் என்று சொல்லப்படுகிறது) நோக்கிப் படையெடுத்து வந்த போது சில குழப்பங்கள் ஏற்பட்டபோது சிறு விஷயத்தைக் கூடத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதுதானே அரசியல்? அப்படி மேலைகங்கர்கள் அதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர் கர்நாடக மாநிலத்தின் பகுதிகளை உள்ளடக்கிய மைசூர், அதைச் சுற்றிய பகுதிகள் மற்றும் பெங்களூரு வரை பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இப்பகுதி கங்கவாடி என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

இதற்குப் பிறகு தமிழ்நாட்டின் கொங்குநாட்டுப் பகுதி மற்றும் ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் பகுதிகளையும் இணைத்துக் கொண்டனர். அதனால் மேலைகங்க மன்னர்களின் முந்தைய தலைநகரம் ஈரோட்டுக்கு அருகே இருக்கும் கஜல்ஹட்டி என்னும் ஊரில் அமைந்திருந்தது என்றும். மேயாறுக்கும் பவானிக்கும் நடுவே உள்ள அந்த ஊர் அன்று ஸ்கந்தபுரா என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றுத் தகவல்கள்.

அதன் பின் கி.பி. 350 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கோலார் நகர் தலைநகராக 20 ஆண்டுகள்வரை இருந்திருக்கிறது. கடம்பர்களின் தொல்லையால், கோலாருக்குப் பதிலாக வேறு பகுதி தலைநகராக்கப் பரிசீலிக்கப்பட்டு கி.பி. 390 ஆண்டுவாக்கில் மேலைகங்க மன்னர் ஹரிவர்மன் (கி.பி. 390 – 410) இப்பகுதியை ஒன்றிணைத்து தலக்காட்டை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்திருக்கிறார்.

இப்படித் தலக்காடு மேற்கு கங்கர்களின் தலைநகரமாக இருந்த இடம். அதன் பின் கிபி 11 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் மேற்கு கங்கர்களைத் தோற்கடித்து இப்பகுதியைக் கைப்பற்றியிருக்கின்றனர். தலக்காடு இராஜராஜபுரம் என்று பெயர் மாற்றப்பட்டதாம். இந்த நூற்றாண்டில்தான் இங்கு பெங்களூரிலும் ஏற்கனவே மேற்கு கங்க மன்னர்கள் கட்டியிருந்த இரண்டு சன்னதிகளோடு சோழர்களும் கட்டியிருக்கிறார்கள். அக்கோவிலுக்கும் நான் இரண்டு முறை சென்றிருக்கிறேன் படங்களும் எடுத்திருக்கிறேன் எழுதத் தொடங்கி பாதியில் இருக்கிறது. அதைப் பற்றிப் பதிவு போடுகிறேன். போடுவேன் என்று நம்புகிறேன்

சுமார் நூறு வருடங்களுக்குப் பிறகு தலக்காட்டை ஹோய்சாள மன்னன் விஷ்ணுவர்தனன் (கி.பி. 1108 – 1152) கைப்பற்றிக்கொண்டிட கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை ஹோய்சாளர்கள் ஆட்சியில் தலக்காடு. இப்படி தலக்காட்டில் ஹொய்சாளர் கட்டிடக் கலையும் சோழர்கள் கட்டிடக் கலையையும் பார்க்க முடிகிறது.

இப்பகுதி வரலாறு பற்றி இணையத்தில் நிறைய இருப்பதால் நான் அதிகம் தரவில்லை. 

இப்ப நாம் தலக்காட்டிற்கு வந்துவிட்டோம். நாங்கள் சென்ற வண்டியை - காவிரி பீச் என்று சொல்லப்படும் காவிரிக் கரையில் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, அப்பாவைக் காரில் உட்கார்த்தி வைத்துவிட்டு, நாங்கள் மூவரும் காவிரி பீச் நோக்கிச் சென்றோம்.
 
கடற்கரை போன்று முழுவதும் மணற்பாங்கும் மரங்களும் 
புதை மணலில்தான் நடக்க வேண்டும். கடற்கரை போன்று முழுவதும் மணற்பாங்கும் காடு போன்று மரங்களும் இருக்கின்றன (சென்னை ஈசிஆர்  பகுதி நினைவுக்கு வந்தது)பீச் மணல் போன்றும் ஆங்காங்கே மணல் குன்றுகள் இருந்ததையும் பார்த்த போது, பண்டைய காலத்தில் காவிரி மிகப் பிரம்மாண்டமாக அகண்ட கடல் போன்று பாய்ந்திருக்கக் கூடும் என்று தோன்றியது. 

அப்படிச் சென்ற போது இந்த மரமும் அதன் கீழே லிங்க திருஉருவங்களையும் பார்த்தோம். இங்கு ஒரு சின்ன கதை.

தலா மற்றும் காடு (இந்தப் பெயர்களை நினைவு வைச்சுக்கோங்க பின்னர் சொல்கிறேன்) என்ற இரட்டைச் சகோதரர்கள் - வேட்டைக்காரர்கள், ஒரு மரத்தை வெட்டிய போது அங்கு காட்டு யானைகள் லிங்கத்தை வழிபட்டுக் கொண்டிருந்ததைக் கண்டிருக்கின்றனர். அதே சமயம், மரத்திலிருந்து இரத்தம் வழிவதைக் கண்டதும் அது சிவனின் உயிருள்ள உருவம் என்பது அவர்களுக்குத் தெரிந்ததாம். இந்த மரத்தையும் அதனடியில் சிவலிங்கம், நந்தி குடும்பத்தைப் பார்த்ததும் இக்கதை நினைவுக்கு வந்ததால் இங்கு. மற்றபடி இந்த மரம்தானா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது!

அப்போது அங்கு ஒரு தெய்வீக  அசரீரி ஒலித்ததாம். மரத்தின் இலைகளையும் பழங்களையும் அக்காயத்தில் பூசச் சொல்லி. பூசியதும் அந்த மரம் உடனே குணமாகி பழைய நிலையைப் பெற்றதாம்.

மேலும் அங்கு சிவனை வணங்கிக் கொண்டிருந்த இரு யானைகளும் சபிக்கப்பட்டு உருமாறிய ரிஷிகளாம். இப்படத்தில் இருக்கும் இரு சிலைகள் அந்த ரிஷிகள்? இப்படித்தான் இந்த ஊருக்குத் 'தலக்காடு' என்ற பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. வேறொரு புராணக் கதையும் இருக்கிறது. 

பாருங்க இந்த இடத்தில் எல்லாம் ஹெல்மெட்டை வைத்திருக்கிறார் ஒருவர்

அதோ காவிரி பீச் பாருங்க. அங்குதான் போகிறோம். அங்கு பாதியில் நிற்கும் பாலம் இங்கு உள்ளே புகுந்தால் இப்பக்கம் இருக்கும் அடர் மரங்கள் பகுதி கண்டிப்பாக அழியும். இப்போதைய அழகு கெட்டுவிடும் என்றும் தோன்றியது.

தலக்காட்டைச் சுற்றி மாலை போன்று பாயும் காவிரி இங்கு அமைதியாக ஆர்பாட்டம் இல்லாமல் சமதளத்தில் ஓடுவதால் இங்கு காவிரி கடற்கரை போன்று இருப்பதால் காவிரி பீச் என்று சுத்துப்பட்டுக் கிராமங்கள் முதல், சுற்றுலா பயணிகள் வரை எல்லோரும் இங்கு தண்ணீரில் விளையாடி, நீச்சலடித்து மகிழ்கிறார்கள்.

 


இங்கும் பரிசல்கள் இருந்தன. பரிசல்களிலும் பயணம் செய்யலாம் ஆனால் சும்மா நடுப்பகுதி வரை அழைத்துச் சென்று வருகிறார்கள் பார்க்க ஒன்றுமில்லை. நம்ம வீட்டவர் இங்கு பரிசலில் போலாமா என்று கேட்டதும், "இதுக்கு நாம அங்க லூஷிங்டன் பாலத்துக்குப் பக்கத்துல இருந்த இடத்திலேயே போயிருக்கலாம்"னு சொல்லிவிட்டேன்.

ஓட்டுநர் ஸ்ரீதருக்குக் குளிக்க ஆசை ஆனால் ஆழமில்லை என்பதால் அவர் குளிக்கவில்லை. நெல்லைக்கும் ஆசை இருந்தது. என்னிடம் கேட்கவும் செய்தார். எனக்கும் நீச்சலடித்துக் குளிக்க ஆசை இருந்தது, மாற்று உடையும் வைத்திருந்தேன். ஆனால் நேரத்தை மேனேஜ் செய்யணுமே. ஏற்கனவே திட்டத்தில் இல்லாத இரண்டரை! இடங்கள் சேர்ந்ததால் லேட். அப்புறம் தலக்காடு கோவில்கள் பார்க்க முடியாமல் போனால்? என் நீண்ட நாள் ஆசையே அதுதானே!

அமுல் ஐஸ்க்ரீம் வண்டியைப் பார்த்ததும் நெல்லை, 'ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா' என்றதும் நம்ம வீட்டவரும் நெல்லையும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டார்கள். நான், பெரிய "நோ"!

உணவுக் கடைகள், துணிக் கடைகள், வளையல், பொட்டு போன்ற கடைகள் என்று ஜே ஜே என்று இருக்கிறது அந்த இடம்.

 

https://youtube.com/shorts/RHjOH8faL9s


கலகலகலவென காவிரி நடக்குது காதலன் கைத்தொட 

கழிவறை, வசதிகள் பெண்களுக்கும் (சுத்தமாக இருக்கின்றன), ஆண்களுக்கும் இருக்கின்றன.

அடுத்த பதிவில் சில சுவாரசியமான விஷயங்களுடன் நாங்கள் பார்த்த கோயில்கள் (இவை ஒவ்வொரு பதிவாக) பற்றியும் அனுபவங்களையும் சொல்கிறேன்


----கீதா

53 கருத்துகள்:

  1. தலக்காடு, காவிரி பீச் போன நினைவு வந்துவிட்டது. அது மார்ச்சிலா? ரொம்ப மாதங்கள் ஆகிவிட்டது இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை. மார்ச்சில்தான் நாம போனோம். ரொம்ப மாதங்கள் ஆகிவிட்டனதான். எனக்கு எழுத மனம் ஒத்துழைக்காமல் ஏதேதோ எண்ணங்கள். வேலைகள் அலைச்சல்கள்,

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  2. இங்கு காவிரி மிகக் குறைந்த ஆழத்தோடு இருந்தது. குளித்திருக்கலாம், ஆனால் போதுமான ஆழம் இல்லை.

    இந்தப் பகுதிகளிலெல்லாம் (அதாவது பயணத்தின்போது) குளித்தால், மாற்று உடை, பிறகு அழகுபடுத்திக்கொள்வது என்று நிறைய நேரம் செலவழியும். ஈரத்துணியை ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்துக்கொள்ளணும்... பயணங்களில் குளிப்பது கடினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குளித்து ஈரத்தை வேறு ஒரு பையில் வைத்துக் கொள்வது கூடச் சிரமமில்லை அன்று நேரமில்லை நெல்லை. ஏற்கனவே தலக்காடு போறப்ப லேட்டு. அப்புறம் கோவில்கள்....வேக வேகமாக அல்லவா நடந்து ஓடி, படங்கள் எடுக்க வேண்டியதானது. குறிப்பாக எனக்கு. நான் பொதுவாக இப்படி வேகமாகப் பார்ப்பதை விரும்புவதில்லை.

      கீதா

      நீக்கு
  3. இங்கு இருந்த பரிசலைவிட, இன்னொரு இடத்தில் பார்த்த பரிசலில் சென்றிருக்கலாம். ஆனால் இங்கெல்லாம் பாதுகாப்பு வசதிகள் இல்லை. ஏதேனும் காரணத்தால் பரிசல் கவிழ்ந்தால், பரிசல்காரன் நம்மைக் காப்பாற்ற முனையமாட்டார் என்றே தோன்றுகிறது. முதலைகளினால் பிரச்சனை ஏற்பட்டாலும் ஆபத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை, அதான்... அது பாதுகாப்பாகத் தெரியலை. அந்த பரிசல்காரர்களின் உடல் மொழி பேச்சு எனக்குச் சரியாகப் படலை. ஆழம் அதிகம் அங்கு. மனம் ஏனோ எச்சரித்தது. அதனால்தான் நான் முனையவில்லை. இல்லை என்றால் சொல்லியிருந்திருப்பேனே போயிருக்கலாம் என்று. முதலை பயமும் இருந்தது. ஏற்கனவே எங்களுக்கு எதுவும் சரியில்லை...அப்புறம் இது வேறயா ஹாஹாஹாஹா

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  4. படங்கள், காணொளிகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் சிறப்பு. அனைத்தும் பார்த்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி பார்த்து ரசித்தமைக்கு.

      கீதா

      நீக்கு
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தலக்காடு பற்றிய ஃபளாஷ்பேக் சுவையாக இருக்கிறது. 2002 லேயே இங்கு வந்து விட்டீர்களா? அப்போ இங்கு சுற்றியுள்ள நிறைய இடங்களைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

    தலக்காடு பற்றிய சரித்திர தகவல்களும் தெரிந்து கொண்டேன். அக்கால மன்னர்களின் தொண்டினால், நாம் எத்தகைய அழகான கோவில்களை தரிசிக்க முடிகிறது. ஆனால் மன்னராட்சி அப்போதைய மக்களுக்கு மிகவும் கடுமையானது எனவும் படித்துள்ளோம்.

    தலக்காடு ஸ்தல புராணம் பற்றி தெரிந்து கொண்டேன். மரத்தடியில் பார்த்த லிங்க வடிவமான சிவபெருமானும், நந்தியும் அழகாக உள்ளனர். இன்று கார்த்திகை சோம வாரம் இறைவனை தரிசிக்க வைத்து விட்டீர்கள். நன்றி. இன்னும் நீங்கள் பார்த்த பல கோவில்களின் வழியும் அவை தொடருமோ .? நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலாக்கா.....2002 இல் இங்கு வரவில்லை. அப்போது கொஞ்சம் சில மாதங்கள்தான் இங்கு. மகன் சென்னையில் தான் படித்தான். எனவே நாங்க இருவரும் அங்கும் இங்குமாக. அப்போது பி டி எம் லே அவுட்டில்.

      இல்லை அக்கா அப்போது இங்கு சுற்றி ரொம்ப பார்க்கவில்லை. நாகர்ஹோலே வனம், மைசூர் ஜூ, இப்படிக் கொஞ்சம். அவ்வளவுதான். ஆனால் இடங்களை குறித்து வைத்துக் கொண்டேன்.

      ஆம் மன்னர்கள் கட்டியவைதான் இப்போது நாம் அவற்றை அழியாமல் பார்த்துக் கொண்டாலே பெரிய விஷயம்.

      //கார்த்திகை சோம வாரம் இறைவனை தரிசிக்க வைத்து விட்டீர்கள்//

      ஓ அப்படியா! நன்றி கமலாக்கா. மீ க்கு இது பற்றி நோ அறிவு!!!! ஹிஹிஹிஹி

      இன்னும் நீங்கள் பார்த்த பல கோவில்களின் வழியும் அவை தொடருமோ .?//

      ஆமாம் ஜஸ்ட் 4 கோவில்கள்....குறிப்பாக அதன் கலைவடிவத்திற்கு அவற்றைப் பார்க்க மனம் விரும்பியது.

      நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  6. வணக்கம் சகோதரி

    படங்களும், பதிவும் மிக அருமையாக உள்ளது. சாலை படங்கள், உயரமான வரிசையுடனிருந்த மரங்களின் படங்கள் அனைத்துமே கண்களையும் மனதையும் கவர்கிறது.படங்களை அந்த கார் ஓடும் வேகத்தில் அழகாக எடுத்துள்ளீர்கள்.

    தூண்களுடன் திண்ணை வைத்த வீடுகள் நம்மூர் பக்கத்தில் கண்டதுதான். அதிலும் திருமணத்திற்கு பின் கண்ட கல்லிடை முழுக்க அந்த மாதிரி வீடுகள்தான். மாலையானதும் திண்ணைகளில் அமர்ந்து வம்பளக்கும் கூட்டங்களை காண்கையில், நாம் அந்த மாதிரி ஒரு சுகத்தை இதுவரைப் பெறவில்லையே என மனம் நினைக்கும். நான் வீட்டை விட்டு வெளியில் வந்தமர்ந்ததே கிடையாது. அதுவும் பெரிய நாத்தனார் வீடுதான் என்றாலும் , நான் புகுந்த வீட்டின் புதிது.

    அம்மா வீடும் அதே மாதிரிதான். ஆனால், திண்ணை மட்டுந்தான். அந்த மாதிரி உருட்டு தூண்கள் கிடையாது. இங்கும் வாசலில் சென்று உட்காரக்கூடாது என்ற கண்டிப்புக்கள்தான்.

    /பிடிச்சிருக்குனா சொல்லுங்க வாங்கிடலாம்!!!!!/

    ஹா ஹா ஹா. வாங்கிட்டா போச்சு. நீங்கள் வாங்கி விட்டால், சொல்லுங்கள். நானும் உங்களுடன் வந்திருக்க தயார்.திண்ணையில் அமர்ந்து கதை பேசலாம். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும், பதிவும் மிக அருமையாக உள்ளது. சாலை படங்கள், உயரமான வரிசையுடனிருந்த மரங்களின் படங்கள் அனைத்துமே கண்களையும் மனதையும் கவர்கிறது.படங்களை அந்த கார் ஓடும் வேகத்தில் அழகாக எடுத்துள்ளீர்கள்.//

      நன்றி கமலாக்கா. கார் ஓடும் போது கூட எடுத்துவிடுகிறேன் ஆனால் ஓரிடத்தில் நின்று எடுக்காமல் நடந்துகொண்டே எடுத்துவிடுகிறேன் அதனால் காணொளி என் நடைக்கேற்ப ஆடிக் கொண்டே.....ஷேக் ஆகிறது. ஹாஹாஹாஹா

      நம்மூர் பக்கத்தில் தூண்களுடன் திண்ணை வீடுகள்...என்னைக் கவரும். ஆனால் அதில் வம்பளக்கும் கூட்டம்தான் எனக்கு அலர்ஜி!!!! ஹாஹாஹா...ஏனென்றால் அதனால் வீட்டில் விளைந்த பாதகங்கள் மனக்கசப்புகள் என்று.

      // நான் வீட்டை விட்டு வெளியில் வந்தமர்ந்ததே கிடையாது. //

      ஊரில் எங்களுக்கு அனுமதி கிடையாது யார் வீட்டிற்கும் போவதற்கு. அதுவும் நல்லதாக இருந்தது. போகாமலேயே வம்பு வீட்டிற்குள் வந்து படுத்தியது. எல்லா இடங்களிலும் காமரா கண்கள். வீட்டிற்கு உடனுக்குடன் செய்தி வந்துவிடும்!!!!! அவர்கள் வீட்டில் நடப்பதைப் பற்றி கவலை இல்லாமல் நம் வீட்டிற்கு செய்தி அனுப்புவாங்க!!!!! அதனால் அடிப்படை சுதந்திரம் கூட இல்லாமல் போன காலங்கள். குறிப்பாக எனக்கு. என்னுடன் வளர்ந்தவர்களுக்கு அது பிரச்சனை இல்லை. நான் தானே கட்டுரை, கதை, பேச்சு கவிதை போட்டி அது இதுன்னு போக நினைத்தவள். அந்த சுதந்திரம் இல்லாமல்...

      ஹா ஹா ஹா. வாங்கிட்டா போச்சு. நீங்கள் வாங்கி விட்டால், சொல்லுங்கள். நானும் உங்களுடன் வந்திருக்க தயார்.திண்ணையில் அமர்ந்து கதை பேசலாம். நன்றி சகோதரி.//

      ஹாஹாஹாஹா....இப்ப அமர்ந்து பேசும் சுதந்திரம் உண்டே!!! நாம எல்லாரும் உக்காந்து பேசலாம் கண்டிப்பாக வம்பு பேசமாட்டோம் அதனால் தைரியமாக நாம் அமர்ந்து பேசலாம்.....கனவில்!!!

      நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  7. 2002 லிருந்து இந்த இடமெல்லாம் பார்க்க வேண்டும் என்று காத்திருந்தததாய் சொல்கிறீர்கள்.  எனக்கு அப்போதெல்லாம் இப்படி ஒரு இடம் இருப்பதே தெரியாது.  அப்போதல்ல, நீங்கள் சொல்லும் வரை இப்போதும் தெரியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் அது அப்ப நாங்கள் இங்கும் சென்னையிலுமாய் இருந்ததால்....எந்த இடம் போனாலும் அங்கு என்ன இருக்கு என்று போக முடிகிறதோ இல்லையோ தெரிந்து வைத்துக் கொள்ளும் ஆர்வம்....அவ்வளவுதான்.

      இப்பவும் என்னென்ன இருக்கு என்று ஆராய்ந்து ஒரு பெரிய லிஸ்டே இருக்கு. ஹிஹிஹி

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. மலைகள் அருகில் தெரிய தெரியும் சாலையும் அழகுதான்.  பழைய சாலை, இடத்தின் பழமையை மறைமுகமாக நமக்குச் சொல்லும்.  கார்க் கண்ணாடியில் நீங்கள் தெரிகிறீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இரண்டுமே அழகு. நீங்க சொல்லிருப்பது போல் பழசு பழமையைச் சொல்கிறது. அச்சாலை இப்ப இருக்கா என்று தெரியவில்லை.

      ஆமாம் நான் தெரியறேன்....நெல்லை தெரிகிறாரா என்று தெரியலையே!!!! தெரிய சான்ஸ் இல்லை அவர் இடப்பக்க கண்ணாடி அருகில்....

      கீதா

      நீக்கு
  9. எனக்கும் பழைய மாதிரி வீடுகள் திண்ணை ஓட்டு / கூரை வீடு என்று கண்ணில் பட்டால் உடனே மனம் சிறகடிக்கும். இந்த வீட்டில் வாழ்பவர்கள், அல்லது வாழ்ந்தவர்கள் எப்படி வாழ்க்கை முறை இருந்திருக்கும் என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி வாழ்க்கை முறை இருந்திருக்கும் என்று நினைக்கும் போது என் அனுபவங்கள் கொஞ்சம் படுத்தும் மனதை. அப்படி ஊர் அது.

      இப்பவும் நான் எடுத்திருக்கும் அந்தக் கிராமத்தில் அதில் மக்கள் வாழறாங்க ஸ்ரீராம். நெல், ஆடு என்று சில வீடுகளில் பார்த்தேன்....எடுத்தவை வரவில்லை சரியாக அதனால் அழித்துவிட்டேன்.

      கீதா

      நீக்கு
  10. காணொளியில் ஒரு வறண்ட கிராமத்தின் கடைசித் தெரு தெரிகிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்....மார்ச் என்பதால் வெயில்.... வறண்டிருக்கோ என்று தோன்றியது. ஆனால் நீர் நிலைகளில் நீர் இருந்தது. மழைக்காலம், குளிர்காலத்தில் இப்பகுதி எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசைதான்.

      கீதா

      நீக்கு
  11. தலைக்காட்டின் தலவரலாறு தலை சுற்றுகிறது!    ஏதோ ஒரு கங்கை மன்னனை ராஜசிம்மன் அல்லது நரசிம்ம வர்மன் தோற்கடித்தான் என்று படித்த நினைவு.  அப்புறம்தான் அவன் புலிகேசியை போரில் வென்றான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஆமாம் எனக்கும் தலைசுற்றியது அதனால் கொஞ்சம் தன கொடுத்தேன்.

      //கங்கை மன்னனை ராஜசிம்மன் அல்லது நரசிம்ம வர்மன் தோற்கடித்தான்//

      அந்த நினைவில்தான் வாசித்துப் பார்த்து தொடர்புடையது மட்டும் எடுத்தேன், ஸ்ரீராம். இதுவே தலை சுத்தியது...

      தலக்காடு பலர் கையில்....ஹொய்சாளர் சோழர் அதன் பின் விஜயநகரப் பேரரசு என்று செல்கிறது.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. 'விஜயநகரம்' என்று படிக்கும்போது மனம் அதை 'விஜயகாந்த்' என்றே படிக்கிறது!  ச்சே....  மோசமான ஸ்டூடன்ட் நான்!

      நீக்கு
  12. மணலும் மரங்களுமாகப் பார்க்கும்போது கடற்கரை என்று தோன்றவில்லை.  மரங்கள் இருக்காதே...  ஆற்றோரம் என்று நினைக்கத்தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், ஈசி ஆர் சாலையில் கடற்கரைப் பக்கம் பாத்தீங்கனா சவுக்குத் தோப்புகள் தென்னைகள் இருக்கும்...பாண்டிச்சேரி போனப்ப எல்லாம் இடப்பக்கம் தான் அமர்வேன். மஹாபலிபுரம் வரும் முன்னரே இருந்தாலும் கல்பாக்கம் தாண்டியதும் நிறைய இருக்கும். எனக்கு அது நினைவுக்கு வந்தது. கூடவே மணல் தான் எங்கும் அதுவும் புதை மணல்...

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  13. மரத்தின் புராணக்கதை புன்னகைக்க வைக்கிறது. அல்லது அந்தக் கதைக்கு ஏதாவது மறைமுகப் பொருள் உண்டா என்று தேட வைக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உட்பொருள் இருக்கும்....யோசித்தால் கிடைக்குமாக இருக்கும் ஸ்ரீராம்.

      குறிப்பாக எனக்குத் தோன்றியது மரத்தை வெட்டாதீங்கப்பா என்பது...அதற்கும் உணர்வுகள் உண்டு என்பதாக...அதைப் பாவ புண்ணியத்தோடு சொல்வதே அதற்குத்தானே இல்லையா ஸ்ரீராம்?

      கீதா

      நீக்கு
  14. ஆர்ப்பாட்டமில்லாத நீர் நிலை உண்மையிலேயே கவர்கிறது.   இதில் அங்கு முதல் மரியாதை வைதேகி காத்திருந்தாள் பரிசல் வேறு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், உண்மையிலேயே ரொம்ப அழகா இருந்தது. இறங்கிப் பார்க்க ஆசையும் இருந்தது. ஆனால் கூட்டம்.

      எனக்கும் முதல் மரியாதை, வைதேகி காத்திருந்தாள், அப்புறம் ரிதம்,. சின்ன சின்ன ஆசை, ஓடக்கார மாரி முத்து அது எல்லாம் நினைவுக்கு வந்தன.

      கீதா

      நீக்கு
  15. ச்சே...   நெல்லை குளிக்கும் காட்சி படம் பார்க்கலாம் என்று பார்த்தால்....  சரி ஐஸ் க்ரீம் சாப்பிட்டதையாவது படமெடுத்திருக்கக் கூடாதோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா....ஆமாம் ஸ்ரீராம் பின்னர் விளங்கிச்சு!!!!

      நெல்லை குளிக்கற ஸ்விம் பண்ணும் காட்சி எபி படங்களில் வந்திருக்கு ஸ்ரீராம்....

      அவங்க ஐஸ் க்ரீம் சாப்பிட்ட போது நான் அவசரத்துக்குப் போய்விட்டேன்!!!! ஸ்ரீராம் அதான் விட்டுப் போச்சு!

      கீதா

      நீக்கு
  16. கலகலகலவென காவிரி நடக்கும் காணொளி கவர்ந்தது இல்லையோ.. பாடல் கவர்ந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் இந்தப் பாட்டு இப்பதான் கேட்டேன். இந்தக் காணொளிக்கு காவிரி பற்றிய பாட்டு போட தேடியப்ப இதுகிடைத்தது....எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது.

      படம் - கோவில் மணியோசை - பாடல்எழுதியவர் கங்கை அமரன் இசையும் அவரே. பாடியவர் சித்ரா என்று போட்டிருந்தது இப்படியான படம் எல்லாம் வந்ததுஎன்றே தெரியல பாட்டும் இப்பதான் கேட்கிறேன் ஸ்ரீராம். நீங்க கேட்டிருப்பீங்க.. உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்..

      அதனால அதைச் சேர்த்தேன்...

      கீதா

      நீக்கு
  17. வணக்கம் சகோதரி

    பெரும் மரத்தின் மற்றும் சபிக்கப்பட்ட யானைகள், ரிஷிகளின் கதையும், வித்தியாசமாக உள்ளது. தல்க்காடு காரணப்பெயர் தெரிந்து கொண்டேன். அந்த மரத்தின் வேர்களிலும், அனேக உருவங்கள் தெரிகின்றன.

    காவிரி பீச் நன்றாக உள்ளது. மணல் வெளியும், குறைந்த அளவு ஆழமேயுள்ள ஆற்றின் தண்ணீரும், கண்களுக்கு நிறைவை தந்திருக்கும். இயற்கை காட்சிகள் ரசிக்க வைத்தன. காணொளியும் நன்றாக உள்ளது. கோவிலைப் பற்றிய மற்றப் பதிவுகளையும் படிக்க ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அந்த மரத்தின் வேர்களில் உருவங்கள் எனக்கும் தெரிந்தன.
      ஆனால் இம்மரமாக இருக்க சான்ஸ் இல்லை,. என்பது எனக்குச் சந்தேகம் அக்கா. மரத்தையும் அதனடியில் லிங்கம் எல்லாம் பார்த்ததும் இந்தக் கதை நினைவுக்கு வந்தது அதனால் பகிர்ந்தேன்.

      காவிரி பீச் நல்லாருக்கு அக்கா உங்க பசங்க கிட்ட சொல்லி பேரன் பேத்திகளைக் கூட்டிக் கொண்டு போங்க ஒரு நாள் ட்ரிப்தான். பசங்க எஞ்சாய் பண்ணுவாங்க ஆழம் இல்லை என்பதால் பாதுகாப்புதான்ஆனால் மழைக்காலத்தில் எப்படி இருக்கும் என்று தெரியலை.

      நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  18. கொஞ்சம் வெயில் காலத்தில் ஆறு, குளங்களில் குளிப்பது சுகம். நான் தாமிரவருணியில் தினமும் (பல மாதங்கள்) குளித்திருக்கிறேன். சில நேரங்களில் மாலையிலும் சென்று குளிப்போம்.

    காவிரி படங்களைப் பார்க்க அழகு. நேற்றுத்தான் படித்தேன், காவிரி சுமார் 700 கிமீ நீளம், கங்கை 2500 கிமீ நீளம் என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, நானும் ஊரில் இருந்தப்ப ஆற்றுக் குளியல் செமையா இருக்கும். நிறைய குளித்திருக்கிறேன். முதலை பயம் இல்லை பாருங்க என்ன...தண்ணிப் பாம்பு, கரையோரங்களில் புதர்களில் சில பாம்புகள்....!!!!!!!

      காவிரி அழகு, நெல்லை. நெல்லை, பிரம்மபுத்திரா கங்கையை விட நீளம். மானசரோவர் அருகில் உற்பத்தியாகிறது... கங்கையை பேசும் அளவு ஏன் பிரம்மபுத்திராவைப் பற்றி நாம் பேசுவதில்லை? அதுவும் நதிதானே!

      கீதா

      நீக்கு
  19. படங்கள் வழக்கம்போல அழகு.
    முதல் காணொளி கண்டேன் இரண்டாவது இயக்கமில்லை.

    வரலாற்று தகவல்கள் சொல்லிச் சென்றது சிறப்பு.

    நெல்லைத் தமிழரும் வந்தாரா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி, கருத்திற்கு

      ஆமாம் நெல்லையும் வந்தார், கில்லர்ஜி.

      கீதா

      நீக்கு
  20. திண்ணை வீடுகள் எனக்கு பிடிக்கும். இதம்பாடல் எங்கள் வீட்டில் இருந்தது.

    தற்போது இருக்கும் மிச்ச வீடுகளின் திண்ணைகள், வியாபார நோக்கில் தடுப்புச்சுவர் வைத்து இரண்டு கடைகளாக மாறி வருகிறது.

    கோவிலுக்கு வணங்க வந்தவர்கள் பண்பாடு இல்லாமல் தலைக்கவசத்தை நந்திமீது வைப்பது அநாகரீகம்..

    அதுவும் உங்களது (மூன்றாவது) கண்ணில் பட்டு இருக்கிறதே.... அவனது நேரம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்ணை வீடுகளே அழகுதான் இல்லையா? கில்லர்ஜி. உங்களின் அந்த வீடெல்லாம் இப்போது இருக்காது இல்லையா?

      //தற்போது இருக்கும் மிச்ச வீடுகளின் திண்ணைகள், வியாபார நோக்கில் தடுப்புச்சுவர் வைத்து இரண்டு கடைகளாக மாறி வருகிறது.//

      ஆமாம் அதை ஏன் கேக்காறீங்க! எங்க ஊர் உட்பட....ஓரிரு வீடுகள்தன திண்ணையோடு இருக்கின்றன மற்றவை எல்லாம் இடித்துக்கட்டப்பட்டுவிட்டன.

      கோவிலுக்கு வணங்க வந்தவர்கள் பண்பாடு இல்லாமல் தலைக்கவசத்தை நந்திமீது வைப்பது அநாகரீகம்..//

      உங்கள் கருத்துதான் எனக்கும். மக்களுக்கு அந்த நாகரீகம் இருந்தால் ஏன் பொது இடங்களில் அப்படி நடந்து கொள்ளப் போகிறார்கள். கில்லர்ஜி அது கோவிலாக இல்லை என்றாலும் கோவில் போன்றுதான் மரத்தினடியில் இறைவனின் திரு உருவங்களை வைத்திருக்கிறார்கள். எனவே எனக்கு அவர் அப்படி வைத்தது அது ஏனோ சரியாகப் படவில்லை அதனால்தான் அதுவும் வரட்டும் என்று எடுத்தேன். சொல்லலாமே இங்கு!!!!

      //அதுவும் உங்களது (மூன்றாவது) கண்ணில் பட்டு இருக்கிறதே.... அவனது நேரம்....//

      ஹாஹாஹாஹா....அதானே!

      நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  21. ​தலக்காடு தலை + காடு என்றும் பிரிக்கலாம். ஒரு காட்டின் துவக்கம் தலை என்ற அர்த்தத்தில் தலை காடு என்று வந்திருக்கலாம். தமிழ் சரித்திரத்தில் சோழர்கள் காவேரியில் அணை கட்டுவதை எதிர்த்து தலைக்காட்டில் யுத்தம் புரிந்தனர் என்பதுவே.

    படங்கள் சிறிதாக உள்ளன. அதனால் அழகு குறைந்து விடுகிறது, உதாரணமாக மலையை தூரத்தில் இருந்து எடுத்தால் சிறிய மண் மேடு போல் தான் தெரியும். அதையே ஜூம் பண்ணி நம் நெல்லை போல் ஒரு பெரிய சைஸ் படமும், நுணுக்கமாக மரம் முதலியனவற்றின் தோற்றத்தையும் பிரதிபலித்தால் நன்றாக இருக்கும்.
    மேலும் நீங்கள் எப்போதும் படங்கள் பெரிதாக இருந்தாலும் சிறிதாக்கி நடுவில் பதிக்கிறீர்கள். இது நன்றாக இல்லை.
    மொத்தத்தில் கட்டுரையின் லே அவுட் நன்றாக இல்லை

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜெ கே அண்ணா அப்படியும் பிரிக்கலாம்....எல்லாப் பகுதிகளுமே காடாக இருந்தவை தானே அப்புறம் நாடாகின மக்கள் பெருகப் பெருக...

      அண்ணா, இங்கு பகிர்ந்திருக்கும் படங்கள் எல்லாம் நான் ஓடும் வண்டியிலிருந்து எடுத்தவை.

      காவிரி பீச் படங்கள் தவிர.

      நான் மொபைலில் எடுத்தேன் கேமராவில் பேட்டரி குறைந்துவிட்டது. மொபைலில் எடுத்தவற்றை நான் பிக்ஸல் சிறிதாக்கக் கூட இல்லை. பெரிய படங்களதான்....ஆனால் ப்ளாகரில் போடும் போது இப்படித்தான் வரும்.

      //அதையே ஜூம் பண்ணி நம் நெல்லை போல் ஒரு பெரிய சைஸ் படமும், நுணுக்கமாக மரம் முதலியனவற்றின் தோற்றத்தையும் பிரதிபலித்தால் நன்றாக இருக்கும்.//

      நெல்லையோடு ஒப்பிடாதீர்கள். அவரளவு எனக்குத் திறமை எல்லாம் எனக்குக் கிடையாது. நான் ஏதோ என்னிடம் இருக்கும் வசதிகளைக் கொண்டு எடுக்கிறேன் அவ்வளவுதான்.

      ரொம்ப நன்றி ஜெ கே அண்ணா

      கீதா


      நீக்கு
  22. தலக்காடு புராணக் கதையும் படங்களும் மிக அருமை.
    படங்கள் காணோளி எல்லாம் நன்றாக இருக்கிறது. பயணத்தில் பார்த்த திண்ணை, தூண் வைத்த வீட்டு அழகு. ஒருபக்கம் கதைக்கு வைக்கும் கதவு மாதிரியும் இருக்கிறது, கடையும் வீடும் சேர்ந்து இருக்கும் போல வாங்கி விடலாம் கீதா. வீட்டில் குடியிருக்கலாம், கடையை வாடகைக்கு விட்டு மற்ற தேவைகளுக்கு வைத்து கொள்ளலாம்.
    கிராமம் , போகும் வழி பயண வழிதடங்கள் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிக்கா. ஆமாம்ல வீடுகள் ரொம்ப அழகாக இருக்கு....ஆமாம் சில கடைகளோடு ...

      வாங்கிவிடுவோம் கனவுலகில்!!

      போகும் வழி நன்றாக இருந்தது கோமதிக்கா.

      நன்றி கோமதிக்கா.

      கீதா

      நீக்கு
  23. //அதனால் மேலைகங்க மன்னர்களின் முந்தைய தலைநகரம் ஈரோட்டுக்கு அருகே இருக்கும் கஜல்ஹட்டி என்னும் ஊரில் அமைந்திருந்தது என்றும். மேயாறுக்கும் பவானிக்கும் நடுவே உள்ள அந்த ஊர் அன்று ஸ்கந்தபுரா என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றுத் தகவல்கள்.//

    வரலாற்று தகவல் தெரிந்து கொண்டேன்.

    //காவிரி பீச் என்று சுத்துப்பட்டுக் கிராமங்கள் முதல், சுற்றுலா பயணிகள் வரை எல்லோரும் இங்கு தண்ணீரில் விளையாடி, நீச்சலடித்து மகிழ்கிறார்கள்.//

    நல்ல பொழுது போக்கும் இடம் போலவே! தண்ணீரில் விளையாடி நீச்சலடிக்க என்று எல்லாம் இடம் இருந்தால் மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்படுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலாறு நிறைய இருக்குக்கா. நான் கொஞ்சம் இந்த இடம் பற்றி மட்டுமே எடுத்தேன்.

      நிச்சயமாக நல்ல பொழுது போக்கு இடம். எளிய மக்கள் முதல் பெரிய மக்கள் வரை. ஒரு நாள் சுற்றுலாவாகத் தலக்காடு பார்த்துவிட்டு வரலாம் .

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  24. கடைசி பாடலுடன் காணொளி அருமை. பரிசல்கள் வரிசை கட்டி நிற்கிறது.பார்க்கவே அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பாட்டு நல்லாருக்குல்ல? இதுதான் முதல் முறை கேட்டேன். மனதில் மெட்டு பதிந்துவிட்டது. கங்கை அமரன் நன்றாக இசை அமைத்திருக்கிறார்.

      நடந்துகொண்டே எடுத்ததால் ஷேக். நின்று எடுக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

      ஆமாம் பரிசல்கள் வரிசையாக இருப்பதைப் பார்க்க அழகாக இருக்கும் ஹொக்கேனக்கலில் இன்னும் நிறைய இருக்கும் அழகாக இருக்கும்,

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  25. இரட்டைச் சகோதரர்கள் - கதையும், படங்களும் நன்றாக இருக்கிறது கீதா.
    மிக அவசரம் அவசரமாக கணினி வேலை செய்யும் போது பின்னூட்டம் போட வேண்டும் என்று போடுகிறேன். நேற்றே போட்டு விட்டீர்கள் போல நான் இன்று தான் பார்த்தேன். சார் தேதி படி இறைவனை அடைந்த நாள் இன்று அதனால் மனம் ஒரு நிலையில் இல்லை திதிப்படி 1 ஆம் தேதி வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைத்தேன் கோமதிக்கா. எப்படிக் கமென்ட் கொடுத்தீங்க கணினி சரியாக இல்லையே என்று. ஒரு வேளை சரியாகிவிட்டதோன்னு கேட்க நினைத்தேன்....உங்கள் கருத்தில் பார்த்துவிட்டேன். அந்தச் சுருக்கமான நேரத்திலும் வாசித்துக் கருத்துகள் இத்தனை அவசர அவசரமாகப் போட்டிருக்கீங்க கோமதிக்கா ரொம்ப நன்றி.

      சார் தேதி படி இறைவனை அடைந்த நாள் இன்று அதனால் மனம் ஒரு நிலையில் இல்லை திதிப்படி 1 ஆம் தேதி வருகிறது.//

      ஓ மாமாவின் தினம் இல்லையா? அக்கா புரிந்து கொள்ள முடிகிறது உங்கள் மன நிலையை. பிரார்த்தனை தவிர வேற என்ன செய்ய முடியும் இல்லையா?

      நன்றி கோமதிக்கா இந்த மன நிலையிலும் வந்து கருத்து போட்டதற்கு. உங்கள் மன அமைதிக்கு என் பிரார்த்தனைகளும்

      கீதா

      நீக்கு
    2. மனநிலை உங்களுடம் உரையாடினால் மாறும் கீதா.

      நீக்கு
  26. //பாருங்க இந்த இடத்தில் எல்லாம் ஹெல்மெட்டை வைத்திருக்கிறார் ஒருவர்//

    அதுவும் பயங்கரமாக தோற்றம் அளிக்கிரது ஹெல்மட்டில் வரைந்து இருக்கும் படம்.

    பதிலளிநீக்கு