1960 களின் பின்பாதியில் நான் எழுத்துக் கூட்டி வாசிக்க ஆரம்பித்த போது போடி, ராசிங்கபுரம் வழியாகச் செல்லும் பஸ்களின் நெற்றியில் எழுதியிருந்த மதுரை-உத்தமபாளையம், பெரியகுளம்-குமுளி, தேனி டு தேனி, பழனி-தேவாரம் போன்றவைகள்தான் நான் ஆர்வத்துடனும் அதிசயத்துடனும் வாசித்தவைகள்.
படங்கள் இணையத்திலிருந்து
அன்றைக்கெல்லாம் எங்கள் ஊர் வழியாக 4 அல்லது 5 பேருந்துகள்தான் பயணத்திற்கு. அதில் இரண்டு பேருந்துகள் ‘சதர்ன் ரோட்வேய்ஸ்’ எனும் டிவிஎஸ் நிறுவனத்தின் வண்டிகள். மற்ற இரண்டு தனியார் பேருந்துகள். ஓரிரு வருடங்களுக்குப் பிறகு சிவந்த வண்ணத்திலுள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான பேருந்துகள் திண்டுக்கல்லிலிருந்து தேவாரம் வரை செல்லும் பேருந்து வந்தது.
படங்கள் இணையத்திலிருந்து. இந்தப் பேருந்துகள் உங்களுக்கும் பழைய நினைவுகளை எழுப்பலாம்...
அதன் பின் அதிகமான பேருந்துகளை வைத்திருக்கும் சதர்ன் ரோடுவேய்ஸ் போன்றவைகள் அரசுடைமையாக்கப்பட்டு பாண்டியன், சேரன், சோழன், பல்லவன், கட்டபொம்மன் என பல போக்குவரத்துக் கழகங்களாக மாறின. திருவள்ளுவர் பெயரில் விரைவுப் பேருந்துக கழகம். பிறகும் பல மாற்றங்கள் வந்தன. இப்போது அவை எல்லாம் மீண்டும் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகமாக ஆகியிருக்கிறது. இது போல் இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் போக்குவரத்துக் கழகங்கள் உண்டுதான். அவற்றின் முக்கிய நோக்கம் லாபமல்ல. சேவைதான்.
நம்மை அழைத்துச் செல்லும் சுற்றுலா பேருந்து
அப்படி கேரளாவில் Kerala State Road Transport Corporation (KSRTC) - கேரளா ஸ்டேட் ரோட் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் – உண்டு. பல காரணங்களால் நஷ்டத்தில் நகரும் போக்குவரத்துக் கழகம் இப்போதெல்லாம் ஊழியர்களுக்குச் சம்பளம் கூடக் கொடுக்க முடியாமல் திணறுகிறது. நஷ்டத்தைக் குறைக்க பல புதுமைகளையும் மேற்கொள்ளும் கழகம், கடந்த வருடம் சுற்றுலா மூலம் தங்கள் வருமானத்தைக் கூட்ட முயன்று பயணிகளை ஒரு நாள் இரண்டு நாள் சுற்றுலா பயணத்திற்கு ஏற்பாடு செய்தது. கடந்த சில மாதங்களில் அது வெற்றிகரமாக நடைபெற்றும் வருகிறது.
உட்புறம் உள்ளவை கீழே உள்ள காணொளியில் யுட்யூப் சுட்டியுடன்
இரண்டு நாள் பயணத்தில் பயணிகளுக்குத் தங்குவதற்குப் பேருந்துகளையே உருவமாற்றம் செய்து ரயில் பெர்த் போன்று அமைத்து, பலர் பேருந்து நிலையங்களிலேயே பாதுகாப்பாகத் தங்கவும் ஏற்பாடு செய்ததுதான் இதில் எல்லோரையும் வியப்பிற்குள்ளாக்கிய ஒன்று.
அத்தகைய ஒரு சுற்றுலா பயணத்தை நிலம்பூரிலிருந்து மூணார் வரை மேற்கொண்ட என் அனுபவத்தைத்தான் நான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இதிலுள்ள வேறு ஒரு சிறப்பு என்னவென்றால் சாதாரண வழிகளில் அல்லாமல் மலைச்சாலைகள் வழி செல்வது என்பதும்தான். அதனால் காண்பதற்கரிய பல அரிய காட்சிகளையும் இடங்களையும் காணவும் முடிந்தது என்பதுதான்.
நிலம்பூர் KSRTC நிலையத்தில் ரூ 500 கொடுத்து எங்களுக்காக இருக்கைகளை முன் பதிவு செய்தோம். நான், மனைவி, மகள், உறவினர்கள், மனைவியின் தோழிகள் என்று 10 பேர். பேருந்தில் 50 இருக்கைகளிலும் பயணிகள். ரூ 1480 வீதம் (இது பயணத்திற்கு. இது தவிர சாப்பாட்டுச் செலவு நாம்தான் ஆங்காங்கே பார்த்துக்கொள்ள வேண்டும்) ரூ 67,000. அதில் குறைந்தபட்சம் 25,000 லாபம் KSRTC க்குக் கிடைக்க வாய்ப்புண்டு.
28-05-23 அன்று காலை 3 மணிக்கு நிலம்பூர் பேருந்து நிலையத்தை அடைந்து, உள்ளே என் காரை பார்க் செய்துவிட்டு வண்டி ஏறினோம். 3.30க்குக் கிளம்பிய வண்டி பல இடங்களிலிருந்து ஆட்களை ஏற்றி காலை 7.30க்குச் சாலக்குடியை அடைந்தது. அங்கு ஒரு உணவகத்தில் காலை உணவு உண்ட பின் மூணாறுக்கு முக்கிய சாலை வழி அல்லாது காட்டுப் பாதையில் வண்டி பயணமானது.
மாமலைக்கண்டம், மாங்குளம், லட்சுமி எஸ்டேட் வழியாக மூணார் செல்லும் வழி. எதிரே வரும் வாகனத்திற்கு வழி கொடுத்தும் போகச் சிரமமான வழிகள். திறமையான ஓட்டுநர் ஃபெய்சல் கவனமாகவும் ஓட்டி பாதுகாப்பாக எங்களைக் கூட்டிச் சென்றார்.
ஒரு போதும் தனியார் சுற்றுலா வண்டிகளோ, ஏன் நாம் தனியாகவோ கூட நம் சொந்த வாகனத்தில் இப்படிப்பட்ட ஆபத்தான வழிகளில் போக மாட்டோம். போக வாய்ப்பும் கிடைக்காது. மலை உச்சியில் பாறை மேல் 50 பேரை சுமந்து கொண்டு ஒரு பேருந்தில் பயணம் என்பது உண்மையிலேயே அருமையான அனுபவம். (இதைக் காணொளியில் காணலாம்.)
மாமலைக்கண்டம் பள்ளியின் பின்னே தூரத்தில் தெரியும் அருவி
பேருந்து மாமலைக்கண்டம் உயர்நிலைப் பள்ளியின் முன் நின்றது. மலை உச்சியில் ஒரு பள்ளி. அதன் பின் தூரத்தில் ஒரு பெரிய மலை உச்சியிலிருந்து கொட்டும் நீர்வீழ்ச்சி. கோடைகாலமானதால் நீரின் அளவு குறைவுதான்.
மாமலையும் அதன் கீழே கண்டமும். கண்டம் என்றால் வயல். நல்ல பெயர். மின்சாரம் இல்லாத இப்பகுதியில் கேரளாவில் முதன் முறையாகத் தூரத் தெரியும் நீழ்வீச்சியிலிருந்து Hydro Electricity – நீர்மின்சாரம் உற்பத்தி செய்து, உபயோகித்து புரட்சி செய்திருக்கிறது இந்தப் பள்ளி. அப்படி இந்தப் பள்ளியும், மாமலைகண்டமும் வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றன. Necessity is the mother of invention என்பது எவ்வளவு உண்மை. மனமிருந்தால் மார்கம் உண்டு. Where there is a will there is a way.
அங்கிருந்து போகும் வழியில் காட்டின் நடுவே ஒரு நதி பாறைகளுக்கிடையே. அங்கும் நாங்கள் இறங்கி சிறிது நேரம் அந்த அழகை அனுபவித்து ரசித்தோம்.
பின் போகும் வழியில் பேருந்து மீண்டும் முக்கியச் சாலையில் பிரவேசித்தது. அது செய்யப்பாறா நீர்வீழ்ச்சியைக் காண்பிக்கத்தான் என்பது வண்டி நின்றபின் தான் தெரிந்தது. அருமையான நீர்வீழ்ச்சி. அங்கு குளிப்பதற்கு அனுமதி கிடையாது. பார்த்து மகிழலாம்.
மதியம் 2.30க்கு எங்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்திருந்த ஒரு Resort – ரெசார்ட்டில் மதிய உணவு. மீன் குழம்புடன் சாப்பாடு. ரூ 100 தான். ரெசார்ட்டில் வெளிநாட்டவர்களும் தங்க வருகிறார்கள். ரெசார்ட்டின் பின் புறம் தெளிந்த நீர் ஓடும் ஆறு. கட்டிடங்களுக்குப் பதிலாக கூடாரத்தினாலான குடியிருப்புகள், சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்காமல். பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
யானைக்குளம்
அதன் பின் மீண்டும் காட்டுப் பாதைகளில் பயணமானோம். வண்டி யானைக்குளம் எனுமிடத்தில் நின்றது. குளமல்ல அது ஒரு ஆறுதான். ஆற்றில் ஒரு பகுதியில் மக்கள் வசிக்குமிடம். மறுபகுதியில் விசாலமான ஆற்றின் கரை. அதை ஒட்டிக் காடும் மலையும். யானைகள் கூட்டமாகத் தண்ணீர் குடிக்கவும் குளிக்கவும் வருமிடம். நாங்கள் போன நேரத்தில் யானைகளைப் பார்க்க முடியவில்லை.
கொஞ்ச தூரம் சென்றதும் தேயிலைத் தோட்டம் ஆரம்பமானது. லட்சுமி எஸ்டேட், கண்ணன் தேவன் கம்பெனி. இப்போது TATA -டாட்டாவுக்குச் சொந்தமானது. ஏறத்தாழ 28 கிமீ தூரம் வரை மூணாறு அடையும் வரை இந்த எஸ்டேட்டின் இடையில்தான் போக வேண்டும். திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில் 100, 200 வருடங்களுக்குக் குத்தகைக்கு எடுத்து எஸ்டேட் ஆக்கிய இடங்கள். அருமையான இடங்கள். கண் கொள்ளாக் காட்சிகள். எதிர்வரும் ஒவ்வொரு வாகனமும் மிகவும் கவனமாகக் குறைந்த இடத்தில் ஒன்றுக்கொன்று கடந்து போக வேண்டும்.
மாங்குளம் கைனகிரி நீர்வீழ்ச்சி
பேருந்து ஒரு சிறிய பாலத்தின் அருகே நின்றதும் இறங்கினோம். ஒரு சிறிய ஆறு. மாங்குளம் கைனகிரி நீர்வீழ்ச்சி என்ற தகவல் பலகை. மலை உச்சியானதால், நீர்வீழ்ச்சியைக் காண கீழே இறங்கிச் சென்றோம். அனுமதிச் சீட்டு ஒருவருக்கு ரூ 50. பாறைகளுக்கிடையே பிடித்து இறங்கக் கயிறுகள் கட்டப்பட்டிருந்தன. (காணொளியில் காணலாம்) இடப்புறம் ஒரு நீர் வீழ்ச்சி. காணக் கிடைக்காத அருமையான காட்சி. திரும்ப வந்து பாலத்திலிருந்து பார்த்த போதுதான் நீர்வீச்சியை உருவாக்க உடைத்த பாறையைக் காண முடிந்தது.
பனி மூட்டத்தில் பயணம்
மீண்டும் தேயிலைத் தோட்டத்தின் இடையில் பயணம். பனி மூட்டத்தில் பயணம் அருமை. பின் வண்டி மூணார் அரசுப் பேருந்து நிலையத்தில் நின்றது. நடத்துநர் 16 பேருக்கு ஒரு பேருந்து என்று எங்களைப் பேருந்துக்கு அழைத்துச் சென்றார். பேருந்தில் படுப்பதா? எப்படி? என்ற குழப்பம்.
நேரில் பார்த்த போதுதான் புரிந்தது. மலேஷியா, தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா, வியட்நாம் போல் நாம் நினைத்தால் சுற்றுலா மூலம் நாட்டின் வருவாயைப் பெருக்கி சுற்றுலா செய்து மகிழ்ச்சியாய் வாழலாம் என்று.
உட்கார இடம், முகம் கழுவ வாஷ் பேசின்
ரயிலில் உள்ளது போல் பேருந்தை ஒரு கம்பார்ட்மென்டாக மாற்றியிருந்தார்கள். மேலும் கீழுமாய் இரண்டு படுக்கைகள் (berth) வீதம் பேருந்தின் ஒரு பாதியில் 8 –ம் மறுபாதியில் 8-ம் என்று berths – படுக்கைகள். இடையே உள்ளே ஏற வழி, உட்கார இடம், முகம் கழுவ வாஷ் பேசின். ஒவ்வொரு படுக்கையிலும் ஒரு விரிப்பும், போர்த்திக் கொள்ள ஒரு கம்பளியும். (இதை யுட்யூப் காணொளியில் காணலாம்.) பேருந்தின் வெளியே கழிப்பிட வசதியும் உண்டு. 24 மணி நேரமும் இயங்கும் பேருந்து நிலையம் என்பதுதான் இங்குள்ள பாதுகாப்பு. உணவருந்தி குளித்தபின் அடுத்த தினம் காணக்கூடிய காட்சிகள் என்னவாக இருக்கும் என்ற ஒரு கற்பனை மனதில் ஓட உறங்கிப் போனேன். சுகமான உறக்கம்.
காணொளி 18 நிமிடங்கள் 8 நொடிகள். முதல் 3.30 - 4 நிமிடங்கள் பதிவிலுள்ள முதல் பகுதி பழைய நினைவுகள் பகுதி. அதை நீங்கள் தவிர்த்துவிடலாம். அதன் பின் பயணம் பற்றி. படங்கள், காணொளிகளுடன். வழியில் ஒரு பேருந்து மலையில் வளைந்து ஏற்றத்தில் ஏறும் வழி காணொளியில் 12:01 நிமிடத்திலிருந்து 12:55 வரை
-----துளசிதரன்
விளக்கங்கள் அருமை... சிறப்பான பயணம்...
பதிலளிநீக்குஉங்கள் கருத்திற்கு மிக்க நன்றி டிடி
நீக்குதுளசிதரன்
சமீபத்தில் மூணார் சென்று வந்தோம்...
பதிலளிநீக்குடிடி, நீங்களும் சமீபத்தில் மூணார் சென்று வந்தது மிக்க மகிழ்ச்சி கருத்திற்கும் நன்றி
நீக்குதுளசிதரன்
கட்டுரை, படங்கள், வீடியோ எல்லாம் கொள்ளாம் என்றாலும் வீடியோ எடிட்டிங்கில் கவனம் செலுத்தியிருக்கலாம். வெள்ளச்சாட்டங்கள் அழகு.
பதிலளிநீக்கு.. Jayakumar
வெள்ளச்சாட்டங்கள்- அருவியா? கொள்ளாம் - ? அடிபுள்ளிம்பாங்களே அது மாதிரியா?
நீக்குநீங்க்ள் சொல்லியபடி வீடியோ எடிட்டிங்கில் இனி கவனமாக இருக்கிறோம் சார்.
நீக்குகட்டுரை, படங்கள், வீடியோ எல்லாம் கொள்ளாம் //
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் ஸார்.
துளசிதரன்
நெல்லைத்தமிழன், வெள்ளச்சாட்டங்கள் என்றால் அருவி தான். வெள்ளம் நீர். சாட்டம் - பாய்தல்- நீர்வீழ்ச்சி என்பதுதான் வெள்ளச்சாட்டம். கொள்ளாம் என்றால் பரவாயில்லை நன்று.
நீக்குஅடிபொளி என்றால் தமிழில் இப்போது சொல்லப்படும் கலக்கிவிட்டீர்கள் என்ற அர்த்தம். grand
துளசிதரன்
சாட்டம் - குதித்தல் துள்ளுதல், சாடுதல்....இப்படி. தமிழிலிருந்து வந்ததுதானே மலையாளம்.
நீக்குதுளசிதரன்
கேரளத்தின் மனம் கவரும் பல இடங்களுக்கும் சுற்றுலா சென்றிருக்கிறேன். இப்படி அடர்த்தியான அழகான காடுகளுக்கிடையே பயணித்ததில்லை. காட்சிகளைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குகூமுட்டை இது முதல் தடவையாக எங்கள் தளத்திற்கு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் தளமும் காண்கிறோம்.
நீக்குஆமாம் காடுகள் அவற்றின் அழகு தனி. ஒவ்வொரு காடுகளூக்கும் ஒவ்வொரு குணம், ஒவ்வொரு வ்டிவம், அருமையாக இருக்கும்..மூணாருக்குச் செல்வது இது மூன்றாவது முறை. மூணாரின் இப்பகுதி மிக அருமையாக இருந்தது.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கூமுட்டை அவர்களே.
நீங்கள் கூமுட்டை என்று உங்களைச் சொல்லிக் கொள்ளலாம் ஆனால் எங்களுக்கு அதைச் சொல்லி பதில் கொடுப்பது ஏதோ போன்று உள்ளது. உங்கள் பெயரை அது புனைபெயராகக் கூட அதைச் சொல்லலாமே.
துளசிதரன்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. போக்குவரத்து கழகப் பேருந்தின் சுற்றுலா பயணம் பற்றிய இப்பதிவை ரசித்துப்படித்தேன். நல்ல விபரமான தகவல்கள். பல ஊர்களுக்கு செல்லும் பஸ்களின் விபரங்களின் தொகுப்பும், நன்றாக உள்ளது. படங்கள் அத்தனையும் கண்களை கவர்வதாக அமைந்துள்ளது.
செல்லும் வழியெங்கும், இயற்கையின் வனப்புகள், நீர்வீழ்ச்சிகள், மலைப்பாங்கான உயரத்தில் இருந்து கொண்டு சுற்றிலும் பசுமை மிக்க இடங்களை கண்டு களிப்பது, தேயிலைத் தோட்டம், அதன் விபரங்கள் என இச்சுற்றுலா பதிவின் அத்தனை விபரங்களை படிக்கும் போதே மனதிற்கு பெரும் மகிழ்ச்சியளிக்கின்றன.
அந்தப் பள்ளியின் பெயரும், (மாமலைக் கண்டம்) அதன் காரணமும் அருமையாக உள்ளது. அந்த மலை சூழ் இடமும், அந்த நீர்வீழ்ச்சியும் அழகு. பதிவில் இடம் பெற்ற அத்தனை நீர்வீழ்ச்சிகளும் ஆறு, நதி (யானைக்குளம்) போன்ற பாறைகளின் இடையே நீர் சூழ்ந்த அனைத்துமே அழகாக உள்ளது. அனைத்தையும் கண்டு களித்தேன்
படுத்துறங்குவதற்காக அமைக்கப்பட்ட பேருந்தின் வசதிகள் குறித்த தகவலும் பிரமிப்பை தருகிறது. காணொளியையும் ரசித்துப் பார்த்தேன். அதில் தாங்கள் ஒவ்வொரு இடமாக கூறி விளக்கும் பேச்சையும் ரசித்தேன். இனி அடுத்த இப்பதிவுக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல விபரமான தகவல்கள். பல ஊர்களுக்கு செல்லும் பஸ்களின் விபரங்களின் தொகுப்பும், நன்றாக உள்ளது. படங்கள் அத்தனையும் கண்களை கவர்வதாக அமைந்துள்ளது.//
நீக்குமிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.
//செல்லும் வழியெங்கும், இயற்கையின் வனப்புகள், நீர்வீழ்ச்சிகள், மலைப்பாங்கான உயரத்தில் இருந்து கொண்டு சுற்றிலும் பசுமை மிக்க இடங்களை கண்டு களிப்பது, தேயிலைத் தோட்டம், அதன் விபரங்கள் என இச்சுற்றுலா பதிவின் அத்தனை விபரங்களை படிக்கும் போதே மனதிற்கு பெரும் மகிழ்ச்சியளிக்கின்றன.//
ஆமாம் நேரில் கண்ட போதும் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. உங்களுக்கும் படங்கள் பதிவு இரண்டும் மகிழ்வைத் தந்தன என்பது மிக்க மகிழ்ச்சி.
படங்களின் வழி நீங்களும் கண்டு களித்ததது மகிழ்ச்சி சகோதரி.
எனக்கும் பேருந்தில் இப்படி அமைத்திருப்பதைக் கண்டதும் வியப்பாகத்தான் இருந்தது. ரசித்ததுற்கு மிக்க நன்றி சகோதரி.
உங்கள் விரிவான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.
துளசிதரன்
பேருந்து சுமாராகத்தான் இருக்கு. வெயில் சூடு உள்ளே தெரியவில்லையா? நல்ல பேருந்தை உபயோகித்து கூட ரூபாய் வசூலித்தாலும் உபயோகம் என்று தோன்றுகிறது. இருந்தாலும் நல்ல பயணம். நானும் மூணாறு போகணும் என்று நினைத்துள்ளேன். ஒவ்வொரு சுற்றுலா இடங்களிலும் தங்குமிடம் அளவுக்கதிகமாக சார்ஜ் செய்வதால் இத்தகைய பேருந்து வசதி மிக உபயோகம்.
பதிலளிநீக்குமூணாறில், ரிசார்டுகளில் ஹோட்டல்களில் தங்குவதற்குப் பதிலாக, பேருந்துகளிலேயே உறங்க 100 ரூபாய் ஒரு இரவுக்கு வசூலிக்கிறார்கள் என்று முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன்.
எனக்கு இதில் ஒரு சந்தேகம். பேருந்தில் படுக்க இடம் என்பது ஓகே. ஆனால் குடிகாரர்கள், சிகரெட் உபயோகிப்பாளர் என்று அவர்களுடன் பேருந்தைப் பகிரும்போது, பயணம் மற்றும் இரவு தங்கள் தொல்லையாக மாறிவிடாதோ? இல்லை KSRTC இதில் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்காங்களா?
நீக்குநெல்லைத் தமிழன், நிறைய சுற்றுலா பேருந்துகள் இருக்கின்றன தனியார் பேருந்துகளும். இது கேஎஸ் ஆர் டிசி பேருந்து சாதாரண பயணிகள் பயணிக்கும் பேருந்துதான். இன்னும் செய்யலாம்தான். இதுவும் பரவாயில்லை. இதில் சென்றதால் ஜன்னல் வழியாகச் சில காட்சிகளை வீடியோ எடுக்க முடிந்தது. மற்ற பேருந்துகள் என்றால் ஜன்னல் வழியாகக் காண்பது கடினம்...
நீக்குபல அரசு சொகுசுப் பேருந்துகளும் ஒரு வருடம் ஓட்டுவிட்டு அதன் பின் இப்படி உருமாற்றம் செய்துவிடுகின்றனர். இந்த வசதி மிகவும் பயனுள்ளது. பயணம் செய்வது சாதாரணப் பேருந்துதான் என்றாலும் நல்ல பயணம்.
ஆமாம் 100 ரூக்குத் தங்கும்படியான பேருந்துகள் அப்படி நிறைய இருக்கின்றன மூணாரில், டெப்பொவில். ரொம்பவும் பயனுள்ளவை. டெப்போவில் வசதிகளும் உண்டு
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்
துளசிதரன்
அப்படி 100 ரூ கொடுத்துத் தங்குவது என்பது சுற்றுலாப்பயணிகளுக்கு மட்டுமல்ல யாருக்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம். என்று தெரிகிறது.
நீக்குதுளசிதரன்
பொதுவாக இங்கு பொது இடங்களில் சிகரெட் பிடிக்கக் கூடாது என்ற விதி உண்டு. வண்டிகளிலும்.
நீக்குநாங்கள் தங்கியிருந்த போது அப்படி எதுவும் கண்ணில் படவில்லை. மற்ற சமயங்களில் அங்கிருக்கும் செக்யூரிட்டிகள் கவனமாக கண்காணிப்பார்கள் என்று நினைக்கிறேன், நெல்லைத் தமிழன்.
உங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி நெல்லைத் தமிழன்
துளசிதரன்
குடும்பமாகத் தங்கும் போது செக்யூரிட்டிகள் கவனமாக இருப்பார்கள் மற்றவர்கள் தங்கும் போதும் கவனமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்படியான ஒரு குறுகிய இடத்தில் ஒருவர் புகை பிடித்தால் அவ்வளவுதான் எல்லோரும் மயங்கி விழத்தான் வேண்டும்.
நீக்குதுளசிதரன்
மே பயணத்தை, ஜூனிலேயே வெளியிட்டுவிட்டார் கீதா ரங்கன். இத்தகைய சுறுசுறுப்பை இப்போதான் பார்க்கிறேன். இல்லைனா ரொம்ப மாதங்கள் ஆகும் பதிவு போட.
பதிலளிநீக்குஆவ்வ்வ்வ் கர்ர்ர்ர்ர்ர்ர்:) பதிவு போட்டது உங்கட கீதா(க்கா) இல்லையாக்கும் ஹா ஹா ஹா இது துளசிஅண்ணன்... கீழே இருக்கிறார் பார்க்கேல்லையோ தேயிலைத்தோட்டத்தில் ஹா ஹா ஹா
நீக்குதெரியும் அதிரா. அதான் பதிவுல இருக்கே //நான், மனைவி, மகள், உறவினர்கள், மனைவியின் தோழிகள்// கீதா ரங்கன்(க்கா) வீட்டுல யார் யார் இருக்காங்கன்னு கூட எனக்குத் தெரியாதா? இதுக்கு முந்தி லால்பாக் பூந்தோட்டம் பதிவு போட்டிருந்தாங்க. லால்பாக்ல பூந்தோட்டக் காட்சி நடந்து 8-10 மாதங்கள் ஆகியிருக்கும்னு தோணுது. இப்போ அங்க மாம்பழக் கண்காட்சி நடக்கும் (அடுத்த வாரம் போகணும்). துளசி சாரோட பதிவு என்பதால் கட கடவென வெளியிட்டிருக்காங்க கீதா ரங்கன் சேச்சி ஹா ஹா
நீக்குஹாஹாஹாஹா நெல்லை....துளசியோடதுன்றதுனால தான் டக்கு புக்குனு போட்டுட்டேன்....உண்மைதான்....
நீக்குஆனா நாங்க ரெண்டு பேரும் ஒரு வாரமா சண்டை போட்டு....நான் தான் சண்டை போடுவேன்...நீ ஒழுங்கா வீடியோ அனுப்பலை, இது எடுத்திருக்கலாம் அது எடுத்திருக்கலாம் பாரு இங்க சரியில்லை வாய்ஸ் கூடுது மாத்தி மாத்தி பேசியிருக்க...இப்ப அதை கட் பண்ணி வீடியோக்கு ஏத்தாப்ல போடணும்...இன்ட்ரோ கூடுதல் இதுக்கு வீடியோ வேணுமா இப்படிச் சொல்லி மெசேஜ் அனுப்பி....சண்டை போட்டு....அப்புறம் ரெண்டு பேரும் வாட்சப்ல மெசேஜ் அனுப்பற டைம் ஒத்து வராது...நான் கேட்டதுக்கு பதில் வரத் தாமதமாகும்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...இப்படி போகும்.... அப்புறம் ஒரு வழியா செஞ்சு முடிப்போம்!!!.
துளசி சண்டை போட மாட்டார். ...!!! வந்தது வரைக்கும் போதும் விடு ஓவர் பெர்ஃபெக்ஷன் பார்த்து உன் டயத்தை வேஸ்ட் பண்ணாதன்னு சொல்லுவார்...
எனக்கா மனசு திருப்தியே இருக்காது, நெல்லை. அதனாலதான் என் பதிவுகள் அப்படியே தேங்கிக் கிடக்கு. எனக்கு அதற்கான மன நிலை வரணும்..
லால்பாக் இன்னும் பூக்காட்சி ஃபோட்டோஸ்ச் கொஞ்சம் இருக்கு தவிர லால்பாக் படங்கள் தான் இருக்கு,
அதுக்கு முன்ன சொல்லிடறேன் ஈரோடுல வெள்ளோடு பறவைகள் சரணாலயம் போனேன்....அது எப்ப வரும்னு நீங்கள் டைம் சொல்லுவீங்களே அதுக்காக இந்தத் தகவல்!!!!!!!!!!!!!!!!!!!!!ஹாஹாஹா
துக்கு முந்தி லால்பாக் பூந்தோட்டம் பதிவு போட்டிருந்தாங்க. லால்பாக்ல பூந்தோட்டக் காட்சி நடந்து 8-10 மாதங்கள் ஆகியிருக்கும்னு தோணுது..//
ஹாஹாஹாஹா அதே அதே...
இப்போ அங்க மாம்பழக் கண்காட்சி நடக்கும் (அடுத்த வாரம் போகணும்). //
ஹே நான் போய் வந்தாச்சு!!!! ஹிமாம் பசந்த் கிலோ 150....ஒரு பழமே கிட்டத்தட்ட.....அவ்வளவு பெரிசா இருந்தது....மல்கோவா 200 ரூ......
பலாப்பழம் ஒருகிலோ 100 ரூ...படம் எதுவும் எடுக்கலை....லால்பாக் படங்கள் தான் எடுத்தேன் மாம்பழம் படங்கள்...எடுக்கவில்லை ரொம்ப மக்களா இருந்தா எனக்கு அவ்வளவாக எடுக்கப் பிடிப்பதில்லை. வேறு வழியில்லைனா எடுப்பேன்...
கீதா
நெல்லைத் தமிழன், கீதாவைப் பற்றி சொல்லியிருக்கும் கருத்தை வாசித்து சிரித்துவிட்டேன். அவரிடமும் சொன்னேன்.
நீக்குஅவர் பதிவுகள் ஒவ்வொன்றிலும் நாரைகள் வாத்துகள் என்பதால் அவை எல்லாம் மெதுவாகத்தானே நடக்கும் அதெல்லாம் முடித்துவிட்டுச் செய்வதற்குள் ...அவர் தானே ஓட்டுநர். ஓட்டுநர் எப்ப ஓட்டுறாரோ அப்பத்தானே நம்ம வண்டி நகரும் அது போலத்தான். இப்ப வண்டி கொஞ்சம் ஸ்பீட் எடுத்திருக்கிறதே என்று சந்தோஷம். அடுத்த பகுதி மூணார் இன்னும் சுற்ற வேண்டுமே அதுவரை வண்டி பிரேக் போட்டுவிடாமல் ஓடும் இதே வேகத்தில் என்று நினைக்கிறேன்!!!
உங்கள் நகைச்சுவைக் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்
துளசிதரன்
//அவை எல்லாம் மெதுவாகத்தானே நடக்கும் அதெல்லாம் முடித்துவிட்டுச் செய்வதற்குள் ...// துளசிதரன் சார்... நான் சும்மா கலாய்ப்பேன் அவ்வளவுதான். கீதா ரங்கனுக்கு என்ன என்ன responsibilities இருக்கு, இணையத்துக்கு எவ்வளவு நேரம் வர இயலும் என்பதையெல்லாம் கொஞ்சம் அறிந்தவன். அவர் இவ்வளவு ஆர்வத்தோடு பதிவுகள் (நாரை போன்றவை) போடுவதே அதிகம். நான் சில பதிவுகள் எழுதும்போது (எல்லா சௌகரியமும் இருந்தும்) எவ்வளவு நேரம் எடுக்கிறது என்பது எனக்குத் தெரிகிறது. She is to be admired. உண்மையாச் சொல்றேன்.
நீக்குநெல்லை - ஹையோ புல்லரிச்சுப் போச்சு கேட்டோ!! மீக்கு கையும் ஓடலை காலும் ஓடலை! நந்னி நந்னி கேட்டோ!
நீக்குதுளசியும் என்னைக் கலாய்த்திருக்கிறார். அவர் வாய்ஸ் கேட்டுத்தானே டைப்பினேன்....சிரித்துக் கொண்டே டைப்பினேன். அது போல அவருக்கும் தெரியும் நீங்க என்னைக் கலாய்ப்பீங்கன்னு....நானும் கலாய்ப்பேன்னு!!!
நல்ல காலம் உங்க கண்ணுல வெள்ளோடு பத்தி சொன்னது படலை போல!!!ஹிஹிஹிஹி....ஓடிடறேன்.
கீதா
கீதா ஓடிடுங்கோ ஓடிடுங்கோ.. ஹையோ ஹீல்ஸ் ஐக் கழட்டித் தேம்ஸ்ல எறிஞ்சுபோட்டு ஸ்பீட்டா ஓடிப்போய்ப் புகைக்கூட்டுக்கு கீழ ஒளிச்சிடுங்கோ:)... நெல்லைத்தமிழன் ஐஸூ வைக்கிறார்ர்:)) ஹா ஹா ஹா மீயும் ஓடிடுறேன்:)
நீக்குஹையோ கீதா டப்பு டப்பா எழுதுறீங்க அது கேட்டோ இல்ல சேட்டா.. நெல்லைத்தமிழன் சேட்டா... ஹா ஹா ஹா..
நீக்குஇதுக்கு ஒரு கொமெண்ட் போட்டேன், பார்த்துப் பத்திரமாக பப்ளிஸ் பண்ணுங்கோ:)
ஹாஹாஹாஹா ஓ நோ நோ பாதி ஞானி அதிரா / புலாலியூர் பூசானந்தா நீங்களே உங்களை இப்படிச் சொல்லிக்கலாமோ!!!! தேம்ஸ் கரையில் ஆஸ்ரமம் வைச்சிருக்கற இடத்துல செருப்பைத் தூக்கிப் போட சொல்றீங்களே...அப்புறம் மக்கள் நினைப்பாங்க இந்த சாமியார் பாதி ஞானிதான் போல அதான் செருப்பு தூக்கி வீசுறா இந்த கீதான்னு!!! பேரு வந்துருமாக்கும்...அப்புறம் ஆஸ்ரமம் பிசினஸ் என்னத்துக்காறது....!!!!!! எதுக்கும் அந்த வைர நெக்லஸை பத்திரமா வைச்சுக்கங்க!
நீக்குகீதா
கரெக்ட் நீங்களும் ஓடிடுங்க...நாம ரெண்டு பேரும் கொஞ்சம் மறைஞ்சு இருந்துட்டு வருவோம்!!!
நீக்குகீதா
அது கேட்டோ இல்ல சேட்டா.. நெல்லைத்தமிழன் சேட்டா... ஹா ஹா ஹா..//
நீக்குஹாஹாஹா ஏற்கனவே சேட்டன் தான் அதிரா அதிலு எந்தா சம்சயம்!!!!!
கீதா
துளசிதரன் சார்... நான் சும்மா கலாய்ப்பேன் அவ்வளவுதான். கீதா ரங்கனுக்கு என்ன என்ன responsibilities இருக்கு, இணையத்துக்கு எவ்வளவு நேரம் வர இயலும் என்பதையெல்லாம் கொஞ்சம் அறிந்தவன். அவர் இவ்வளவு ஆர்வத்தோடு பதிவுகள் (நாரை போன்றவை) போடுவதே அதிகம். நான் சில பதிவுகள் எழுதும்போது (எல்லா சௌகரியமும் இருந்தும்) எவ்வளவு நேரம் எடுக்கிறது என்பது எனக்குத் தெரிகிறது. She is to be admired. உண்மையாச் சொல்றேன்.//
நீக்குநெல்லைத் தமிழன், நீங்கள் சொல்வது மிகவும் சரியே. எனக்கும் தெரியும் அவரது பணிகள் தினமும் வாட்சப்பில் தொடர்பில் இருக்கிறோமே...எல்லா விஷயங்களும் பரிமாறிக் கொண்டு.
இங்கு அதிராவும் (சகோதரி என்று சொல்லவிலை அவர்கள் சின்னப் பிள்ளைதானே!), நீங்களும் கீதாவைக் கலாய்த்த வார்த்தைகளைக் கண்டதும் எனக்கும் கலாய்ப்பு வந்துவிட்டது. கல்லூரியிலிருந்து பழக்கம் என்பதாலும். அவர் எனக்குச் செய்து வருவது பேருதவி அதை நான் என்றென்றும் மறக்கவே முடியாது.
நீங்கள் கீதாவைக் கலாய்ப்பதும் கீதா உங்களைக் கலாய்ப்பதும் தெரிந்த விஷயமே. அது சுவாரசியமாகவே இருக்கிறது. ரசிக்கிறேன்
துளசிதரன்
அதிரா சகோதரி, அது நெல்லைத்தமிழனுக்கு சேச்சியின் மேல் உள்ள பாசமாக இருக்கும். பாருங்கள் எப்படி அழகாகச் சொல்லியிருக்கிறார் வாசிப்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது.
நீக்குநான் இதுவரை பொதுவெளியில் கீதாவைக் கலாய்த்து (இதெல்லாம் சமீபவருடங்களில் வலைப்பக்கம் வந்த போது கீதாவிடம் தமிழ்நாட்டில் தற்போது பேசப்படும் பல வாக்குகளின் பொருள் என்ன என்று கற்றுக் கொண்டேன். ) பேசியதில்லை. நாங்கள் ஒருவரைப் பற்றி ஓருவர் அவ்வளவாகப் பொதுவெளியில் கலாய்த்து பதில் கொடுத்து அப்படிச் செய்து கொண்டதில்லை. தவறாகப் பட்டுவிடுமோ என்று நான் செய்ததில்லை. இதுதான் முதல் முறை. அவரது சேச்சியின் மீதான அவர் பாசம் சந்தோஷமாக இருக்கிறது.
துளசிதரன்
///இங்கு அதிராவும் (சகோதரி என்று சொல்லவிலை அவர்கள் சின்னப் பிள்ளைதானே!),//
நீக்குவாவ்வ்வ்வ்வ் இன்னும் சத்தமாச் சொல்லுங்கோ துளசி அண்ணன்.. நெ தமிழனுக்கு கீதாக்கெல்லாம் கேட்கோணுமெல்லோ.. மீ இப்போதான் சுவீட் 16 ஆரம்பிச்சிருக்கு எனக்கு எண்டால் ஆருமே நம்பீனமில்லை :).. ஹா ஹா ஹா நல்லவேளை ஜாமீஈஈ... அஞ்சு இங்கின இல்லை:)..
துளசி அண்ணன் எனக்கென்னமோ, நன்கு தெரிஞ்சு பழகியபின்னர் சகோதரி போடுவது ஏதோ அந்நியப்படுத்துவதுபோல இருக்கும், அதில் தப்பில்லை, ஆனா எனக்கு ஒருமாதிரி இருக்கும், தங்கை, அக்கா எண்டால்கூட ஓகே.. அதிலும் நீங்கள்.. ஆண்கள் கூப்பிட்டால் ஓகே, பெண்களே சகோதரி எனக் கூப்பிடுவது எனக்கு சுத்தமாகப் பிடிக்காது, ஆனாலும் சிலவற்றுக்கு நாம்தானே நம்மை மாற்றோணும் என நினைத்து விட்டுவிடுவேன்...
அது துளசி அண்ணன், நான்கூட பப்ளிக்கில் இங்குதான் இப்படி, நேரில் எனில் ரெம்ம்ம்ப நல்ல பொண்ணூஊஊ.. கலாய்ப்பதெல்லாம் இல்லை ஹா ஹா ஹா.. இலங்கையிலும் கலாய்த்தல் எனும் சொல் பாவிக்க மாட்டோம்...
கீதா, அது உங்கட ஹீல்ஸ் ல டயமண்ட் ஒட்டியிருக்காம் எனக் கேள்விப்பட்டதாலதான் தேம்ஸ்ல வீசுங்கோ எனச் சொன்னேன்:))[பூஸோ கொக்கோ ஓடிப்போய் எடுத்திடுவேனெல்லோ.. டயமனோ ஆச்சிரமமோ முக்கியம்:))]] ஹையோ ஆராவது அடிக்கப் போகினமே கலைச்சுக் கலைச்சு:))
நீக்குவாவ்வ்வ்வ்வ் இன்னும் சத்தமாச் சொல்லுங்கோ துளசி அண்ணன்.. நெ தமிழனுக்கு கீதாக்கெல்லாம் கேட்கோணுமெல்லோ.. மீ இப்போதான் சுவீட் 16 ஆரம்பிச்சிருக்கு எனக்கு எண்டால் ஆருமே நம்பீனமில்லை :).//
நீக்குநம்பீயீயீயீயீட்டோம்!!!!
பூஸார், மீக்கும் பழகினவங்களை அண்ணா, அக்கா தங்கை என்று சொல்லத்தான் பிடித்திருக்கு. இல்லை என்றால் என்னவோ போல் இருக்கு....இல்லை என்றால் பேர் சொல்லி..கூப்பிடுவது....உங்களுடன் ஹைஃபைவ்!!!
கீதா
அது உங்கட ஹீல்ஸ் ல//
நீக்குஹாஹாஹாஹா எண்ட ஹீல்ஸ்லதானே!! அப்ப எங்கிட்ட பத்திரமா இருக்கும்!!!!
கீதா
அழகிய படங்கள் விளக்கம் அருமை.
பதிலளிநீக்குகாணொளி சிறிது கண்டேன் பிறகு காண்கிறேன்
படங்கள் விளக்கம் அருமை என்று ரசித்தத்ற்கு மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குகாணொளி மெதுவாகப் பாருங்கள்
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி
துளசிதரன்
படங்களுடன் பதிவு உடன் பயணிக்கிற உணர்வைத் தந்தது..வாழ்த்துகளுடன்..
பதிலளிநீக்குரமணி ஸார் உங்களை வலைப்பக்கம் பார்த்தே பல மாதங்கள் ஆகிவிட்டன என்று நினைக்கிறேன். நானும் சமீபகாலமாக வர இயலவில்லை.
நீக்குஉங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ரமணி சார்
துளசிதரன்
இங்கு ஸ்கொட்லாண்டிலும் பெரும்பாலும் உள்ளூர்களில் நீங்கள் சொன்னதைப்போலவேதான், 3,4 பேர்தான் இருப்பார்கள்.. அதுவும் ஓவர் 60 ஆட்கள்தான், ஏனெனில் ஸ்கொட்லாந்தில் 60 வயசுக்கு மேற்பட்டோருக்கும் 12 க்கு உட்பட்டோருக்கும், லோகல் பஸ் சேவை பிறீ. ஏனையோர் கார்தான் பாவிக்கிறார்கள், எப்பவாவது பஸ்ஸில் போவேன், மிக மகிழ்ச்சியாக இருக்கும்...
பதிலளிநீக்குடுபாயில் கப்பலை-ஹொட்டேலாக மாற்றியிருக்கிறார்கள், அதுபோல இது பஸ்ஸை மாற்றியிருக்கினமோ...
பதிலளிநீக்கு//இரண்டு நாள் பயணத்தில் பயணிகளுக்குத் தங்குவதற்குப் பேருந்துகளையே உருவமாற்றம் செய்து ரயில் பெர்த் போன்று அமைத்து///
ஓ இது நீங்கள் போன பஸையே மாற்றித்தந்தவையோ?.. சைனாவில கட்டிலை மேசையாக, கதிரையாக மாற்றுகிறார்களே அதுபோலவாக்கும்...
தங்கையான கங்கை மகள் அதிரா வந்தாலே அதிரத்தான் செய்கிறது.
நீக்குபேருந்தை ரயில் பெர்த்களுடன் மாற்றியிருக்கிறார்கள். பேருந்துகள் பேருந்து நிலையத்திலேயேதான் இருக்கும். அவை நகர்வதில்லை. பயணத்திற்கு வேறு பேருந்துகள்.
நாங்கள் போன பேருந்து சாதாரணமாக எல்லோரும் பயணம் செய்யும் பேருந்து ஆனால் அரசு பேருந்து நிலையத்தில் சுற்றுலாவிற்கென்று முன்பதிவு செய்தவர்களை அழைத்துச் செல்லும் சுற்றுலாப் பேருந்து. அதில் அவர்கள் மட்டுமே இருப்பார்கள்.
இரவு தங்குவதற்கான பேருந்துகள் தான் உருமாற்றம் செய்யப்பட்டவை. அவரை டெப்போவிலேயே இருக்கும். துபாய்க் கப்பலும், சைனாவில் மாற்றுவதும் பற்றியும் வாசித்ததுண்டு.
உங்களின் கருத்திற்கு மிக்க நன்ற் சகோதரி அதிரா
துளசிதரன்
அழகிய நீர்வீழ்ச்சி, ஆனைக்குளத்தில் ஆனைகல் பார்க்க முடியாமல் போயிட்டே:)..
பதிலளிநீக்குஇலங்கையில் ஆனையிறவு.. எனும் இடம் இருக்குது வடமாகாணத்தில். அதேபோல மாங்குளமும் இருக்குதே ஹா ஹா ஹா...
ஆவ்வ்வ் துளசி அண்ணனும் சனல் வச்சிருக்கிறீங்களோ.. சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன், லைக்கும் போட்டிட்டேன்....
நீங்கள் ஸ்கூலில் இருந்த காலத்தை விட இப்போ மெலிஞ்சிட்டீங்களே... நெல்லைத்தமிழனைப்போல- டயட்டுக்கு மாறிட்டீங்களோ ஹா ஹா ஹா...
//நெல்லைத்தமிழனைப்போல- டயட்டுக்கு மாறிட்டீங்களோ ஹா ஹா ஹா...// - எங்க வீட்டுல மத்தவங்களுக்கு எடை குறையக் குறைய எனக்கு எடை ஏறுகிறது. நான் இரவு 6 மணிக்குள் உணவை முடித்துக்கொள்வேன், இரண்டு வேளைதான் உணவு என்றாலும், இனிப்பு சாப்பிடுவது அதிகம். துளசி சார்போல ஸ்லிம்மா இருக்கணும் என்றுதான், சட்னு கடவுள் என் முன்னால தோன்றினா எனக்குக் கேட்கத் தோணும் (நாளைக்கு வருவேன் யோசித்து வை என்றால் கேட்க நிறைய இருக்கிறது. ஆனால் இந்தக் கணம் அவர் முன்னால வந்து என்ன வேணும்னு கேட்டால், சட் என்று எனக்கு இதுதான் தோணும், கூடவே, என்ன சாப்பிட்டாலும் ஸ்லிம்மா இருக்கணும் என்றும் சேர்த்துப்பேன். ஹா ஹா)
நீக்குஅதிரா சகோதரி, உங்கள் சானலை நானும், கீதாவும் சப்ஸ்க்ரைப் பண்ணியிருக்கிறோம். நான் லைக் போட்டுவிடுவதுண்டு கண்ணில் படும் போதெல்லாம். கருத்துகள் போடுவதில்லை. கீதா உங்களுக்குக் கருத்து போடுவதாகச் சொன்னார்.
நீக்குஉங்கள் பகுதி பற்றி நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ஸ்காட்லான்ட் பற்றி அங்கு நீங்கள் சென்று பார்க்கும் இடங்கள் பற்றிச் சொல்லுங்களேன். வலைப்பக்கம் பதிவுகள் வாசிக்க இன்னும் கொஞ்சம் நாட்களில் வருகிறேன். தற்போது வீட்டுப் பணிகள் இன்னும் முடியாததால், வருவது சிரமமாக இருக்கிறது. நான் பதிவு எழுதுவதோடு, படங்கள் வீடியோக்கள் அனுப்புவதோடு சரி. மற்ற பணிகள் எல்லாம் கீதாதான் செய்கிறார். இங்கு பதில் கருத்துகளைக் கூட வாய்ஸ் மெசேஜாகக் கீதாவுக்கு அனுப்பி அவர் இங்கு டைப் செய்து போட்டுவிடுவார்.
மெலிந்திருப்பதுக்குக் காரணம் பணிகள் கூடுதல் என்பதாலும் சாப்பாடு என்பது இரு வேளைதான் என்பதாலும் இருக்கலாம்.
ஆமாம் ஆனைகள் பார்க்க முடியவில்லை. மக்கள் கூட்டம் இருந்தால் அவை வராது.
//இலங்கையில் ஆனையிறவு.. எனும் இடம் இருக்குது வடமாகாணத்தில். அதேபோல மாங்குளமும் இருக்குதே ஹா ஹா ஹா...//
அங்கும் இருக்கிறதா? ஆனையிறவு கேள்விப்பட்டதுண்டு. ஆனால் மாங்குளம் இருப்பதும் ஆச்சரியம். ஒரு வேளை இலங்கை கேரளப் பகுதியோடு இருந்திருக்கும். பல விஷயங்களில் ஒற்றுமை இருப்பதை வைத்துச் சொல்கிறேன். அங்கு கண்டிப் பகுதி கேரளத்தின் மூணார் என்று சொல்வதுண்டு.
மிக்க நன்றி சகோதரி அதிரா
துளசிதரன்
எங்கள் சானலுக்கு ஸ்ப்ஸ்க்ரைப் செய்ததற்கு மிக்க நன்றி சகோதரி அதிரா.
நீக்குதுளசிதரன்
சகோதரி, நான் இளைத்திருப்பதற்குக் காரணம் சர்க்கரை வியாதிதான். டயட் என்று பெரிதாக எதுவும் இல்லை. நெல்லைத் தமிழன் என்னை விட சிறியவர் இளைஞர்!
நீக்குதுளசிதரன்
(அதிரா துளசி சொல்லிருக்கறதைப் பாருங்க...நெல்லைக்கு ஒரே கொண்டாட்டம்தான்..அவரு இளைஞராம். துளசியின் வயது 62...4 வயசு குறைவானவங்க எல்லாம் இளைஞராம்....அதிரா நோட் திஸ் பாயின்ட்!
கீதா)
நெ தமிழன்
நீக்கு//ஆனால் இந்தக் கணம் அவர் முன்னால வந்து என்ன வேணும்னு கேட்டால், சட் என்று எனக்கு இதுதான் தோணும், கூடவே, என்ன சாப்பிட்டாலும் ஸ்லிம்மா இருக்கணும் என்றும் சேர்த்துப்பேன். ஹா ஹா)///
ஹா ஹா ஹா நானும் இப்படித்தான், கடவுளைப் பார்க்கும்போது, ஏன் சாமியறையைக் கடக்கும்போதெல்லாம், கடவுளே என்னைக் குண்டாக்கிடாதே, ஆனா அதுக்காக வருத்தம் தராமல் ஹெல்த்தியான முறையில மெலிய வை எனத்தான் கேட்பேன், ஏன் தெரியுமோ, கடவுல் பொல்லாதவராம் கர்:)) அதனால வரம் கேட்கும்போது ஒழுங்காக் கேட்கோணுமாமே ஹா ஹா ஹா:))
மிக்க நன்றி துளசி அண்ணன், எனக்குத் தெரியும் நீங்க இருவரும் சப்ஸ்கிரைப் பண்ணி இருப்பது.. கொமெண்ட்ஸ் போடாட்டிலும் ஓகே, அங்கு நான் கொமெண்ட்ஸ் பற்றிக் கவலைப்படுவதில்லை, லைக்ஸ் போட்டால் சந்தோசமே...
நீக்குகிளிநொச்சி எனும் இடம் கேள்விப்பட்டீங்களோ.. அதற்கு அடுத்து மாங்குளம் இருக்கிறது.. கேரளாவும் இலங்கைத்தமிழரின் பேச்சு, உணவு, பழக்கவழக்கங்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஒன்றுதான்.. கேரளாவில் இருந்துதான் இலங்கையில் தமிழ் வந்திருக்கோணும் என நினைக்கிறேன்..
உடம்பை எப்பவும் பிஸியாக வைத்திருந்தாலே தானாக மெலிஞ்சிடும்... சுகர் எனில், அதை உணவும், நடைப்பயிற்சியிலும் பலரும் கொன்றோலுக்கு கொண்டு வந்திருப்பது அறிகிறேன்...
நீக்கு///(அதிரா துளசி சொல்லிருக்கறதைப் பாருங்க...நெல்லைக்கு ஒரே கொண்டாட்டம்தான்..அவரு இளைஞராம். துளசியின் வயது 62...4 வயசு குறைவானவங்க எல்லாம் இளைஞராம்....அதிரா நோட் திஸ் பாயின்ட்!
நீக்குகீதா)////
கீதா, ஹா ஹா ஹா எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப்போல இப்பூடிப் போட்டு உடைச்சிட்டீங்களே நெ தமிழனின் வயசைப் பப்புளிக்கிலா ஹா ஹா ஹா.. இதோட ஆள் ஓடிட்டார்ர் போல இப்பக்கம் காணமே ஹா ஹா ஹா:)),
எனக்கும் தெரியும், முனொருதடவை வாய்மாறி சின்னவயசுக் கதை ஒன்று சொன்னார், அதை வச்சு கை கால் எல்லாம் எடுத்துக் கூட்டி:)[எனக்கு கணக்கிலயும் டி ஆக்கும்:)] வயசு கண்டு பிடிச்சு வச்சிருந்தோம் ஹா ஹா ஹா
கீதா, ஹா ஹா ஹா எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப்போல இப்பூடிப் போட்டு உடைச்சிட்டீங்களே நெ தமிழனின் வயசைப் பப்புளிக்கிலா ஹா ஹா ஹா.. இதோட ஆள் ஓடிட்டார்ர் போல இப்பக்கம் காணமே ஹா ஹா ஹா:)),//
நீக்குஹாஹாஹாஹா அதிரா, என்னைக்காவது ஒரு நாள் தெரிஞ்சுதானே ஆகணும்! !!!!! ஒளிஞ்சிருந்து இதை எல்லாம் பார்த்துட்டு வருவார் வருவார் பாருங்க எல்லாத்துக்கும் சேர்த்து வைச்சு வருவார்!
//எனக்கும் தெரியும், முனொருதடவை வாய்மாறி சின்னவயசுக் கதை ஒன்று சொன்னார், அதை வச்சு கை கால் எல்லாம் எடுத்துக் கூட்டி:)[எனக்கு கணக்கிலயும் டி ஆக்கும்:)] வயசு கண்டு பிடிச்சு வச்சிருந்தோம் ஹா ஹா ஹா//
பூஸா கொக்கா!!!
//[எனக்கு கணக்கிலயும் டி ஆக்கும்:)//
இதை எல்லாம் இப்பூடி பப்ளிக்கா சொல்லி ஹாஹாஹா...மாட்டிக்கிட்டீங்களே......இதை ஒருத்தர் கணக்கிலெடுத்துவார் பாருங்க!!!!
கீதா
// எனக்குத் தெரியும் நீங்க இருவரும் சப்ஸ்கிரைப் பண்ணி இருப்பது.. //
நீக்குGrrrr... அதிரா, நானும்தான் சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கேனாக்கும்...
ஹாஹாஹாஹா ஸ்ரீராம் அங்கயும் நீங்க சொன்னதை அவங்க நோட் பண்ணியிருந்தாங்க...பார்த்த நினைவு......பூஸா கொக்கோன்னு ஓடி வருவாங்க பாருங்க!!!
நீக்குகீதா
///ஸ்ரீராம்.17 ஜூன், 2023 அன்று பிற்பகல் 7:45
நீக்கு// எனக்குத் தெரியும் நீங்க இருவரும் சப்ஸ்கிரைப் பண்ணி இருப்பது.. //
Grrrr... அதிரா, நானும்தான் சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கேனாக்கும்...////
ஹா ஹா ஹா இதோட ஸ்ரீராம் 4 வது தடவை ஜொள்ளிட்டார்ர்:)) கீதா ஜாட்சி.. சே சே சாட்சி:).. அதனால எப்பூடியாவது எனக்கு 4 சப்ஸ்கிரைபேர்ஸ் ஏறோணும் ஸ்ரீராமால:), அந்த கஜூக் களவெடுத்த 2 அன்ரீஸ் டமொபைலை எடுத்து ஒரு தட்டு:) அதேபோல, அவசரமாக உள்ளே வந்து "ஸ்ரீராம் ஒரு பேப்பர் தாங்கோ கஜூ பக் பண்ண"[ஹா ஹா ஹா நில்லுங்கோ இங்கின கொஞ்சம் சிரிச்சிட்டு வருகிறேன் அடக்க முடியவில்லை ஹா ஹா ஹா:)].. எனச் சொன்ன அந்த அங்கிளின் மொபைலையும் எடுத்து ஒரு தட்டுத் தட்டோணும்... ஹா ஹா ஹா...
நீங்கள்தான் முதல் 100 க்குள் வந்திருக்கிறீங்களே ஸ்ரீராம்.. பின்னூட்டங்களும் அதிகம் போட்டிருக்கிறீங்கள்.. அனைத்துக்கும் நன்றி.
அதிராவிற்கு
நீக்கு// கிளிநொச்சி எனும் இடம் கேள்விப்பட்டீங்களோ.. அதற்கு அடுத்து மாங்குளம் இருக்கிறது.. கேரளாவும் இலங்கைத்தமிழரின் பேச்சு, உணவு, பழக்கவழக்கங்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஒன்றுதான்.. கேரளாவில் இருந்துதான் இலங்கையில் தமிழ் வந்திருக்கோணும் என நினைக்கிறேன்../
கிளிநொச்சி தெரியுமே. அதன் அடுத்துதான் மாங்குளமா! அது சரி. உணவு உடை கூடக் கிட்டத்தட்ட...பழக்கவழக்கங்கள்...உணவு பார்த்தீர்கள் என்றால், சிவப்பு குண்டு அரி, இடியாப்பம், ஆப்பம், புட்டு, தேங்காய்ப்பால் பயன்பாடு, பலாப்பழம், தேங்காய் எண்ணை, தென்னை மரங்கள் பலாமரங்கள், அசைவச் சாப்பாடுகள் போன்றவை கன்னியாகுமரி, கேரளா இலங்கை கிட்டத்தட்ட ஒரே போன்று..
அது போல கேரளத்தில் ஈழவர் என்று ஒரு சமூகம் உண்டு. அவர்கள் ஈழத்திலிருந்து வந்தவர்கள் என்ற சொல்லும் உண்டு ஆனால் சரியாகத் தெரியாது. நில அமைப்பும் உட்பட
மலையாளத்தில் வரும் தமிழ்ச்சொற்கள் நாகர்கோவில் இலங்கைத் தமிழோடு ஒத்துப் போவது போலவும் தோன்றும். மலையாளத்தில் உள்ள சமஸ்கிருதச் சொற்களை எடுத்துவிட்டால் தமிழ் என்றே சொல்லலாம். நோக்கி, கிடந்து, உறக்கம், வீழ்ந்து என்பது வீழ்ந்நு...கேட்டு, இன்னும் செய்யுளில் வரும் நிறைய நல்ல தமிழ்ச்சொற்கள் இங்கு வழக்கத்தில் உண்டுதான்.
இதெல்லாம் தான் முன்புஒரு காலத்தில் இலங்கை இந்தியாவின் தெற்குப்பகுதியோடு இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
துளசிதரன்
ஆஹா... படிக்கும்போதே இந்தப் பயணம் சிறப்பாக இருந்திருக்கும் என்று உணரமுடிகிறது. படங்கள் அனைத்தும் அழகு. பழைய பேருந்துகளை தங்குமிடங்களாக மாற்றி இருப்பது நல்ல விஷயம். இப்படியான பயணங்கள் செல்ல எனக்கும் ஆசை உண்டு. மூணார் செல்ல வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. போக வேண்டும் என்ற எண்ணம் இப்போது வலுத்துவிட்டது! தொடரட்டும் பயணமும் பதிவுகளும்.
பதிலளிநீக்குஆமாம் வெங்கட்ஜி! பயணம் மிகவும் சிறப்பாக அமைந்தது. நீங்கள் பயணப்பிரியர் எனவே நீங்களும் விரும்புவீர்கள் என்று தெரியும். மூணாருக்குச் செல்ல வேண்டும் என்ற உங்கள் எண்ணம் இப்போது வலுவடைந்திருப்பது மகிழ்ச்சி, நிச்சயமாக உங்களுக்கும் நிறைவேறும். அழகான பதிவும் அதுவும் அழகான படங்களுடன், காணொளிகளுடன் எதிர்பார்க்கலாம். உங்கள் எண்ணம் நிறைவேறிட வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஉங்கள் கருத்திற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி
துளசிதரன்
நான் குடும்பத்தோடு மூணாறு 3 நாட்களுக்கு (4 நாட்கள்) எல்லா ஏற்பாடுகளும் 2015ல் செய்திருந்தேன். நான் மாத்திரம் பஹ்ரைனிலிருந்து வந்து சென்னையிலிருந்து எல்லோரும் போகவேண்டியதுதான். அப்போதுதான் மிகக் கடுமையான மழை சென்னையில் வந்து தெருவெல்லாம் முழுகிக்கொண்டிருந்தது. அடையாறில் எல்லா மரங்களும் தெருவில். மூணாறு செல்வதும் எளிதல்ல என்று சொன்னதால், அட்வான்ஸ் போனாலும் பரவாயில்லை என்று மூணாறு டிரிப்பை கேன்சல் செய்து எல்லோரையும் பஹ்ரைனுக்கு வரச் சொல்லிவிட்டேன். விரைவில் நானும் மனைவியும் செல்லணும் என்று நினைத்திருக்கிறேன் (6 மாதம் - 1 வருடத்துக்குள்)
நீக்கு2015 க்குப் பிறகு இப்போது நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன, நெல்லைத் தமிழன். கொச்சி தனுஷ்கோடி ஹைவே பெரிய மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. முடிஞ்சா வாங்க....வரும் போது சொல்லுங்கள். ஊட்டி டவுன் ஆகும் முன்பு எப்படி இருந்ததோ அந்த நிலையில் இருக்கிறது மூணாறு இப்போது. நிறைய கட்டிடங்கள் வந்து அப்படி ஆகிவிடும் நிலை. நிறைய டெவலப்மென்ட் வரவேண்டியிருக்கிறது வருமாக இருக்கலாம். அடுத்த தலைமுறைக்கு நல்ல இடமாக அமையும் என்று தோன்றுகிறது.
நீக்குதுளசிதரன்
நான் மூணார் சென்றதில்லை. என் மகன்கள் அவர்கள் நண்பர்களுடன் சென்று வந்திருக்கிறார்கள். இபப்டிப்பட்ட தகவல்கள் எல்லாம் அவர்கள் சொன்னதில்லை.
பதிலளிநீக்குவாருங்கள் ஸ்ரீராம் ஜி. உங்களைக்காணவில்லையே என்று கேட்டுக்கொண்டிருந்தேன். உங்கள் அலுவலக டென்ஷன் பற்றி கீதா சொன்னார். புரிந்து கொண்டேன்.
நீக்குஇளைஞர்களின் ஆர்வங்கள் வித்தியாசமாக இருக்கும் இல்லையா. அதுவும் தவிர, அவர்கள் மூணாறுக்கு உள்ளே சென்றிருந்திருப்பார்கள். அதாவது மூணாறு டவுனில் இருக்கும் இடங்கள். இவை மூணாறு டவுனுக்கு வெளியே உள்ள காடுகள் தேயிலைத் தோட்டம் பகுதியில். இப்போது நீங்கள் எல்லாரும் திட்டமிட்டால் இப்படியான பயணத்தைத் தேர்ந்தெடுக்கலாம் ஸ்ரீராம்ஜி. கேஎஸ் ஆர் டிசி மூலம்.
மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
துளசிதரன்
ஸ்ரீராம், நாங்க எங்க குடும்பத்துல பலரும் என் மைத்துனரின் வண்டியில் சென்றோம். கிட்டத்தட்ட 19 வருடங்களுக்கு முன்னர். அப்ப மூணாறு பகுதியில் தங்கிக் கொண்டு இங்கு துளசி சொல்லியிருக்கும் இடங்களை நாங்களே தெரிந்துகொண்டு பல அருவிகள், இந்த செய்யப்பாறா அருவி உட்பட வேறொரு அருவி, வாளரா...என்று எல்லா அருவிகளிலும் குளித்துக் கொண்டே அதுவும் மழைக்காலம் மே மாதமே அங்கு தொடங்கியிருந்தது..தண்ணி கொட்டோ கொட்டு என்றுகொட்டியது, மான்குளம், ஆனைக்குளம், டாப்ஸ்லிப் மூணாறு பகுதியிலிருந்து, ஊருக்குள் இருக்கும் ஏரி, டீ ஃபெக்டரி, மூணாறிலிருந்து இறங்கி தொடுபுழா சென்று அங்கு தொம்மங்குத்தி அருவி, சாலக்குடி சென்று அதிரம்பள்ளி அருவி,,,,காட்டினூடே சென்று வழியில் ஒரு அருவி அதைக் கடந்து இருக்கும் வாழ்ச்சல் என்ற cascade போல் விழும் அருவி செமையா இருக்கும் எல்லாம் பார்த்து வந்தோம். இப்போது மாறியிருக்கும். பொதுவாக நாங்கள் குடும்பமாகப் போகும் போது இப்படியான பாதைகளைத் தேர்ந்தெடுப்பது வழக்கம்.
நீக்குதுளசி சொல்லியிருக்கும் இந்த ட்ரிப் சூப்பராக இருக்கு. எனக்குமே ஆசை வருகிறதுமீண்டும் போய் வர முடியுமா என்று...
கீதா
எங்கள் அப்பா எங்களை குடும்ப விழாக்களுக்கே பெரும்பாலும் அழைத்துச் செல்ல மாட்டார். பின்னர் அல்லவா மற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு? எங்கும் சென்றதில்லை!
நீக்கு// உங்களைக்காணவில்லையே என்று கேட்டுக்கொண்டிருந்தேன். //
நீக்குஅடிக்கிற வெயிலுக்கு பகல் நேரங்களில் கணினி பக்கம் வரமுடிவதில்லை. அனல்! இதோ அதோ என்று மறுப்படி மறுநாள் காலை நாலரை மணிதான்! மாலை என்றங்களில் புதிய அப்பதிவுகள் வெளியாகி, அதுவும் மற்ற பதிவுகளால் கீழே சென்று விட்டால் கண்ணில் படாமல் போகிறது!
// உங்கள் அலுவலக டென்ஷன் பற்றி கீதா சொன்னார். //
அதுவும் ஒரு அநியாயமான காரணம்!
எங்கள் அப்பா எங்களை குடும்ப விழாக்களுக்கே பெரும்பாலும் அழைத்துச் செல்ல மாட்டார். பின்னர் அல்லவா மற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு? எங்கும் சென்றதில்லை!//
நீக்குஹாஹாஹாஹா ஸ்ரீராம், எனக்கும் என் பிறந்த வீட்டில அப்படித்தானே....எங்கயும் கூட்டிக் கொண்டு சென்றதில்லை. நீங்க சொல்லிருக்காப்ல உறவினர் வீட்டு நிகழ்வுகளுக்குக்கூட.
கிராமத்தை விட்டுத் தாண்டிப் போனோம்னா அது ஸ்கூல் காலேஜுக்குத்தான்.
நான் சொன்ன பயணம், கல்யாணம் ஆன பிறகு மச்சினருடன், நட்புகளுடன் குடும்ப உறுப்பினர்களுடன்....சென்றது!!!!! 19 வருஷம் முன்னன்னு சொல்லிருக்கேனே!!!! ஹை உங்க கருத்துப்படி அப்படினா மீக்கு நான் ரொம்பச் சின்னப் பொண்ணு!!!!!
கீதா
எனக்கும் சிறுவயதில் பயணம் செய்த பஸ்கள் இன்னமும் நினைவில் இருக்கின்றன. எங்கள் ஏரியாவுக்கு வரும் மூன்று பஸ்களை என்னோடது, உன்னோடது என்று நான், என் அண்ணன், என் தங்கை பங்கு பிரித்துக் கொண்டுள்ளோம்!! ஆனால் இது பஸ்காரர்களுக்கு தெரியாது!! ஹா.. ஹா.. ஹா...
பதிலளிநீக்குமற்றொரு பழைய இனிய நினைவை எழுப்பியது உங்கள் கருத்து, ஸ்ரீராம்
நீக்குஅன்றேல்லாம் நாங்கள் வீரபாண்டி கோயிலுக்குப் போவோம். அப்போது மாட்டு வண்டி எல்லாம்கட்டிக்கொண்டு எங்கள் கிராமத்திலிருந்து 10, 15 பேர் போவோம். அப்போது நான் சிறுவன். அங்கெல்லாம் போகும் போது பெரும்பாலும் நான் வாங்கிவருவது ப்ளாஸ்டிக்கில் செய்த பஸ்கள்தான். அதெல்லாம் வாங்கிக்கொண்டு வந்து விளையாடியது எல்லாம் உங்கள் கருத்தைப் பார்த்ததும் மனதில் அப்படியே வந்து கொண்டிருக்கின்றன.அந்த நினைவுகளை நினைக்க வைத்தற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
உங்கள் கருத்தை வாசித்ததும் எனக்கும் என் கடந்த கால நினைவுகள் எழுந்துவிட்டன. சுவையான சுவாரசியமான அனுப்வங்கள் உங்களுக்கு ஸ்ரீராம்ஜி.
நீக்குஉங்களுக்கு வீட்டில் சகோதர சகோதரிகள் இருந்தாங்க ...எனக்கு நான் கடைக்குட்டி ஆனதால் நான் நண்பர்களுடன் தான். வீடுகட்டுவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் செங்கல்களை எடுத்து வைத்துக் கொண்டு அப்படியே உருட்டி ஓட்டிக் கொண்டிருப்போம். இதுதான் மீனாம்பிகை வண்டி, மதுரை உத்தமபாளையம் வண்டி..., இது பழநி தேவாரம், இது மதுரை தேனி என்று அந்த அருமையான அந்தப் பக்கங்களைப் புரட்ட வைத்ததுற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி. நம்மால்தானே இதெல்லாம் நினைக்க முடியும். இந்த இனிய நினைவுகள் நமக்குத்தானே சொந்தம் இல்லையா.
உங்கள் அழகான, பழைய இனிய நினைவுகளைத் தூண்டிய கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
துளசிதரன்
இந்த நினைவுகள் நம்மைக் குழந்தையாக்கி விடுகின்றன!
நீக்குஆமாம், நாம் குழந்தையாகி விடுகிறோம்.
நீக்குநன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
பஸ்களிலேயே தங்கும் வசதி நல்ல யோசனைதான். ஆனால் மூச்சடைக்கிறாற்போல் இருக்காதா? பயணம் ஓகே. ஆனால் தங்குமிடம் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.
பதிலளிநீக்குஸ்ரீராம்ஜி நீங்கள் சொல்வது உண்மை உண்மை. 100க்கு 100 உண்மை. சென்று எல்லாருமே லைட் ஆஃப் செய்து படுக்க ஆரம்பித்ததுமே படபடவென்று நெஞ்சு அடிக்க ஆரம்பித்துவிட்டது. ஒரு 10 நிமிட படாதபாடு பட்டுவிட்டேன். இறங்கிச் சென்று டெப்போவில் இருக்கும் ஏதாவது பெஞ்சில் கூட சாய்ந்து உட்கார்ந்தே கூடத் தூங்கிவிடலாமா என்றும் கூட நினைத்தேன். அப்புறமென்ன? யாமிருக்க பயமென் என்று நம்ம முருகன் வேலோடு மனதில் வந்தார். பிள்ளையாரப்பன் எப்போதுமே கூட இருக்கிறாரே! அப்புறம் ஐந்தெழுத்து மந்திரத்தை அப்படியே சொல்லி ஒரு 5 நிமிடத்தில் எல்லாம் சுகமாக மாறி அப்படியே தூங்கிவிட்டேன். எனக்குக் கிடைத்தது அப்பர் பெர்த். நானோ உயரம். எனவே என் காலை மடக்கி படுக்க வேண்டியதானது. நீங்கள் சொல்வது போல் அது ஒரு பிரச்சனை. வித்தியாசமான அனுபவம் தான் ஆனால் claustrophobic பிர்ச்சனை உள்ளவர்களுக்குச் சிரமமாக இருக்கும்தான்.
நீக்குநீங்கள் அதை நுணுக்கமாகக்கவனிச்சிருக்கிறீர்கள் இல்லையா...ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ஸ்ரீராம்ஜி.
கீதா என்னை ஸ்ரீராம் என்றே அழைக்கச் சொன்னதால் இனி ஸ்ரீராம் என்றே சொல்கிறேன்.
நுணுக்கமாக சொல்லியதற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
ஸ்ரீராம்ஜி நீங்கள் சொல்வது உண்மை உண்மை. 100க்கு 100 உண்மை. சென்று எல்லாருமே லைட் ஆஃப் செய்து படுக்க ஆரம்பித்ததுமே படபடவென்று நெஞ்சு அடிக்க ஆரம்பித்துவிட்டது. ஒரு 10 நிமிட படாதபாடு பட்டுவிட்டேன். இறங்கிச் சென்று டெப்போவில் இருக்கும் ஏதாவது பெஞ்சில் கூட சாய்ந்து உட்கார்ந்தே கூடத் தூங்கிவிடலாமா என்றும் கூட நினைத்தேன். அப்புறமென்ன? யாமிருக்க பயமென் என்று நம்ம முருகன் வேலோடு மனதில் வந்தார். பிள்ளையாரப்பன் எப்போதுமே கூட இருக்கிறாரே! அப்புறம் ஐந்தெழுத்து மந்திரத்தை அப்படியே சொல்லி ஒரு 5 நிமிடத்தில் எல்லாம் சுகமாக மாறி அப்படியே தூங்கிவிட்டேன். எனக்குக் கிடைத்தது அப்பர் பெர்த். நானோ உயரம். எனவே என் காலை மடக்கி படுக்க வேண்டியதானது. நீங்கள் சொல்வது போல் அது ஒரு பிரச்சனை. வித்தியாசமான அனுபவம் தான் ஆனால் claustrophobic பிர்ச்சனை உள்ளவர்களுக்குச் சிரமமாக இருக்கும்தான்.
நீக்குநீங்கள் அதை நுணுக்கமாகக்கவனிச்சிருக்கிறீர்கள் இல்லையா...ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ஸ்ரீராம்ஜி.
கீதா என்னை ஸ்ரீராம் என்றே அழைக்கச் சொன்னதால் இனி ஸ்ரீராம் என்றே சொல்கிறேன்.
நுணுக்கமாக சொல்லியதற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
// கீதா என்னை ஸ்ரீராம் என்றே அழைக்கச் சொன்னதால் இனி ஸ்ரீராம் என்றே சொல்கிறேன். //
நீக்குI like it!
நன்றி ஸ்ரீராம்
நீக்குதுளசிதரன்
ரிசார்ட் சுவாரஸ்யம். என்னது... மீன் குழம்பா? சைவமும் உண்டுதானே?
பதிலளிநீக்குஇதே கேள்வியைத்தான் கீதாவும் நான் அனுப்பியதை வாசித்ததும் கேட்டார்.
நீக்குசைவம் உண்டு.
கேரளா இல்லையா? முன்பெல்லாம் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் அசைவம் சாப்பிட வேண்டும் என்றால் புஹாரி ஹோட்டல், மிலிட்டரி ஹோட்டல், செட்டிநாடு ஹோட்டலுக்கோ கூட்டிச் செல்வது உண்டு. கேரளத்தில் அதற்கு நேர் எதிர். சைவம் மட்டுமான ஹோட்டல்கள் என்றால் நம் தமிழர்கள் நடத்தும் ஹோட்டல்களான ஆரியபவன், சரவணபவனுக்குத்தான் போக வேண்டும். மற்ற ஹோட்டல்களில் சைவமும் அசைவமுமாகத்தான் பெரும்பாலும் இருக்கும். சைவம் என்றால் சாம்பார்,மோர், மோர்க்குழம்பு இது போன்று உண்டு. கேரளத்தில் பெரும்பாலும் அசைவம் என்பதால் இப்படி.
உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
//பேருந்தின் வெளியே கழிப்பிட வசதியும் உண்டு//
பதிலளிநீக்குபேருந்தின் வெளியே கழிப்பிட வசதியா??!!.... இது நகைச்சுவைக்காக சொல்லப்பட்டதா... அல்லது,... கழிவறையை பேருந்தின் பின்னால் தனி கம்பார்ட்மென்டில் கூடவே இழுத்துக்கொண்டு வருகிறார்களா?!!...
மூணாறு பேறுந்து நிலையத்தில்தான் கழிப்பிட வசதி. ரயில் கம்பார்ட்மென்ட் போல் மாற்றப்பட்ட பேருந்தில் நாங்கள் 16 பேர் தூங்கிய பேருந்து நிற்கும் இடத்தில் பேருந்து நிலையத்தில் கழிப்பிட வசதி உண்டு. என்று அதை எடுத்துக் கொள்ள கோரிக்கை. நகைச்சுவைக்குச் சொன்னதல்ல. காணொலியில் காண்பித்து விவரித்துப் போவதையும் அப்படியே எழுதி இடுகையில் வந்ததாலும் நேர்ந்த பிழை. வருந்துகிறேன்.
நீக்குஉங்கள் சந்தேகம் குழப்பம் இப்போது விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். இப்படிக் கவனித்துக் கேட்டதற்கு மிக்க நன்றி நண்பர் நாஞ்சில் சிவா. இனி பதிவில் கவனமாக இருக்கிறோம்.
துளசிதரன்
பயணிகளுக்குத் தங்குவதற்குப் பேருந்துகளையே உருவமாற்றம் செய்து ரயில் பெர்த் போன்று அமைத்து,//
பதிலளிநீக்குநல்ல மாற்றம். சுற்றுலா வரத்தை மேம்படுத்த எடுத்த ந்டவடிக்கை நல்லது.
மூணாருக்கு பல வருடம் முன்பு குடும்பத்துடன் சென்று வந்தோம்.
அருமையான் இடம். படங்கள், காணொளி எல்லாம் நன்றாக இருக்கிறது.
பஸ்ஸில் படுக்கும் வசதி கொஞ்சம் கடினம் தான்.
நல்ல மாற்றம். சுற்றுலா வரத்தை மேம்படுத்த எடுத்த ந்டவடிக்கை நல்லது.//
நீக்குஆம். நல்ல விஷயம். இன்னும் கொஞ்சம் இதை மேம்படுத்த வேண்டும் என்றும் தோன்றியது. என்னைப் போன்று உயரமானவர்களுக்குப் படுப்பது சற்று சிரமம். அதுவும் அடைத்து இருப்பதால் காற்றோட்டம் குறைவு.
மூணாருக்கு பல வருடம் முன்பு குடும்பத்துடன் சென்று வந்தோம்.
அருமையான் இடம். //
நீங்களும் முன்பு மூணாறுக்குச் சென்று வந்தது மகிழ்ச்சி.
பஸ்ஸில் படுக்கும் வசதி கொஞ்சம் கடினம் தான்.//
ஆமாம்.
காணொளியும் கண்டு, கருத்தும் சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு
துளசிதரன்
பேருந்தையே தங்குமிடமாக மாற்றி அதிலும் சுத்தமாகவும் அழகாயும் வசதியாகவும் கொடுக்கப்பட்டிருப்பது முற்றிலும் புதிய செய்தி. தமிழ்நாட்டில் எல்லாம் இப்படி எதிர்பார்க்கவே முடியாது. அப்படியே வந்தாலும் பணம் அதிகமாக வசூல் செய்வார்கள். படங்கள் அனைத்தும் இயற்கைக் காட்சிகளோடு மிக அருமை. பாறைகளைப் பிடித்துக் கொண்டு இறங்கக்கயிறுகள் எனச் சொல்லி இருப்பதைப் பார்த்தால் எனக்கெல்லாம் இது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று எனப் புரிந்தது.
பதிலளிநீக்கு