செவ்வாய், 29 மார்ச், 2022

கல்விச் சாலை தந்த தலைவனுக்குப் பாராட்டு விழா

 

எப்போதும் பிறரது குறைகளைச் சுட்டிக் காட்டி ஆத்திரப்படும் நாம் ஏனோ பெரும்பாலும் அவர்களது நிறைகளைச் சொல்லிப் பாராட்டுவதே இல்லை.  சில நேரங்களில் அவர்கள் காலமான பின் அவர்களது சிறப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதுண்டு. 

இதை உணர்ந்த சில நல்ல உள்ளங்கள் அவர்கள் வாழும் சமூகத்திற்கும் அதை உணர்த்தி, கல்விச் சாலையைத் தந்த ஒரு தலைவனுக்குக் கடந்த தினம் ஒரு பாராட்டு விழா எடுத்தார்கள்.


கேரளா மலப்புரம் மாவட்டத்தில் நிலம்பூர் அருகே எடக்கரா எனும் இடத்திலுள்ள ‘எடக்கரை பௌர சமிதி’ எனும் சாதி, மத, அரசியல் சாரா இயக்கமும், எடக்கரை ஊராட்சி ஒன்றியமும், திரு. கே. ஆர். பாஸ்கர பிள்ளை எனும் ‘ஸ்ரீ விவேகானந்த படன கேந்திர’ கல்வி நிறுவனங்களின் நிர்வாகிக்குக் கொடுத்த அந்தப் பாராட்டு விழாதான் அது.

திரு. கே.ஆர்.பாஸ்கரன் பிள்ளை

திரு. கே.ஆர்.பாஸ்கரன் பிள்ளை, ஒரு புகழ் பெற்ற சமூக சீர்திருத்தவாதி, சரளமாகப் பேசும் திறன் பெற்ற சமயப் பேச்சாளர், துடிப்பான அமைப்பாளர். கேரளாவில் எழுத்தறிவு இயக்கத்தைப் பிரபலப்படுத்தியதில் தீவிரமாகப் பங்கெடுத்து உழைத்தவர்.

சமூகத்தில், ஆன்மீக மற்றும் ஒழுக்க நற்பண்புகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் திரு. பாஸ்கரன் பிள்ளையால் நிறுவப்படும் கேந்திரம் ஸ்ரீ விவேகானந்த விஜ்ஞான கேந்திரம். இக் கேந்திரம் ஆண்டுதோறும் வாழ்க்கைக்கான ஆன்மீகச் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்கிறது. இது பல அறிவுஜீவிகள் மற்றும் மத அறிஞர்களை ஈர்க்கிறது.

இப்படியான நல்ல நோக்கத்துடன் செயல்பட்டுவரும் திரு. கே. ஆர். பாஸ்கர பிள்ளை அவர்களுக்குத்தான் பாராட்டு விழா.

ஏறத்தாழ 6000 மாணவ மாணவியர்கள் பயிலும் ஸ்ரீ விவேகானந்த கல்வி  வளாகத்திலுள்ள பள்ளி, கல்லூரி, ஆசிரியப் பயிற்சிப் பள்ளியிலுள்ள மாணவ மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் பங்கெடுத்த ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாய் அமைந்தது.

கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் திரு ரோஷி அகஸ்டின் விளக்கேற்றி விழாவைத் தொடங்கினார்.  விழா செயற்குழுவின் தலைவர் திரு. காராடன் சுலைமான் தலைமை வகித்தார்.  நிலம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.வி. அன்வர், திரு. ஆர்யாடன் சௌகத், திரைப்பட நடிகர் கொல்லம் துளசி போன்றவர்கள் திரு கே. ஆர். பாஸ்கர பிள்ளை அவர்களைப் பாராட்டிப் பேசினார்கள்.

அவருக்குப் பரிசும், பாராட்டு மடலும் வழங்கப்பட்டது. எடக்கரையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளிக்குத் தேவையான 25 சென்ட் இடமும் திரு கே. ஆர். பாஸ்கர பிள்ளை வழங்கினார்.  திரு. அன்வர் 1 கோடி ரூபாய் அளவில் அங்கு கட்டிடம் கட்ட அரசு தீர்மானித்திருப்பதையும் தெரிவித்தார்.

விழாவின் குழுவில் ‘Beats of Kerala, Kochi’ யின் இசை நிகழ்ச்சியும் செவிக்கு விருந்தானது. பாராட்டப்பட வேண்டியவர்களைப் பாராட்டுபவர்களும் பாராட்டிற்குரியவர்களே.

திரு கே ஆர் பாஸ்கர பிள்ளை அவர்களைப் பற்றி 2019 ஆம் வருடம் நான்/நாங்கள் எடுத்த குறும்பபடத்தின் சுட்டி இதோ. 


இங்கு ஒரு வேளை காணொளி வேலை செய்யவில்லை என்றால் அதன் யுட்யூப் சுட்டி இதோ

https://youtu.be/ZLaMHEkx-7g

முடிந்தால் பாருங்கள். பதிவை வாசிக்கும், பார்க்கும் கருத்திடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.


-----துளசிதரன்

17 கருத்துகள்:

  1. ஆம், ஒருவர் மறைந்தபின் அவரிடம் இருக்கும் நல்ல குணங்களை அடுக்குவது என்பதைவிட இருக்கும்போதே அவரைப் பாராட்டுவது சிறந்த செயல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஸ்ரீராம்ஜி. பாராட்டுவதற்கும் பரந்த மனம் வேண்டுமே.

      கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  2. வணங்கப்பட்ட வேண்டிய மாமனிதர்.  பேஸ்புக்கில் இவர் பற்றிய உங்கள் பதிவு பார்த்தேன்.  இங்கு விவரம் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவரைப் பற்றி முன்பும், குறும்படம் எடுத்த போதும் இரு பதிவுகளோ மூன்று பதிவுகளோ இங்கும் எழுதிய நினைவு.

      மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  3. நல்ல உள்ளங்களை வாழ்த்துவோம்...

    காணொளி காண்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கில்லர்ஜி. வாழ்த்துவது, பாராட்டுவது என்பது மிக நல்ல செயல்.

      நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

      கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  4. நீண்ட நாட்களுக்கு பின் துளசி சாரின் பதிவு. செய்தியில் குறிப்பிடும் கொல்லம் துளசி யும் துளசி சாரும் ஒன்றா? 
    குறும்படம் நன்றாக உள்ளது. சார்  எடுக்காமல் தொழில் முறை புகைப்படக் கலைஞர்களைக் கொண்டு எடுத்தது நன்று. அதனால் தான் வெளிச்சம், சீன், முதலியன நன்றாக வந்துள்ளன. திரைக்கதையும் நன்றாக உள்ளது.
     
    First scene is a reverse zoom which is different from normal methods. Normal method is to zoom from general or panoramic shot like google satellite view. I think the normal method would have served the purpose of the shot, to portray the philanthropy of Sri Baskara Pillai. 

    நடிக்கும் நடிகர்களும் செயற்கைத்தனம் இல்லாமல் இயற்கையாக நடித்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் மெருகேற்ற முடியும். சில பாத்திரங்களுக்கு சில நடிகர்கள் சரியாக பொருந்தவில்லை. தொழில் முறை எடிட்டிங்கு above average மார்க் தான் கொடுக்கமுடியும். குறும்படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.  

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துளசியின் கருத்து பின்னர் வரும். அதற்கு முன்......கொல்லம் துளசியும், நண்பர் துளசியும் ஒருவர் அல்ல. நண்பர் துலசியின் ஃபோட்டோ, வீடியோக்களைப் பார்த்தால் தெரியுமே ஜெகே அண்ணா

      கீதா

      நீக்கு
    2. ஜெயகுமார் சந்திரசேகரன் சார் நீங்கள் சொல்லியிருப்பது சரியே. பாராட்டியதற்கு நன்றி.

      இதில் நடித்திருப்பவர்கள் நடிப்புக் கலை அறியாதவர்கள். பலரும் அங்கு ஆசிரியர்களாகப் பணி புரிபவர்கள், நட்புவட்டத்திலிருந்து, உறவு வட்டத்திலிருந்துதான்.

      அடுத்து பட்ஜெட் சிறியது. அதனால் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டிய கட்டாயம். இயக்குநரும், தயாரிப்பாளரும் ஒருவரேதான். அப்படியிருக்கும் போது இப்படி பல விஷயங்களில் பல சமரசங்கள் செய்ய வேண்டி வரும்தானே சார்.

      இருந்தாலும் ஒரு ஆர்வத்தில், மனதிருப்திக்காக எடுப்பதுதான்.

      மிக்க நன்றி சார் உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  5. நல்ல செய்தியைப் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றியும் வாழ்த்துகளும். குறும்படம் பின்னர் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம் உங்கள் கருத்திற்கு. நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

      துளசிதரன்

      நீக்கு
  6. திரு பாஸ்கர பிள்ளை அவர்களை பற்றிய காணொளி முன்பு பார்த்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன். நன்றாக இருக்கிறது.
    அவரின் நிறைகளை சொல்லி பாராட்டியது அருமை.

    //கேரளாவில் எழுத்தறிவு இயக்கத்தைப் பிரபலப்படுத்தியதில் தீவிரமாகப் பங்கெடுத்து உழைத்தவர்.//

    எழுததறிவு கொடுப்பது மகத்தான சேவை.



    பதிவின் நிறைவில் சொன்ன வாசகம் மிக அருமை.

    //பாராட்டப்பட வேண்டியவர்களைப் பாராட்டுபவர்களும் பாராட்டிற்குரியவர்களே.//

    நல்லதை நாலுபேருக்கு சொல்பவர்களும் பாராட்டுக்கு உரியவர்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு பாஸ்கர பிள்ளை அவர்களை பற்றிய காணொளி முன்பு பார்த்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன். //

      ஆம் படம் எடுத்த சமயம் இரு பதிவுகளும் படம் வெளியிட்ட பின் படத்தின் சுட்டியும் இங்கு கொடுத்து பகிர்ந்த நினைவு இருக்கிறது. நினைவு வைத்து சொன்னமைக்கு மிக்க நன்றி.

      ஆமாம் எழுத்தறிவு கொடுத்தது மகத்தான் சேவை. அதுவும் எங்கள் பகுதியில். எங்கள் பகுதி மலையடிவாரத்தில் இருக்கும் சிறு சிறு கிராமங்கள் அடங்கிய பகுதி. இப்போது வளர்ச்சி அடைந்திருந்தாலும் அந்த காலகட்டத்தில் மிகவும் பின் தங்கி இருந்த சம்யத்தில் தொடங்கி பலருக்கும் கல்விக்கண்ணைத் திறந்தவர்.

      மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  7. நல்லதொரு பகிர்வு. பாராட்டுக்குரிய மனிதரை இங்கே அறிமுகம் செய்த உங்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி உங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும்

      துளசிதரன்

      நீக்கு
  8. நல்ல உள்ளங்களை மனம் திறந்து பாராட்டுவோம். திரு. கே.ஆர்.பாஸ்கரன் பிள்ளை அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நாஞ்சில் சிவா உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு