சனி, 18 டிசம்பர், 2021

பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 4

 சாது பொங்கினால்……காடும் ஊரும் கொள்ளாது - 4

ஜடாயுபுரம்-திருவண்பரிசாரம்

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

அடுத்த பகுதியில் ஜடாயுபுரம் மற்றும் திருப்பதிசாரம் கிராமத்தில் தண்ணீர் வந்தது பற்றிப் படங்களுடன் சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேன். இதோ 4 வது பகுதி 


பீமநகரியிலிருந்து வீட்டிற்கு வந்த போது தேரேகால், வீட்டின் பின்புறம் வழியாகவும் முன்புறம் வழியாகவும் வரத்தொடங்கியிருந்தது. இரு படங்கள் கீழே. 

வீட்டிற்குள் வர இன்னும் நேரம் எடுக்கும், அது போல முன்புறம் வழியாக வரவும் கொஞ்சம் நேரம் எடுக்கும் ஏனென்றால் தண்ணீர் போக முடிந்த இடங்களில் எல்லம் புகுந்து ஓடிக் கொண்டேதான் இருந்தது. 

எனவே அதற்குள் ஜடாயுபுரம் சென்று பார்த்துப் படங்கள், காணொளிகள் எடுத்துவிடலாமே என்று அப்பாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். 

மூர்த்தி அண்ணனும் ஆர்வமுடன் என்னோடு வந்து அதை எடு இதை எடு என்று சொல்லிக் கொண்டே வந்தார். 

ஜடாயுபுரம் என்பது தனி கிராமம் எல்லாம் இல்லை. அது திருப்பதிசாரத்தின் ஆற்றங்கரைப் - பழையாறு ஓடும் - பகுதி. ஊரை ஒட்டி வயல்களுடன், கோயில்களுடன் இருக்கும் பகுதி. (சொல்ல முடியாது, தற்போது வீடுகள் வருவதால் எதிர்காலத்தில் வயல்கள் எல்லாம் வீடுகளாக மாறி தனி கிராமம் ஆனாலும் ஆகலாம்! திருவாழிமார்பா!)

எங்கள் ஊரில் தேரேகால் பொங்கும் போதெல்லாம் தண்ணீர் ரோடைக் கடந்து மரிந்து பாய்ந்து அல்லது கிராமத்தின் பின்புறம் தானாகவே ரோடை உடைத்துக் கொண்டு தோப்புகள், வயல்கள் வழியாகப் பாய்ந்து ஜடாயுபுரம் வழியாகப் பழையாற்றுடன் கலந்து விடும்.  இம்முறையும் அப்படி வீடுகளின் பின் வழியே ஜடாயுபுரம் சென்று வயல்கள் தோப்புகளை நிறைத்தது. அந்தப் படங்கள் இதோ. இதோ ஜடாயுபுரம் காட்சிகள் படங்களாகவும் காணொளிகளாகவும்.

கிராமத்தின் வடக்குத் தெருவும், மேற்குத் தெருவும் சந்திக்கும் முக்கில் பஜனை மடத்தைத் தொட்டடுத்து ஜடாயுபுரம் செல்லும் பாதை
இந்த இரு படங்களுக்கான காணொளிச் சுட்டி https://youtu.be/LZ5EiwATR2M
இதில் ஜடாயுபுரம் செல்லும் பாதையும், கிராமத்தின் பின் தேரேகால் தண்ணீர் தோப்புக்குள் பாய்ந்து தோப்பு, வயல்களை நிரப்பிக் கொண்டு ஓடும் காட்சி


இந்த மூன்று படங்களுக்கான காணொளிச் சுட்டிகள்- இடதுபுறம் வடிகால் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டிருப்பதும் தெரியும். https://youtu.be/lVrGyUxXZfg




ஆறு எங்கிருக்கிறது என்பது தெரியாமல் தண்ணீர் வயல்களை நிரப்பி எல்லாம் ஒரே போன்று இருக்கிறது பாருங்கள் - இந்த மூன்று படங்களிற்குமான காணொளிச் சுட்டி - இதில் என்னோடு ஆர்வமாக வந்த மூர்த்தி அண்ணன் கடைசிப் பகுதியில் இருக்கிறார்


ஓடும் தண்ணீர் வயல்கள் அத்தனையையும் நிரப்பி ஏரி போன்ற காட்சி. தண்ணீர் ஓடிக் கொண்டே இருந்ததால் நீர்த்தேக்கம் இன்றி ஒரே நாளில் வடிந்துவிட்டது. 

ஜடாயுபுரத்தில் எடுத்துவிட்டு வரும் போது என்ன ஆயிற்று என்பதை அடுத்த பதிவில் படங்களுடன் சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேன். என்ன ஆயிற்று? இதோ இப்படம் ஜடாயுபுரம் காட்சிகளை எடுத்துவிட்டு வடக்குத் தெருவிற்குள் நுழைந்த போது - தண்ணீர் வரத் தொடங்கியிருந்தது. (இத்தெருவில் தான் - வடக்குத் தெருவின் மேற்குப் பகுதி - பாட்டி, மாமா குடும்பங்கள், குழந்தைகள், நாங்கள் எல்லோரும்  கூட்டுக் குடும்பமாக இருந்த வீடு பாட்டி வீடு இருக்கிறது. கைகள் மாறி மாறி இப்போது அதன் வடிவமும் மாறிவிட்டது. 

சற்று நேரத்தில் தண்ணீர் அதோ அங்கு முனையில் தண்ணீர் பாய்வது தெரிகிறதா? தேரேகால் ரோடைத் தாண்டி மூணுகல் வழியாக வடக்குத் தெருவிற்குள் பாய்கிறது - மூன்று கற்கள்  கிரிக்கெட் ஸ்டம்ப் போல உயரமாக இருக்கும் - கிராமம் ரோட்டிலிருந்து தாழ்ந்து இருப்பதால் அங்கு ரோட்டிலிருந்து இறங்க படிகள் இருக்கும். அதன் வழியே தண்ணீர் மரிந்து அருவி போன்று பாய்ந்தது. அதுவும் டேம் திறந்துவிட்டதால். அதை ஒட்டி இடப்புறம் இருப்பதுதான் மாமா கட்டிய வீடு. அது வடக்குத் தெருவின் கிழக்குப் பகுதி. மேற்கிலிருக்கும் பாட்டி வீட்டிலிருந்து -கிழக்குப் பகுதி மாமாவின் புது வீட்டிற்கு- எல்லோரும் மாறினோம். அந்த வீட்டின் மாடிப் பகுதிதான் முந்தைய பதிவில் ஒரு படத்தில் இருந்தது. அப்போதெல்லாம் தண்ணீர் இப்படிப் பாய்ந்ததில்லை.
தண்ணீர் பாயும் போதும் மூணுகல் அருகில் மக்கள் நிற்பது தெரிகிறதா. 
 திருவாழ்மார்பன் கோயிலுக்குள்ளும் தண்ணீர் நிரம்பியது. மூணுகல் இடையில் தண்ணீர் அருவி போன்று கொட்டுவது, கோயில், தெப்பக் குளம் அனைத்திற்குமான காணொளிச்சுட்டி 

https://youtu.be/eBPtQ5YaEVw

தேரேகால் தண்ணீர் மடை வழி தெப்பக் குளம் வந்து நிரம்பி ஊருக்குள் வருகிறது. தண்ணீர் வந்து கொண்டிருந்த போதும் ஒருவர் துணி துவைக்கிறார். மேலே உள்ள படத்திலும் ஒருவர். கீழே உள்ள படத்திலும் ஒருவர்
தேரடி. இது தாண்டி தெற்குத் தெரு, நடு முடுக்குகள், மேற்குத் தெருவின் பாதிப் பகுதிக்கு எல்லாம் தண்ணீர் போகவில்லை. போனதும் இல்லை. நான் அப்படியே நேரே நடந்து கீழூர் வீட்டிற்கு வந்தேன். அங்கு...

 நான் ஜடாயுபுரம் செல்லும் போது கீழூரில் கொஞ்சமாக வந்த தண்ணீர் கூடியிருக்கும் என்று தெரிந்தது. ஜடாயுபுரம் மற்றும் கிராமத்துத் தண்ணீர் காட்சிகள் எடுத்துவிட்டுக் கீழூர் வந்த போது இதோ கீழூரிலும் தண்ணீர் வீடு வரை வந்து அதிகரித்திருந்தது.  நான் வந்து கொண்டே படமும், காணொளியும் எடுத்தது மேலே இரு படங்களில் முதல் படத்தில் நான் எடுக்கும் நிழல். கீழூர் வீட்டருகே காட்சிகள் சுட்டி. காணொளியில் தண்ணீர் பெருகுவது தெரியும். காணொளியின் இடையில் ஒரு செல்லம் நிற்பதும் தெரியும்.

கீழூரிலிருந்து நானும் அப்பாவும் மேலூரிலிருக்கும் எங்கள் குடும்ப நட்பு அக்கா வீட்டிற்குச் சென்றோம். 

அக்கா வீட்டிலிருந்துதான் இப்படம் எடுத்தேன். காணொளியும். தண்ணீர் இந்த  வடக்குத் தெரு வழியாக மேற்குத் தெருவிற்குச் சென்று (செல்வது காணொளியில் பார்த்தால் தெரியும்) அப்படியே வீடுகளின் இடையில் முடுக்கு வழியே புதிதாக முளைத்துக் கொண்டிருக்கும் ஜடாயுபுரம் வீடுகளை நிறைத்துக் கொண்டு வயல்கள் வழியே ஓடிக் கொண்டே இருந்ததால் தண்ணீர் தேங்கி நிற்கவில்லை. சீக்கிரமாக வடிந்தும் விட்டது. 


இதோ இங்கு எங்களின் குடும்ப நட்பு அக்கா வீட்டில் தண்ணீர் வந்த முதல் நாள் இரவு தங்கினோம். மறுநாள் காலையில் தண்ணீர் வடிந்திருந்தது.  கீழூர் சென்று வீட்டைச் சுத்தம் செய்து மீண்டும் இரண்டாவது நாளும் தண்ணீர் வந்த போது இதே அக்கா வீட்டில் இரவு தங்கிவிட்டு மீண்டும் மறு நாள் காலையில் சென்று வீட்டைச் சுத்தம் செய்தோம். அக்கா வீட்டிலிருந்துதான் மேலே உள்ள இரு படங்கள், கீழே உள்ள படம் மற்றும் காணொளி எடுத்தேன். காணொளியில் கடைசியில் பேட்டரி சார்ஜ் போச்சு என்று சொல்வது கேட்கும் என்று நினைக்கிறேன். 
இந்த மூன்று படங்களும் திருப்பதிசாரம் மேலூர். 
எங்குமே தண்ணீர் தேங்கி நிற்காமல் வடிந்துவிட்டதால் பிரச்சனைகள் இல்லை.  அதன் பின் தண்ணீர் வரத்து இல்லை. உடைப்பு வெட்டப்பட்ட பகுதிகள் தவிர பிற பகுதிகளில் வண்டிகள் செல்லவும் தொடங்கிவிட்டது. 

தண்ணீர் வந்தது பற்றிய பதிவுகளில் ஒரே பதிவில் காணொளிக் காட்சிகள் நிறைய கொடுத்திருக்கிறேன். காரணம் எடுத்த காட்சிகள் எல்லாம் பதிவு செய்து லிங்க் அனுப்பு என்று என் உறவினர்கள் சொல்லியதால் இப்படி. பயணம் பற்றிய பதிவுகளிலும் பதிவில் சொல்லப்படுபவைக்கு ஏற்ப ஒன்றிற்கு மேற்பட்ட காணொளிகள் கொடுக்க நேரிடலாம். உங்களுக்கு நேரமும், பொறுமையும் இருந்தால் பாருங்கள். 

உடைப்பு வெட்டப்பட்ட பகுதிகள் மற்றும் வடிகால் பகுதியில் கட்டப்பட்டிருக்கும், கட்டப்படும் வீடுகள் படங்கள் எல்லாம் அடுத்த பதிவில் பகிர்கிறேன். அதன் பிறகு, என் பயணம் பற்றிய விவரங்கள் அழகான இயற்கைக் காட்சிகளுடன், காணோளிகளுடன் வரும். 

பதிவைப் பொறுமையுடன் வாசித்துக் கருத்திடும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.



------கீதா

42 கருத்துகள்:

  1. அடுத்த வாரம் நான் செல்லும்போது, சென்னை அனுபவம் போலவே கொஞ்சம்கூட தண்ணீர் இருந்த மாதிரியே இருக்கப்போவதில்லை. அப்புறம் நீங்க வெளியிட்டதெல்லாம் கிராபிக்ஸ் காட்சி போலத் தோன்றும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஆமாம் நெல்லை நாங்கள் அங்கிருந்த போதே மழையின் அடையாளம் தவிர த்ண்ணீர் வந்த அடையாளங்கள் ஆங்காங்கே ரோடி அரித்து இருந்ததும், பள்ளங்களும் உடைப்புகளும் மட்டும் தான்.

      உடனே உடனே எல்லாம் என்னால் போட முடியலையே நெல்லை.

      நீங்கள் போகும் முன் நார்மல் நாட்களின் இயற்கைக் காட்சிகள் போட முடிகிறதா என்று பார்க்கிறேன்.

      நீங்கள் என்ன எங்கள் ஊர் முழுவதையுமா பார்க்கப்போகிறீர்கள்? கோயில் மட்டும் பார்த்துவிட்டு ஓடிடுவீங்க!! ஹாஹஹாஹா

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. உங்க அப்பாவைப் பார்க்கலாம்னா, அவர் நான் அவர் ஊருக்கு வருவதை முன்கூட்டியே அறிந்து, என் ஊருக்கு வந்துடறார்.

      இந்தத் தடவை பயணம் சிரமமாக இருக்கும்னு நினைக்கறேன். பார்க்கலாம்

      நீக்கு
    3. ஹாஹாஹா ...நீங்க முன்ன போன போது அவர் அங்குதான் இருந்தார்.

      இந்தத் தடவை பயணம் சிரமமாக இருக்கும்னு நினைக்கறேன். பார்க்கலாம்//

      ஏன் நெல்லை? எதனால்?

      நல்லபடியாக அமையும் .

      கீதா

      நீக்கு
  2. மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்ட படங்கள் கூடவே சொல்லி வந்த விளக்கங்கள் அருமை.

    காணொளி சுட்டிகளுக்கு பிறகு செல்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி

      மெதுவா பாருங்க நேரம் கிடைக்கும் போது

      கீதா

      நீக்கு
  3. படித்து விட்டேன். காணொளிகள் பார்க்க வேண்டும். பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம். எப்ப நேரம் கிடைக்கிறதோ பாருங்க

      கீதா

      நீக்கு
  4. காணொளிகள் எதுவும் பார்க்க முடியவில்லை...

    This video is private - என்று வருகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பப்ளிக் ஆக்கிவிட்டேன் டிடி

      கீதா

      நீக்கு
    2. பதிவு வெளியாகும் போது பப்ளிக் ஆக்க மற்ந்துவிட்டேன் தான். அதன் பின்னர் ஸ்ரீராம் கருத்து வாசித்ததும் காணொளிகள் பின்னர் என்றதும் நினைவு வந்து பப்ளிக் ஆக்கிவிட்டேன் டிடி

      மிக்க ந்ன்றி

      கீதா

      நீக்கு
  5. வணக்கம் சகோதரி

    நல்ல விளக்கமாக அங்குள்ள ஊர்கள் பற்றியும், தெருக்கள் பற்றியும் விவரித்து, வர வர வாய்காலின் தண்ணீர் வரத்து எப்படி அதிகரித்து தெருக்களை சூழ்ந்து கொள்கிறது என்பதையும் அழகாக படங்கள் எடுத்தும் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு நாளில் வந்த வெள்ளம் வடிந்து விடும் என்றாலும், வருடந்தோறும் மழைக் காலங்களில் இது ஒரு சிரமமான நிகழ்வுகள்தாம்.

    தோப்பு, வயல் என தண்ணீர் நிரப்பிக் கொண்டு ஓடும் படங்களை காணும் போது, அதனைச் சுற்றியிருக்கும் இயற்கை வனப்புகள் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தாலும், முழுதும் நீரால் சூழப்பட்டிருக்கும் இடங்கள் பார்க்க சற்று பயமாகத்தான் உள்ளது.,

    தண்ணீர் பெருக்கெடுத்து வரும் நிலையிலும், வாய்க்காலில் தைரியமாக நின்று துணிகளை துவைத்து, குளிக்கும் பெண்களை பார்க்கும் போது அவர்களுக்கு இந்நிலைகள், வருடந்தோறும் எவ்வளவு சாதாரணமாக இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.

    நீங்களும் சுற்றி தண்ணீர் வரத்து கூடி வரும் வேளையிலும், ஆங்காங்கே தைரியரிமாக சென்று படங்களை எடுத்து பகிர்ந்துள்ளீர்கள். உங்கள் தைரியத்திற்கும் பாராட்டுக்கள்.

    பொதுவாக தண்ணீர் பாய்ந்து நதியில் கலக்கும் இடங்களில் வீடுகளை அமைத்துக் கொள்வது தவறுதான். ஆனால், மக்களின் தேவைகளான தங்குமிடங்கள்... அதுதான் அப்போதைக்கு முக்கியமாக படும் போது, வருடத்திற்கு முறை, இல்லை, மழை நன்றாக பெய்யும் தருணங்களில் இந்த மாதிரி நீர் பெருகி வந்து மிரட்டும் போது பார்த்துக் கொள்ளலாம் என்ற அசட்டு துணிச்சலும் சேர்ந்து கொள்கிறது. என்ன செய்வது?

    தாங்கள் பகிர்ந்த காணொளிகள் கைப்பேசியில் சரியாக வரவில்லை. மீண்டும் முயற்சித்து பிறகு பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு நாளில் வந்த வெள்ளம் வடிந்து விடும் என்றாலும், வருடந்தோறும் மழைக் காலங்களில் இது ஒரு சிரமமான நிகழ்வுகள்தாம்.//

      இல்லை கமலாக்கா. ஒவ்வொரு வருடமும் இல்லை. புயல் மழை என்றால் மட்டுமே அதுவும் ஊருக்குள் எல்லாம் வந்ததில்லை. டேம் திறந்து விடப்பட்டால் அல்லது அதீத மழை என்றால் மட்டுமே அதுவும் ஊருக்குள் எல்லாம் வந்ததில்லை இதெல்லாம் சமீபகாலத்தில் தண்ணீர் வடியும் பகுதிகள் சுருங்கி வருவதால்...

      இதுவரை பயமில்லை கமலாக்கா...வயல்கள் தோப்புகள் இருக்கும் வரை மக்கள் பிழைத்தார்கள்.

      தண்ணீர் பெருக்கெடுத்து வரும் நிலையிலும், வாய்க்காலில் தைரியமாக நின்று துணிகளை துவைத்து, குளிக்கும் பெண்களை பார்க்கும் போது அவர்களுக்கு இந்நிலைகள், வருடந்தோறும் எவ்வளவு சாதாரணமாக இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.//

      அது கோயில் தெப்பக் குளம் கமலாக்கா.

      வாய்க்காலிலும் கூட தண்ணீர் வரப்ப தோய்ப்பாங்க குளிப்பாங்கதான். படம் எடுத்த போது அதுவும் வந்துவிட்டது ஆனால் பெண்கள் குளியல் என்பதால் பொதுவெளியில் பகிரவில்லை.

      //பொதுவாக தண்ணீர் பாய்ந்து நதியில் கலக்கும் இடங்களில் வீடுகளை அமைத்துக் கொள்வது தவறுதான். ஆனால், மக்களின் தேவைகளான தங்குமிடங்கள்... அதுதான் அப்போதைக்கு முக்கியமாக படும் போது, வருடத்திற்கு முறை, இல்லை, மழை நன்றாக பெய்யும் தருணங்களில் இந்த மாதிரி நீர் பெருகி வந்து மிரட்டும் போது பார்த்துக் கொள்ளலாம் என்ற அசட்டு துணிச்சலும் சேர்ந்து கொள்கிறது. என்ன செய்வது?//

      ஆமாம் அசட்டுத் துணிச்சல் என்பதையும் விட நாம் இப்படிச் செய்கிறோமே என்ற குற்ற மனப்பான்மை இல்லாததால்தான்..

      நேரம் கிடைக்கும் போது பாருங்கள் கமலாக்கா

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. மிக அழகான புகைப்படங்கள்! நீரின் நேர்த்தியை மிக அழகாக படம் பிடித்திருக்கிறீர்கள்! பின்னால் வந்த புகைப்படங்கள் அழகு எப்படியெல்லாம் ஆபத்தாக மாறக்கூடியது என்பதை காண்பிக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக அழகான புகைப்படங்கள்! நீரின் நேர்த்தியை மிக அழகாக படம் பிடித்திருக்கிறீர்கள்!//

      மிக்க நன்றி மனோ அக்கா

      அழகு ஆபத்தாகவில்லை இங்கு. மனிதர்களின் சுய நலச் செயல்களால் ஏற்படும் விளைவுகள். இல்லையா மனோ அக்கா?

      மிக்க நன்றி அக்கா

      கீதா

      நீக்கு
  8. //ஜடாயுபுரம் என்பது தனி கிராமம் எல்லாம் இல்லை. அது திருப்பதிசாரத்தின் ஆற்றங்கரைப் - பழையாறு ஓடும் - பகுதி. ஊரை ஒட்டி வயல்களுடன், கோயில்களுடன் இருக்கும் பகுதி. (சொல்ல முடியாது, தற்போது வீடுகள் வருவதால் எதிர்காலத்தில் வயல்கள் எல்லாம் வீடுகளாக மாறி தனி கிராமம் ஆனாலும் ஆகலாம்! திருவாழிமார்பா!)//

    எதிர்கால பயமும் சேர்ந்து கொண்டது. இயற்கை ஆட்சி செய்த இடங்கள் எல்லாம் மக்கள் வசதிக்கு ஏற்ப வீடு அமைக்க மாறி வருவது உண்மைதானே!

    படங்கள் காணொளிகள் எல்லாம் மக்கள் எப்படி எல்லாம் மழை நேரத்தில் கஷ்டபட்டு இருப்பார்கள் என்று தெரிகிறது.

    காற்றின் மொழியை கேட்க முடிந்தது உங்கள் காணொளியில். உங்கள் இனிமையான குரலையும், அந்த ஊர் மக்களின் பேச்சுகளையும் கேட்டேன்.

    பேட்டரி லோ (சார்ஜ்சு போச்சு என்பதை கேட்டேன்)என்கிற வரை பார்த்தேன்.

    முதல் காணிளியில் ஏரியின் கரை ஓரம் உள்ள குப்பைகள், நீரில் அடித்து வர்ரபட்டு கரையில் ஒதுங்கிய குப்பைகள் , அடுத்த காணொளியில் நீரின் தெளிவு. அடுத்து நீரின் வேகம், அடுத்து கோயிலைச் சுற்றி மழை நீர் , அந்த அம்மா நடந்து வரும் போது நீரின் உயரம் தெரிகிறது.

    தண்ணீர் பெருகுவது எல்லாம் நன்றாக காணொளி எடுத்து இருக்கிறீர்கள். ஒரு வயதான அம்மாவை கரைபகுதியில் தண்ணீரில் நின்று கொண்டு அழைப்பதையும் பார்த்தேன். அவர்கள் வரும் பகுதியில் அணைகட்டு நீர் திறந்து விட்டதோ ! என்று நினைக்கும் அளவுக்கு வேகமாக மழை வெள்ளம் வருகிறது.

    ஏரியை பார்க்க அழகாய் இருக்கிறது. ஏரியின் கரையை உயர்த்த முடியாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்கால பயமும் சேர்ந்து கொண்டது. இயற்கை ஆட்சி செய்த இடங்கள் எல்லாம் மக்கள் வசதிக்கு ஏற்ப வீடு அமைக்க மாறி வருவது உண்மைதானே!//

      ஆமாம் கோமதிக்கா. மேற்குத் தெருவின் வீடுகளின் பின்பக்கத்தில் முன்பு நீர் வடிகாஅல் பகுதிகளில் (தோப்பும் வயலும்) தற்போது வீடுகள் புது கால்னையாக முளைத்து வருகின்றது. அது ஒரு வீடியோவில் இருக்கிறது. அது இயற்கைக் காட்சிகள் பகுதியில் கோயில் பழையாறு எலலம் வரும் பகுதியில் போட வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

      அந்த இடத்தில் இரண்டாம் நாள் நெஞ்சு வரை தண்ணீர் வந்தது என்று சொன்னார்கள். ஆனால் உடனே வடிந்துவிட்டது என்பது வேறு விஷயம். ஆனால் எதிர்காலப் பயம் வரத்தான் செய்கிறது.

      காணொளிகள் பார்த்தத்ற்கு மிக்க நன்றி கோமதிக்கா.

      அக்கா நீங்கள் எடுக்கும் காணொளிகளையும் உங்களுக்கென்று ய்ட்யூப் சானல் ஒன்று தொடங்கி பகிருங்கள். ஒவ்வொன்றும் தலைப்பிட்டு. சிறியவை இரண்டு மூன்றை ஒரே வகையைச் சேர்ந்தவற்றை இணைத்து ஒரே வீடியோவாகச் செய்து போடலாம். பார்ப்பவர்கள் பார்க்கலாமே. அட்லீஸ்ட் எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும். உங்கள் வீடியோக்கள் மிகவும் தெளிவாகவும் இருக்கின்றன குறிப்பாகப் பறவைகள் எலலம் மிக மிகத் தெளிவாக இருக்கின்றன. நீங்கள் வீடியோ தலைப்பில் பறவையின் பெயரையும் சொல்லலாம் அக்கா

      /காற்றின் மொழியை கேட்க முடிந்தது உங்கள் காணொளியில். உங்கள் இனிமையான குரலையும், அந்த ஊர் மக்களின் பேச்சுகளையும் கேட்டேன்.

      பேட்டரி லோ (சார்ஜ்சு போச்சு என்பதை கேட்டேன்)என்கிற வரை பார்த்தேன்.//

      மிக்க நன்றி கோமதிக்கா. அதனால் தான் இரண்டாம் நாள் அதிகம் எடுக்க முடியவில்லை. கரன்ட் இல்லாததால் சார்ஜ் செய்ய முடியவில்லை.

      முதல் காணிளியில் ஏரியின் கரை ஓரம் உள்ள குப்பைகள், //

      அக்கா அது ஏரில் இல்லை. ஏரி போன்று வயல்கள் எல்லாம் தண்ணீரால் ரொம்பி இருந்தன. பெரிய பரப்பு தண்ணீர் எல்லாம் வயல்கள். தண்ணீர் வடிந்த பிறகு ஜடாயுபுரம் இயற்கைக் காட்சிகளை எடுத்திருக்கிறேன் பகிரும் போது உங்களுக்குப் புரியும் அக்கா.

      அவர்கள் வரும் பகுதியில் அணைகட்டு நீர் திறந்து விட்டதோ ! என்று நினைக்கும் அளவுக்கு வேகமாக மழை வெள்ளம் வருகிறது.//

      ஆமாம் அக்கா. அப்போது மழை வெள்ளம் தான் அதன் பின் தான் அணை திறந்து விடப்பட்டு அதுவும் சேர்ந்துகொண்டு ஊருக்குள்ளே அருவி போன்று பாயத் தொடங்கியது. உடைப்பு வெட்ட வேண்டியதானது.

      ஏரி அல்ல கோமதிக்கா அத்தனையும் வயல்கள்.

      இதற்கு அடுத்த் பகுதியில் சொல்கிறேன் கோமதிக்கா

      மிக்க நன்றி கோமதிக்கா எல்லாம் வாசித்துக் கருத்து சொன்னதற்கு

      கீதா

      நீக்கு
  9. கோயில் திருக்குளம் மிக அருமையாக இருக்கிறது. உங்கள் விளக்கம் அருமை. பிறை போன்ற வடிவம் அழகு.

    அந்த குளத்தில் படியில் வயதான அம்மா துணிதுவைத்து கொண்டு இருக்கிறார்.
    கீழே உள்ள இரண்டு படங்களில் ஒருவர் துணி துவைத்து கொண்டு இருக்கிறார். அந்த இரு படங்களும் குமுதம் பத்திரிக்கையில் வரும் ஆறு வித்தியாசம் கண்டு பிடிக்க சொல்லும் படம் போல பார்த்தேன். இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. நீரின் அளவு மற்றும் படித்துறை காட்சிகள்.

    இங்கும் இன்று காற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. காற்றின் ஓசையை கேட்டு கொண்டு பின்னூட்டம் இடுகிறேன்.

    வீட்டின் வெளியே கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் பறந்து போக வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை அறிவுப்பு வருகிறது.
    முதலில் போட்ட பின்னூட்டம் போனதா என்று தெரியாமல் மீண்டும் இது வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் எங்கள் குளம் அழகாக இருக்கும். மிக்க நன்றி கோமதிக்கா

      அந்த குளத்தில் படியில் வயதான அம்மா துணிதுவைத்து கொண்டு இருக்கிறார்.
      கீழே உள்ள இரண்டு படங்களில் ஒருவர் துணி துவைத்து கொண்டு இருக்கிறார். அந்த இரு படங்களும் குமுதம் பத்திரிக்கையில் வரும் ஆறு வித்தியாசம் கண்டு பிடிக்க சொல்லும் படம் போல பார்த்தேன். இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.//

      ஹாஹாஹா ....வேறு வேறு பெண்கள் தான்!!!!!

      //இங்கும் இன்று காற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. காற்றின் ஓசையை கேட்டு கொண்டு பின்னூட்டம் இடுகிறேன்.வீட்டின் வெளியே கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் பறந்து போக வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை அறிவுப்பு வருகிறது.//

      ஓ காற்று இப்போது குறைந்ததா? மகன் சொன்னான் அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் கொஞ்சம் வார்மாகவும் வடக்கு மாநிலங்களில் குளிர் அதிகமாகவும் இருப்பதால் தெற்குப் பகுதிகளில் அழுத்தம் காரணமாகக் காற்று என்றும் அதனால்தான் கெண்டகியில் டார்னடோ வந்து புரட்டிப் போட்டிருக்கு என்றும் சொன்னான். உங்கள் பகுதியில் இப்போது சரியாகி இருக்கும் என்று நினைக்கிறேன். அலங்காரங்கள் எல்லாம் கலையாமல் இருக்கிறதா கோமதிக்கா.

      பின்னூட்டம் வந்திருக்கிறதே இரண்டும்

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  10. மழை, வெளியே செல்ல முடியாது என்கிற நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளம்  வரும் என்னும் நிலை மனதில் உருவாகும்!  மேலும் சென்னையில் மற்ற ஊர்களில் வருவது போல இங்கே எங்கே வெள்ளம் வரப்போகிறது என்ற எண்ணமும் (ஆரம்பப்படங்கள்)  மனதில் இருந்திருக்கும்! இப்படித்தானே 2015 ல் சென்னை தேனாம்பேட்டை, மாம்பலம் போன்ற பகுதி வாசிகள் எல்லாம் நினைத்தார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதே தான் ஸ்ரீராம். தண்ணீர் வரப் போகிறது என்பது தெரிந்துவிடும் ஊரில். ஆறும் வாய்க்காலும் பெருகுவதிலிருந்தும் தெரிந்து விடும், மலைகள் தொடர்ந்து கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்தாலும் அங்கு மழை அதிகம் என்பதிலிருந்தும்.

      இப்படித்தானே 2015 ல் சென்னை தேனாம்பேட்டை, மாம்பலம் போன்ற பகுதி வாசிகள் எல்லாம் நினைத்தார்கள்!//

      ஆமாம் ஸ்ரீராம். ஒரே ஒரு வித்தியாசம் ஊரில் தண்ணீர் ஓட அதிகம் இடம் இருக்கு...தேங்கிவிடாமல் ஓடுவதற்கு. தேனாம்பேட்டை மாம்பலம்??? ஒரு இண்டு இடுக்கு கூட இல்லை!!

      ஊரும் அப்படி ஆனால் சென்னை நிலைதான் ஸ்ரீராம். இப்போதைக்கு வயல்கள் தோப்புகள் வாய்க்கால்கள், நீரோடைகள் எல்லாம் காத்துக் கொண்டிருக்கின்றன.

      மிக்க் நன்றி ஸ்ரீராம் உங்களின் வேலை நெருக்கடியிலும் பொறுமையாகப் பார்த்து கருத்து சொன்னமைக்கு

      கீதா

      நீக்கு
  11. இது மாதிரி நிறைந்த நீர்நிழகிகளைப் பார்க்கும்போதுமனதில் ஒரு பரவசம் தோன்றும். 

    இப்போதும்தான். 

    ஆனால் சமீபத்து அனுபவங்கள் பயத்தையும் மனதில் தோற்றுவிக்கின்றன!  பயப்பரவசம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. இது மாதிரி நிறைந்த நீர்நிழகிகளைப் பார்க்கும்போதுமனதில் ஒரு பரவசம் தோன்றும்.//

      இப்போதும்தான்.//

      ஆமாம் ஸ்ரீராம். நான் ரொம்பவும் ரசித்துப் பார்த்தேன். ஆனால் பொறுப்பு இருந்ததால் அதிகம் முடியவில்லை.

      ஆனால் சமீபத்து அனுபவங்கள் பயத்தையும் மனதில் தோற்றுவிக்கின்றன! பயப்பரவசம்!//

      பயப்பரவசம்!// ஆஹா சூப்பரா இருக்கே இந்தச் சொல். ரசித்தேன் சீராம்.

      உண்மைதான் சமீபத்து நிகழ்வுகள் பயத்தை ஏற்படுத்துகிறதுதான்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  12. //நீர்நிழகிகளைப் //

    நீர்நிலைகளை

    பதிலளிநீக்கு
  13. காணொளிகளை பார்த்தால் மறுபடியும் சொல்லத்தோன்றுவது,  மிரட்டும் அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா!! மிரட்டும் அழகு! இச்சொல்லையும் ரசித்தேன் அட என்று!!

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  14. ஆனாலும் உங்கள் கடமை உணர்வு..   இந்நிலையிலும் மழையிலும் வெள்ளத்திலும் சென்று  புகைப்படங்கள், காணொளி என்று எடுத்து...   பாராட்டுகள்!   இரண்டு காணொளிகள் புது ஜன்னலில், இரண்டு காணொளிகள் இங்கேயேயும் திறக்கின்றன. 

    பதிலளிநீக்கு
  15. ஆனாலும் உங்கள் கடமை உணர்வு.. இந்நிலையிலும் மழையிலும் வெள்ளத்திலும் சென்று புகைப்படங்கள், காணொளி என்று எடுத்து... பாராட்டுகள்! // ஹிஹிஹி.....ஹாஹாஹா

    நன்னி நன்னி!!! இதுதானே சான்ஸ் எங்க ஊரைக் காட்ட! அப்புறம் நீங்கள் போகும் சான்ஸ் கிடைத்தால்....அப்ப ஊர் மாறிப் போயிருந்தால்...என்ன இது கீதா தன் ஊரைப் பத்தி ரொம்பவே பெருமை பேசினா இவ்வளவுதானான்னு சொல்லிக் கூடாதில்லையா! ஹாஹாஹஹா

    எல்லாக் காணொளிகளையும் புது ஜன்னலில் தான் போட்டேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஸ்ரீராம். அது சேவ் செய்ய படுத்தியதால் மீண்டும் எடுத்துப் போட்டப்ப விட்டுப் போயிருக்கு போல...இப்பலாம் மீண்டும் செக் செய்ய எல்லாம் சலிப்பு வந்துவிடுகிறது கடைசியில்...அப்பாடா ஒரு வழியா பதிவு முடிச்சாச்சு என்று தோன்றத் தொடங்கிவிடுகிறது ஸ்ரீராம். எனர்ஜி செலுத்திக் கொள்ள வேண்டும்!!

    மிக்க நன்றி ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இப்பலாம் மீண்டும் செக் செய்ய எல்லாம் சலிப்பு வந்துவிடுகிறது கடைசியில்...அப்பாடா ஒரு வழியா பதிவு முடிச்சாச்சு என்று தோன்றத் தொடங்கிவிடுகிறது ஸ்ரீராம் 


      ஆமாம்.  இப்படி எனக்கும் தோன்றுவதால் எல்லோருக்கும் இப்போது அப்படி தோன்றுகிறது  தோன்றுகிறது!

      நீக்கு
    2. ஆமாம். இப்படி எனக்கும் தோன்றுவதால் எல்லோருக்கும் இப்போது அப்படி தோன்றுகிறது தோன்றுகிறது!//

      ஹாஹாஹாஹாஹா....

      ஸ்ரீராம், வீட்டு வேலைகள், அப்புறம் நான் செய்யும் வேலை, அதுவே சரியாக இருக்கிறது, ப்ளாக் வந்து வாசிக்க அப்புறம் தனிப்பட்ட வாசிப்பு அதற்கு நேரம் குறைகிறது, எழுத மனம் வேண்டும். தவிர எனக்குச் சுற்றிப் பார்ப்பது மிக மிக விருப்பம். அமைதியான இடங்கள் இயற்கையோடு இணைந்த இடங்கள் செல்வது எல்லாம் ரொம்ப ரொம்பப் பிடிக்க்ம்இயற்கையை புகைப்படம் எடுப்பதும். என் தனிப்பட்ட விருப்பமாகிப் போனதால் சமீப காலமாக அப்படிச் செல்லவும் முடியவில்லை என்பதால். சமீபத்திய பயணம் எனக்கு மிக மிக நல்ல ஒரு ரிலாக்சேஷன் என்று சொல்வேன். அது சுற்றுப் பயணம் என்றில்லை என்றாலும் நான் அதை சுற்றுப் பயணமாக்கிக் கொண்டேன்!!!!!!!

      மீண்டும் எப்போதோ.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  16. மழை, வெள்ளம் என்று இத்துணை சிரமங்களுக்கு நடுவிலும் காணொளிகளை சிறப்பாக பதிவு செய்துள்ளதை பாராட்டியே ஆக வேண்டும். வாழ்த்துக்கள்!!!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நாஞ்சில் சிவா சகோ!

      மழை வெள்ளம் எல்லாம் கஷ்டமாகவே தெரியவில்லை சிவா சகோ. சொல்லப் போனால் ரொம்ப ரிலாக்ஸ்டாக மகிழ்வாக இருந்தேன்.

      கீதா

      நீக்கு
  17. பெரிய பதிவு. நிறையப் படங்கள். பார்க்கவும்/படிக்கவும் நேரம் எடுக்கிறது. இரண்டாகப் பிரித்துப் போட்டிருக்கலாமோ!

    பதிலளிநீக்கு
  18. Geetha Sambasivam commented on "பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 4"
    21 hours ago
    பெரிய பதிவு. நிறையப் படங்கள். பார்க்கவும்/படிக்கவும் நேரம் எடுக்கிறது. இரண்டாகப் பிரித்துப் போட்டிருக்கலாமோ!//

    கீதா அக்கா உங்கள் கமென்டை பப்ளிஷ் செய்தும் பதிவில் போகவே இல்லை. ப்ளாகரிலேயே இருந்தது. எனவே எடுத்து இங்கு போட்டுவிட்டேன்.

    ஸாரி கீதா அக்கா..கொஞ்சம் பெரிதாகிப் போயிற்றுதான்... பதிவு ஏற்கனவே தாமதாகிப் போனதால் தொடர்ந்து இதே பதிவு என்பதாலும் இதன் தொடர்ச்சி இன்னும் ஒன்றே ஒன்றுதான் என்பதாலும் இப்படிக் கொடுத்துவிட்டேன்.

    அதன் பின் பயணம் பற்றிய பதிவுகள் வரும் நான் சென்ற இடங்கள் அங்கு உள்ள இயற்கைக் காட்சிகள் படங்களுடன்.

    மிக்க நன்றி கீதாக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  19. எங்கு பார்த்தாலும் தண்ணீர்!படங்கள் அருமை. 'தண்ணீர் மரிந்து' என்றால் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊர் வழக்கு எனலாம் ஐயா. மரிஞ்சு என்று சொல்வது.

      மிக்க நன்றி முனைவர் கோவிந்தராஜு ஐயா

      கீதா

      நீக்கு
    2. தண்ணீர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பாய்தல் நிரம்பிப் பாய்தல்

      கீதா

      நீக்கு
  20. அன்பின் கீதாமா,
    நலமுடன் இருங்கள். வெகு நிதானமாக உங்கள் விவரங்களையும்,
    காட்சிகளையும் பார்த்துக் கொண்டு வருகிறேன். ஊருக்குள் இத்தனை தண்ணீர் வந்தாலும் அது வடிந்து விடுகிறது என்பதே அதிர்ஷ்டம்.

    வயல்களும் தென்னந்தோப்புகளும் வண்ணம் அடித்த வீடுகளும்
    புதுமையாகவும் பசுமையாகவும் இருக்கின்றன.
    அதுவும் இரவில் எடுத்த காட்சி மிக அருமை.
    மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊருக்குள் இத்தனை தண்ணீர் வந்தாலும் அது வடிந்து விடுகிறது என்பதே அதிர்ஷ்டம்.//

      ஆமாம் அம்மா. 4, 5 மணிநேரத்தில் வடிந்துவிடும். இங்கா தண்ணீர் வந்தது என்று அடையாளம் இல்லாமல்..கொஞ்சம் மணலை மட்டும் போட்டுவிட்டுப் போயிருக்கும். அதுவும் உடனே சுத்தம் செய்யப்பட்டுவிடும். வயல்கள் தோப்புகளில் மட்டும் கொஞ்சம் த்ண்ணீர் ஆங்காங்கே தேங்கியிருக்கும் அதையும் வயல் உடமஸ்தர்கள் வரப்பில் வெட்டி விட்டு அதிகமான தண்ணீரை ஓடைக்குத் திருப்பிவிடுட்டுவிடுவார்கள்.

      வயல்களும் தென்னந்தோப்புகளும் வண்ணம் அடித்த வீடுகளும்
      புதுமையாகவும் பசுமையாகவும் இருக்கின்றன.//

      ஆமாம் அம்மா ஊர் அழகாக இருக்கும்.

      //அதுவும் இரவில் எடுத்த காட்சி மிக அருமை.//

      மிக்க நன்றி அம்மா.

      மெதுவா பாருங்க...அவசரமே இல்லை.

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு