செவ்வாய், 23 நவம்பர், 2021

பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 2

சாது பொங்கினால்……காடும் ஊரும் கொள்ளாது - 2


https://thillaiakathuchronicles.blogspot.com/2021/11/%20%20%20%20%20%20%20%20%201.html   பகுதி 1


பகுதி 1ல் எங்கள் ஊரில் தண்ணீர் புகுந்ததைப் பற்றி எழுதத் தொடங்கினேன். அதன் படங்கள் மற்றும் காணொளிகளின் சுட்டி (துளசியின் தில்லைஅகத்து யுட்யூப் சானல்) சில இங்குப் பகிர்கிறேன்.

இன்னும் பல படங்கள், காணொளிகள் இருப்பதால் பகுதி பகுதியாக இங்குப் பகிர்கிறேன்.

தேரேகால் வாய்க்கால் வீட்டின் எதிரே - நாஞ்சில் நாடன் அவர்களின் கதைகளில் இடம் பெறும் பேர் பெற்ற தேரேகால் வாய்க்கால்

இதன் காணொளியின் சுட்டி இதோ

https://www.youtube.com/watch?v=dG9FB2KmEZQ 

எங்கள் ஊரின் வழி செல்லும் தேரேகால் வாய்க்காலில் (அப்பா இருக்கும் (தம்பியின் வீடு - வீட்டிற்கு தொட்டடுத்து ஓடும் தேரேகால் வாய்க்காலில்) தண்ணீர் வரத்து கொஞ்சம் கொஞ்சமாக ஏறியதன் படங்கள் மற்றும் காணொளிகளை இங்குப் பகிர்ந்திருக்கிறேன். வீட்டிலிருந்து பார்த்தாலே தண்ணீர் வரத்து நன்றாகத் தெரியும்.


https://www.youtube.com/watch?v=_BNHjHliAXI

https://youtu.be/m6-JRfTSOr4

https://youtu.be/bbT5WO2b49I

வீட்டின் எதிரே முன்பு சிறிய தாமரைக் குளமாக இருந்த பகுதி

https://youtu.be/2LnO_GAIwsE

https://youtu.be/z0Y13hekIaU

கீழூர் வீடுகளின் பக்கவாட்டுப் பகுதியில் தேரேகால் தண்ணீர் வரத்து அதிகரித்து வீடுகளின் பின்பகுதி வழியும் புகுந்தது

திருப்பதிசாரம் கீழூர், மேலூர் விளக்கம் படங்களுடன் இனி வரும் பதிவுகளில். இரண்டிற்கும் நடுவில்தான் இந்த தேரேகால்.

https://youtu.be/-UC2gqozM7Y

அடுத்த பதிவில் தேரேகால் எப்படி மரிந்து கீழூர், மேலூருக்குள் பாய்ந்தது/புகுந்தது, ஜடாயுபுரத்தை நிறைத்தது, ஊருக்கு மிக அருகில் இருக்கும் பீமநகரி எனும் குக்கிராமத்தில் கிருஷி பாலத்தில் இந்தத் தேரேகால் வாய்க்காலின் நீர் வரத்து, மதகு திறக்கப்பட்டு மறுகால் திருப்பிவிடப்பட்ட படங்கள், உடைப்புகளின் படங்கள், காணொளிகள் எல்லாம் அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்கிறேன்.

இப்பதிவில் அதிகம் எழுத இயலவில்லை. எனவே அடுத்தடுத்த பதிவுகளில் ஊருக்குள் தண்ணீர் வந்ததற்கான படங்களுடன் காரணங்களையும் ஏன் வாய்க்காலின் குறுக்கே உடைத்து விட வேண்டியதானது என்பதையும் சொல்கிறேன்.

இந்தப் பெருமழையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களை விட அதிகம் பாதிக்கப்பட்டவை பயிர்கள் –  வயல், வாழை, ரப்பர் தோட்டங்கள். எங்கள் ஊரில் வயல்களில் நாற்றுகள் பாதிக்கப்பட்டதால் நட்டம் என்று தெரிகிறது. செய்திகளிலும் பாதிக்கப்பட்ட ஊர்கள் பட்டியலில் திருப்பதிசாரத்தின் பெயர் அடிபட்டதாகத் தெரிகிறது.

ஒட்டுமொத்தமாகச் சொல்லப்படும் கருத்து கன்னியாகுமரி மாவட்டத்திலும் சமீபகாலமாக நீர் நிலைகளும் அதன் பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது/படுவது மற்றும் ப்ளாஸ்டிக் குப்பைகள் என்பதுதான்.

அப்படிச் சொல்லப்படுவது சும்மா வாயளவில். வாய்ச்சொல்லில் வீரர்கள் அவ்வளவே. ஏனென்றால் நடைமுறையில் பூஜ்ஜியம். என்னதான் இவை காரணங்களாகச் சொல்லப்பட்டாலும் காரணத்திற்கு உரிய மக்கள் திருந்தப் போவதில்லை. திருந்தவும் மாட்டார்கள். ஆட்சியாளர்களும் அப்படியே.

குப்பைகளை வாய்க்காலில் கொட்டும் மக்களை என்ன சொல்வீர்கள்? குப்பைகளை அகற்ற பஞ்சாயத்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? ஏதேதோ காரணங்கள்….எனக்குப் புரியவில்லை.

நீரின் பாய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகள் என்னை வருந்த வைக்கவில்லை. வைப்பதில்லை ஏனென்றால் நாம் செய்யும் தவறுகளுக்கான பின்விளைவுகளை நாம் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்! 

சிறிய சிறிய காணொளிகள்தான். நேரம் இருந்தால் பாருங்கள்.


  ------------கீதா



28 கருத்துகள்:

  1. ஆறு காணொளிகள் போட்டு இருக்கிறீர்கள் , எல்லாம் நீரின் வரத்து, அது உயரும் காட்சிகளை பார்த்தேன், முதல் காணொளியில் குப்பை குளங்கள் கிடைப்பதை பார்த்தேன்.
    நீர் நிலைகளை அசுத்தம் செய்யகூடாது என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதை கேட்கவில்லை என்றால் சில விளைவுகளை சந்தித்து தான் ஆக வேண்டி உள்ளது.
    படங்கள் எல்லாம் பசுமையை சொல்கிறது.
    வயலில் நாத்து நட்டு இருந்தால் நட்டம் தான் ஆகும், நீரில் மூழ்கி போய் விடும் தானே!

    வாய்க்காலின் கரைகளை மணல் மூட்டைகள், வரப்பை உயர்த்துதல் என்று செய்து இருப்பது நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதிக்கா. இப்பத்தான் ஊர்க்கோலம் பார்த்துக் கொண்டிருந்தேன். பார்த்துவிட்டுன் இங்கு வந்திருக்கிறேன். ஊர்க்கோலம் அழகோ அழகு!!

      காணொளிகள் பார்த்தற்கு மிக்க நன்றி கோமதிக்கா. ஆமாம் அந்தந்த படங்களுக்குக் கிட்டத்தட்ட ஒத்தவையான காணொளிகள். அடுத்த பதிவிலும் கூட வரும்.

      எங்கள் ஊர் முன்பெல்லாம் குப்பை என்றால் வைக்கோலும் சாணமும் தான் இருக்கும் இப்போது சென்னை பங்களூர் திருவனந்தபுரம் போன்ற நகரங்களைத் தோற்கடிக்கும் அளவு குப்பைகள். அதுவும் பால் தயிர் கவர்கள் பாலிதீன் பைகள்...

      அதற்கான விலையை நாம் கொடுத்துதானே ஆக வேண்டும்.

      அக்கா மணல் மூட்டைகள் பல இடங்களில் போட்டும் தண்ணீர் பாய்ந்துவிட்டது. இந்த இடத்தில் அரிப்பில்லை ஆனால் பிற இடங்களில் அரித்து பாய்ந்தது.

      பெரியோர்கள் சொன்னதை யார் கோமதிக்கா கேட்கிறார்கள். எல்லோரும் குப்பையைக் கொட்டுகிறார்கள். இன்னும் படங்கள் வரும் கோமதிக்கா

      மிக்க நன்றி அக்கா..

      கீதா

      நீக்கு
  2. படங்கள் அழகு.  "பயங்கர" அழகு!  படிப்படியாக நீர்நிலை உயர்வது சற்றே   .நீங்கள் ஏற்கெனவே உங்களுக்கு இதிலெல்லாம் பயமில்லை என்று சொல்லி இருப்பதால் பீதியைக் கொடுக்கும் என்கிற வார்தையைத் தவிர்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. ஸ்ரீராம் உண்மையாகவே தண்ணீர் வரத்து பயமுறுத்தவில்லை. எங்கள் ஊர் மக்கள் தண்ணீர் உயரும் போதே எப்படி ஜாலியாக வேலை செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அடுத்த படங்களில் பார்ப்பீர்கள். ஏனென்றால் தண்ணீர் பாய்ந்தாலும் ஓடிக் கொண்டே இருக்கும். அதனால் உயர்வது என்பது ரொம்ப ரொம்ப மெதுவாகத்தான் உயரும். சுனாமி போன்று அடித்துப் பாயாது. அடுத்த பதிவில் விளக்கமாகச் சொல்கிறேன்.

      ஆநீங்கள் ஏற்கெனவே உங்களுக்கு இதிலெல்லாம் பயமில்லை என்று சொல்லி இருப்பதால் பீதியைக் கொடுக்கும் என்கிற வார்தையைத் தவிர்க்கிறேன்!ன//

      ஹாஹாஹா ஆனால்ல் தற்போதைய நிகழ்வு கண்டிப்பாக ஒரு பயத்தை விளைவித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. நாகர்கோவில் மற்றும் எங்கள் கிராமங்கள் தண்ணீரில் மிதந்துப் பார்த்ததில்லை. நாகர்கோவில் ஆளை விழுங்கும் அளவு தண்ணீரில் மிதந்தது என்றால் இது கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம். காரணம் எல்லோரும் சொல்வதுதான் எல்லோருக்கும் தெரியும். வடிகால் கட்டமமைப்புகள் அத்தனையும் ஆக்ரமிக்கபட்டு இருப்பது. இன்னும் ஆக்ரமிப்புகள் நடப்பது. இது பற்றியும் பதிவில் சொல்கிறேன்.


      நாஞ்சில் நகர் எனும் புதிதாய் முளைத்திருக்கும் காலனியில் பெண் குழந்தைகள் தண்ணீய்ரில் வநீந்துவதைக் காணொளி எடுத்துப் போட்டிருப்பார்கள். அது இதோ எங்கள் ஊரிலிருந்து 15 நிமிட தூரஹத்தில் தேரேகால் வாய்க்காலின் தொட்டடுத்து, இது பற்றியும் எழுதுகிறேன். படங்களோடு.

      ம்ிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  3. ஒரு திருமணத்துக்கு கிளம்பிக் கொண்டிருப்பதால் காணொளிகள் இப்போது எதுவும் பார்க்கவில்லை. அதை எல்லாம் அப்புரம்தான் பார்க்க வேண்டும்.  தண்ணீரை வெளியேற்றும் முஅயற்சிகளுக்கு நடுவிலும், பாதுகாப்பைப் பார்த்துக்கல்ல வேண்டிய பரபரப்பான நேரத்துக்கு இடையிலும் கூட படங்களும் காணொளிகளும் எடுத்திருப்பது சிறப்பு.  எங்களுக்கும் நாங்கள் அந்த இடத்தில இருக்கிற உணர்வு வரும்.  அந்த இடங்களை பற்றித் தெரிந்தும் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெதுவாகப் பாருங்கள் ஸ்ரீராம் .

      இந்தக் கருத்திற்கும் பதிவில் சொல்கிறேன் ஸ்ரீராம்

      கண்டிப்பாக எங்கள் இடங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. முன்னோர்கள் சொல்லும் முறைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு.  நதியை தெய்வமாக வணங்க வேணும்.  (அசுத்தப் படுத்த மாட்டார்கள்) ஆற்றிலிருந்து மண் எடுத்து பிள்ளையார் பிடிக்க வேண்டும்.  (ஆறு தூர் வரப்படும்) ஆற்றோரத்தில் பிள்ளையார் கோவில் (அந்த இடம் தூய்மையாக இருக்கும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன் டிட்டோ செய்கிறேன் ஸ்ரீராம்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. ஊரை சுத்தமாக வைத்துக் கொள்வது மக்கள் நினைத்தால்தான் நடக்கும்.

    இதில் அரசை குறை சொல்ல இயலாது. முதலில் குப்பையை எங்கு கொட்ட வேண்டும் என்று மக்களுக்கு பாடம் நடத்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊரை சுத்தமாக வைத்துக் கொள்வது மக்கள் நினைத்தால்தான் நடக்கும்.//

      ஆமாம் கில்லர்ஜி. சரிதான். ஆனால் இதில் சில இருக்கு சொல்ல, பதிவில் சொல்கிறேன் கில்லர்ஜி.

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  6. காணொளிகளை ஒவ்வொன்றாக பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  7. இயற்கையை நாம் மதிக்காத நிலை நம்மை பல சிக்கலுக்கு ஆட்படுத்துகின்றன என்பது உண்மை. ஏனோ அதனை நாம் ஏற்க மறுக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்து முற்றிலும் உண்மை முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. ஏற்க மறுப்பதால்தான் பின் விளைவுகள்

      மிக்க நன்றி ஐயா.

      கீதா

      நீக்கு
  8. நாம் செய்யும் தவறுகளுக்கான பின்விளைவுகளை நாம் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்!

    பதிலளிநீக்கு
  9. ஒவ்வொன்றாகக் காணொளிகளைப் பார்க்கிறேன். ஆனால் இவற்றில் சிலவற்றைத் தொலைக்காட்சி மூலமும் பார்த்தோம். மக்கள் சுத்தம் என்பதைத் தீவிரமாகக் கடைப்பிடித்தால் ஒழிய இவை எல்லாம் சரியாகப் போவதில்லை. அதற்கு மக்கள் மனம் மாற வேண்டும். பொதுவாகச் சென்னை/மதுரையைப் போன்ற பெருநகரங்களோடு ஒப்பிடுகையில் கன்யாகுமரி மாவட்டம் ஒரு காலத்தில் சுத்தமாகத் தான் இருந்தது. :( ஆனால் இப்போது முற்றிலும் மாறி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் இவற்றில் சிலவற்றைத் தொலைக்காட்சி மூலமும் பார்த்தோம்.//

      அப்படியா கீதாக்கா எங்கள் ஊரின் இப்பகுதி எல்லாம் வந்ததா? இது எங்கள் ஊரின் உட்பகுதி, வீட்டருகில் வீட்டின் முன்

      // மக்கள் சுத்தம் என்பதைத் தீவிரமாகக் கடைப்பிடித்தால் ஒழிய இவை எல்லாம் சரியாகப் போவதில்லை.//

      கண்டிப்பாக. கீதாக்கா.

      //பொதுவாகச் சென்னை/மதுரையைப் போன்ற பெருநகரங்களோடு ஒப்பிடுகையில் கன்யாகுமரி மாவட்டம் ஒரு காலத்தில் சுத்தமாகத் தான் இருந்தது. :( ஆனால் இப்போது முற்றிலும் மாறி விட்டது.//

      அதே கீதாக்கா. நான் பலவருடங்கள் கழித்துச் சென்றேன். ரொம்பவே மாற்றங்கள் தெரிந்தது.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  10. நீர் வரத்து அதிகமாயிருக்கும் படங்களைப் பார்த்தேன். அதன் ஆபத்தையும் மீறி சலசல‌த்தோடும் தண்ணீரும் தென்னை மரங்களும் பசுமையும் கிராமப்புற அழகை ரசிக்கத்தான் தோன்றியது. முக்கிய காரணம் நம் ஊரைப்பார்த்து ஒரு வருடத்திற்கு மேலாகிறது! பசுமையும் மரங்களும் நீரும் ஏக்கத்தை அதிகரிக்கின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மனோ அக்கா தண்ணீர் வந்த போது கூட எங்கள் ஊரின் அழகுதான் என் மனதிலும் நின்றது. இந்த அழகு எதிர்காலத்தில் மறைந்துவிடாமல் இருக்க வேண்டும் என்று மனதில் தோன்றியது.

      //முக்கிய காரணம் நம் ஊரைப்பார்த்து ஒரு வருடத்திற்கு மேலாகிறது! பசுமையும் மரங்களும் நீரும் ஏக்கத்தை அதிகரிக்கின்றன!//

      முடிந்தால் உங்கள் ஊருக்கு வந்து செல்லுங்கள் அக்கா. ஆனால் இப்போது புதியதாய் கொரோனா வந்து பரவிக் கொண்டிருக்கிறதே.

      எப்போது இது தன் பரவலை நிற்பாட்டுமோ தெரியவில்லை.

      மிக்க நன்றி மனோ அக்கா

      கீதா

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    வாய்க்காலில் தண்ணீர் சூழ்ந்த படங்கள் பார்ப்பதற்கே பயங்களை உண்டு பண்ணுகின்றன. காணொளிகளையும் பார்த்தேன். மேலும் மேலும் நீர்வரத்து அதிகமானால் சுற்றி இருக்கும் வீடுகளுக்கு ஆபத்துதான். வாய்க்காலுக்கு கரையே இல்லையே? நீங்கள் சொல்வது போல், அங்கு வாழும் மக்கள் தங்கள் வீட்டு கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டாமல் இருக்க வேண்டும். நீரின் வேகத்திற்கு அணை போட்ட மாதிரியான நிலை ஏற்படும் போது வேகமாக பாயும் தண்ணீர் வேறு எங்கு செல்லும்.? இதை அரசாங்கமும், அதற்கு முன் மக்களும் உணர வேண்டும். படங்கள் இயற்கையின் பசுமையை நீருப்பிக்கின்றன. பசுமையை கண் நிறைய பார்த்து, அதன் பலன்களை மனமாற விரும்பும் நாம் அதற்கு ஒத்துழைப்பாக இருக்கவும் பாடுபட வேண்டும். மேலும் தொடர காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்க்காலில் தண்ணீர் சூழ்ந்த படங்கள் பார்ப்பதற்கே பயங்களை உண்டு பண்ணுகின்றன. காணொளிகளையும் பார்த்தேன். //

      எங்கள் ஊர் அருகில் இருக்கும் ஊர்கள் அதாவது ஏற்கனவே இருக்கும் கிராமங்கள் இப்போதும் தப்பித்தன. முன்பெல்லாம் இப்படி இருக்காது.

      // நீரின் வேகத்திற்கு அணை போட்ட மாதிரியான நிலை ஏற்படும் போது வேகமாக பாயும் தண்ணீர் வேறு எங்கு செல்லும்.?//

      ஆமாம் கமலாக்கா அதேதான். வடிகால் பகுதியில் இப்போது குடியிருப்புகள் பெருகிவிட்டதால் தண்ணீர் வடியும் நேரம் தமதமாக உள்ளது அல்லாமல் உடைத்துவிட வேண்டிய கட்டாயமும். எதிர்காலத்தில் கண்டிப்பாக எங்கள் ஊருக்கும் அபாயம் உள்ளது.

      அரசாங்கம் சட்டங்களை வலுவாக்க வேண்டும். மேலை நாடுகளைப் போல ஏரிகள் குளங்கள் ஆறுகளின் அருகில் வீடுகள் கட்ட அனுமதிக்கக் கூடாது.

      எங்கள் ஊர் பசுமை என்றால் பசுமை. ஆனால் மக்களும் ஒத்துழைக்க வேண்டும் நீங்கள் சொல்லியிருப்பது போல்.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  12. தாங்கள் பதிவு செய்துள்ள அனைத்து கணொளிகளையும் பார்வையிட்டேன். அதில் தவழ்ந்து செல்லும் வாய்க்கால் ஒன்று திடீரென்று பாய்ந்தோடும் நதியாக மாறி நேரம் செல்லச்செல்ல அதுவே காட்டாறாக விஸ்வரூபமெடுத்து முடிவில் அதுவே கடலாக மாறுவதை அழகாக படம்பிடித்துள்ளீர்கள்... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் நாள் மழை நீர் ஆற்றில் பெருகி வந்து மரிந்து பாய்ந்தது இயற்கையாக வந்த நீர். அதன் பின் அணைக்கட்டு நீர் திறந்துவிட வேண்டிய அவசியம் ஆகியதால் இரண்டாம் நாள் அதிகமாகியது. வீட்டின் அருகில், எதிரே என்பதால் எடுக்க முடிந்தது. இன்னும் கொஞ்சம் தூரம் சென்றிருக்கலாம். ஆனால் முடியவில்லை.

      நாஞ்சில் நாடு உங்களின் ஊர் என்பதால் ஒரு முறை முழுவதும் ஒரு சுற்று சுற்றிப் பார்த்துவிடுங்கள். எத்தனை அழகு, எத்தனை ரகசியங்களைக் கொண்டுள்ளது என்பது நம்மகுத் தெரியவரும் சகோ.

      மிக்க நன்றி நாஞ்சில் சிவா சகோ.

      கீதா

      நீக்கு
  13. காட்சியும் கருத்தும் சிந்திக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் கோவிந்தராஜு ஐயா உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  14. படங்கள் பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தாலும் அது சொல்லும் சேதிகள் மனதை வருத்தத்தான் செய்கிறது Be Safe

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்றே கொடுத்த பதில் செல்லவில்லை என்பது தற்போதுதான் தெரிந்தது. ஸாரி மதுரை.

      நான் இப்போது ஊரில் இல்லை. திரும்ப இங்கு வந்தாச்சு

      கீதா

      நீக்கு