ஞாயிறு, 17 மார்ச், 2019

நம் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்


Image result for condolence pictures

நாங்கள் வலையுலகில் அடியெடுத்து வைத்து கொஞ்சமே அறிமுகமாகியிருந்த நேரம்.  வலையுலக அனுபவமோ, நிகழ்வுகளோ எதுவும் அறிந்திராத நேரம். வலைச்சரம் பற்றியும் அறிந்திருக்கவில்லை அப்போது. அங்கு ஆசிரியராக இருந்த பதிவர் (இப்போது டக்கென்று நினைவில் வரவில்லை. நிறைய பதிவகள் எங்கள் வலையையும் அங்கு அறிமுகப்படுத்தியதால்) எங்கள் வலையையும் அறிமுகப்படுத்தியிருப்பதாகத் தெரியவரவும் அப்போதுதான் வலைச்சரம் பற்றியும் அறிந்தோம். எங்கள் தளம் அறிமுகப்படுத்தப்படும் போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும். 

வலைச்சரம் மூலம் தான் எங்கள் வலைத்தளம் கூட பலரை அடைந்தது என்றால் அது மிகையல்ல. அதற்கடுத்த ஓரிரு மாதங்களிலேயே எங்களுக்கும் அழைப்பு வந்துவிட்டது

பிரமித்துப் போனோம். என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. எப்படி எழுத வேண்டும் என்றும் தெரியவில்லை. நாங்களே வலையுலகில் தவழக் கூடத் தொடங்காத நேரத்தில் எப்படி வலைச்சர ஆசிரியராக எழுதுவது என்று மிகவும் தயங்கினோம்.

அதற்கு முன் ஆசிரியராக இருந்தவர்கள் எழுதியது, வலைச்சர அறிமுகங்கள் என்று பார்த்த போது கொஞ்சம் புரியத் தொடங்கியது. எப்படியோ முதல் முறை தத்தி தத்தி எழுதி முடித்தோம்வலைச்சர அறிமுகங்களுக்காகத் தேடிய போதுதான் எண்ணற்றத் தளங்கள் இருப்பதும் அறிந்தோம்.  எப்படியோ முதல் முறை ஒப்பேற்றினோம். இரண்டாம் முறையும் அழைப்பு வந்தது. இரண்டாம் முறை திரு பிரகாஷ் அவர்கள் தொடர்பு கொண்டார்

அதன் பின்னும் குழல் இன்னிசை தளப் பதிவர் யாதவன் நம்பி அவர்கள் தொடர்பு கொண்டார்கள். அப்போது எங்கள் இருவருக்குமே எங்கள் சூழல் சரியில்லாமல் இருந்ததால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஆனால் கொஞ்சம் மாதம் பொறுத்துச் செய்வதாகச் சொல்லியிருந்த நினைவு. 

மிகவும் அன்பான மனிதர் சீனா ஐயா. வலைச்சரத்தை அழகாகத் தொடுத்தவர்.  இரு முறை ஆசிரியராக நாங்கள் இருந்த போதும் மின் அஞ்சலில் எங்களுடன் தொடர்பில் இருந்து அன்பான வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தவர். இப்படிப் பலருக்கும் முன்னோடியாகவும் இருந்தவர் என்றால் மிகையல்ல. ஐயா அவர்கள் மறைந்தது மிகவும் அதிர்ச்சி. அன்னாரின் மறைவு வலையுலகிற்கு மிகப் பெரிய இழப்பு.

எங்களின் ஆழ்ந்த அஞ்சலிகளை இங்கு பதிவு செய்கிறோம்.

http://kaagidhapookal.blogspot.com/2019/03/blog-post.html

https://deviyar-illam.blogspot.com/2019/03/blog-post_16.html 

https://suvasikkapporenga.blogspot.com/2019/03/blog-post_16.html

.எபியிலும்

http://karanthaijayakumar.blogspot.com/2019/03/blog-post_17.html 

25 கருத்துகள்:

  1. மனம் பலவற்றை நினைத்து கனக்கிறது,..

    சீனா ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரி

    நான் வலையுலகிற்கு வந்த புதிதில் இவரைப்பற்றி (திரு சீனாஐயா) அறிந்துள்ளேன். வலைச்சர ஆசிரியராக அவர் எழுதிய பதிவு கூட படித்ததாக நினைவு. எ. பியிலும், இன்று காலை படித்தறிந்தேன். அன்னாரின் மறைவுச் செய்தி கண்டு மனம் கஸ்டமாக இருந்தது.
    திரு. சீனாஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களும், அவர்தம் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. சீனா சாரின் மறைவு வலை உலகுக்குப் பேரிழப்பு. முதல் முறை நான் கயல்விழி இருக்கையில் வலைச்சரப் பொறுப்பேற்றேன். பின்னரும் சீனா சார் அழைத்தார்.ஒரு முறை மறுத்துவிட்டேன். ஆனாலும் விடாமல் வைகோ அவர்கள் மூலம் மறுபடி மறுபடி கூப்பிட்டார். அதற்கு ஒரே முறை பொறுப்பு ஏற்றேன்.பின்னர் வந்த அழைப்பை எல்லாம் ஏற்கவில்லை.

    எங்க வீட்டுக்குச் சீனா சாரை வைகோ தான் அழைத்து வந்தார். இரவு ஒன்பது மணி அளவில் வந்ததால் தக்கபடி உபசரிக்கவில்லை. அவர் மனைவியோடு வந்திருந்தார். சீனாசாரின் மனைவி, மகள் ஆகியோரும் வலைப்பதிவரகளாகவே இருந்தனர். இப்போவும் எழுதறாங்களானு தெரியலை. வலைச்சரம் நின்று போனதும் தொடர்பு இல்லை.

    சீனா சாரின் மறைவு அதிர்ச்சியான ஒன்று. அவர் குடும்பம் இந்த இழப்பில் இருந்து மீண்டு வரப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் வருத்தமான செய்தி. :(

    அன்பின் சீனா ஐயா அவர்கள் மிகவும் நல்ல மனிதர்.

    அடியேன் இல்லத்திற்கு தன் துணைவியாருடன் அன்புடன் விஜயம் செய்துள்ளார்கள்:

    http://gopu1949.blogspot.com/2013/10/61-2-2.html
    http://gopu1949.blogspot.com/2015/02/4-of-6.html

    என்றும் நம் நினைவுகளில் நீங்காமல் இருப்பார். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  5. சீனா ஐயாவின் இழப்பு வருத்தம் தந்தது. அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  6. திரு சீனா ஐயா அவர்களுடைய மறைவு மிக்க வேதனையைத்தந்தது. என் ஆழ்ந்த அஞ்சலிகளை ச்மர்ப்பித்துக்கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  7. சீனா சாரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினர்களுக்கு இறைவன் ஆறுதலையும், தேறுதலையும் தர வேன்டும்.
    அவருக்கு எங்கள் அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  8. அவரது குடும்பத்துக்கு ஆறுதஸ்கள் சொல்வோம்.

    பதிலளிநீக்கு
  9. அன்னாருக்கு அஞ்சலிகள் .சீனா ஐயாவின் ஆன்ம சாந்திக்காகவும் இந்த கடினமான வேளையில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உறவினர் நட்புகளுக்கு இறைவன் எல்லா தேறுதலை தரவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்

    பதிலளிநீக்கு
  10. அன்பின் சீனா ஐயா அவர்களின் மறைவு வலையுலகிற்கு மிகப் பெரிய இழப்பு..

    என்றென்றும் நம் நெஞ்சில் நிலைத்திருப்பார்...


    அவர்தம் குடும்பத்தினர்க்கு இறைவன் ஆறுதலைத் தந்தருள்வானாக..

    ஓம் சாந்தி ஓம்..

    பதிலளிநீக்கு
  11. மறக்க முடியாதவர். அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எங்கள் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  12. ஈடு செய்ய இயலா இழப்பு
    ஆழ்ந்த இரங்கல்

    பதிலளிநீக்கு
  13. பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவர். புதியவர்களை எழுதவைத்தவர். வலையுலகம் உள்ளவரை அவர் பெயர் நிலைத்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  14. சீனா தானா ஐயாவோடு ஒருமுறை பேசி இருக்கிறேன்..

    ஆழ்ந்த இரங்கல்கள்

    பதிலளிநீக்கு
  15. ஆழ்ந்த இரங்கல். மாமனிதருக்கு இப்பதிவு ஒரு மகத்தான அஞ்சலி.
    அவரது இயற்பெயர் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. To Mr. Govindaraju Arunachalam
      //அவரது இயற்பெயர் என்ன?//

      ஆத்தங்குடி
      திரு. பெ.க.சு.பெ.கரு.கா. சிதம்பரம் செட்டியார்

      Please refer my Post: http://gopu1949.blogspot.com/2013/10/61-2-2.html
      & also http://gopu1949.blogspot.com/2015/02/4-of-6.html

      நீக்கு
  16. வலைச்சரம்
    என்னையும் அறிமுகம் செய்து வைத்தது.
    வலைச்சரம் ஊடாகப் பலரையறிய முடிந்தது.
    ஏழலுக்கு ஒரு வலைச்சரம் ஆசிரியராகப் பலர்
    தமிழ் வலைப்பதிவர்களை அறிமுகம் செய்திட
    வலைப்பதிவர்களின் சிறந்த பதிவுகளை அரங்கேற்ற
    கடின உழைப்பை வழங்கிய தமிழ் பற்றாளர்
    சினா ஐயாவைத் தான்
    வலையுலகம் ஒருபோது மறவாது! - அவரது
    ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்!

    பதிலளிநீக்கு
  17. ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

    தங்களின் இந்த பதிவை , என்னுடைய வலைச்சர அனுபவமாகத்தான் பார்கிறேன். இப்போதும் எனக்கு ஐயாவுடன் மின்னஞ்சலில் வலைச்சரம் தொடர்பாக பேசியது தான் நியாபகத்துக்கு வருகிறது .

    பதிலளிநீக்கு
  18. பதிவுலகின் ஈடு செய்ய இயலா பேரிழப்பு ....ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

    பதிலளிநீக்கு
  19. சீனா ஐயாவின் இழப்பு வலையுலக்கிற்கு ஒரு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு. வலைச்சரம் ஊடாக தமிழை நேசித்த அருமை மனிதர். அன்னாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  20. திரு சீனா ஐயா அவர்களின் மறைவு உண்மையிலேயே பதிவுலகிற்குப் பேரிழப்பாகும். தன்னை மறைத்துக்கொண்டு மற்றவர்களை அறிமுகப்படுத்திச் சிறப்பிக்கும் பெரிய மனம் கொண்டிருந்த அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். - இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு
  21. என்னாலும் மறக்கமுடியாத நபர் சீனா சார் அவர்கள். அவர்கள் இழப்பு வலையுலகுக்கு பேரிழப்புத்தான். அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன். வலையுலகம் சார்பாகவும் அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  22. அன்பின் சீனா ஐயா மறைந்தார் என்ற செய்தியை நம்பவே முடியவில்லை. அவருடனான மின்னஞ்சல் பரிமாற்றத்தின் போது ஒவ்வொரு வரியும் வார்த்தையும் அன்பின் வெளிப்பாடாகவே இருக்கும். அன்னாரின் இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று.

    பதிலளிநீக்கு