புதன், 6 மார்ச், 2019

நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி - 5

சென்ற பதிவில் வண்டியில் மேலே ஏறிச் சென்றதாக முடித்திருந்தேன். இரு புறமும் நன்றாகப் பார்க்க முடிந்தது. அப்படிச் சென்ற  போது இதோ இந்தப் பாலம். இதைக் கடந்த கொஞ்ச நேரத்தில் மீண்டும் பறவைகள் இரு புறமும் தென்படத் தொடங்கின.


வண்டியில் அப்படிச் சென்ற போதும் படங்கள் எடுத்துக் கொண்டேன். அவை இதோ கீழே. இந்த முதல் படம் வலப்புறம் ஏரி.

இதோ கீழே உள்ள மூன்று படங்களும் இடப்புறம் ஏரியில் இருந்த பறவைகளை எடுத்துக் கொண்டே வந்தேன்.




கொஞ்ச தூரம் தான் அப்படிச் சென்றோம். வண்டி ஆமை வேகத்தில் சென்றால், அப்புறம் இருட்டிவிட்டால் ஒன்றும் பார்க்க முடியாது என்பதால் அடுத்து பறவைகளைக் கண்டதும் இறங்கிவிட்டோம்.

நாங்கள் அடுத்து இறங்கிய இடம் கிட்டத்தட்ட ஸ்ரீஹரிக்கோட்டா அருகில். அதுதான் இந்தச் சாலையில் பறவைகள் பார்த்த கடைசி இடம். அந்த இடத்தில்  பறவைகளைக் கண்டதும் நாங்களும் இறங்கிவிட்டோம். இந்த இடத்தில் பறவைக் கூட்டம் செம அழகு……தண்ணீரின் நிறமும் வித்தியாசமாக இருந்தது. சூரிய ஒளி இன்னும் குறைந்து கொண்டே வந்ததால். பார்த்து வியந்து ரசித்து அப்புறம் கேமராவுக்குள் காட்சிகளைப் பதுக்கத் தொடங்கினேன். நிறைய எடுத்தேன்…..இங்கு சிலவற்றைக் கொடுத்துள்ளேன். 


தூரத்தில் தெரியும் பறவைக் கூட்டம் கீழே ஜூம் செய்து எடுத்தவை




நிறைய இருந்தன. ஜூம் செய்ததால் எல்லாம் கவர் ஆகவில்லை என்பதால் ஒவ்வொரு கூட்டமாக எடுத்தேன். மேலே உள்ள நான்கு படங்களும் சாலையின் வலப்புறம் உள்ள ஏரிப்பகுதி.


இது சாலையின் இடப்புறம் உள்ள ஏரியின் பகுதி. 

அடுத்து இதோ அடுத்த 15 நிமிடத்தில் ஸ்ரீஹரிகோட்டா வந்தாயிற்று. இதுதான் நம் இந்தியாவின் ராக்கெட் தளம் அமைந்திருக்கும் பகுதியின் நுழைவு வாயில். இதோ இங்கு மரத்தின் கீழ் பெஞ்சுகள் இருக்கிறதல்லவா இங்குதான் நாங்கள் அமர்ந்து கொண்டோம். இல்லை அமர்ந்தார்கள். 

எனக்குத்தான் இது போன்ற இடங்களுக்கு வந்தால் உட்கார்வது என்றால் பிடிக்காதே!!!  உடனே சுற்றி நடக்கத் தொடங்கினேன். ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்துக் கொண்டே படங்களும் எடுத்துக் கொண்டேன். இந்த இடம் பொதுவெளி என்பதால் படம் எடுக்க அனுமதி உண்டு. ஆனால் என் கேமராவில் பவர் குறைந்திருக்கு என்று காட்டியது. எனவே கொஞ்சமேதான் எடுத்துக் கொண்டேன். 


இதுதான் ஷார் சாலையிலிருந்து ஸ்ரீஹரிக்கோட்டா நுழைந்தவுடன் உள்ள பகுதி. இது பொது வெளி. இங்கு செக்யூரிட்டி உண்டு. உள்ளே செல்ல வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும். கீழே உள்ள இரு படங்களும் அங்கு நடுவில் இருந்த ரவுண்டானா. இந்த நுழைவாயில் சென்றதே எனக்கு மிக மிகப் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. நம் இந்தியாவின் பெருமை மிகு ஏவுகணைகள், சாட்டில்லைட்டுகள் பல விண்வெளியில் செல்வதற்குக் காரணமான ஆராய்ச்சி மற்றும் ஏவுகணைத் தளத்தின் நுழைவு வாயில்.



இச்சாலை ஷாரின் உள்ளே செல்லும் சாலை. இதுதான் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் தளம், தீவு, அங்கு வேலை செய்வோரின் குடியிருப்பு எல்லாம் இருக்கும் இடத்திற்குச் செல்லும் சாலை. இங்கிருந்து இச்சாலை வழியாகச் சென்றால் மீண்டும் செக்யூரிட்டி அதன் அனுமதியுடன் தான் இன்னும் செல்ல முடியும். பெரிதாக அமைந்திருக்கும் ராக்கெட் தளம் எல்லாம். அங்கு நாம் செல்லவில்லை. ஸ்ரீஹரிகோட்டா வங்காளவிரிகுடாவுக்கும், புலிக்கட் ஏரிக்கும் இடையே இருக்கும் தீவில் அமைந்திருக்கிறது. இதோ மேப்

Related image
இந்த வரைபடத்தில் சூளூர்பேட்டையிலிருந்து ஷார் வுக்குச் செல்லும்  சாலை மெலிதான கோடாகத் தெரிகிறது இல்லையா அச்சாலைதான் நாங்கள் சென்ற சாலை. பறவைகளைக் காணும் பகுதி.

நுழைவாயிலில் கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு இந்த ரவுண்டானாவை ஒரு சுற்று சுற்றி மீண்டும் வந்த வழியே ஷார் சாலையில் வந்து அடுத்த ஒரு 10 நிமிடப் பயணத்தில் இடது புறம் செல்லும் மண் சாலையில் சென்றோம். மழைக்காலத்தில் கடல் போன்று இருக்கும் ஏரியில் தண்ணீர் குறைந்திருந்ததால் நாங்கள் சாலையின் கிழக்குப் பகுதி அதாவது கடல் நோக்கி இருக்கும் பகுதியில் இறங்கி நடந்தோம். 


தூரத்தில் ஏரியின் அக்கரையில் இருந்த சாலைக்கருகே பறவைக்கூட்டம் ஏதோ அணிவகுப்பு போல அணிவகுத்துக் திரளாக இருந்தது. நாங்கள் முதலில் அந்தச் சாலையில் ஏதோ வண்டி செல்கிறது என்று நினைத்து பைனாகுலர் வழியாகப் பார்த்தால் வண்டியல்ல அது அத்தனையும் பறவைக்கூட்டம். ஆச்சரியம், மலைப்பு. பெரிய பெட்டாலியன் போன்று இருந்தது. ஆனால் கேமராவில் ஜூம் செய்தும் வராத அளவிற்கு இருந்ததால் நான் படங்கள் எடுக்கவில்லை. கேமராவில் பவரும் குறைந்திருந்தது.

அங்கு எனக்கு சும்மானாலும் இப்படி ஒரு படம் எடுக்கலாமே என்று தோன்ற எல்லோரையும் ரவுண்டாக நிற்க வைத்து எங்கள் கால்களை மட்டும் இப்படிச் சேர்த்து வைக்கச் சொல்லிப் படம் எடுத்தேன் என் மொபைலில். இதில் என் கால் எதுவாக இருக்கும் என்று முடிந்தால் சொல்லுங்கள். 


இந்த இடத்தில் விலங்குகளின் கால் தடங்கள் தெரிய அது எந்த விலங்கின் பாதமாக இருக்கும் என்று ஆராய்ச்சி எல்லாம் செய்து நாய், மாடு, ஆடு என்று ஒவ்வொருவரும் சொல்ல இல்லை இது நரியின் தடம் போல் இருக்கு என்று பீதி கிளப்பினார் நண்பர். ஆமாம் நாம மனுஷங்க தானே அந்தக் குள்ளநரிக்கூட்டம் என்று சொல்லிச் சிரிக்க கொஞ்ச நேரம் கலாய்த்தல். கேமராவில் பவர் கொஞ்சமே இருந்ததால் அதிகம் படமும் எடுக்க முடியவில்லை. உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க இந்தத் தடங்கள் என்னவா இருக்கும் என்று.


இறுதியாகச் சாலையின் மறுபுறம் அதாவது மேற்குப் பகுதியில் தெரிந்த சூரியன் மறையும் காட்சியை கேமராவிலும், மொபைலிலும் படம் பிடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்படும் மனமில்லாமல் ஆனால் இனிய நினைவுகளுடன் புறப்பட்டோம். புறப்படும் முன் நான் பறவைகளிடம் பை பை சொல்லிவிட்டு அடுத்த முறை நான் வரும் வாய்ப்புக் கிடைச்சாலோ அல்லது என் நட்புகள் (அதான் நீங்க எலாரும் தான்) இங்க வந்தாலோ எல்லாரும் ஒழுங்கா கிட்ட வந்து போஸ் கொடுக்கனும் என்று சொல்லிவிட்டு வந்தேன். நீங்க போனீங்கனா நான் ரொம்ப விசாரிச்சதா சொல்லவும்!!!

ஸ்பா ஒரு வழியா ஒரு பதிவை முடிச்சாச்சு!!!!! 

அதோ மேடு தெரிகிறது இல்லையா அது தான் ஷார் சாலையில் இருந்து பிரியும் மண் சாலை. 

-------கீதா


47 கருத்துகள்:

  1. வட்டமாக கால்களை கொண்ட படத்தை பார்த்ததும் நெல்லைத்தமிழரின் நண்பரது கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் சின்னம் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....ஹா ஹா ஹா இதுக்கும் இப்படியா....

      அந்தச் சின்னம் கூடப் பார்த்தது இல்லை ஜி...இனிமேல்தான் பார்க்கனும்..

      நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
    2. என்னாது.... என்னைப் போய் மய்யத்துக்குப் பக்கத்துல கொண்டுபோய்ச் சேர்த்துட்டீங்களே. நீங்க சொன்னதுக்காக என் ஒரு வாக்கை அங்க தள்ள முடியாது கில்லர்ஜி....

      நீக்கு
  2. பரிசு தீர்க்கதரிசி தருவார் ஏனென்றால் அவர்தான் தீர்க்கதரிசி!!!! தீர்க்கதரிசி, ரொம்ப பிஸி என்று கொஞ்சம் சொல்லிக் கொண்டு அவர் தன் செக்கிடம் பெற்றுக் கொள்ளவும் என்பார். எனவே செக் அவங்களையும் தொடர்பு கொள்ளலாம்!!!!!!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இயற்கை தான் எவ்வளவு அழகு... படங்கள் அனைத்தும் அழகு...

    அந்த சிவப்பு சுடிதார்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா டிடி உங்களுக்கு தீர்க்கதரிசியின் பரிசு போச்சே!!! உங்கள் பதில் இல்லை. ஒரு க்ளூ மட்டும்..ஷூ இருக்கும் படம்....

      படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  4. முதல் படத்தில் குறைந்திருப்பது போல காணப்படும் நீர் நிலை அடுத்த படங்களில் (இடப்புறம்) ஓரளவுக்குக்கண்ணில் படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் போக போக நீர் நிறைய இருந்தது. என்றாலும் கரை வரை இல்லை அவ்வளவே. முதல் படத்தில் தூரத்தில் தெரியும் நீர்ப்பரப்புதான் அடுத்த படங்கள். அது கிட்டத்தட்ட ஷார் அருகில்..

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. //தண்ணீரின் நிறமும் வித்தியாசமாக இருந்தது. சூரிய ஒளி இன்னும் குறைந்து கொண்டே வந்ததால். பார்த்து வியந்து ரசித்து அப்புறம் கேமராவுக்குள்//

    என்னதான் சொல்லுங்கள்... நிஜக்கண்கள் பார்க்கும் அழகை எந்த உயர்ந்த வகைக் கேமிராவினாலும் முற்றிலுமாக மீள்கொணர்வு செய்ய முடியாது! இல்லையா?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக ஸ்ரீராம்..ஹைஃபைவ்!..நிச்சயமாக நிஜக் கண்களுக்குத் தெரிவது கேமராவுக்குள் வருவது கொஞ்சம் மாறித்தான் வரும் அந்த உண்மையான காட்சியைப் படம் பிடிக்க முடியாது எத்தனை ஹைடெக் கேமராவாக இருந்தாலும் துல்லியம் வராது. அதுதான் இயற்கை இல்லையா? ஸ்ரீராம். இயற்கையை மிஞ்ச மனிதனால் முடியவே முடியாது..

      நம்மால் மீண்டும் இப்படியான இடங்களுக்கோ இல்லை அந்த இயற்கையையே பார்க்க முடியுமா என்று தெரியாதே என்பதால் கேமராவுக்குள் முடிந்த மட்டும் போட்டுக் கொள்வது....இங்கு சேமித்துக் கொள்வது...வேறு என்ன செய்ய முடியும்..

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  6. இரண்டு செருப்புக் கால்களுக்கு நடுவில் தெரியும் நீல அல்லது பச்சை போன்ற நிற ஷூக்கள் உங்களுடையது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் இதுக்கு மட்டும் அப்புறமா பதில் ஓகேயா....மற்றவர்களும் சொல்லட்டும்....

      கீதா

      நீக்கு
    2. ஸ்ரீராம் சூப்பர்!! யெஸ்ஸு யெச்ஸு!!! அதேதான்! மொபைல் கேமரா ஆங்கிள் வைத்துக் கண்டுபிடிச்சுட்டீங்க!! சூப்பர் ஸ்ரீராம்!

      சரி இப்ப பரிசு டீல் வந்து தீர்க்கதரிசிக்கிட்ட பேசிக்கோங்க! சரியா! ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. எப்பூடி சூஸை வச்சுக் கண்டுபிடிச்சார் ஸ்ரீராம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... என்னாதூஊஊஊஊ பரிசு நான் குடுக்கோணுமோ?:) எனக்கு ஸ்ரீராம் தரவேண்டிய பாக்கி இருக்குது தெரியுமோ?:) ஹா ஹா ஹா:)

      நீக்கு
  7. கால் தடங்கள் பற்றி என்னால் சொல்ல முடியவில்லை. எனக்கு நாலு கால் செல்லத்தின் நினைவுதான் வருகிறது. அதைத்தவிர வேறு எதை நான் கண்டிருக்கிறேன்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா எங்களுக்கும் ஒன்றும் சரியாத் தெரியலை ஸ்ரீராம். முதல் படம் அது மாடுகள், மற்றவற்றில் ஒன்று நம் செல்லங்களின் தடம் என்று தோன்றுகிறது....மற்றபடி தெரியவில்லை...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. படங்களை வித்தியாசமாய் அழகாய் அடுக்கி பதிவிட்டிருப்பதை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது கொலாஜ் செய்தேன் ஸ்ரீராம் கணினியில் ஃப்ரீ கொலாஜ் மேக்கரில் போட்டு.

      பறவைகள் படங்களையும் செய்யலாம் என்று நினைத்தால் படங்களைக் கொஞ்சம் சிறிதாக்க வேண்டும். ஏற்கனவே பறவைகள் கண்ணில் படவில்லை சிறிதானால் ஒன்றுமே தெரியாமல் போகுமே என்று தனி தனியாகக் கொடுத்தேன்...

      மிக்க நன்றி ஸ்ரீராம் ரசித்தமைக்கு

      கீதா

      நீக்கு
  9. ஸ்ரீஹரிக்கோட்டா ..பார்க்க வேண்டிய ஒரு இடம் ...

    பறவைகள் பறந்த காட்சிகள் உள்ள படம் அழகு கீதா க்கா..


    மிக சிறப்பான இடத்தை இங்கு கண்டு ரசித்தாயிற்று ...வாய்ப்பு கிடைக்கும் போது நேரில் சென்று காண்கிறோம் ..

    அடுத்து அந்த வட்டமா நின்று எடுத்த படம் ..வழக்கம் போல same pinch சொல்லிக்கலாம் ...நானும் அப்படி எடுப்பேன் ..இப்போ போட்டுட்டு இருக்குற சித்தன்னவாசல் ட்ரிப் ல் கூட எடுத்தேன் ...


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அனு...ஆமாம் ஸ்ரீஹரிகோட்டா பாக்கனும்னா உள்ளே செல்ல முன் அனுமதி எடுத்துக்கோங்க போய்ப் பார்க்கலாம். ராக்கெட் அனுப்புவது கூடப் பார்க்கலாம் தூர இருந்து அதற்கென்று பகுதி இருக்கிறது. அழகான இடம்.

      ஆமாம் அனு நீங்களும் ரசிப்பீங்கன்னு தெரியும் குழந்தைகளும் எஞ்சாய் செய்வாங்க. போய்ப்பாருங்க புலிக்கட் அப்புறம்ட் தமிழ்நாடு புலிக்கட் பகுதியையும். அங்கு போட்டிங்க் உண்டு.

      ஹைஃபைவ் அனு...ஆமாம் உங்க ரசனை தெரியும்...போடுங்க படங்களை ப்ளாக்ல...

      மிக்க நன்றி அனு

      கீதா

      நீக்கு
  10. படங்கள் ரசனையாக உள்ளன. தடங்களைக் கண்டதும் பயந்தேன். ஸ்ரீஹரிக்கோட்டா நுழைவாயிலிலிருந்து...ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  11. 2016 ஆம் ஆண்டில் போனதை இப்போப் போட்டிருக்கீங்க! ரொம்பச் சீக்கிரம் இல்லையோ? போகட்டும் படங்கள் எல்லாமும் நன்றாகவே இருக்கின்றன. காமிராவிலும் குற்றம் இல்லை. எடுப்பவரிடமும் குற்றம் இல்லை! பறவைகள் தான் நல்லாத் தெரியலை! ஶ்ரீஹரிகோட்டாப் பக்கமெல்லாம் எங்கே போகப் போறோம்! இந்த மாதிரிப் பார்த்துக்க வேண்டியது தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்பச் சீக்கிரம் இல்லையோ? //

      ஹிஹிஹிஹி....அதே அக்கா இடையில் பதிவுகள் போட முடியாமல் சூழல். இப்பத்தான் தூசி தட்டி எடுத்துருக்கேன்...அடுத்து விசாகப்பட்டினம் பயணம் இருக்கு....

      அப்ப மூன்று பயணம் பற்றிச் சொல்லி ஒரு டீசர் போல பதிவு போட்டப்ப நீங்க பர்வத மலை முதல்ல போடுங்கனு சொன்னதும் அதை போட்டேன் அதுதான் 2017 டிசம்பரில் சென்றது.

      அதே வருடம் விசாகப்பட்டினம்..இது வேறு குழு. அதுக்கும் முன்னே தான் இது...இதுதான் ஜாலி குழு.

      ஆமாம் அக்கா பறவைகள் தான் நல்லாத் தெரியலை இப்படி தூர இருக்கும் பறவைகளை எல்லாம் எடுக்கனும்னா நல்ல ஜூம் டெக்னிக் உள்ள கேமரா வேண்டும்...

      ஸ்ரீஹரிகோட்டா எனக்கு உள்ளே சென்று பார்க்கனும்னு ஆசை ஆனால் இது ஒரு நாள்பயணம் மட்டுமல்ல அதுக்கு பெர்மிஷன் எல்லாம் பெற வேண்டும். அதான் முகப்பிலேயே பார்த்துட்டு போட்டோ எடுத்துட்டு வந்தேன்.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  12. கூட்டம் கூட்டமாக நிற்கும் பறவைகளைப் பார்த்தால், எப்போதும் தன்னைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும் மனிதன், தன் கூடவே இந்தப் பூமியில் வாழ நேர்ந்த இத்தனைப் பறவைகளின் வாழ்வாதாரத்தைப்பற்றிக் கவலைப்படாமல், எப்படி எப்படி எல்லாம் சிதைத்துவருகிறான் என்கிற நினைவு வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளுக்குள் கட்டிடம் கட்டுகிறேன் என்று பெங்களூர் மற்றும் சுற்றுப்பகுதியில் மட்டுமே 800-க்கும் மேற்பட்ட ஏரிகளைக் கான்க்ரீட்டினால் மூடியிருக்கிறானே இந்த முட்டாள்? எல்லாப் பறவைகளும் புறாக்களா என்ன, கட்டிடங்களின் மேலேறி உட்கார்ந்துகொண்டு ஓயாது இசைத்துக்கொண்டிருக்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் அண்ணா எனக்கும் அதே தோன்றியது....மனிதர்கள் நாம் எவ்வளவு கேடு விளைவிக்கிறோம் சுற்றுச் சூழலுக்கும் இயற்கைக்கும் என்பதை இப்பதிவின் முதல் பகுதியில் சொல்லியிருந்தேன் தொடக்கத்தில்.

      பங்களூர் இப்ப குடிவந்தப்ப நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். நான் 16 வருடங்களுக்கு முன் பிடிஎம் லே அவுட்டில். அப்ப இருந்த பங்களூர் இப்போது இப்படி ஆகிப் போனதே என்று ரொம்பவே தோன்றியய்து. எத்தனை சிதைந்திருக்கு என்று.

      ஆஅ 800க்கும் மேற்பட்ட ஏரிகளா காங்க்ரீட்டினால் மூடப்பட்டது!! கடவுளே! அந்தப் பறவைகள் எல்லாம் எங்கு போயிருக்கும்?! பாவம்... மனிதன் பாருங்க தான் மட்டும் தான் இந்த உலகில் வாழனும்னு நினைக்கிற ஒரு சுயநலவாதி...ரொம்ப வருத்தமா இருக்கு.

      இங்கு எங்க வீட்டுப் பகக்த்துல கொகிலு ஏரி ஒன்னு இருக்கு...ஆஹா வீட்டுப் பக்கத்துல 20 நிமிஷ நடையிலனு நினைச்சுப் போனா ஒரு சொட்டு தண்ணி இல்லை..படங்கள் எல்லாம் எடுத்து வைச்சுருக்கேன் போடனும்..பார்ப்போம்..

      மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா கருத்திற்கு..

      கீதா

      நீக்கு
    2. கீதா ரங்கன் - சென்னையில் குறைந்த பட்சம் 20 பெரிய ஏரிகளை தூர் வார்த்து கட்டடம் கட்டியிருக்கிறோம். வள்ளுவர் கோட்டம், மாம்பலம், தி நகர் என்று ஏரிகள் இருந்த இடமெல்லாம் இப்போது எங்கே? ஆனா ஒவ்வொரு இடத்திலும் லேக் வியூ ரோடு மட்டும் இருக்கும்.

      நீக்கு
  13. படங்களை மிகவும் ரசித்தேன். இருந்தாலும் அருகில் போய் பார்ப்பதற்கு உங்களுக்கு நேரம் கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்குமல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லை. ஆமாம் அருகில் சென்று பார்க்க இயலவில்லைதான். இது கிடைத்ததே சந்தோஷம்தான் ...

      கீதா

      நீக்கு
  14. அழகான படங்கள்...

    கால்கள் படம் - நன்றாக இருக்கிறது. நான் செல்வதற்கு முன் விடை சொல்லி விட்டீர்கள்!

    பயணம் சிறப்பாக அமைந்தது அறிந்து மகிழ்ச்சி. தொடரட்டும் பயணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு. ஹா ஹா ஹா ஆமாம் விடை சொல்லிவிட்டேன்..

      ஆமாம் சிறப்பாக அமைந்தது...அடுத்து விசாகப்பட்டினம் படங்கள் செட் செய்யனும்..பதிவு போட ..மலைப்பா இருக்கு...

      கீதா

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    பறவைகள். இயற்கை அழகுடன் கலந்த அழகான படங்கள். பறவைகள் நன்றாக தெரிந்த படங்கள் மிக அழகாக இருக்கின்றன. வானத்தில் பறந்து செல்லும் படியாக உள்ள படங்களும் அருமை. அந்தப் படங்களை கண்டதும், "பறவையை கண்டான் விமானம் படைத்தான்" என்ற பாடல் நினைவுக்கு வந்தது.

    ஏரியின் இருமருங்கும் இயற்கை அழகும், நீர் நிரம்பிய படங்களும் கண்களை கவர்ந்தது. மாலைச்சூரியனின் படங்கள் அருமை.

    வட்டமாக காலணிகளுடன் இருக்கும் படம் நன்றாக உள்ளது. காலடி தடங்கள் கண்டிப்பாக மிருகங்களுடையதுதான்.! நாம் தான் செயற்கை காலணிகள் அணிந்து நம் காலடித்தடத்தை மறைப்பவர்களாயிற்றே..!ஹா ஹா ஹா.

    ஸ்ரீஹரிகோட்டா தங்களால் பார்த்தாகி விட்டது. அருமையான பயணம். ஒவ்வொரு இடத்தையும் விவரித்து. அழகான படங்களை பகிர்ந்தளித்து எங்களையும் உல்லாச பறவைகளாய் பதிவுலக வானில் பறக்க வைத்து விட்டீர்கள். பதிவு தொடர் நன்றாக இருந்தது.. படித்து ரசித்தேன். எங்களையும் தங்களுடன் அழைத்துச் சென்ற தங்களின் அற்புதமான எழுத்துப்பாங்குக்கு பணிவான நன்றிகள். அடுத்த பயண பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏரி நன்றாகவே இருக்கிறது கமலாக்கா ஆனால் சம்மரில் எப்படி இருக்குமோ தெரியலை. படங்கள் கூடியவரை ஜூம் செய்துதான் எடுத்தேன் கமலாக்கா..

      ஆமாம் அக்கா பயணம் நன்றாக இருந்தது.
      மிக்க நன்றி கமலாக்கா..அடுத்த பயணம்....அதை எழுதத்தான் மலைப்பா இருக்கு...பார்க்கிறேன்...

      கீதா

      நீக்கு
  16. ஆவ்வ்வ்வ் நான் கண்டுபிடிச்சிட்டேன்ன்ன்.. பேப்பிள் சுடிதார் போட்டிருப்பது கீதா.

    அந்த செல்லக் கால் தடங்கள்.. மான் பிள்ளையின் கால்தடங்கள் போல இருக்கு... எங்கள் முற்றத்துக்கு நேற்று இரவு மான் பிள்ளை வந்து என் ரியூலிப்ஸ் கிழங்கை இலையைச் சாப்பிட்டு விட்டு வெளியே வீசிட்டுப் போயிருக்கிறாஅர் கர்:).. இப்பொ அனைத்துக் கிழங்கும் முளைக்கத் தொடங்கி விட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா அதிரா அந்த பர்ப்பிள் சுடிதார் இல்லை....ஸ்ரீராம் சொல்லிருக்கார் பாருங்க விடை..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.ஓ பரிசு தீர்க்கதரிசியிடம் இருந்து என்றதும் பார்க்காமல் ஓடிட்டீங்களோ!!!! ஹா ஹா ஹா ஹா..ஸ்ரீராமுக்கு செட்டில் செஞ்சுருங்க ஓகே...ஹிஹிஹி

      இல்லை அதிரா அங்கு மான்கள் இல்லை. மாடுகள், நாய்கள் மற்றது ஆடாக இருக்கலாம்....

      ஓ மான் வந்தது உங்கள் வீட்டிற்கு சூப்பர் படம் எடுத்தீங்களோ? சென்னையில் வீட்டருகில் ஐஐடி, கிண்டிபார்க் என்பதால் மான்கள் வரும்...

      கிழங்கு மீண்டும் முளைக்கத் தொடங்கியது சூப்பர்

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  17. கீசாக்காவிடமிருந்து ரெயினிங் எடுத்தீங்களோ கீதா, ஒரே இடத்தில இருந்து கொண்டே ஒம்பேதூஉ படங்கள் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா ஆனா அழகிய சுற்றுலா.. சுற்றுலா எனும்போது, அங்கு போய்ப் பார்ப்பது மட்டுமல்ல, கூட்டமாகக் கூடிப் பேசி, சாப்பிட்டு நடந்து வருவதுதானே மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரே இடத்தில் தான் ஆனால் ஜூம் செய்தப்ப ஃபுல் பறவைகளும் கவர் ஆகவில்லை...நம் கேமராவின் கப்பாசிட்டி அம்புட்டுத்தான்...ஸோ பார்ட் பார்ட்டாக அக்கூட்டத்தை எடுத்தேன்...வித்தியாசம் தெரியலையோ....

      ஆமாம் நீங்க சொல்லியிருப்பது வித்தியயசமான, கூடுப் பேசி, சாப்பிட்டு நடந்து விளையாடி என்று சூப்பரா இருந்தது...ஆம் மகிழ்ச்சியும் கூட...

      நன்றி அதிரா...

      கீதா

      நீக்கு
  18. ஒவ்வொரு படமும் கண்களுக்கு விருந்து

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோ !

    முல்லை அகத்துள்ளே மூடிவைத்த தேன்துளியாய்
    தில்லை அகத்தாளின் தேடலெல்லாம் தித்திக்கும்
    எல்லை இதற்கில்லை எங்கெங்கு மிவ்வியற்கை
    சொல்லர்க் கரியதோர் சொர்க்கம்தான் இவ்வுலகில் !

    பறவைகள் போல் சுதந்திரம் நமக்கிருந்தால் என்னே ஒரு மகிழ்வாய் இருக்கும் இல்லையா அந்தப் பறவைகள் போல தங்கள் பயணமும் மனமகிழ்வைத் தந்திருக்கும் என்று நம்புகிறேன் அருமையான காட்சிகள்
    அவ்விடம் செல்வோருக்கும் நல்ல வழிகாட்டும் வரைபடம் அருமை அருமை

    வாழ்க நலம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சீராளன் வணக்கம்.

      ரொம்ப நாளாகிவிட்டது பார்த்து.

      அதைச் சொல்லுங்கள்...பறவைகள் போல சுதந்திரமாக இருந்துவிட்டால் எவ்வளவு நன்று...

      மிக்க நன்றி சீராளன் தங்களின் அருமையான கவிதைக்கும் பதிவை ரசித்தமைக்கும்...எப்படி இப்படிப் பார்த்ததும் கவிதை பொங்குது உங்களுக்கு!!! பாராட்டுகள்! சீராளன்.

      கீதா

      நீக்கு
    2. வணக்கம் சகோ !

      ஏதோ கொஞ்சம் விடுமுறை கிடைத்தது அதனால் வலைப்பக்கம் வந்தேன் பார்த்ததும் எழுத தோணிற்று எழுதினேன் அவ்வளவுதான் மிக்க நன்றி தங்கள் பாராட்டல்களுக்கு

      வாழ்க நலம் !

      நீக்கு
  20. பதில்கள்
    1. மிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ உங்கள் கருத்திற்கு..

      கீதா

      நீக்கு
  21. ஸ்ரீஹரிக்கோட்டா ..கேள்விப்பட்டதோட சரி ... கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இடம்.

    தாமதமாக வருவதின் பயன் என்ன சொல்லுங்கள் பார்க்கலாம்?

    பதிலளிநீக்கு
  22. ஸ்ரீஹரிக்கோட்டாவின் நுழைவாயில்வரை அழைத்து சென்றதற்கு நன்றி ஐயா....

    பதிலளிநீக்கு
  23. போட்டோ அருமை.காசு செலவில்லாமல் ஷிரி ஹரிகோட்டா.நன்றி

    பதிலளிநீக்கு