ஒடிஸாவில் இருக்கும் சில்கா ஏரிக்கு
அடுத்ததாக, இரண்டாவது பெரிய ஏரி இந்த புலிக்கட் ஏரி. ஏரி என்று சொல்லப்பட்டாலும் இது
ஆங்கிலத்தில் லகூன் – நீர்ப்பரப்பு. பெரிய நீர்ப்பரப்பு. ஆழம் அதிகம் இல்லாத நீர்ப்பரப்பு.
நல்ல மழை பெய்து வெள்ளம் வந்தால் மட்டுமே இந்த நீர்ப்பரப்பு நிறைந்து கடல் போலக் காணப்படும்.
இது வங்காளவிரிகுடாவில் ஷார் பகுதியிலும்,
தமிழ்நாட்டில் பழவேற்காடு பகுதியிலும் ஆன முகத்துவார நீர்ப்பரப்பு. இந்த நீர் கடல்
நீரளவு உப்பு இல்லை என்றாலும் நன்னீரை விட உப்பு உள்ள நீர். ஆங்கிலத்தில் ப்ராக்கிஷ்
வாட்டர் லகூன் – Brackish Water Lagoon. இதன்
பரப்பளவு 759 கிமீ2
படம் - நன்றி - விக்கி
இது ஆந்திரா தமிழ்நாடு எல்லையில்
அமைந்துள்ளது. பெரும்பான்மையான பகுதி ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்திலும், மற்ற பகுதி
தமிழ்நாட்டில் பழவேற்காடு, பொன்னேரி பகுதியிலுமாக இருக்கிறது. இந்த நீர்ப்பரப்பைப்
பிரிப்பது ஸ்ரீஹரிகோட்டா செல்லும் சாலை. ஒரு பகுதி ஏரி. மற்றொரு பகுதி சதுப்பு நிலம்.
அந்த ஏரிதான் புலிக்கட் ஏரி பறவைகள் சரணாலயமாக இருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டா தீவு இந்த
ஏரியை வங்காளவிரிகுடாவிலிருந்து பிரிக்கிறது.
ஆனால் மழைக்காலம், வெள்ளம் என்று வரும் போது மட்டும் முகத்துவாரங்கள் கடலோடு கலந்து காணப்படும். இதோ இப்படி...படம் - நன்றி - விக்கி
சென்ற பதிவில் நாங்கள் அடுத்து 3 நிமிடத்தில் இறங்கிய பகுதி அருமையான பகுதி என்று சொல்லியிருந்தேன். இதோ கீழே இருக்கும் பகுதி.
இந்த இரு படங்களும் ரோட்டிலிருந்து
கீழே இறங்கும் முன் எடுத்த படங்கள்.
இந்தப் பாலத்தின் அருகில்
தான் இறங்கினோம். இங்கு நீர் அதிகம் இருந்தது பறவைகளும் இருந்தன. இந்த இடத்தில் இறங்கி சிறிது தூரம் நடந்து பல கோணங்களில் படம் எடுத்தேன் அவை கீழே
கொக்கு/நாரைகள்
எவ்வளவு இருக்கின்றன பாருங்கள். ஸ்டான்ட் அட் ஈஸ், அட்டென்ஷன் மற்றும் லெஃப் ரைட் லெஃப்ட் ரைட் ப்ராக்டீஸ் செய்யறாங்க பாருங்க! இதில் ஒரு 4, 5 தனியே தள்ளி நின்று கொண்டிருந்தன இந்தக்
கூட்டத்துடன் சேராமல். முழு கூட்டத்தையும் கேமராவுக்குள் அடக்க இயலவில்லை. அதுவும் ஜூம் செய்து எடுத்ததால்..
பாருங்க
இந்த 4 பேரு மட்டும் தனியா நிக்கிறாங்க. கூட்டத்தோடு சேர்ந்து போஸ் கொடுக்காம அவங்களுக்கு ஸ்டான்ட் அட் ஈஸ், அட்டென்ஷன், லெஃப்ட் ரைட் எக்ஸெர்ஸைஸ் ப்ராக்ட்டீஸ் பிடிக்கலையாம்!!!! அதனால் அவங்க எங்கள மட்டும்
ஃபோட்டோ எடுக்கலைனு கோபம் கொள்ளக் கூடாதுனு அவங்களையும் இந்தப் பக்கம் கேமராவைத் திருப்பிக்
கவர் பண்ணினேன்!!
மாலை
நேரம் தான் வெயில் இருந்தாலும் சூரியனை நோக்கி அதன் ஒளிக்கதிர் நீரில் தெரிவதை எடுத்ததால்
மாலை மயங்கும் நேரம் போல் காட்டுகிறது.
அந்த
இடத்தில் சூரியனின் ஒளிக் கதிர்கள் தண்ணீரில் தகதகத்தது அதை எடுக்க வேண்டும் என்று
எடுத்தேன். இந்த இரண்டாவது படத்தில் பறவைகள் பறக்கின்றன அதை எடுக்க முடிந்த அளவு எடுத்தேன்.
மேலே
இரு படங்களையும் தவிர்த்து இதோ இந்தப் படம் பாருங்கள் சூரிய ஒளி என் பின் புறம் நாங்கள்
பெண்கள் மட்டும் நின்று கொண்டிருந்ததை என் நிழல் வராமல் அவர்கள் நிழலை மட்டும் எடுத்தேன். இதில் இடப்பக்கம் புடவை உடுத்தியவர் தெரிகிறதா கை உயர்த்திக் கொண்டு அவர் மற்ற இருவரையும் அவர் செல் ஃபோனில் படம் பிடிக்கிறார்.
தூரத்தில்
பாலம் தெரிகிறதல்லவா அந்தப் பாலம் தான் மேலே க்ளோஸப்பில் இங்கு பறவைகள் வியூ என்று போர்ட் இருக்கும் பகுதி. பாருங்கள் யாரோ பாட்டிலைப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். நாங்கள் அதை எடுத்து எங்கள் குப்பைக் கவரில் பொட்டுக் கொண்டோம்.
அங்க
பாருங்க தூரத்துல அந்தக் கொக்கு/நாரைகள் தெரியறாங்களா…அவங்களைத்தான் இன்னும் கொஞ்சம்
முன்னே சென்று தன்ணீரின் விளிம்பில் நின்று கொண்டு ஜூம் செய்து எடுத்தேன். நாங்கள்
இப்பகுதியில் நிறைய நடந்தோம்…நடந்தோம் என்பதை விட நான் நடந்தேன்!!!! ஷூ தடங்கள் தெரிகிறதல்லவா?
என் ஷூ அடிபாகம் முழுவதும் சேறுதான். எல்லாம் சுற்றி சுற்றி ஃபோட்டோ எடுக்கத்தான் ஹிஹிஹிஹி!!!
அடுத்து நாங்கள் செய்த லூட்டி
என்ன என்பதைச் சொல்கிறேன் என்று சொல்லிருந்தேன் இல்லையா. இங்கு இறங்கிய இடத்தில் ஃபோட்டோ
ஷூட்டை முடித்துக் கொண்டு கிளம்ப மனமே இல்லாமல் வண்டியில் ஏறினோம். திடீரென்று எங்களில்
நாங்கள் நான்கு பேர் வண்டியின் மேல் டாப்பில் ஏற ஆசைப்பட மைத்துனரும் ஓகே என்று சொல்ல
எங்கள் நண்பர் (இவரைப் பற்றி பர்வதமலை பயணத்தில் குறிப்பிட்டிருக்கேன். ஹார்ட் பைபாஸ்
சர்ஜரி செய்துகொண்டவர் ஆனால் செம ஜாலி டைப். அவர் இருக்கும் இடத்தில் சிரிப்பலைதான்.
எங்களுடன் அவரும் அவருடன் நாங்களும் சேர்ந்து இது போன்ற லூட்டிகள் அடிப்பதுண்டு. அப்படியான
ஒரு லூட்டிதான் இது.
அடுத்த இடத்தில் பறவைகள் கண்ணில்
பட்டு நாங்கள் இறங்கும் வரை இப்படி நால்வரும் டாப்பில் பயணித்தோம். மற்றவர்கள் வண்டியுனுள்.
முன்னால் அமர்ந்திருப்பது நண்பர். அடுத்து அமர்ந்திருப்பது என் ஒன்றுவிட்ட நாத்தனார்.
அடுத்து இடையில் கொஞ்சமே கொஞ்சம் துப்பட்டா தெரிகிறதே அது நண்பரின் மனைவி. அவர் பின்னால்
நான்!!!! கேமராவில் சரியாகக் கவர் செய்ய முடியவில்லை என்பதால் மொபைலில் எடுத்தேன்.
வண்டி மெதுவாகவே சென்றதால் இரு புறமும் பார்த்துக் கொண்டே வந்தது மறக்க முடியாத அனுபவம்
மட்டுமின்றி அப்படியே சில படங்களும் எடுத்தேன் அது அடுத்த பதிவில். நீங்களும் எங்க
கூட வண்டில வாங்க! பார்த்துக் கொண்டே போவோம்.
-----கீதா
இடம் பற்றிய விவரங்களை சொல்லி இருப்பது சிறப்பு. தெரிந்து கொண்டேன். Good morning.
பதிலளிநீக்குகுட்மார்னிங்க் ஸ்ரீராம்..
நீக்குமிக்க நன்றி...அடுத்த பதிவுடன் முடியும். அதில் எப்படிச் செல்வது என்பதையும் சொல்லுகிறேன்...
கீதா
படங்கள் எல்லாமே மிக அழகு. அந்தத்தனியா நிற்கும் நாலுபேரும்தான் சட்டாம்பிள்ளைகளோ!
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா ஹா இருக்கும் எல்லாத்தையும் மேச்சுக் கட்டும் சட்டாம்பிகளா இருக்கும் போல.!!
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்...படங்களை ரசித்தமைக்கு
கீதா
செல்போனில் படம் பிடிபபது திருஷ்டி சுற்றிப்போடுவது போலவும் இருக்கிறது!
பதிலளிநீக்குஅது பழைய செல்ஃபோன் ஸ்ரீராம்....மகன் எனக்கு முதன்முதலில் வாங்கிக் கொடுத்தான் அவன் சென்னையில் கிளினிக்கில் வேலைக்குச் சேர்ந்தப்ப வாங்கிய சம்பளத்தில். ஃபோன் குறைந்த விலைதான் ஜியோனி. அழகான ஃபோன் படங்கள் எல்லாம் ரொம்ப நன்றாக வரும். அந்த ஃபோனைத்தான் நான் சென்னையில் எங்கள் பகுதியில் வாக்கிங்க் சென்ற போது ஏதோ கால் வரவும் அதை எடுக்கவும் ஒருவன் பின் பக்கம் வண்டியில் வந்து லப்க்கிக் கொண்டு சென்றான்...
நீக்குஅப்புறம் இப்போது வைத்திருக்கும் ஃபோன் அதையும் விட விலை குறைவு...எனக்கு அது போதும் என்று மகனிடம் சொல்லிவிட்டேன்...எனக்குதான் ரொம்ப வருத்தமாகிவிட்டது...
கீதா
வண்டியின் மேல் டாப்பிலா? ஏனிந்த விபரீத விளையாட்டு? அதுவு ஹார்ட் பைபாஸ் சர்ஜரி செய்தவர் வேறா?
பதிலளிநீக்குஹிஹிஹி ஆமாம் ஸ்ரீராம்...வண்டி மாப்பிள்ளை அழைப்பு வண்டி போல மிக மிக மெதுவாகவே சென்றது....அதனால்தான் என்னால் இதற்கு அப்புறமும் படங்கள் எடுக்க முடிந்தது. வண்டியினுள் இருந்து எடுக்க முடியாதே...அவருக்கு சர்ஜரி ஆகி 10 வருடங்கள் ஆகிவிட்டது...ஸ்ரீராம்...ஏறுவதற்கு மிகவும் சிரமமான பர்வத மலையே எங்கள் குழுவில் அவர்தான் முதலில் ஏறிச் சென்று அடைந்தவர்...
நீக்குகீதா
நல்லவேளை வண்டியில் டூர் போனதால் உங்க ஆசை நிறைவேறிச்சு நிச்சயமாக விமானத்தில் டூர் போகாதீங்க அப்படி போனால் விமானத்தின் மேலே உட்கார்ந்து போக ஆசைப்படுவீங்க அதுக்க்கு அப்புறம் எங்கள் ப்ளாக்கில் உங்கள் சமையல் பதிவுகளை பார்க்க முடியாமல் போய்விடும்
நீக்குஹா ஹா ஹா ஹா ஹா ஹா மதுரை ...ஹையோ சிரிச்சு முடிலப்பா....
நீக்குஅப்படி ஒரு ஃப்ளைட் செஞ்சா நல்லாருக்கும்ல..ஒன்னுமில்ல நான் டாப்ல எல்லாம் போக வேண்டாம்...ஃப்ளைட் யு வை தலைகீழா கவுத்தி வைக்கறா மாதிரி ஃப்ளைட்ல மேலே சைட் எல்லாம் பார்க்கும் படி கண்ணாடி.ஃபைபர் க்ளாஸ் போட்டா எப்படி இருக்கும்?!!! ஹிஹிஹிஹி...(ஹிமாச்சல் ஷிம்லாலருந்து கால்கா வரை அப்படி ஒரு மோட்டார் கார் ரயில் உண்டு....சூப்பரா இருக்கும்
இதுவே இந்த மாதிரியான இடங்களுக்கு மெட்டடர் போல இல்லாமல் ஓபன் ஜீப் அல்லது ஓபன் வண்டியில் போனா இரு புறமும் பார்த்துக் கொண்டே போகலாம்...க்ளோஸ்ட் வண்டியில் போனா கஷ்டம்...மதுரை...
மிக்க நன்றி மதுரை
கீதா
விவரிப்பு அருமை.
பதிலளிநீக்குகாட்சிகள் ரசிக்க வைத்தது.
மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு
நீக்குகீதா
படங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்கு//பாருங்கள் யாரோ பாட்டிலைப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். நாங்கள் அதை எடுத்து எங்கள் குப்பைக் கவரில் பொட்டுக் கொண்டோம்.//
நல்ல செயல்.
சூரியனின் ஒளிக் கதிர்கள் தண்ணீரில் தகதகத்தது அதை எடுக்க வேண்டும் என்று எடுத்தேன்.//
அழகாய் இருக்கிறது.
மண்ணில் புதைந்த கால தடங்கள், தோழிகள் நிற்கும் நிழல் படம் எல்லாம் அழகு.
//எங்களுடன் அவரும் அவருடன் நாங்களும் சேர்ந்து இது போன்ற லூட்டிகள் அடிப்பதுண்டு. அப்படியான ஒரு லூட்டிதான் இது.//
அருமை, மகிழ்ச்சி அலையை பரப்பும் லூட்டிகள் .
மிக்க நன்றி கோமதிக்கா கருத்துகளுக்கு.
நீக்குநண்பர் அவர் இருந்தால் போதும் இடம் கல கலவென்று இருக்கும்...ஜோக் அடித்துக் கொண்டே இருப்பார்...டைம்லி விட் உட்பட.
நாங்கள் அடிக்கும் லூட்டிகள் எல்லாம் டேஞ்சரஸா இருக்காத அளவுக்குப் பார்த்துக் கொள்வோம்...
மிக்க நன்றி கோமதிக்கா...
கீதா
தகவல்கள் அருமை கா..
பதிலளிநீக்குஅந்த மழைக்கால படம் ஆஹா சூப்பரா இருக்கு ..
சூரிய கதிர்கள் விழும் படமும் , உங்கள் நிழல் படமும் அருமை ...
மகிழ்ச்சியான நேரம் அல்லவா ...எங்களுக்கும் அந்த மகிழ்ச்சியை கடத்திவிட்டீர்கள்..
மிக்க நன்றி அனு. அது மழைக்காலப் படம் விக்கி கொடுத்துச்சு. நல்லாருக்குல்ல?...
நீக்குஆமாம் அனு மகிழ்ச்சியான நேரம்....மிக்க நன்றி அனு கருத்திற்கு
கீதா
இதே போல நிழல் படங்கள் மட்டும் சேர்த்து நேத்து தான் draft ல் போட்டு வைத்தேன் ...இனி publish பண்ணா உங்களுக்கு போட்டியா அதுவும் வரும்
பதிலளிநீக்குஅனு இதுல என்னருக்கு போடுங்க ப்ளாக்ல!! இன்ஸ்பிரேஷன்ல ஆரோக்கியமான போட்டி நல்லதுதானே அனு...நீங்க போட்ட படம் பார்த்ததும் உடனே அட நாமளும் அனு மாதிரி எடுத்துருக்கற பூ படம் எல்லாம் போடனும் பய்ணப் படம் போடனும்னு நினைச்சு ரொம்பக் கஷ்டப்பட்டு இதைப் போட்டுட்டேன்...இன்னும் ஒரு பயணப்படம் இருக்கு விசாகப்பட்டினம்...இப்பவே கண்ணைக் கட்டுது...ஹா ஹா ஹா ஹா
நீக்குகீதா
படங்கள் அனைத்தும் பளிச்... பளிச்...
பதிலளிநீக்குமிக்க நன்றி டிடி!!!
நீக்குகீதா
ரசனையுடன் எடுக்கப்பட்ட படங்கள். ரசித்தேன். இவ்விடத்திற்கு இதுவரை சென்றதில்லை. உங்கள் பதிவு அங்கு செல்லும் ஆவலை உண்டாக்கியுள்ளது.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா கருத்திற்கு. முடிந்தால் சென்று வாருங்கள் அழகான இடம்.
நீக்குகீதா
அழகான படங்கள். பறவைக் கூட்டம் பார்க்க மகிழ்ச்சி. இந்த மாதிரி நீர்நிலைகளுக்கு வரும் நாரைகள், கொக்குகள், பறவைகள் என அனைத்தையும் வளைத்து வளைத்து படம் எடுக்கத் தோன்றும். சமீபத்தில் ஒரு பயணம் சென்றபோது இப்படி சில பறவைகளை நிறைய படம் எடுக்க முடிந்தது.
பதிலளிநீக்குசிறப்பாக பயணமாக அமைந்திருப்பது தெரிகிறது. காரின் மேல் பயணம்! ஆஹா - இப்படி குழுவினராகச் செல்லும்போது இந்த மாதிரி விஷயங்களைச் செய்வதில் ரொம்பவே மகிழ்ச்சி தான் இல்லையா... நான் கூட சில விஷமங்களைச் செய்வதுண்டு! வனப் பயணங்களில் - ஓபன் ஜீப் இருந்தால் மிகவும் சிறப்பு!
அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.
வெங்கட்ஜி ஆமாம் வளைத்து வளைத்து எடுக்கச் சளைக்கவே இல்லை. இன்னும் படங்கள் இருக்கின்றன அடுத்த பதிவில் முடித்துவிடுவேன். எத்தனை எடுத்தாலும் அலுப்பும் இல்லை திருப்தியும் இல்லை....அதுவும் பறப்பன எடுப்பது மிகவும் பிடிக்கும்...
நீக்குநீங்களும் எடுத்திருக்கீங்களா ஜி!! ஆஹா அப்ப பதிவில் விரைவில் படங்களேனும் எதிர்பார்க்கலாம்னு சொல்லுங்க...
ஆமாம் குழுவினரோடு அதுவும் நம் அலைவரிசையோடு ஒத்த அலைவரிசையில் செல்லும் போது மனம் மிகவும் மகிழும். ஆமாம் சிறப்பான பயணம்..ரொம்பவே மகிழ்ச்சிதான்...
நான் கூட சில விஷமங்களைச் செய்வதுண்டு!// ஹை ஃபைவ்!!!
ஆமாம் வனப் பயணங்களில் ஓபன் ஜீப் தான் சிறப்பு...
மிக்க நன்றி வெங்கட்ஜி!!!
கீதா
கடல் போல இருக்கிறது கீதா பார்க்க. பறவைகள் தண்ணீரில்தான் இருக்கினம்போல... அவ்ளோ வெக்கைபோலும்.
பதிலளிநீக்குகடல் போல இருப்பது வெள்ளம் வந்தப்ப எடுத்த படம் விக்கியில் இருந்து...
நீக்குபறவைஅள் நீர்ப்பறவைகள் அல்லவா ...அத்தனை வெக்கை இல்லை அதிரா நாங்கள் சென்றது டிசம்பர் 31. வெயில் காலம் இல்லையே...ஆனால் குளிரும் அப்படி ஒன்றுமில்லை...
மிக்க நன்றி அதிரா
கீதா
எங்களுக்கு சூரியன் மங்கும் வேளை மஞ்சளாக எல்லோ இருக்கும்., உங்களுக்கு வெள்ளையாக வந்திருக்கே அவ்வ்வ்வ்வ்:)...
பதிலளிநீக்குபெண்களின் நிழல் அழகு.... முகமெல்லாம் தெரியுதே எனக்கு:)
ஹலோ மாலை மயங்கும் நேரம் அல்ல..ஒரு 5 மணிக்குள்...மஞ்சள் வெயில்தான் என் கேமராவில் வெள்ளையா இருக்குதோ என்னவோ...ஹிஹிஹிஹிஹி
நீக்குஹா ஹா ஹா என்னா முகம் தெரிந்தது அதிரா...மை முகம் அங்கு இல்லை....என் நிழல் விழாமல் எடுத்தது...
மிக்க நன்றி அதிரா
கீதா
அதென்ன டபிள் டெக்கர் பஸ் ஆ? இல்லை எனில் மேலே பாதுகாப்பு இல்லையே? உசிருக்குப் பயப்பிடாமல் ஏறினனீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..
பதிலளிநீக்கு13 சீட்டர் வேன்...மேலே கம்பிகள் சைடில் உண்டு பிடித்துக் கொள்ள. வண்டி மெதுவாகத்தான் சென்றது...அதனால் பயமில்லை அதிரா....மீக்கு இப்படியானதில் பபமில்லை..ஹிஹிஹி...
நீக்குமிக்க நன்றி அதிரா
கீதா
எல்லாப்படங்களும் அழகோ அழகு. ஆனால் ஏன் வண்டியின் மேலே ஏறிப் பயணித்தீர்கள்? என்ன இருந்தாலும் ஒரு சமயம் போல் இன்னொரு சமயம் இருக்காது. எனக்கெல்லாம் பயமாக இருக்கும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி கீதாக்கா...
நீக்குவண்டில மேல ஏறினது அட்வென்ட்சர் என்றில்லைக்கா...பறவைகளைப் பார்கக்னும்னா ஓபனா போனதான் பார்க்க முடியும். வண்டிக்குள்ள உட்கார்ந்த பார்ப்பது ரொம்ப கஷ்டம். ஸோ அதுல ஆர்வம் இருக்கறவங்க நாங்க நாலு பேர் மட்டும் ...வண்டி ரொம்ப மெதுவா போச்சு. கொஞ்சம் படங்கள் எடுக்க முடிஞ்சது. அடுத்து ஒரு இடத்துல பறவைகள் நிறையத் தெரிய ஆரம்பிச்சதும் இறங்கிட்டோம் அதுதான் லாஸ்ட் பாயின்ட் அப்புறம் ஒரு கிலோமீட்டர்ல ஸ்ரீஹரிகோட்டா வந்துரும். அதுதான் லாஸ்ட் முனை.
அந்தப் படங்கள் அடுத்த பதிவில் வந்துரும்...அதோடு இப்பயணம் முடிந்தது. அடுத்து விசாகப்பட்டினம் பயணம் இருக்கு அது எப்ப போடப் போறேன்னு தெரியலை...பார்ப்போம்
மிக்க நன்றி கீதாக்கா
கீதா
மாலைச்சூரியன் மஞ்சள், சிவப்பு எனப் பல வண்ணங்கள் காட்டுவான். உங்கள் படத்தைப் பார்த்ததும் சூரிய உதயமும், அஸ்தமனமும் மொட்டை மாடியில் போய்ப் பார்த்துப் பல நாட்கள் ஆகிவிட்டன என்பது நினைவில் வந்தது. ஏதேனும் காய வைக்கப்பத்து மணி போல் மாடி ஏறுவதோடும், மாலை அதை எடுக்கச் செல்வதோடும் சரி! நாளைக்காவது போய்ப் பார்க்கணும்.
பதிலளிநீக்குஆமாம் அக்கா மாலைச் சூரியன் நிறைய காட்டுவான்...ஒரு ஆரஞ்சு வண்ணம் கூட வரும்...
நீக்குஅக்கா போய் ஃபோட்டோ எடுத்தீங்களா? எடுத்து போடுங்க....கீதாக்கா...அடுத்த பதிவில் எதிர்பார்க்கலாமா?!!! உங்க ஃபோட்டோ ஷூட்?!!!
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபடங்கள் மிக அருமை. சென்ற இடங்கள் அந்தந்த இடங்களுக்கான விளக்கங்கள் என பொறுமையாக விளங்கும்படி தந்துள்ளீர்கள். நன்றி. மழை வந்தால் கடல் மாதிரி காட்சியளிப்பது வியப்பு. அப்போது அந்த பலத்தின் மீது பயணம் சற்று பயத்தை ஏற்படுத்தும் இல்லையா?
பறவைகள் அட்டென்ஷன் மிக அழகாக இருக்கிறது. அதற்கு தாங்கள் தந்த வர்ணனை புரிந்த மாதிரி அழகாக நிற்கிறதே.! அந்த நாலு பறவை மட்டும் எதற்கு ஒத்துழையாமை இயக்கம்? இல்லை.. தாங்கள் அதன் அழகை முதலில் படமெடுக்கவில்லையே என்ற கோபமா? ஹா ஹா. கொக்குகளும், நாரைகளுமாய் பறவைக்கூட்டம் படங்கள் மிக அழகு.
நிழல் படங்கள், காலடி படங்கள் எல்லாமே மிக அழகு. சூரிய ஒளி நீரில் பட்டு ஜொலிக்கும் படங்கள் மிக அழகாக இருக்கின்றன. சிறந்த புகைப்பட கலைஞர் என்பதையும் நிருபித்து விட்டீர்கள்.
என்னதான் ஜானவாச காரைப் போல என்று ஒப்பிட்டாலும், காரின் மேல் பயணம்... ரிஸ்க் எடுப்பது தங்களுக்கு ரஸ்க் சாப்பிடுகிற மாதிரி என்றாலும், எனக்கெல்லாம் கொஞ்சம் பயந்தான்.ஓடுகிற கார் மேலிலிருந்து கீழே பார்த்தால் தலை சுற்றும். இருவரைத்தான் காண முடிந்தது. பாக்கி படங்கள் அடுத்த பதிவிலோ?
அடுத்த பதிவை காண ஆவலாக இருக்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
வாங்க கமலாக்கா...மழை பெய்த வெள்ளத்தின் போது நாம் செல்லவில்லை. அப்போது சென்றிருந்தாலும் பார்க்க நன்றாக இருந்திருக்கும் ஆனால் பறவைகளைப் பார்த்திருக்க முடியாதுதான். அப்படம் விக்கியிலிருந்து...
நீக்குபறவைகள் அட்டென்ஷன்...// ஹா ஹா ஹா ஹா கமலாக்கா பின்ன நம்ம மொழி புரியாம இருக்குமா ? தெலுங்குல சொல்லனுமோன்னு நினைச்சேன் பரவால்ல ஆங்கிலம் புரிந்து கொண்டன...ஹா ஹா ஹா
அந்த நாலுக்கும் என் மொழி புரியலை போல அதான் இந்த ஒத்துழையாமை இயக்கம்!! ஹா ஹா ஹா ஹா...
அக்கா அப்படி பயமாக இருக்கவில்லை. எனக்கு மரம் ஏறிப் பழக்கம் உண்டு...ரிஸ்க் எடுப்பது ரஸ்க்// ஹா ஹா ஹா ஹா
மற்றவர்களின் படங்கள் வராது....ஆனா வரும்....
மிக்க நன்றி கமலாக்கா உங்களின் விரிவான கருத்திற்கு
கீதா
தனிப்பிறவின்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குலூட்டி அடிக்கும் பிறவின்னு இப்பதான் தெரிகிறது.
படங்கள் ஜோரோ ஜோர்.
மோனப்பறவைகளின் போஸ். ரியல்லி சூப்பர்.
உங்கள் எண்ணங்கள் மிக அழகு.
மேன்மேலும் சந்தோஷப் பயணங்கள் தொடரவேண்டும்.
ஹா ஹா ஹா வல்லிம்மா நிறைய லூட்டி அடித்திருக்கேன்...ஆனால் அதெல்லாம் அடிக்க தகுந்த சூழ்நிலை வேனுமாக்கும் ...ஹா ஹா ஹா ஹா ஹா...
நீக்குபடங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி வல்லிம்மா..
மற்றொரு பயணக் குறிப்புகளும் இருக்கு ஆனா அதைப் போடனுமே படங்கள் எல்லாம் செட் செய்து....பார்க்கிறேன்...
மிக்க நன்றிமா
கீதா
//..இதில் ஒரு 4, 5 தனியே தள்ளி நின்று கொண்டிருந்தன இந்தக் கூட்டத்துடன் சேராமல். //
பதிலளிநீக்குபுத்திஜீவிகளாக இருக்குமோ ..
சற்று வேலை பளுவின் காரணமாக தாமதமாக வந்தேன்.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாமே அழகு. குறிப்பா அந்த நிழற் படம்....
எனக்கும் உங்க கூட வண்டியில் வருவதற்கு ஆசை தான். ஆனா கொஞ்சம் பயமா இருக்கே, எங்கே என்னையும் வண்டி மேல உட்கார சொல்லிட்டிங்கன்னா? ஏன்னா நான் ரொம்ப அடக்க ஒடுக்கமான பையன்.
பதிலளிநீக்கு