முனைவர்
ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் மகன் திரு ஜ பாரத் அவர்களின் உரை.
வணக்கம். நான் முனைவர் ஜம்புலிங்கம்
அவர்களின் மகன் பாரத். ரெண்டு நாட்களுக்கு முன்னர் அப்பா என்னை அழைத்து சென்னையில்
நண்பர் ஒருவரது புத்தக வெளியீடு இருக்கிறது என்னால் வர இயலவில்லை. போய் கலந்து கொண்டு
வந்துவிடு என்று சொல்லி அப்பா எழுதியிருந்த அணிந்துரையையும், கதையின் சுருக்கத்தையும்
அனுப்பியிருந்தார். அதை நான் நேற்று இரவு வாசித்தேன். வாசித்ததும் கல்கியின் வார்த்தைகள்
நினைவுக்கு வந்தது. அவர் ஒரு கதையின் க்ளைமேக்ஸை எழுதியதும்தான் பன்னிரண்டு வருட பாரத்தை
இறக்கி வைத்த உணர்வு வந்ததுனு சொல்லியிருந்த அந்த வரிகள் துளசி ஐயாவின் கதை 85 ல் எழுதத்
தொடங்கப்பட்டு இதோ இப்போது 2018ல் வெளிவருவதைப் பார்த்ததும் தோன்றியது.
இத்தனை வருடங்கள் கழித்து வெளிவரும்
போது துளசி ஐயாவின் முகத்தில் தோன்றும் அந்த உணர்வுகளைப் பார்க்க ஆவலுடன் வந்தேன் ஆனால்
அவர் ஊரிலிருந்து வர இயலவில்லை என்பதை அறிந்தேன். என்னால் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. க்ளைமேக்ஸ் எழுதி 12 வருட பாரத்தை இறக்கிய
போது கல்கிக்குத் தோன்றிய உணர்வுகள், துளசி ஐயாவுக்கும் இந்த நாவலை முடிக்கும் போது
எந்தவிதத்தில் தோன்றியிருக்கும் என்பதை நாவலை வாசித்தால்தான் அறிய முடியும் என்று நினைக்கிறேன்.
ஆனால் கதை வெளிவந்த கதையை அறிந்த போது கல்கியின் வரிகள் தான் டக்கென்று தோன்றியது.
இப்படி இந்த வயதிலும் முடிக்கப்படாமல் பரணில் இருந்த நாவலை எடுத்து முடித்து வெளியிடும்
முயற்சிகே அவருக்கு ஹேட்ஸ் ஆஃப். என்னைப் போன்றவர்களுக்கு மிகச் சிறந்த ஊக்கம் என்றே
நினைக்கிறேன். ஐயாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! கூடிய சீக்கிரம் நாவலை வாசித்துவிட்டுக்
கருத்து பதிகிறேன். மிக்க நன்றி.
புதினத்தைப் பற்றி நண்பர் பாலகணேஷின்
கருத்து.
ஒரு வடிவமைப்பாளன் தன்னிடம் வடிவமைக்க
வரும் எல்லா புத்தகங்களையும் ஆழ்ந்து படிக்க வாய்ப்பில்லை. வடிவமைப்புடன் பிழை நீக்கமும்
கவனிக்கும் பட்சத்தில் மிகவும் ஆழ்ந்து பொறுமையாகப் படித்தாக வேண்டும். அதனாலேயே ஆழ்ந்து
படித்தேன். இல்லை என்றாலும் துளசியின் புத்தகம் என்பதால் படித்திருப்பேன் என்பது வேறு
விஷயம். இதில் குறிப்பிட்டு பாராட்ட வேண்டிய சில விஷயங்களை முதலில் சொல்லிவிடுகிறேன்.
இவங்க சொன்னது போல் இடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்பது ஒரு சிக்கலான ஆட்டிட்யூட் உள்ள விஷயம்.
நாவல்கள் இதைப் பற்றி 87, 90 களில் அப்புறம் வந்திருக்கிறது. அதுக்கு முந்தின பீரியட்லேயே
ஆரம்பிச்சுருக்கான்றது க்ரேட். பெரிய விஷயம். பட் கொஞ்சம் மிஸ் பண்ணினாலும் விரசம்
என்று சொல்லக்கூடிய ஒரு கருவை கூடியமட்டிலும் விரசம் இல்லாம அழகா சொல்லிருக்கிறார்
என்ற வகைல பெரிய சவாலை எதிர்கொண்டு இதில் துளசி ஜெயிச்சிருக்கிறார். அதை ரசிக்கும்
விதமா சொல்லிருக்கிறார். மூன்று பேர் முக்கியக் கதாபாத்திரங்கள். ஒவ்வொரு ஆங்கிளிலும்
கதை சொல்லுவது என்பது.. சில வருஷங்கள் முன்னால், 70-80- களில் நாகன் அப்படின்ற எழுத்தாளர்
ராணியிலும், தினத்தந்தியிலும் தொடர்கதைகள் எழுதிக் கொண்டிருந்தார். அவரது ஃபேவரைட்
இது. மூன்று கேரக்டர் இருந்தா மூன்று கேரக்டரும் அவரே கதை சொல்லுவார்.. அந்த பாணியை
அதுக்கப்புறம் யாருமே கையிலெடுக்கலை. ரொம்ப வருடங்களுக்குப் பிறகு இப்ப துளசி கையிலெடுத்துப்
பார்க்கிறேன். ஒரு வேளை துளசி அப்ப ஆரம்பித்து இப்ப முடிச்சதால அந்த ஸ்டைல் அப்ப இருந்து
இப்ப வந்துருக்கிறதோ என்று தெரியலை. பட் ரொம்ப ரெஃப்ரெஷிங்காக இருந்தது. அழகாகவும்
இருந்தது.
புத்தகத்துல சில குறிப்பிட வேண்டிய
விஷயங்கள்னு நான் நினைப்பது என்னவென்றால் 27 அத்தியாயம் வரைக்கும் ஒவ்வொருத்தரும் மாறி
மாறி ஒவ்வொருவர் கோணத்திலும் தெளிவா கதை சொல்லப்படுகிறது. அவன் வந்து சேருவது. ப்ரொஃபசரின்
வைஃப் மேல் சபலப்படுவது, ப்ரொஃபஸருக்கு உண்மை தெரியவருவது, அவளைப் ப்ரிவது இந்த சமாச்சாரங்கள்
எல்லாம் விரிவாககச் சொல்லிட்டு, அதற்கு அப்புறம் முப்பது வருஷம் கழித்து சந்திச்சு
சேருகிறார்கள் என்பதை ஒரே சாப்டரில் வந்தாங்க, சந்திச்சாங்க, பார்த்தாங்க சேருறாங்கனு
அவசர கோலமா முடிச்சது போல இருக்கிறது. சேட்டைக்கார அண்ணா சொன்னது போல முன் சம்பவங்களைக்
கொஞ்சம் ஷார்ட் பண்ணிட்டு பின் சம்பவங்களைக் கொஞ்சம் விரிவாக்கியிருந்தா ரொம்ப அளவானதாக
இருந்திருக்கும். இதுல கொஞ்சம் நிதானம் காட்டியிருக்கணும் என்று தோன்றியது. இது ஒரு
குறையா எனக்குத் தோன்றியது.
மற்றொரு உறுத்தல். எனக்குக் கொஞ்சம்
கூடப் பிடிக்கலை. ஆனால் துளசியின் விருப்பத்திற்காகச் செஞ்சது. திரைப்பட நடிகர்களின்
முதத்தை கேரக்டர்களில் கொண்டு வந்தது. அது மிகப் மோசமான உதாரணம். படிக்கறவங்களோட ஈடுபாட்டைக்
குறைச்சுடும். அது எனக்குப் பிடிக்கலை. அந்தக் கதாப்பத்திரத்தை ஓவியமாக வரைஞ்சு படிக்கும்
போது திங்க் பண்ணுவது என்பது வேற. இந்த நடிகர் மாதிரி இருப்பார் என்று சொன்னால் நாம
திங்க் பன்றது எல்லாம் அந்த நடிகருக்குத்தான் போகும் அப்ப நாம கதையை ஆழ்ந்து படிக்க
முடியாது என்பது ஒரு மைனஸ் பாயின்ட். இந்தச் சமாச்சாரத்தை அவர் ஏன் செஞ்சார்னு தெரியலை.
அவரைப் பார்க்கும் போது கேட்டுக்கலாம்.
மொத்தத்துல படிக்கும் போது ஆரம்பத்துலருந்து
கடைசி வரை ஒரு அழகான ஃப்ளோவும், விறு விறுப்பும் இருந்தது. அந்த வகையில செய்ததுல மிக
மனதிருப்தி கொடுத்த புத்தகம். அனைவரும் படிக்கக் கூடிய புத்தகம். மிக்க மகிழ்ச்சி.
நன்றி.
ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ்
32/1, கங்கையம்மன் கோயில் தெரு
வடபழனி, சென்னை26
புத்தகத்தின் விலை ரூ 200/ ஆனால் தரப்படுவது ரூ 150 க்கு. புத்தகத்தின் பக்கங்கள் 303
---துளசிதரன்
காலம் செய்த கோலமடி..
பதிலளிநீக்குபுத்தக அறிமுகத்தைக் கண்டேன்...
நானும் அப்போதே நினைத்தேன்...
- தன்னுடைய கதாபாத்திரங்களுக்கு திரைக்கலைஞர்களை சாயலாகக் கொண்டு வந்தது ஏன்?.. என்று!..
தங்களது கைவண்ணம்.. அதனுள்ளிருக்கும் ரகசியங்களைத் தாமே அறியக் கூடும்...
ஆயினும், மிக மனதிருப்தி கொடுத்த புத்தகம் - என பாராட்டப்படுவது மகிழ்ச்சி..
வாழ்க நலம்...
மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா கருத்திற்கு.
நீக்குமுனைவர் அவர்களின் மகன் திரு.பாரத் அவர்கள் தனது கருத்துரையை அழகாக வெளிப்படுத்தி உள்ளார். அவருக்கு எமது வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநண்பர் திரு.பாலகணேஷ் அவர்களும் ஒளிவு மறைவின்றி தனது கருத்தை சொன்னது எனக்கு பிடித்தது.
காரணம் ஒரு மாதம் முன்பே அட்டைப்படத்தில் கூத்தாடிகளின் புகைப்படம் எதற்கு வருகிறது என்ற ஐயம் எழுந்தது இருப்பினும் நூலை படித்தால்தான் விடை தெரியும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன்.
இருப்பினும் பாலக்காட்டாரின் படைப்புகள் இன்னும் காட்டாறாக பாய்ந்து வரட்டும்.
எமது இதயப்பூர்வமான வாழ்த்துகள்.
மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கு
நீக்குதிரு பாலகணேஷின் விமரிசனம் பிடித்ததுஏனோ என் சிறு கதைத்ட்க்ஹொஉப்புக்கு அவர் கருத்துரை எழுதவில்லை முறை கேட்டிருந்தும் ஒரு வேளைஅவரது கருத்துகள் எனக்கு உடன் படாமல் போகலாம் என்று நினைத்தாரோ என்னவோ இப்போதும் தாமதமாகி விடவில்லை விமரிசனமெழுத்துக்குத்தானே எழுத்தாளனைப் பற்றி அல்லவே
பதிலளிநீக்குமிக்க நன்ரி ஜிஎம்பி ஸார் தங்களின் கருத்திற்கு.
நீக்குஉங்கள் கேள்விக்கு நண்பர் பாலகணேஷ்தான் பதில் சொல்ல வேண்டும்
இருவரின் உரை /விமரிசனமும் அருமை .இவற்றை ரெக்கார்ட் செஞ்சு தொகுத்த கீதாவுக்கு பாராட்டுக்கள் .
பதிலளிநீக்குஓ தங்க்யூ டங்கியூ...ஏஞ்சல்....இதுக்கு எதுக்கு பாராட்டு எல்லாம் ஏஞ்சல்...ஒரே பிங்கியாயிட்டேன்...
நீக்குகீதா
மிக்க நன்றி சகோதரி ஏஞ்சல் தங்களின் கருத்திற்கு
நீக்குநம் ஒரு விசயத்தை செய்து முடிச்சதை விட, அதை அடுத்தவர்கள் பாராட்டும்போது வரும் சந்தோசமே மிகப் பெரிது... இருவரும் அருமையாக விமர்சித்து உற்சாகப் படுத்தி இருக்கிறார்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅதுசரி கீதாவுக்கு எவ்வளவு செக்:) எழுதிக் குடுத்தீங்க துளசி அண்ணன்?:) ஒளிக்காமல் சொல்லிடுங்கோ ஹா ஹா ஹா:))
அதிரா உங்க காதைக் கிட்ட கொண்டுவாங்கோ..ரகசியமா சொல்லறேன் நான்.. துளசி சொன்னார் பூஸார் ஏதோ உனக்கு தரணுமாமே அவரிடம் நான் பேசிக்கறேன்...அத வாங்கிக்கோனு...உங்க செக்கிடம் கேட்டுக்கறேன் இருந்தாலும் உங்களுக்குத் தகவல் சொல்லணுமில்லையா அதான்...அப்புறம் ஸ்ரீராமிடமும் பேசணும் அங்க மொட்டைமாடில இருக்கறதுல கொஞ்சம் எடுக்கோனுமில்லையா ஹா ஹா ஹா ஹா உங்க செக்கிடம் அதுக்கும் கணக்கு சொல்லி எடுத்துக்கறேன் ஓகேயா....மீதியை துளசியிடம் நீங்க பேசிக்கோங்க...
நீக்குகீதா
///ஸ்ரீராமிடமும் பேசணும் அங்க மொட்டைமாடில இருக்கறதுல கொஞ்சம் எடுக்கோனுமில்லையா///
நீக்குஹா ஹா ஹா அதில எடுங்கோ கீதா:) நான் பெட்டிக்குள் வைத்து மூடிக் குடுத்தது.. இப்போ நிறையக் குட்டீஸ் போட்டிருக்காம்.. எல்லாம் நல்ல நீளமான கலர்க்கோடுகள் போட்ட குட்டீஸ்:)) அதில நீங்க தேவையானதை எடுங்கோ கீதா:)) ஹா ஹா ஹா
என்ன... என்ன இங்கே ரகசியம்? நான் எங்க வீட்டு மொட்டை மாடியை சில நாட்களுக்கு வேறு வீட்டில் கொண்டு வைத்திருக்கிறேனாக்கும்... நங்கள் எல்லாம் உஷார்ப்பார்ட்டி!
நீக்குகீஈஈஈஈஈதாஆஆ.. ஒருவேளை கல்யாணமாகாத தேவி அம்மன் மொட்டை மாடியிலயோ?:)
நீக்குஹையோ அதிரா ஸ்ரீராம் சொல்லியிருக்கறதைக் கேட்டிங்கல்லல்லோ ஒட்டு கேட்டுட்டார் பாருங்கோ...ஹையோ எங்க கொண்டு வைச்சுருப்பார் மொட்டை மாடியை கமதே வா? ஹா ஹா ஹா ஒரு வேளை இப்ப ஊருக்குப் போய் வந்தாரில்லையா....அங்க கொண்டு போய் வைச்சுட்டார் போல...ஆஆஆஆஆ அதிரா பாருங்கோ ஸ்ரீராமின் குறும்பை...சரி சரி அவருக்கு ஒரு செக் நீங்க கொடுக்கோனுமில்லையா..அதை கட் பண்ணுங்க...ஹா ஹா ஹா
நீக்குகீதா
அதிரா உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
நீக்குகீதாவிடமே கேட்டுக் கொள்ளுங்கள் செக் பற்றி எல்லாம் நான் இல்லை அதற்குள். நீங்கள் பேசிக் கொள்வதைப் பார்த்தால் பிஸினஸ் பெரிதாக இருக்கும் போல இருக்கிறதே!!!!
அதிரா நீங்க வைச்சது குட்டி போட்டதெல்லாம் சரி...இப்ப நாம அதைத் தேடோணும்....ஹா ஹா ஹா ஹா
நீக்குகீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்கள் புத்தகம் பற்றி இருவரின் விமர்சன கருத்துக்களையும் படித்தேன். மிக அழகாக விமர்சனங்கள் தந்துள்ளார்கள். அருமையாக கதை எழுதிய தங்களுக்கும், அழகான கருத்துரைகள் தந்தவர்களுக்கும், அதை அழகாக தொகுத்தளிக்கும் சகோதரி கீதாவுக்கும் பாராட்டுகளுடன், நன்றிகள்.
மேலும்,மேலும் தாங்கள் கதைகள் எழுதி புத்தகங்கள் வெளியிட பிரார்த்திக்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா பாருங்க கதை எழுதினது துளசி...ஒன்னுமே செய்யாத எனக்கும்......அவர் சாக்குல..சைக்கிள் கேப்ல எனக்கும் பாராட்டுகள்னு வருது ஹா ஹா ஹா ஹா ....நன்றி நன்றி
நீக்குகீதா
மிக்க நன்றி சகோதரி கமலா கருத்திற்கு
நீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
வாழ்த்துகள்
மிக்க நன்றி நண்பர் கரந்தையார் தங்களின் கருத்திற்கு
நீக்குமுனைவர் ஐயா மகன் திரு பாரத் அவர்களின் கருத்து கச்சிதம். அவர் பேச்சிலிருந்து அவரும் தீவிர வாசிப்பாளர் என்று தெரிகிறது. அவர் பற்றிய ஒரு அறிமுக முன்னுரை கொடுத்திருக்கலாம்.
பதிலளிநீக்குஆமாம் எனக்கு அவரது உரையைக் கேட்டதும் தெரிந்தது. எனக்கும் தோன்றியது ஸ்ரீராம்ஜி அவரைப் பற்றி ஓர் அறிமுகம் கொடுத்திருக்கலாம் என்று.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்ஜி தங்களின் கருத்திற்கு
ஸ்ரீராம் திரு பாரத் அவர்கள் முனைவர் ஜம்புலிங்கம் ஐயாவின் மூத்த மகன். எம் பி ஏ படித்திருக்கிறார். தற்போது சென்னையில் ஒரு தனியார் வங்கியில் வேலை செய்துவருகிறார். சென்னையில் தன் குடும்பத்துடன் வசிக்கிறார். இரு மகன்கள்.
நீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குகணேஷ் எப்போதுமே சுவையாகவும், பொருளுடனும் பேசக்கூடியவர். அட்டைப்படம் பற்றி அவர் சொல்லி இருக்கும் கருத்தில் எனக்கும் உடன்பாடு.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்ஜி கருத்திற்கு. அட்டைப்படம் பற்றி பெரும்பான்மையோர் சொல்லியிருப்பது புரிகிறது. நான் அதை எதிர்பார்க்கவில்லை!!!
நீக்குஎன் கைக்கு எப்போது இந்தப் புத்தகம் வரும் என்பதை கீதா ரெங்கன் தெளிவுபடுத்த வேண்டும்!!!
பதிலளிநீக்குஅதுக்கு முன்... புத்தக செக்:) எப்போ வந்து கீதா கைக்குக் கிடைக்குமென:) ச் ரீராம்.. சே..சே.. வெரி சோரி டங்கு ஸ்லிப்பாகுது:) ஸ்ரீராம் தெளிவுபடுத்த வேண்டும்:)..
நீக்குஊசிக்குறிப்பு: மறக்காமல் செக்கில் “துளசிதரன்” எனப் போட்டு அனுப்பவும் இல்லை எனில் கீதாவின் எக்கவுண்டில் அது தஞ்சமாகிடும்:))
அனுப்பியாச்சு ஸ்ரீராம்.
நீக்குகீதா
புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது குறித்து மிகவும் சந்தோஷம். துளசி கலந்து கொள்ள முடியாமை குறித்து வருத்தமாக உள்ளது. விமரிசனம் சிறப்பாக இருக்கிறது. முனைவர் அவர்களின் மகனின் அறிமுகம் கிடைத்ததற்கும் மகிழ்ச்சி. புத்தகம் படிக்க ஆவலாய் இருக்கு! விண்ணப்பம் போடலாமா?
பதிலளிநீக்குசகோதரி கீதா சாம்பசிவம் மிக்க நன்றி கருத்திற்கு. என்ன தயக்கம் கேட்பதற்கு.
நீக்குஅனுப்பி வைக்கிறேன்.
புத்தக வெளியீட்டுக்கு நான் வரமுடியாமல்போய் விட்டது. (எல்லாம் இனிப்பைத் தவறவிட்ட சோகம்தான்... சோன்பப்டி... ஹா ஹா ஹா)
பதிலளிநீக்குநண்பர்களின் கருத்து நல்லாத்தான் இருக்கு. 'அனுபவம்' தலைப்பைத் தவிர, நாவல்களை ரொம்ப ஆராய்வது (விமர்சனமா) கொஞ்சம் டிசக்ஷன் மாதிரி இல்லையோ?
துளசிதரன் சாருக்கும், குறிப்பா உங்கள் முயற்சிக்கும் பாராட்டுகள்
நண்பர்களின் கருத்து நல்லாத்தான் இருக்கு. 'அனுபவம்' தலைப்பைத் தவிர, நாவல்களை ரொம்ப ஆராய்வது (விமர்சனமா) கொஞ்சம் டிசக்ஷன் மாதிரி இல்லையோ//
நீக்குநெல்லை தமிழன் இது வெளியீட்டு விழாவாக செய்யவில்லை. ஒரு கருத்துரை போல, விமர்சனம், கலந்துரையாடல் போலத்தான் ஏற்பாடு செய்ய நினைத்துச் செய்தது.
மிக்க நன்றி நெல்லை தமிழன் தங்களின் கருத்திற்கு.
நெல்லை என்னுடைய ஐடியாவை துளசியிடம் சொன்னேன். புத்தக வெளியீட்டு விழாவில் கூட அதாவது சீஃப்கெஸ்ட் என்று வரவேற்புரை, ஏற்புரை, நன்றியுரை பொன்னாடை போர்த்தல் என்று நடக்கும் விழாவில் கூட பேசுபவர்கள் கதையைப் பற்றி முடிவைப் பற்றிக் கூடப் பேசி பார்த்திருக்கிறேன். முடிவு இப்படி இருந்திருக்கலாம் அப்படி என்று.
நீக்குஒன்றுமே தெரியாமல் புத்தகம் வாங்குவது என்பது இப்போதெல்லாம் சாத்தியய்மில்லையே நெல்லை. எனவே கருத்துரை என்று வந்தால் அதை வாசிப்பவர்களுக்கு அப்படி ஒன்று இருக்கா என்ற ஆர்வம் இருந்தால் அது ரீச் ஆகலாமே என்ற ஓர் ஆர்வத்தில் இப்படி ஏற்பாட்டினை துளசியுடன் கலந்தாலோசித்துத்தான் செய்தேன். அவர் நேரடியாக வந்திருந்தால் இன்னும் கருத்துரை சொன்னவர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லியிருக்கலாம். நன்றாகவே இருந்திருக்கும் என்று தோன்றியது. இருந்தாலும் இப்போதும் இட்ஸ் நாட் டூ லேட். துளசியிடம் சொல்லி இக்கருத்துரைகளுக்கு அவரைப் பதில் பதிவு எழுதச் சொல்லலாம்.
கீதா