எனது புதினம் காலம் செய்த கோலமடி
பற்றி கோவை ஆவியின் கருத்து
முதல்ல நான் துளசிதரன் சாருடன்
ஆன அறிமுகம் குடந்தை ஆர் வி சரவணன் சார் மூலம் ஏற்பட்டது. குடந்தை சார் தான் ஒரு ஷார்ட்
ஃபில்ம்ல நடிக்க போறேன் என்று சொல்லி என்னையும் அழைக்க நான் செல்ல அந்த ஷார்ட் ஃபில்மான
பரோட்டா கார்த்திக்கில் துளசி ஸார் என்னையும் ஒரு சின்ன ரோலில் நடிக்கச் சொல்ல நானும்
நடித்தேன். அப்படி இன்ட்ரோ ஆனேன். அதில் ஒரு சிறிய காட்சி, சிறிய வசனம். அதன் பின்
குடந்தை சாரின் ஷார்ட் ஃபில்மில் துளசிசார் நடிக்க அதில் நானும் நடிக்க சந்திப்பு.
அப்புறம் எனது படமான காதல் போயின் காதல் படத்தில் துளசி சார் நடிக்க அப்புறம் ஒவ்வொரு
வருடமும் துளசி சார் ஒரு ஷார்ட் ஃபில்ம் எடுக்க நான் பாலக்காடு செல்ல, செல்ல கைரளி
ஹோட்டலில் தங்க, இரு நாட்கள் மாத்தூர் சுற்றி படப்பிடிப்பில் கலந்துகொள்வது என்று ஒவ்வொரு
வருடமும் தவறாமல் நடக்கும் அஜென்டா என்று ஆனது.
என்னைப் பொருத்தவரைக்கும் எனது
நடிப்பு கிராஃபை பொறுத்த வரைக்கும் ஒரு பெரிய இன்க்ளைன்டா இருந்தது. முதல்ல மிகச் சிறிய
ரோல் அப்புறம் வில்லன் கேரக்டர் அதாவது வில்லனின் தம்பி கதாபாத்திரம். அப்புறம் ஹீரோ
ரோல். அதுவும் விவேகானந்தர் ரோல். என்னையும் எனது தொப்பையுடன் என்னை விவேகானந்தராரக
உருவகப்படுத்தி எனக்குக் கொடுத்ததற்கு துளசி சாருக்கு ரொம்ப தாங்க்ஸ்.
அவர் படம் எடுக்கும் போது விஷ்வுஅலா
பார்த்திருக்கேன். கமாண்டிங்கா மத்தவங்களுக்குச் சொல்லுவது அப்புறம் டப்பிங்கில் டயலாக்
டெலிவரி மத்தவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கறது, எல்லாம் பார்த்திருக்கேன். அப்பதான்
சேச்சிதான் ஃபர்ஸ்ட் சொன்னாங்க அவர் ஒரு கதை எழுதியிருக்காரு. அதை ரிவைவ் பண்ணப் போறாரு
அப்படினு. இன்னும் முடிக்கலைனும் சொன்னாங்க. அவர் ஸ்க்ரிப்ட் நல்லா எழுதுவாரு. ஆனா
இவர் கதை எப்படி எழுதிருப்பாரு? ஏன்னா இவரது ஒவ்வொரு ஷார்ட் ஃபில்மும் எபிக் ரிலேட்டேட்,
ஸ்கூல் பிள்ளைங்களுக்காக என்று இன்னும் சொல்லப் போனா ஒவ்வொரு கதையும் கொஞ்சம் சமுதாய
முரண் கருத்து கொண்டதாக….உதாரணமாக சிம்பிளா சொல்லணும்னா இன்னும் வெளிவராத ஸ்ராவன் த
க்ரேட் ல ராவணன் தான் முக்கிய கதாபாத்திரமாக..….கிட்டத்தட்ட காலா கதைதான் அதை துளசி சார் காலாக்கு முன்னாடியே எடுத்துட்டார்.
அப்படியான கதைகள் எனும் போது இவர்
கதை எப்படி இருக்கும் என்று யோசித்த போது சேச்சி சொன்னாங்க இது கொஞ்சம் ரொமாண்டிக்
கதைதானு சொன்னாங்க. பரவாயில்லையே அப்ப கதை கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் போலனு நினைச்சேன்.
அப்புறம் சேச்சி புக் கொடுத்தாங்க. அட்டைல சிவக்குமார், சுமலதா எல்லாம் பார்த்தப்ப
ஐயையோ............பத்தாக் குறைக்கு அவர் காலேஜ் முடித்த சமயத்துல எழுதினதுனு சொன்னதும் ஆஹா பழைய
கதையா இருக்குமோனு தோணிச்சு. ஏன்னா எனக்கு விறு விறுனு இருக்கணும் கதை.
ஸோ எப்படி இருக்குமோனு நினைச்சு
வாசிச்சப்ப ஃபர்ஸ்ட் சாப்டர்லருந்தே எனக்கு ரொம்பப் பிடிச்சுச்சு. கதை சொல்ற விதமும்,
நேரட்டிவ் ஸ்டைல் வேகமும், அப்படியே ஸ்க்ரீன் ப்ளே போல அப்படியே காட்சிகள் விரிவது
போல அப்படியே வாக் த்ரூ பண்ண முடியுது. அந்த ஃபீல் வந்துச்சு உண்மையிலேயே. பழைய கதைனு
ஃபீல் பண்ண வைக்கலை. விறு விறுனுதான் போகுது. இப்ப முதல்ல 3 சாப்டர்தான் வாசிச்சுருக்கேன்.
ஒவ்வொருவருடைய பாயின்ட் ஆஃப் வியூவிலயும் சம்பவம் விவரிப்பது அப்படியே பார்க்க முடியுது.
இப்ப இவங்க முழுசும் வாசிச்சதுனால இவங்க சொன்ன குறைகளைப் பார்க்க முடியலை. முழுவதும்
வாசித்தால்தான் தெரியும். இப்ப வரைக்கும் எனக்கு எதுவும் தெரியலை. எனக்கும் ஒன்னு தோணிச்சு.
ஏன் சிவக்குமார், ஏன் அஜித் அப்படினு. ஆனா எனக்கு கதையை முழுசும் வாசிச்சாத்தான் அவர்
ஏன் கொண்டுவந்தார்னு சொல்ல முடியும்னு தோணுது. துளசி சாரோட இந்த முயற்சிக்கு ஹேட்ஸ்
ஆஃப். இவ்வளவு பெரிய புக் எழுதறது என்பது ரொம்பப் பெரிய விஷயம். ஒரு கதை ஒரு பக்கம்
எழுதவே எவ்வளவு மூச்சுத் திணறுது எனும் போது இப்படியான ஒரு புத்தகம் கொண்டு வந்ததுக்கு
துளசி சாருக்கு வாழ்த்துகள்.
திரு கார்த்திக் சரவணனின் கருத்து
வணக்கம். எனக்கும் துளசி சாருடைய
அறிமுகம் கிட்டத்தட்ட ஆவியைப் போலத்தான். ஆனா, நான் பாலக்காடு போனதில்லை. இங்கு ஆவியின்
குறும்படம் காதல் போயின் காதல் எடுத்த போது முதல் அறிமுகம். அப்புறம் குடந்தை சாரின்
அகம் புறம் குறும்படம் எடுத்த போது துளசி சாருடன் நெருக்கமான பழக்கம். நிறைய தெரிந்து
கொண்டேன். கற்றும் கொண்டேன். இந்த புக்கைப் பொருத்தவரை மன்னிக்கணும். எனக்கு புக் நீங்க
ஆவியிடம் கொடுத்ததுமே கிடைத்துவிட்டது. வாசிக்கவும் தொடங்கினேன். மூன்று சாப்டர் படித்தும்
விட்டேன். ஆதுக்கு அப்புறம் உடல்நலம் சரியில்லாமல் போனதால் தொடர்ந்து வாசிக்க முடியலை.
வாசித்த வரை எனக்குப் பிடித்தது. கதா பாத்திரங்கள் தாங்களே பேசுவது போல வருவது நல்லாருக்கு.
முதல் அத்தியாயத்துல, துரைராஜ் சாப்டர் கொஞ்சம் சின்னதாகவும் அடுத்த இரு சாப்டர்களும்
கொஞ்சம் ரொம்பப் பெரிசாவும் இருக்குது போல இருக்கு நான் வாசித்தது கம்மிதான். கண்டிப்பா
முழுவதும் வாசித்துவிட்டு என் ப்ளாகில் கருத்து எழுதுகிறேன். துளசி சாருக்கு வாழ்த்துகள்.
புத்தகத்தைப் பெற விரும்புபவர்கள்
தோழி கீதாவை இந்த நம்பரில் தொடர்பு கொள்ளலாம். (Those who wish to buy a copy of
this book may contact Ms Geetha) 9940094630 அல்லது எனது மின் அஞ்சல் thulasithillaiakathu@gmail.com
ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ்
32/1, கங்கையம்மன் கோயில் தெரு
வடபழனி, சென்னை26
புத்தகத்தின் விலை ரூ 200/ ஆனால் தரப்படுவது ரூ 150 க்கு. புத்தகத்தின் பக்கங்கள் 303
ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ்
32/1, கங்கையம்மன் கோயில் தெரு
வடபழனி, சென்னை26
புத்தகத்தின் விலை ரூ 200/ ஆனால் தரப்படுவது ரூ 150 க்கு. புத்தகத்தின் பக்கங்கள் 303
--------துளசிதரன்
அன்பின் நல்வாழ்த்துகள்!...
பதிலளிநீக்குமிக்க நன்றி துரைசெல்வராஜு ஐயா தங்களின் வாழ்த்துகளுக்கு
நீக்குஇருவரின் விமரிசனத்தையும் படித்தேன். வாய்ப்பு கிடைக்கும்போது படிக்கறேன். கீ.ர... உங்கள் முயற்சியைப் பாராட்டறேன்.
பதிலளிநீக்கு"சேச்சி சேச்சி" என்று பலதடவை வந்துள்ளதையும் நோட் பண்ணிக்கொண்டேன். ஹா ஹா ஹா.
"சேச்சி சேச்சி" என்று பலதடவை வந்துள்ளதையும் நோட் பண்ணிக்கொண்டேன். ஹா ஹா ஹா.//
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நினைச்சேன் எங்கள் நெல்லை அண்ணனிடம் மாட்டினேன் என்று....ஹா ஹா ஹா...அது ஆவி!! எனக்குத் தம்பியாக்கும்.
கீதா
மிக்க நன்றி நெல்லை தமிழன் தங்களின் கருத்திற்கு. இத்துடன் விமரிசனம் முடிந்தது
நீக்குஆவி அடையாளம் தெரியாமல் இருக்கார் போட்டோவில்!
பதிலளிநீக்குநலமா ஆவி?
படிக்கும்போது நீங்கள் பேசுவது போலவே காதில் ஒலித்தது!
எனக்கும் முதலில் ஆவியை அடையாளம் தெரியவில்லை ஸ்ரீராம்ஜி
நீக்குஇன்றைக்கான விமரசகர்கள் இருவருமே புத்தகத்தைப் படிக்காதவர்கள் என்று தெரிகிறது!
பதிலளிநீக்கு:)))
துளஸிஜி / கீதா ...
பதிலளிநீக்குபுத்தகம் என்ன விலை?
எனக்கு வி பி பி யில்தானே அனுப்பி இருக்கிறீர்கள்?
இந்த விமர்சனப் பதிவுகளின் ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் புத்தகத்தின் படமும், பதிப்பகம் பெயர் மற்றும் முக்கியமாக விலையும் குறிப்பிட்டால் நன்றாயிருக்கும்.
இந்த விமர்சனப் பதிவுகளின் ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் புத்தகத்தின் படமும், பதிப்பகம் பெயர் மற்றும் முக்கியமாக விலையும் குறிப்பிட்டால் நன்றாயிருக்கும்.//
நீக்குஓ இப்ப சேர்த்துவிடுகிறேன் ஸ்ரீராம். இத்துடன் கடைசி இது. தேனம்மை அவர்கள் எழுதிய மதிப்புரையை அவர் அவரது தளத்தில் வெளியிட்டுவிட்டார். முனைவர் ஜம்புலிங்கம் அவர்களும் வெளியிட்டுவிட்டார். செல்லப்பா சார் தெரியலை இங்கு போடலாம் என்று துளசி சொன்னார். அப்படியிருக்க மூவரது உரைகளையும் போடலாம். துளசியிடம் கேட்டுவிட்டுப் போடுகிறேன். கன்டென்ட் எல்லாம் இங்குதானே தலைமையகத்தில்தானே இருக்கு.....
ஸ்ரீராம் நன்றி இந்த மூன்றுடனுமே நீங்கள் சொன்னவற்றைச் சேர்த்துவிடுகிறேன்....
கீதா
ஸ்ரீராம்ஜி உங்கள் கேள்விகளுக்கு கீதா பதில் சொல்லிவிட்டார் என்று நினைக்கிறேன்.
நீக்குசேர்த்திருக்க வேண்டும். நானும் கவனிக்க விட்டுவிட்டேன்.
மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
புத்தக விவரங்களை இணைத்ததற்கு நன்றி. ஒவ்வொரு பதிவிலும் அது இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
நீக்குதலைப்பை வேறு வேறு மாற்றி வையுங்கள். உள்ளடக்கம் தொடங்கும்போது இதை அங்கு சேர்த்து விடுங்கள்.
கார்த்திக் சரவணனின் விமர்சனத்தை அவர் பதிவில் விரைவில் எதிர்நோக்கறேன் .சரவணன் கற்பகாஸ்ரீ வளர்ந்திருக்கா பார்த்து நாளாச்சு .முந்தி முகப்புத்தகத்தில் பார்த்ததோடு சரி .
பதிலளிநீக்குகோவை ஆவியின் விமர்சன பார்வையும் அருமை
இன்னும் ஒருவர் முக்கியமான ஒருவர் விமர்சனம் வருமா ?
கீதா ரெங்கனின் விமர்சனம் தான் :) அனைத்தையும் ஆழமாய் சிந்தித்து சிந்தனைகளை வெளிப்படுத்துவதில் கீதா டாப்
கீதா ரெங்கனின் விமர்சனம் தான் :) அனைத்தையும் ஆழமாய் சிந்தித்து சிந்தனைகளை வெளிப்படுத்துவதில் கீதா டாப்//
நீக்குஹையோ ஏஞ்சல் நான் பிங்கியாயிட்டேன்!!! என்னுள் அப்படி ஒரு திறமையா!! ஆச்சரியம் எனக்கே தெரியவில்லை ஏஞ்சல் சத்தியமா...மிக்க நன்றி நீங்க சொன்னதுக்கு.
நான் தான் உங்களை இப்படி நினைப்பதுண்டு ஏஞ்சல். ரொம்ப சிந்தித்து பல சப்ஜெக்டும் எழுதுகிறீர்கள் என்று. அது போல பூஸாரும் யதார்த்தமாய் சில சமயம் வித்தியாசமாவும் சொல்லுவார். ஸ்ரீராம், நெத, கீதாக்கா, கோமதிக்கா, துரை அண்ணா, பானுக்கா, கமலாக்கா என்று சொல்லிக் கொண்டே போகலாம் இல்லையா ஏஞ்சல்!!?
நான் அன்று அங்கு கருத்து சொல்லவில்லை ஏஞ்சல். காரணம் நான் தான் ஹோஸ்ட். இரண்டாவது கதை எழுதிய அந்த நோட்புக்ஸ் இரண்டுமே என்னிடம் தான் இருந்தது. 26 சாப்டருடன். துளசியும் நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் 2013 லிருந்து பார்த்துக்கோங்க...அவருக்கு என்னுடன் பேசுவதற்கு நேரம் கிடைத்து பேசி டைப் பண்ணிய போதிலிருந்து இறுதிக் கட்டம் வரை நூலழகு கொடுக்கும் முன் வரை துளசியுடன் பல விவாதங்கள், சண்டைகள் போட்டேன். 2017 லதன் முடிஞ்சுச்சு. ஹா ஹா ஹா...என் சஜஷன்ஸ் கேட்டு சிலவற்றைக் காம்ப்ரமைஸ் செய்து மாற்றவும் செய்தார். என்றாலும் நான் ஓவராகத் தலையிடக் கூடாது இல்லையா இது அவரது எழுத்து. நான் கதை எழுதும் போதும் அவர் வெகு வெகு அபூர்வமாக "இது இப்படி இருந்தால் நல்லாருக்கும்னு" சொல்லுவாரே அல்லாமல் தலையிட மாட்டார். உன் எழுத்து அதை நான் அதிகம் மாற்றக் கூடாது அப்புறம் அது என் கதையாகிடும் என்பார். ஸோ அதே தானே எனக்கும் இல்லையா.
அதுவும் அவர் 1985ல் 26 சாப்டர் எழுதியது. 27 வரை அப்போது நடப்பது. ஆனால் 27 அப்போது எழுதவில்லை. அப்படியே போட்டுவிட்டார். எனவே அக்காலகட்ட சிந்தனைகளில்தான் கதை பயணிக்கிறது. அவரே கூட 27 ஐ இப்போது எழுதும் போது 80 ககளுக்குச் சென்று அந்த கன்டினியூட்டி வரணும் என்று ப்ரயத்தனப்பட்டுத்தான் எழுதினார். அதற்கே பல மாதங்கள் போய்விட்டது.
கடைசி மூன்று சாப்டரும் இப்போது நடந்து முடிகிறது.
எனது விமர்சனத்தை நேரடியாகவே துளசி அறிவார். பெரும்பாலும் தேனம்மை சொன்னவை, சேட்டைக்காரர் சொன்னவை, பாலகணேஷ் சொன்னவைதான். ஸோ தனியா எழுதுவேனா என்று தெரியவில்லை ஏஞ்சல்.
என் மீது என் சிந்தனைகளின் மீது இத்தனை மதிப்பு வைச்சிருக்கீங்களேனு நினைக்கும் போது சந்தோஷமாவும் இருக்கு....பொறுப்பு இன்னும் கூடுவது போலவும் இருக்கு.....தாங்க்யு தாங்க்யு!! இத்தனை ஊக்கம் எனக்குக் கிடைக்கிறதே!!! மிக்க நன்றி பா மீண்டும்...
கீதா
மிக்க நன்றி சகோதரி ஏஞ்சல். உங்களின் ஒரு கேள்விக்கு கீதாவின் பதில் வந்துவிட்டது...
நீக்குஎனக்கு புத்தகம் வேணுமே! ஆரணிக்கு யார் கொண்டு வருவாக?!
பதிலளிநீக்குசகோதரி ராஜி உங்கள் முகவரியைக் கொடுத்தால் அனுப்பித் தருகிறோம் மிக்க நன்றி சகோதரி
நீக்குஆவியும், கார்த்திக் சரவணன் இருவரும் முழுவது படிக்க வில்லையென்றாலும் நன்றாக விமர்சனம் செய்து இருக்கிறார்கள். சகோ துளசியைப் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது ஆவியின் மூலம். நானும் சகோ துளசியின் குறும்படங்கள் ஆவி, கார்த்திக்,, பால கணேஷ் நடித்தது பார்த்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி கோமதி அரசு தங்களின் கருத்திற்கு.
நீக்குஇருவரின் கருத்தும் ரத்தினச் சுருக்கமாக இருக்கிளது எனது வாழ்த்துகளும்...
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கு
நீக்குஆஆஆஆவ்வ்வ்வ் புதுப் போஸ்ட் வந்தது தெரியாமல் நான் பழசிலயே நின்றேன்:).. தலைப்புக்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தமையால் கவனிக்கவில்லை. இப்போ என் செக் சொல்லியே வந்தேன்:)..
பதிலளிநீக்குவிமர்சனங்கள் தொடரும் என நினைக்கிறேன்... விமர்சித்தவர்களுக்கு நன்றி.
அதிரா ஆம் தலைப்பு வேறு கொடுத்திருக்கலாம் தான். நானும் கவனிக்காமல் விட்டுவிட்டேன். கீதாவிடம் சொல்லியிருக்கலாம். இனி கவனமாக இருக்கிறோம். விமர்சனங்கள் இத்துடன் முடிந்தது. மிக்க நன்றி அதிரா கருத்திற்கு
நீக்குஇன்னொன்று கீதா... எனது புதினம் என துளசி அண்ணன் சொல்லியிருக்கிறார்... இதில் புதினம் என்பது புத்தகமோ?
பதிலளிநீக்குநாங்களும் புதினம் என்று பேசுவதுண்டு... அப்படி எனில் நியூஸ் என்பதுபோல அர்த்தம்... நோமல் நியூஸ் அல்ல கொஞ்சம் கிசு கிசு... அப்படி ஸ்பெசலானதைச் சொல்வதுண்டு:).
அதிரா புதினம் என்றால் fiction/நாவல்
நீக்குகீதா
பதிலளிநீக்குஹலோ நான் இதற்கு முன்பு போட்ட கருத்து வரவில்லையே காக்கா தூக்கிட்டு போயிடுச்சா?
ஆமாம் மதுரைதமிழன் பல சமயங்களில் கருத்துகள் போவதில்லை என்று கேள்விப்படுகிறேன். அப்படியாகியிருக்கலாம்.
நீக்குவாழ்த்துகள் நண்பரே
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பர் கரந்தையார் தங்களின் வாழ்த்திற்கு
நீக்குகருத்துகளை வாசித்தேன். அருமை.
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கு
நீக்குவாழ்த்துக்கள் துளசிதரன். வாழ்த்துக்கள் கீதா நண்பரின் நூலை வெளியிட மேற்கொண்ட முயற்சிகளுக்கு. எனக்கு ஒன்று வேண்டும். எப்படி பணம் செலுத்துவது என்பதையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குசேட்டைக்காரன் அவர்களின் விமர்சனம் எனக்கு பிடித்திருந்தது. படிக்கத் தூண்டும் விமர்சனம்.
பதிலளிநீக்குகருத்துக்கள் வாசித்தேன்.புத்தகம் படிக்கத் தூண்டுகிறது.
பதிலளிநீக்குகார்த்திக் & கோவை ஆவியின் கருத்துக்கள் படித்தேன் முகநூலிலேயே. முழுசும் படிச்சுட்டு திரும்பவும் எழுதணும் , சரியா :) :) :)
பதிலளிநீக்குவாழ்த்துகள் துளசி சகோ & கீத்ஸ். அருமையான புத்தகத்தை அளித்தமைக்கும் என் முன்னுரையை வெளியிட்டமைக்கும். :)
"காலம் செய்த கோலமடி" என்ற நூலுக்கான கருத்துகள் சிறப்பாக அமைந்திருக்கிறது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குஒரு குறுங்கதை (சிறுகதை) எழுதுவதை விட ஒரு நெடுங்கதை (தொடர்கதை) எழுதுவது என்பது இலகுவானது அல்ல. அச்சிரமமான பணியை முடித்து "காலம் செய்த கோலமடி" என்ற நூலை வாசகர் கைக்குக் கொண்டுவரும் வரை பல தடைகளைக் கடந்து வர வேண்டும். அதன் பின் பலரது திறனாய்வுகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். இத்தனையும் கடந்து வெற்றி நடைபோடும் துளசிதரன் ஐயா அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.