திங்கள், 25 ஜூன், 2018

காலம் செய்த கோலமடி - கருத்துரை - சேட்டைக்காரன் திரு வேணுகோபாலன்



2018 ஜூன் 17 ஆம் தேதி ஞாயிறு என் வாழ்வில் மிக மிக முக்கியமான தினம். தருணம். எனது முதல் புதினமான காலம் செய்த கோலமடி யின் அறிமுக தினம். மதிப்புரை எழுதித் தந்தது மட்டுமின்றி, முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் எனக்கு அளித்த ஊக்கத்தை சொல்லிட வார்த்தைகள் இல்லை. புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் பெற எந்த நாளிதழ்களுக்கு அனுப்பலாம் என்பதிலிருந்து இன்றைய நிகழ்வில் இடம் பெற என்ன செய்ய வேண்டும் என்பது வரை அவ்வப்போது அழைத்து வழிநடத்திக் கொண்டே இருந்தார். அதுமட்டுமின்றி தன்னால் வர இயலாத நிலை என்பதையும் தெரிவித்து, தன் மூத்தமகன் சென்னையில் இருப்பதாகவும் அவர் தனக்குப் பதில் வருவார் என்றும் அழைத்துச் சொன்னார். அது போலவே அவரது மகன் திரு பாரத் அவர்களும் தந்தை சொல் தட்டாமல் கலந்து கொண்டு சிறப்பித்தார். முனைவர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. மிக்க மிக்க நன்றி முனைவர் அவர்களின் மகன் திரு பாரத்.

என்னால் வர இயலாத நிலையில், என் சார்பில் தோழி கீதா நிகழ்விற்கான ஏற்பாடுகளை நண்பர்களின் உதவியுடன் செய்திட அன்றைய தினம் பெரிய அளவிலான அறிமுகமாக இல்லை என்றாலும், புத்தகத்தைப் பற்றிய நண்பர்களின் கருத்துப் பரிமாற்றத்தில், இனிய சந்திப்பாக நடந்தேறியதை அறிந்தேன். திரு பாலகணேஷ் அவர்கள் புத்தகத்தை அறிமுகப்படுத்த முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் மகன் பாரத் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். 

உரையும் ஆற்றினார். அடுத்து, நண்பர் சேட்டைக்காரன் திரு வேணுகோபாலன், திரு பாலகணேஷ், திரு கோவை ஆவி, திரு கார்த்திக் சரவணன் எல்லோரும் புத்தகத்தைப் பற்றிய கருத்தை, தெரிவித்ததை கீதா தன் மொபைலில் ரெக்கார்ட் செய்து அதை வேர்ட் டாக்குமென்டாக எனக்கு அனுப்பி வைத்திட இதோ இங்கே அதனைப் பதிகிறேன். ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன். 

புதினத்திற்கு அணிந்துரை, மதிப்புரைகள் எழுதி கௌரவித்த சகோதரி, திருமதி தேனம்மை லக்ஷ்மணன் மற்றும் திரு ராயசெல்லப்பா சார் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த எனக்கு, உறுதுணையாய் நின்று அக்கதாபாத்திரங்களுக்கெல்லாம் உருவம் கொடுத்து அவர்களை நம்மிடையே வாழ வைத்திருக்கும் திருமிகு தமிழ்செல்வனுக்கும் (தமிழுக்கு) எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது.

நூலழகு செய்து, நிகழ்வில் புதினத்தைப் பற்றி கருத்துரையும் வழங்கியிருக்கும் திரு பாலகணேஷிற்கும் என் நன்றி.

புதினத்தை வெளியிட்டு உதவிய ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸிற்கும் எனது மனமார்ந்த நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்திப்பு, ஸ்வீட், காரம், காபி என முடிந்திருக்கிறது.

பதிவு பெரிதாவதால் முதலில் சேட்டைக்காரன் திரு வேணுகோபாலன் அவர்களின் கருத்தை பதிகிறேன். அடுத்து திரு பாரத், திரு பாலகணேஷ், திரு ஆவி மற்றும் திரு கார்த்திக் சரவணன் அவர்களின் கருத்தைப் பதிகிறேன்.

                                         

புதினத்தைப் பற்றி சேட்டைக்காரன் திரு வேணுகோபாலன் அவர்களின் கருத்து

இந்தப் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னன்னா ரொம்ப அளவான கதாபாத்திரங்கள். வள வளனு 10, 15 கதாபாத்திரங்கள வைச்சு அந்தக் கதாபாத்திரங்களுக்காக சம்பவங்களைக் கொண்டு வந்து பண்ணனும் அப்படின்ற முயற்சி இல்லாம ஒரு 4 கதாபாத்திரங்களை வைச்சு அவங்களுடைய பாயின்ட் ஆஃப் வ்யூல கதை போகுது. இது ரொம்பக் கஷ்டமான விஷயம். ஒருத்தருடைய பாயின்ட் ஆஃப் வியூல கதை சொல்றது ரொம்பக் கஷ்டம். ஒரு உதாரணத்துக்கு சொல்றதுனா இந்தக் கதையிலேயே வர சம்பவம்.

முதல் சாப்டர்ல கணவன் கல்லூரி ஃபங்க்க்ஷன் முடிச்சு வராரு. லதா வெளில போய்ட்டு வருகிறாள். நைட்டிக்கு மாறும் போது லதாவோட எக்ஸ்ப்ரெஷன். அவளுடைய எதிர்பார்ப்பு என்ன அப்படின்ற எக்ஸ்ப்ரெஷன். புருஷன் மட்டுமே பார்க்கக் கூடியது. அந்த இடத்துல பார்த்தீங்கனா லதாவுடைய அந்த ஃபீலிங்க மட்டும் தான் எக்ஸ்ப்ரெஸ் பண்ண முடியும். இதுவே வந்து படர்க்கைல அதாவது தேர்ட் பெர்சன்ல எழுதியிருந்தார்னா, கணவன் முன்னர் மனைவி உடை மாற்றும் போது கணவனுக்கு ஏற்படும் அந்த இயல்பான உணர்வை அதையும் வெளிப்படுத்தியிருக்கலாம். இதையும் வெளிப்படுத்தியிருக்கலாம். ஸோ அது வந்து ஒரு ஹேண்டிகேப். அந்த ஹேண்டிகேப்பையும் மீறி அந்தக் காட்சியை மிகவும் அழகா சொல்லிருப்பாரு.

நான் இவருடைய முன்னுரையிலிருந்தே ஆரம்பிக்கலாம். அதுல ஒரு விஷயம் எழுதியிருந்தார். அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஒவ்வொருவருக்கும் அவர் மட்டுமே எழுதக் கூடியமாதிரி ஒரு கதை இருக்கும். அதுதான் ஃபேக்ட். இப்ப சில விஷயங்களை அதை அனுபவிச்சவங்க எழுதும் போது அது டோட்டலி டிஃப்ரெண்டா இருக்கும். இப்ப சொல்லணும்னா ஒரு நோயாளி தன் நோயைப் பத்தி எழுதறான்னா, அவன் என்ன அனுபவிக்கிறான், மருந்து எல்லாம் சொல்லும் போது அவன் நோயாளியா இருந்தா அதுல ஒரு ஆத்தெண்டிசிட்டி இருக்கும். ஒரு டாக்டர் சொல்றார்னா அதுல ஒரு ஆத்தெண்டிசிட்டி இருக்கும். ரொம்ப ஆரோக்கியமா இருக்கறவன் ஒரு நோயாளியைப் பத்தி எழுதினா அதுல ஒரு அட்டாச்மென்ட் வரது ரொம்பக் கஷ்டம். அதை அவன் வலிய திணிக்கறவன். இதுல எதுவுமே திணிக்காம அது பாட்டுக்குப் போகுது. அது போல நிறைய இடங்கள்ல ஆசிரியர் மிக சுலபமா போயிடறாரு. கிராமப்புறத்துக்கு ஒருத்தன் அங்கிருக்கற ஒதுக்கப்பட்ட பெண்களுடன் எல்லாம் உல்லாசமா இருக்கான். அதை எல்லாம் தேவைப்பட்டா கொஞ்சம் விஸ்தரிச்சு எரோட்டிக்கா கொண்டு போயிருக்கலாம். ஆனா அப்படிக் கொண்டு போகாம டக் டக்குனு ஒரு பாராவுல முடிச்சுக் கொண்டு போயிடறாரு. அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. சேர்ந்த கூட்டாளி சரியில்லைனு சொல்ல முடியலை.

எப்பவோ படிச்ச பாலகுமாரன் கதையில் வரும் சம்பவம் ஞாபத்துக்கு வருது. அதுல எப்படினா புருஷன் வீட்டுக்கு வராரு. மனவி ஒரு விடலைப் பையனோடு இருக்கா. கதவைத் திறக்கறான் பார்த்த  உடனே அந்தப் பையன் எழுந்திருந்து போறான். அவனுடைய ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு பாலகுமாரனுடைய ரியாக்ஷனை அந்த இடத்துல பார்க்கறேன். அடப்பாவி இப்படித் தப்பு பண்ணிட்டியேடா உன் வாழ்க்கை போச்சேடா. இதுலருந்து எப்படி மீளப் போறனு அப்படினு அந்தக் கதாபாத்திரம் யோசிக்கற மாதிரி. அதுக்குப் பெயர்தான் லேட்டரல் திங்கிங்க். இத இந்தக் கதைல நான் நிறைய பார்க்கிறேன்.

சில விஷயங்கள், எனக்கு ஏற்புடையாதாக இல்லாத சில விஷயங்கள் இதுல இருக்கு. உதாரணத்திற்கு அந்த சினிமா தியேட்டர்ல நடக்கற சம்பவத்தை இந்த அளவு பெரிசு படுத்த வேண்டாம். என்னன்னா அதையும் கற்பையும் சம்பந்தமே படுத்தக் கூடாது. அது எனக்கு ரெண்டு எக்ஸ்ட்ரீமா பட்டுச்சு சினிமா தியேட்டர்ல ஒருத்தன் சில்மிஷம் பன்றதையும், கற்பையும் தொடர்புப் படுத்தக் கூடாது. இதுதான் கற்பா அப்படினா இல்லை. அப்படிப் பார்த்தா பொதுவெளில பெரிய சிட்டிஸ்ல ட்ரெயின்ல ஆணும் பெண்ணும் அருகருகில் உட்கார்வது சகஜம். இந்த ஃபிசிக்கல் விஷயங்களைக் கற்புடன் சம்பந்தப் படுத்தக் கூடாது என்பது என் எண்ணம். சேஸ்டிட்டி இஸ் நாட் அன் இஷ்யு அபௌட் டிஷ்ஷு. இது சம்திங்க் சைக்கலாஜிக்கல். இதை நாம ஃபிசிக்கல் ஆஸ்பெக்ட்டோடப் பார்க்கவே கூடாது என்பது என் தனிப்பட்டக் கருத்து.

ரீடருடைய கம்ஃப்ர்ட் என்பது முக்கியம். இப்ப சுஜாதா, பாலகுமாரன் பத்தி ஏன் பேசுறோம்னா அவங்க ரீடார்ஸுடைய கம்ஃப்ர்ட்ட அப்படியே மெயிண்டைன் பண்ணிட்டுப் போயிட்டுருப்பாங்க. எப்பவாதுதான் சுருக்குனு ஊசி குத்தறமாதிரி…ஏதாவது இருக்கும்.

அடுத்தது நான் குறைனு சொல்ல வருவது ஒரே விஷயம் வந்து ரிப்பீட் ஆகுது. பாயின்ட் ஆஃப் வியூல சொல்லும் போது ஒரே விஷயத்தை ஒரே ஆள் வந்து ரெண்டு இடத்துல சொல்லும் போது கொஞ்சம் இர்க்சம்மா இருந்துச்சு. அதையே ரெண்டு பேரா சொல்லிருந்தா…நல்லாருந்துருக்குமோனு தோணிச்சு. விருமாண்டி ஸ்டைல்ல.

மத்தபடி 85 ல இப்படி ஒரு நாவலை அவர் துணிச்சலா எழுதியிருக்கார்னா ஹேட்ஸ் ஆஃப் டு ஹிம். அந்தக் காலகட்டத்துல சுஜாதாவே கொஞ்சம் எல்லை மீறிப் போனார்னா அவரை ஓரங்கட்டறதுக்கு ஆட்கள் ரெடியாக இருந்தாங்க. அந்தக் காலகட்டத்துல எல்லாம் இடிபஸ் காம்ப்ளெக்ஸ் எல்லாம் யோசிக்க முடியாது. ஹிந்தில கூட ஒரு படம் வந்திருக்கு. இப்ப எல்லாம் இது பரவலாக இருக்கும் ஒரு விஷயம் பெர்வெர்ஷன் இல்லை. ஸ்டேட் ஆஃப் மைன்ட்.. ஸோ அந்தக் காலகட்டத்துல யோசிச்சு எழுதறது என்பது பெரிய விஷயம். அப்ப இதை எழுதியிருக்கார்னா மைன்ட் ப்ளோயிங்க்.

அந்த விதத்துல  இது ஒரு அழகான மெண்டலைசேஷன், எப்படி ஒரு டெலிக்கேட்டான ஹ்யூமன் ரிலேஷன்ஷிப்…ஒரு சின்ன வார்த்தை, ஒரு சின்ன சம்பவம், ஓவர் நைட்ல ஒருத்தருடைய வாழ்க்கையே மாத்திருது என்பது ப்யூட்டிஃபுல். என்னைப் பொருத்தவரைக்கும் அத்தியாயங்களுடைய அளவைக் கொஞ்சம் குறைச்சிருந்தா புத்தகத்தின் அளவும் கொஞ்சம் குறைஞ்சிருக்கும். இன்னும் கொஞ்சம் நறுக்குனு வந்திருக்கும். பட் ஸ்டில் வொர்த் ரீடிங்க் நாவல். வெரி குட் அட்டெம்ப்ட். ரொம்ப நல்லா பண்ணிருக்காரு. மேபி அதே ஸ்பீட்ல அப்பவே முடிச்சுருந்தார்னா இன்னும் கொஞ்சம் நல்லாருந்துருக்கும். ஸ்டில் ஐ வுட் கிவ் இட் A+.

புத்தகங்கள் கீதாவிடம் இருக்கின்றன. வேண்டுவோர் அவரைத் தொடர்பு கொள்ளலாம். மின் அஞ்சலுக்கும் தொடர்பு கொள்ளலாம். thulasithillaiakathu@gmail.com



ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ்
32/1, கங்கையம்மன் கோயில் தெரு
வடபழனி, சென்னை26


புத்தகத்தின் விலை ரூ 200/ ஆனால் தரப்படுவது ரூ 150 க்கு. புத்தகத்தின் பக்கங்கள் 303

-------துளசிதரன்


33 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஓஓஓஓஓஓ நோஓஓஓஓஒ கர்ர்ர்ர்ர்:) மீதான் 1ஸ்ட்டூஊஊஊ என ஓடி வந்தேன்:)).. கொஞ்சத்தால வந்து படிக்கிறேன் கீதா..

      நீக்கு
    2. விமர்சனம் அழகிய முறையில் சொல்லியிருக்கிறார் திரு.சேட்டைக்காரர் அவருக்கும், நூலாசிரிரியர் பாலக்காட்டு ராஜாவுக்கும் வாழ்த்துகள்.

      பிறருடைய கருத்துரையும் வரட்டும்.

      நீக்கு
    3. மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  2. wநாம் எழுதிய நூலெப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது என்பதை அறிவதிலாசிரியருக்கு அவா இருக்கும் ஆனால் அதே நேரம் பிறர் எழுதி நம்கைக்கு வந்த நூலையும்படித்துகருத்திட்டிருக்கலாம் நான் சொல்ல வந்தது துளசிக்கு புரியுமென்றுநினைக்கிறேன் எனக்கும் அந்நூலை வாசிக்க விருப்பம் என்முகவரி தெரிந்ததுதானே விருப்பத்தை பகிர்ந்துவிட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிந்தது ஜிஎம்பி ஸார். கண்டிப்பாக உங்கள் புத்தகம் பற்றி எழுதுகிறோம். உங்கள் முகவரி இருக்கும் என்று நினைக்கிறேன். பார்த்துவிட்டு இல்லை என்றால் உங்களிடம் பெற்று அனுப்பி வைக்கப்படும் சார். மிக்க நன்றி ஜிஎம்பி சார்.

      நீக்கு
  3. புத்தகத் தலைப்பே மிக அருமை.... வாழ்த்துக்கள் துளசி அண்ணன்.
    படத்தில கீதாவைக் காணமே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா.. புகைப்படங்கள் எடுத்திருப்பதே கீதாதான்!

      நீக்கு
    2. ஓ .. இருப்பினும் ஒரு செல்வி:) எடுத்துப் போட்டிருக்கலாமெல்லோ:)

      நீக்கு
    3. ஸ்ரீராம் - புகைப்படங்களைக் கூர்ந்து பார்த்தீங்களா? அதில் கீதா அ க் கா இல்லையா?

      நீக்கு
    4. மிக்க நன்றி அதிரா வாழ்த்திற்கு. ஸாரி ஞானி அதிரா! ஞானியிடமிருந்து வாழ்த்துகள்!!

      நீக்கு
    5. நெத ரைட்டோ!!! உங்கள் கீதா அ க் கா..(எப்பவும் அழுத்தி ஸவுன்ட் விட்டு கூப்பிட்டே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) இருக்கேன் அதில்.

      ஸ்ரீராம் ஒரு சில படங்கள் நான் எடுத்தேன். சிலது மகன் எடுத்தான். அவர்கள் பேசியது என் மொபைலில் ரெக்கார்ட் பண்ணியதால் அந்தப் படங்களை பாலகணேஷும் ஆவியும் எடுத்தார்கள்.

      அதிரா அதில் இருப்பது நாந்தேன்...

      கீதா

      நீக்கு
  4. பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா, கருத்திற்கு

      நீக்கு
  5. சேட்டைக்காரன் நச்சென்று சொல்லி இருக்கிறார். புத்தகம் வாங்கிப் படிப்பேன்.

    பதிலளிநீக்கு
  6. புத்தக வெளியீட்டுக்கு, விழாவுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் துளஸிஜி. விழாவைச் சிறப்பாக நடத்திய கீதாவுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும்.
      துளசி

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. ஸ்ரீராம் சிறப்பாக என்றதும் கொஞ்சம் சிரிப்பும் வெக்கமும் வந்துவிட்டது. பெரிதாக ஒன்றுமில்லையே ஸ்ரீராம். நம் நண்பர்கள் தானே...அதுவும் 5 பேர்தான்.. நாங்கள்...

      கீதா

      நீக்கு
  7. அருமையான விமர்சனம்
    வாழ்த்துக்கள் துளசி அண்ணா .
    அந்த ஸ்வீட் காரம் கண்ணிலேயே காட்டலை கர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி ஏஞ்சல் வாழ்த்துகளுக்கு,

      துளசி

      ஹா ஹா ஹா ஏஞ்சல் ஸ்வீட் காரம் படம் எடுக்காமல் விட்டுவிட்டேன். ஸாரிப்பா..

      அது வேறு ஒன்றுமில்லை. கங்கா ஸ்வீட்ஸில் வாங்கியவைதான். புதினா இலை கொஞ்சமாகப் போட்ட கடலைமாவு போண்டோ சிறிய சைசில் இருக்கும். அவ்வளவு எண்ணையே இருக்காது. கொஞ்சம் டைரையாக இருப்பது போல் இருக்கும் ஆனால் டேஸ்ட் நன்றாக இருக்கும். அப்புறம் சோன் பப்ப்டி ஹல்டிராம்....மேரி பிஸ்கட்

      அப்புறம் பீச் ரோட்டில் இருக்கும் மைலாப்பூர் கஃபேயில் காபி அம்புட்டுத்தான். படத்தில் இருக்கறவங்க மட்டும்தான்.

      நீங்கள் பார்த்திராத - புகைப்படத்தில் - ஒரே ஒருவர் அதில் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் மகன் திரு பாரத்.

      கீதா

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    தங்களது புத்தகம் பற்றிய விமர்சன கருத்துரை மிக அருமை புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடை பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். எல்லா ஏற்பாடுகளையும் முன்னின்று செயது விழா சிறக்க ஒத்துழைத்த சகோதரி கீதாவுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன் தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும்

      துளசி

      கமலாக்கா நன்னியோ நன்னி!!!

      கீதா

      நீக்கு
  9. நூல் வெளியீடு சிறப்பாக நிகழ்ந்தமைக்கு மகிழ்ச்சி..

    தங்கள் கைவண்ணம் கொண்டு -
    இன்னும் பல நூல்கள் வெளியிடப்படவேண்டும்.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  10. புத்தக வெளியீட்டு விழா சிறப்புற நடைபெற்றது அறிந்து மகிழ்ந்தேன் நண்பரே
    வாழ்த்துகள்
    புத்தகம் வேண்டும் என்று சகோதரியாரிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் கரந்தையார் கருத்திற்கு.

      துளசி

      சகோ உங்களுக்குப் புத்தகம் அனுப்பி வைக்கிறேன். மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  11. முகநூலில் படித்து விட்டேன்.
    நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது அறிந்து மகிழ்ச்சி.
    படங்கள் எடுத்த கீதாவுக்கு பாராட்டுக்கள்.
    அவர்கள் பேச்சையும் வீடியோ எடுத்து இங்கு பகிர உதவி இருக்கிறார்.
    உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் துளசிதரன்.
    சேட்டைக்காரன் அவர்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி சகோ கருத்திற்கும் வாழ்த்திற்கும்

      நீக்கு
  12. புத்தக வெளியீடு நன்றாக நடைபெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி.... வாழ்த்துகள் துளசி சகோ.
    சிறப்பாக நடக்க ஏற்பாடுகள் செய்து, புகைப்படங்களை பகிர்ந்த கீதாவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி உமையாள் காயத்ரி கருத்திற்கும் வாழ்த்திற்கும்

      நீக்கு
  13. நான் 'அனானிமஸ்' ஆக (முகம் தெரியாமல்) அங்கு வரணும்னு நினைத்தேன். அதற்கு முந்தைய நாளில் அந்த பீச்சுக்கு நடந்துவந்திருந்தேன் (கிரிக்கெட் கிரவுண்டில், மழை காரணமாக நடைக்கு அனுமதிக்காததன் காரணமாக). வர விட்டுப்போய்விட்டது (ஏர்டெல் இன்ஸ்டலேஷன் முடிக்கும்போது 6 மணி)

    நேரம் வாய்க்கும்போது புத்தகத்தை வாங்கிப் படிக்கிறேன் (எந்த மாதிரி நாவல் என்றெல்லாம் அறிந்துகொண்டு)

    கீதா ரங்கனுக்குப் பாராட்டுகள் (துளசிதரன் சார் சார்பாக இதனைச் செய்துமுடித்ததற்கு). செல்லப்பா சாரைக் காணோமே, வருவேன் என்று சொல்லியிருந்ததாக ஞாபகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லை தமிழன் கருத்திற்கு. செல்லப்பா சாருக்கு கொஞ்சம் முடியவில்லை அன்று வருவதற்கு என்று அறிந்தேன்.

      நீங்கள் வர நினைத்தற்கு மிக்க நன்றி ஆனால் என்னால் வர இயலவில்லை.

      மிக்க நன்றி நெல்லை

      நெல்லை வந்திருக்கலாமே. நீங்க அனானிமஸா வந்திருந்தாலும் நான் கண்டு பிடித்திருப்பேனே....செல்லப்பா சார் ரொம்ப தூரமான இடத்தில் இருக்கார் சார்ட்டர் பஸ்தான் அவர் இருக்கும் இடத்திற்கு. அவருக்கு அன்று கொஞ்சம் முடியவில்லை என்பதால் வரவில்லை. அவர் ஒரு வேளை அவர் மகள் வீட்டிற்கு வந்திருப்பாரோ அப்படி என்றால் வந்துவிடலாம் ஈசிதான் என்று நினைத்தேன்.

      எனக்கு எதற்கு பாராட்டுகள் நெல்லை பெரிய விழா எல்லாம் அல்ல....கருத்துரைதான்...ஒரு அறிமுக சந்திப்பு போலத்தான் அதுவும் விரல்விட்டு எண்ணும் அளவுதான்...மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு