சனி, 17 செப்டம்பர், 2016

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு






கார்மேகம் - படத்தின் ஒரு காட்சி 

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
                                           வாரி வளங்குன்றிக் கால்.

-------கீதா

காணொளி -  யுட்யூபிலிருந்து


19 கருத்துகள்:

  1. இதே மம்முட்டி கேரள மக்களிடம் இதனைப் பேசுவாரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே கேள்வி அண்மையில் இந்தப் படத்தைப் பார்த்தபொழுது எனக்கும் தோன்றியது.

      நீக்கு
  2. நல்ல கேள்வி சகோ! நான் இங்கு பகிர்ந்தமைக்குக் காரணம் அதில் வரும் கருத்திற்காகத்தான் சகோ! யார் பேசுகிறார் என்றில்லை சகோ.

    மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு.

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு காணொளி. இதற்கு முன் பார்த்ததில்லை - இப்படி ஒரு படம் வந்ததும் தெரியாது! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல படம் வெங்கட்ஜி. ஆனால் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை எனவே அவ்வளவாக அறியப்பட வில்லை. நல்ல படங்கள் ஓடாதே ஜி.

      மிக்க நன்றி ஜி

      நீக்கு
  4. நல்ல கருத்து...
    இது சினிமாவுக்கானது என்றாலும் தமிழர்களுக்காக இப்போதும் பேசும் மம்முட்டியைப் பாராட்டலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி குமார். இந்தக் கருத்து மிகவும் பிடித்தது. சினிமா என்றாலும் கருத்து அருமையாக இருந்ததால் பகிர்வு. இப்படியும் நடந்திடாதோ என்ற ஒரு ஆதங்கம்!!

      நீக்கு
  5. சினிமாவில் எதற்கும் வழி கிடைத்து விடும் ஆனால் நடைமுறையில் சாத்தியமா. ஒரு வசனம் ரசித்தேன் வெள்ளம் வரும்போது அந்த நீரை ஏற்காவிட்டால்..... வைத்துக் கொள்ளவா முடியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜி எம் பி சார்! இந்தக் கருத்து மிக அருமையான கருத்து சார். நடைமுறையில் சாத்தியமா என்றால் சாத்தியம்தான். ஆனால் அரசியல் விளையாடுவதால்...சாத்தியமற்றும் போகிறது. ஆனால் இப்படி ஒரு கருத்தைச் சொல்லும் அந்த ஷாட் வைத்த இயக்குநர் ராஜ்குமார் அவர்களுக்குப் பாராட்டுகள். இத்தனைக்கும் இந்தப் படம் எடுக்கப்பட்ட வருடம் 2002. தற்போது 2016. 14 வருடங்களிலும் எந்த மாற்றமும் நிகழவில்லை....

      நீக்கு
  6. நல்ல பகிர்வு. காவேரிப் பிரச்சனையில் சம்பந்தமில்லாது அரசியல்வாதிகள் தலையிடுவதால்தான் பிரச்சனை எப்போதும் தீராத நிலைக்குப் போய்க்கொண்டு இருக்கிறது. நமக்கு எது நியாயம் என்று படுகிறதோ அது அவர்களுக்கு அநியாயமாகப் படுகிறது. அவர்களின் நியாயமும் நமக்குப் புரிவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லைத் தமிழன். அரசியல்தான் காரணம்...

      நீக்கு
  7. இது கடந்த ஒருமாதமாக ஓடுகிறதே! இதே தான் முல்லைப் பெரியாறுக்கும், சிறுவாணிக்கும் சொல்லணும்! :)

    பதிலளிநீக்கு

  8. இன்றும் இந்நிலை தொடர்வதே வேதனை அளிக்கிறது.முல்லையில் ஆரம்பித்து காவேரி வரை நீடிக்கிறது ஐயா.

    இக்காணொலி நேரம் பயனுள்ளதாகவும் சிந்திக்கவும் வைத்தது ..
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  9. என் இல்லாள் மூலம் அறிந்து இந்த காணொளியை முன்பே நான் பார்த்தேன் ,அருமையான் கருத்தைக் கண்டு அசந்து நின்றேன் ,நீங்கள் பகிர்ந்து விட்டீர்கள் ,வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  10. நேற்று இந்த பதிவுக்கு வந்தும் காணொளியைக் காண இயலவில்லை..

    காணொளியைக் கண்டு மனம் நெகிழ்கின்றது..
    தக்க சமயத்தில் வெளியிடப்பட்ட நல்ல செய்தி..

    நல்லது நடக்கட்டும்.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  11. காவிரிப் பிரச்னையின் போது சில தமிழ் சானல்களில் இதை திரும்பத்திரும்பப் போட்டார்கள். (கர்நாடக அரசியல்வாதிகளுக்கு தமிழ் தெரியாதே என்று நினைத்துக்கொண்டேன்)

    பதிலளிநீக்கு