திங்கள், 12 செப்டம்பர், 2016

பின்னூட்டங்களுக்குப் பதில்கள் - 2

கடந்த எனது பதிவுகளுக்கு வந்த ஒரு சில கருத்துகளுக்கு என் மனதில் எழுந்த கருத்து

இன்று 12-9-2016. உலகெங்கும் இன்று 12-9-2016 தான் ஆனால் 500 வருடங்களுக்கு முன் உலகின் பல பாகங்களில், ஐரோப்பாவில் இருந்தது போல் 12-9-1516 என்பது இருந்ததா? அப்படியானால் 12-9-1016?...12-9-516?...ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தற்குப் பிறகு, அறிவியலின் அதிவேக முன்னேற்றத்திற்குப் பிறகு வேகம் கூடியதால் தூரம் குறைந்த பிறகு உலகெங்கும் வந்த மாற்றம் கொண்டு வந்ததுதான் ஆங்கில வருடம் என்று அழைக்கப்படும் க்ரிக்கோரியன் காலெண்டர். ஆனால், அதற்கு முன் இமயம் முதல் குமரி வரை பரந்து கிடந்த இன்றைய இந்தியாவில் வழக்கில் இருந்தவை சக வருடமும், கொல்ல வருடமும், ஹஜிரா வருடமும் தான்.

சக வருடம் 78 வருடமும், ஹஜிரா வருடம் 579 வருடமும், கொல்ல வருடம் 824 வருடமும் ஆங்கில வருடத்திற்குப் பின்னால் நிற்பவை. அவைகளுக்கும் ஆங்கில வருடத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கணக்கிட்டுத்தான் நாம் இங்கு நம் நாட்டில் நடந்த பல சம்பவங்களின் காலகட்டத்தை கணக்கிட்டுச் சொல்லுகிறோம். இப்படிச் சொல்வதில் நமக்குத் துணையாவது கல்வெட்டுக்களும், ஓலைச் சுவடிகளும் செப்பேடுகளும், தலைமுறை, தலைமுறையாய் கைமாற்றம் செய்யப்படும் கதைகள் மற்றும் பாடல்களும் தான். இங்கெல்லாம் அதிகாரமுள்ளவர்கள் தங்களது விறுப்பு வெறுப்புகளை வேரூன்றச் செய்யத் தேவையான இடைசெறுகல்களைச் சேர்க்கத் தயங்கி இருக்க மாட்டார்கள்.

இடைச் செருகல்கள் எப்போதும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. சமீபத்தில் “கேசரி” எனும் பத்திரிகையின் ஓணம் வெளியீட்டில், கே உன்னிக் கிருஷ்ணன் நம்பூதிரி என்பவர், ஓணம் உண்மையிலேயே முன்பு வாமன அவதார ஜெயந்தியாகத்தான் கொண்டாடப்பட்டிருந்ததாகச் சொல்கிறார். ஸ்ரீகண்டேஸ்வரத்தின் “ஸத்த தாராவெளியிலும்”, வெட்டம் மானியின் “புராண நிகண்டு” விலும் பள்ளிப் பாடப்புத்தகங்களிலும் மட்டும்தான் வாமனன் மூன்றடி மண் தானம் கேட்டுச் சதி செய்து மாவேலி மன்னரை பாதாளத்திற்கு அனுப்பினார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதெல்லாம் பொய் என்கிறார். பரசுராம அவதாரத்திற்கு முன்பே தோன்றிய அவதாரம் வாமனன் என்பதால் (ராமவதாரமும், பரசுராமவதாரமும் ஒரே காலகட்டத்தில் இருந்திருக்கிறது!?) மஹாபலி கேரள மன்னரே அல்ல என்கிறார். மஹாபலி குஜராத்தைச் சேர்ந்தவராம். இப்படி, சைவர்களும், வைணவர்களும் சொல்லும் கதைகள் முரண்பாடு உள்ளவைகளாகவே இருக்கிறது. ஆனால், இதைச் சொல்பவர் ஒரு நம்பூதிரி என்பதாலும், இது பிரசுரமானது “கேசரி” யிலானதாலும் இது பல முறை விவாதிக்கப்பட்டு உண்மையாக்கப்பட வாய்ப்பு அதிகம்.

அதனால் 17 ஆம் நூற்றாண்டிற்கு முன் நடந்த எந்த ஒரு சம்பவத்தையும் (காகிதமும், அச்சடிக்கும் எந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டு அச்சடித்தல் சுலபமான பிறகு) அது உண்மையிலேயே நடந்ததற்கு 824 வருடங்களுக்கு முன்பு வரை நடந்ததாகச் சொல்லலாம். நிரூபிக்கலாம். அதனால், 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பது 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒன்றாக வாய்ப்பு அதிகம். அதனால்தான் ராமானுஜரின் காலகட்டம் 10 அல்லது 11 ஆம் நூற்றாண்டுதான் என்பதையும், சங்கராச்சாரியார் 8 ஆம் நூற்றாண்டும், நாதமுனி 9 ஆம் நூற்றாண்டும், கம்பன் 12 ஆம் நூற்றாண்டும் வாழ்ந்தவர்கள் என்று சொல்லப்படுவதையும் நாம் சந்தேகிக்க வேண்டியதாகிறது. இங்கு 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மத்வாச்சாரியாருக்குப் பின் வந்த ராமானுஜர் எப்படிப் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆவார். அதே போல் 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனியின் முன்னிலையில் எப்படி 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பர் தன் இராமாயணத்தை எழுதி ஸ்ரீரங்கத்தில் வெளியிட்டிருக்க முடியும்?

இப்படி முரண்பாடுள்ள ஏராளமான இடைச்செருகல்களும், கட்டுக்கதைகளும் பலமுறை பலர் சொல்லி உண்மையாக்கும் முயற்சிகள் நடந்துகொண்டேதான் இருக்கிறது. சமீபகாலத்தில் ஓணப்பண்டிகையை 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த “மாங்குடி மருதனார்” தமிழகத்தில் கொண்டாடப்பட்டிருந்ததாகத் தன் பாடலில் குறிப்பிட்டிருப்பதாக ஒரு செய்தி.. 15 ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்படுவதாகச் சொல்லப்படும் ஓணப்பண்டிகை எவ்வளவு எளிதாக 1000 ஆண்டுகளுக்கு அப்பால் பறித்து நடப்பட்டிருக்கிறது!! அசுரர்கள் எவ்வளவு நல்லவர்கள் ஆனாலும் நாடாளக் கூடாது என்பதை வலியுறுத்துவதால் இதை இனி பல முறை பலர் சொல்லி உண்மையாக்கிவிடுவார்கள். சந்தேகமே வேண்டாம்.

ஆனால், அதே சமயத்தில் கோமதி நதிக்கரையில் உள்ள நீம்சாரில் 14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் எங்கும் உள்ள ஓலைச் சுவடிகள், நூல்கள் எல்லாம் சம்ஸ்க்ருத மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது என்று சொல்லப்படுவதை நம்மால் நம்பாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் அதற்குக் காரணமான பல சம்பவங்கள் இங்கு நிகழ்ந்திருக்கின்றன. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ப்ருத்விராஜ் சௌகானின் தோல்விக்குப் பின் இஸ்லாமியர்களின் ஆதிக்கம் வட இந்தியாவில் தொடங்கியது. மதுரை வரை பரவியிருந்த அவ்வாதிக்கம் முடிவடைந்ததோ 1398ல். அதன் பின் முகலாயர்களின் ஆட்சி 1526 முதல் 1858 வரை நீடித்தது. அதன் பின் ஆங்கிலேயர்களின் ஆட்சி. இதனிடையே 1336 முதல் 1646 வரையான விஜயநகர பேரரசு காலக்கட்டத்தில் நடந்த பல சம்பவங்கள்தான் இன்றைய நிலையில் உள்ள இந்து மதமும், வர்ணங்களும், சாதிகளும் தோன்றக் காரணம் என்று நம்புபவர்களில் நானும் ஒருவன். அப்படி அதுவரை இல்லாதிருந்தவை எல்லாம் ஏன் 14, 15, 16 ஆம் நூற்றாண்டுகளில், விஜயநகர மன்னர்களின் காலத்தில் தோன்ற வேண்டும்? அதற்குக் காரணம் முகமது பின்துக்ளக்!? அவர் தன் தலைநகரை மாற்றியதையும், தோலாலான பணத்தை வெளியிட்டதைப் பற்றித்தான் நாம் அதிகமாகப் பேசிக் கேட்டிருக்கிறோம். ஆனால், அவற்றை எல்லாம் விட அவர் செய்த ஒரு காரியம் தான் அவரது வீழ்ச்சிக்கும், இந்தியாவில் இப்போது நாம் காணும், நம்மை வேதனைக்குள்ளாக்கும் பல பிரச்சனைகளுக்கும் மூல காரணம்.

14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் பயணித்தவர் மொரோக்கோவைச் சேர்ந்த இபிb)ன் (B)பட்டூட்டா (Ibin Battuta). பிரபலாமான ரிஹ்லா (Rihla) எனும் தன் பயணக் கதையை எழுதிய இபின் பட்டுட்டாவை 6 ஆண்டு காலம் துக்ளக் தன் அவையின் நீதிபதியாக நியமித்திருந்தார். ஆனால், இஸ்லாமிய மதத்தவரல்லாத இந்திய மக்களிடையே இஸ்லாமிய மதச் சட்டங்களை நிலை நாட்ட எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால், அந்த ஆறு வருடங்கள் அன்றைய இமயம் முதல் குமரி வரை வாழ்ந்தவரிடையே ஏற்படுத்திய ஐயம், பயம் சன்னியாசிகளையும் விட்டுவைக்கவில்லை. அப்படி இஸ்லாமிலிருந்து தங்கள் மத நம்பிக்கை மற்றும் கொள்கைகளை, கலாச்சாரத்தை வாழ்வு நெறியைக் காப்பாற்ற முற்றும் துறந்த முனிவர்களே முன்வர வேண்டியதானது. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரிஷ்ய ச்ருங்க முனியின் சீடர்கள் 1336 முதல் ஹரிஹரா மற்றும் புக்காவை வழி நடத்தி இஸ்லாமிய மத ஆதிக்கமுள்ள அரசின் பிடியிலிருந்து விடுவிக்க எடுக்க்ப்பட்ட முயற்சிகள் 2 நூற்றாண்டுகள் நீடித்து நின்றது. விஜயநகர மன்னர்கள் ஏறத்தாழ 200 ஆண்டுகள் இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டார்கள். இங்குதான் கோவில் பராமரிப்பு, பூசைகள் செய்ய மத்வாச்சாரியார் பூணூலை இட்டுச் சிலரை அப்பணியை ஏற்பித்திருக்கிறார்.  அதிகாரம் மது போன்றது. அது அதன் வேலையைச் செய்யத் தொடங்கியது. இஸ்லாமியர்களுக்கு இறைவன் அருளிய நூலான குரானுக்கு இணையான நம் முன்னோர்கள் அருளிய அருள் வாக்கை எல்லாம் சம்ஸ்க்ருத மொழியில் மீம்சாரில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அங்குதான் சாதி, வர்ணம் பேசும் மனுஸ்மிருதி போன்றவை திருகப்பட்டிருக்கின்றன. (அம்பேத்கர் மனுஸ்மிருதியை மட்டும் தான் தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறார்!) விஜயநகர மன்னர்கள் காலப்போக்கில் தங்களது வைணவ மதத்தை நிலைநாட்ட திருப்பதி, உடுப்பி, குருவாயூர் போன்ற இடங்களில் இருந்த முருகன் கோயில்களை வெங்கடேஸ்வர மற்றும் கிருஷ்ண கோயில்களாக மாற்றியிருக்கிறார்கள். (அதனால்தான் 2 ஆம் வெங்கிடா குழந்தை பாக்கியம் இன்றி மனம் வருந்தி இறக்க நேர்ந்தது என்கிறார்கள்!!!!சைவர்கள்!!!) சைவர்களான நாயக்க மன்னர்கள் அவர்களை எதிர்த்ததால் மட்டும்தான் இப்போதைய தமிழகத்தில் சைவக் கோயில்களும், சைவ பிராமணர்களும் இப்போதும் நிலைத்திருக்கக் காரணம் என்றும் சொல்லபடுகிறது.

ஆனால் மலைநாடான கேரளத்தில் மஹாபலியைத் தந்திரத்தால் வென்ற வாமனன் அவரது நாட்டைக் கைப்பற்றி வைணவம் வளர்க்கத் தொடங்கியது 15 ஆம் நூற்றாண்டின் பின் பகுதியில்தான் என்று சொல்லப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் மார்த்தாண்ட வர்மா அரியணை ஏறிய போதுதான், மீம்சார் கோயிலில் நடந்தது போல் மலைநாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் சேகரித்த ஓலைச் சுவடிகளைத் தீக்கிரையாக்கி “குளியும் தேவாரமுமாக”வாழ்ந்த மலைநாட்டு மக்களுக்கு, “தேவாரம் என்றால் அது நெற்றியில் இடும் ஹரி சந்தனம்” என்று சொல்லும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறார்.

உண்மையை எவ்வளவு ஆழத்தில் புதைத்தாலும் அது வேரிட்டுத் தளிர்க்கும் தானே. அதற்கு நல்ல ஒரு உதாரணம் தான் திருவனந்தபுரம் பத்மநாபர் கோயிலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தப் பொக்கிஷம். தலைமுறைகள் பல கடந்தாலும் சுந்தர்ராஜனின் உருவில் அந்த உண்மை புலனானது. (கோயிலில் உள்ள பொக்கிஷம் கொள்ளையடிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர் சுந்தர்ராஜன்.) மார்த்தாண்டவர்மாவின் ஆட்சியின் போது திருப்பதி கோயிலுக்குக் கொண்டு போவதற்காக மலைநாட்டிலுள்ள கோயில்கள் மற்றும் சிற்றரசர்களிடமிருந்து கவர்ந்தவைகளை திப்புவிற்கும் ஆங்கிலேயர்களுக்கும் பயந்துதான் அங்கிருந்து அப்பொக்கிஷத்தை அகற்றவில்லை. நடந்து முடிந்த ஏராளமான சம்பவங்களும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும்தான் இப்போதைய இந்த நாட்களுக்குக் காரணம். 

இனி நடக்கப் போவதெல்லாம் அதன் தொடர்ச்சியாகத்தான் இருக்கும். சாதிகளைச் சட்டம் இயற்றியும், அவற்றிற்கு எதிராகப் பேசியும் எழுதியும் ஒழிக்க முடியாது. ஆனால், சாதி காலப்போக்கில் ஒழிந்துவிடும். பணம் இப்போதே சாதியை ஓரளவு ஒழிப்பதில் வெற்றி கண்டிருக்கிறது. இனி பணத்தின் அடிப்படையில் மனிதர்களிடையே வர்ணமும், சாதியும், குலமும் தோன்றும். அப்போது முன்பெல்லாம் பணத்தின் அடிப்படையில் அல்ல பரம்பரையும், இனத்தின், மொழியின், நிறத்தின் அடிப்படையில் மனிதர்கள் வேறுபடுத்தப்பட்டிருந்தார்கள் என்று சொல்ல சிலர் வருவார்கள். இந்தக் காலக்கட்டத்திற்கு ஒவ்வாதவற்றைச் சொல்லும் இவர்கள் பைத்தியக்காரர்களே என்று அப்படிச் சொல்பவர்களை எள்ளி நடையாடிச் செல்வார்கள் மற்றவர்கள். வாழ்க்கை முன்னோக்கித்தான் போக வேண்டும். இருப்பினும், இடையிடையே பின்னால் திரும்பிப் பார்த்துப் போக வேண்டியதும் அவசியமே.


30 கருத்துகள்:

  1. பின்னால் திரும்பிப் பார்ப்பது அவசியமே. இருந்தாலும் சில நிகழ்வுகள் பொருத்தமின்றி நடப்பதையும், அதற்கான ஒரு நியாயப்படுத்துதலையும் (substantiation) காணமுடிகிறது. சமூக நிலையில் பல சூழல்களில் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ளும் வேலையும் நடந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. பெரிய கோயிலில் உள்ள பிரகதீஸ்வரரை மறந்துவிட்டு, வராகி அம்மனுக்கு விளம்பரம். ஏனென்றால் தற்போதைக்கு பிழைப்பு நடக்கவேண்டுமல்லவா? பல கோயில்களில் தேவாரப்பாடல் பெற்ற மூலவரை மறந்துவிட்டு இவர்களாகவே வைத்துக்கொண்ட சிற்பங்களையும், திருவுருவங்களையும் வைத்து வழிபட ஆரம்பித்துவிடுகின்றார்கள். இதனுடைய வீச்சு இன்னும் எந்த அளவு செல்லுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா. வேதனையானத் தகவல்கள். வருகைக்கும் விரிவான தகவலுடன் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  2. மிகவும் கனமான பதிவு. இந்த விஷயத்தில் ஏகப்பட்ட சரித்திர குழப்பங்கள் இருக்கின்றன. எந்தவொரு முடிவுக்கும் அசைக்க முடியாத உறுதியுடன் வரமுடியவில்லை. விஜயநகர பேரரசில் சாதியம் செழித்தோங்கியது என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை. மதுரையில் சாதிக்கொரு கிணறு, சாதிக்கொரு தெரு என்று உருவானதெல்லாம் நாயக்கர்கள் ஆட்சி காலத்தில்தான். சிக்கலான ஒரு வரலாற்றுப் பின்னணியை பதிவாக தந்த தங்களுக்கு பாராட்டுக்கள்.
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! உண்மைதான் இந்தக் குழப்பங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நீங்கள் சொல்லுவது சரியே...அழகான கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  3. //சாதிகளைச் சட்டம் இயற்றியும், அவற்றிற்கு எதிராகப் பேசியும் எழுதியும் ஒழிக்க முடியாது. ஆனால், சாதி காலப்போக்கில் ஒழிந்துவிடும். பணம் இப்போதே சாதியை ஓரளவு ஒழிப்பதில் வெற்றி கண்டிருக்கிறது. இனி பணத்தின் அடிப்படையில் மனிதர்களிடையே வர்ணமும், சாதியும், குலமும் தோன்றும்.//

    நிறைய விஷயங்களைப் பேசும் பகிர்வு... சாதிகள் ஒழியும் என்ற நம்பிக்கை இல்லை துளசி சார்... ஒரு பத்து வருடத்துக்கு முன் சாதி குறித்தான அதீத கருத்துக்கள் இல்லாதுதான் இருந்தது... இன்று வளரும் தலைமுறை வைக்கும் பேனர்களிலும் ஓட்டும் வண்டிகளிலும் பொது இணையங்களிலும் சாதிதான் தலைவிரித்து ஆடுகிறது.

    ஒரு வெற்றி, ஒரு கொலை என எதிலும் நாம் முன்னர் இந்தியராய்த்தான் இருந்தோம். ஆனால் இன்று அப்படியல்ல வெற்றி பெற்றானா(ளா) உடனே என்ன சாதியின்னு பார்... கொலையா கொன்றவன் இந்தோ, முஸ்லீமோ, கிறிஸ்தவனோ விட்டுத்தள்ளு செத்தவன் யாரு... அவன் என்ன சாதி... குறிப்பாக தலித்தான்னு பாரு... ஊடகம் கூட தலித் கொலை... அப்படித்தான் பறை சாற்றுகிறது... இதெல்லாம் ஒழியும் என்ற நம்பிக்கை இல்லை.

    ஒருவேளை சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் தலைவர்கள் ஒழிந்தால்... சாதியை வைத்து படமெடுக்கும் இயக்குநர்கள் ஒழிந்தால்... சாதிகள் அழியலாம்.

    சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியைக் கூட சாதி வட்டத்துக்குள் கொண்டு வந்து பேனர் அடித்துவிட்டார்கள்.

    இந்தியராய் மக்களுக்கு பாடுபட்ட பசும்பொன் தேவர், வீரன் அழகுமுத்து, மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், காமராஜர், அண்ணா, கப்பலோட்டிய தமிழன் இன்னும் இன்னுமாய் எல்லோரையும் சாதிக்குள் வைத்து விழா எடுத்து பிரச்சினைகளை உருவாக்கி குரூர சந்தோஷம் கொள்வதில்தான் நம் மனம் இப்போது லயித்து நிற்கிறது.

    நீங்கள் சொன்னது போல் சாதி ஒழிந்தால் சந்தோஷமே...

    நல்ல பகிர்வு துளசி சார்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் விரிவான ஆழமான கருத்துகளுடன் ஆன பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி குமார். எதனால் இப்படிச் சாதி தலைவிரித்தாடுகிறது என்று தெரியவில்லை. அரசியல்வாதிகள் ஆதாயம் காண குளிர்காயத்தான்...வேதனையான தகவல்கள்

      நீக்கு
  4. நிறைந்த செய்திகளைச் சொல்கின்றது - பதிவு..

    >>> வாழ்க்கை முன்னோக்கித்தான் போக வேண்டும். இருப்பினும், இடையிடையே பின்னால் திரும்பிப் பார்த்துப் போக வேண்டியதும் அவசியமே..<<<

    மனதில் பதித்துக் கொள்ளவேண்டியது அவசியம்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரைசெல்வராஉ ஐயா தங்கள்ின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  5. பதில்கள்
    1. மிக்க நன்றி நாகேந்திர பாரதி நண்பரே வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  6. சாதி காலப்போக்கில் ஒழிந்துவிடும். பணம் இப்போதே சாதியை ஓரளவு ஒழிப்பதில் வெற்றி கண்டிருக்கிறது. இனி பணத்தின் அடிப்படையில் மனிதர்களிடையே வர்ணமும், சாதியும், குலமும் தோன்றும். //

    நன்றாக சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி மேடம் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

      நீக்கு
  7. கனமான செய்திகள். நிறைய வரலாற்றுக் குழப்பங்கள் இடுகையில் காண்கிறேன். நாதமுனி 9ம் நூற்றாண்டு என்றால், அவர் பேரன் ஆளவந்தார் 9-10 நூற்றாண்டு. அவர் காலத்தில் ராமானுஜர் இருந்தார். இளவயது ராமானுஜரை ஆளவந்தார் பார்த்திருக்கிறார். அவர் மறைந்த அன்று அவரைத் தொடர்ந்து வைணவத்தின் வளர்ச்சிக்கு ராமானுஜர் அவரின் 120வது வயது வரை பாடுபடுகிறார்.

    நாதமுனிக்கும் முந்தைய காலம் ஆழ்வார்கள் காலம். 8ம் நூற்றாண்டுக்கு முன்பே ஆழ்வார்கள் வைணவ திவ்யப்பிரபந்தங்களை இயற்றினர். அதில் இருவர் மலைநாடான கேரளத்தைச் சேர்ந்தவர்கள். திருமங்கை ஆழ்வார், சேர்ர் மன்னர் குலத்தைச்சார்ந்த குலசேகர ஆழ்வார். இவர்கள் கேரளத்தில் உள்ள வைணவத் திருப்பதிகளைப் பாடியுள்ளனர். (அனந்தபுரம் பத்மநாபரையும்) வைணவம் 9ம் நூற்றாண்டுக்கும் நிச்சயமாக முந்தையது.

    குலசேகர ஆழ்வார் (இரண்டாம் சேரமான் பெருமாள் காலம் கிபிட் 796) அரசபதவியை விட்டு விலகித் தன் மகனிடம் அதாவது மார்த்தாண்டன், பொறுப்பை ஒப்படைத்துவிடுகிறார். 796ல். இரண்டாம் சேரமான் பெருமாளின் தாயாதியான பாஸ்கர ரவிவர்மன் பௌத்தர், யூதர், முகமதியர், கிறித்துவர் துணையுடன் ஆட்சியைக் கைப்பற்றி மூன்றாம் சேரமான் பெருமானாக 798ல் ஆட்சிக்கு வந்தார். குலசேகர ஆழ்வார் பாண்டியரோடு பொருது வேணாற்றைச் சேர்ரின் ஆளுகைக்குக் கொண்டுவந்திருந்தார். மூன்றாம் குலசேகரன் ஆட்சிக்கு வந்ததும் குலசேகரனின் மகனைப் பகைத்துக்கொள்ளாமல் தனக்குக்கீழே வேணாட்டு மன்னராக ஆளச் செய்கிறார். இந்த மூன்றாம் சேரமான்தான் சேரநாட்டைப் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்து கிபி 834ல் பலருக்குப் பகிர்ந்தளித்துவிட்டு (வேணாடும் ஒட்டநாடும் - அதாவது திருவாங்கூர்- மார்த்தாண்டவர்மன் அப்புறம் அவர் பரம்பரை) ஆட்சியை வெறுத்து இஸ்லாமிய மத்த்தைத் தழுவி மெக்கா சென்று 838ல் ஜாஃபர் என்ற இடத்தில் இறந்தார்.

    இந்த வரலாறு சுலபமாகச் சரிபார்க்கக்கூடியது. இது வைணவம் கிபி 4ம் நூற்றாண்டுக்கும் முந்தையது என்பதைத் தெளிவாகச் சொல்லும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லைத் தமிழன். நீங்கள் சொல்லியிருக்கும் விரிவான தகவல்களைக் குறித்துக் கொண்டுவிட்டேன்.

      நீக்கு
  8. நல்ல அலசல் முயற்சி. எனக்கு என்னவோ வாய்வழியே சொல்லப்படும் கதைகளே அதிகம் நம்பப் படுகின்றன. நம்பக் கூடாதவை. அச்சுமுறை தோன்றும் முன் நிகழ்ந்த பல செய்திகள்பலவும் இடைச் செருகல்களே இதை வலி யுறுத்ததான் நாம் புதியதாக ஏதாவதை சிந்திக்க நாம் ஏற்கனவே சேமித்திருக்கும் செய்திகளை மறக்கக் கற்க வேண்டும் என்று எழுதி இருந்தேன் 1960 களில் இருந்ததை விட சாதீய நிலைப்பாடுகள் அதிகரித்து விட்டன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சார். மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  9. பல வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய சற்று ஆழ்ந்து வாசிக்க வேண்டிய பதிவு. சாதிகள் பற்றி கருத்துக்கள் என்ன சொன்னாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. போதக் குறைக்கு சாதி வீரம் பேசும் தமிழ் சினிமாக்களும் நம்மை இன்னும் அதே சகதியில் தள்ளுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி காரிகன் தங்களின் கருத்திற்கு..ஆமாம் உண்மைதான்

      நீக்கு
  10. கால கட்டங்களை பற்றி பொறுமையான, திறமையான ஆராய்ச்சி. தசாவதாரங்களில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட இரண்டு அவதாரங்கள் ராமனும் பரசுராமனும்தான். மற்ற காலகட்ட விவரங்கள் எல்லாம் என் அறிவுக்கு அப்பாற்பட்டது! சாதிகளை மக்கள் மனதிலிருந்து எக்காலத்திலும் ஒழிக்க முடியாது என்பது சரிதான். அரசியல்வாதிகள் விடமாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம். இன்னும் இரு அவதாரங்கள் இருக்கிறதே. பலராமர், கிருஷ்ணர். என் அறிவிற்கு எட்டியது என்பதெல்லாம் இல்லை நண்பரே. நானும் சாதாரணமானவன் தான்.

      அரசியல்வியாதிகள் இருக்கும் வரை ஒழியாது என்பது ஒரு புறம் மக்கள் மனதிலும் இப்போது கூடியுள்ளது போல் தோன்றுகிறது. அதுவும் இந்த ஹைடெக் யுகத்தில்.

      நன்றி கருத்திற்கு

      நீக்கு
  11. கனமான விஷயத்தை
    அடியாழம்வரைப் போய்
    விரிவாகப் பதிந்த விதம் அருமை
    பதிவு உலகில் இதுபோன்ற கட்டுரைகள்
    நிச்சயம் அபூர்வமே
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. கிறுகிறுன்னு வருது..., அப்படியே கை தாங்கலா புடிங்க...!!

    பதிலளிநீக்கு
  13. நிரம்பத் தகவல்கள் கொண்ட பதிவு! ஆனால், துரித நடையில் எழுதப்பட்ட தோற்றத்தைத் தருவதால், ஏதோ ஒரு வரித் தகவல்களை வரிசையாகப் படித்தது போல இருக்கிறது. இருந்தாலும், இதுவரை அறியாத பல அரிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் இ பு ஞானப்பிரகாசன். இருக்கலாம் நிறைய எழுதி நீக்கி பதிவு நீண்டதால் ..நன்றி மீண்டும்..

      நீக்கு
  14. உக்காந்து யோசித்துப் பார்த்தால் மனித வாழ்வே அற்ப வாழ்வு. இதில் சாதி, கடவுள், மதம் எல்லாம் மனிதன் உருவாக்கியது- இது என் சிந்தனையின் வெளிப்பாடு மட்டுமே!

    பயோ கெமிஸ்ட்ரி படிச்சீங்கனா, ஏ டி பி என்கிற ஒரு மூலக்கூறுதான், எனெர்ஜி கரன்ஸி என்பார்கள். ஆ னா, ஊ னா எ டி பி என்பார்கள். ஆனால் எவலூஷன் படி பார்த்தால் ஏ டி பி பின்னாளில் உருவாக்கப் பட்டது. ஏ டி பி இல்லாமலே உயிரினம் உருவாகியுள்ளது என்பதை உணரலாம். பயோகெமிஸ்ட் அதைப் பற்றியெல்லாம் கவலைப் பட மாட்டான். ஏ டி பியை கட்டி அழுவான்!

    சாதியையும், மதத்தையும், பண்பாடு, கலாச்சாரம் என்றெல்லாம் கட்டி அழுவதுபோல் அறிவியலாளரும் எதையாவது கட்டி அழத்தான் செய்கிறார்கள்.

    ஆனால் காலப்போக்கில் எல்லாமே அழியத்தான் போகிறது. ஆனால் அதற்கு 100 ஆண்டுகள் என்ன மில்லியன் அல்லது பில்லியன் ஆண்டுகள் ஆகலாம். பொதுவாக மனிதன் பில்லியன் ஆண்டுகள் முன்னால் வாழ்க்கையை யோசிப்பதில்லை. அதேபோல் பில்லியன் ஆண்டுகள் பிறகு என்னாகுமென்றெல்லாம் யோசிப்பதில்லை. இன்னைக்கு என்ன? யாரு தாலியை அத்து பிழைப்பை ஓட்டலாம்? இன்னைக்கு யாரு யு எஸ் ஓப்பன் சேம்ப்பியன் என்று இன்றைய வாழ்க்கையைத்தான் கொண்டாடுகிறார்கள். ஏன் என்றால் மனிதன் ஒரு அற்ப பிறவி அவன் வாழும் வாழ்க்கை அற்ப வாழ்க்கை. அவன் கொண்டாடும் சாதி,மதம் எல்லாமே அற்பத்தனமானதே.. :)

    என்ன வருண் நவீன புத்தராயிட்டாரேனு பயந்துடாதீங்க! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருண் வாங்க! உங்கள் கருத்துகள் பல சிந்திக்க வைப்பவைதான்!

      என்ன வருண் நவீன புத்தராயிட்டாரேனு பயந்துடாதீங்க! :)// ஹஹாஹ்ஹ சிந்திக்க வைத்தாலே ஏதோ ஒரு ஞானி, அறிவு ஜீவி என்று கொள்ளலாம் தானே. கருத்துகள் முரண்படுவதில் தவறு இல்லையே. எல்லோருடைய எண்ணங்களும் ஒரே போன்று இருந்தால் மனித இனம் என்பதே இல்லையே. அந்த மூளையில் இயங்கும் ரசாயன மாற்றங்கள்தானே ஒவ்வொரு மனிதனையும் வேறுபட வைக்கிறது...

      அதனால் பயப்படவில்லை ஹஹ்ஹ. நீங்களும் நல்ல சிந்தனையாளர் என்பதில் மறுப்பேதும் இல்லை!!!!!

      நீக்கு
  15. #மீம்சாரில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அங்குதான் சாதி, வர்ணம் பேசும் மனுஸ்மிருதி போன்றவை திருகப்பட்டிருக்கின்றன.#
    இன்றைய மீம்ஸ் மட்டுமே எனக்கு தெரியும் !மீம்சாரில் என்ன உள்ளது என்று நீங்கள்தான் விளக்கமாய் சொல்லவேண்டும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான் ஜி மிக்க நன்றி பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கு. அது நீம்சார் அடிக்கும் போது பிழையாகிவிட்டது! நன்றி நன்றி ஜி!!

      நீக்கு