பங்களூருக்குப் பேருந்தில் சென்ற போது .....மொட்டைக் குன்று என்றாலும் அழகுதான்
---------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த இரு மலர்களும் பங்களூர் உறவினர் வீட்டில்
மலரே உன் இதழ் மடித்து என்ன சொல்ல வருகிறாய்?! "என்னைக் கொய்து விடாதீர்கள்" என்றுதானே?!!
மலர்ந்தும் மலராத பாதி மலர்....மலர்ந்திட்டால் பிரித்திடுவரே மாந்தர்.....மலர்ந்திட வேண்டுமோ என்று யோசிக்கின்றதோ
-------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------
பாண்டிச்சேரிப்பயணம்
பாண்டிச்சேரிப் பயணத்தின் போது ஓடும் பேருந்திலிருந்து............. சூரியக் கதிரில் தகதகவென மின்னிடும் காயல்
உப்பில்லாப்பண்டம் குப்பையிலே - பாண்டிச்சேரி செல்லும் வழியில் உப்பளங்கள்
பாண்டிச்சேரி எல்லைக்கருகில் இருக்கும் சுங்கச் சாவடி - அழகுப் பெட்டகம்
---------------------------------------------------------------------------------------------------------------------
இதோ இவை எல்லாம் என் வீட்டருகில்
---------------------------------------------------------------------------------------------------------------------
இதோ இவை எல்லாம் என் வீட்டருகில்
ஏய் நீ ரொம்ப அழகா இருக்க
நான் யாரென்று தெரிகிறதா? படுத்துக் கொண்டு, கண்ணை மூடிக் கொண்டு யோசித்துப் பாருங்கள்.......
மறைந்திருக்கும் மர்மம் என்ன சூரியனாரே! கார் மேகங்கள் உமைச் சிறைப்படுத்தியதோ
கோயில் வளாகத்தின் பசுமை அரங்கு
இப்படங்கள் எல்லாம் வெங்கட்ஜி, செந்தில் சகோ அவர்களின் படங்களுக்கு நிகர் இல்லைதான். எனினும், எனது ஆர்வ மேலீட்டினால் என் மூன்றாவது கண் வழிச் சிறைப்படுத்தியவை!!
------கீதா
எல்லா படங்களும் அழகு. பஞ்சு காய் என்று நினைக்கிறேன்.( படுத்துக்கொண்டு
பதிலளிநீக்குயோசிக்க சொன்ன படம்)
ஆமாம் பஞ்சுக்காய் தான் அக்கா. மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும், வருகைக்கும்
நீக்குபேரூந்தில் பயணித்தவாறு இத்தனைத் துல்லியமாய் படங்களா
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரியாரே
அதிலும்
பௌர்னமி நிலவின் வெட்டம்
அழகு
பேருந்தில் பயணித்தவாறு சில படங்கள் மற்றவை வீட்டருகிலும், உறவினர் வீட்டிலும் சகோ. பிரித்து தலைப்பிட்டுப் போட்டுவிட்டேன். மிக்க நன்றி சகோ தங்களின் கருத்து படங்களைப் பற்றித் தெளிவாகச் சொல்லுவதற்கு உதவியது...
நீக்குமிக்க நன்றி கரந்தை சகோ..
அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ
நீக்குபுகைப்படங்கள் அனைத்தும் ஸூப்பர் நல்ல தெளிவு தொடரட்டும்....
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு
நீக்குஅழகிய புகைப்படங்கள்.அழகு பாண்டிச்சேரி.
பதிலளிநீக்குமிக்க நன்றி அனிதா ஷிவா தங்களின் கருத்திற்கு..
நீக்குஅருமை. இரசித்தேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் குணசீலன் ஐயா
நீக்கு'கொய்யாப் 'பூ றோம்பவே அழகு :)
பதிலளிநீக்குமிக்க நன்றி பகவான் ஜி!!! நல்ல வார்த்தை விளையாடல் அதுவும் கொய்யா பூ வைச் சொன்னது அழகு!! உங்கள் கருத்தை ரசித்தோம்..
நீக்குபயணத்திலேயே இப்படின்னா எடுக்கணும்னு நினைச்சு எடுத்தா எல்லோரையும் தோற்க அடிச்சுடுவீங்க! எல்லாத்திலேயும் மனசை ரொம்பக் கவர்ந்தது பௌர்ணமி நிலவு தான்! சொல்ல வார்த்தைகளே இல்லை!
பதிலளிநீக்குகீதாக்கா சில படங்கள் மட்டுமே பயணத்தில். கோடு பிரித்துக் காட்டியிருக்கிறேனே...பௌர்ணமி நிலவு எல்லாம் நின்று நிதானமாக எடுத்த படம். பல கோணங்களில், ஃப்ரேம்களில் ரசித்து எடுத்த படம். அதில் இது ஒன்றுதான் எனக்கு மிகவும் பிடித்ததால் இதை வைத்துக் கொண்டு மற்றதை எல்லாம் அழித்துவிட்டேன். பல முயற்சிகள் செய்வதுண்டு.
நீக்குஇந்தக் கலையில் ஆர்வம் உண்டு. நீங்கள் சொல்லுவது போல் எடுக்க வேண்டும் என்று நினைத்து எடுப்பதும் உண்டு....அதில் பல விஷப்பரீட்சைகள் செய்து முயற்சி செய்வதும் உண்டு...
மிக்க நன்றி கீதாக்கா
அனைத்து புகைபப்டங்களும் மிக அழகு! அந்த வயலெட் பூ என்ன பூ? பெயரைக்கேட்கிறேன்!
பதிலளிநீக்குஅது என்ன பூ என்று எனக்கும் தெரியவில்லை மனோக்கா. அந்த வீட்டில் உள்ளவர்களிடமும் கேட்டேன். அவர்களுக்கும் சொல்லத் தெரியவில்லை. நான் கூகுளில் தேடினேன்...பெயர் கிடைக்கவில்லை.
நீக்குஇலையைப் பார்த்தால் கொய்யா இலை போல் இருந்தது/இருக்கிறது. பகவான் ஜி யும் வார்த்தை விளையாடலில் "கொய்யாப்" பூ ரொம்ப அழகு என்று சொல்லியிருப்பதால் அது ஒரு வேளை கொய்யாவின் பல வகைகளில் ஒன்றாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது...
நானும் முயற்சி செய்து வருகிறேன். மிக்க நன்றி மனோக்கா.
புகை படங்கள் அருமை, அதற்கான கமெண்ட்டுகள் மிக அருமை.
பதிலளிநீக்குகுறிப்பாக, மலர்ந்திட்டால் பிரித்திடுவரோ இந்த மனிதர்கள்..... சூப்பர்.
கோ
மிக்க நன்றி கோ! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். உங்கள் பதிவு இருக்கிறது வாசிக்க!! வருகிறோம்..
நீக்குஎல்லாப் படங்களும் 4ரசித்து ரசித்து சிறப்பாக எடுக்கப் பட்டிருக்கின்றன. ரசித்தேன். மொட்டைக்குன்று பார்த்ததும் மதுரையோ என்று நினைத்தேன். அப்புறம் படித்து பெங்களூரு என்று தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குஸ்ரீராம் புகைப்படக் கலையில் மிகுந்த ஆர்வமுண்டு. இயற்கை, விலங்குகள்,சிற்பங்கள், வித்தியாசமான இடங்கள், வித்தியாசமான முயற்சிகள், கோணங்கள் என்று ஆர்வம். புகைப்படத்திற்கு என்று மனிதர்களை நிற்கவைத்து மெக்கானிக்கலாக க்ரூப் ஃபோட்டோ என்று எடுப்பதில் ஆர்வமில்லை. குழந்தைகளையும், வயதானவர்களையும், எடுப்பது பிடிக்கும் அதிலும் மக்களையும் எடுப்பதாக இருந்தால் சுவாரஸ்யமான தருணங்கள், அவர்கள் அறியாவண்ணம் இயற்கையாக எடுப்பதில் நாட்டம் அதிகம். இப்படி ரசனைகள் ரொம்ம்ம்ம்பவே நீளம் ஸ்ரீராம்.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
படங்கள் எல்லாம் அழகு ! lantana மலர்கள் ..இதோட கருப்பு பழங்களை ஊரில் முந்தி சாப்பிடுவோம் ..இலவம்பஞ்சு காய் தானே அது ..பௌர்ணமி நிலவின் வெட்கம் //அட்டகாசமா இருக்கு செம க்ளிக்
பதிலளிநீக்குவாங்க ஏஞ்சல்! ரொம்ப நாளாகிவிட்டதே!
நீக்குலான்டனா மலர்களின் கருப்புப் பழங்களை நாங்களும் சுவைத்திருக்கிறோம். அதுவும் பள்ளி, கல்லூரிப்பருவத்தில் ரொம்பவே ...நானும் மகனும் பாண்டிச்சேரியில் நிறையவே சாப்பிட்டிருக்கிறோம்.
ஆமாம் இலவம் பஞ்சுக் காய்தான்...மிக்க நன்றி ஏஞ்சலின்
படங்கள் அழகு கீதா மேடம்...
பதிலளிநீக்குமிக்க நன்றி குமார்
நீக்குபடங்கள் அனைத்தும் அருமை. இன்று முதல் இயற்கை ஒளிப்படப் பதிவர் என்ற பட்டத்தை கீதா சகோவுக்கு வழங்குகிறோம்..!
பதிலளிநீக்குநன்றி!
த ம காணவில்லை.
செந்தில் சகோ என்ன இது பட்டம் எல்லாம் சகோ?!!!!! நீங்கள், வெங்கட் ஜி எல்லோரும் எடுப்பதை விடவா...இளங்கோ ஐயா உட்பட...பட்டம் எல்லாம் வேண்டாம் நீங்கள் ரசித்தமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி சகோ..
நீக்குமிக்க நன்றி சகோ
படங்கள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குமிக்க நன்றி தனிமரம் நேசன்
நீக்குசகோ துளசி & கீதா,
பதிலளிநீக்குஎல்லா படங்களும் அழகு. அதிலும் நிலவொளி சூப்பர் !
முதலில் 'காய்ந்துபோன சுரைக்காய் மாதிரி இருக்கே, இது என்ன' என்றுதான் நினைத்தேன். பிறகு பின்னூட்டம் மூலமாகத் தெரிய வந்தது. இலவங்காய் இப்படியா இருக்கும் ? எங்கள் ஊரில் இந்தக் காயும், மரமும்(கூட) வித்தியாசமாய் இருக்கும்.
மிக்க நன்றி சித்ரா. ஹஹஹ காய்ந்து போன சுரைக்காய்!!!
நீக்குஅட! சித்ரா உங்களை எப்படி மறந்து போனேன், உங்களையும் அனுவையும்...நீங்கள் இருவரும் கூட மிக அழகாகப் புகைப்படம் எடுப்பவர்கள். உங்கள் இருவரின் படங்களையும் ரசிப்பதுண்டு நாங்கள்.
அந்த பிங்க் பூ என்ன என்று தெரிந்ததா சித்ரா...கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது. மனோ அக்காவும் கேட்டிருக்கிறார்கள். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்...
மிக்க நன்றி சித்ரா
கீதா
சகோ துளசி & கீதா,
நீக்குஅந்தப் பூவோட பேரு தெரியலயே கீதா !
எடுத்ர்திருக்கும் படங்கள் எல்லாம் அழகு. எனக்கு இம்மாதிரி இயற்கையின் பின்னணியில் மனிதர்களை படம் எடுக்க்சப் பிடிக்கும்
பதிலளிநீக்குஎழில் கொஞ்சும் அழகை நானும் இரசித்தேன்.நன்றி அம்மா.
பதிலளிநீக்குமிக்க நன்றி வைசாலி தங்களின் கருத்திற்கு
நீக்குபௌர்ணமி நிலவு, மேகம் மறைத்த சூரியன், உப்பு மலை இல்லாத உப்பளம் ஆகியவை நன்றாக வந்திருக்கின்றன. டிராவலின்போது எடுக்கும் படங்கள் பெரும்பாலும் சரியாக அமையாது (தடீர் மிம்கம்பங்கள் குறுக்கீடு, காட்சி கண்ணுக்குத் தெரியும் வித்த்தில் கேமராவில் பதியாமல் போவது, கேமரா அசைவினால் தெளிவின்மை என்று பல காரணங்கள்) சரியாக வந்த படங்களைப் பகிர்ந்துகொண்டீர்கள். நல்லாருக்கு
பதிலளிநீக்குஆமாம். நெல்லைத் தமிழன். இதில் ஒரு சில மட்டும்தான் பயணத்தின் போது எடுக்கப்பட்டவை. மற்றவை எல்லாம் நின்று நிதானமாக எடுத்தவைதான். மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குஅழகிய படங்கள். என்னைப் பற்றியும் இங்கே குறிப்பிட்டதற்கு நன்றி. கொஞ்சம் வெட்கமாகவும் இருக்கிறது - பதிவுலகில் மிகச் சிறப்பாக படம் எடுத்து வெளியிடும் ராமலக்ஷ்மி, சாந்தி மாரியப்பன் போன்றவர்கள் இருக்கிறார்கள் - அவர்கள் திறமைக்கு முன்னர் எனது திறமை ஒன்றுமே இல்லை..... அவர்களது பதிவுகளையும் பாருங்கள்......
பதிலளிநீக்குபயணத்தில், குறிப்பாக பயணித்தபடியே புகைப்படம் எடுப்பது சற்றே சவாலான விஷயம். பல சமயங்களில் வாகனத்தில், ஓட்டுனருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து படம் எடுப்பது வழக்கம். கவனித்தபடியே வரவேண்டும். கேமரா கையில் தயார் நிலையில் இருக்க வேண்டும். சற்று தொலைவில் ஒரு காட்சியைப் பார்க்கும்போதே அக்காட்சியை எடுக்க தயார்படுத்திக்கொள்ள வேண்டும். ஒன்றிரண்டு புகைப்படங்கள் மட்டுமே எடுக்க நேரம் கிடைக்கும்... அது சரியாகவும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்! :)
மூன்றாவது கண் வழியே காட்சிகளைச் சிறைப்படுத்தி, இங்கே பகிர்ந்து கொண்டதற்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
அசத்தல் நாலடியாருக்குள் இன்னும் எத்தனை திறமைகள் ஒளிந்திருக்கிறதோ!!..,
பதிலளிநீக்குஅசத்தல் நாலடியாருக்குள் இன்னும் எத்தனை திறமைகள் ஒளிந்திருக்கிறதோ!!..,
பதிலளிநீக்கு