ஞாயிறு, 2 அக்டோபர், 2016

நிழற்படங்களும் எனது எண்ண அலைகளும்



சமீபத்தில் நடந்த திருமணம் ஒன்றிற்கு மண்டபத்தில் உள்ள அறைகளுக்குப் பூட்டு வேண்டும் என்று எங்கள் உறவினர் கேட்க, வெளியில் வாங்க வேண்டாம் எங்கள் வீட்டில் இல்லாத பூட்டா, சாவியா என்று வெற்றுச் சவடால் விட்டு வீட்டிற்கு வந்து பூட்டுகளையும், சாவியையும் எடுக்க முனைந்தால், பல வருடங்களாகப் புழங்கி வந்த பூட்டுகள் என்னை நோக்கி, "எனக்கு ஏற்ற சாவி எது என்று கண்டுபிடி  பார்க்கலாம். உனக்கு ஒரு சவால்" என்று என்னைப் பார்த்துக் கெக்கலித்தன. ஒரு நான்கு பூட்டுகள், அதற்கேற்ற சாவிகள் கண்டு பிடித்துத் தேற்றி விட்டேன். ஹும் இன்னும் தேடிப் பிடித்துக் கொண்டே இருக்கிறேன்!! 

பூட்டுகளை அதற்கேற்ற சாவிகளுடன் தனித்தனியாக வைத்துக் கொள்வது எனது வழக்கம். யாரேனும் கேட்டால் கொடுத்துவிடுவேன். ஆனால் மீண்டும் வரும் போது பூட்டு அல்லது சாவிகள் மட்டும் வரும். இல்லை என்றால் சோடி சேராத பூட்டும், சாவியும் வரும். அப்படியாகச் சேர்ந்தவைதான் இவை அனைத்தும்! புத்தகங்கள், சிடிக்கள் கொடுத்தால் எப்படி ஒழுங்காகத் திரும்பி வராதோ அப்படித்தான் இவையும். இதை எழுதி வெளியிடுவதற்குச் சேமித்து வைத்திருந்த சமயத்தில் நண்பர் கோ அவர்களின் பதிவு  டைட்டானிக் சாவிகள்!! வாசிக்க நேர்ந்தது. வெனிஸ் நகரில் பூட்டுகளினால் விளைந்த மூடநம்பிக்கையைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை நண்பர் விவரித்திருக்கிறார்.  


இந்தத் தடுப்பு எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் காவல்நிலைய சோதனைச் சாவடி அருகே இருந்தது. எனக்கு இதனைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. சென்னை மாநகர போக்குவரத்துக் காவலுக்கும் மலபார் தங்கத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுந்தது. உங்களுக்குப் புரிந்தால் சொல்லுங்களேன். 

இதைப் பார்த்ததும் ஹும் நம் மக்கள் திருந்தப் போவதே இல்லை என்று தோன்றியது. படித்தவர்களும் இங்கு குப்பை எறிகிறார்கள்.  மாநகராட்சியும் எச்சரிக்கை விடுத்ததோடுத் தன் கடமை முடிந்தது என்று நினைத்திருக்கிறது போலும். அந்த எச்சரிக்கப் பலகையில் உள்ளது போல் மாநகராட்சி எந்தத் தண்டனையும் கொடுக்கவில்லை. மட்டுமல்ல இந்தக் குப்பை எங்கள் பகுதி காவல் நிலையத்து மதிற்சுவர் அருகில்!!! 

இவள் எங்கள் பேட்டைத் தலைவி 
இவள்தான் மூக்கழகி! வாளிப்பாக இருந்தவள். எங்கள் பேட்டைப் பைரவர்களின் தேர்தலில் மூக்கழகிதான்  தலைவியானாள்! தலைவியின் இப்போதைய நிலையைப் பாருங்கள்! பாவம். பேட்டையே அடங்கிக் கிடக்கிறது. குட்டிகள் போட்டாயிற்று. அவளுக்குச் சரியான சாப்பாடு இல்லாமல் வாடிப் போயிருந்தாள். சாப்பாடு கொடுக்க ஆரம்பித்தேன். கடந்த ஒரு வாரமாக அவளைக் காணவில்லை. சிலர் அவள் இறந்துவிட்டாள் என்று சொல்கிறார்கள். சிலர் அவளுக்கு ஏதோ நோய் என்று சொல்கிறார்கள். ஒரு சிலர் அவள் இல்லாதது நன்றாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால்,  கறுப்பழகி காத்துக் கொண்டிருக்கின்றாள். மூக்கழகி இல்லை என்றால் தான் தலைவியாகிவிடலாம் என்று ரவுசு பண்ணிக் கொண்டிருக்கின்றாள்!

பாவம் எங்கள் பேட்டைத் தலைவிக்குச் சொத்துச் சேர்க்கத் தெரியவில்லை! அப்பிராணி! அவளது அல்லக்கைகளையும் காணவில்லை. ஒரு வேளை தலைவி சீக்கிரம் உயிர்த்தெழுந்து வர வேண்டும் என்று அவர்கள் தெய்வமான பைரவருக்கு வேண்டிக் கொண்டு அங்கப்பிரதட்சிணம் செய்யப் போயிருக்கிறார்களோ என்னவோ??!!!! ஏதேனும் ஜோசியர் எங்கள் பேட்டைத் தலைவி பற்றி ஆரூடம் சொல்லுவாரா? சொன்னால் நன்றாக இருக்கும். ஒரு வேளை நாலுகால் ஆர்வலர்கள் யாரேனும் அவளை சிகிச்சைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்களோ என்னவோ. அங்கு அவள் தன் பேட்டையைத் தொடங்கிவிட்டாளோ?! இவளைக் காணவில்லை என்பது எங்கள் தெரு மக்களுக்கு ஒரே மர்மமாக இருக்கிறது. எனக்கும் தான். எல்லோருக்கும் அத்தனைச் செல்லம்!

Image result for street dog fighting for area
இந்தப் படம் இணையத்திலிருந்து
தெரு நாய்கள் தங்கள் எல்லையைக் குறித்துக் கொண்டு, அடுத்த பகுதி நாய்களைத் தங்கள் பகுதிக்குள் வர விடாமல், "இது என் ஏரியா உள்ள வராதே" என்பது போல் சண்டை போடுவதை நாம் எல்லோருமே பார்த்திருப்போம். பண்டு தொட்டே மனித சமூகம் ஒவ்வொன்றும் தங்கள் எல்லையை வகுத்துக் கொண்டுதான் வாழத்தொடங்கினார்கள். அப்படி வளர்ந்த சமூகங்கள் இன்று நாடுகளாகி, அரசியல், ஆட்சி என்று விரிந்திருக்கிறது. மேலே சொல்லப்பட்டவை ஐந்தறிவு படைத்தவை. 

ஆனால், ஆறறிவு என்று சொல்லிக் கொள்ளும் மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதும் எத்தனைதான் மண் ஆசை என்பது பண்டு தொட்டே இருந்து வரும் ஒன்று என்றாலும், பண்பாடு, நாகரீகம், தொழில் நுட்பம் என்று வளர்ந்து பொருளாதாரமும் வளர்ந்து வரும் இந்தக் காலத்திலும் மனிதனின் மண் வெறி மட்டும் இன்னும் அடங்கவில்லை என்பது நிரூபணம் ஆகிக் கொண்டே வருகிறது.  

இதோ நம் இந்தியப் பாகிஸ்தான் எல்லையில் பதட்டம். போருக்கானப் பதட்டம் எல்லையில் மட்டுமின்றி எல்லையில் இருக்கும் மாநிலங்களிலும், தலைநகரிலும் நிலவுகிறது. போர் என்றால் அதன் பின் விளைவுகளைப் பற்றி நாம் எல்லோருமே அறிவோம்.  போரில் வெற்றி, தோல்வி என்பதை விட இரு தரப்பினருக்குமே அதீத அழிவுகள் ஏற்படத்தான் செய்யும். உயிர் சேதத்திலிருந்து, பொருளாதாரச் சேதம் வரை, நடைமுறை வாழ்க்கையே மாறி, இந்தப் பேரழிவிலிருந்து இரு தரப்பினருமே மீண்டு வருவது என்பதற்குப் பல வருடங்கள் ஆகிவிடும். ஆறறிவு படைத்தவர்கள் இரு தரப்பினரும் சிந்திக்கலாம். சிந்திக்க வேண்டும்.  அப்படிப்பட்ட ஒன்று நிகழாமல் இருக்கும் என்று நம்புவோம். 

-----கீதா






36 கருத்துகள்:

  1. பூட்டு சாவி - ஒரு கடையே வைக்கலாம் போலிருக்கிறது! :) எத்தனை பூட்டுகள்.... நண்பர் ஒருவர் விதம் விதமான பூட்டுகளை வாங்கிச் சேகரிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.....

    குப்பை - என்ன சொல்ல.... யாரும் திருந்தப் போவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஹ்ஹாஹ் ஆமாம் வெங்கட்ஜி நிறைய பூட்டுகள் சாவிகளற்று, சாவிகள் பூட்டுகளற்று என்று நிறைய....

      மிக்க நன்றி ஜி தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  2. பூட்டுகளில் தொட்டு, நம்பிக்கையின் சின்னம் நாய்களில் சுட்டி, நறுக்கென வெளிக்கொணர்ந்த "ஆறறிவு படைத்தவர்கள் இரு தரப்பினரும் சிந்திக்கலாம். சிந்திக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒன்று நிகழாமல் இருக்கும் என்று நம்புவோம்." என்பதை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்பாவாணன் சகோ. போரின் அவலங்களை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்....
      னல்லது நடக்கும் என்று நம்புவோம்.

      நீக்கு
    2. மிக்க நன்றி யாழ்பாவாணன் சகோ. போரின் அவலங்களை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்....
      னல்லது நடக்கும் என்று நம்புவோம்.

      நீக்கு
  3. >>> ஆறறிவு படைத்தவர்கள் இரு தரப்பினரும் சிந்திக்கலாம். சிந்திக்க வேண்டும்..<<<

    குப்பை போடுவதிலிருந்து கோட்டையைப் பிடிப்பது வரை - சிந்திக்கலாம்..
    சிந்திக்க வேண்டும்!..

    இந்த சிந்திக்கின்ற விஷயம் - மூக்கழகிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை..

    அந்தப் பசங்க எல்லாரும் கை விட்டுட்டுப் போய்ட்டானுங்க..
    மூக்கழகியோட கதி என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை..

    மழைக் காலம் வருகின்றதே.. பாவம் - அந்தக் குட்டிகளின் நிலை!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா...ஆமாம் ஐயா மூக்கழகி குறித்துக் கவலையாகத்தான் இருக்கிறது. குட்டிகள் இன்னும் வெளியில்வரவில்லை...நானும் விசாரித்துக் கொண்டிருக்கின்றேன். ப்ளூக்ராசில் அல்லது ஆர்வலர்களிடம் சொல்லி வளர்ப்பதற்குக் கொடுத்துவிடலாம் என்றும் யோசித்து வருகின்றேன்...

      மிக்க நன்றி ஐயா..

      நீக்கு
  4. பூட்டு புகைப்படம் பிரமிப்பூட்டுகிறது
    நாடு சுத்தமாவது அரசு கையில் இல்லை அது மக்கள் மனங்களில் இருக்கின்றது.
    மனிதனின் மண் ஆசை அவன் மண்ணுள் போகும்போதே தீர்வுக்கு வரும்போல.... அதை ஐந்தறிவு ஜீவிகளிடம் தொடங்கி கொண்டு வந்தது அருமை.
    காந்தி ஜெயந்தியான இன்று நல்லதொரு விடயத்தை கோர்வையாக தந்தீர்கள்.

    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கு. ஆம் போர் குறித்த விவரத்தை காந்தி ஜெயந்தி என்று நேரடியாகத் தராமல் அப்ப்டிக் கொடுத்தேன். மட்டுமல்ல இன்று காமராஜர் நினைவுநாள் மற்றும் லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாளும்...

      நீக்கு
  5. #சென்னை மாநகர போக்குவரத்துக் காவலுக்கும் மலபார் தங்கத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுந்தது. #
    காவல் துறைக்காக அந்த தடுப்பை செய்து தந்தவர்கள் ,தங்களின் விளம்பரத்தைப் போட்டுக் கொண்டுள்ளார்கள் :)
    # கறுப்பழகி காத்துக் கொண்டிருக்கின்றாள்.#
    இதில் ஏதோ உள்குத்து இருக்கும் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ தடுப்பிற்கான விளக்கத்திற்குமிக்க நன்றி பகவான் ஜி.

      கறுப்பழகி.....ஹஹஹஹஹஹ்ஹ் ஜி சரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள். அந்தப் பாரா முழுவதுமே...உங்களுக்குப் புரிந்துவிட்டது என்று நினைக்கின்றேன்...ஹிஹிஹி

      மிக்க நன்றி பகவான் ஜி

      நீக்கு
  6. இங்கே ஶ்ரீரங்கம் கோயிலில் பூட்டுகளுக்கென்றே ஓர் இடம் உள்ளது. அங்கே விதவிதமான பூட்டுக்கள் தொங்கும். சாவி இருக்கா இல்லையானு நினைவில் இல்லை. இப்போதெல்லாம் வடக்கு வாசல் வழியே போய் வருவதால் பூட்டுக்களைப் பார்த்தே வெகு காலம் ஆகி விட்டது! :) பூட்டுக்களை, கிணற்றில் சாமான் எடுக்கும் பாதாளக் கரண்டி ஆகியவற்றைக் கொடுத்தால் முன்னெல்லாம் எதையேனும் வாங்கி வைத்துக் கொண்டு கொடுப்பார்கள். இப்போல்லாம் கிணறே இல்லை. பூட்டும் கோத்ரெஜ் பூட்டு! :) பூட்டித் திறப்பதற்குள்ளாகப் போதும் போதும்னு ஆயிடும். அந்தக் காலத்தில் தொட்டிப் பூட்டுனு உண்டு. முக்கியமான நிலைக்கதவுகளில் பொருத்தப்பட்டிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ பல தகவல்கள் பூட்டைப் பற்றி அறிய முடிந்தது! தொட்டிப்பூட்டு பார்த்திருக்கிறேன். பெரிய நிலைக்கதவுகளில் இருக்கும். மிக்க நன்றிக்கா கோயில் பூட்டு பற்றிய தகவலுக்கு...

      நீக்கு

  7. பூட்டில் தொடங்கி, இந்திய பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினையில் முடித்துள்ளீர்கள்.கலவயான பதிவு.

    பூட்டு சாவி - படித்து சிரித்தேன்.

    பதிலளிநீக்கு
  8. இன்றைய அரசியல் சூழ்நிலை!!!!!!!? பதிவு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி புலவர் ஐயா...கண்டுபிடித்துவிட்டீர்களா..

      நீக்கு
  9. பூட்டுக்கு சாவி தேடும் பிரச்சனை அடிக்கடி வருவதுண்டு. கோத்ரெஜ் ஆகா இருந்தால் என் வைத்து கண்டுபிடித்து விடலாம். ஆனால் கோத்ரெஜ் பூட்டு விலை கடஹ்வின் விலையை விட அதிகமாக இருக்கும் போலிருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முரளி சகோ தங்களின் கருத்திற்கு. ஆமாம் கொத்ரெஜ் விலை அதிகம் தான்...

      நீக்கு
  10. வணக்கம்.

    பல்சுவைப் பதிவு பூட்டில் ஆரம்பித்துப் போர்ப்பதற்றத்தில் முடிந்திருக்கிறது.

    சரி சரி வந்ததற்கு என் வருகையைப் பதிவு செய்து போகிறேன்.

    பழந்தமிழில் பூட்டு இருக்கிறது சாவி இல்லை.

    சாவி வட மொழி.

    நற்றமிழ்ச்சொல் தாழ்க்கோல்.

    மலையாளம் இன்னும் இச்சொல்லைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

    சரிதானே ஆசானே/ சகோ?

    ஹ ஹ ஹா

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் விஜு சகோ...உங்கள் வருகைப் பதிவு எப்போதுமே தகவலுடன் தான் இருக்கும் என்பத்ற்காகவே உங்கள் பின்னூட்டத்தை எதிர்பார்ப்பதுண்டு.

      ஆமாம் எங்கள் வீட்டில் இன்னும் தாழ்க்கோல் எனும் சொல்லின் வழக்குச் மொழியான தாக்கோல் என்றுதான் சொல்லி வருகிறோம். இரு வீட்டிலுமே. தாழ்க்கோல் மலையாளச் சொல் என்று தான் நினைத்திருந்தேன். தாழ்ப்பாள் போட்டாயிற்றா என்றுதான் எங்கள் வீட்டில் பேசுவதுண்டு, மலையாளத்தில் என்றால் தாழிட்டோ என்று சொல்லுவதுண்டு...மலயாளத்தில் பல நல்ல தமிழ்ச்சொற்கள்தான் (வடமொழிச் சொற்களும் தான்) இன்றும் நிலவி வருவது பல நேரங்களில் தெரிகின்றது சகோ...

      மிக்க நன்றி சகோ..

      நீக்கு
  11. நீங்களும் எதையோ மனதில் வைத்தெதையோ எழுதுகிறீர்கள் ப்பொல் இருக்கிறது போர் பதட்டம் கூடாதென்றால் வின் வின் நிலைப்பாடு வர வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம் பி சார் தங்களின் கருத்திற்கு...மனதில் உள்ளதை மறைமுகமாகச் சொல்லுகின்றேன் சார் அவ்வளவுதான்...

      நீக்கு
  12. படங்களும் செய்தியும் அருமை. ரசித்தேன்.

    சமீபத்தில் நான்கு நாள் பயணமாக ஊர் கிளம்பியபொழுது பூட்டு சாவி விஷயத்தில் எனக்கும் இந்த அனுபவம் வந்தது! குப்பைகள் எங்குதான் இல்லை?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் ரசித்தமைக்கு.

      அட அப்ப பலருக்கும் இந்தப் பூட்டுப் பிரச்சனை வருகிறதுதான் இல்லையா...

      நீக்கு
  13. எங்கோ ஆரம்பித்து அருமையாக நிறைவு செய்துள்ளீர்கள். நல்ல பாடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கு.

      நீக்கு
  14. என்னது மிக நாசுவாக அரசியல்பதிவு எழுதி வெளியிட்டது மாதிரி இருக்குதே......பார்த்துகொள்ளுங்கள் புரிஞ்சவங்க ஆட்டோ அனுப்பிடப் போறாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹஹஹ் கண்டுப்பிடிச்சுட்டீங்களே மதுர சகோ...ம்ம்ம் தைரியமாக அரசியலை விமர்சிக்கும், அடித்துத் துவைத்துக் கிழித்து நாராக்கும் உங்கள் அறிவுக்கு எட்டாமலா போகும்..!!!!!நன்றி சகோ

      நீக்கு
  15. பூட்டு - இங்கயும் அதே கதைதான். நிறைய பூட்டுகள் (எல்லாம் டிராவலுக்குள்ள பெட்டிகளில் போடக்கூடிய பூட்டுக்கள்), நிறைய சாவிகள். அவசரத்துக்கு எது எதுல சேரும்னு தெரியாது. தூக்கிப்போடவும் மனசு வருவதில்லை.

    டிராபிக் தடுப்புகள்-இதை அந்த அந்தக் கம்பெனிகளே, தங்களுடைய விளம்பரத்துடன் கொடுத்துவிடுகிறது என நினைக்கிறேன். இலவசமாகக் கொடுப்பதால், அதனுடைய தரம் அப்படித்தான் இருக்கும்.

    மா'நகராட்சிக்குத் தேவையான பணியாளர்கள் (பணி செய்யும் பணியாளர்கள்) இல்லாததால் இதையெல்லாம் கண்காணிக்க முடிவதில்லை என்று தோன்றுகிறது. ஒருவேளை, குப்பையைத் தினம் தினம் சுத்தம் செய்தால், ஓஹோ.. இங்க குப்பை போட்டால் உடனே சுத்தமாக்கிவிடுவார்கள் என்று நம் மக்கள் நினைத்து எல்லாக் குப்பைகளையும் இன்னும் போட ஆரம்பித்துவிடுவார்கள். தவறு செய்துவிட்டு, அதனால் வரும் விளைவுகளை (டெங்கு போன்றவற்றை) அரசாங்கம் சரி செய்யவேணும் என்று 'நினைப்பவர்கள் நாம் அல்லவா?

    உங்கள் பேட்டையின் பைரவர் பிரச்சனை, தவறான சமயத்தில் வந்திருக்கிறது. நீங்களே 'அவர்கள் உண்மைகளுக்கு பதிவு தேத்த விஷயம் கொடுத்ததுபோல் தெரிகிறது.

    இந்தியா பாகிஸ்தான் போர்லாம் வராது. எல்லையில் பதட்டம், வெளி'நாட்டு வாழ் மக்களுக்கு கொஞ்சம் நல்லது. பணப் பரிமாற்ற ரேட் அதிகமாகும். இப்போ சம்பளம் வந்திருக்கும் நேரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லைத்தமிழன்...அடஉங்களுக்கும் அதே தானா...சரி நீங்க ஸ்ரீராம், நான் எல்லாம் சேர்ந்து பூட்டுக்கடை வைத்துவிடலாம்..ஹஹஹ்

      தடுப்பு...எனது சந்தேகம் அது எனக்குப் புரியவில்லை. இரண்டாவது இங்கு வந்திருக்கும் கருத்துகளில் அறிந்து நான் அறிந்ததது உங்கள் கருத்தும்... காவல் துறைக்கு எதற்காகத் தனியார்கள் தடுப்புச் செய்து கொடுக்க வேண்டும்? என்பதே.. எனக்கு நீ இதைக் கொடு..நான் உனக்கு வேண்டியதைச் செய்கிறேன் என்று டீல்நடக்க வாய்ப்பு உள்ளதுதானே...அதுதான் எனது சந்தேகம்..இப்படித்தான் பல கள்ளத்தனங்கள் சரி விடுங்க...வேண்டாம் என் வாய், கை நீண்டு நிறைய எழுதிவிடும்..

      பொதுச்சுகாதாரம் நம்மூரில் பேசிப் பயனில்லை. ஆள் இல்லை என்று சொல்லுவது அதுவும் வேலையில்லாமல் பல பெண்கள், ஆண்கள் இருக்கும் போது அவர்களுக்கு நல்ல ஊதியம் கொடுத்து, கையுறைகள், யூனிஃபார்ம் கொடுத்து அடையாள அட்டை கொடுத்து ப்ரொஃபஷனலாகச் செய்யலாம்...நீங்கள் சொல்லும் கருத்தும் சரிதான் நம் மக்களைப் பற்றியகருத்து..

      அவர்கள் உண்மைக்குப் பதிவு தேத்த நான் விஷயம் கொடுக்கவே தேவையில்லை அவரிடம் நிறைய மேட்டர் இருக்கும் அதுவும் அரசியல் பற்றி...

      ஹப்பா நல்ல செய்டி சொன்னீர்கள் நெல்லைத் தமிழன். மகிழ்வாக இருக்கிறது ..அடுத்த வரி புதியதாக இருக்கிறது!!!.

      மிக்க நன்றி நெல்லைத் தமிழன் விரிவான கருத்திற்கு



      நீக்கு
  16. சகோ துளசி & கீதா,

    தபால்தலை சேகரிப்பு மாதிரி பூட்டு சேகரிப்போ :)

    எது ஒன்றுமே 'செய்ய வேண்டாம்' என்றால்தான் முக்கியமா அதைச் செய்ய விழையும் கூட்டம் ஒன்று இருக்கும் !

    எது எப்படியோ, உங்க பேட்டைத் தலைவி மர்மத்திலிருந்து மீண்டு(ம்) வெளியே வரவேண்டும் !

    பதிலளிநீக்கு
  17. ஹஹஹ்ஹ ஆமாம் பூட்டுச் சேகரிப்பு...மர்மத்தின் பின்னே வேறொரு செய்தி சித்ரா..ஹஹஹ் சரி விடுங்க னீங்க சொல்றபடி நடக்கட்டும்!!!

    மிக்க நன்றி சித்ரா...

    பதிலளிநீக்கு
  18. எங்கவீட்டு பீரோவுக்கு மூன்று சாவி இருக்கு எந்தததுக்கு எந்த சாவின்னு இன்றையவரைக்கும் கண்டுபிடிக்கவில்லை. ஒவ்வொன்றா போட்டு போட்டு பார்த்து திறப்பதைத் தவிர......

    பதிலளிநீக்கு
  19. பூட்டு சாவிகளை ஒருமுறை ஓய்வில் ஜோடி சேர்க்கவும்
    தம +

    பதிலளிநீக்கு