செவ்வாய், 5 ஜூலை, 2016

விலங்குகளின் தகவல் பரிமாற்றம் 1 – தேனீக்கள் - இயற்கையின் ரகசியங்கள்

கோடை காலத்தில் மரக்கிளைகளின் இடையே எங்கே இருக்கிறது என்று அறிய முடியாமல் கூ என்று வரும் குயிலின் இனிய நாதம்

மழை பெய்யும் நாட்களில் இரவில் அரங்கேறும் தவளைகளின் கச்சேரி

தினமும் காலையில் எழும் போது கேட்கும் குருவிகளின், கிளிகளின் அன்றைய தினத்தின் கீச் சத்தம்.

காக்கைகள் சரியான நேரத்திற்கு ஜன்னலின் ஓரம் வந்து அமர்ந்து தங்கள் தினப்படியான கப்பத்தினைக் கேட்டுக் கொடுக்கும் குரல்

இரவின் அமைதியில் கேட்கும் சுவர்க்கோழிகளின் ரீங்காரம்

அடர்த்தியான காடுகளின் இடையே கேட்கும் விதம் விதமான இயற்கை ஒலிகள் என்று

நம்மைச் சுற்றி எத்தனையோ இயற்கையின் ஒலிகள் கேட்கத்தான் செய்கின்றன. ஆனால் நகரத்து வாழ் மக்கள் விரைந்தோடும் வண்டிகளின் சத்தத்தில், வீட்டினுள் இருக்கும் முட்டாள் பெட்டிகளுல் மூழ்கிக் கிடத்தலில் இந்த இயற்கை ஒலியினைத் தொலைத்துவிட்டு...

பல கிராமத்து வாழ் மக்களோ வீட்டினுள் இருக்கும் முட்டாள் பெட்டியின் சத்தத்தில் தொலைத்தோ, அல்லது கிராமத்து இயற்கை வளம் அழிந்து வருவதாலோ,  இந்த இயற்கையின் இனிய ஒலிகளை அனுபவிக்க முடியாத ஒரு நிலைக்குத் தங்களைத் தள்ளிக் கொண்டு……இப்படியாக

மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான தொடர்பும், தகவல் பரிமாற்றமும் மெதுவாக இற்றுப் போய் அற்றுப் போகும் நிலையிலான ஒரு வாழ்வு.

ஒவ்வொரு விலங்கினமும் எழுப்பும் ஒலி, தங்களுக்குள்ளும், மனிதனுடனும் தொடர்பு கொள்ள/தகவல் மரிமாறிக் கொள்ள எழுப்பும் ஒலியே. ஆனால், அதனை மனிதன் படித்தானில்லை. விலங்குகளுக்கு மொழி உண்டா? விடை கொடுக்க முடியாத கேள்விதான் என்றாலும், விஞ்ஞானிகள் மொழிக்குக் கொடுக்கும் வரையறை, மொழி என்பது அடையாளக் குறியீடுகளுடன் ஆக்கப்பூர்வமான தொடர்பு என்பதே. ஆனால்

விலங்கினங்கள் பொதுவாக மனிதனைப் போன்றில்லாமல் குறிப்பிட்ட மூன்று விதமானச் சூழ்நிலைகளில் மட்டுமே தொடர்பு கொள்ளுகின்றன.

1.   உணவு பற்றிய தகவலைப் பரிமாறிக் கொள்ள

2.   இனப்பெருக்கக் காலத்தில் தங்கள் இணையுடனான உறவை வலுவாக்கிக் கொள்ள அல்லது

3.   ஆபத்தான காலக்கட்டத்தில்/ஆபத்தில் சிக்கிக் கொண்டால்

ஒரு சில விலங்கினங்களின் தகவல் பரிமாற்றங்கள் மிகவும் மதிநுட்பமான முறையில் இருப்பதால், விஞ்ஞானிகள் அதனை விலங்குகளின் மொழி என்றே முடிவு செய்ய வேண்டியதானது. உதாரணத்திற்குத் தேனீக்களின் இனத்தில் ஒரு தேனீ உணவைக் கண்டுபிடித்துவிட்டால் உடன் தனது கூட்டிற்கு வந்து, ஆட்டல் நடனம் செய்து – இதில் இந்த ஆட்டல், எண் 8 வடிவத்தில் நிறைய நேரம் என்றால் உணவு தூரத்தில் உள்ளது என்று அர்த்தம். ஆட்டல் நடனம் வட்ட வடிவில் சிறிது நேரம் என்றால் உணவுக் கூட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில்/அருகில் என்ற அர்த்தத்தில் அங்கிருக்கும் தனது சகாக்களான உழைப்பாளித் தேனீக்களுக்குத் தகவலைப் பரிமாறுகின்றன.

How can honeybees communicate the locations of new food sources? Austrian biologist, Karl Von Frisch, devised an experiment to find out! By pairing the direction of the sun with the flow of gravity, honeybees are able to explain the distant locations of food by dancing. "The Waggle Dance of the Honeybee" details the design of Von Frisch's famous experiment and explains the precise grammar of the honeybees dance 

வேகமும், சுற்றுகளின் எண்ணிக்கையும் தூர அளவைக் குறிக்கின்றன. 40 சுற்றுகள் என்றால் உணவு 100 மீ தூரத்தில் என்றும் 24 சுற்றுகள் என்றால் 500 மீ ருக்கும் அதிகம் என்று அர்த்தம். நடனத்தின் நோக்கு நிலை (Orientation) உணவு இருக்கும் இடத்தின் அறிகுறியாகும். நடனத்தின் தீவிரமும், கால அளவும் உணவின் செழுமையைக் குறிக்கும். 

இந்த நடனமாடும் தேனீ உணவின் தரத்தைத் தனது சக உழைப்பாளித் தேனீக்களிடம் எப்படி அறிவிக்கின்றன என்றால், அந்தத் தேனீக்கள் இந்த நடனமாடும் தேனீயை முகர்ந்துப் பார்த்து பூக்களின் மணத்தை அறிந்து கொள்கின்றன. உடன் அந்தத் தேனீக்கள் புறப்பட்டுவிடும். இப்படித் தேன் எடுக்கப் புறப்படும் புதிய குழு தேனீக்கள் இந்த முக்கியமானத் தகவலைப் பரப்புகின்றன. ஒரு மணி நேரத்திற்குள் 10,000 தேனீக்கள் அந்த இடத்திற்கு வந்து விடும் என்ற தகவல், தேனீக்களின் இந்த வகையான மிக நுட்பமானத் தகவல் பரிமாற்றத்திலிருந்து அறிய முடிகிறது.

ரகசியங்கள் தொடரும்..

------கீதா 

காணொளி - நன்றி யுட்யூப் 

24 கருத்துகள்:

 1. இந்தத் தகவல் ஒரு ஆச்சர்யம் என்றால் அதை, அந்த மர்மத்தை உடைத்துக் கண்டு பிடித்திருப்பது இன்னொரு மிகப்பெரிய ஆச்சரியம்.

  பதிலளிநீக்கு
 2. நிச்சயமாக பறவைகளுக்கும், மனிதனுக்கும் ஒலித்தொடர்பு உண்டு ஆனால் அது மனிதர்களுக்கு சரியான வகையில் அறிவிக்கப்படவில்லை அரிய தகவல்கள்தான் தொடர்கிறேன்
  த.ம. 1

  பதிலளிநீக்கு
 3. எத்தனை ஆச்சரியம்..... ஒவ்வொரு உயிரினமும் இப்படி தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்கிறது. நமக்குத் தான் புரிவதில்லை...

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. இங்கே Pembrokeshire கிட்ட ஒரு பெண்மணி போயிட்டு வரும் வழியில் அவங்க காரை சுற்றி 20,000 தேனீக்கள் !!ராணித்தேனீ கார் பூட்டில் மாட்டியிருந்திருக்கலாம் அதை தேடியே கூட்டம் காரை தொடர்ந்திருக்கு என்கிறாரகள் ....அவ்ளோ பெரிய swarm எப்படி கூடினர் ..இயற்கையின் அதிசயமும் ஆச்சர்யமும் தானே


  பதிலளிநீக்கு

 5. தேனீக்கள் இப்படித் தொடர்பாடல் வைத்திருப்பதாக அலசி உள்ளீர்கள்.
  அருமையான கண்ணோட்டம்
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 6. வியப்பிற்குரிய செய்தி சகோதரியாரே
  ஆவலோடு தொடர்கிறேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
 7. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான தொடர்பும், தகவல் பரிமாற்றமும் மெதுவாக இற்றுப் போய் அற்றுப் போகும் நிலையிலான ஒரு வாழ்வு--

  பதிலளிநீக்கு
 8. ஓரளவுக்கு இதைப் பற்றி தெரிந்திருக்கின்றேன்.. ஆனாலும் நிறைந்த சுவையான தகவல்களைக் கண்டு மகிழ்ச்சி..

  வளரும் பிள்ளைகளுக்கு பயனுள்ள தகவல்கள்.. வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 9. அரிய நம்பமுடியாத செய்தியாக உள்ளது. ஆச்சர்யம்தான். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. இறைவனின் படைப்பில் எவ்வளவு வியக்க வைக்கும் செய்திகள். சின்ன உயிராக இருந்தாலும் எவ்வளவு அறிவு, எவ்வளவு சுறு சுறுப்பு! நல்ல பகிர்வு.

  எங்கள் வீட்டு ஜன்னலில் 10 நிமிசத்தில் பெரிய கூடு கட்டி விட்டது. அதி வேகமாய் பறந்து வந்தது, இரண்டு நாளில் கூடு இன்னும் பெரிதானது. பின் தேனீக்களை அப்புறபடுத்த ஒருவர் வந்தார், வயல்களுக்கு மருந்து அடிப்பவர் போல் மெஷின் வைத்து இருந்தார். அதை வைத்து மருந்து அடித்து கலைத்தார், மனது கஷ்டமாய் இருந்தது அதன் கூட்டை கலைத்தது. அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து கொண்டு தேனீ கூடு இருக்கட்டும் நான் ஜன்னலை திறக்காமல் இருக்கிறேன் என்றால் யார் விடுவார்கள்.

  பதிலளிநீக்கு
 11. இந்த காலத்து I T எல்லாம் தேனீக்கள்முன் ஜூஜிபிதான்.

  தொடருங்கள்.

  கோ

  பதிலளிநீக்கு
 12. ஆக ,மனிதன் மட்டும்தான் உணவைக் கண்டால் யாரையும் அழைக்காமல் சாப்பிடுபவன் போலிருக்கிறது :)

  பதிலளிநீக்கு
 13. அண்மையில் எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெரிய தேன்கூடு மாலையில் அகற்றப்பட்டது. அடுத்தநாள் காலையில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் தரையெங்கும் செத்துக்கிடந்தன. ஒருவேளை, ராணித்தேனீ மரணம் அடைந்ததால் இருக்குமோ? - இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மருந்து தெளித்திருப்பார்கள் சார் அகற்றுவதற்கு. இல்லை என்றால் கொட்டிவிடும் என்பதால்...ஆனால் பாவம் சார் அவை.

   நீக்கு
 14. தேனீக்களின் நடன communication பற்றி சிலமுறை படித்திருக்கிறேன். பின் ஆரவத்தின் காரணமாக தேனீக்களை பற்றி மேலும் சில தகவல்களை அறிந்து கொண்டேன். அனைத்தும் ஒன்றாக உங்கள் பதிவு...

  நீங்க ஏற்கனவே பாத்து பின்னூட்டமிட்ட பதிவுதான், இருந்தாலும் தேனீ சம்பந்தப் பட்டதால் மீண்டும் ஒருமுறை...
  https://malarinninaivugal.blogspot.com/2015/07/blog-post.html

  பதிலளிநீக்கு
 15. அருமை.... விவரமாய் அறியத் தரும் பகிர்வு...
  ரகசியங்கள் தொடரட்டும்..

  பதிலளிநீக்கு
 16. ஆச்சரியமான செய்தி...கடவுள் ஒவ்வொரு உயிர்க்கும்...ஒவ்வொரு தன்மையை படைத்தி இருக்கிறார்...இல்லையா...

  பதிலளிநீக்கு
 17. (தவறுதலாக வந்து விட்டது )படைத்திருக்கிறார்

  தம 4

  பதிலளிநீக்கு
 18. நீங்கள் இதை எழுதுவதற்கு எடுத்துக் கொண்ட உழைப்பு புரிகிறது .
  தேனீக்கள் ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு செல்லும்போது மகரந்தச் சேர்க்கை இயற்கை முறையில் நடப்பதால் பல நன்மைகள் உண்டு என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 19. தேனீ நடனம் ஏற்கெனவே அறிந்த செய்திதான் என்றாலும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய ஒன்று எனும் வகையில் இப்பதிவும் முக்கியம் பெறுகிறது. ஏனெனில், தேனீக்கள் அழிந்து விட்டால் மனித இனமும் மிகச் சில காலத்தில் அழிந்து விடும் என்று ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். ஆனால், அது தெரியாத மனிதன் மிகவும் ஆடுகிறான் - தேனீயை விட!

  பதிவின் தொடக்க வரிகளைப் படிக்கும்பொழுது ஆனந்த விகடனின் 'கற்றதும் பெற்றதும்' தொடரில் தனக்குப் பிடித்த ஐக்கூவாக எழுத்தாளர் சுஜாதா தேர்ந்தெடுத்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது:

  "நகர சந்தடிக்கு இடையில்
  யாரைக் கூப்பிடுகிறது
  அணில்!"

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதிய இரு தகவல்களைச் சுமந்து வரும் தங்கள் பின்னூட்டக் கருத்திற்கு மிக்க நன்றி இபுஞா சகா..(ஐன்ஸ்டீன், சுஜாதா)

   நீக்கு