புதன், 29 ஜூன், 2016

பெண்கள் மூளையைக் குறைவாகப் பயன்படுத்துகிறார்களா?

நான் ரோபோ அல்ல நான் ரோபோ அல்ல நான் ரோபோ அல்ல

என்னாச்சு கீதாவிற்கு? மூளையைக் காணாமல், இயந்திரங்கள் பொருத்தப்பட்டு இருப்பதாலோ??!!!

ஏற்கனவே மனசு குமார், இது கீதா இல்லையோனு குழம்பிக் கிடக்கிறார். இதுல நீ வேற......ஹும் இந்த கூகுள் ப்ளாகர் எந்த ப்ளாக் போனாலும் “நீ ரோபோ இல்லை”னு நிரூபிக்கச் சொல்லுது.

நீ ஹேங்க் மோடில் இருப்பதால், உன் சார்பில் கருத்து போடலாம் என்று தட்டினேன்.

அடப்பாவி! உன் கைவிரல் கணினியின் கீ போர்டில் பட்டதுமே ப்ளாகர் கண்டு பிடித்துவிட்டது.....இது வெர்ச்சுவல் கீதா னு...

சரி இப்ப அதுக்கென்ன?

“மூளையைக் குறைவாகப்பயன்படுத்தும் பெண்கள்” என்று நம் சகோ கூட்டாஞ்சோறு செந்தில்குமார் பதிவு ஒண்ணு போட்டிருந்தார். அதைப் பற்றி ஒரு பதிவு போட வேண்டும்.

ஹ்ஹ்ஹ நீயே மூளையைத் தேடிக் கொண்டிருக்கிறாய். இதுல வேற மூளையைப் பற்றி பதிவா.....நல்ல ஜோக்.....

பரவாயில்லை.

பெண்கள் மூளையைக் குறைவாகப் பயன்படுத்துகிறார்கள் என்று செந்தில் சகோ ஒரு பதிவிட, பெண்ணாகிய நான் சும்மா இருக்கலாமா? அதுவும் அபயா அருணா வேறு எனது மூளை ஐன்ஸ்டீன் மூளையின் அருகில் இருப்பதாக கூகுள் சொல்லுகிறது என்று சொல்லிவிட்டார். சும்மா இருக்க முடியுமா...

சமீபத்திய ஆய்வுகள் தெரிவிப்பதாவது, பெண்களின் மூளை ஆண்களின் மூளையை விட அளவில் 8% சிறியதாக இருந்தாலும் அது பெரிய விசயமே இல்லை.  ஏனென்றால், ஆண்களை விட, பெண்கள் தங்கள் மூளையை மிகவும் திறம்பட உபயோகித்து, குறைவான ஆற்றல் மற்றும், சில செல்களை மட்டுமே பயன்படுத்தி ஆண்கள் செய்யும் அதே வேலையைச் செய்து முடிக்கிறார்கள். 

ஓ அதனால்தான் பெண்களுக்கு நிறைய நேரம் இருக்கிறதா?

அப்படியல்ல. பெரும்பாலும், வீட்டு நிர்வாகம், குழந்தைகள் பராமரிப்பு எல்லாமே அவர்கள் கையில்தானே. இருவரது மூளையின் அமைப்பில் ஒரு சில வேறுபாடுகள் இருந்தாலும், இருவரது மூளைத் திறனும் ஒரே போன்றுதான் இயங்குதிறது.

ஆண்களின் ஹிப்போகேம்பஸ் பெரிதாகவும், நியூரான்ஸ் அதிகமாகவும் இருப்பதால் அறிவுத் திறன் அதிகமாக இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், பெண்களின் ஹிப்போகேம்பஸும் அதற்கு நிகர்தான் என்றாலும், ஆண்களை விடச் சற்றுச் சிறிதுதான். ஆனால், அறிவுத்திறன் அதே போன்றுதான். மட்டுமல்ல சிறிதாக இருப்பதே சிறந்தது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். இந்த ஹிப்போகேம்பஸ் தான் நினைவுத்திறனிற்கும், உணர்ச்சிகளுக்கும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

ஹிப்போகேம்பஸ் சிறிதாக இருப்பதே சிறந்தது என்றால், அதனால்தான் ஆண்களை விட பெண்களுக்கு நினைவுத்திறன் அதிகமாக இருக்கிறதோ!! பெண்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறார்களோ?

ஆமாம், பொதுவாக ஆண்கள் தங்கள் மனைவியின் பிறந்தநாள், தங்களின் கல்யாண நாள், இன்னும் ஒரு சில நாட்களை எல்லாம் மறந்துவிட்டு வீட்டில் மாட்டிக் கொள்வதைப் பற்றி அப்பப்போ விசு, வெங்கட்ஜி எல்லாரும் நகைச்சுவையுடன் சொல்றாங்களே.

பெண்கள் என்றோ வாங்கிய புடவைகளைக் கூட மறக்கமாட்டாங்க, வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை மறக்க மாட்டாங்க, கணவனின் நடவடிக்கைகளைத் துப்பறியும் சங்கர்லால் மாதிரிக் கண்டுபிடித்து விடுவாங்கனு விசு தான் நிறைய நகைச்சுவையாக எழுதியிருக்கிறாரே. மதுரைத் தமிழனின் பூரிக்கட்டை அடியும் புகழ்வாய்ந்தது.
மற்றொரு விஷயம், ஆண்கள், கேட்பதற்கும்/கவனிப்பதற்கும் தங்கள் மூளையின் ஒரு பக்கத்தை மட்டுமே பயன்படுத்துகிறார்களாம்.

ஹ்ஹ்ஹ்ஹ அதான் மனைவிகள், “ஹும் நான் பேயா, நாயா கத்தறேன் இந்த மனுஷன் மண்டைல ஏதாவது ஏறுதா பாரு” அப்படினு சொல்றாங்க போல.
ஆனால், பெண்கள், கேட்பதற்கும்/கவனிப்பதற்கும் தங்கள் மூளையின் இரு பக்கத்தையும் பயன்படுத்துகிறார்களாம். அதிவேகமாக இயங்குமாம்.

ஹ்ஹ்ஹ் “எப்படி நம்ம மண்டைல ஓடுறத நாம சொல்றதுக்கு முன்னாடியே இவங்க கண்டு பிடிச்சுடறாங்க. (நன்றி விசு) சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிப்பவர்கள் பெண்கள் என்பது அதனால்தானோ? (வம்பு என்றும் சொல்லப்படும்!!)

ஆண்கள் கணக்கில் திறன்வாய்ந்தவர்கள் என்றாலும் ஹோம் மினிஸ்ட்ரியில் பெண்களை அவர்கள் விஞ்ச முடியாது. ஆண்கள் ஸ்பேஷியல் ரீசனிங்க் அதாவது கட்டுமானப் பணிகள், வயரிங்க் போன்ற வேலைகளிலும், பெண்கள் இண்டக்டிவ் ரீசனிங்க் – அதாவது அனுமானிக்கும்/யூகிக்கும் தற்புனைவுத் திறனிலும், சூழ்நிலைகளை எளிதாகக் கணிக்கும் திறனிலும் சிறந்தவர்களாக இருப்பதாக அவர்கள் நடத்திய ஆய்வு சொல்லுகிறது. இந்தப் புனைவினால் வீட்டில் சில பிரச்சனைகள் உவாவதும் நடக்கிறதே. மட்டுமல்ல பெண்கள் உணர்வு பூர்வமாக முடிவெடுப்பவர்களாகவும், ஆண்கள் அதற்கு நேரெதிர் என்றும் ஆய்வுகள் சொல்லுகிறது.

சரி என்னதான் சொல்லவருகிறாய்?

பெண்களைப் பற்றிய ஏதேனும் சிறிய குறைபாட்டைப் பேசினாலோ, எழுதினாலோ உடனே எதிர்ப்புக் குரல்கள், பெண்களுக்கு ஆதரவாக ஆண்களிடமிருந்தும் எழுகிறது. ஆனால், அதே சமயம், ஆண்களைக் குறைவாகப் பேசும் போதோ, காட்சிப்படுத்தும் போதோ, பெண்கள் ஏன் குரல் கொடுப்பதில்லை. ஆண்களும் மௌனமாகத்தான் இருக்கின்றார்கள். இது ஏன் என்று என் மூளையற்ற மண்டைக்குப் புரியவில்லை. சரி அதிருக்கட்டும்...

இன்னும் நிறைய சொல்லலாம். மூளை புரியாத புதிர். அதைப் பற்றிய ஆய்வுகள் இன்று ஒன்று சொல்லும் நாளை ஒன்று சொல்லும். இப்படித் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். எனவே....

இருவரது மூளைத் திறனும் ஒவ்வொன்றில் சிறந்து, சமமாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப் பயன்படுத்துவதைப் பற்றிச் சொல்லும் போதுதான் இந்தத் தலைப்பு வருகிறது. பெருவாரியான பெண்கள் தேவையற்ற விஷயங்களில் (இது ஒரு பெரிய பட்டியல்) தங்களை ஈடுபடுத்திக் கொள்வதாலும், வீட்டு நிர்வாகம், குடும்பப் பராமரிப்பு என்று இருப்பதாலும், பெண்கள் ஆண்களுக்கு நிகராக மூளைத் திறன் பெற்றிருந்தாலும் அவர்கள் அத்திறனை உபயோகிப்பது குறைவு என்றே சொல்லப்படுகிறது. இதில் விதி விலக்குகள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.

(தங்கள் தலைப்பை எடுத்துக் கொள்ள அனுமதித்ததற்கு நன்றி செந்தில் சகோ.)

-----கீதா



27 கருத்துகள்:

  1. இது மூளை பற்றிய பதிவு படிக்க கொஞ்சம் தெளிவு வேண்டும் கறிக்கடைக்கு போய்விட்டு பிறகு வருகிறேன்
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹஹ் போய் வாருங்கள் கில்லர்ஜி....மூளையை ஒழுங்கா ஃபிக்ஸ் பண்ணிட்டு வாங்க...ஓகேயா..

      நீக்கு
    2. மூளையின் அளவு ஒரே மாதிரி இருந்தாலும் சிந்திக்கும் திறன் ஆண்களைவிட பெண்களுக்கு பண்டைய காலத்தில் வேண்டுமானால் குறைவக இருந்திருக்கலாம் காரணம் அன்று குழந்தை பெறுதல், சமைத்தல், குழந்தை வளர்த்தல் என்ற குறுகிய வட்டத்திற்குள் இருந்தார்கள்.

      இன்று அப்படியில்லை ராக்கெட்டில் பறப்பதைக்கூட விட்டு வைக்கவில்லை அதேநேரம் இன்றும் கூட வெளியுலகம் தெரியாமல் சீரியலில் மூழ்கி கிடக்கும் பெண்களும் உண்டு என்பதில் மறுப்பதற்கில்லை இவைகள் முழுமையாக தீர்வதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் கடக்கலாம் பிறகு ஆணும், பெண்ணும் சமமே..

      (இப்ப மட்டும் என்ன வாழுதாம் புருஷன் போடி என்றால் அவளும் போடா என்ற நிலைப்பாடுதான் அதுவும் இப்பொழுது போடா, வாடா என்பதை இலக்கியத்தில் செல்லமாக அழைப்பதாக ஆக்கி விட்டார்களாம்)

      அதேநேரம் 5 வயது சிறுவனுக்கு உள்ள அறிவுத்திறன் 50 வயது கிழவனுக்கு இல்லை சிம்புவை என் தலைவன் என்று சொன்ன 50 வயது மனிதனை நான் சந்தித்து இருக்கிறேன் ஆக அறிவு என்பது அளவிலோ, வயதிலோ, பாலினத்திலோ அல்ல செயல்பாட்டுத்திறனில் உள்ளது.

      இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் கடந்த 69 வருடங்களாக சிந்திக்கும் திறன் இல்லாமல் அரசியல்வாதிகளிடம் ஏமாந்து கொண்டு இருக்கின்றோமே... காரணம் என்ன ? மக்களை ஆட்டு மந்தைக்கூட்டம் என்று சொல்லி வைத்தார்களே.... ? இதனால்தானோ... ? அப்படியானால் ஆட்டு மூளைதான் இருக்குமோ..... ? எதுக்கும் நண்பர் கரிக்கடை கரீம்பாயிடம் கேட்டு வருகிறேன்.

      சரீரீரீரீரீ.... என்னாச்சு ? அபுதாபியில்தான் வெயில் கடுமையாக இருக்கு... சென்னையில் எப்படி ?

      நீக்கு
    3. ஜி செயல்பாட்டுத் திறனில் தான் இருக்கிறது. அதூதான் மையக்கருத்து. ஆய்வு என்பது பொதுவானது. பெரும்பான்மையாதுது. பெண்களின் திறனில் இல்லை குறை. அதைப் பயன்படுத்துவதில்தான். ஆய்வில் பொதுவாகத்தான் சொல்லப்படும். நல்ல விரிவான கருத்து.

      நீக்கு
    4. இங்கு நல்ல மழைதான். நான் கோபத்தில் போடவில்லைலையே.

      நீக்கு
  2. //மற்றொரு விஷயம், ஆண்கள், கேட்பதற்கும்/கவனிப்பதற்கும் தங்கள் மூளையின் ஒரு பக்கத்தை மட்டுமே பயன்படுத்துகிறார்களாம்.///

    மற்றொரு பக்கத்தை இன்னொரு பெண் சொல்வதை கேட்பதற்கும்/கவனிப்பதற்கும் நாங்கள் பயன்படுத்துகிறோம் இந்த உண்மையை என் மனைவியிடம் சொல்லிவிட வேண்டாம்...அப்படியே நீங்கள் சொன்னாலும் அவள் அதை நம்ப மாட்டாள் காரணம் எனக்கு மூளையே இல்லை என்று அவள் கருதுவதால்.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஹஹ்ஹஹ்ஹஹ ஐயோ சிரித்துவிட்டேன் தமிழா....

      கூடவே ஒரு சந்தோஷம்.. ஒண்ணுமில்ல நம்ம கட்சிக்கு கூட ஒரு ஆள் சேர்ந்தாச்சுனுதான்....ஹிஹிஹி

      நீக்கு
  3. இந்த பதிவு அக்னி நட்சத்திரம் நடந்து கொண்டிருக்கும் போது எழுதியதாக இருக்கிறதே? அது சரிதானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ்ஹ ஹும் கூலா போட்டாக் கூட இப்படித்தான் தெரியும் போல...அது சரி சுடச் சுட எதுவும் எழுதினா மாதிரித் தெரியலையே...

      நீக்கு
  4. (தங்கள் தலைப்பை எடுத்துக் கொள்ள அனுமதித்ததற்கு நன்றி செந்தில் சகோ.)

    இதை வேகமாக படிக்கும் போது '"தங்கள் தலையை எடுத்துக் கொள்ள அனுமதித்ததற்கு நன்றி செந்தில் சகோ" என்று படித்துவிட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹஹ்ஹ் ஐயோ தமிழா....எப்படி இப்படி..? சத்தியமாக நான் அதை அடிக்கும் போது எனக்குமே தோன்றியது இது........தோன்றியவுடன் மாற்றினேன் அப்புறம் மீண்டும் இப்போது இருப்பதைப் போலவே அடித்தேன்....கண்டிப்பாக மதுரைத் தமிழன் நமக்குத் தோன்றியதைப் போல தலையை என்று வாசித்ததாகப் போடுவார் என்று நினைத்தேன்....அப்படியே...

      நோட் த பாயின்ட்....பெண்கள் இருபக்க மூளையையும் யூஸ் செய்கிறார்கள் அதனால்தான் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று ...ஹிஹிஹிஹி

      நீக்கு
  5. பேசாம இதுக்கு ஒரு REFERENDUM வெச்சுறலாம்.
    அப்புறமா டி .வி ல விவாதம் ,பத்திரிகையில் தலையங்கம்,ட்வீட்டர் வாட்சப் இதுக்கெல்லாம் ஒரு பத்து நாளைக்கு ஓட்ட டாபிக் கிடைக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ் சரியா சொன்னீங்க அ அ. செமையா போகும் நல்லா ஓட்டலாம்... ....

      நீக்கு
  6. மூளையை பெண்கள் சற்றே சிறிதாக பயன் படுத்துகிறார்களோ என்ற சிந்தனை பல காலமாக நியூராலஜிஸ்ட் பயாலஜிஸ்ட் கள் செய்த ஆய்வுகளில்
    இருந்த போதிலும்,
    தற்போதைய முடிவுகள் பெண்களுக்கு சாதகமாக மட்டும் இல்லை. ஆண்களுக்கு பாதகமாகவும் இருக்கிறது என்பதை தயவு செய்து அறியவும்.

    தற்போதைய ஆய்வுகள் சொல்வதெல்லாம், ஒரு பெண், தனது மூளைத் திறனை சூழ்நிலைக்குத் தக்கபடி, தேவைக்கு ஏற்றபடி,சிக்கனமாக பயன்படுத்துகிறாள் என்பதே.
    (அந்த சிக்கனம் தேவை இல்லை என்பது வேறு விஷயம்)

    ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த நாட்டில் பேசுவதை விட பேசாது இருப்பதே நல்லது, இல்லை, இவர்களிடம் பேசிப்பிரயோசனம் இல்லை, தனது எனர்ஜி லெவலை தேவையில்லாது குறைத்துக்கொள்ள்ளவேண்டாம் என்ற எண்ணங்களும் அவர்கள் மூளையில் ஏதோ ஒரு மூலையில் பதிந்து இருக்கும் என்று நினைக்கிறார்கள் போலே.

    மேலும் அடக்கம் பெண்களின் ஜீன்ஸில் இருக்கிறது. இந்த பண்பு ஹெரடிற்றி ஆகவும் வருகிறது.

    நியூராலஜிக்கல் வளர்ச்சி ஏற்படும்போது, பெண்களுக்கு இந்த பண்பு அடக்கம், ஆகியவை ஆண்களுக்குப் பாதிக்கப்படுவது போல .அந்த அளவுக்கும் பாதிக்கப்படுவது இல்லை.

    இன்னொரு விஷயம்.

    ஆண்கள் பெண்கள் மூளையைப் பற்றி பேசுவது போல, பெண்கள் ஆண்கள் மூளை பற்றி பேசுவதில்லை.

    அவர்கள் தெரிந்தவர்கள்.

    சுப்பு தாத்தா.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதன் சுப்புத் தாத்தா. ஆனால், பெண்கள் பேசுவது பப்ளிக்கா இல்லை...வீட்டுல பேசத்தானே செய்றாங்க இல்லையா தாத்தா.....ஹிஹிஹி....அது போல பெண்களைப் பற்றிச் சொன்னால் ஆண்கள் சப்போர்ட் செய்வார்கள். ஆண்களைப் பற்றிக் குறைவாகச் சொன்னால் பெண்கள் சப்போர்ட் பண்ணிப் பேசுவதில்லையே.......இப்படி நிறைய வைஸ் வேர்சாக்கள் இல்லையா ..

      நல்ல விரிவான கருத்து சுப்புத் தாத்தா...

      நீக்கு
  7. இருங்க ஸ்பேர் மூளை ஏதாவது இருக்கான்னு ஹெடிப் பார்த்து எடுத்துக் பொருத்திகிட்டு வந்து படிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  8. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம அளவு மூளை (1400g Or 1.4kg) தான். ஆனால், எங்கட முன்னோர் 'பெண் புத்தி பின் புத்தி' என ஆண், பெண் வேறுபாட்டை உருவாக்கியதன் விளைவே இத்தனை ஆய்வுகள்.

    பால் வேறுபாட்டுக்கும் மூளையைப் பாவிக்கும் ஆற்றலுக்கும் தொடர்பில்லை என்பதே, எனது கருத்து. சில ஆண்கள் அதிகம் மூளையைப் பாவிக்கலாம். அதே போல பெண்களும் அதிகம் மூளையைப் பாவிக்கவில்லை என்பதற்கு சான்றில்லை. ஏனெனில், ஆண்களைப் போலப் பெண்களும் அறிஞர்களாகவோ தலைவர்களாகவோ இருக்கிறார்களே!

    முடிவாகச் சொல்வதானால் பால் வேறுபாடு இன்றி எவரும் மூளையைப் பாவிக்கலாம்; பாவிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  9. உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் கடை ஒன்று இருந்ததாம் அதில் மூளையும் அடக்கம் ஐன்ஸ்டீன் மூளையுடன் (கீதா போன்ற )ஒரு பெண்ணின் மூளையும் இருந்ததாம் ஐன்ஸ்டீன் மூளையை விட பெண்ணின் மூளை விலை அதிகமாகக் கூறப்பட்டது காரணம் கேட்டபோது சிறிதும் பயன் படுத்தப்படாத புத்தம் புதிய மூளை பெண்ணுடையது என்றார்களாம் ........!

    பதிலளிநீக்கு
  10. >>> பெண்களின் மூளை கேட்பதற்கும்/கவனிப்பதற்கும் - என,
    இரு பக்கமும் அதிவேகமாக இயங்குகின்றதாம்.. <<<

    நாம கொடுத்து வச்சது அவ்வளவு தான் போலிருக்கின்றது!?...

    பதிலளிநீக்கு
  11. மதங்கள் தான் ஆணை விட பெண் மூளை மட்டமானது என்று மட்டம் தட்டியே வைத்திருக்கின்றன !

    பதிலளிநீக்கு
  12. தங்களது பாணியில் மூளையை பற்றி சுவையாக எழுதி அசத்தி விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த நாட்டில் பேசுவதை விட பேசாது இருப்பதே நல்லது, இல்லை, இவர்களிடம் பேசிப்பிரயோசனம் இல்லை, தனது எனர்ஜி லெவலை தேவையில்லாது குறைத்துக்கொள்ள்ளவேண்டாம் என்ற எண்ணங்களும் அவர்கள் மூளையில் ஏதோ ஒரு மூலையில் பதிந்து இருக்கும் என்று நினைக்கிறார்கள் போலே.//

    சூரிசார் சொல்வது சரிதான்.






    பதிலளிநீக்கு
  14. பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் குறைவாகத்தான் பயன்படுத்துகின்றார்கள்.

    பதிலளிநீக்கு
  15. மூளை உள்ளவங்க பிரச்சினை என்பதால். பார்வையாளர்கள் வரிசையில் நான்....

    பதிலளிநீக்கு
  16. ஆஹா... நம்ம தலை வேற இங்க உருண்டுருக்கே..... :))

    பதிலளிநீக்கு
  17. ஆஹா, நான் எப்போதாவது மூளையைப் பயன்படுத்தி இருக்கேனா? முதல்லே அது இருக்கா? ஒழுங்கா இருக்கா? அதே தெரியலை! :)

    பதிலளிநீக்கு