வியாழன், 2 ஜூன், 2016

நாங்களும் சந்திப்போம்!!! சந்திப்பு - 1

பதிவர்கள் நீங்கள் மட்டும்தான் சந்திப்பீர்களா? நாங்களும் சந்திப்போம் என்று கிளம்பிவிட்டார்கள் பதிவர்கள் சிலரின் செல்லங்கள்.

எங்கள் வீட்டில் எங்கள் செல்லம் கண்ணழகிக்குத் தொலைபேசி அழைப்பு.

ஹலோ...

சகோ மதுரைத் தமிழனின் செல்லப்பிள்ளை ஸன்னி

ஹலோ இஸ் இட் கேன்னி (Kanny)? ஐ ஆம் ஸன்னி ஃப்ரம் நியூஜெர்சி

எங்கள் செல்லம் கண்ணழகி

ஹை! ஸன்னி!!!.....எப்படி இருக்கிறாய்? (மைன்ட் வாய்ஸ்...இதப்பார்டா அமெரிக்காலருந்து பேசறானாம் பீட்டர் விடரான் பாரு!) நான் கண்ணழகி. கேன்னி இல்லை. அமெரிக்கா என்றால் பீட்டர் விடணுமா? உங்க அப்பா தமிழில்தானே பேசுகிறார்.  எழுதுகிறார். அப்புறம் என்ன? நீயும் தமிழில் பேசு. 

(அடேங்கப்பா நாடகத் தமிழாக இருக்குதே. ம்ம்ம் சமாளிப்போம்) ஓ! மன்னித்துவிடு கண்ணழகி. இங்கு எல்லாம் பத்மநாபனை Paddy  ஏன்றும், மாதவனை மேடி என்றும் தான் கூப்பிடுவார்களா, அதான். சரி... நம் அம்மா, அப்பா எல்லோரும் ப்ளாகர் சந்திப்பு, புத்தக வெளியீடு என்று இடையிடையே  சந்திக்கின்றார்கள்  இல்லையா.!? நாமும் ப்ளாகர் செல்லங்கள் சந்திப்பு என்று சந்தித்தால் என்ன?

சந்திக்கலாம்தான். நீ, ஜெஸ்ஸி, ரஜ்ஜு, எல்லாரும் எங்கள் ஊருக்கெல்லாம் வருவீர்களா உங்கள் ஊரில் பொதுச் சுகாதாரம் மிகவும் நன்றாக இருக்கும் என்று அங்கிருக்கும் இந்திய மக்கள் எல்லாம் பெருமை பேசுவார்கள். அவர்கள் இங்கு வந்தால் பிஸ்லேரி தண்ணியையே காய்ச்சித்தான் குடிப்பார்கள். இங்கு வந்தால் உங்களுக்கு இங்குள்ள வியாதி ஏதேனும் தொத்திக் கொள்ளும் பயம் இருக்குமே....

உங்கள் ஊரில் ஒரே குப்பையாக இருக்குமாமே.... பார்வோ, டிஸ்டெம்பர் எல்லாம் எளிதாகத் தொத்திக்குமாமே....அப்புறம் உங்கள் ஊரில் நம்மவர்கள் என்னைப் பார்த்தால் கடித்துவிடுவார்களா? ரேபிஸ் வந்துவிட்டால்? என் அம்மா, அப்பா, அக்கா எல்லாரும் பாவம். ஆனால், எனக்குத் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள்தான். இருந்தாலும் கொஞ்சம் பயம்தான்.  உனக்கும் தடுப்பூசி போட்டிருக்குத்தானே?

ஹலோ என்ன ரொம்ப அலட்டுகிறாய்! அமெரிக்காவில் மட்டும்தான் ஊசி போடுவார்களா? இங்கும் எங்களுக்குப் போடுவார்கள்.  நீ எங்கள் வீட்டிற்குத்தானே வருவாய். எங்கள் டாக்டர் அண்ணன் பார்த்துக் கொள்வார். உன்னைப் பத்திரமாகத் திரும்ப அனுப்பி வைப்பார்.

என்னது உங்கள் அண்ணன் டாக்டரா! அப்போ நான் உங்கள் வீட்டிற்கு வர மாட்டேன். பிடித்து வைத்து ஊசி போட்டுவிடுவார்...

ஹேய் எங்கள் வீடு உனக்கு ரொம்ப பாதுகாப்பு. அண்ணன், அம்மா மிகவும் கொஞ்சுவார்கள்.  அண்ணன் ஊசி போட்டாலும் ஸ்பெஷல் சாப்பாடு எல்லாம் கிடைக்கும்.  ஆனால் டயட் தான். பிஸ்கட் கவர் பிரிக்கும் சத்தம் கேட்டு, தருவார்களா என்று சும்மா நீ வாலாட்டி ஜொள்ளுவிட்டு அலைந்தாலும் கிடைக்காது. தர மாட்டார்கள்.

எலும்புத் துண்டு கிடைக்குமா. உங்கள் வீட்டுல சைவம் இல்லையா?

ஓ! கிடைக்குமே! சைவம்னா அவர்கள் மட்டும்தான். எனக்கு எல்லாம் பெடிக்ரீ நான் வெஜ் தான் தருவார்கள். அப்பப்போ போன் (bone) கிடைக்கும், சிக்கன் பௌச் கிடைக்கும். நீ வா உனக்கும் அண்ணன் தருவார்.

ஹை! அப்ப நான் உங்கள் வீட்டுக்குத்தான் வருவேன்....

யுகேயிலிருந்து ஜெசி பூனையரசி, நியூஸ்லான்ட்லருந்து ரஜ்ஜு பூனை அரசன், கரந்தையிலிருந்து ஜூலிக் குட்டி, அப்புறம் துளசி அங்கிளின் டைகர், எல்லாரும் வருகின்றார்கள். நமக்குப் பூனையார்கள் கொஞ்சம் அலர்ஜிதான். பரவாயில்லை சமாளித்துக் கொள்வோம்..

அதெல்லாம் சமாளித்து விடலாம். வெல்.! கண்ணழகி, நான் நாளைக்குப் புறப்படுகின்றேன்.

சரி நீ எப்படி வருவாய்? உன் அப்பா மாதிரி டூப்பில் வருவாயா? இல்லை ஒரிஜனலாக வருவாயா. எதற்கு கேட்கிறேன் என்றால் நான் உன்னை விமான நிலையத்தில் கண்டு பிடிக்க வேண்டுமே அதான்....

ஹஹஹ நான் என் அப்பா போல் இல்லை. ஒரிஜனலாகத்தான் வருவேன்....ஆனால் டூப்பென்று சொல்லுவேன். அது சரி நீ தான் என்னைப் பார்த்ததே இல்லையே அப்புறம் எப்படி நான் தான் ஸன்னி என்று சொல்லுவாய்?

(மைண்ட் வாய்ஸ்)
அப்பா....2 கால்... 8 அடி பாய்ந்தார்னா... செல்லப்பிள்ளை 4 கால் 32 அடி பாய்ந்துவிடுவான் போல. கணக்கு ஓகேயா?! மேற்குல இருக்கற அம்மாவின் ஃப்ரென்ட் கணக்குப் பிள்ளைதான் சொல்ல வேண்டும்.

ஹலோ! நாங்கள் பொய் சொல்ல மாட்டோம்.....எங்கள் குடும்பம்  அவர்கள் உண்மைகள்”. அதிருக்கட்டும், உனக்கு இங்கிருந்து என்ன வேண்டும். 

(யப்பா மைன்ட் வாய்ஸ் கூட இவனுக்குக் கேட்டு விடுகிறது.  மதுரைத் தமிழன் அங்கிள்கிட்ட வளர்ந்தால் இப்படித்தான் போல.....நாம் வாய் கொடுக்காமல் ஜாக்கிரதையாதான் இருக்கணும்...ம்ம்ம்)

நீ பெட்டி எல்லாம் கொண்டு வரலாமா? என்றால் உங்கள் ஊரில் நாம் சாப்பிடும் சாக்கலேட் கிடைக்குமாமே அதை வாங்கிக் கொண்டு வா. இங்கு நம்மவர்களுக்குக் கொடுக்கலாம்.

ஓகே! டன்! விமான நிலையத்திற்கு வந்துவிடு. என்னைப் பார்க்கும் ஆர்வத்தில் ரன்வேயில் வந்துவிடாதே. உங்கள் ஊரில் நிறைய நம்மவர்கள் ரன்வேயில் ஓடி வந்துவிட ஃப்ளைட் எல்லாம் தாமதமாகிறதாம். அப்புறம் நான் வரும் விமானம் இறங்க முடியாமல் சுத்திக் கொண்டே இருக்கும். ஒழுங்காக வெளியில் காத்திரு.

ஹேய்! எனக்கும் தெரியும்.....நீ தம்மாத்துண்டு ஜுனியர். 7 1/2 வயதாகிய என்னைக் கலாய்க்கிறாய் நேரில் வா பார்த்துக் கொள்கின்றேன்.

ஸன்னி செம ஸ்டைலாக வந்து இறங்குகிறார். கண்ணில் கூலிங்க்ளாஸ், கழுத்தில் டை, காலில் ஸாக்ஸ் என்று....

கண்ணழகிக்கு அதைப் பார்த்து ஒரே ஆச்சர்யம்.....ம்ம் இதற்கொன்றும் குறைவில்லை. கையில் பை, கழுத்தில் ட்டை, வாயில் பொ.......இல்லை இல்லை அவர்கள் உண்மைகள். இவனிடம் மாட்டிக்கிட்டு அப்புறம் நம் பாடு திண்டாட்டம்...அடங்கு அடங்கு.) அதே சமயம் குழந்தை போல் இருக்கும் அவனது அழகைக் கண்டுச் சொக்கி நின்றாள்!

இருவரும் மூக்கால் உரசிக் கொண்டு ஒருவருக்கொருவர் முகர்ந்து பார்த்துக் கொள்கின்றார்கள். இது அவர்களது ஐடென்டிட்டி ஸ்கானிங்க் சம்பிரதாய பரிசோதனைகள். அது முடிந்ததும்...

முடிந்ததும் என்னாயிற்று? அவர்களின் அலப்பறைகள் நீண்டதால் அடுத்து வருகின்றது....

----கீதா

படங்களுக்கு மிக்க நன்றி : ஏஞ்சலின், சகோ கரந்தையார், சகோ மதுரைத் தமிழன். 




32 கருத்துகள்:

  1. ஹா... ஹா... ஹா... ரசித்தேன். ரஜ்ஜு டீச்சர் வீட்டுச் செல்லம் இல்லையா? ஏஞ்சலின் வீட்டுச் செல்லம் பெயர் என்ன? நாங்கள் இப்போது செல்லங்களை வளர்க்கும் பழக்கத்தை விட்டு விட்டோம். அந்தக் கடைசி அனுபவம்தான் 'நாய் மனம்' பதிவானது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம். ரஜ்ஜு, ஜூலி, ஏஞ்சலின் செல்லம் எல்லாரும் ஏற்கனவே வந்துவிட்டார்கள்....உங்கள் எல்லோரது பார்வைக்கும் வருகின்றார்கள் இன்று இரவு!!!!! பதிவர்கள் நீங்கள் பல மணி நேரங்கள் சந்தித்துப் பேசுகின்றீர்கள்...பல தொடர் பதிவுகள் எழுதுகின்றீர்கள். நாங்கள் ஒரு 3 மணி நேரமாவது பேசவேண்டாமா அதுவும் சிலர் வெளிநாடு. சந்திப்பதே அபூர்வம் என்பது செல்லங்களின் தரப்பு கோரிக்கை அதனால் அவர்களின் அலப்பறை நீளும்...ஹஹஹஹ் (ஏற்கனவே நீ அப்படித்தானே என்று நீங்கள் சொல்லுவது காதில் விழுகின்றது ஹிஹிஹிஹி)

      நன்றி ஸ்ரீராம் ரசித்தமைக்கு

      நீக்கு
    2. ஸ்ரீராம் ஏஞ்சலினின் செல்லத்தின் பெயர் ஜெஸ்ஸி. அடுத்த பதிவில் வருகின்றார்கள். பதிவாகிவிட்டது நெட் பிரச்சனையால் நெட் வரும் போது பதிவை ஏற்றி விடலாம் என்று ...

      நீக்கு
  2. Ha...ha....good imagination. I have not brought my laptop only iPad. Not able to write in Tamil. Cut paste I am too poor.in iPad

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அருணா. நீங்கள் ஊரில் இல்லை என்று கேள்விப்பட்டேன். பரவாயில்லை. நேரம் கிடைக்கும் போது ஆங்கிலத்தில் உங்கள் கருத்துகளைத் தாருங்கள்

      நீக்கு
  3. பதில்கள்
    1. மிக்க நன்றி முரளி சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  4. பாசம் புதிது.. நேசம் புதிது!..
    அழகான கற்பனை..
    ஆமாம் .. அவர்களுக்கும் மனம் இருக்கின்றதே!..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரைசெல்வராஜு ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  5. #உன் அப்பா மாதிரி டூப்பில் வருவாயா? #
    இல்லை இல்லை கழுத்தில் பூரிக்கட்டையுடன் வருவேன் என்று சொன்னதாக கேள்வி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹாஹ்ஹ் பகவான் ஜி இந்தச் செல்லகுட்டி ரொம்பச் சமர்த்துப் பிள்ளையாக்கும்!!!!

      கருத்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  6. ஹா... ஹா... ஹா ஹா... ஹா... ஹா ஹா... ஹா... ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வலிப்போக்கன் ரசித்திருக்கின்றீர்கள் போலும். நாலுகால் செல்லங்கள் அனைத்துமே நம்மை ரசிக்க வைப்பைவையே!

      நீக்கு
  7. நல்ல கற்பனை வளம். இரண்டும் உண்மையாகவே இப்படிப் பேசிக் கொண்டிருக்குமோ! :) எங்க வீட்டிலும் பல செல்லங்கள் இருந்தன. கடைசியாய் மோதிக்குப் பின்னர் ஒரு குட்டி வந்தது. வீட்டில் எல்லோருக்கும் பயம் வந்து அதை வேறே ஒருத்தருக்குக் கொடுத்தாச்சு. அதுக்கப்புறமா செல்லங்களே இல்லை. :) அம்பத்தூரில் இருந்தவரையும் பூனையாரும், பாம்பாரும் தான் செல்லங்கள். இப்போ இங்கே ஒருத்தரும் இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இந்தச் செல்லங்கள் எல்லாம் உண்மையாகவே பேசினால் எப்படி இருக்கும் என்று சிறிய வயது முதல் கற்பனை செய்வதுண்டு. செல்லங்கள் பேசுவது போன்று வரும் கார்ட்டூன்கள், படங்கள் எல்லாம் மிகவும் விரும்பிப் பார்ப்பதுண்டு. என் மகனும் தான். அப்படி வருவதுதான் இது...

      ஓ உங்கள் வீட்டிலும் செல்லங்கள் இருந்தனவா? ஹஹஹ் பாம்பாரும் செல்லங்கள்...உண்மைதான் தூர இருக்கும்வரை ...காக்கைகள் அணில்கள், கிளிகள் புறாக்கள் உங்கள் நண்பர்களாச்சே இப்போ..இல்லையா

      மிக்க நன்றி கீதாக்கா

      நீக்கு
    2. //காக்கைகள் அணில்கள், கிளிகள் புறாக்கள் உங்கள் நண்பர்களாச்சே இப்போ..இல்லையா// இங்கே ஶ்ரீரங்கம் வந்ததிலிருந்து அவைதான் நண்பர்கள். பாம்பார் தூரத்தில் என்ன! கிட்டேவே இருந்திருக்கார்! ஒவ்வொரு முறையும் அவரோட ஒவ்வொரு அனுபவம்! :) நாம நடந்து போகையில் சில சமயம் அவரும் கூடவே வருவார். நடையை நிறுத்தினால் போச்சு! :) இப்போக் கண்ணிலேயே படறதில்லை! சுப்புக்குட்டினு செல்லப் பெயர் வைச்சிருந்தோம் அவற்றுக்கு! :)

      நீக்கு
    3. http://sivamgss.blogspot.in/2014/02/blog-post_6626.html

      எங்க மோதி பற்றிய சிறு குறிப்பை இங்கே காணலாம், படத்தோடு!

      நீக்கு
  8. அலப்பறை அலம்பல் எல்லாமே கூடுதல்தான் இன்னும் தொடருமா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஒரு கற்பனையே சார்....டாக்டர் டூ லிட்டில் படம், மற்றும் சில கார்ட்டூன்களில் வருவது போல்.
      என் சிறு வயதிலிருந்து தோன்றும் கற்பனை இப்போதைய வலை உறவுகள் நிகழ்வுகள் சிலவற்றுடன். தொடரும் சார் இன்னும் இரு பகுதிகளில் முடிக்க திட்டம்...

      நீக்கு
  9. ஆஹா இந்த சந்திப்பும் நல்லாத்தான் இருக்கும் போலயே.... இதுவும் தொடரா ஸூப்பர் தொடர்கிறோம்.... கண்ணழகியை....
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி. இவர்களின் சந்திப்பு மிகவும் அருமையானதுதான் ஜி. நாளை தெரியும் உங்களுக்கு...ஆம் 3 பதிவுகளில் முடிக்க எண்ணம்..சில தகவல்களுடன்...பார்ப்போம்..

      நீக்கு
  10. எங்கவீட்டு கிச்சனில் இருக்கும் சன்னி உங்க வலைத்தளத்தில் வந்திருக்கிறானே ஆமாம் டூப்பில் வரும் மதுரைத்தமிழனை கண்டுபிடிக்க நீங்க வந்த போது அதுமுடியாமல் சன்னியை போட்டோ எடுத்து போட்டு இருக்கிறீர்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹஹ் ஆமாம் தாங்க்ஸ் டு ஏஞ்சல்!!!!(உங்கள் வீட்டு கிச்சனில் இருக்கும் சன்னி இங்கு வந்ததற்கு!!)

      ஹஹஹஹ் உண்மையான மதுரைத் தமிழனை (சன்னியே சொல்லிவிட்டான் எங்கள் குடும்பம் "அவர்கள் உண்மைகள்" என்று. ) கண்டுபிடிக்க நான் கனவில் அமெரிக்கா வந்த போது....சன்னியை எடுத்துவிட்டேனாக்கும்...ஹஹ்ஹ சரி சரி எப்படியும் நான் வராமலா இருக்கப் போகிறேன் அங்கு. வருவேனே! உங்களை டூப்பா இல்லையானு பார்க்க வருகின்றேனோ இல்லையோ நிச்சயமாக குட்டிச் செல்லம் சன்னியுடனும், உங்கள் செல்ல மகளுடனும் விளையாட வருவேன்!

      நீக்கு
    2. ரொம்ப லேட்டா வந்துட்டேன் :)

      சன்னி கண்ணழகி உரையாடல் செம ..//சன்னி அவங்கப்பா கூடவே கிச்சனில் இருக்காப்ல :))//உனக்கும் தடுப்பூசி போட்டிருக்குத்தானே?// ஜெஸ்ஸி சொல்ல சொன்னா அவளுக்கும் ஊசின்னா பயமாம் ..#

      நீக்கு
    3. ஏஞ்சலின் ஹஹஹஹ் ஸன்னிக்கும் சமையல் எல்லாம் தெரியுமாம்....ஹிஹிஹி....ஜெஸ்ஸிக்கும் பயமா!! ஆஹா எங்கள் செல்லங்களுக்கும் எப்படித்தான் தெரியுமோ மகன் ஊசி (பூஸ்டர் டோஸ் வருடா வருடம் கொடுக்க வேண்டியவை.) எடுத்தாலே அவர்கள் இருவரும் பதுங்க ஆரம்பித்து முகத்தை மிகவும் பாவமாக வைத்துக் கொள்வார்கள். காமெடியாக இருக்கும்.

      நல்ல காலம் இருவருக்கும் ஸ்பே ஆப்பரேஷன் தவிர வேறு எந்த ஹெல்த் பிரச்சனைகளும் இதுவரை வரவில்லை. கண்ணழகிக்கு மட்டும் அவ்வப்போது வயிற்றுப் பிரச்சனைகள் வரும் அருகம் புல்லே மருந்து அவளுக்கு. ம்கன் அனாவசியமாக மருந்துகள் கொடுப்பதில்லை.

      ஜெஸ்ஸியைப் பற்றியும் இங்கு வரும் அனைத்துச் செல்லங்கள் பற்றியும் மகனிடம் காட்டிச் சொல்லிவிட்டேன் அவன் ரசித்தான்..

      நன்றி ஏஞ்சல்...

      நீக்கு
  11. என் வீட்டிலும் வளர்ப்பு செல்லங்கள் இல்லை ஆனால் என் வீட்டுக்கு வரும் பறவைகள் எல்லாம் செல்லம் தான்.
    அழகான கற்பனை. செல்லங்கள் சந்திப்பு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி சகோ தங்களின் செல்லங்கள் பற்றித் தெரியுமே உங்கள் உபசரிப்பும்

      நீக்கு
  12. ஹாஹாஹா! வித்தியாசமான சிந்தனையில் உதித்த வித்தியாசமான சந்திப்பு! அலப்பறை தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
  13. அருமை ஐயா.இரசித்தேன் தொடர்கிறேன் ஐயா.நன்றி

    பதிலளிநீக்கு
  14. செல்லப்பிராணிகள் ஆனாலும் பதிவர்வீட்டில் இருந்தால்தான் மதிப்பு

    பதிலளிநீக்கு