அவர்கள் எங்கள் பேட்டையில் உலா செல்ல நினைத்த போது என்ன நடந்தது என்பதோடு முடிகின்றது தொடர்...என்று முடித்திருந்தேன் சென்ற பதிவை...
அவர்கள் உலா செல்ல நினைத்து ப்ரௌனியின் அறையை விட்டு வெளியில் வந்து கண்ணழகி இருந்த இடத்திற்கு வந்தனர்.
ஸன்னி : சரி கண்ணழகி, ஜெஸ்ஸியும் கருவாண்டியும் வெளியில் போய் வரலாமா என்று கேட்கிறார்கள். நீ என்ன சொல்கின்றாய்?
கண்ணழகி : போய் வரலாம்தான் ஆனால் நம்மவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் எங்கள் பேட்டையிலும் பக்கத்துப் பேட்டையிலும். அதான் யோசிக்கின்றேன்.
ஜெஸி/ரஜ்ஜு : சிங்கப்பூர் போன்ற நாடுகளில் எல்லாம் ஒரு சில சாலைகளின் வழியாகச் செல்ல வரி உண்டு தெரியுமா?
ஜூலி : ஹேய் இங்கும் டோல் கேட் உண்டு. சில சமயங்களில் சின்ன தூரத்திற்கே 3, 4 டோல் இருக்கிறது. அவ்வழி செல்ல பணம் கட்ட வேண்டும்.
ஸன்னி : ஓ அப்படியென்றால், நம் பேட்டையிலும் சாலை வழி செல்ல நம்மவர்களுக்கு வரி செலுத்த வேண்டுமோ. அதைத்தான் அம்மா, கப்பம் கட்டுகின்றேன் என்று சொல்லி எழுதுகின்றார்களோ?
கண்ணழகி : ஆமாம்! கப்பம் கட்ட வேண்டும். இல்லை என்றால் எல்லோரும் கத்திக் கொண்டு வருவார்கள். அம்மா எங்க பேட்டையையே அடக்கி வைச்சுட்டாங்க தெரியுமா. யாரும் இப்ப நாங்க வாக்கிங்க் போகும் போது சண்டைக்கு வருவது இல்ல. மட்டுமல்ல எங்கள் பேட்டையிலும் தேர்தல் முடிந்துவிட்டது. மூக்கழகிதான் தலைவி!!
ஸன்னி : ஹ்ஹ அப்போ அம்மா நல்லா லஞ்சம் கொடுத்து எல்லோரையும் அடக்கி வைத்திருக்காங்கனு சொல்லு. அம்மா பேட்டையையே அடக்கி வைத்துவிட்டார்களே அப்புறம் என்ன
டைகர் : ஹை ஸன்னி உன் அப்பாவின் வாசனை அடிக்கின்றதே!! ஹ்ஹ்ஹ
கண்ணழகி : ஆமாம்! ஏதோ அரசியல் வாசனை அடிக்கின்றதே. ஹிஹிஹி அது சரி ஸன்னி, நீ எந்த அம்மாவைப் பற்றிச் சொல்லுகின்றாய்?
ஸன்னி : ஓ! நீ அந்த அம்மாவை நினைத்துவிட்டாயா? ம்ம் அவர்கள் கூட சமீபத்தில் காவல் துறையில் இருக்கும் நம்மவர்களைக் கொஞ்சிய புகைப்படம் பார்த்தேனே. நான் சொன்னது உன் அம்மாவை. ஹ்ஹ்ஹ்ஹ....(என்று மிகவும் பெருமையாக ஒரு லுக் விட்டான் எல்லோரையும். பார்த்து!!!
ஸன்னி, ஜெஸ்ஸி, கருவாண்டி, ரஜ்ஜு எல்லோரும் கண்ணழகியுடன் நடந்துகொண்டிருந்தாலும் உள்ளூர ஒரு சிறு பயம்தான். பேட்டை அல்லக்கைகள் தலைவியுடன் ஓடி வந்து வம்பு பண்ணுவார்களோ என்று.
குப்பையைக் கண்டு ஸன்னி, ஜெஸ்ஸி, ரஜ்ஜு எல்லோரும் வியந்தார்கள்.
படம் இணையம்
அவர்கள் மூவரும் : நம்மவர்கள் எல்லோரும் இங்கு குப்பையில் மேய்கின்றார்கள். குப்பையைச் சாப்பிடுகின்றார்கள். இவர்களுக்கெல்லாம் அம்மா, அப்பா இல்லையா? தெருவில்தான் இருப்பார்களா? வியாதிகள் வருமே!
கண்ணழகி : ஆமாம்! பாவம் இவர்கள் எல்லாம். பார் தோல் வியாதிகள்! நீ கப்பம் என்று சொன்னாயே. அது கப்பமல்ல. அது அம்மா சும்மா அப்படிச் சொல்லுவது. குப்பையைச் சாப்பிடுகின்றார்களே என்று வருத்தப்பட்டு தினமும் அவர்களுக்கு ரொட்டி, பிஸ்கோத்து என்று கொடுப்பார்கள்.
மூவரும் : எங்கள் ஊரிலெல்லாம் வெளியில் நம்மவர்களைப் பார்க்க முடியாது. அப்படியே பார்த்தாலும் நம்மவர்களின் நல அமைப்பிற்குத் தகவல் சொல்லி விடுவார்கள், ஏஞ்சலின் அம்மா செய்வது போல்.
கண்ணழகி : இங்கும் நல்ல உள்ளங்கள் பலர் உள்ளனர். இவர்களுக்கெல்லாம் சாப்பாடு போடவும், இவர்களை தங்கள் வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்து, காப்பகம் போல வளர்ப்பதற்கும். ஸ்ரீராம் அங்கிள் கூட பாசிட்டிவ் செய்தியில் சொல்லுவாரே!
இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது பேட்டையில் உள்ள நாலுகால் எல்லோரும் பட்டாளமாகக் குரைத்துக் கொண்டு ஓடி வர, ஸன்னி பயந்து கீதாவுடன் ஒட்டிக் கொண்டுவிட்டான். கீதா அவனைத் தன் கையில் எடுத்துக் கொண்டுவிட்டாள்.
படம் இணையம்
ஜெஸ்ஸி, கருவாடன், ரஜ்ஜுவைத் தேடினால் காணவில்லை. எல்லோரும் அருகிலிருந்த ஒரு வளாகத்திற்குள் ஓடி ஒளிந்து கொண்டு அங்கிருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். டைகரும், ஜூலியும், கண்ணழகியும் கீதாவின் மற்றொரு கையில் செயினில்.
டைகர் அவர்கள் எல்லோரையும் பார்த்துக் குரைக்க ஆரம்பிக்க, கீதா எல்லோருக்கும் ரொட்டித் துண்டுகளைக் கொடுக்கவும் எல்லோரும் தின்று கொண்டெ மெதுவாகக் குரைத்துக் கொண்டு பின் வாங்கினர்.
ஸன்னி மிகவும் பயந்து விட, ஜெஸ்ஸி, கருவாண்டி, ரஜ்ஜு எல்லோரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
ஸன்னி : எனக்கு இதெல்லாம் புதிதாக இருக்கிறது. நான் இனி இங்கு வரவில்லை நீங்கள் எல்லோரும் அங்கு வாருங்கள்.
ஜெஸ்ஸி/கருவாண்டி : ஹை அப்போ நாங்கள் அமெரிக்கா வருகின்றோம். அமெரிக்காவையும் பார்த்துவிடலாமே!!!
ஜூலி/டைகர் : நாங்கள் எப்படி அங்கு வருவது? தனியாக...விமானம் என்றால் எங்களுக்கு மிகவும் பயம்.
கண்ணழகி : எனக்கும் பயம்தான். நாம் எல்லாரும் அங்கு செல்ல வேண்டும் என்றால் நமக்கு சிப் பொருத்தி விடுவார்கள். கென்னல் போன்ற பெட்டியில் நம்மை வைப்பார்கள். இங்கு அண்ணா வேலை செய்யும் க்ளினிக்கில் செய்கின்றார்கள். இங்கிருந்து நிறைய நம்மவர்கள் அமெரிக்கா, லண்டன், எல்லாம் போகின்றார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதி முறை இருக்கிறதாம் அண்ணா சொல்லுவார். யு கேயின் விதி முறைகள் சற்றுக் கடினமாம்.
ஸன்னி : இதோ எனக்கும் கூட பொருத்தித்தான் அனுப்பியிருக்கிறார்கள். நாம் எங்கேனும் போனாலும் இந்தச் சிப் வைத்து நம்மைக் கண்டு பிடித்துவிட முடியும். நமக்கும் விமானத்தில் டிக்கெட் எல்லாம் எடுக்க வேண்டும் தெரியுமா?
ஜூலி/டைகர் : ஓ அப்படியா! முடிந்தால் வருகின்றோம். கண்ணழகி நீ போவாயா? ப்ரௌனியும் வருவாள் தானே?
கண்ணழகி : ப்ரௌனி பற்றி எனக்குத் தெரியாது. அவள் வீட்டை விட்டே வெளியில் வர மாட்டாள். அவள் விமானத்திலா.
ஸன்னி, ஜெஸ்ஸி, கருவாண்டி : ஆரம்பித்துவிட்டாயா ப்ரௌனி பற்றி. சரி நம்மைப் பற்றிப் பேச இன்னும் நிறைய இருக்கிறது. அடுத்த சந்திப்பில் பேசுவோம். அப்போ நாங்கள் எல்லோரும் இப்போது விடை பெறுகின்றோம். அடுத்த முறை எங்கு சந்திப்பது என்று முடிவு செய்வோம். தொடர்பில் இருப்போம் ஓகேயா.
கீதா எல்லோரையும் அழைத்துக் கொண்டு விமான நிலையம் செல்ல அங்கு ஜெஸ்ஸியின் மற்ற நண்பர்களும் இருக்க எல்லோரும் இவர்களைப் பார்த்துக் கொண்டே உள்ளே மறைய, பத்திரமாக ஏற்றி விட்ட திருப்தியில், ஜூலி, டைகரையும் அவர்கள் ஊருக்கு ஏற்றிவிட்டு, மனம் கனக்க இவர்கள் வீடு திரும்பினார்கள்.
கரந்தை சகோ, துளசி இங்குதான் என்பதால் விசாரித்துக் கொள்ளலாம்.
மதுரை சகோ. உங்கள் செல்லப் பிள்ளை பத்திரமாக வந்து சேர்ந்தான் தானே! ஏஞ்சல் உங்கள் செல்லக் குட்டிகள் அனைவரும் வந்து சேர்ந்தார்கள்தானே. துளசி அக்காவையும் கேட்டுவிட வேண்டும். ரஜ்ஜு வந்து சேர்ந்தானா என்று.
ஒரு வழியாக முடித்துவிட்டேன். இன்று நானும், மகனும் பயணம். இன்னும் ஒரு வாரம்/10 நாட்கள் வலைப்பக்கத்திற்கு விடுமுறை. முடிந்தால் இடையில் எட்டிப் பார்க்கின்றேன். 10 நாட்களுக்கு நீ.................ளமான மொக்கைப் பதிவுகள் எங்கள் தளத்தில் உங்களைத் தொல்லைப்படுத்தாது. ஹிஹிஹி...
நல்லதொரு தொடர். நல்லதொரு சந்திப்பு.
பதிலளிநீக்குமாநாடு நலமுடன் முடிந்து விட்டது செல்வங்களுக்கு வாழ்த்துகள் அதோடு வழக்கம்போல 10 நாட்கள் விடுமுறையும் அறிவித்தாகி விட்டது ஸூப்பர்
பதிலளிநீக்குதமிழ் மணம் 2
ஹாஹாஹா யாரோ என நினைத்துப் படித்தால் செல்லச் செல்லங்களா .அருமை :)
பதிலளிநீக்குஅருமை வித்தியாசமான நாலுகால் நடையை ரசித்தோம்
பதிலளிநீக்குநல்லது...
பதிலளிநீக்குThe concept you have taken and the way in which you have handled in really good .Had you told me earlier about it I would have made it a starry one ,by sending a cat which is always loitering our apartment and my balcony wooden loft is the maternity ward for the cat and post natal care unit without any payment . The owner of the cat is an actress who was very busy and famous about 8 years back .
பதிலளிநீக்குவிடுமுறைக்குப்பின் தொடருமா?
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குசெல்லங்களை வைத்து அருமையான பதிவு எழுதியதற்கு பாராட்டுக்கள் சென்னைக்கு விமானத்தில் வந்த சன்னி ஜுலை முதல் வாரத்தில் என் கூட எனது வேனில் 2300 மைல் பயணம் செல்லப் போகிறான் .இந்த பயணத்தில் நான் என் குழந்தை சன்னி முவரும் செல்லுகிறோம் எனது மனைவி விமானத்தில் வருகிறாள். சன்னிக்கு இது மிக நீண்ட முதல் பயணம்.
பதிலளிநீக்குகடந்த வாரத்தில் 100 மைல் தூரத்தில் உள்ள நீர்விழ்ச்சியை காண எங்களுடன் பயணித்து வந்தான்
செல்லங்களின் சந்திப்பும் அவர்கள் பேச்சுகளும் அருமை.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇனிமையான சந்திப்பு தொடருங்கள் அண்ணா. வேலையின் நிமிர்த்தம் வலைப்பக்கம் வரவில்லை இனி வருகை தொடரும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆஹா.... என் பெயரும் நினைவுக்கு வந்திருக்கிறதே.. இடம் பெற்றிருக்கிறதே...!
பதிலளிநீக்குரசித்தேன்.
வித்தியாசமான தொடர் .....
பதிலளிநீக்குசந்திப்பு வித்தியாசமானது))
பதிலளிநீக்குவித்தியாசமான சந்திப்பு. வித்தியாசமான உரையாடல்! எல்லோரையும் பத்திரமாக அவரவர் இருப்பிடத்துக்கு அனுப்பியதுக்கு நன்றி. :)
பதிலளிநீக்கு