திங்கள், 21 ஜூலை, 2014

பொறந்தாலும் பொம்பளையா பொறக்கக் கூடாதோ?...அப்படிப் பொறந்துவிட்டா?.....


     ஆண் பெண் இரு பாலருக்கும் இடையே உருவாகும் ஆழமான அன்பாம் காதல் உணர்வு அவர்கள் இருவரும் ஈருயிர் ஓருடல் என்பதை புரியவைக்கும் அற்புதமான ஒன்றும், வரும் தலைமுறைக்கு உயிர் கொடுக்கும் ஒரு புனிதமான நிகழ்வும்தான் கலவி என்பது.  இது இயற்கையின்/இறைவனின் படைப்பிலுள்ள சகல உயிரினங்களுக்கும் பொதுவான ஒன்றே.  பகுத்தறிவுள்ள மனிதர்களில், ஈடுபாடுடன் இருவரும் இணைந்தால் கிடைக்கப் பெறும் இணையற்ற இன்பம் அவர்களது ஆழமான அன்பை, அவர்களது உடல்நலம் குறைந்தாலும் கூட நிலை நிறுத்தி, ஒருவரது மரணத்திற்குப் பின்பும் மற்றவர்க்கு மருந்தாய் நின்று அவரை அவரது மரணம் வரை பேணிக் காக்கும்.

     ஆனால், இருவரில், கணவன் மனைவியாகவே இருந்தாலும், யாரேனும் ஒருவருக்கு ஈடுபாடு இல்லையென்றாலும், இணைதல் என்பது இருவருக்கும் மனதில் பயத்தையும், வெறுப்பையும், விரக்தியையும், விரோதத்தையும் மட்டுமே ஏற்படுத்தும்.  அதனால் தான் பாலியல் பலாத்காரத்திற்கு இரையாகும் பெண்களின் மன நிலை மோசமாக பாதிக்கப்படுகின்றது. அப்படிப்பட்ட மன நிலையில் உள்ள பெண்கள் ஒருவேளை கருவுற்றால், அதனால் பிறக்கும் குழந்தைகள்  உடல் மற்றும் மன நிலையும் iகண்டிப்பாக பாதிக்கப்பட்டதாகவே இருக்கும். அதனால்தான் பாலியல் பலாத்காரத்திற்கு இரையாகும் பல பெண்களும் தற்கொலை முயற்சியில் இறங்குகிறார்கள். அதே போல் ஆண்களில் பெரும்பான்மையானோர், பலாத்காரத்திற்குப் பின் ஏற்படும் பயம், விரக்தி, விரோதத்தால் அப்பெண்ணைக் கொலை செய்ய முயல்கின்றார்கள். கடந்த வருடம் டெல்லியில் ஓடும் பேருந்தில், நடந்த அந்த மிருகத்தனமான பலாத்காரமும், பலாத்காரத்திற்குப் பிறகு அப்பெண்ணைக் கடப்பாறையால் குத்தியவர்களின் ஈவு இரக்கமில்லாத மன நிலையையும் கூட இதைத்தான் காட்டுகின்றது.



நமது நாட்டில் நடக்கும் பெரும்பான்மையான குற்றங்களின் பட்டியலில் பாலியல் பலாத்காரம் 4 இடத்தில் இருக்கின்றது. 2013 வது வருட புள்ளிவிவர அறிக்கை என்ன சொல்லுகின்றது என்றால், 24,923 பலாத்கார வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும், அதில், 24,470 உறவினர்களாலும், தெரிந்த நபர்களாலுமே பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது!. ஒரு ஆண்டில் நடக்கும் இது போன்ற சம்பவங்கள் 1.9 திலிருந்து 2.0/100,000 பேர், அதிகரித்துள்ளதாகச் சொல்லுகின்றது.

மது மற்றும் போதை மருந்துகளின் உபயோகமும், மொபைலில் எளிதாகக் காணக் கிடைக்கும் பாலியல் இச்சையைத் தூண்டும் ஆபாச வீடியோக்களும், ஊடகங்களில் காணப்படும் பாலியல் பலாத்காரங்களைப் பற்றிய அளவிற்கதிகமான வர்ணனைகளும், காட்சிகளும், அபரிதமாக உணவு உட்கொள்ளுதலும், கவர்ச்சித் தோற்றமளிக்கப் பெண்கள் தங்களது உடையில் செய்யும் மாற்றங்களும், அலங்காரங்களும், பாலியல் பலாத்காரக் குற்றவாளிகள் எளிதாகத் தப்பிக்கச் சட்டத்தில் ஒளிந்திருக்கும் ஓட்டைகளும், சமூகத்தில் நீதியை நிலைநாட்ட வேண்டியவர்களிடையே நிலவும் லஞ்சம் வாங்கும் நிலைமையும் தான் இது போன்ற பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வழி வகுக்கின்றன.

மேலை நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் கூட பாதிக்கப்படும் பெண்கள் நமது நாட்டைவிட அதிகம் தான் என்று புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன. அமெரிக்காவிலும், ஆப்பிரிக்கவிலும் மிகவுமே அகிதமாம். ஆனால், மேலை நாடுகளில் அதிகமாக இருந்தாலும், தற்கொலை முயற்சியில் இறங்காமலிருக்கக் காரணம், மேல் நாட்டு சமூகம் அப்பெண்களுக்கு நேர்ந்தது ஒரு விபத்து என்று எடுத்துக் கொள்வதாலும், அவர்கள் சிகிச்சை தேவைப்பட்டால், சிகிச்சை எடுத்துக் கொண்டு பின்னர் பழைய வாழ்கைக்குத் திரும்பி வாழ நினைப்பதும்தான். ஆனால், இத்தகையப் பெண்களின் பாதிப்பு சிறிதோ, பெரிதோ ஆவது அவர்கள் பெற்ற கல்வியறிவாலும், மன முதிர்ச்சியாலும், சுற்றி இருப்பவர்களின் ஆதரவாலும் கிடைக்கப் பெற்ற மன வலிமையைப் பொருத்துத்தான் இருக்கின்றது.


டெல்லி சம்பவமும், வழக்கும் இந்தியர்களின் கண்களைத் திறந்ததால், இந்த வழக்கு மட்டுமல்ல, அதற்கு முன்பு நடந்த பல பலாத்கார வழக்குகளும் உடனடித் தீர்வு காண வழிவகை செய்திருக்கிறது. ஒரு செடி தான் அழிந்து மற்றொரு செடிக்கு உரமாவது போல்.
2011 டிசம்பர் 24ஆம் தேதி இரவு, வங்க தேசத்திலிருந்து அரைவயிறும், கால்வயிறும் உணவுண்டு சேமித்த பணத்துடன், துணைக்குத் தன் சித்தப்பாவையும் அழைத்துக் கொண்டு, வறுமை காரணமாக புலம் பெயர்ந்து கர்நாடக மாநிலத்திலுள்ள, விராஜ்பேட்டையில் கூலி வேலை செய்யும் தன் காதல் தோழனைத் தேடி வந்தாள் 16 வயதுள்ள ஒரு பெண்.  தன் காதலன் அங்கிருந்து கேரளாவில் கண்ணூர் அருகே “இருட்டி எனுமிடத்தில் வேலை செய்யப் போயிருப்பதை அறிந்து, அங்குச் செல்ல வேண்டி தன் சித்தப்பாவுடன், பேருந்துக்காகக் காத்திருந்த போது, அவ்வழியே சென்ற லாரியில் வந்த சில கயவர்கள், அவர்களை இருட்டியில் இறக்கி விடுவதாகச் சொல்லி ஏமாற்றி கூட்டிச் சென்று, காட்டினுள் சித்தப்பாவை அடித்துக் கட்டி விட்டு அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல் தொலைபேசியில் நண்பன் ஒருவனையும் வரவழைத்து அவனும் பலாத்காரம் செய்ய உதவி, பின்னர் அப்பெண்ணை விடுவிக்காமல் லாரியில் மீண்டும் ஏற்றிச் சென்றிருக்கின்றார்கள். வழியில் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தவேண்டி வர, அப்போது அப்பெண் லாரியிலிருந்து இறங்கி ஓடிக் கூச்சலிட்டு ஆட்களைக் கூட்டி, அவர்கள் உதவ, தப்பியிருக்கின்றாள்.


ஆனால், அதன் பின் அந்தப் பெண்ணின் மனநிலை பாதிக்கப்பட்டது. அந்த நிலை அறிந்து பலரும் உதவி செய்ய முன் வந்தனர்.  கேரள அரசும் மருத்துவ உதவி அளிக்க முன் வந்தது. இந்நிலையில் இரு வருடங்கள் ஓடிட,  டெல்லி சம்பவம் செய்தித்தாளில் பெரிய அளவில் வெளி வந்ததும், பாலக்காடு சீனியர் சிட்டிசன் பாரத்தின் செயலாளரான திரு T. பரமேஸ்வரன், உயர் நீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பிய புகாரும் சேர்ந்து வழக்கை இன்னும் தள்ளிப் போடாமல், மன நிலை குன்றி வாழும் அவ் வங்கப் பெண்ணின் வாழ்வை சீர் குலைத்த கயவர்களுக்கு உரிய தண்டனை வழங்க உதவியிருக்கின்றது. அந்த லாரியின் சொந்தக்காரர், ஓட்டுநர்கள் எல்லோருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ 1,25,000 அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.

மனிதத் தோல் போர்த்திய இந்தக் காமப் பேய்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையோ, அபராதத் தொகையோ, மன நிலை பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணுக்கு அவள் இழந்த வாழ்க்கையைத் திரும்பப் பெற்றுத் தரப் போவதில்லைதான்.  இருப்பினும், இந்த அளவேனும் நீதி கிடைத்துள்ளதே என்றும், இவ்வாறு வழங்கப்படும் தண்டனைகள், இனியாவது இது போன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க உதவாதா என்ற சிறிய சந்தோஷமும், நம்பிக்கையும்தான். என்னதான் சிறிய சந்தோஷமும், நம்பிக்கையும் கிடைத்தாலும், இது போன்ற சம்பவங்கள் வெளியில் தெரிய வராமலேயே பல இடங்களில் பெண்களும், சிறு பெண் குழந்தைகளும் சீரழிக்கப்படுவது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வெளியில் தெரியாமல் போவதற்குக் காரணம் அந்தப் பெண்கள் வெளியில் சொல்ல வெட்கப்படுவதாலும், பயத்தினாலும்தான்.

Video for bokoharam

இங்கு, காமப் பேய்களின் காம இச்சைக்குப் பலியாகும் பெண்கள் ஒரு புறம்.  அதேசமயம், ஆப்பிரிக்கா, நைஜீரியாவில், மதத்தின் பெயரால், தெய்வத்தின் பெயரால் பெண் குழந்தைகள் படும் துயரை என்னவென்று சொல்வது? இருநூறுக்கும் மேற்பட்ட 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகளைக் கட்த்திச் சென்று இருத்தவர்களான அவர்களை மதம் மாற்றிக், கட்டாயப்படுத்தி மணம் செய்வித்து, இப்போது அவர்களில் பெரும்பான்மையானோர் கர்பம் தரித்திருக்கின்றார்களாம். மன நிலை பாதிக்கப்பட்ட அந்தச் சிறிய பெண் குழந்தைகளுக்கு பிறக்க இருக்கும் குழந்தைகளும் எப்படி நல்ல குழந்தைகளாகப் பிறந்து வளர முடியும் என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே! அவர்களால் சமூகத்திற்கோ, பொக்கொஹராம் இயக்கத்திற்கோ எந்த நன்மையும் பயக்கப் போவதில்லை! பெண்ணாகப் பிறந்தவர்கள் பருவம் அடைந்தவுடன், அது 10 வயதாக இருந்தாலும், 12 வயதாக இருந்தாலும் சரி, உடனடியாக மணம் முடித்து குழந்தைகளைப் பெற வேண்டுமாம்.  கல்வி கற்பது பாவமாம். இது இறைவன் ஆணையாம்! 

இப்படி இறைவன் பெயரால் நடத்தப்படும் காடுமிராண்டித்தனத்திற்கு பலிகடாவாகி, சிறுவயதிலேயே தாயாகும் பெண்கள் மறுபுறம்.  இப்படிப் பெண்ணாய் பிறந்தவர்கள் உலகெங்கும் துனுபுறுத்தப்படுவதைச், சித்திரவதை செய்யப்படுவதைப் பார்க்கையில் மனதில் ஏற்படும் வலி தாங்க முடியாதது. நம் நாட்டில் இது போன்ற குற்றங்கள் செய்பவர்களை, சிறிது தாமதித்தாலும், நீதிமன்றம் தண்டிக்கின்றது.  ஆனால், நைஜீரியாவில் உள்ள இத்தகைய பாவம் செய்யும் இயக்கத்தினரை தண்டிக்கப்போவது யார்? கிடைக்குமா நீதி?  விடுதலை கிடைக்குமா அந்தப் பெண் குழந்தைகளுக்கு?  இறைவன்/காலம்தான் பதில் சொல்ல வேண்டுமோ?

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்களுக்கும், அந்தப் பெண் குழந்தைகளுக்கும், கொடுமைகளுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளாகும் பெண்களுக்கும் தோன்றுமோ “பொறந்தாலும் பொம்பளையா பொறக்கக்கூடாதோ என்று? ஆனால், பலாத்காரத்திற்கு ஆளாகிய பெண்கள் மன நிலை பாதிக்கப்படாமல் மீண்டுவிட்டால், தற்கொலை போன்ற கோழைத்தனமான முடிவு எடுக்காமல், அவர்கள் இதனை ஒரு விபத்தாக ஏற்றுக் கொண்டுத் தைரியமாக வாழ்வை எதிர்நோக்கி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.  எனவே “பொறந்துவிட்டா பெண் சிங்கமாய், தைரியமாய் வாழ்ந்திட வேண்டும்! (இங்கு பொக்கொஹராமால் கடத்தப்பட்டக் குழந்தைகளைச் சொல்ல வில்லை.  அவர்களுக்கு விடுதலையே கிடைக்கவில்லையே! பின்னர் அல்லவா வாழ்க்கை)

“அரசன் அன்று கொல்வான். ஆனால், உலகில் எத்தனையோ அரசர்கள் இருந்தும் யாரும் கொல்லவில்லை. எந்த முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை!  தெய்வம் நின்று கொல்லும்! கொல்லும்தானே?!!  காத்திருப்போம்!



படங்கள் : உதவி கூகுள் இணையம்.  புள்ளி விவரம் : உதவி விக்கிபீடியா




47 கருத்துகள்:

  1. ''மதத்தில்'' தவறில்லை அவன் புரிந்து கொண்ட ''விதத்தில்'' தான் தவறு ஐயா, இதற்கு அடிப்படை காரணம் பெண்களே தாங்கள் குறிப்பிட்ட உடைகுறைப்பு என்பது மிக முக்கியமான விசயம் இனிவரும் காலங்களிலாவது பெண்கள் உணர்ந்து மாற்றத்துக்கு வரவேண்டும் இதுவே எனது அவா.

    பதிலளிநீக்கு
  2. தெய்வத்தின் பெயரால் இதெல்லாம் நடக்கிறது எனும்போது....

    இதையெல்லாம் கண்ட தெய்வம் பயந்து நின்று கொள்ளும்.
    ஆப்பிரிக்க பெண்கள் கடத்தப்பட்டவுடன் டி வி... மீடியா என்று
    பேசிக்கொண்டே இருந்தது. இப்போ....?

    என்னவோ போங்கள்....

    பெண்கள் தாமாக பயம் தெளிந்து முன்னுக்கு வராத வரையில்
    சில கயவர்கள் அவர்களைப் போட்டு மிதித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்கள் தாமாக பயம் தெளிந்து முன்னுக்கு வராத வரையில்
      சில கயவர்கள் அவர்களைப் போட்டு மிதித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.//

      மிகச் சரியான கருத்து சகோதரி! அதைத்தான் பெண்கள் உணரவ் ஏண்டும் என்பது எங்களின் ஆதங்கமும், வேண்டுகோளும்!

      நீக்கு
  3. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் கயவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டும் நண்பரே. அப்பொழுதுதான் மற்றவர்கள் இதுபோன்ற இழி செயலினைச் செய்யத் தயங்குவார்கள்
    தம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வன்மையாகத் தண்டிக்கப்படவே வேண்டும் அரபு நாடுகளைப் போல்! மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  4. இதே போல மதத்தின் பெயரால் நடந்த இத்தகுக் கொடுமைகள் பற்றித்தான் தஸ்லீமா நஸ்ரீன் தனது நாவலில் எழுதினர். மதத்தின் பெயரால் ஆட்சியாளர்கள் எதிர்ப்பின்றி நடக்கும் இது போன்ற சம்பவங்களை என்ன செய்ய?

    நம் நாட்டில் தனி மனித ஒழுக்கங்கள் குறைந்துகொண்டே வருகின்றன என்று தோன்றுகிறது. மேலும் இந்நாளின் ஊடக வசதிகள் இவற்றை வெளிக் காட்டவும் உதவியிருக்கலாம். நம் நாட்டின் கூட்டுக் குடும்ப வாழ்வு, பள்ளிகளில் மாரல் சைன்ஸ் வகுப்புகள் ஆகியவை காணாமல் போனதெல்லாம் கூட ஒரு காரணம். டெக்னாலஜியின் வளர்ச்சி இல கெடுப்பதைத் தவிர்க்க முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஸ்லீமா நஸ்ரீன் எழுதியது பற்றி எங்கள் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தோம். தனிமனித ஒழுக்கம் குறைவதற்கு முன்பு போல் பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்புகள் காணாமல் போனது மிக முக்கியக் காரணம் தாங்கள் சொல்லி இருப்பது போல்! டெக்னாலஜி மறு புறம்....எந்த வளர்ச்சியையுமே நல்ல கண்ணோட்டத்தில் நோக்கினால் கெட்டதைத் தவிர்க்கலாமே! இல்லையா?

      மிக்க நன்றி மிக அழகான பின்னூட்டத்திற்கு!

      நீக்கு
  5. இன்னும் உலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையவில்லை. பெண்கள் எல்லாத்துறைகளிலும் முன்னேறிவிட்டார்கள் என்று சொல்பவர்கள், இன்றைக்கு நடக்கும் இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு என்ன பதில் சொல்லுவார்கள்.

    உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான இம்மாதிரியான வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனையை வழங்க ஒரே சட்டத்தை பின்பற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரியான கேள்வியே! பெண்கள் முன்னேற்றம் எனப்து ஒரு புறம்....சீரழிவு இன்னொரு புறம்! எல்லா நாடுகளிலும் நடக்கத்தான் செய்கின்றாது! தாங்கள் சொல்லியிருக்கும் தீர்வு சரியே ஆனால் பின்பற்றப்படுமா?

      நீக்கு
  6. வடமொழிச் சார்பினவே எனினும் தமிழ் சொல்லும் பிரம்மம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம் எனும் எண்வகை மணங்களுள் இது இராக்கதத்துள் படும். விரும்பா நிலையில் ஒரு பெண்ணை வலிந்து கொள்வதுமல்லாது எப்போதும் தன்னுடனே வைத்திருக்க மணம் எனும் பெயரால் சடங்கும் வேறு!
    கைக்கிளை- ஒருதலைக் காமம் என்றும் பெருந்திணை - பொருந்தாக் காமம் என்றும் கூறும் இலக்கணங்கள்( சிறியோள், துயின்றோள், விரும்பாதாள் போன்றோரிடம் வலிந்து புணர்வது), பொருந்தாக் காமத்தை ஏன் பெருந்திணை எனல் வேண்டும் என்பதற்கு, “அதுவே சமூகத்தில் பெருவரவிற்று“ என அளிக்கும் விளக்கம்,பண்பாடற்ற தொல்குடிச் சமூகத்தின் எச்சமாக இருப்பதாகக் கொள்ளமுடியும். மறுதலையாய் பெருந்திணைப் பாடல்களைப் பெரும்பாலும் கொண்டிராத இலக்கியமாகவே சங்க இலக்கியம் விளங்குகிறது.
    இன்று, பண்பாட்டின் உச்சமென வாழ்கின்ற நாளில் , ஆதி மனிதனின் மிருகப் பண்புகள் , மனம் கிழித்தெழுகின்றமையை கவலையோடு சுட்டிக் காட்டுகிறீர்கள். மனதிருத்த வேண்டிய விடயம் தான்!
    பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரும்பா நிலையில் ஒரு பெண்ணை வலிந்து கொள்வதுமல்லாது எப்போதும் தன்னுடனே வைத்திருக்க மணம் எனும் பெயரால் சடங்கும் வேறு!//

      சரிதான் ஐயா! மணம் என்னும் சடங்கில் கூடத் தவறில்லை....ஆனால் மனம் ஒத்த மணமில்லையென்றால் அந்தச் சடங்கு சடங்கே அல்ல...அதில் நடப்பது கண்டிப்பாக ஒரு பலாத்காரம்தான்....

      எவ்வளவு ஆழ்ந்த விடயங்களைத் தாங்கள் சங்க இலக்கியங்களிலிருந்து எல்லாம் கொடுத்துள்ளீர்கள்! அருமை! நாங்கள் எல்லாவற்றையும் குறித்துக் கொண்டுள்ளோம்! ஐயா! கருத்துள்ள பின்னூட்டம் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  7. மதவாதிகளின் இப்படிப்பட்ட செய்கைகளுக்கு எதிராக ஒரு மலாலா அல்ல ,ஓராயிரம்
    மலாலாக்கள் தோன்றுவார்கள் ,ஒருவிடிவு பிறக்கும் என்று நம்புவோம் !
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கைதான்! வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல் இங்கு ஆள்பவர்களே அப்படி இருந்தால் என்ன செய்வது ஜி?

      மிக்க நன்றி ஜி!

      நீக்கு
  8. தமிழகத்தில் பதிவான பாலியல் பலாத்கார வழக்குகள்

    2011 ஆம் ஆண்டு 677
    2012 ஆம் ஆண்டு 737
    2013 ஆம் ஆண்டு 923
    2014 ஆம் ஆண்டு... ?????????வயிற்றில் புளியை கரைக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழா....ஹும் என்னத்த சொல்ல 2014 இனிதானே வெளிவ்ரும்! கூடிக்கிட்டேதானே போயிருக்கு....அப்ப இன்னும் கூடித்தான் இருக்குமோ? கேவலம்!

      நீக்கு
    2. பெண்கலைப் எற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் பெண்கள் வீடு திரும்பும் வரை....பெண்கள் இனி வீறு கொண்டு எழுந்தால் மட்டுமே இந்தக் குற்றங்கள் நடக்காமல் இருக்க வழியுண்டு....

      நீக்கு
  9. பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் சட்டப்படி தண்டன கிடைக்கும் என்பதைவிட, வாழ்நாள் முழுக்க சமூகத்தில் தனியாக ஒதுக்கப் பட்டுவிடுவோம் என்கிற பயம் அவர்களுக்கு வர வேண்டும்..அதற்காக அவர்களின் படங்களை அச்சிட்டு பலவிதங்களில் புறக்கணிக்க வேண்டும் அதாவது அவர்களுக்கு நோய் வந்தால் எந்த மருத்துவர்களும் மருத்துவ மனைகளும் சிகிச்சை அளிக்க கூடாது எந்த ஹோட்டல்கள் , பப்ளிக் டிரான்ஸ்போர்ட்டுகளில் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது நட்பு, உறவு, வீடு வாடகைக்கு கொடுப்பது, வேலைவாய்ப்பு என பல விஷயங்களில் அப்படிப்பட்ட கிராதகர்களை புறக்கணிக்கவேண்டும்.. இப்படியெல்லாம் பொதுமக்கள்தான் செய்ய வேண்டும் இதில் அரசாங்கம் தலையிடக் கூட முடியாது. இப்படி செய்ய இந்திய மக்கள் முன்வருவார்களா?

    பதிலளிநீக்கு
  10. // கொல்லும் தானே...? // - கண்டிப்பாக...! மனச்சாட்சி என்னும் தெய்வம் ஒருநாள் தினம் தினம் கொல்லும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொல்லணும்! உருப்பட மாட்டார்கள் இந்தக் கயவர்கள்!

      நீக்கு
  11. (த.ம.7) கற்பழிப்பு நிகழ்ச்சிகளுக்குப் பெருத்த விளம்பரம் கிடைப்பதின் எதிர்மறையான விளைவாகவே இத்தகைய செய்திகள் ஊடகங்களில் பெரும் அளவில் இடம் பெறுகின்றன என்று நினைக்கிறேன். எல்லா சமுதாயங்களிலும் பாலியில் சார்ந்த குற்றங்கள் நடந்துவந்திருக்கிறன என்பதே வரலாறு. 'பிறன்மனை நோக்காத பேராண்மை' என்று வள்ளுவர் கூறுவதின் கருத்து என்ன? சங்க காலத்தில், இது ஒரு நோயாக, அதுவும், மெத்தப்படித்த சான்றோர்கள் இடையில் இருந்துவந்துள்ளதைத் தானே இது காட்டுகிறது! ஆனால் இன்றோ, ஐந்து வயது முதல் பத்து வயது வரை உள்ள பெண் குழந்தைகளின் மீது இத்தகைய வன்முறை எவ்வப்படுவாதாக வரும் செய்திகள்தான் மனதை என்னவோ செய்கிறது. நீதித்துறை, அரசியல், ரவுடிகள் போன்ற செல்வாக்குகளுக்கு அஞ்சாமல், லஞ்ச ஊழல்கள் இன்றிச் செயல்படுமானால் ஓரளவுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. 'கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்' போன்ற கடுமையான சட்டங்களை நிறை வேற்றி தண்டிக்க வேண்டும்...இல்லையென்றால் இக்காலத்தில் இதுபோன்ற கொடுமைகள் ஒழியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டமே அரசியல்வாதிகள் கையில் இருந்தால் என்ன செய்வது நண்பரே!

      மிக்க நன்றி!

      நீக்கு
  13. சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  14. மூட நம்பிக்கை, ஆதிக்க மனோபாவம், பண்பாட்டுத் தளம்பல் இப்படிப்
    பல காரணிகள் பல தவறுகளுக்கும் வழியமைக்கின்றது.

    திருத்தம் எல்லாவற்றிலும் அவசியம்!

    நல்ல பதிவும் பகிர்வும் சகோதரரே!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூட நம்பிக்கை, ஆதிக்க மனோபாவம், பண்பாட்டுத் தளம்பல் //

      நல்ல கருத்து சகொதரி! மிக்க நன்றி!

      நீக்கு
  15. கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்! பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைத்தான் நாம் எல்லொரும் சொல்லி வருகின்றோம்! ஆனால் யாதார்த்தத்தில் எதுவுமே நடப்பதில்லையே!

      மிக்க நன்றி சுரேஷ்

      நீக்கு
  16. வணக்கம்

    இப்படியான கயவர்களை முச்சந்தியில் வைத்து கட்டிப்போட்டு சுடவேண்டும்... அப்போதுதான் மற்றவர்கள் செய்ய பயப்படுவர்கள் நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    த.ம7வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுடவேண்டும்தான்...ஆனால் மனித உரிமை கழகத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கு என்ன சொல்வார்களோ?!!! மிக்க நன்றி தம்பி தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  17. எத்தனை வழிகள் இருக்கிறது அத்தனை வழிகளையும் திறந்து வைத்தால் ஒரு சில மனிதர்களே மனிதர்களாக எஞ்சியிருக்கிறார்கள்! பெரியார் கல்லூரியில் படிக்கையில் சொல்வார்கள். சாஸ்திரம் சொல்கிறதாம் ஒரு பொண்ணு அழகா இருக்காளே என்று ஆண் நினைத்துவிட்டாலே அவளது முதல் கற்பு போய்விடுமாம்:(( நாம் நகரவாசி ஆகிறோமா? நரகவாசி ஆகிறோமா என கவலைகொள்ளச்செய்கிறது பதிவு!
    தம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நரக வாசிகள்தான்! கிராமங்களும் இப்போது நகரங்களாகி வந்து கொண்டுதான் இருக்கின்றன!

      சாஸ்திரம் சொல்கிறதாம் ஒரு பொண்ணு அழகா இருக்காளே என்று ஆண் நினைத்துவிட்டாலே அவளது முதல் கற்பு போய்விடுமாம்// இது கொஞ்சம் ஓவர் இல்லையா சகோதரி!? அழகே உன்னை ஆராதிக்கின்றேன் என்று கவிதை கூடப் பாட முடியாது போலருக்கே! என்னமோ போங்க!

      நீக்கு
  18. என்று மாறும் இந்த இழிநிலை!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் கேள்வியே சகோதரி! பெண்ணைப் பெற்றவர்கள் எப்படித் தவிப்பார்கள்! அதுவும் நீங்களே உங்கள் ஒரு பதிவில் தங்கள் மகள் ட்யூஷன் லருந்து தாமதமானப்ப, மழை வேறு ....வயித்துல நெருப்பு கட்டிக்கிட்டு....ஆமாங்க உங்களப் போல எத்தனை அம்மாக்கள்....என்ன தீர்வு? காலம் கெட்டுப் போச்சு இதுதான் நம்மளைப் போன்றவர்கள் சொல்லிக் கொள்ளும் சமாதனம்....

      நீக்கு
  19. மனித உருவில் மிருகங்கள் ! அதிகம் வளர்கின்றன! என்பதுதான் உண்மை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் விலங்குகள் உயர்வானவைதான்...ஆறறிவு படைத்த மனிதன் தான் விலங்காகின்றான்! மிக்க நன்றி ஐயா தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  20. பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்து முடிந்து, குறிப்பிட்ட குற்றவாளிக்கு மூன்று மாதத்திற்குள் உரிய தண்டனை கிடைக்கட்டும். அப்புறம் பாருங்க. அவனவன் அடங்கி கிடப்பானுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக நல்ல கருத்து நண்பரே! கண்டிப்பாக அடங்கித்தான் போவானுங்க....ஆனால் ஏன் அந்த நீதி தாமதிக்கின்றது?!! அரசியல் தலையீடா? இல்லை நீதிபதிகளின் குற்றமா? இல்லை மக்களின் இயலாமையா?

      நீக்கு
  21. மின் வைத்தியம் செய்ய வேண்டும்
    மிருகங்களுக்கு....
    துடிதுடித்தால் தெரியும்
    துள்ளல் தவறென்று...
    மின் அதிர்ச்சியின் தழுவல்
    மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில்...
    மிரண்டு போவர் வெறியர்கள்.

    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! மிக மிக அருமையான தீர்வுதான்....அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்! தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா! தங்களைத் தொடர்கின்றோம்!

      நீக்கு
  22. வணக்கம்!

    கற்கின்ற கல்வியினைப் பாவம் என்று
    கதைக்கின்ற கயவர்களைக் கழுவில் ஏற்று!
    விற்கின.ற பொருளாகப் பெண்ணை எண்ணி
    விளையாடும் கொடுமைக்கு வைப்போம் புள்ளி!
    நிற்கின்ற சிலைக்கழகாய் சேலை கட்டி
    நிலவுலகில் இன்வைக்க முடியா தென்பேன்!
    புற்றென்று கூறிடுவேன்! முழுதும் நீக்கி
    புவிசுற்ற வில்லையெனில் தூள்தூள் ஆகும்!


    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன அருமையான கவிதைப் பின்னூட்டம்! ரொம்பவே ரசித்தோம்......மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  23. இன்றைய சமூகத்தின் சீரழிவுக்கு மிகவும் தேவையான ஒரு பதிவை அருமையான ஆரம்பத்துடன் கொடுத்துள்ளீர்கள்.

    பாலியில் வன்முறையில் உடலைவிடவும் அதிகம் பாதிக்கப்படுவது மனமே !

    மிக ஆழமான, சிந்திக்கத்தூண்டும் பதிவு.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    தங்களுக்கு நேரமிருப்பின் எனது " பாலியல் புரிதலற்று புழுத்துபோகும் சமூகம் " பதிவை படித்து கருத்திடுங்கள்.நன்றி

    http://saamaaniyan.blogspot.fr/2014/02/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! மனம்தான்! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு! கண்டிப்பகத் தங்கள் பதிவை வாசிக்கின்றோம்! கருத்தும் உண்டு!

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  24. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : இனியா அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : இனியா

    வலைச்சர தள இணைப்பு : ஆலயம் தொழுவது சாலவும் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி மிக்க நன்றி! பார்த்தோம்! பின்னூட்டமும் இட்டுவிட்டோம்! மிக்க நன்றி!

      நீக்கு