செவ்வாய், 8 ஜூலை, 2014

நான் அவளில்லை......?!

 

"நான் அவனில்லை" திரைப்படத்தில் வரும் ஹீரோ போல் பல பெண்களை மணம் புரிந்து அவர்களிடமிருந்து பணம், நகை எல்லாம் கொள்ளையடித்த பிறகு, அவர்களை விடுத்து வேறு பெண்கள் சிக்குவார்களா என்று, பல ஆண் ஹீரோக்கள் நம் சமுதாயத்தில் நம்மிடையே உலவி வருவதை நாம் செய்திகளில் பார்க்கின்றோம். என்ன..."நான் அவனில்லை" படத்தில் ஹீரோ போலீசிடம் சிக்கி, கோர்ட்டுக்குப் போனாலும் "நான் அவனில்லை" என்றுத் தப்பிக்க முடிந்தது!  சினிமா என்பதால்...ஆனால் நிஜத்தில் இப்படி ஏமாற்றும் ஆண்கள் போலீசில் சிக்கினால் முட்டிக்கு முட்டிதான்! தப்பித்தும் இருக்கலாம்தான்! யாரறிவர்? ஆண்களைப் போன்று பெண்களும், இது போன்று, "நான் அவளில்லை" (?!) என்று பல ஆண்களை  மணம் புரிந்து அவர்களிடமிருந்து நகை, பணம் எல்லாம் கொள்ளையடிப்பதை வாசிக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது! பெண்களுமா?! என்று. இப்படிப் பல பெண்கள் இருப்பதாகத் தெரிகின்றது! அதில் ஒன்றுதான் இங்கே!

கடந்த மாதம் கேரளா, கோட்டயம் அருகே சிங்கவனம் வெள்ளுத்துருத்தியைச் சேர்ந்த 40 வயதைக் கடந்த சசிதரன் என்பவர் தனக்கு ஏற்ற மணமகள் தேவை என்று செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்திருந்திருக்கின்றார்.  தன் வாழ்கைத் துணையாக வரவிருக்கும் முகம் தெரியாத அந்த அழகியைப் பற்றிச் சிந்தனையில் எப்போதும் மிதந்த ஆட்டோ ஓட்டுனரான அவருக்கு, நல்ல காலம் விபத்து எதுவும் ஏற்படவில்லை!  சில நாட்களுக்குப் பிறகு எர்ணாகுளத்திலிருந்து ஒருவர், கணவரை இழந்த தனது தங்கைக்காகத், தான் தொடர்பு கொள்வதாகச் சொல்லி, விவரங்களைக் கேட்டறிந்துவிட்டு, "உங்களைப் பற்றி விசாரித்து அறிந்த பின் உங்களை மீண்டும் தொடர்பு கொள்கின்றேன்" என்றும் சொல்லி இருக்கிறார்.  அதன் பின் சசிதரனுடன் பேசியதெல்லாம், மணப்பெண்ணான சாலினிதான். சசிதரனின் ஊரருகே இருக்கும் தனது உறவினர்கள் அவரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் சொன்னதாகவும், தனக்கும் சசிதரனின் குணம் (பேசிக் கேட்டதால்??!!) பிடித்து விட்டதாகவும், நேரில் சந்தித்து, பின்னர் இறுதி முடிவு எடுக்கலாம் என்றும் சொல்லியிருக்கிறார். "நல்லவனான என்னைச் சந்தேகித்து விசாரித்தது போல், நற்குணம் (?) படைத்த உங்களை சந்தேகித்து நான் விசாரிக்கப் போவதில்லை" என முடிவு செய்திருப்பாரோ என்னவோ, சசிதரன் அந்தப் பெண்ணைக் குறித்து எதுவும் விசாரிகவில்லை போலும்!

அதன் பின் சசிதரனை ஃபோனில் அழைத்து, "ஆட்டோ ஓட்டுநரான உங்களுக்கு, வக்கீலான என்னை மணமுடிக்க என் அண்ணனுக்கு விருப்பமில்ல.  அதனால், நீங்கள் என்னை பெண் பார்க்க வீட்டுக்கு வர வேண்டாம்.  ஆனால், நான் சங்கனாச்சேரி வருகின்றேன். அங்கு நாம் இருவரும் நேரில் சந்திக்கலாம்" என்று சொல்லியிருக்கின்றார் சாலினி. இருவரும் சந்தித்து தங்கள் விருப்பத்தை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், ஃபோனிலும் பேசி தங்கள் உறவை உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்! இன்றைய காலகட்டத்தில் பட்டிதொட்டி எல்லாம் அலைபேசிகள் கிடைக்கும் போது....அலைபேசி இருக்கையில் காதல் வளர்க்க உதவியதோ இல்லையோ,  இதில் சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு இந்த அலைபேசிகள் எதிரிகளாகிப் போயின!

இப்படி செல்ஃபோன் வழியாக உறவு வளர்ந்து வந்த வேளையில், ஒரு நாள், சாலினி, சசிதரனுக்குப் ஃபோன் செய்து, "என் அண்ணியின் உறவினரான ஒருவரை மறுமணம் செய்ய என்னை, என் அண்ணன் ரொம்ப வறுபுறுத்துகின்றார்.  அதனால், நீங்கள் என் வீட்டுக்குத் தெரியாமல் உடனே என்னை மணம் செய்ய வேண்டும்." என்று சொல்ல, சசிதரன், "அப்படியென்றால் நமது திருமணத்தை உடனேயே பதிவு செய்ய வேண்டும்" என்று சொல்ல அதற்கு சாலினி, முதலில் ஏதேனும் ஒரு கோயிலில் தாலி கட்டியபின், திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லியிருக்கின்றார்.  சசிதரனுக்குச் சந்தேகம் வராதது ஆச்சரியமே! 

ஜீன் 5ஆம் தேதி வெள்ளுத்துருத்தி கோயிலில் திருமணம் என்று முடிவு செய்து, முந்தைய தினம், கல்யாணச் சேலை, மற்றும் தாலிச் செயின் எடுக்க சாலினி, சசிதரனின் உறவினர்களுடன் சென்றிருக்கின்றார்.  தனியேவந்த சாலினியிடம் "திருமணத்திற்காவது தோழிகள் சிலரையேனும் அழைத்துவரவேண்டும்" என்று சசிதரன் சொல்ல, அதற்கு, "தோழிகளை நம்பமுடியாது (?!). அவர்களில் யாரேனும் அண்ணனிடம் நம் திருமணத்தைப் பற்றிச் சொன்னால் பிரச்சினையாகிவிடும்" என்று சொல்லியிருக்கின்றார்.  இப்போதாவது சசிதரனுக்குச் சந்தேகம் வந்திருக்கலாம்!  இல்லை! என்பது ஆச்சரியம்தான்!

கல்யாண நாளான ஜீன் 5 ஆம் தேதி, சாலினி வந்திறங்க, சசிதரனின் நண்பர்கள் அவரைக் கோயிலுக்கு அழைத்துவந்து திருமணமும் நடந்திருக்கின்றது!  அதற்குப் பிறகு இருவரும், பீச்சுக்குச் சென்றிருக்கின்றார்கள். அப்போது சாலினிக்கு அலைபேசியில் அழைப்புவர, "என்னை என் சீனியர் வக்கீல் ஒரு கேஸ் விஷயமாகப் பார்க்கவேண்டுமாம்.  நான் அவரைப் பார்த்துவிட்டு உடனே திரும்புகின்றேன்."  என்று சொல்ல, சசிதரன் தானும் கூட வருவதாகச் சொல்லவும், "வக்கீலுடன் என் அண்ணனும் இருக்கிறார்.  அதனால் நாம் இருவரும் போவது ஆபத்து" என்று சொல்லி, தான் 1/2 மணி நேரத்தில் திரும்பி வருவதாகச் சொல்லிப் போனவர்தான்.  1 மணி நேரம் ஆகியும் வராததால், சாலினியை அலை பேசியில் அழைக்க "ஸ்விட்ச் ஆஃப்" என வரவே, சசிதரன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றார்.  தன் திருமணச் செலவிற்காக சசிதரன் கூட்டுறவு வங்கியிலிருந்து 2 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்று அதில் 5 பவுன் தங்கச் சங்கிலி வாங்கி சாலினிக்குக் கொடுத்ததுடன், தன் கையிலிருந்த மீதி 50,000 ரூபாயையும் சாலினியிடம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டிருக்கின்றார்.

காவல்துறையினர் ஒரே வாரத்தில், பழனியில் தலைமறைவாய் வாழ்ந்த (ஆண்டியப்பன், ஆண்களை ஆண்டியாக்கும் தன்னைக் காப்பான் என்று சாலினி நினைத்திருக்கலாம்!!!) சாலினியைக் கைது செய்த போதுதான் சாலினி என்னும் கல்யாண வீராங்கனை பல காரணங்களால், இது போன்று தாமதமாகத் திருமணம் செய்ய விரும்புபவர்களைத் தேடிக் கண்டுபிடித்து மணம் செய்து, மண நாளிலேயே நகை மற்றும் பணத்துடன் ஓடும் பழக்கமுடையவர் என்று தெரிய வந்திருக்கின்றது! இது போல பலதரப்பட்ட, நல்ல வேலையிலிருக்கும் ஆண்களை மணந்து, அவர்களிடமிருந்து, நகைகள், பணம், செக்குகள் என்று பலதும் கவர்ந்து சென்றிருந்திருக்கின்றார். வக்கீல் ஒருவரும், வக்கீல் என்று சொல்லிய இவரால் ஏமாற்றப்பட்டிருக்கின்றார் என்பது இன்னும் ஆச்சரியம்!  பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது இதுதானோ?!  ஏமாற்றப்பட்டவர்கள் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு போலீசில் புகார் செய்யாததால், தனிக்காட்டு ராணியாய் "நான் அவளில்லை" என்று திரிந்த சாலினியைப் பற்றியச் செய்தி வெளி வந்ததும், பலரும் அவரைப் பற்றிப் புகார் செய்யத் தொடங்கியிருக்கின்றார்கள். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் ஆண்கள் ஆனதால், அவர்கள் பரிதாபத்திற்குரிவர்கள் அல்ல என்று ஆகிவிடுவதில்லையே!......  
குற்றம்புரிந்தவர் ஆணோ, பெண்ணோ, யாராக இருந்தாலும் அவர் செய்த குற்றத்திற்குத் தண்டனை தரத்தானே வேண்டும்?  ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்!  எனவே, இது போன்ற திருமண விளம்பரங்களில் எப்போதும், எல்லோரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது மிக மிக அவசியம்!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

45 கருத்துகள்:

  1. ஏமாற்று பேர்வழிகளில் ஆண் பெண் பேதமெல்லாம் கிடையாது என்பதை உணர்த்தும் அருமையான பதிவு.

    " ஆண்டியப்பன், ஆண்களை ஆண்டியாக்கும் தன்னைக் காப்பான் என்று சாலினி நினைத்திருக்கலாம்!!! "

    போன்ற பகடிகள் அருமை !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr


    எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

    http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html

    ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சாமானியன்! முதலில் தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! தங்கள் பாராட்டிற்கும் மிக்க மிக்க நன்றி! தங்கள் பதிவு வாசித்து பின்னூட்டமும் இட்டாயிற்று! தங்கள் பழைய பதிவுகள் எல்லாம் வாசிக்க வேண்டும்! வருகின்றோம்!

      நீக்கு
  2. பெண்களில் பேய்களாக இப்படி சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள்.

    நாம் தான் தெரியாதவர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
    நல்ல விழிப்புணர்வு பதிவு ஐயா.
    த.ம. 1


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களே தங்கள் குலத்திற்கு இப்படி இழிவு உண்டாக்குகின்றார்களே என்றுதான் வருத்தம்! மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  3. அனைவருக்குமான அருமையான
    எச்சரிக்கைப் பதிவு
    தலைப்பும் சொல்லிச் சென்ற விதமும்
    மிக மிக அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சார்! தங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும்!

      நீக்கு
  4. வணக்கம்
    அண்ணா.

    உண்மையில் நல்ல தகவலை சொல்லியுள்ளீர்கள் இப்படியான கூட்டங்கள் இருக்கத்தான் செய்யும் எல்லாவற்றுக்கும் விழிப்புத்தேவை. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. இந்தியாவில் நிறைய ஏமாளிங்க இன்னும் இருக்காங்க போல இருக்கு... இங்கே கஷ்டப்படுவதை விட பேசாம நான் இந்தியாவிற்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறேன்... என்ன சொல்லுறீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவுக்கு வந்தால் நிறைய பூரிக்கட்டைகள் காத்திருக்கிறதாம்....

      நீக்கு
    2. வாங்க! தமிழா வாங்க! ஆனா என்ன.....நான் அவனில்லை அப்படின்னா.....ஏமாறமாட்டீங்க! நான் அவளில்லை கிட்ட மாட்டினீங்கனா உங்களுக்கு நாமம்! ஆனா இரண்டுமே நடக்காது.....அதுக்கு முன்னாடி உங்க வீட்டுல அல்ரெடி பூரிக்கட்டை தூக்கியாச்சுனு கேள்விப்பட்டோம்....எதுக்குங்க வம்பு! ஆனா இந்தியாவுக்கு வாங்க.....அதான் உங்க லேட்டஸ்ட் பதிவுல உங்க வருகையை சொல்லியிருக்கீங்களே ! உண்மையும், நகைச்சுவையும் கலந்த பதிவுதானே?!!!!!

      நீக்கு
    3. சொக்கன் சார் அது அமெரிக்காலதானே?!!!!

      நீக்கு
  7. ஆணுக்குப் பெண் சற்றும் இளைப்பில்லை காண்
    பெண்களும் இந்த வேளையில் இறங்கிவிட்டார்களா
    ஆண் பெண் இருவருமே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலம் இது
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆணுக்கு நிகர் பெண் என்பதை இப்படியெல்லாம் காட்டுகின்றார்களே.....

      மிக்க நன்றி நண்பரே தங்கள் அழகிய கருத்திற்கு!

      நீக்கு
  8. பலநாள் திருடன்(டி) ஒரு நாள் அகப்படுவான்(ள்)...

    பதிலளிநீக்கு
  9. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.....

    முதிர் கன்னிகள் போலவே முதிர் கண்ணன்களும் இப்போது நிறைந்து விட்டார்கள்... எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல, யோசிக்காது முடிவு எடுத்து திண்டாடுகிறார்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதிர்கண்ணன்கள்....ஆம்! நல்ல அழகான கருத்திற்கு மிக்க நன்றி வெங்கட் சார்!

      நீக்கு
  10. சிங்கவனத்திற்குள் புகுந்து சசிதரனுக்கு அல்வா கொடுத்த ஷாலினிக்கு எத்தனை பேரோ ?அவளால் நொந்தவர்கள் எத்தனை பேரோ ?இனிதான் தெரிய வருமோ ?டிவி க்கு இன்னொரு கிரைம் ஸ்டோரி ரெடி !
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏமாந்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்! அந்த லிஸ்டும் இருந்தது. இடுகையில் கொடுத்திருந்தோம்! பதிவு நீண்டு போனதால் எடுத்துவிட்டு சுருக்கினோம்! ஜி!

      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! ஜி!

      நீக்கு
  11. ஆணும் பெண்ணும் சரி சமம் ஐயா.

    இதே தலைப்பில் நானும் ஒரு பதிவை எழுதியிருக்கிறேன்.

    http://unmaiyanavan.blogspot.com.au/2012/08/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆணும் பெண்ணும் சரி சமம் ஐயா.

      ஆம் சரிதான்! எல்லாவற்றிற்கும் தண்டனை உட்பட அப்படித்தானே!

      தங்களது பதிவைக் கண்டிப்பாக வாசிக்கின்றோம்! சார்! ஒவ்வொன்றாக வாசித்து வருகின்றோம்!

      மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  12. இதுவும் சினிமா மாதிரிதான் இருக்கிறது..விறுவிறுப்பும் கவர்ச்சியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா...ஆம் அதுவும் சரிதான்!

      நன்றி தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  13. ஏமாற்றுவதில் ஆணென்ன, பெண்ணென்ன? இப்படி ஒரு வழி இருக்கிறது என்று தெரிந்தால் போதுமே...பாவம் அவர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் சரியே! நன்றி தங்கள் கருத்திற்கு! மிக்க நன்றி!

      நீக்கு
  14. சில நாட்களுக்கு முன் ஒரு பதிவு எழுதி இருந்தேன்.( முக நூல் அறிமுகத்தில் இருவர் சந்திக்கப் போக நேரில் கண்ட ஏமாற்றத்தில் அவளை அவன் கொலை செய்து விட்டதாகப் பத்திரிக்கைச் செய்தியை அடிப்படையாகக்கொண்டு.)யார் யாரை ஏமாற்றுகிறார்கள் என்பதல்ல பிரச்சனை . ஏமாறுகிறார்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் உண்மை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா! முகநூல் வழி முகம் தெரியாமல் காதலித்து நேரில் கொலை எல்லாம் நடக்கின்றது! தாங்கள் சொல்லும் கருத்து சரிதான் ஐயா! ஏமாறுகிறார்கள், ஏமாற்றுகிறார்கள்!!! உண்மை!

      மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  15. ஆறு விதமான பேய்கள் பற்றிக் குறிப்பிடுவார் அவ்வையார்,
    “... தன்னைப் புகழ்வானும் சாட்சிசொல்லி நிற்பானும்
    ...பொன்னைமிகத் தேடிப் புதைப்பானும் - ஒண்ணலர்
    ... நண்புத்தி கேட்பானும் நாணமிலா தானும்
    ... பெண்புத்தி கேட்பானும் பேய்!
    என்று.
    ஒரு பெண்ணே பெண்புத்தி கேட்பவனைப் பேய் என்று சொல்கிறாளே என எனக்குச் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.
    அடிக்குறிப்பில்,
    “ சாலினி குறித்துச் சசிதரனுக்கு ஔவை சொல்லியது“
    என்பதைச் சேர்க்க மறந்து விட்டார்கள் என்பதைத் தங்களின் பதிவினைப் பார்த்தபின் தான் தெரிந்து கொண்டேன்!
    அறிவூட்டியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ஒரு அருமையான பின்னூட்டம்! கருத்து நிறைந்த...அதுவும் ஔவை மூதாட்டியின் இனிய தமிழ் மேற்கோளுடன்...நாங்கள் தங்கள் பின்னூட்டத்தின் கருத்துக்களை, முக்கியமாக இது போன்றத் தமிழ் மேற்கோள்களைக் குறித்து வைத்துக் கொள்கின்றோம்! மேலும் அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், சிந்தையைத் தூண்டுவதாக இருப்பதாலும்,!

      மிக்க மிக்க நன்றி! ஐயா!

      நீக்கு
  16. படிச்சவங்க தான் அதிகம் ஏமாறுகிறார்களோ ? சுஜாதாவின் ஒரு சிறு கதை நினைவுக்கு வருகிறது:(( என்னமோ போங்க சகா பாவம் தான் அந்த பொண்ணு:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் படித்தவர்கள்தான் அதிகம் ஏமாறுவது போல் தோன்றுகின்றது! என்னங்க சகோதரி....பொண்ணுன்றதுனால ...பாவம்?!!!!???!!!!!

      நீக்கு
  17. அடக் கொடுமையே! பெண்கள் இதிலும் போட்டிக்கு வந்துட்டாங்க போலிருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா....ஆமாம் அப்படித்தான் தோணுதுங்க! மற்ற விஷயங்களில் ஆணுக்கு நிகர் பெண்ணாக இருப்பது மிகவும் அவசியமே...ஆனால் இது போன்றவை...ஏற்கனவே இந்தச் சமுதாயம் பெண்ணை இழிவாகப் பேசும் போது இது இன்னும் கூடுதலாக்குகின்றதல்லவா?!

      நீக்கு
  18. மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!

    பதிலளிநீக்கு
  19. ' ஷாலினி' என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்த பெயர். அந்தப் பெயருள்ளவளா இப்படி மோசடி செய்திருக்கிறார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா.....ஏன் சார் ஷாலினி பெயருள்ளவங்க மோசடி செய்ய மாட்டாங்களா?!!!! அவங்க ஆள மாத்தறா மாதிரி நீங்களும் அவங்க பேர மாத்திக்கங்க....பரவாயில்ல..சார்....

      நீக்கு
  20. பெரியோர்கள் சும்மாவா சொன்னார்கள், 1000 பேரிடம் போய் சொல்லி கல்யாணம் செய் என்று.
    பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் 80 உண்மைதான்.

    தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். ஐயா காரணம் நான் தங்களது பதிவில் ஜோய்ண்ட் செய்துள்ளேன் தாங்கள் ஜோய்ண்டில் இல்லாததால் பதிவு எனக்கு தெரிய தாமதமாகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா......பொய் ஓகேன்றீங்க........காலம் கெட்டுப் போச்சுங்க....

      உங்களுக்கும், செல்லப்பா சாருக்கும் நாங்கள் கொடுத்த பதில் எங்க போச்சுன்னே தெரிலங்க.....திரும்ப இன்று கொடுத்திருக்கின்றோம்...இங்கு....

      நாங்கள் தங்கள் வலையில் தொடர்கின்றோமே...சேர்ந்து....ஓ அங்கயும் நாங்க காணாம போயிட்டோமோ? சரி இன்னுருமுறை வந்து ஒளிஞ்சுக்கறோம்..ஓகேயா கில்லர் ஜி?!!!!!!

      நீக்கு