வியாழன், 17 ஜூலை, 2014

பந்தயங்கள் வைத்தலில் உருளுவது தலை மட்டுமல்ல தலை(மண்டை)ஓடும் தான்!!


         தன் கேள்விகளுக்குப் பதிலளிக்காதவர்களின் தலையை வெட்டிய "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாமணி"களைப் போன்றவர்கள் நம் நாட்டில் வாழ்ந்த கதைகளைப் பற்றிக் கேட்டிருக்கின்றோம். 


ஜெயிக்க வேண்டிய ஆட்டத்தைத் தோற்க வைத்துப் பந்தயக்காரர்களைக் காப்பாற்றிய அசாருதீனின் தலை உருளவில்லை.  ஆனால், அவருடைய "கிரிக்கெட் தலை" உருண்டே விட்டது. சிறிது நாட்களுக்கு முன்பு, சிறிதாகத் தலையை நுழைத்து இந்திய அணியில் இடம் பிடித்த ஸ்ரீசாந்த் தன் கர்சீஃப் மூலம் சமிக்ஞை கொடுத்துப் பந்தயக்காரர்களுக்கு உண்மையானவராக இருக்க முயன்ற போது பிடிபட்டதால், அவரது கிரிக்கெட் தலையும் உருண்டேவிட்டது. இதையெல்லாம் நாம் பல செய்தித் தாள்கள் மூலம் அறிந்ததுதான். இப்படிப் பந்தயம் வைப்பதாலும், பந்தயம் வைப்பவர்களுக்கு உதவுவதாலும் உருண்ட தலைகளும், தலைவர்களின் பதவிகள் பறி போனதும் நாம் அறிந்ததுதான். ஆனால், ஒரு பந்தயத்தால் வருடங்களாகக் கல்லறையில் எவருக்கும் எந்தவித சிரமமும் கொடுக்காமல் புதைந்திருந்த ஒரு "மண்டைஓடு" உருண்டிருக்கிறது.  இதுவரை நாம் கேட்டிராதது.

    திருச்சூர், சாலக்குடி, பரியாரம் பூவத்திங்கள் தேவாலயத்தின் கல்லறையில் ஓரிரவு, சில இளைஞர்கள் நுழைந்து ஒரு கல்லறையைத் திறந்து ஒரு "மண்டைஓட்டை" எடுத்துச் சென்றுவிட்டார்கள்.  மண்டைஓடு காணாமல் போனதெல்லாம் யார் கவனிக்கப் போகிறார்கள்?  என்று நினைக்கின்றீர்கள் இல்லையா?..உங்கள் ஊகம் சரிதான்.  ஆனால், தான் இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் போன அந்த மண்டை ஓடு தன் இடத்தை அடைய வேண்டும் என்று நினைத்தது போலும்! அப்படி ஒரு சம்பவமும் அதையடுத்த நாட்களில் நடந்தது. 

 பஞ்சாயத்துத் தொழிலாளர்கள், சாலையின் இரு புறமுள்ள ஓடைகளைச் சுத்தம் செய்த பொது கண்ட ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்துப் போட, அதிலிருந்து உருண்டு வெளியே வந்தது அந்த மண்டை ஓடு.  பிறகு கேட்கவா வேண்டும்?  காவல்துறையினரும் பொதுமக்களும், மீதமுள்ள உடலெலும்புகளுக்கானத் தேடல்கள்!  விசாரணைகள்!  இறுதியாக, அந்த மண்டை ஓடு வெளிவந்து உருண்டு எல்லோரையும் உருட்டியதற்குக் காரணமான மூன்று இளைஞர்கள் பிடிபட்டனர். 

ஒரு இரவு முழுவதும் ஒரு மண்டை ஓட்டைப் பக்கத்தில் வைத்து அந்த இரவைக் கழிக்க வேண்டும் என்பதுதான் பந்தயம். பயமின்றி கல்லறைக்குப் போய் மூவரும் மண்டை ஓட்டை எடுத்து வந்து, பந்தயத்தை ஏற்ற இளைஞர், அதைத் தன் வீட்டிற்குக் கொண்டு சென்றும் இருக்கின்றார்.  ஆனால், சிலமணி நேரங்கள் கடந்த பின்புதான், பலவித சிந்தனைகளால் பயம் வந்திருக்கின்றது. அந்த இளைஞருக்கு மட்டுமல்ல, மற்ற இரு நண்பர்களுக்கும்.  வேறு வழி?  எல்லோரும் சேர்ந்து அதை பிளாஸ்டிக் பையில் கட்டி ஓடையில் எறிந்த பின் நிம்மதியாக(?) அவரவர்களது வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். 

ஆனால் மண்டை ஓடு தன்னைத் தன் இருப்பிடத்தைச் சேரும்வரை யாரையும் விடுவாதாயில்லை.  பஞ்சாயத்துத் தொழிலாளர்கள் மற்றும் பிளாஸ்டிக் பையின் உதவியால் தன்னைக் கடத்தியவர்களை அடையாளம் காட்டித் தன் இருப்பிடத்தைக் காவல்துறை மற்றும் தேவாலயத்தைச் சேர்ந்தவர்களின் உதவியால் அடைந்தேவிட்டது. 

ஏனோ, காவல்துறை, பந்தயக்காரர்களான அந்த இளைஞர்களின் மீது எந்தப் புகாரும் பதியவில்லை! எச்சரித்து அனுப்பிவிட்டது.  கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் உறவினர்களும், இளைஞர்களின் உதவியால் மண்டை ஓடு எடுக்கப்பட்டக் கல்லறை ஏதென்று அறிந்து அங்கு அந்தத் தலை ஓட்டை வைத்ததால், நிம்மதியிழந்து விட்டார்கள் தேவாலயத்தின் காவலர்கள்! இரவுக் காவல் அவர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டுவிட்டதால்! 


பந்தயம் வைத்து விளையாடுவது என்பது, “இளம் கன்று பயம் அறியாது என்பது போல், இளம் வயதினருக்கு ஏற்படும் ஆர்வக் கோளாறுதான். என்றாலும் இப்படியுமா பந்தயம் வைத்து விளையாடுவார்கள் இளைஞர்கள்?! கற்ற கல்வி என்னாயிற்று? காவல் துறையினருக்கும், மக்களுக்கும் இந்தப் பந்தையத்தால் தலைவலி விளைவித்ததைத் தவிர்த்து, தங்கள் பொன்னான நேரத்தையும், அறிவையும் வீணாக்காமல் இருந்திருக்கலாமே என்ற எண்ணம் நமக்கெல்லாம் வருவது இயற்கைதானே!

படங்கள்: நன்றி கூகுள் இணையதளம்

31 கருத்துகள்:

  1. போயும் போயும் மண்டையோட்டைத் திருடியிருக்கிறார்களே, மண்டையில் மசாலா இல்லாத பேர்வழிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஅ.....ஆம் மசாலா இல்லாத பேர்வழிகள்தான்!

      சார் நீங்கள் பதிவு இட்டவுடன் சூடாக பின்னூட்டம் இட்டுவிட்டீர்கள்....ஆனால் நாங்கள் சற்றுத் தாமதமாகத்தான் பதில் தர முடிகின்றது! மன்னிக்கவும்!

      ஹாஸ்யமான கருத்திற்கு மிக்க நன்றி சார்!

      நீக்கு
  2. வணக்கம்
    அண்ணா.
    எத்தனை வகையாதன பந்தயம் உள்ளது தங்களின் பதிவு வழிதான் அறிந்த புதிய பந்தயத்தை அதுவும் மட்டை ஓடுட்டுப் பந்தயம்... வித்தியாசமாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! தம்பி ரூபன் தங்கள் கருத்திற்கு! ஆம் வித்தியாசமான பந்தையம்தான்!

      நீக்கு
  3. இது என்ன காலக்கொடுயாவுள்ள இருக்கு, நாளைப்பின்னே நம்மளையும் இப்படித்தான் செய்வாங்களோ... எதுக்கும் உசாராவே இருப்போம்.

    பதிலளிநீக்கு
  4. எல்லாம் ஆர்வக் கோளறு தான்.

    இருந்தாலும் பாவம் அந்த இளைஞர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்ம்ம்ம்ம் அப்படியும் சொல்லலாமதான் தங்கள் இளகிய மனதிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி!

      நீக்கு
  5. எதில்தான் த்ரில் என்று இல்லை. வயசு அப்படி. அதுவும் நம்நாட்டில் நடந்திருப்பது ஆச்சர்யம்தான்.மண்டை ஓடு வெளிவந்த குடும்பத்தினருக்குத்தான் மன உளைச்சல். அது ஏதோ அவர்களுக்கு சேதி சொல்கிறதோ என்று தவிப்பார்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ஆமாம்! அப்படிக் கூட ஏதாவது செய்தி இருக்குமோனு நினைச்சாலும் நினைக்கலாம்....நம்மக்கள்தான் இதுக்கு ரொம்ப ஃபேமஸ் ஆச்சே!
      மிக்க நன்றி

      நீக்கு
  6. இப்படியுமா பந்தயம் வைத்து விளையாடுவார்கள் இளைஞர்கள்?!
    வியப்பான செய்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியப்பான செய்தியாகத்தான் இருக்கின்றது! மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  7. அட! கிரகம் புடிச்சவனுங்களே, எது எதுக்கு பந்தயம் வைக்கிறதுன்னு இல்லையா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா.....அதான் பாருங்க....வெவரம் இல்லாதவங்களா இருக்காங்க....

      நீக்கு
  8. இதுவா தைரியம் / வீரம்...? வேறு உருப்படியான வேலை இல்லை போலிருக்கு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உருப்படியான வேலை இல்லாததுனாலதானே இப்படி செஞ்சுருக்காங்க....

      நீக்கு
  9. மண்டையோட்டை எடுக்கும்போது இல்லாத பயம் ,உடன் படுக்கும் போது வந்து விட்டது ஏனோ ?இப்படியுமா பந்தயம் ?
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் ஜி எடுக்கும் போது இல்லாத பயம் அதுக்கு அப்புறம் எப்படி வந்துச்சுன்னுதான் தெரில....எடுக்கும் இருந்த வீராப்பு குறைன்சுருக்கும்...ஜி!

      நீக்கு
  10. இப்படியும் சில பயித்தியங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் என்ன சொல்ல ஐயா!

      மிக்க நன்றி ஐயா தங்கள் கருத்திற்கு1

      நீக்கு
  11. அட மண்டை ஓட்டைக் கூட திருடுவாங்களா? ஆச்சர்யம்தான்!

    பதிலளிநீக்கு
  12. மனிதர்களில் இத்தனை நிறங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! இப்படியெல்லாம் கூட இருக்கின்றார்களே இளைஞர்கள் என்பதை நினைத்தால் ஆச்சரியமாகவும் இருக்கின்றது!

      நீக்கு
  13. மண்டை ஓட்டை எடுக்குபோது இருந்த தைரியம் அதன்கூட ஒரு இரவு இருப்பதில் இல்லை. காரணம் என்ன.?வேண்டாத பயங்களும் கேட்டறிந்த பகுத்தறிவுக்கு ஒப்பாத கதைகளும் அந்த நேரத்தில்வந்து படுத்தி இருக்கும். சில பந்தயங்கள் ஆரம்பத்தில் த்ரில்லாக இருக்கும். போகப் போக நினைவுகள் அதைக் கெடுத்து விடும். என்ன சொல்ல.? வயசுக் கோளாறுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! தாங்கள் சொல்லியிருப்பது மிகவும் சரியே! முதலில் திரில்லாக இருந்திருக்கும்...போகப் போக வேண்டாத கதைகள் நினைவுக்கு வந்திருக்கலாம்.....வயசுக் கோளாறுதான்....

      மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  14. அந்த மண்டை ஓட்டுக்கு உரியவர் ரொம்ப உத்தமராக இருக்கவேண்டும் அதனால்தான் போன தலை திரும்பி வந்ததுள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ இப்படிக் கூட இருக்குமா? கருத்து வித்தியாசமாக உள்ளதே!

      மிக்க நன்றி!

      நீக்கு