திங்கள், 28 ஜூலை, 2014

தென்னகத்தின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபிக்கு ஒரு பேபிஅம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
– கவிஞர் கண்ணதாசன்

எந்தப் பெண்ணுமே தன்னை அம்மா என்று அழைக்க ஒரு குழந்தை வராதா என்ற ஏக்கம் உடையவளாகவும், தான் தாய்மை அடைவதைப் பெருமையாகவும் எண்ணுபவள். ஒரு பெண் இந்த உலகத்தில் மிகப் பெரிய அளவில் மகிழ்ச்சி கொள்ளும் தருணம் என்றால், அது அவள் தாய் எனும் நிலையை அடையும் பொழுதுதான்.  தாய்மை என்பது பெண்களுக்குக் கடவுள்/இயற்கை கொடுத்த ஒரு வரப்பிரசாதம்.  சுமைகளைத் தாங்க சக்தி இல்லாதவர்கள், பலவீனமானவர்கள் என்று சொல்லப்பட்டாலும், ஒரு பெண்தான், ஒரு உயிரையே மிகவும் பாதுகாப்பானத் தனது கருவறைப் பையில், ஒரு மாதமல்ல, 10 மாதங்கள் சுமந்து, வலியையும் பொறுத்து, பட்ட கஷ்டங்கள் எல்லாம் “குவா” (அவள் காதில் மட்டும் அம்மா என்ற சப்தம் தான் கேட்கும்) என்ற சத்தத்துடன் வெளி வரும் அந்த மென்மையான மலர் போன்ற அந்த பிஞ்சின் ஸ்பரிசத்தில் இந்த உலகையும், தன்னையுமே மறப்பவள். 


ஆண்கள் எத்தனைதான் தங்களை உயர்வாகக் கருதிக் கொண்டாலும், ஒரு உயிரை சுமந்து பரிசாகத் தருபவள் பெண்தான். மிகவும் உயர்வான, உயரமான பரிமாணத்திற்குச் உவகையுடன் அழைத்துச் செல்லும் தருணம் அது. அந்தத் தருணத்தை நமது பதிவர் ராஜி அவர்கள் தனது வலைத்தளத்தில், தன் முதல் பெண்ணின் சமீபத்த பிறந்தநாள் அன்று “முதன் முதலாய் அன்னை என்னும் பட்டம் தந்தவளின் பிறந்த நாள்” என்றுத் தலைப்பிட்டு, எப்படி அழகான புதுக்கவிதையாய் வடித்திருக்கின்றார் பாருங்கள்!  தாய்மை பெருமையுடன் மிளிர்கின்றது! “இன்று ன் மகளாய் பிறந்தாய்  முதன் முதலாய் “அம்மா” என்னும் பட்டம் பெற்றேன் உன்னால்...”

கீழே உள்ள சுட்டியைக் கொஞ்சம் சொடுக்கித்தான்  பாருங்களேன்!!

பெண்கள் உலகமே பெருமிதம் கொள்வது
தாய் எனும் பெயரைத் தாங்கும் போதல்லவா?
அன்பே என்கிற அழைப்பை விடவும்
ஒரு பெண் அதிகம் எதிர்பார்ப்பது
அம்மா என்கிற அழைப்பை அல்லவா? - கவிஞர் மு. மேத்தா
            தாய்மை பற்றிய இந்த அழகான வரிகள் கவிஞர் மு. மேத்தாவினுடையது! (சங்க இலக்கியங்களில் “தாய்மை” பாடல்களைச் சுமந்து வந்து அவை என்ன சொல்லுகின்றன என்று சொல்ல, விஜு ஐயா அவர்களும், சகோதரி தேன்மதுரத்தமிழ்க்ரேஸ் அவர்களும், “தாய்மை” கவி சுமந்து வந்து, சகோதரி இளமதியும், ஃப்ரான்ஸ் கம்பன் கழகத் தலைவர் கவிஞர் அவர்களும், நம்மைத் தாலாட்டுவார்கள் என்று நம்புகின்றோம்!)

                  "குழந்தை மொழி"யைக் கேட்க சகோதரி அருணா செல்வம் அவர்களின் இந்தச் சுட்டியைச் சொடுக்குங்கள்.  http://arouna-selvame.blogspot.com/2014/07/blog-post_28.html

            இப்படிப் பார் போற்றும் தாய்மையை அடைய முடியாத நிலையில், 24 வருடங்களுக்கு முன்பு, அன்று திருமதி ராமமூர்த்தியும், 45 வயதான வி.ராமமூர்த்தியும், ஆஸ்திரேலியாவிலிருந்து உயர்கல்வி கற்றுத் திரும்பிய டாக்டர் கமலா செல்வராஜை அணுகி குழந்தையில்லாக் குறையைச் சொல்ல, அவர்களைப் பரிசோதித்த டாக்டர், உலகெங்கும், பல இடங்களிலும் வெற்றிகரமாக நடந்து வந்த/ வரும் டெஸ்ட் ட்யூப் பேபிகளைப் பற்றியும், அதன் மூலம்தான் அவர்களுக்குக் குழந்தை கிடைக்க வாய்ப்பு என்றும் சொல்லி இருக்கிறார்.


திருமதி/திரு. ராமமூர்த்தி, தங்களுக்கும் அப்படியேனும் ஒரு குழந்தை வேண்டுமெனச் சொல்ல, தென்னகத்திலேயே முதல் “டெஸ்ட் ட்யூப்” குழந்தை அப்படியாகச் சென்னை ஜி.ஜி. மருத்துவமனையில் பிறந்தது. திருமதி ராமமூர்த்திக்கு அன்றைய மனநிலை எப்படி இருந்திருக்கும்?! அதுவரை, தன்னை அம்மா என்று அழைக்க ஒரு குழந்தை இல்லையே என்று, பல வேண்டுதல்களுக்கும், வார்த்தைகளுக்கும், மன வேதனைகளுக்கும் உட்பட்டு இருந்தவருக்கு, மகத்தான மருத்துவ வளர்ச்சியால், தன்னை அம்மா என்றழைக்க ஒரு மழலைச் செல்வம் பிறந்ததே என்று அளவற்றப் பூரிப்படைந்திருப்பார்! ஆனந்தக் கண்ணீர் சொரிந்திருப்பார்! இறுதியில், மகள், மனைவி என்ற ஸ்தானத்திற்கெல்லாம் மேம்பட்ட “அம்மா” என்ற அந்த ஸ்தானத்தை அடைந்த சந்தோஷத்தில் மிதந்திருப்பார்.  அதுவும் பல வருடத் தவத்திற்குப் பின்! இதுவும் தாய்மைப் பேறுதான்!

 திரு. ராமமூர்த்தி, டாக்டரின் உதவியால் கிடைக்கப் பெற்ற அக் குழந்தைக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கும் விதத்தில், டாக்டரின் பெயரையும் சேர்த்து “கமலரத்னா” என்று பெயரும் சூட்டினார்.  அந்தக் கமலரத்னா 24 ஆண்டுகளுக்குப் பிறகு அதே மருத்துவமனையில், அதே டாக்டரின் உதவியால் சில தினங்களுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் ஒரு குழந்தைக்கு உயிர் கொடுத்து தாயாகி இருக்கின்றார். 

தனக்கு மகளைத் தந்த டாக்டர் கமலா செல்வராஜ் கையால், தன் பேரக் குழந்தையை கையில் வாங்கிய அந்தத் தாத்தாவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவருக்கு ஒரே ஒரு வருத்தம்.  இவ்வினிய வேளையில் தன் மனைவி தன்னுடன் இல்லையே என்பதுதான்.  டாக்டர் கமலா செல்வராஜ் பிரபலமான ஒரு மருத்துவர் மட்டுமல்ல. பிரபலமான ஒரு திரைப்பட நடிகரின் மகளும் கூட.  “காதல் மன்னன்”  என்று அழைக்கப்பட்ட, எப்போதும் வஞ்சிக்கோட்டை வாலிபனாக வலம் வந்த, மறைந்த நம் நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் தான் அவரது தந்தை.

நீங்களும் இந்தச் செய்தியைத் செய்தித் தாள்களில் படித்திருப்பீர்கள்தான்! தாயும், சேயும், தாத்தாவுடன் நலமாய் வாழ நாமெல்லாம் வாழ்த்துவோம்.  கூடவே இது போன்ற வியக்கத்தக்க மருத்துவச் சேவைகள் செய்து, நீண்ட காலம் ஆயுளும், உடல் நலமும் பெற்று வாழ, டாக்டர் திருமதி கமலா செல்வராஜையும் உளமார வாழ்த்துவோம்!


இந்தப் பதிவை எழுதிவிட்டுக் கோயிலுக்குச் சென்ற போது சில காட்சிகள் கண்களில் பட, இப்படி எழுதத் தோன்றியது.

தாய்மை வேண்டி
தகிக்கும் வெயிலிலும்
அரசமரம் சுற்றுவோர் கண்ணில்
‘அம்மா’ என்றழைக்க
அழைத்திடாரோ எம்மை என
அதே வெயிலில்
அனாதைகளாய் ஏங்கி நிற்கும்
அக்குழந்தைகள் படாதது ஏனோ?!

படங்கள் : இணையத்திலிருந்து.33 கருத்துகள்:

 1. ஒவ்வொரு மனிதனுக்கும் தாயே முதல் தெய்வம் தங்களது பதிவு நெஞ்சை தொட்டது வாழ்த்துக்கள் நண்பரே,,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கில்லர் ஜி! தங்கள் முதல் வருகைக்கும் அழகான கருத்திற்கும்!

   நீக்கு
 2. தாய்மையை போற்றி நீங்கள் பகிர்ந்த பதிவு அருமை அதிலும் சகோ ராஜி எழுதிய பதிவு மிக அருமை.. பாராட்டுக்கள் தாய்மைக்கும் அந்த தாய்மையை போற்றிய உங்கள் அனைவருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மா என்றழைக்காத உயிரில்லையே..அம்மாவை வணங்கது உயர்வில்லையே!...தாய்மைக்கு நிகர் வேறு எதுவும் இல்லை....சகோதரி ராஜி எழுதியதைப் படித்து ரசித்துத்தான் அதை இங்கு கொடுத்துள்ளோம். இந்தப் பதிவை போட்டுவிட்டு வந்தால் சகோதரி அருணா குழந்தை மொழி என்று அழகான கவிதை...உடனே அந்த லிங்கையும் இங்கு கொடுத்துவிட்டோம்....

   மிக்க நன்றி மதுரைத் தமிழா!

   நீக்கு
 3. அம்மாவென அழைக்க
  உயிர் உருகும்
  அம்மா...வென அலற
  உயிர் துடிக்கும்...
  அம்மா..அம்மா..தான்.

  நல்ல பகிர்வு
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா அழகான குறுங்கவி....எல்லா உயிர்களுக்கும் அது பொருந்தும்..மௌன மொழியில் கூட...

   மிக்க நன்றி சகோதரி தங்களது அழகான பதிலிற்கு!

   நீக்கு
 4. எதற்கும் ஈடாகாத சொல் அம்மா
  அன்பிம் மொழி அம்மா.

  நல்லதொரு பகிர்வு.

  வாழ்க புது வரவு.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

   நீக்கு
 5. ஆஹா தாய்மையை போற்றி எழுதிய பதிவு நெகிழ்த்தியது நெஞ்சை.

  அம்மா என்றழைத்தாலும் ஆறுதலே -எமை
  அள்ளி அனைத்தாலும் தரும் தேறுதலே

  மிக்க நன்றி பதிவுக்கு இதோ ராஜியின் பதிவை சென்று பார்க்கிறேன். தொடர வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரி! என்ன ஒரு இனிமையான இருவரிக் கவிதையால் கருத்து! மிக்க நன்றி! சகோதரி ராஜியின் பதிவைப் பாருங்கள். அழகாக எழுதி உள்ளார்.

   நீக்கு
 6. வணக்கம்
  அண்ணா.

  தாய்மை பற்றி எழுதிய பதிவை படித்த போதுதான் பல கருத்துக்களை என்னுள் உள்வாங்க நேரிட்டது.
  அம்மா என்று அழைக்கும் போது அதில் வரும்
  சுகமே சுகந்தான்... பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ரூபன் தம்பி! அம்மா என்றாலே குழந்தைக்கும் சரி, அம்மாவிற்கு சரி அது ஒரு ஆழ்ந்த உணர்வுபூர்வமான பிணைப்புதான்.....

   மிக்க நன்றி தம்பி!

   நீக்கு
 7. இது உண்மையில் அறிவியல் வளர்ச்சியின் சாதனை என்றே சொல்லவேண்டும் .டெஸ்ட் ட்யூப் மூலம் பிறந்த குழந்தையும் நார்மலாக குழந்தைப் பெற்றுவிட்டதே!
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாக ஒரு சாதனைதான் ஜி! ஆனால் அதுவும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை ஜி. மிக்க நன்றி ஜி!

   நீக்கு
 8. அந்த ஒரு பதவியினால் பெண்கள் உயர்ந்து நிற்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத எல்லோராலும் டெஸ்ட் ட்யூப் குழந்தைகளைப்பெற முடியாது. ஆனால் தாயற்ற சேய்களைத் தத்து எடுத்துக் கொள்ளலாம் இருந்தாலும் தாய்மை உணர்வு வருமா..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சார்! எல்லோருக்கும் இது சாத்தியமில்லைதான். உங்கள் கேள்வி மிகவும் சரியானதுதான்.....தத்து எடுத்துக் கொண்டால் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வருமா என்பதைச் சரியாகச் சொல்ல முடியாது...இருந்தாலும் தத்து எடுத்து வளர்ப்பவர்கள் மிகவும் அன்புடன் தாங்கள் பெற்ற பிள்ளைகளைப் போல அதைப் பற்றிச் சொல்லாமலே கூட வளர்ப்பவர்களைக் கண்டுள்ளோம்...சார்

   .அப்படிப்பார்த்தால் வாடகைத் தாய் மூலம்,ஏன் டெஸ்ட் ட்யூப் குழந்தையும் கூட ஒரு தாயின் வலியில் பிறக்காத குழந்தைகள்தான். ஒரு வேளை Unconditional love என்பதற்கு மனம் முதிர்ச்சி அடைந்திருந்தால் சாத்தியம் உள்ளது இல்லையா....   நீக்கு
  2. ரொம்ப நல்ல விஷயம் தான். அனா எனக்கு ஒரு டவுட். அந்த பொண்ணுக்கும் டேஸ்ட் ட்யுப் பேபி தானா? எது எப்படியோ தாயும் சேயும் நலமா இருந்தால் சரி! குழந்தையை பார்த்துட்டு சும்மா போகமுடியுமா? தம 3

   நீக்கு
  3. சகோதரி அந்தப் பெண்ணிற்கு டெஸ்ட் ட்யூப் பேபி இல்லை இதோ "அந்தக் கமலரத்னா 24 ஆண்டுகளுக்குப் பிறகு அதே மருத்துவமனையில், அதே டாக்டரின் உதவியால் சில தினங்களுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் ஒரு குழந்தைக்கு உயிர் கொடுத்து தாயாகி இருக்கின்றார்.// கொடுத்திருக்கின்றோமே இடுகையில்.....

   மிக்க நன்றி சகோதரி/தோழி

   நீக்கு
 9. தாய்மை பெண்களின் பெரும் பேறு என்றும் சொல்லலாம்! அதை தாங்கள் பகிர்ந்த விதம் அருமை! ராஜி அவர்களின் பதிவு மிகச்சிறப்பு! ஏற்கனவே படித்து இருக்கின்றேன்! செய்தி தாள்களில் வந்த இந்த டெஸ்ட் டியுப் பேபிக்கு பிரசவ செய்தியையும் அறிவேன்! மிக அருமையாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! சுரேஷ்! தங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

   நீக்கு
 10. அருமையான பதிவு .. பல தகவல்கள் நன்றி

  பதிலளிநீக்கு
 11. தாய்மையைப் போற்றி எழுதப்பட்ட இந்த பதிவிற்கு பாட்டுக்களும், வாழ்த்துக்களும்.

  இன்றைக்கு எத்தனை எத்தனை டெஸ்ட் ட்யூப் மருத்துவ நிலையங்கள் வந்துவிட்டன. அதில் சில பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்பட்டாலும், குழந்தை பாக்கியம் இல்லை என்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

  50,60 வருடங்களுக்கு முன்பு, இம்மாதிரி இல்லாததால், எத்தனை பேருக்கு குழந்தை பாக்கியம் கனவாகிப் போயிருக்கிறது.

  தங்களுக்கு நேரம் இருப்பின், என் மனைவி எழுதிய "புராண காலத்தில் டெஸ்ட் ட்யூப் பேபி" என்ற கட்டுரையை படித்து பாருங்கள்.

  http://unmaiyanavan.blogspot.com.au/2013/01/blog-post_8.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் நன்றி சொக்கன் சார்! ஆம் இது ஒரு சிறந்த அறிவியல் முன்னேற்றம்தான்! நம் பெற்றோர் காலத்தில் இது இல்லாதது குறையே. ஆனால் புராண காலங்களில் இருந்ததை பல நிகழ்வுகள் சொல்லுகின்றன...மகாபாரதத்திலும் கூட சொல்லப்படுகின்றது. சில அது போன்ற நிகழ்வுகளைச் சொல்லலாம் என்று நினைத்தோம் ஆனால் இடுகை பெரிதாகிவிடும் என்பதால் சொல்லவில்லை. அதைக் குறித்து இன்னும் தெளிவாகவும் அறிய வேண்டும் இன்றும் நினைத்தோம்.

   ஆஹா! தங்கள் மனைவியும் எழுதுகின்றாரா....பாராட்டுக்கள். கண்டிப்பாக அவர் எழுதியதைப் படிக்கின்றோம்.

   நீக்கு
 12. சிறந்த தாய்-சேய் நிலைவரம்
  அருமையான பகிர்வு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 13. அம்மா வெனுஞ்சொல் அதிசய ராகமே!
  எம்முளத்தை ஈர்க்கும் இனிது!

  தாய்மையைப் போற்றும் பதிவு அருமை துளசிதரன் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மா...அதிசய ராகம் தான்.......மிக்க நன்றி சகோதரி தங்களின் இனிமையான ராகத்திற்கு!

   நீக்கு
 14. அம்மா என்ற மூன்றெழுத்தினால் தானே இந்த உலகமே இயங்குகிறது!
  அருமையான பதிவு சகோதரரே!

  அன்னை இருந்தபோது நான் உணர்ந்ததைவிட
  அவளை இழந்து நிற்கும் இந்தக் கால கட்டத்தில் உணர்வது இரண்டு மடங்கு!...

  வாழ்த்துக்கள் சகோதரரே!

  பதிலளிநீக்கு
 15. அப்பப்ப்பா... உங்கள் தாய் புராணம் ரொம்பவே திகட்டுகிறது! உங்களின் குழந்தைகளுக்குத் தாயாகி, ஒருத்தி உங்கள் அருகே படுக்கிறாளே, அவளை எப்போது நினைக்கப் போகிறீர்கள்? இன்றைய மனைவிதானே நாளைய தாய்! அதையும் பதிவுசெய்ய வேண்டாமா?

  பதிலளிநீக்கு
 16. தாய்மையைப் போற்றும் அருமையான பதிவு
  டாக்டர் கமலா செல்வராஜைப் போற்றுவோம்
  தம 6

  பதிலளிநீக்கு
 17. வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/08/raja-day-6.html?showComment=1409356554900#c1920465853613641210
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு