வியாழன், 24 ஜூலை, 2014

ஆண்கள் தினம் WHICH NEVER COMES!!!


    முதல் தடவையாக, யாரோ ஒரு நல்லவர், ஆண்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஆண்களைப் பற்றி நல்ல விஷயங்களை எழுதி உள்ளார்!  அந்த நல்லவர் எங்கிருந்தாலும், எந்த நாட்டவரானாலும், வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்!  இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நாடு, மொழி, மதம், இனம், கலாச்சாரம் மாறினாலும், ஆண் வர்கத்திற்கு உலகம் முழுவதும் ஒரே குரல்தான் என்பது!
ஆண் என்பவன் யார்?  

ஆண் என்பவன், சிறு வயதிலிருந்தே விட்டுக் கொடுத்து சமரசம் செய்யத் தொடங்கும், ஆண்டவனால் படைக்கப்பட்ட மிகவும் அழகான ஒரு படைப்பு!

அவன் தன் சகோதரிகளுக்காக சாக்லேட்ஸ், தின் பண்டங்கள் இன்ன பிற சாமான்களை விட்டுக் கொடுக்கின்றான்.

தனது கனவுகளை, தன் பெற்றோர்களின் முகத்தில் அரும்பும் புன்னகைக்காக, அவர்களுக்காக விட்டுக் கொடுக்கின்றான்.

தான் காதலிக்கும் பெண்ணிற்காக, தனது பாக்கெட் மணியின் பெரும் பகுதியை பரிசுகள் வாங்கச் செலவு செய்கின்றான், அவள் முகத்தில் புன்னகையைக் காண வேண்டி.














தனது மனைவிக்காகவும், குழந்தைகளுக்காகவும், தன் இளம் வயதை எந்த வித வருத்தமும், புகார்களும் சொல்லாமல், இரவு பகலாகக் கடுமையாக உழைத்து தியாகம் செய்கின்றான்.

வங்கியில் கடன் வாங்கி, தனது வாழ் நாள் முழுவதும் அதை அடைப்பதில் செலவிட்டு, அவர்களது எதிர்காலத்தைச் செழிப்பாக வைக்கத் தியாகம் செய்கின்றான்.

அவன் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், தன் அம்மா, மனைவி, முதலாளி வசைபாடும் கடும் சொற்களுக்கு ஆளாகி, சகித்துக் கொள்கின்றான்.

மற்றவர்களுக்காக, அவர்களது சந்தோஷத்திற்காக, சமரசம் செய்து, விட்டுக் கொடுத்து, சகித்து வாழ்வதிலேயெ அவன் வாழ் நாள் முடிந்து விடுகின்றது.

அவன் வெளியில் போனால், அவன் அசட்டையாக இருக்கின்றான், அக்கறையில்லாதவன் என்ற பெயர்.

அவன் வீட்டிற்குள்ளேயே இருந்தால், அவனுக்குச் சோம்பேறி என்ற பெயர்.
குழந்தைகளைக் கோபித்துக் கொண்டால் அவன் ஒரு மிருகம், அரக்கன் என்ற பெயர்.

குழந்தைகளைக் கோபித்துக் கொள்ளவில்லை என்றால், அவனுக்குப் பொறுப்பற்றவன் என்ற பெயர்.

மனைவியை வேலைக்குப் போக வேண்டாம் என்று சொன்னால், அவன் மனைவியை அடிமையாக எண்ணுகின்றான் என்ற சொல்லுக்கு ஆளாகின்றான்.

மனைவி வேலைக்குச் செல்வதைத் தடுக்கவில்லை என்றால், அவன் அவளது வருமானத்தில் வாழ்கின்றான் என்ற சொல்லுக்கு ஆளாகின்றான்.

தன் தாயின் சொல் கேட்டால், “அம்மா பிள்ளை என்ற பெயர்.

மனைவியின் சொல் கேட்டால், “மனைவிக்கு அடிமை என்ற பெயர்.

தயவு செய்து உங்கள் வாழ்வில் வரும், இருக்கும் ஒவ்வொரு ஆணிற்கும் மதிப்பு கொடுங்கள். இல்லையென்றால், உங்களுக்காக அவன் செய்யும் அவனது தியாகங்கள் உங்களுக்குத் தெரியாமல் போகக் கூடும்.

ஒவ்வொரு ஆணின் முகத்திலும் ஒரு சந்தோஷப் புன்னகை அரும்புமே!  அதற்காகவாவது, இது எல்லா ஆண்களுக்கும் அனுப்பப்பட வேண்டிய ஒரு செய்தி.  ஒவ்வொரு பெண்ணும் அவனது மதிப்பை உணர்வதற்காகவாவது இந்தச் செய்தி அவர்களைச் சென்றடைய வேண்டும்!

ஆண்கள் தின வாழ்த்துக்கள்!!!! !  (Which never comes!)

மன்னாரு கொஞ்ச நாளைக்கு முன்னாடி திண்ணைல உக்காந்து பொலம்பிக்கிட்டு இருந்தாருல்ல.....அப்ப அவருக்கு அவரோட அலை பேசில, அதான் இப்ப வாட்ஸ் அப் நு ஒண்ணு ரொம்ப பிரபலமா இருக்குல்ல அதுல இந்த செய்திய அவரு நண்பர் அனுப்பிருந்தாரு......மன்னாருக்கு முகம் முழுக்க ஒரே சந்தோஷம்..... அவ்வளவு நேரம் தெரு விளக்கு மாறி இருந்த அவரோட முகம் இத வாசிச்ச உடனே நல்ல ட்யூப் லைட் மாதிரி பிரகாசமாயிடுச்சு! உடனே இத “சோ ச்வீட் வந்த உடனே காட்டணும்னு நினைச்சு, மனைவி வந்துக் கதவத் திறந்த உடனே உள்ள பாஞ்சு போயி  “பாரு உனக்குதான் என் அருமை பெருமை தெரில.....ஊருல இருக்கற எவனுக்கோ தெரிஞ்சு அனுப்பிருக்கான் பாரு......இப்பவாவது இத படிச்சாவது தெரிஞ்சு புரிஞ்சுக்க...  அப்படின்னு அலை பேசிய அவங்க முகத்துக்கு நேர நீட்டாத குறைதான்....

          ஆமாங்க..ரொம்ப சரிதாங்க! நீங்க எந்தக் குறையோ குத்தமோ சொல்லாம எவ்வளவு தியாகம் செஞ்சுருக்கீங்க! உங்கள நான் நல்ல புரிஞ்சுருக்கேங்க. அதனாலதாங்க, நீங்க குறையே சொல்ல மாட்டீங்கனுதான், உங்களுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு, வரும் போதே இட்லி மாவு வாங்கிட்டு வந்துட்டேங்க.  நீங்க ரொம்ப நல்லா காரச் சட்னி செய்வீங்கல்ல! ஸோ இட்லி செஞ்சு, அந்தச் சட்னி அரைச்சுருங்க. இப்ப எனக்கு டிவில முக்கியமான ஒரு சீரியல் பாக்கணும்...” என்று சொல்லி டிவியை ஆன் செய்யவும், டோக்கொமோ விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது.  

            அந்தப் பெண் தன் கணவன் மேல் உள்ளக் கோபத்தை வெளிக்காட்டுவது போல், கணவனின் ஷர்டுகளைக் கிழித்து நாய்க்குட்டிக்குச் சட்டை தைத்துப் போடுவதைப் போல....அதைக் கண்டு மன்னாரின் மனைவி, “ஹா சூப்பரு” என்று சொல்லி ரசித்துச் சிரித்துக் கொண்டிருக்க.....மன்னாரு அந்த விளம்பரத்தைப் பார்த்ததும். மனைவி சிரித்ததும்...அதில் ஏதோ வில்லங்கம் இருக்குமோ என்று நினைத்துத் தனது ரூமிற்கு ஓடிச் சென்று தனது ஷர்ட்டுகளை எல்லாம் எடுத்துப் பத்திரப்படுத்திவிட்டுச் சமையலறைக்குள் நுழைந்தார், அன்றைய இரவுப் பொழுது புவ்வா செய்ய!

            நுழைந்தவருக்கு அப்போதுதான், "ஒவ்வொரு வருஷமும் அகில உலக ஆண்கள் தினம்னு நவம்பர் 19 ஆம் தேதி கொண்டாடுறாங்க.  ஆனா ஏன் ஆண்களைப் பத்தி அவ்வளவு எழுதின அந்த ஆளு இதக் குறிப்பிடாம, வராத ஆண்கள் தினம் அப்படினு கொடுத்திருக்காரு? ஒரு வேள பெண்கள் தினம் மார்ச் 8 உலகம் முழுசும் ரொம்ப விமரிசையா கொண்டாடி மேடை போட்டு பேசற மாதிரி ஆண்கள் தினம் கொண்டாடப்படறது இல்லைன்றதுனால இருக்குமோ?  இருக்கலாம்." என்று தோன்ற இந்தத் தேதிய, செய்திய அவரு ஃப்ரென்ட்ஸ் எல்லாருக்கும் சொல்லிறணும் அப்படினு இதத் தட்டிவிட்டாரு.

     முதலில் ரஷ்யாவில்தான் 1960 லிருந்து பல ஆண்கள் தனியாக, பெண்கள் தினம் மார்ச் 8 கொண்டாடப்படுவது போல ஆண்கள் தினம் ஃபெப்ருவரி 23 கொண்டாட வேண்டும் என்று கிளர்ச்சி செய்து வந்தனர்.  இந்தத் தேதி ரஷ்ய நாடுகளால் அதிகாரப்பூர்வமாக அல்லாமல் அனுசரிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஒரு சில ரஷ்ய யூனியனில் இருந்த நாடுகள் நவம்பர் 19 ஆம் தேதியை உலக ஆண்கள் தினமாக அனுசரிக்க ஆரம்பித்தன.

அதன் பிறகு 1968ல் அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜோன் பி. ஹாரிஸ் என்பவர் சலினா எனும் பத்திரிகையின் தலையங்கத்தில் “சோவியத் யூனியன் தொடங்கிய அந்த முறையில் சமநிலை இல்லை.  ஆண்கள், அரசும், பெண்களும் ஆண்களைச் செய்யச் சொல்லுவதை எல்லாம் ஆண்கள் செய்து கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஆண்களை கௌரவிக்கும் விதமாகப் எண்கள் தினத்திற்கு ஒத்த ஒரு தினம் இல்லை.  பெண்கள் தினத்திற்கு எதிராக இல்லை.  ஆனால், அதே சமயம் ஆண்களுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும்.”  இப்படி 1990 களிலிருந்து அமெரிக்க மாகாணங்களும், உலகில் உள்ள பல நாடுகளும் நவம்பர் 19ஆம் தேதியை ஆண்கள் தினமாக அறிவித்துக் கொண்டாடத் தொடங்கின.

இந்தியாவில், 2007 ல் இந்திய ஆண்கள் உரிமை அமைப்பு, நவம்பர் 19ஆம் தேதியை ஏற்று, 2008 ஆம் ஆண்டு கொண்டாடத் துவங்கி வருடம் தோறும் கொண்டாட முடிவு செய்தது.
In 2009, India received the first corporate sponsorship of the International Men's Day with menswear brand Allen Solly deciding to create promotional offers on IMD, and HBOdeciding to screen male-positive movies in its "Men are Back" series on 19 November.
ஆண்கள் தினம் பற்றி முழுத் தகவல் அறிய விக்கி தளத்தைச் சொடுக்கினால் அறியலாம்.  http://en.wikipedia.org/wiki/International_Men's_Day
நாம் பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாப்பது பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் இதோ பாருங்கள் உலக ஆண்கள் தின வலைத்தளம் ஆண்களையும், ஆண் குழந்தைகளையும் பாதுகாப்பது பற்றிச் சென்ற வருடம் சொல்லி உள்ளது!
http://www.internationalmensday.com  Our theme in 2013    Keeping Men and Boys Safe.

மன்னாருக்கு இந்தத் தகவல்களை எல்லாம் மகிழ்சியுடன் அனுப்பிட்டுருக்கும் போது, ஸோ ஸ்வீட்டின் குரல் “என்னங்க இட்லி ரெடியாங்க?  இட்லியும், சட்னியும் செய்ய இவ்வளவு நேரமா? பசிக்குதுங்க.  இதான் ஆம்பிள்ளைங்களுக்கும், பொம்பிள்ளைங்களுக்கும் உள்ள வித்தியாசம்.”  மன்னாரு அரக்க பரக்க கிச்சன பார்த்து ஓடினாரு.  அங்க இட்லி பாத்திரத்தில தண்ணியே இல்ல.....இட்லி?  ஹாஹாஹா அப்படியே மாவா இருந்துச்சு! 

படங்கள்: இணையம்


36 கருத்துகள்:

  1. படிக்க,,, படிக்க மனசுக்கு ஆறுதலா இருந்தது ஐயா ரொம்ப நன்றி.. ம்ஹூம்...
    ஆமா, இந்தபதிவு இட்டது வீட்டுக்கார அம்மாவுக்கு தெரியாதுல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா இப்படியாவது ஆறுதல் பட்டுக்கங்க.....கில்லர் ஜி, எங்கள் வலைத்தளத்தில் இருவர் - பெண்ணும், ஆணும் சேர்ந்து எழுதுகின்றோம். பெரும்பாலும் பெயர் குறிப்பிடுவதில்லை. துளசியைக் குறிப்பிட்டு ஏதேனும் பதிவு எழுதப்படும் என்றால் மட்டுமே கீதாவின் பெயர் கீழே தரப்படும். இல்லையென்றால் தருவதில்லை. ஆண்களைப் பற்றிய பதிவுகள் பெரும்பாலும் கீதா/பெண் எழுதுவதே. அதில் துளசியின் பங்கீடும் இருக்கும்.

      நீக்கு
  2. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி தான்... இடி தான்...

    ஆனாலும் இனிமை தான்... எதையும் தாங்கும் இதயம்...??? !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதையும் தாங்கும் இதையம் இருக்கும் வரை இனிமைதான் டிடி!!!!!

      நீக்கு
  3. ஆண்கள் தினத்தன்றும் மன்னார்களுக்கு பூரிக் கட்டை அடிதானா ?
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா.....அதாங்க ஜி மேல முதல்ல போட்ட படத்தப் பாருங்க....ரிலாக்ஸ் பண்ணுறாரு மன்னாரு....(கனவுல)

      நீக்கு

  4. வணக்கம்!

    தமிழ்மணம் 3

    ஆண்தினம் வேண்டி அளித்த எழுத்தெல்லாம்
    மாண்புடன் மின்னும் மனத்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  5. ஆண்களைப் பற்றிச் சொல்ல
    எத்தனை எத்தனை எண்ணங்கள் - அவை
    தங்கள் எழுத்து வண்ணங்கள்
    ஆண்கள் நாள் (தினம்) என்று
    ஒன்று தோன்றி விட்டதா? - அந்த
    நாளிலாவது இந்த ஆண்களை
    எண்ணிப் பார்ப்பாங்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்கள் தினம் என்று தோன்றிப் பல வருடங்கள் ஆகின்றது ஐயா! ஆனால் பெரும்பான்மையானயோருக்குத் தெரியவில்லை.

      நீக்கு
  6. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தான் இந்த தினத்தைப் பற்றி கேள்விப்பட்டேன் ஐயா.

    இந்த தினம் இருப்பது ஆண்கள் பலருக்கு தெரியாது தான். கண்டிப்பாக ஆண்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும், அதற்கு தங்களின் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும்.


    ஆண் இனத்தை வெகு நேர்த்தியாக அலசி அவனுக்கு சூட்டப்படும் பட்டப் பெயர்களை குறிப்பிட்டு இருக்கிறீர்கள். மேலோட்டமாக பார்த்தால் நகைச்சுவையாக தோன்றும், ஆனால் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் உண்மை தான் என்று புரியவரும்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, அந்த கருத்துக்கள் நண்பரது அலைபேசியில் வாட்ஸ் அப்பில் வந்தது. அதைப் படித்தவுடன் ஆண்கள் தினம் பற்றி எழுதிவிடலாமே, தற்போது நவம்பர் இல்லையென்றாலும்......தெரிந்து கொள்ள வசதியாக இருக்குமே.....பெண்கள் தினத்தன்று எல்லோரும், ஆண்களும், பெண்களுமே வாழ்த்திக் கொள்வது போல ஆண்கள் தினத்தன்றும் எல்லோரும் வாழ்த்திக் கொள்வோமே இந்த வருடமாவது! என்ன சொல்கின்றீர்கள்?

      நீக்கு
  7. வணக்கம்
    அண்ணா.

    நல்ல தகவலை சொல்லியுள்ளீர்கள் சில தகவல் பெண்களை கடுப்பேத்தும் போல உள்ளது. ஏன் என்றால் ஆண்களை நல்லமாதிரி முதலில் சொல்லியுள்ளீர்கள்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    த.ம4வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ரூபன்! தாங்கள் சொல்லுவது சரிதான். ஆனால் நம் சகோதரிகளுக்கும் தெரியும் இது நகைச்சுவை என்று! யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்! (நம்புவோம்! ) ஏனென்றால் இதை எழுதியதே பெண்தான்.

      நீக்கு
  8. ஆண்கள் தினம் என்று ஒரு நாள் இருப்பதையே இப்பொழுதுதான் முதன் முதலாக அறிகின்றேன் நண்பரே
    மிக்க நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே பலருக்கும் தெரியவில்லை! இந்த வருடமாவது கொண்டாடுவோம்!

      நீக்கு
  9. ஹா....ஹா...ஹா...

    அது சரி சம உரிமை வேண்டுமென்றால் இப்படி வைத்துக் கொண்டால் என்ன? அதாவது மார்ச் 8 ஆம் தேதி முதல் 12 மணி நேரம் பெண்கள் தினம். (ஆண்கள்தான் தியாகம் செய்பவர்கள் ஆச்சே... முதல் பகுதி அவர்களுக்கே இருக்கட்டும்!) அடுத்த 12 மணி நேரம் ஆண்களுக்கு! இது எப்படி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹேய் இது கூட நல்ல ஐடியாவாக இருக்கே! சூப்பர்! பரிந்துரைக்கப் போவது யாரு....அது சரி ஆண்கள் தினம் கொண்டாடுவது மாலை 6 மணி டொ அடுத்த நாள் காலை 6 மணி வரையா?!!! இல்லை மார்ச் 8 இரவு 12 மணி முதல் 8 மதியம் 12 மணி வரையும், பின்னர் ஆண்கள் தினம் தொடங்கி ராத்திரி 12 மணிவரை...இதுவா?

      முதல் என்றால் முக்கால்வாசி ஆண்கள் கொண்டாடுகின்றோம் என்று எங்கிருப்பார்கள் என்று தெரியும் தானே உங்களுக்கு?!! வானில் மிதந்து கொண்டிருப்பார்கள்!!

      நீக்கு
  10. ஹா....ஹா....ஹா..
    வருசத்தில் எல்லா நாளும் ஆண்கள் தினம் தானே சகா? அப்புறம் அதுக்கு தனி தினம்வேற தேவையா?//தான் காதலிக்கும் பெண்ணிற்காக, தனது பாக்கெட் மணியின் பெரும் பகுதியை பரிசுகள் வாங்கச் செலவு செய்கின்றான், அவள் முகத்தில் புன்னகையைக் காண வேண்டி.// இத்தெல்லாம் உங்க பெருமையா? கடமை (தேவர்மகன் சிவாஜி வாய்சில் படிக்கவும்):))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நல்ல வசனம்தான் சகோதரி/தோழி! ஐயோ நாங்க ரொம்ப பாவம்க....இது ஏதோ நண்பர் மொபைல்ல வாட்ஸப்புல வந்தத ரசிச்சுப் போட்டுருக்கோம்.....ஹப்பா முதல்ல இந்தப் பதிவ சீரியாஸா எடுத்துக்காத ஒரு பெண்ணு....மைதிலி தோழிக்கு நன்றி சொல்லணும்பா....ரொம்ப நல்லவங்க....வடிவேலு ஸடைல்ல.....ஹாஅஹஹ)

      நீக்கு
    2. ஹல்லோ இந்த பதிவில கம்மென்ட் போட்டுருக்கிற ஒரே பொண்ணு நான்தாம்பா! என்ன கலாய்கிறீங்களா? நீங்களும்:(( ஆஆஅவ்வ்வ்வ

      நீக்கு
    3. ஹாஹாஹா......சகோதரி அதத்தாம்பா சொல்ல வந்தோம்,,,,,ஒரே அப்படின்னு நினைச்சு அடிச்சது..ஒரு அப்படின்னு ஆகிப் போச்சு.....சாரிப்பா.......ஓகே!....

      நீக்கு
    4. அப்ப நாங்க கலாய்க்க மாட்டோம்னு நினைச்சுருந்தீங்களா? ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்கனு ?!! அடப்பாவமே! ஆமாமாம்...கரெக்டுதான் எங்கள்ல ஒண்ணு அப்படித்தான்.....

      நீக்கு
  11. ஹஹஹா.. கிளைமாக்ஸ் அற்புதம்.. நீங்க போஸ்ட் போட்டுதான் இப்படி ஒரு நாள் இருக்கிறதே தெரியும்.. பயபுள்ளைக ஒருத்தர் கூட முகப்புத்தகத்துல கூட போடலியே..!

    ஆனா இதை பெண்கள் படிச்சா கற்பனை கதைன்னு சொல்லி ஒதுக்கிவிட வாய்ப்பிருக்கு.. நம்ம கஷ்டம் நம்மோட தானே சார்.. ஹஹஹா ;) ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல்ல நன்றிங்க ஆவி! அதாங்க ஆச்சரியமா இருக்கு! ஃபேஸ்புக்குல ஒருத்தன் கூட போடல.....ஒருவேள ஆண்கள் தங்களையே மறந்துட்டாங்களோ?!!!!! ரெண்டாவது பாயுண்டும் சரிதான்.....ஆவி! ஆனா எழுதினதே பெண்தான்...ஹஹஹஹ...

      நீக்கு
  12. பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஐயா! படித்து ரசித்ததற்கு!

      நீக்கு
  13. என்னது.? நவம்பர் மாதம் 19-ம் தேதி ஆண்கள் தினமா. ?சரிதான். அது திருமதி இந்திராகாந்தி பிறந்த தினமாச்சே. . அதுவும் சரிதான், அவர்தானே அப்போது இந்தியப் பாராளுமன்றத்தில் இருந்த ஒரே ஆண்மகனாகக் கருதப் பட்டவர்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி எம் பி ஸார்... சூப்பர்... இந்திரா அம்மையார் பிறந்தநாள் என்பது என் நினைவுக்கு வரவில்லை!

      நீக்கு
    2. எழுதும் போது இந்திராகாந்தி நினைவுக்கு வந்தார் சார்! அவரது பிறந்த நாள் என்றும்...... ஆனா நீங்க சொன்னா மாதிரி அவர் ஆண்மகனைப் போல ஆட்சி செய்ததால அவர் இந்த ஆண்களின் பட்டியலில் அடங்கவில்லை!

      நீக்கு
  14. ஆண்கள் தினத் தகவல்கள் அருமை! மன்னாரு அன்னிக்கு புண்ணானாரா? ஹாஹாஹா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா புண்ணானாரா தெரியல அவரத்தான் கேக்கணும் சுரேஷ்!

      நீக்கு
  15. எல்லாம் தியாகம் செய்வதுபோல் ஆண்கள் இதையும் தியாகம் செய்யவேண்டியதுதான்

    பதிலளிநீக்கு