வெள்ளி, 16 மே, 2014

“இதோ ஒரு முருகன்”, காக்கும் கடவுளாக அன்பே சிவமான எரணாகுளத்தப்பனின் மண்ணில்....!!




MURUGAN S THERUVORAM


வேலவனின் திரு உருவப் படங்களில் “ஓம் சரவணபவ எனும் ப்ரணவ மந்திரத்தை விட கூடுதலாகக் காணப்படுவது, “யாமிருக்கப் பயமென் எனும் அருள் வாக்கே.  அப்படி எல்லோரையும் எப்போதும் காக்கும் அறுபடை அப்பனை நேரில் காண வேண்டுமா?...... கேரளாவில் உள்ள எர்ணாகுளம் வரை பயணம் செய்ய நீங்கள் தயாரா?  எனில், ஐயாயிரத்திற்கும் மேலாக அனாதைகளாகிப் போனவர்களைக் காத்த கடவுள், இப்போதும் காத்துக் கொண்டிருக்கும் கடவுளான, “தெருவோர முருகனை தரிசித்து, அவர் குடியிருக்கும் எர்ணாகுளம், காக்க நாடு, கலெக்டரேட் அருகே உள்ளக் கோவிலான “தெருவு வெளிச்சம் எனும் புண்ணிய பூமியைக் கண் குளிரக் கண்டு காணிக்கை செலுத்தி புண்ணியம் சேர்த்து வரலாம்.  இன்று மே 16, “தெருவு வெளிச்சத்தின் ஒறாண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகிறது.



    
 திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகம் மற்றும், செங்கோட்டையைச் சேர்ந்த வள்ளியம்மையின் மகனான முருகன், இடுக்கி பீருமேட்டில் உள்ள சிதம்பரம் எஸ்டேட்டில் பிறந்து வளர்ந்தவர்.  சண்முகம் குடும்பத்தை உதறித் தள்ளிப் போனதால், 1990ல் தன் தாயுடன் எர்ணாகுளம் வந்து, காந்தி நகர் அருகே உள்ள சேரியில் குடியேறியவர். பிச்சை எடுப்பதும், பழைய பொருட்களை பொறுக்கி விற்றும் பசியைப் போக்கி வந்த முருகன், ஒரு திருடனோ, ஒரு பிக்பாக்கெட்டோ ஆகாமல் போனதற்குக் காரணம் தேவதூதனான, “மிட்டாய் அச்சன் என்று எல்லோராலும் அழைக்கப்படும் “ப்ரதர் மாவூரூஸ் என்பவர்தான்.  அவர் முருகனை, டான்பாஸ்கோ “ஸ்னேக பவனுக்கு அழைத்துச் சென்றார்.  எட்டாண்டுகள் அங்கு வளர்ந்த முருகன், அன்பு, கருணை, சேவை போன்ற மனிதனுக்கு அவசியமான குணங்களைக் கற்று, தன் சொந்தக் காலில் நிற்க தகுதி பெற்றார்.  ப்ரதர் மாவூரூஸ் முருகனுக்கு ஒரு ஆட்டோ வாங்கவும், சொந்தமாக ஒரு அறை மட்டும் கொண்ட வீடு கட்டவும் உதவினார். 


    
்அப்படி முருகனின் ஆசை நிறைவேறியது!.....சொந்தக் காலில் நிற்கும் முருகனால், இனி யாரையும் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவ முடியும்.  அந்த சிறிய வீடு அப்படி ஆனதைகளின் காப்பகமானது.  பகல் முழுவ6தும் அனாதைகளுடன் தன் நேரத்தைச் செலவிடும் முருகன், இரவு ஆட்டோ ஓட்டி, பணம் ஈட்டி அவர்களைக் காத்து வரத் தொடங்கினார்.  ஆம்! அன்று அல்லல்படுவோரின் கண்ணீரைத் துடைக்க எர்ணாகுளத்திலிருந்து நீண்ட முருகனின் காக்கும் கரங்கள்தான், கேரளத்தின் தென் கோடியிலிருந்து வட கோடிவரை நீண்டு, கதி கலங்கி நிற்கும் அனாதைகளை – அவர்கள் குழந்தைகளாகலாம், முதியோர்கள் ஆகலாம், நோயாளிகள் ஆகலாம், மன நிலை குன்றியவர்கள் ஆகலாம், உடல் ஊனமுற்றோர் ஆகலாம் – இப்படி யாராக இருந்தாலும அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.  இப்படிப்பட்ட புண்ணிய ஆத்மாவைத் தேடி, ஒரு தேவதையும் வந்து சேர்ந்தாள்,  ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற ஊழியரான, பள்ளுறுத்தியைச் சேர்ந்த ரமேசன் மற்றும் ஆசிரியை ஆன சிந்துவின் ஒரே மகள் இந்து.  MBA வரை படித்த இந்து எடுத்த இந்த முடிவுக்கு, பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவே இல்லை. 2010 ஆகஸ்ட் 18 ஆம் தேதி, எர்ணாகுளத்தப்பனின் சன்னிதியில் இவர்களது திருமணம் நடந்தது.  4ஆம் வகுப்பு வரை படித்த, மலையாளம் ஓரளவு எழுத, வாசிக்கத் தெரிந்த முருகன், “மனிதருள் மாணிக்கம் என்பதை MBA படித்த இந்து மிக எளிதாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.  இப்போது காக்கும் துணைக் கரங்களாக இந்துவின் கரங்களும் முருகனுடன், முருகனுக்குத் துணையாக கேரளமெங்கும் உலா வருகின்றது.

     இதற்கிடையே ரௌடிகளும், கஞ்சா விற்பனையாளர்களும் முருகனின் ஆட்டோவைத் தகர்த்து எறிந்து விட்டார்கள்.  அனாதைக் குழந்தைகளைக் கஞ்சா விற்க வைத்ததை அறிந்த முருகன் அவர்களைக் காப்பாற்றி, குழந்தைகள் நல விடுதியில் சேர்த்ததற்கான பழிவாங்கும் படலம்தான் அது.  ஆனால், காவல் துறையினரிடம் அவர்களைப் பற்றிப் புகார் கொடுக்காமல், அந்தக் கல்நெஞ்சக்காரர்களின் மனதிற்குள்ளும் ஈரத்தைக் கசிய வைத்து, தான் சாதாரண மனிதன் அல்ல என்பதை மீண்டும் உலகிற்கு உணர்த்தி விட்டார் முருகன்.

Chief Minister Oommen Chandy watching the miniature of a model anganwadi during the official inauguration of the model anganwadi project in Kochi on Thursday | T P Sooraj
    
கொஞ்சம் தாமதமாக என்றாலும் முருகனுக்குக் கிடைக்க வேண்டிய பரிசுகளும், பாராட்டுகளும், உதவிகளும் வந்து சேரத் தொடங்கியது. மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையின், குழந்தைகள் நலனுக்கான 2011-12 வருடத்திற்கான விருதும், பரிசுத் தொகையான ஒரு இலட்சம் ரூபாயும் மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியிடமிருந்து முருகன் பெற்றார்.  மாநில அரசும் அவரது சேவையைக் கௌரவிக்கும் வகையில், எர்ணாகுளம், காக்க நாடு கலெக்டரேட் அருகே 16 சென்ட் இடத்துடன் கூடிய ஒரு கட்டிடத்தை அனாதைகளைக் காக்க முருகனுக்கு அளித்தது.  2013 மே 16 ஆம் தேதி, மாண்புமிகு கேரள முதல்வர் உம்மன்சாண்டி அவர்கள் அதன் திறப்பு விழாவை நடத்தினார்.  காப்பகத்தை நடத்த ஒரு சிறு தொகை மாநில அரசு கொடுக்கவும் தீர்மானித்திருக்கிறது.


 மட்டுமல்ல, “எர்த் ஃபௌண்டேஷனும் முருகனுக்கு சிறந்த சமூக சேவகனுக்கான “ஹோப் விருது வழங்கி இருக்கிறது.  இப்படி இந்தக் “காக்கும் கடவுளான முருகனுக்கு உதவ, ஏராளமான உதவிக் கரங்கள் பல பாகங்களிலிருந்தும் நீண்டு வருகின்றன.  முருகனுக்கு இச்சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் தொடர்ந்து தேவையான எல்லா உதவிகளும் அருள நாம் எல்லோரும் வேண்டுவோம். இப்படிப்பட்ட ஆதர்ஷ புருஷர்களை வாழ்த்துவோம், வணங்குவோம்.  அவர்களுக்கு ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக இறைவனிடம் வேண்டுவோம்.  

https://www.youtube.com/watch?v=rKPpBM-GHvc




31 கருத்துகள்:

  1. முருகனுக்கு அந்த அன்பு நெஞ்சத்தைக் கொடுத்த

    ஆறுமுகனை அனுதினமும் வணங்குவோம்.
    subbu thatha
    www.wallposterwallposter.blogspot.in
    www.subbuthatha72.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாத்தா மிக்க நன்றி தாத்தா! தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  2. போற்றுதற்குரிய இம் மா மனிதரின் மனம் போல் சேவைக்கும் வழி பிறக்கட்டும்
    சேர்த்து வைத்த தர்மப் பலா பலன்கள் இவர்களுக்கு ஆன்ம சுகத்தையும் நிறைந்த
    ஆயுளையும் அள்ளி வழங்கட்டும் .அருமையான இத் தகவலை எமக்கும் அறியத்
    தந்த தங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பாள் அடியாள் சகோதரியே மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு. இது போன்ற நல்ல உள்ளங்கள் வாழ்வதால்தான் இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன் இயங்குகின்றதோ?!!

      நீக்கு
  3. உண்மையான தெய்வ முருகன் இவர்தான் ,இவர் பணி சிறக்கட்டும் !
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மதான் பவவான் ஜி! தெய்வம் மனிதர்களின் உள்ளத்தில்தானே வாழ்கின்றார்! மிக்க நன்றி ஜி!

      நீக்கு
  4. திரு.முருகன் அவர்களின் பணியைப் பற்றி பகிர்ந்த தங்களுக்கு முதலில் நன்றிகள். நல்லவரை இந்த உலகம் அடையாளம் காண இந்த பதிவு உதவியிருக்கிறது. கண்டிப்பாக ஐயா இப்படிப்பட்ட ஆதர்ஷ புருஷர்களை வாழ்த்துவோம், வணங்குவோம். அவர்களுக்கு ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக இறைவனிடம் வேண்டுவோம். நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிப்பட்ட ஆதர்ஷ புர்ஷர்கள் நமக்கெல்லாம் நல்ல உதாரணங்களாக அமைவது நம்மை இன்னும் பல நல்ல பணிகள் செய்ய ஊக்குவிப்பதாகத்தான் உள்ளது இல்லையா நண்பரே!?!!!!

      மிக்க நன்றி! தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  5. முருகன் அவர்கள் மேலும் சிறக்க வேண்டும்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் DD அவர் மேலும் சிறந்து இன்னும் அவரது சேவை பெருகி வளர வேண்டும்! மிக்க நன்றி DD!

      நீக்கு
  6. மிகவும் புண்ணிய ஆத்மா ஒருவரை அறியச்செய்தீர்கள்! அவரது தொண்டு சிறக்கட்டும்! இந்த தகவலை என்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர அனுமதி தருவீர்களா? நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே! அனுமதி இல்லாமலா?!! தாராளமாக தாங்கள் பகிர்ந்து கொள்ளலாம். நல்ல விஷயங்களை னாம் பகிர்ந்து கொள்வது நல்லதுதானே!

      மிக்க நன்றி!

      நீக்கு
  7. முருகன் போற்றப்படட வேண்டியவர்
    அவர்தம் பணி சிறக்க வாழ்த்துவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கரந்தையாரே! அவர் மிகவும் போற்றப்பட வேண்டியவர்! மிக்க நன்றி! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!

      நீக்கு
  8. சிறப்பான தொண்டு செய்யும் முருகன் அவர்களும் அவரது துணைவியாரும் பாராட்டுக்குரியவர்கள்.....

    செய்தியைப் பகிர்ந்த உங்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! முருகன் செய்கிறார் என்றால், அவர்களுக்குக் கிடைத்த துணைவியாரும் மிக நல்ல உள்ளத்துடன் சேவை செய்வது பாராட்டிற்கு உரியதே!

      மிக்க நன்றி!

      நீக்கு
  9. அந்த அன்பு உள்ளத்திற்கும், இதை வெளியிட்ட துளசிதரன் ஐயா அவர்களுக்கும் இறையருள் கிடைக்கட்டும்.
    Killergee
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்கீ தங்கள் கருத்திற்கும், வாழ்த்திற்கும்!

      நீக்கு
  10. அன்பின் சிகரமாக முருகன் செய்து வரும் சேவை மகத்தானது.
    அவர் தமக்கு நலமும் வளமும் தந்து துணை நின்றிட இறைவனை வேண்டுகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை சார்! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்! தொடர்கின்றோம் நாங்கலும் தங்களை!

      நீக்கு
  11. எப்படித்தான் இந்த மாதிரியான நல்லவர்கள் தோன்றுகிறார்களோ! முருகா நீ வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிப்பட்ட நல்லவர்கள் அவ்வப்பொழுது தோன்றுவதால்தானே இந்த உலகம் உயிர்ப்புடன் இயங்குகின்றது சார்!

      மிக்க நன்றி!

      நீக்கு
  12. முருகன் பாராட்டுக்குரியவர். அவரை அறியச் செய்த நீங்களும்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! பல நாட்களுக்குப் பிறகு தங்கள் வருகை மிகுந்த சந்தோஷத்தைத் தருகின்றது! நாங்களும் இப்போதுதான் ஒவ்வொரு வலைத்தளமாக வாசிக்கத் தொடங்கி உள்ளோம்!
      மிக்க நன்றி தங்கள் பாராட்டிற்கு!

      நீக்கு
  13. சென்னையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள “ உதவும் கரங்கள் “ என்னும் அமைப்பு நினைவுக்கு வருகிறது.ஈரமான நெஞ்சங்கள் இன்னும் நம்மிடையே உலா வருகின்றனர் என்பது ஆறுதலளிக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போன்ற ஈரமான நெஞ்சங்கள் நம்மிடையே உலா வருவதால் தான் ஏதோ கொஞ்சமாவது நாட்டில் நல்லது நடக்கின்றதோ!? ஆறுதல்தான் ஐயா!

      மிக்க நன்றி!

      நீக்கு
  14. கந்தனின் கருணைக்கு அளவேது கருணைக் கடல் அல்லவா அவன் அவன் பேரருள் முற்றிலும் பெற்றவர் போலும் முருகன் அதனாலேயே இச் செயல்கள் சிறப்புற நடைபெறுகின்றன. மேலும் எல்லாச் சிறப்புகளும் பெற்றுய்ய வாழ்த்துவோம். இம் மாமனிதரை அறிமுகம் செய்த தங்களுக்கு மிக மிக நன்றிகளும் வாழ்த்துக்களும். உரித்தாகட்டும் .....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி அவர்களுக்கு, தங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் தாமதாமாக பதில் அளிப்பதற்கு முதலில் மன்னிக்கவுமி! இனி தொடர்கின்றோம்!

      மிக்க நன்றி தங்கள் அருமையான வாழ்த்திற்கும் கருத்திற்கும்!

      நீக்கு
  15. முருகனுக்கு அருளிய டான்பாஸ்கோ பாதருக்கு நன்றிகள்..
    முருகன் கடந்து வந்த பாதையின் வலி சொல்லோனாது..
    நல்ல பதிவு ஐயா தொடர்க..

    பதிலளிநீக்கு
  16. பதில்கள்
    1. நண்பர் மதுஅவர்களுக்கு, தங்கள் பின்னூட்டத்தை மிகவும் தாமதமாக வெளியிட்டதற்கும், மிகவும் தாமதாமாக பதில் அளிப்பதற்கும் முதலில் மன்னிக்கவுமி! இனி தொடர்கின்றோம்!

      ஆம் நண்பரே நாம் எல்லோரும் ஃபாதருக்கு நன்றி உரைக்க வேண்டும்! மிக்க நன்றி நண்பரே தங்கள் கருத்திற்கு!

      நீக்கு