புதன், 4 நவம்பர், 2015

வையத்துள் வாழ்வாங்கு வாழும் அம்மையார் - 2

     

எஸ்தர் கார்னிலியஸ் அம்மா. இவரைப் பற்றி எங்கள் தளத்தில் ஏற்கனவே பதிந்திருக்கின்றோம். இவரைப் பற்றிப் புத்தகமும் வர இருப்பதால், இங்கு இவரைப் பற்றி அதிகம் எழுதாமல், 1970, 71 களில் முதன்முதலாக அவர் ஆரம்பித்த மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான பள்ளிகள், மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளி இன்று எப்படி வளர்ந்துள்ளன என்றும், அவரது மாணவக் குழந்தைகள் (நான் காண நேர்ந்த ஒரு சிலரை மட்டும்) இன்று எப்படி உள்ளனர் என்பதைப் பற்றியும் மட்டும் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளோம். மட்டுமல்ல, மாற்றுத் திறனாளிகள் தங்கள் தேவைகளைக் கவனித்துக் கொள்ள, அவர்கள் தொழில் கற்கும் பள்ளி பற்றியும் இங்கு குறிப்பிட்டுள்ளோம். இவை எல்லோருக்கும் ஒரு ஊக்கம் தருவதாக அமையும் என்ற நோக்கத்துடன்.  இவரைப் பற்றித் தெரிந்துகொள்ள மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கி தெரிந்து கொள்ளலாம்.                                                                                                                                                                                                                   எங்கள் ப்ளாகிலும் பாசிட்டிவ் செய்தியில் இடம் பெற்றவர்.  சமீபத்தில் ஆறாவது பூதம் எனும் தளத்திலும் அடையாளப்படுத்தப்படாமல் போற்றப்பட்டவர்.

எஸ்தர் அம்மா, ஒவ்வொரு வருடமும் வருவது போன்று, தற்போது அமெரிக்காவிலிருந்து வந்து ஆம்பூரில் தங்கியிருந்து தனது சேவை தொடர்பான வேலைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். அவருக்கு கானடாவில் சமூக சேவைக்கான டாக்டரேட் பட்டம் அளித்துக் கௌரவிக்கப்பட்டதால், அமெரிக்காவிலிருந்து இந்தியா வரும் போது கூடுதலாக ஒரு பெட்டி கொண்டு வரலாம்.  அதில் அங்கிருந்து சேகரித்த துணிகள், குழந்தைகளுக்காக பென்சில், பேனாக்கள், அழிப்பான்கள், ஹேர்பின்கள், ஹேர் பேண்டுகள், என்று பல வாங்கி அதில் எடுத்து வருகின்றார்.  அவரது தனிப்பட்ட பெட்டி மிக மிகச் சிறியது! 
       
1970 ஆம் ஆண்டில் எஸ்தர் அம்மாவால், காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்காக  ஆரம்பிக்கப்பட்ட முதல் பள்ளி.  இதன் பெயர் காட்டு பங்களா.  அருகில் எந்த வித கடைகளோ, போக்குவரத்தோ இல்லாத வருடம். அப்போது 4,5 குழந்தைகள் மட்டுமே.  
இப்போது அந்தப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்து நிற்கின்றது.

சமீபத்தில் வந்த பூஜை விடுமுறையில் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படாத ஆதரவற்ற குழந்தைகள் பள்ளியிலேயே தங்கியிருந்தனர். இவர்கள் எல்லோருமே மாற்றுத் திறனாளிகள்.  ஆனால், மனம் முழுவதும் அன்பு நிறைந்த உள்ளங்கள்.  இந்தப் புகைப்படம் எடுத்த போது அவர்களது முகத்தில் தெரியும் மகிழ்வைப் பாருங்கள்! 
ஜான் - வருணன்.  ஜானிற்கு ஏற்பட்ட விபத்தில் தலையில் அடிபட்டு உடைந்ததால், உடைந்த சதையுடன் கூடிய ஓட்டுப் பகுதியை  மீண்டும் பொறுத்தும் வரை உயிர்துடிப்புடன் வைத்திருக்க வேண்டும் என்பதால், அறுவை சிகிச்சை செய்யும் போது அந்த உடைந்த பகுதியை அவரது வலது தொடயினுள் வைத்துத் தைத்து, பின்னர்  தலையில் வைக்கும் தருணம் வந்த போது அதை மீண்டும் தொடையிலிருந்து எடுத்து, உடைந்த பகுதியில் வைத்து அறுவைசிகிச்சை செய்துள்ளனர். அதனால் அந்தத் தொடைப்பகுதி இன்றும் பெரிய அளவில் வீங்கிப் புடைத்துக் கொண்டு அவ்வப்போது வலியுடன் இருக்கிறது.  இவர் வூரிஸ் கல்லூரியில் எம் ஏ படித்திருப்பவர்.  வருணனுக்கும் இரு அறுவை சிசிச்சைகள் - ட்யூமர் -நடந்திருக்கின்றது. அதனால் அவரது இயக்கம் மிக மிக மெதுவாக இருக்குமாம்.  இருவருமே இந்த வொக்கேஷனல் யூனிட்டில் மெழுகுவர்த்தி பேக் செய்யும் வேலை செய்கின்றனர்.  அதற்கு அவர்களுக்கு ஊதியம் உண்டு.  இவர்கள் இருவருக்குமே செவி கேட்கும் திறனும் பேசும் திறனுமற்றவர்கள். 
மெழுதுவர்த்தி செய்யும் இயந்திரம்.  25 கிலோ வாக்ஸிற்கு 213 மெழுகுவர்த்திகள் செய்யமுடியுமாம்.  அதாவது இங்கு படத்தில் உள்ளது போல் பெரிய தடிமனாக.  ஒரு நாளைக்கு 500 மெழுகுவர்த்திகள் செய்கின்றனராம்.  வாக்ஸ் எதுவும் வீணாகாமல் செய்கின்றனர்.
இது பெண்களுக்கான பயிற்சி வகுப்பு.  இங்கு அவர்கள் வித விதமான பைகள் செய்கின்றனர்.
பெண்கள் தைத்த பைகள்.  
.இது போன்று வித விதமாகப் பைகள் தைக்கின்றனர்
இது போன்ற கோட் மடித்து வைக்கும் பைகளும் செய்கின்றனர். இங்கு செய்யப்படும் மெழுகுவர்த்திகள், பைகள் இவற்றிற்கு விற்பனையாளர்கள் இன்னும் இருந்தால் நல்லதாக இருக்கும்.  அங்கு பைகள் செய்ய கேட்டலாக் வைத்திருக்கின்றார்கள்.  நமக்கு எப்படிப்பட்ட பை வேண்டும் என்று சொல்லி ஆர்டர் கொடுத்தால் எண்ணிக்கையும் சொன்னால் அதற்கு ஏற்ப செய்து கொடுக்கின்றார்கள்.  அதற்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி இதோ...


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.  அந்த இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் உதவியாக இருக்கும்.


இங்கு மேலே உள்ள கட்டிடம், மிக மிக ஏழ்மைக் குடும்பத்துக் குழந்தைகளுக்கான விடுதி/ஹோம்.  இங்கு அவர்களுக்கு எல்லாமே இலவசம்.  கடந்த ஒரு வருடமாக இந்த ஹோமில் குழந்தைகள் விடுமுறைகளில் காலையில் வந்து விட்டு, மதியம் 2 மணி அளவில் சென்று விடுகின்றனர்.  அங்கு அவர்களுக்கு உணவு அளிக்கப்படுகின்றது. இயங்காததன் காரணம், பொள்ளாச்சியில், இது போன்ற ஒரு ஹோமில் 4 பெண் குழந்தைகளை, சில வஞ்சகர்கள் கற்பழித்த காரணத்தினால், தமிழக அரசு, இந்த விடுதிகளைச் சுற்றி தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும் என்றும், CCTV கேமரா பொருத்த வேண்டும் என்றும் அப்படிச் செய்தால்தான் இயங்க வேண்டும் என்றும் சொல்லியிருப்பதால்,  எஸ்தர் அம்மா அரசுடன் பேசி சுவர் எழுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அனுமதி வாங்கிவிட்டார்.  விரைவில் இயங்க ஆரம்பித்துவிடும், என்ராலும்காமேரா வைக்க பெரிய அளவில் நிதி தேவைப்படுகின்றது.  இந்த ஹோம்கள் பல வெளிநாடுகளிலும் இயங்கி வருகின்றனவாம்.  வெளிநாடுகள் உதவியும் கிடைக்கின்றது. என்றாலும் இவற்றிற்கும் அவர்கள் அளிக்கும் நிதி போதவில்லை. உதவ நினைப்பவர்கள் உதவலாம்.
மேலிருக்கும் இப்படமும் கீழுள்ள  படங்களும்....1971ல், பர்கூரில், பார்வையற்றோருக்காக ஆரம்பிக்கப்பட்ட முதல் பள்ளி.  மிக மிகத் தரமாக இருக்கின்றது.  விடுதிகளுடன் கூடிய பள்ளி.
எஸ்தர் அம்மா பள்ளி ஆரம்பிக்கும் போது அவரது முதல் மூன்று பார்வையற்ற மாணவ குழந்தைகளுள் ஒருவர்.  இவர் எலிசபெத்.  இன்று பள்ளியில் இசை பயிற்றுவிக்கும் ஆசிரியையாகப் பணிபுரிகின்றார். மற்ற இருவர்கள் மோசஸ், ஆல்பெர்ட்.  ஆல்பெர்ட் தான் முதல் மாணவர். அவரது புகைப்படம் இப்போது கிடைக்கவில்லை.  புத்தகத்தில் வெளிவரும்.
கறுப்புப் பையுடன் அமர்ந்திருப்பவர் திரு மகாலிங்கம்.  ஈரோடு சென்று துணிகள் வாங்கி விற்பவர். பல இடங்களுக்கும் தனியாகச் சென்று வருகின்றார்.  மிக மிக  நன்றாகப் பாடுகின்றார்.  இசைஆல்பத்தில் பாடியிருக்கின்றார்.  அடுத்து இருப்பவர் திரு சீனு.  இவர் எம்.ஏ எம் எட்.  மேல் நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர். இவரது மகள் இப்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வி பயில்கின்றார்.  மகன் 9 ஆம் வகுப்பு.  இவர் வீட்டில், அவரது உடன் பிறப்புகள் இருவரும் பார்வையற்றவர்கள். எஸ்தர் அம்மா அவரது பெற்றோரிடம் பேசி அழைத்து வந்து படிக்கவைத்து இதோ இன்று ஆசிரியர்.
இவரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.  அவரது பெற்றோர், ரவியும் அவரது தம்பியும் பார்வையற்று பிறந்திருப்பது, முற்பிறவியில் செய்த பாவம், கர்ம வினை, விதி என்று சொல்லி ரவியை 12 வயது வரை பள்ளிக்கு அனுப்பவில்லை.  இதை அறிந்த எஸ்தர் அம்மா அவரது இல்லத்திற்குச் சென்று அவரது பெற்றோரிடம் பல முறை பேசி, பல முயற்சிகளுக்குப் பிறகு ரவியை அம்மாவுடன் அனுப்பினர்.  ரவி கொஞ்சம் வசதியாக வளர்ந்த பிள்ளையாதலால், பள்ளியில் அவர் இருக்க விரும்பவில்லை. சாப்பாடும் பிடிக்கவில்லை.  எஸ்தர் அம்மா அவரைத் தன்னுடன், தன் குழந்தைகளுடன் சேர்த்து பார்த்துக் கொண்டு அவருக்கான சாப்பாட்டைத் தனியாக செய்து கொடுத்து, அடிப்படைக் கல்வியான, சுகாதாரம், சாலையைக் கடத்தல் என்பது போன்று சொல்லிக் கொடுத்து, 14 வயதில் அ, ஆ, ஏ, பி சி டி சொல்லிக் கொடுத்து அடித்தளம் அமைத்த பிறகு, ரவி சென்னையில் உள்ள அடையாரிலுள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்ந்து தனது தம்பியையும் அங்கு அழைத்துச் சென்றிருக்கின்றார்.  இதோ இன்று அவர் தமிழ்நாட்டிலேயே, முதல் மாற்றுத் திறனாளி தலைமையாசிரியராக, பெண்கள் மேல் நிலைப்பள்ளி, பள்ளிகொண்டாவில் (வேலூர்)பணியாற்றுகின்றார்.   அவரது தந்தையும், ரவியும் சொல்லுவது, "எஸ்தர் அம்மா அன்று என்னை/எங்களை வற்புறுத்திப் படிக்க வைகத்திருக்கவில்லை என்றால் இன்று நான் இந்தப்பதவிக்கு வந்திருக்க முடியாது" என்பதுதான்.  மிக மிக அருமையாக கீ போர்ட் வாசிக்கின்றார்.  அவரே வடிவமைத்துக் கொடுத்துக் கட்டப்பட்ட அவரது வீடு. 
இதுதான் முதன்முதலில் மன நிலை பாதிக்கப்பட்டோருக்காக ஆரம்பிக்கப்பட்ட பள்ளி. இப்போது நிதி வரவு குறைந்துள்ளதால், மேம்படுத்த முடியாமல் இருக்கின்றது.

ம்ன நிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக 1995ல் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட பள்ளி.  இந்தப் பள்ளிகளில் பெரும்பான்மையான குழந்தைகள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.  மிக மிக அன்பான குழந்தைகள்.  அவர்களுடன் பேசிய போது மனம் மிகவும் சந்தோஷம் அடைந்தாலும் அதே சமயம் கனத்தும் விட்டது.
அவர்களது கைவண்ணத்தில் உருவாகும் கூடைகள், சித்திரத் தையல் வேலைப்பாடுகள்
இக்குழந்தைகள் செய்யும் கூடைகளையும், சித்திரத் தையல் வேலைப்பாடுகளையும் யாரும் வாங்குவதில்லையாம்.  அதற்கும் யாரேனும் உதவினால் நல்லது என்று ஆசிரியர்கள் சொன்னார்கள். விரும்புபவர்கள் உதவலாமே. 
மனநிலை பாதிக்கப்பட்ட ஆண் குழந்தைகள்
இதோ எஸ்தர் அம்மாவுடன் இங்கிருக்கும் பெண்ணின் பெயர் புவனேஸ்வரி.  வயது 45. செவித்திறன், பேசும் திறன் அற்றவர்.  சிறிது பார்வை  அற்றவர். மனநிலையும் பாதிக்கப்பட்டவர். இவரையும் தன்னுடன் பார்வையற்ற பள்ளியில் சேர்த்துக் கொண்டாலும், பிற பாதிப்புகளும் இருந்ததால் தன் குழந்தைகளுடனேயே வைத்து வளர்த்து, தன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் பழக்கியிருக்கின்றார். பெற்றோர் நன்றாகக் கவனித்துக் கொண்டதால் அவர்களுடன் அனுப்பியிருக்கின்றார்.  இப்போது அப்பெண் வீட்டில் சிறு சிறு உதவிகள் செய்து வருவதாகவும், பெண்ணின் தாயார் வெளியூர் சென்றால், மெதுவாக தன் தந்தைக்கு உணவு சமைத்துக் கொடுப்பதாகவும் அவளின் பெற்றோர் கூறினர்.  தாயார் சொல்லச் சொல்ல எங்களுக்குத் தண்ணீர், பழங்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு வந்துக் கொடுத்தார்.  இப்பெண்ணைப் போன்றே மேரி என்ற பெண்ணும் பார்வை, செவி, பேசும் திறன் அற்ற ஆனால் மன நிலை நல்லதாக இருந்த பெண்ணையும் தன்னுடன் வைத்து வளர்த்து பின்னர் மும்பையில் உள்ள பள்ளிக்கு அனுப்பி, தற்போது அப்பெண் வேலையில் இருக்கின்றார். 
இது வேலூரில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளி.  செவித்திறன், பேசும் திறனற்ற குழந்தைகளுக்கான பள்ளி.
இந்த நான்கு படங்களும் காந்தி பிறந்த வீடு, காமராசர் பிறந்த வீடு என்று சொல்லுவது போல்.....எஸ்தர் அம்மாவின் 8 வது குழந்தையாகிய, விசுவாத்தின்சகவாசம் எனும் புத்தகத்தின் ஆசிரியரான,  நண்பர் பதிவர், திருமிகு விசு அவர்கள் பிறந்து வளர்ந்த வீடு.  கொசுறுச் செய்தி.  மேலே சொல்லப்பட்ட மேரி என்ற பெண்ணிற்கு, எஸ்தர் அம்மா தனது ஊழியத்திற்காக வெளியூர் சென்றிருந்த போது 20 நாட்கள் சமைத்துப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்திருந்திருக்கின்றார். அப்போது விசுவின் வயது 18, கல்லூரிப் படிப்பு.  அம்மாவிற்குத் தப்பாத பிள்ளை!!!

இன்னும் பல தகவல்கள் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் புத்தகத்தில் வரவிருப்பதால், இங்கு இவ்வளவே.  

மிக்க நன்றி.

கீதா


76 கருத்துகள்:

 1. அன்பிற்கினிய நண்பர்களே,

  எரிந்து உருகி ஒளி வீசும் மெழுகை பற்றிய உங்கள் பதிவை குறித்து மிக்க மகிழ்ச்சி, மேற்கொண்டு என்ன சொல்ல முடியும் ? எஸ்தர் அம்மா அந்த இயேசுவின் குழந்தை .

  புத்தகம் முழுமைபெற்று விரைவில் வெளிவர வாழ்த்துக்கள்.

  நட்புடன்

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக அவர் இறைவனால் இந்தச் சேவைக்கு என்றே அனுப்பப்பட்டவர். மிக்க நன்றி கோ அவர்களே.

   நீக்கு
 2. எஸ்தர் அம்மாவின் தொண்டுகளைக் கண்டு கண்கள் கரைகின்றன.
  அவரின் தன்னலமல்லாத சேவை அற்புதமானது!

  சிறுசிறு கைத்தொழிகளாகப் பரிமளிக்கும் தொழில்களும் அவற்றைக் கொள்வார் இல்லாத குறை மனதைக் குடைகின்றது. இங்கிருந்து நான் என்ன செய்வேன்?..

  இறுதியில் கூறிய விடயம் பதிவர் விசுவேசம் பற்றியதுதானே. அவர் வீடா அந்த இறுதிப் படங்கள் நான்கில் காணப்படுபவை! அதைவிட இவரே அந்த எஸ்தார் அம்மையின் மகனுமாவாரா?.. ஆச்சரியங்களான பதிவு சகோதரரே!
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோ இளமதி. ஆமாம், அவர்கள் வாழ்ந்த, விசு பிறந்த வீடு. ஆமாம் விசுவாசமே தான் சகோ. ஆம் அவர்தான் எஸ்தர் அம்மாவின் 9 குழந்தைகளுல் ஒருவர். இப்போது 7 பேரே உள்ளனர்.

   மிக்க நன்றி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்..

   நீக்கு
 4. மனதுக்கு சந்தோஷமாக இருக்கு அம்மா அவர்களின் தன்னலமற்ற பணிகளை வாசிக்கும்போது ..
  அனைத்து படங்களும் ஒவ்வொரு பள்ளிகளையும் நிறுவனங்களையும் எஸ்தர் அம்மா அவர்கள் எவ்வளவு அன்புடன் நடத்தி வருகின்றார் என்பதை பறைசாற்றுகின்றன ..முகவரிகளை குறித்துக்கொண்டேன் .
  அருமையான பகிர்விற்கு நன்றி கீதா அண்ட் துளசி அண்ணா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஏஞ்சலின். தங்களின் கருத்திற்கு. மட்டுமல்ல பதிவின் நோக்கத்தையும் புரிந்து கொண்டதற்கும், முகவரி குறித்துக் கொண்டமைக்கும்.

   நீக்கு
 5. எஸ்தர் அம்மாவைப் பற்றி முன்பே கேள்விப்பட்டும் உங்கள் தளத்தில் படித்தும் இருக்கிறேன். அவர் மேல் கொண்ட மரியாதை இப்பதிவின் மூலம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. பகிர்விற்கு நன்றி கீதா..நூலை வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி க்ரேஸ்! தங்களின் கருத்திற்கு. ஆம் ஒரு பெண்ணாக அதுவும் குடும்பத்துடன்...இத்தனை செய்தது ப்ரமிக்க வைக்கின்றதுதான். இப்போதும் இந்த வயதிலும் அதே சிந்தனைகளுடன் இருக்கின்றார்.

   மிக்க நன்றி

   நீக்கு
 6. வணக்கம்..அன்னைத்தெரேசாவைத்தவிர வேறு யாரையும் இதுவரை சொல்லம்மாட்டோம்..எஸ்தர் அம்மா...மனதை நெகிழ வைத்துவிட்டார்கள்..இத்தனை நாட்களாக வராமல் இருந்துவிட்டேனே என வருத்தப்படுகின்றேன்....விசு சார் அவரின் மனனெனில் நான் அவரைப்பற்றி நினைத்தது சரிதான்..விழாவிற்கு அதிக நன்கொடை கொடுத்துவிட்டு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொன்னபோதே நினைத்தேன்.....மிக்கநன்றி சார்....நானெல்லாம் எதுக்கு வாழ்கின்றேமன்..னு இருக்கு..வாழ்க்கையை எத்தனை அர்த்தமுள்ளதாக வாழ்ந்திருக்கின்றார்கள் எஸ்தர் அம்மா...அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்..நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோ கீதா. ஆம் அன்னை தெரேசாதான் நினைவுக்கு வருவார். எஸ்தர் அம்மா குடும்பத்துப் பெண். பல இன்னல்களையும் மீறி தனது குறிக்கோள் ஒன்றே குறியாக இருந்து இப்போதும் செய்து வருவது பிரமிக்கத்தான் வைக்கின்றது. நம் எல்லோருக்கும் ஒரு சிறந்த உதாரணமும், நல்ல ஊக்கமும் கூட..

   நீக்கு
 7. எஸ்தர் அம்மாவின் தொண்டுகளைக் கண்டு மனம் மகிழ்கின்றது
  போற்றுதலுக்கு உரியவர் போற்றுவோம்
  வாழ்த்துவோம்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கரந்தையார் சகோ தங்களின் கருத்திற்கும், வருகைக்கும். போற்றுவோம்..

   நீக்கு
 8. எஸ்தர் அம்மாவின் சேவைகள் குறித்து விளக்கமான பதிவு. இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும். வாழ்க அவர் சேவை. இவர் போன்ற மனிதர்கள் இந்நாளில் மிகவும் குறைவு. வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஸ்ரீராம். ஆம் நாம் எல்லோரும் அவரைப் போற்றுவோம் வாழ்த்துவோம், வேண்டுவோம். இவரைப் போன்றவர்கள் மிகவும் குறைவுதான்.

   நீக்கு
 9. எஸ்தர் அம்மாவைப்பற்றிப் படித்ததும் மனம் சற்றே கனத்தது. மனிதம் இன்னும் இருந்துகொண்டிருக்கிறது இவ்வுலகில் என்பதை உணர்த்த இவர்களைப் போல பல பெருமனிதர்கள் இருந்து வழிநடத்துகின்றார்கள் என்பதே உண்மை. மற்றவர்களுக்கு உதாரணமாக வாழும் அம்மையாரைப் பற்றி அறிமுகப்படுத்திய வகையில் தாங்களும் ஒரு சிறந்த பணியை மேற்கொண்டுள்ளீர்கள். நூல் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனிதம் இருக்கின்றது உண்மைதான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு.

   நீக்கு
 10. ஒரு வலைப்பதிவரின் அதுவும் நாம் அறிந்தவரின் தாயார் எஸ்தர் அம்மாவின் தொண்டுகளைக் அறியும் போது நமக்கெல்லாம் மிகப் பெருமையாக இருக்கின்றன..அது மட்டுமல்லாமல் எனக்கு வெட்கமாகவும் இருக்கிறது.காரணம் நாம் இப்படி வெட்டியாக ஏதோ எழுதி நாம் காலத்தை வீணாக்குகிறோம் ஆனால் விசுவின் அம்மாவோ மக்களுக்கு உதவி கொண்டிருக்கிறார்.அவரின் தன்னலமல்லாத சேவை அற்புதமானது! அவரை போன்றவர்களுக்கு இறைவன் மிக நீண்ட ஆயுளை தர வேண்டும். வேண்டுமென்றால் என்னை போன்றவர்களின் ஆயுளை எடுத்துக் கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எஸ்தர் அம்மாவின் தன்னலமற்ற சேவையை அவருடன் மூன்று நாட்கள் கூடவே தங்கியிருந்து,பயணித்து அறிய முடிந்தது. டவுன் டு எர்த் அம்மா. மிக மிக எளிமையானவர். பேச்சு முழுவதும் ஊழியம் பற்றித்தான். அதே சிந்தனைகள். எந்த வித பந்தாவும் அற்றவர். அவருக்கு இறைவன் நீண்டஆயுளைத் தரவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்போம்.

   மிக்க நன்றி தமிழன் சகோ...

   நீக்கு
  2. அவருடன் தங்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நன்றி விசு, மற்றும் ப்யூலா அக்கா. (விசுவின் அக்கா)

   நீக்கு
 11. ஆமான் இவ்வளவு நல்ல செய்தியை சொல்லும் ஒரு பதிவில் என்னை போன்றவர்களை இறுதியில் இழுக்கத்தான் வேண்டுமா என்ன?

  மேற்கு கடற்கரையில் விசு என்றால் கிழக்கு கடற்கரையில் அவரின் மிக சிறந்த நண்பர் ஆல்பிரட் (பரதேசி) அவரும் பல தொண்டுகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். அவரை இங்கே அறிமுகப்படுத்துவதுதான் விசுவிற்கு மேலும் பெருமை சேர்க்கும். என் பெயரை சொல்லுவதால் இழுக்குதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயோ மதுரைத் தமிழா, அது கொஞ்சம் சீரியசா போகுதே கொஞ்சம் கலாய்க்கலாம் என்று..போட்டது. உங்கள் கருத்தைப் புரிந்து ஏற்றுக் கொண்டேன். அதனால் எடுத்துவிட்டேன் அந்தப் பகுதியை மட்டும்.

   ஆல்ஃப்ரட் அவர்கள் விசுவின் மிகச் சிறந்த நண்பர், பதிவர் என்று தெரியும். அவரது சேவைகள் பற்றித் தெரிந்திருந்தால் நிச்சயமாகக் குறிப்பிட்டிருந்திருப்பேன்(போம்). சேர்த்து விசுவிற்கு மேலும் பெருமை சேர்த்திருப்போம்.

   விசு இப்போதுதான் பேசினார். எனக்குத் தெரியாமல் போனது என்று சொன்ன போது, அவர் அது பற்றித் தனியாகப் பதிவு போடலாம் என்று சொன்னார்.

   விசுவும் இப்போது பேசும் போதும் மெயிலிலும் நீங்கள் சொல்லியிருந்தது போல் சீரியஸ் பதிவில் கலாய்ப்பு வேண்டுமா என்று. என் விருப்பம் என்றும் சொன்னார். ஆனால், நீக்கிவிட்டேன்.

   மிக்க நன்றி தமிழா எடுத்துச் சொன்னதற்கு. ஆனால் //என் பெயரை சொல்லுவதால் இழுக்குதான்// என்று சொல்லியது வேண்டாமோ என்றும் தோறியது. உங்களுக்கும் நல்ல மனது உண்டு என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும் தமிழா. நீங்கள் எழுதுவதை வைத்தோ, உங்கள் கலாய்த்தலை வைத்தோ உங்களை ஜட்ஜ் பண்ணுவதில்லை. உங்களிடமிருந்து மிக மிக நல்ல சீரியஸ் பதிவுகளும் வரத்தானே செய்கின்றன! இந்த வரி உங்கள் தன்னடக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கலாம் என்றாலும் "இழுக்கு" என்ற வார்த்தை தேவையற்றதோ என்று தோன்றுகின்றது சகோ..

   மிக்க நன்றி! சகோ...

   நீக்கு
  2. ///உங்களுக்கும் நல்ல மனது உண்டு என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்///
   என்னமோ என்னை நேரில் பார்த்து பேசி பழகி புரிஞ்சு கொண்டது மாதிரியல்லவா சொல்லுறீங்க

   நீக்கு
  3. ஹஹஹ நீங்கள் எந்த பாயின்டுக்கு வருகின்றீர்கள் என்று புரிகின்றது. இங்கு வலையுலகில் நாம் பலரையும் எழுத்துகளின் மூலம்தான் சந்திக்கின்றோம், நட்புடன் பழகுகின்றோம். அந்த எழுத்துகளின் மூலமும், அவற்றின் இடையேயும் மறைவாவாகவும், வெளிப்படையாகவும் (read in between lines என்று சொல்லுவதுண்டு இல்லையா அது போல) வெளிப்படும் அவர்களின் இயல்பு, மனம், எண்ணம், கருத்துகள் என்று அவர்களைப் பற்றி நம்மை அறியாமல் நமக்குள் ஒரு பெர்சனாலிட்டி ஏற்படுவதுண்டுதானே. அப்படி நாங்கள் நேரில் சந்தித்த போதும் அது தவறாகவில்லை...என்ற அடிப்படையில்...சரி... இங்கும் நீங்கள் என்ன சொல்லுவீர்கள் என்று தெரியும்....

   அப்படித்தான் உங்களை (நாங்கள் நேரில் சந்திக்காவிட்டாலும்???!!!!!!) உங்கள் எழுத்துகளின் மூலம் தெரிந்து கொண்டோம்...அது தவறாகாது என்ற உறுதியில் சொன்னது...போதுமா...சகோ!!!

   நீக்கு
  4. உங்கள் அன்புக்கு நன்றி மதுரைத்தமிழன் .ஆனாலும் பெரியவர்களைப்பற்றி சொல்லும்போது என்னைப்போன்ற சிறுவர்களைப்பற்றி குறிபிடுவது ஏற்புடையது
   அல்ல என்பது என் தாழ்மையான கருத்து

   நீக்கு
 12. கீதா & துளசி இருவருக்கும் ஒரு நல்ல செய்தியை உலகறிய செய்ததற்கு மிகவும் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 13. வாழ்வாங்கு என வள்ளுவன் சொன்ன
  வார்த்தைக்கு முழு விளக்கமாக வாழும்
  அன்னையாரைப் பற்றி அறிய
  மிகவும் நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும்
  இருக்கிறது
  மிக மிக அருமையாக படங்களுடன்
  பகிர்ந்து சென்ற விதம் பதிவர்களுக்கு
  ஒரு வழிகாட்டி

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரமணி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..

   நீக்கு
 14. நிஜமாகவே எஸ்தர் மேடத்தின் சேவை அதுவும் தனி ஒரு மனுஷியாக பிரமிக்க வைக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அருணா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...ஆம் உண்மைதான் உங்கள் கருத்து...

   நீக்கு
 15. கொடுக்கவேண்டும் என்ற நல்ல உள்ளம் இருந்தால் போதும்.
  எதுவும் கொடுக்கலாம்.
  என்ற நீதி புகட்டும் கட்டுரை.

  செய்தித் தொகுப்பு பிரமிப்பை தருகிறது.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தாத்தா. தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...

   நீக்கு
 16. ஒரு ஆவணப்படம் பார்த்த உணர்வை தந்தது உங்கள் பதிவு.....
  நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி செல்வா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் ...

   நீக்கு
 17. வையத்துள் வாழ்வாங்கு வாழும் அம்மையார் பற்றிய
  அருமையாக பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி இராஜேஸ்வரி அம்மா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...

   நீக்கு
 18. தமிழகத்தின் தெரசா அம்மையாரின் பணிகளைக் கண்டு தலைவணங்குகிறேன் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி பகவான் ஜி சரியாகச் சொன்னீர்கள் தமிழகத்தின் தெரசா அம்மையார் என்று

   நீக்கு
 19. எஸ்தர் அம்மாவிற்கு வணக்கங்கள். பிறன்நலத்துக்கு பாடுபடும் அவர்களுக்கு இறைவன் எல்லாநலன்களையும் தரவேண்டும். நல்ல மனிதநேயம்மிக்க எஸ்தர் அம்மா அறிமுகத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 20. எஸ்தர் மேடம் அவரின் சேவை அற்புதமானது.
  புத்தகத்தை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் மேடம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மகேஷ். தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

   நீக்கு
 21. எஸ்தர் அம்மாவின் தொண்டுக்கு இணையில்லை! அம்மாவுக்கு தப்பாத பிள்ளையாக பிறந்த விசு சாரின் தொண்டும் பாரட்டுக்குரியது! வாழ்த்துக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சுரேஷ் தங்களின் வருகைக்கும், கருத்திற்கும்.

   நீக்கு
 22. சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு எனக்கு ஒரு கால் வந்தது எடுத்தால் எதிர்முனையில் விசு சார்! அன்றைக்கு நான் எழுதிய வலைப்பதிவர் சந்திப்பு பதிவைப் பற்றி பாராட்டிப் பேசினார். இந்த உரையாடல் 29 நிமிடமும் 48 வினாடிகளும் நீடித்தது. பலவற்றையும் பேசினோம். இறுதியாக அமெரிக்க விவசாயத்தைப் பற்றி எங்கள் பத்திரிகையில் எழுதுவதாக கூறினார். மிக எளிமையான பண்பான மனிதர். அவரது தாயார்தான் எஸ்தர் அம்மா என்ற போது பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
  போற்றுதலுக்குரிய அரிய சேவையை புரிந்துவரும் எஸ்தர் அம்மா என்றும் உயர்வானவரே!
  பகிர்ந்தமைக்கு நன்றி நண்பர்களே!
  த ம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! சகோ. விசு மிக மிக நல்ல நண்பர். பின்னே பெற்றோர் எப்படியோ அப்படித்தானே பிள்ளைகளும்....இல்லையா சகோ...அம்மா மிக மிக எளிமையானவர். நல்லவர். வேறு வார்த்தைகள் இல்லை..சொல்லுவதற்கு...

   மிக்க நன்றி சகோ...

   நீக்கு
 23. நடமாடும் தெய்வம் என்பார்கள் அதை திருமதி. எஸ்தர் அம்மா வடிவில் கண்டு வணங்குகிறேன் வேறு ஒன்றும் எழுதுவதற்க்கு இல்லை.

  அன்று தொலைபேசியில் நாம் பேசிய விடயங்கள் இன்று பதிவாய்.... அழகாய்.. விவரித்தீர்கள் நண்பரே திரு. விசு அவர்களுக்கும் எமது வாழ்த்துகளுடன் தங்களுக்கும் நன்றி
  - கில்லர்ஜி
  தமிழ் மணம் 9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கில்லர்ஜி. தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...ரொம்ப அவங்க எளிமை ஜி. நல்ல ஒரு வித்தியாசமான மன திடம் உள்ள பஒரு பெண்மணி..

   நீக்கு
 24. சொல்ல வார்த்தைகள் இல்லை...

  அனைத்தும் சிறப்பு...

  பதிலளிநீக்கு
 25. அன்புள்ள சகோதரி,

  எஸ்தர் அம்மாவின் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆற்றும் பணியைப் படங்களுடன் அவரின் தன்னலமற்ற தொண்டினைப் போற்றி எழுதியது அவரை பலர் அறிந்து கொள்ள உதவியது என்றால் மிகையில்லை.

  நன்றி.

  த.ம.11

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மணவையாரே தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...

   நீக்கு
 26. இவர் போன்றவர்களால்தான் எல்லோர்க்கும் பெய்கிறது மழை.பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சென்னைப் பித்தன் சார் தங்களின் கருத்திற்கு..

   நீக்கு
 27. பாலக்காடு காருண்யாவுக்கு விஜயம் செய்து உங்கள் பாணியில் ஒரு பதிவு எழுதலாமே நல்லவர்களைப் பற்றி நாலுபேர் அறிய வேண்டாமா. நன்றி.

  பதிலளிநீக்கு
 28. அம்மா அவர்களைத்தெரியும் என்று சொல்வதே எனக்கு பெருமைதான் .அதோடு அவர்கள் பனி செய்த, செய்கின்ற இடங்களை நேரில் பார்த்ததோடு அதே இடங்களில் நானும் சில பணிகளை செய்திருக்கிறேன் என்று நினைக்கும்போது மேலும் பெருமைதான் .ஆனால் அப்போதெல்லாம் விசுவைத் தெரியாது .
  இந்த மாதிரி தன்னலமற்ற சேவை செய்பவர் இப்போதெல்லாம் அருகிவிட்டனர் .
  அம்மாவின் அடித்தளத்தில் தம்பி விசு அவர்கள் தொடர்ந்து பயணம் செய்திடவும் அவரோடு இணைந்து பணியாற்ற நாங்களும் இருக்கிறோம் என்பதனையும் பணிவோடு தெரிவிக்கிறேன்.புத்தகம் வரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
  அம்மா அவர்களின் பணிச்சிறப்பை தொடர்ந்து வெளிக்கொண்டு வரும் முயற்சியில்
  ஈடுபட்டு வரும் துளசி கீதா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
  .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி திருமிகு ஆல்ஃபி. உங்களுக்கு அம்மாவுடன் நல்ல பழக்கம் உண்டு என்றும் அவருடன் அதே இடங்களில் கூட இருந்துள்ளதும் அறிந்திருக்கின்றோம். விசுவை அறிவதற்கு முன்.

   உண்மைதான் இப்போது அருகிவிட்டனர் இவரைப் போன்றோர். அம்மாவின் வழித்தடத்தில் பயணிக்க நீங்கள் எல்லோரும் தயாராக இருப்பது மிகவும் மகிழ்வாக இருக்கின்றது மட்டுமல்ல உங்களது மேன்மையான உள்ளத்தை அது தெரிவிக்கின்றது. வாழ்த்துகள் தங்கள் பணிகளுக்கு. அம்மாவின் தன்னலமற்ற சேவை மிக மிக போற்றற்குரிய ஒன்று

   எங்களின் பங்கு இதில் ஒன்றுமில்லை சகோ. உண்மையாகச் சொல்லுகின்றோம்.

   மீண்டும் மிக்க நன்றி.

   நீக்கு
 29. போற்றுதலுக்குரிய ஒரு அம்மாவை விபரங்கள், படங்களுடன் அறியத் தந்தீர்கள் கீதா மேடம்... அருமை... அவர்களை வாழ்த்துவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி குமார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

   நீக்கு
 30. வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோர் வெகுசிலரே. அவருள்ளும் தெய்வத்துள் வைக்கப்படும் பெருமை உடையார் வெகுவெகுசிலரே. அந்த வெகுசிலரில் ரொம்பவும் அரிதாகவே வாழ்ந்து தற்போது வருகின்றனர். அவர்களில் ஒருவராக வாழும் மாமனிதராக எஸ்தரம்மாவின் வரலாறு பிரமிக்க வைக்கிறது. விசுவுக்கு 8வயதில் கணவரை இழந்த ஒரு பெண்ணாக வாழவே போராட வேண்டியிருந்திருக்கும். தன்னையும் காத்து, பலநூறு குழந்தைகளையும் வளர்த்து.. அவர்களோடு பெற்ற குழந்தைகளில் 7பேரை அருமையாக வளர்த்து, சொன்னால்கூட பலரும் நம்ப மறுக்கும் அரிய வாழ்க்கை அம்மாவுடையது. அவர்களை படங்களோடு அறியத்தந்த உங்களுக்குநன்றி. அம்மாவுக்கு வணக்கம். நூல் எப்போது வருகிறது? நாங்கள் பிரதிகள் வாங்கிக்கொள்ள இப்போதே சொல்லிவைக்கிறோம். புத்தக ஆக்கத்தில் உதவவும் விரும்புகிறேன். தேவையெனில் தயங்காமல் கேட்கலாம். விசுவை நண்பராகப் பெற்றதற்குப் பெருமைப்படுகிறேன். தில்லையகத்துக்கு நன்றியும் வணக்கமும். கண்கள் பனிக்க இதற்குமேல் எழுத முடியல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் அண்ணா. அவர்களது சேவை மிகவும் போற்றற்குரியது. நூல் விரைவில் வரும் அண்ணா. மிக்க நன்றி விரிவான விளக்கமான பின்னூட்டத்திற்கு.

   மிக்க நன்றி

   நீக்கு
 31. நல்ல மனம் வாழ்க.... நல்லுள்ளம் கொண்ட எஸ்தர் அம்மா மேலும் பல்லாண்டுகள் வாழ எனது பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வெங்கட்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 32. அம்மா எஸ்தர் போன்றவர்களின் சேவைகளால்தான் கருனை என்ற சொல் நிலவுகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 33. வணக்கம் ஐயா,
  நாம் பார்க்கும் அன்னை தெரசா,,,
  வணங்குகிறேன். நல்ல பகிர்வு, நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மகேஸ்வரி சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 34. துளசி & கீதா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
  உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மதுரைதமிழா தங்களின் இனிய தீபாவளி வாழ்த்துகளுக்கு.

   நீக்கு
 35. எஸ்தர் அம்மா பற்றிய இரு பதிவுகளையும் படித்தேன். மனம் நெகிழ்ந்து உருகுகிறது! இப்படிப்பட்ட மனிதர்களும் இருப்பதால்தான் எவ்வளவு கொடுமைகளும் கோரங்களும் பல்கிப் பெருகியும் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறதோ என்னவோ! மனதைக் கனக்கச் செய்யும் பதிவுகள்! சோகமா, பெருமையா, நிறைவா அல்லது இவை அனைத்தும் கலந்ததா, என்ன உணர்வென்றே சொல்ல முடியாத ஓர் உணர்வோடு இந்தக் கருத்தை இட்டு விடைபெறுகிறேன்! இப்பேர்ப்பட்ட மனிதரை அறிமுகப்படுத்தியதற்கும் இப்படிப்பட்ட குழந்தைகளையும் அந்தப் பள்ளியையும் நேரில் சென்று பார்த்தது போன்ற உணர்வைத் தரும் அந்தப் படங்களைக் காட்டியதற்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோ! நேரில் அவருடன் தங்கி அந்தப் பள்ளிகளுக்கு அவருடன் பயணம் செய்து அந்தக் குழந்தைகளைக் கண்டதும், பேசியதும் மனதை நிறைத்தது. இந்த அம்மா நம் பதிவர் நண்பர் விசு அவர்களின் தாயார் என்பதையும் இங்கு நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம்.

   மிக்க நன்றி சகோ தங்களின் விரிவான உணர்வுபூர்வமான கருத்திற்கு.

   நீக்கு
 36. திரு விசு அவர்களின் நூல் வெளியீட்டு விழா போது அவரது அன்னை பற்றி பலரும் பேசியது நினைவுக்கு வருகிறது. அவரது தன்னலமற்ற சேவை குறித்த முழு பரிமாணம் இக்கட்டுரை அளித்துள்ளது. பாராட்டுக்கள்.

  ஆமாம். அந்த நூல் வெளியீட்டு விழாவில் திரு மதுரைத் தமிழனை விசு அறிமுகம் செய்தாரே! நீங்கள் சந்திக்கவில்லையா?

  பதிலளிநீக்கு
 37. வணக்கம் சகோ.

  நம்காலத்தில் எந்த வெளிச்சமும் தம்மேற்படாமல், இதுபோன்று சேவையாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்ற புனிதர்களை அறியாமல் வாழ்ந்து கொண்டிருப்பது எத்துணை அவலமானது.

  எஸ்தர் அம்மையைப் போன்ற தன்னலமற்ற சேவையாளர்களை நீங்கள் உங்கள் பதிவுகளினூடே அறியத்தருவதும் சேவைதான்.

  நெகிழ்ச்சி.

  நன்றி

  பதிலளிநீக்கு