ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

யாம் பெற்ற இன்பம் பெறுக எம் வலை அன்பர்கள்!

       மகிழ் நிறை வலைத்தளப் பதிவர் சகோதரி மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள் அவருக்கு நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களால் கொடுத்துப் பகிரப்பட்ட வெர்சடைல் விருதை எங்களுக்கும் பகிர்ந்து எங்களை 10 நண்பர்களுக்கு பகிரச் சொல்லி ஒரு இக்கட்டானச் சூழலில் சுழல வைத்துள்ளார்.  இக்கட்டானச் சூழல் என்று ஏன் சொல்லுகின்றோம், என்றால் வலைத்தளத்தில் எங்களை விட மிக அழகாக, அறிவுடனும், செறிவுடனும், நல்ல தமிழிலும் புகுந்து விளையாடும் பதிவர்கள் பலர் இருக்க எங்களை அவர் தேர்ந்தெடுத்தது மட்டுமல்ல, யாரைத் தேர்ந்தெடுக்க என்ற ஒரு இக்கட்டானச் சூழல்.  பிடித்த வலைத்தளங்கள் பல.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மையுடன் எழுதுகின்றார்கள். சிலர் எல்லா துறையிலும் மிக அழகாக எழுதுகின்றார்கள்.  யாருக்கு விருது கொடுப்பது?  எல்லோருக்குமே கொடுத்து விட்லாமே சகோதரி!  எல்லோருமே நண்பர்கள்!  நல்ல பதிவர்கள். இங்கு நாங்கள் கொடுத்திருப்பவர்கள் மட்டுமல்ல இந்த விருதுக்கு உகந்தவர்கள் .  எங்களைப் பொருத்தவரை வலைப் பதிவர்கள் அனைவருமே இந்த விருதுக்கு உகந்தவர்களே. ஏனென்றால் நாங்கள் வலைத்தளம் ஆரம்பித்து ஒரு வருடம், 4 மாதங்களே கடந்த நிலையில், எல்லா வலைத்தளத்திற்கும் செல்வதுண்டு. எங்களுக்கென்று குறிப்பிட்ட வலைத்தளங்கள் என்று இல்லை. எங்களுக்கு அறிமுகங்கள் கிடைக்கக் கிடைக்க நாங்கள் வலைததளங்களுக்குச் செல்வதுண்டு. நாங்கள் எங்கள் சிரம் தாழ்த்தி, மிக்க மகிழ்வுடன் இந்த விருதினை பகிர்ந்து கொள்கின்றோம்.  எல்லா வலைப்பதிவர்களுடனும்.  ஏற்கனவே கரந்தையாரும், சகோதரி மைதிலியும் ஒரு சில வலைப்பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டுவிட்டார்கள். எனவே இங்கு....


VERSATILE BLOGGER



தலை நகர் தலைவர் திரு வெங்கட் நாகராஜ் 
http://venkatnagaraj.blogspot.com/

வலையுலக வாத்தியார் திரு பாலகணேஷ்
http://minnalvarigal.blogspot.com/

வாத்தியாரை மட்டும் சொன்னால் போதாது எனவே அவரது மாணவர்கள் ஆகிய  சீனு, கோவை ஆவி, ஸ்கூல்பையன், ரூபக் ராம், குடந்தையூர் சரவணன், கரைசேரா அலைகள் அரசன் அவர்களுக்கும்.

சகோதரி அருணா செல்வம் ஏற்கனவே இவர்களுக்கும் பகிரப்பட்டுள்ளது

http://arouna-selvame.blogspot.com/

மாயவரத்தான் எம்ஜிஆர்

http://mayavarathanmgr.blogspot.in/

வலைச் சித்தர், பிஸி தேனீ, எல்லோருக்கும் உதவிக் கரம் நீட்டும் திரு திண்டுக்கல் தனபாலன்  நண்பருக்கும் ஏற்கனவே பகிரப்பட்டுள்ளது...

http://dindiguldhanabalan.blogspot.com/

சகோதரி ராஜேஸ்வரி
http://jaghamani.blogspot.com/

80 வயதுநெருங்கிக் கொண்டிருந்தாலும் ஸிக்சர் அடிக்கும் சுப்புத்தாத்தா

http://subbuthatha.blogspot.in/

அழகியத் தமிழில் கவிதை எழுதி எல்லொரையும் கட்டிப் போடும் இரு சகோதரிகள்

அம்பாள் அடியாள் ரூபிகா அவர்களுக்கும்  ஏற்கனவே கிடைத்துவிட்டது .


இனியா அவர்கள்
http://kaviyakavi.blogspot.in/


எங்கள் ப்ளாக்....இதில் 

ஆ 'சிரி' யர்கள்:

http://engalblog.blogspot.in/

புலவர் ராமானுசம் 

http://www.pulavarkural.info/

திரு. ஜி என் பாலசுப்பிரமணியம் அவர்கள்

http://gmbat1649.blogspot.in/

சகோதரி இளைய நிலா

http://ilayanila16.blogspot.in/

விமர்சனத்திற்கு பரிசு வழங்கி எல்லோரையும் ஊக்கப்படுத்தும் திரு வைகோபாலக் கிருஷ்ணன் 

 http://gopu1949.blogspot.in/

திரு ராயச் செல்லப்பா 

http://chellappatamildiary.blogspot.in/

இன்னும் பலர் இருந்தாலும் மற்றவர்களுக்கும் பகிர வாய்ப்புத் தரவேண்டி இங்கு பகிர வில்லை.  

சகோதரி மைதிலிக்கு மிக்க மிக்க நன்றி.

நாங்கள் இருவர், எங்கள் தளத்தில் எழுதுகின்றோம். துளசிதரன், பாலக்காட்டில் ஆங்கில ஆசிரியர்

தோழி கீதா.  எங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்ள வேறு ஒன்றும் இல்லை. இன்னும் பலருடன் எங்கள் விருதைப் பகிர்ந்துகொள்ள ஆசை.  எனினும் மற்றவர்களும் பகிர்ந்துகொள்ள வேண்டுமே என்பதால் இதை இங்கு முடிக்க வேண்டிய நிலை.  என்றாலும் மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்வது இந்த விருது வலைப் பதிவர்கள் அனைவருக்கும் நாங்கள் பகிர நினைக்கின்றோம்.  எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! 

41 கருத்துகள்:

  1. நீங்கள் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகளும், 'எங்களு'க்கும் பகிர்ந்தமைக்கு நன்றியும், உடன் பரிசு பெற்ற புலவர்களுக்கு, மன்னிக்கவும், பதிவர்களுக்கு பாராட்டுகளும்!

    பதிலளிநீக்கு
  2. எனக்கும், வாத்தியாருக்கும் சக மாணவர்களுக்கும் இவ்விருதினை வழங்கியமைக்கு மிக்க நன்றி.....

    பதிலளிநீக்கு
  3. இந்த VERSATILE BLOGGER இரண்டாம் சுற்றாக வருகிறது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அநேகமாக ஒருவருக்கொருவர் அறிந்த பதிவர்களுக்கெல்லாம் பகிரப் பட்டு ஒருவரே அதே விருதை இரண்டு மூன்று முறை வாங்கி இருப்பார்கள். இம்மாதிரி விருது கொடுப்பதும் வாங்குவதும் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன் படாதது. மன்னிக்கவும். மாறுபட்டகருத்துக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நட்பினை பகிர ஒரு கருவி அவ்வளவுதான் ...
      ரொம்ப சீரியசாக பார்க்க வேண்டியதில்லை ...
      அடுத்தவர்கள் மகிழ ஒரு வாய்ப்பினை நாம் தர முடிகிறதே...
      வேறே என்ன வேண்டும்...?

      நீக்கு
    2. சார்! நாங்களும் முதலில் என்ன செய்வது என்றும், இதைப் பற்றிய விவரங்கள் அறியாததாலும், சகோதரி மைதிலி சொல்லியிருந்தார்கள் என்று போனால் விருது என்று சொல்லியிருக்க...ஒன்றும் புரியாமல் ஏதோ நாங்களும் வெளியிட்டோம். அவர்கள் நண்பர் என்பதால்.....இது எதற்கு என்று எண்ணித்தான்...

      ஆனால் இங்கு மது அவர்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால் இதற்கு இப்படி ஒரு கோணம் உள்ளதோ என்றும் தோன்றுகிறது...நேர்மறை எண்ணம் தானே சார்! அதனால் நம்மால் சிலர் மகிழ்வடைந்தால் நல்லது தானே...சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும்...சொல்லியிருக்கிறாரே....

      நீக்கு
  4. வெகு நாட்களுக்குப் பின் விருதுகளை பதிவுலகில் காண முடிவது பதிவுலகம் ஓரளவேனும் உயிர்ப்புடன் இருப்பதை காண முடிகிறது.. வாழ்த்துக்கள் வழங்கியவருக்கும் வாங்கியவருக்கும் வாங்கபட்டவர்களுக்கும் ( எனக்கும் சேர்த்து தான் :-)

    பதிலளிநீக்கு
  5. வலைத்தளம் ஆரம்பித்து ஒரு வருடம், 4 மாதங்கள் ஆயினும் சிறந்த பதிவுகளைத் தந்த பெருமை தங்களுக்கு உண்டு.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. இந்த வாரத்திலேயே இரண்டாம் முறையாக Versatile Blogger விருது..... மிக்க நன்றி துளசிதரன்......

    பதிலளிநீக்கு
  7. விருது பெற்றமைக்கும் சிறந்த பதிவர்களுக்கு
    பகிர்ந்து மகிழ்ந்தமைக்கும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்

    விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.. அண்ணா...தங்களுக்கு கிடைத்த விருதை மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்தமைக்கு நன்றிகள் பல..
    த.ம7வதுவாக்கு..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே!

    விருதினைப் பெற்று பெரும் விருந்தே வைத்துள்ளீர்கள்!..
    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் சகோதரரே!

    அட.. இத்தனைபேர் மத்தியிலும் இளையநிலாவுக்கும் விருது!..
    அதுவும் உங்கள் கைகளால்!...:) மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.
    உளமார்ந்த நன்றி சகோதரரே!!

    உங்களுடன் எனக்கு இவ்விருது மூன்றாம் முறையாக ஒரே நேரத்தில் கிடைத்துள்ளது.
    அப்படி என்ன பெரிதாகச் செய்துவிட்டேன் நான்?..
    இருப்பினும் மட்டற்ற மகிழ்ச்சிதான்!
    நன்றியுடன் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. THE VERSATILE BLOGGER AWARD – இனைப் பெற்ற தங்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள். பகிர்ந்தளித்தலின் போது தங்களிடமிருந்து அந்த விருதினைப் பெற்ற மற்றைய வலைப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
    த.ம.8

    பதிலளிநீக்கு
  11. விருது பெற்றமைக்கும் கொடுத்தமைக்கும் வாழ்த்துகள். :)

    பதிலளிநீக்கு
  12. என்ன ஒரு ஆச்சரியம்!! இதுவரை பல பத்திரிகைகளில் கண்டு, தங்கள் எழுத்துக்களை வாசித்து ..இப்போது தாங்கள் எங்கள் வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கின்றீர்கள்! மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது! நீகள் எவ்வளவு பெரிய படைப்பாளி...தாங்கள் சாதாரணமான எங்களையும் கண்டு எங்கள் வலைத்தளம் வந்து எங்களை வாழ்த்தியமைக்கு மிக்க மிக்க நன்றி! தொடர்கின்றோம்!

    பதிலளிநீக்கு
  13. உங்களின் பரந்த மனப்பான்மைக்கு இன்னும் பல விருதுகள் உங்களைத் தேடிவரும் !உண்மையில் பன்முகத் திறமை உள்ள உங்களால் விருதுக்கு பெருமை கிடைத்து உள்ளது !வாழ்த்துகள்!
    த ம +10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான் ஜி...ஜி....தாங்களும் எங்கள் லிஸ்டில் இருந்தீர்கள் ஆனால் நீங்கள் சகோதரி மைதிலி பகிர்ந்த லிஸ்டில் இருந்ததால்.....

      மிக்க நன்றி ஜி ஆனால் தாங்கள் கொஞ்சம் எங்களை அதிகமாகப் புகழ்ந்துவிட்டீர்கள் ஜி........

      நீக்கு
  14. தங்களுக்கும், தங்களால் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    தாங்கள் மேலும் மேலும் பல விருதுகள் வாங்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். துளசி சார்.

    பதிலளிநீக்கு
  15. அன்புச் சகோதரரே!

    தங்களுக்கு என் வலையில் நன்றி கூறியுள்ளேன்.
    வந்து கருத்திடுங்கள்! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  16. அட! நீங்களும் கொடுத்து முடித்து விட்டீர்களா? நான் வந்து கொடுப்பதற்குள் வாங்காதவர்கள் யாரும் மிச்சமிருக்க மாட்டார்கள் போலிருக்கிறதே! நானும் உடனே (!) எழுதிவிட வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  17. விருது பெற்ற தங்களுக்கு பாராட்டுக்கள்.

    தங்களால் விருது பெற்ற மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. இன்றைய ‘செல்லப்பா தமிழ் டயரி’ யில் புதிய பதிவு ‘அபுசி-தொபசி-45’ வெளிவந்துள்ளது. அதில் தங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அன்புகூர்ந்து படிக்க வேண்டுகிறேன்.

    கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்:
    http://chellappatamildiary.blogspot.com/2014/09/107-45.html

    படித்து, கருத்துரை வழங்கினால் மகிழ்ச்சியடைவேன்.

    அன்புடன்,
    இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  19. விருது பெற்ற தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  20. வடிவேலு கேணி காணாமல் போன மாதிரி என் கமெண்டையும் காணோமே???? போட்டுடேன்ல நினைச்சேன்!!! சாரி சகாஸ்:(( மிக அழகாய் பகிர்ந்திருக்கிறீர்கள்!! வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணாமப் போறது அப்பப்ப நடக்கறதுதானே சகோதரி! பரவாயில்லைப்பா....நன்றி நன்றிப்பா.....கொடுத்ததுக்கும் சேர்த்துதான்....னாட் ஃபார் த அவார்ட்.....நட்புக்குத்தான்

      நீக்கு
  21. அடடா என் கருத்தையும் காணவில்லையே சகோ ! எங்கே போயிற்று இருந்தாலும் இன்னுமொரு தடவை வாழ்த்திவிடுகிறேன். விருதுக்கு வாழ்த்துக்கள் சகோ ! வழங்கியமைக்கும் பெற்றமைக்கும் இந்த சகோதரியையும் மறக்காமல் விருது பகிர்ந்தமை கண்டு நெகிழ்கிறேன். மிக்க நன்றி ! வாழ்க வளமுடன் ...!
    விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு