திங்கள், 17 மார்ச், 2014

பாலஸ்தீனில் பிறக்கும் குழந்தைகளில் சில, கருத்தரிக்கும் முன் சில காத தூரம் பறக்கின்றன!?...........இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் கொன்று குவித்த இலட்சக்கணக்கான யூதர்களைப் பற்றி எண்ணும் போது மனிதாபிமானமுள்ள எல்லோருக்கும் மனதில் உண்டாகும் வலியை விவரிக்க இயலாதுதான். 

உலகெங்கிலும் சிதறிக் கிடந்த யூதர்கள் தங்களுக்கெனத் தனிநாடை உருவாக்கி, அப்படி, இஸ்ரேல் எனும் நாடு உதித்த போது, உதிர்ந்து போன உயிர்களை எண்ணும் போதும் வலி உண்டாகத்தான் செய்தது.


 ஆனால், இப்போது அந்நாட்டைப் பாதுகாக்கவும், அந்நாட்டின் எல்லையைப் பாதுகாக்கவும், இஸ்ரேல் செய்து கொண்டிருக்கும், குண்டு வீச்சும். துப்பாக்கிச் சூடும், மனிதர்களைச் சிறை வைத்தலும், நம்மில் உண்டாக்கும் வலி, ஹிட்லரும், அவரது ஆதரவாளர்களும், யூதர்களுக்கு எதிரே செய்த கொடுமைகளுக்குச் சமமாக ஆகிக் கொண்டு இருக்கிறதோ என்ற ஐயத்தை எழ வைக்கிறது. 


பாலஸ்தீனில் குண்டு வெடிப்பில், இறக்க நேரிடும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், பாலஸ்தீனியர்கள், இறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பதிலாக ஆயிரம் குழந்தைகளுக்கு உயிர் கொடுக்கும் ஒரு போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். 


அந்தப் போராட்டத்தின் பாகமாகத்தான், சிறையில் அடைபட்டிருக்கும் தங்களின் தந்தைகளிடமிருந்து உயிர் அணுக்களாக இருக்கும் போதே, குழந்தைகள் பறந்து தாயின் கர்ப்பப்பைக்குள் சென்று உயிர் பிழைக்க வேண்டிய சூழல்கள் அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

பாலஸ்தீனில் உள்ள ஹனா அல் ஸான், எட்டு வருடங்களுக்கு முன், தன் 18 ஆம் வயதில் தாமிர் அல் ஸானை மணந்து, ஒரு மாதம் ஆகும் முன், தாமிர் சிறைப்படுத்தப்பட்டார்.  ஹனா தன் கணவனை ஒரு முறை காண 8 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதுவும் கண்ணாடிச் சிறையின் அப்புறம் தாமிரும், இப்புறம் ஹனாவும் நின்று கொண்டு.  தனிமையை வெல்ல அவர் இன்டெர்னெட்டை நாடுவது வழக்கமாக இருந்தது.  அப்படி அவர் நெட்டில் ஒரு நாள், ஒரு பாலஸ்தீனக்காரர் தன் விந்தை யாருக்கும் தெரியாமல் சிறையிலிருந்துக் கடத்தி, ஒரு குழந்தைக்குத் தந்தை ஆன விவரம் அறிந்ததும், அவருக்குத் தலை கால் புரியவில்லை. 


தானும் அப்படித் தாமிரின் குழந்தைக்குத் தாயாகத் தீர்மானித்தே விட்டார்.  உதவிக்கு, ஹனா மற்றும் தாமிரின் குடும்பத்தினர் அனைவரும் கச்சை கட்டி இறங்கி விட்டார்கள்.  எப்படித் தாமிரின் விந்தைக் கழுகுக் கண்கள் உள்ள சிறை அதிகாரிகளின், மற்றும் சோதனைச் சாவடிப் பாதுகாவலர்களின் கண்களில் படாமல், காசா சிட்டியில் உள்ள IVF கிளினிக்கில் கொண்டு சேர்ப்பது என்ற சிந்தனை எல்லோர் மனதிலும் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது. மனம் இருந்தால் மார்கமுண்டு என்பதால், நீண்ட ஆலோசனைக்குப் பின், அவர்கள் வெற்றிக்கு நல்ல ஒரு வழியும் தெளிந்தது.  


இதை அறிந்த வேறு நான்கு பெண்கள் ஹனாவைப் போல் சிறைப்படுத்தப்பட்ட கணவனைப் பிரிந்து வாழ்பவர்கள் இப்படி ஹனாவைப் போல், IVF  கிளினிக்கில் காத்திருக்கத் தொடங்கினார்கள்!.  ஏறத்தாழ 5000 பேர் இப்படிச் சிறைச் சாலைகளில் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்களாம்!  


ஹிட்லரைப் போல் அந்த அளவு கல் நெஞ்சம் படைத்தவர்கள் அல்லாததாலோ என்னவோ, இஸ்ரேலியர்களின் இஸ்ரேலிய அரசு, 10 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளைக் கண்ணாடிச் சிறைக்கு உள்ளே போகவும், சிறைப்படுத்தப்பட்ட அவர்களது தந்தைகளைக் கட்டித்தழுவவும் அனுமதிப்பது உண்டாம். 


ஹனாவின், சிறையிலுள்ள இரு சகோதரர்களில் ஒருவருக்கு 7 வயதுள்ள மகன் இருந்ததால், அவன், சிறைச்சாலைக்குள் சென்று, தன் தந்தையைக் கட்டித் தழுவிய தருணத்தில், தந்தை அவன் கையில் ஏற்பித்த உயிர் துடிப்புள்ளத் தாமிரின் விந்தை சிறைச் சாலை மற்றும், சோதனைச் சாவடிக்கு வெளியிலும், யார் க்ண்ணிலும் படாமல் பொறுப்புடன் செயல்பட்டுக், கொண்டு சேர்த்ததை நினைக்கும் போது மெய் சிலிர்க்கிறது.  


அப்படிக், கோடிக் கணக்கான உயிர் துடிப்புள்ள உயிர் அணுக்கள், இறை அருளால் ஹனாவின் கர்ப்பப்பைக்குள், IVF க்ளினிக்கில் மருத்துவர்களின் உதவியால், செலுத்தப்பட, அவற்றில் ஒன்று வெற்றி வாகை சூடி, உயிர் பெற்று எழுந்து, கருவாகி, உருவாகி, சில மாதங்களுக்கு முன் ஒரு பாலஸ்தீனியனாகப் பிறந்து, கடந்த 8 வருடங்களாகப் பிரிந்து வாழும் தாமிரையும், ஹனாவையும் மகிழ்ச்சியின் எல்லையைத் தொட வைத்திருக்கிறது. 


தாமிருக்காகவும், ஹனாவுக்காகவும், பிறந்த அந்த அதிசயப் பிறவியாம் குழந்தைக்காகவும், அவனது ஆரோக்கியத்துக்காகவும், அது போல் பிறக்கும் மற்ற குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்வோம்.  கூடவே இது போன்ற துயரங்களை அனுபவிப்பவர்களுக்கு, அதிலிருந்து மீண்டு நல்வாழ்வு வாழ வைக்கவும் வேண்டிக் கொள்வோம்! இறையுணர்வு இல்லாதவர்கள் அவர்களை வாழ்த்தினாலே போதும்.  அவர்களது மனம் நிறைந்த வாழ்த்து இறையுணர்வு உள்ளவர்களின் மனமுருகி வேண்டும் வேண்டுதலுக்குச் சமமே!
    

 Courtesy : Google Pictures

31 கருத்துகள்:

 1. மனதைக் கனக்கச் செய்யும் செய்தி ஐயா. ஒரு காலத்தில் உலகெங்கும் சிதறிக் கிடந்த யூதர்களால், தம் போன்ற மற்றவரின் உணர்வினை புரிந்து கொள்ள இயலவில்லை என்பது கொடுமையே.

  பதிலளிநீக்கு
 2. சே... என்னவொரு கஷ்டம்... அவர்களின் நிலைமை மாறி, வாழ்வு சிறக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 3. இஸ்ரேலில் நடக்கும் விடயங்கள் மிகுந்த உணர்வுப் பூர்வமானது. ஆனால் எந்தவொரு தேசத்திலும் சிறைக்குள் இருக்கும் கைதியோடு மனைவியை புணர விடுவது சாத்தியமில்லை. பாலஸ்தீனிய கைதிகளின் விந்தணுக்களை கடத்தி வந்து கருத்தறிப்பது நடப்பது அறிவியல் பூர்வமாய் பகுத்தறிவுப் பூர்வமாய் பாராட்டத்தக்கது. ஆனால் இஸ்லாமிய மதவழக்கின் பிரகாரம் இவை ஏற்புடையதல்ல என்பதாக நான் கருதுகின்றேன்.. இல்லை எனில் சம்பந்தப்பட்ட இஸ்லாமிய தரப்பு தக்க தரவுகளோடு தர்க்கிக்கலாம்..!

  பதிலளிநீக்கு
 4. இத்தனை பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் அவரவர் மதங்கள்தான் ,மத அடிப்படைவாதிகளின் ஆதிக்கம் எந்த அளவிற்கு கொடுமையின் உச்சகட்டத்தில் உள்ளது என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது .பூமி உருண்டையில் உலக சமாதானம் கொடிகட்டி பறக்கும் நாள் எந்நாளோ ?
  த ம 3

  பதிலளிநீக்கு
 5. போர், வன்முறை ஆகியவற்றை பார்க்கும்போது மனிதர்களின் மனம் செல்லும் போக்கினை புரிந்து கொள்வது கடினம்..... தாங்கள் பட்ட துன்பத்தினை இப்போது வேறு மக்களுக்கு கொடுப்பதை உணர்வதே இல்லை இவர்கள்......

  த.ம. +1

  பதிலளிநீக்கு
 6. இனந்தெரியாத ஏதோ ஒரு வேதனை ! நெஞ்சில் ! குடி கொண்டது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இறையுணர்வு இல்லாதவர்கள் அவர்களை வாழ்த்தினாலே போதும். அவர்களது மனம் நிறைந்த வாழ்த்து இறையுணர்வு உள்ளவர்களின் மனமுருகி வேண்டும் வேண்டுதலுக்குச் சமமே!//

   நெஞ்சைத் தொட்ட வாசகம்.

   அவதிப்படுவோருக்கு என் வாழ்த்துகள்

   நீக்கு
 7. வேதனையாக இருந்தாலும் பாலஸ்தீன பெண்களின் துணிச்சல் வியக்கவைக்கிறது!

  பதிலளிநீக்கு
 8. மதமோ அல்லது தலைவர்களோ மக்களையும் குழந்தைகளையும் நல்வழிபடுத்தி காப்பாற்றும் என்று நினைப்பது இந்த காலகட்டத்தில் தவறாகத்தான் தோண்றுகிறது. என்னைப் பொருத்தவரையில் மக்களை காப்பாற்றத மதமோ தலைவர்களோ நமக்கு தேவையில்லை என்பதுதான்..

  பதிலளிநீக்கு
 9. படிக்கும்போது முதலில் வேதனையும், முடிவில் மகிழ்ச்சியும் அளிக்கும் ஒரு விறுவிறுப்பான நாவலை படித்த மாதிரி இருக்கு!

  பதிலளிநீக்கு
 10. மிக்க நன்றி கரந்தையாரே! தங்கள் அழகான பின்னூட்டத்திற்கு!

  பதிலளிநீக்கு
 11. மிக்க நன்றி நண்பர் வெங்கட் நாகராஜ்! தங்கள் நல்ல ஆழமான கருத்திற்கு!

  பதிலளிநீக்கு
 12. புலவரே மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

  பதிலளிநீக்கு
 13. மிக்க நன்றி தருமி! தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும்! தொடர்கிறோம்!

  பதிலளிநீக்கு
 14. ஆம் சரியே தளிர்! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

  பதிலளிநீக்கு
 15. மிக நல்லதொரு சமூகக் கருத்து மதுரைத் தமிழா! மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 16. வாங்க சகோதரி ராஜி! அழகியதொரு கருத்து தங்கள் ஸடைலில்! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 18. எல்லாம் வல்ல இறைவனின் அருள் இல்லாமல் இப்படியெல்லாம் நடக்காதே...அவன்ன்றி ஓரணுவும் அசையாது தானே...எனவே நாம் செய்யும், 'தவறு' என்று நம் சமுகம் சொல்வதைக் கூட, அதனால் மற்றவர்கள் பாதிக்க படவில்லை, பாதிக்கப்படமாட்டார்கள் என்றால் இறைவன் மன்னிப்பார் என்று நம்புவோம்....நன்றி இக்பால் செல்வன் அவர்களே உங்கள் கருத்திற்கு

  பதிலளிநீக்கு
 19. மதமோ அல்லது தலைவர்களோ மக்களையும் குழந்தைகளையும் நல்வழிபடுத்தி காப்பாற்றும் என்று நினைப்பது இந்த காலகட்டத்தில் தவறாகத்தான் தோண்றுகிறது. என்னைப் பொருத்தவரையில் மக்களை காப்பாற்றத மதமோ தலைவர்களோ நமக்கு தேவையில்லை என்பதுதான்..

  நண்பரின் கருத்துக்கு ஒரு சபாஷ். நீங்க இதனைத் தொடர்ந்து யூதர்களைப் பற்றி எழுத முடிந்தால் மகிழ்ச்சியடைவேன்.

  பதிலளிநீக்கு
 20. மிக்க நன்றி சகோதரி! சரிதான்ன் மதுரைத் தமிழன் கருத்து !!!

  பதிலளிநீக்கு
 21. மிகச் சரியே! நண்பர் ஜோதிஜி! மிக்க நன்றி! எழுத முயற்சிக்கிறோம்! தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 22. எத்தனை எத்தனை கொடுமைகள் இந்த உலகினிலே மனிதரை
  மனிதரே வதைக்கும் இன் நிலை மாற வேண்டும் மகிழ்வு தரும்
  இல்லற வாழ்வு சிறக்க வேண்டும் பாலஸ்தீன மக்களின்
  குறிப்பாகத் தந்தையைப் பிரிந்து வாழும் குழந்தைகளின் எதிர்
  காலம் சிறக்க வேண்டும் என்று வாழ்த்துவதோடு தங்களின்
  சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்
  தெரிவித்துக் கொள்வதில் நானும் பெருமை கொள்கின்றேன்
  சகோதரா .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 23. மிக்க நன்றி சகோதரி அம்னாளடியாள்! நல்ல கருத்து!
  தங்கள் பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும், தாங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!!

  பதிலளிநீக்கு
 24. பெண்கள் நினைத்தால் எதையும் சாதித்துக் காட்டுவார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணமே!

  பதிலளிநீக்கு
 25. மிக மிகச் சரியே! ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று சொல்லப்படுவததில் இரண்டாவது மிகைப்படுத்தல் என்றுதான் தோன்றுகின்றது! ஆவது பெண்ணாலேதான்! நல்ல கருத்திற்கு மிக்க நன்றி! சார்!

  பதிலளிநீக்கு
 26. இந்த பெண்களின் துணிச்சல் பாராட்டுக்குரியது அவர்களின் வாழ்வு சிறக்க வாழ்த்துவோம்

  பதிலளிநீக்கு