திங்கள், 8 செப்டம்பர், 2025

இரண்டு 'ஜி' க்களின் அலப்பறைகள்

 

4ஜி - இந்தா உன்னைத்தான், அந்த தங்கச்சி உன்னை அழுத்தி அழுத்தி கூப்பிடுது பாரு.

5ஜி - என்னது? என்னையா? நல்லாருக்கே! ம்ஹூக்கும். காலைலருந்து....6 மணி இருக்குமா...ஹான் அப்ப தொடங்கி இவ்வளவு நேரம் 6 நிமிஷ வீடியோ 7 மணி நேரம் ஆச்சு. தங்கச்சி ஏத்திவிட்ட அவங்க வீட்டாளு வீடியோவை சொமக்க முடியாம சொமந்து மூச்சு திணறி சுத்தி சுத்தி, முக்கி முக்கி அந்த யுட்யூப் பொட்டில போட்டுட்டு ரெஸ்ட் எடுக்கறேன். நீ இவ்வளவு நேரம் சும்மாதானே இருந்த போயேன்.

4ஜி - சோலிய பாரு. என்னால முடியாது. அந்த தங்கச்சி இடைல பாக்கற ஒன்னுத்துக்கும் உதவாத வீடியோக்ளுக்கு நான் போய் உழைச்சு சுத்தணுமாக்கும். உனக்குத்தான் பவரு கூடுதலு. 5ஜி! நீ போ.

5ஜி - அது திங்கற நேரம் இப்ப. நான் கொஞ்சம் தலைசாய்ச்சாதான், அது அப்பால இன்னும் வீடியோஸ ஏத்தி விடும் அதை சுமக்கணும். நீ போய் சும்மானாலும் சுத்து. வேலை பண்ணாத. சும்மா பம்மாத்து காமி.

4ஜி - சுத்தறதுக்குக் கூட முடில. உனக்குத் தெரியாதா அது திங்கற நேரத்துல கூட வீடியோவை ஏத்திட்டு ஹாயா போய்டும். நான் போக மாட்டேன்.

5ஜி - அப்ப நாம ரெண்டு பேரும் அப்பீட்டு. அந்த தங்கச்சி உடனே நம்ம பாஸ்கிட்ட கம்ப்ளெயின்ட் கொடுக்கும். இதே ரோதனையா போச்சு.

4ஜி -  இதுல வேற நான் என்னவோ சும்மாருந்தேன்னு சொல்ற? என்னவோ தட்டி தட்டி, அது என்னவோ ப்ளாகாமே, அதுல என்னைய கொண்டு போடச் சொல்லும். நான் மாட்டேனுருவேன்.

5ஜி - ஓ அதான் எங்கிட்ட கொண்டு போடச் சொல்லுதா? நிறைய படங்களை வேற எங்கிட்ட ஏத்திவிட்டு ஒரு பொட்டிக்குள்ள போடச் சொல்லிருக்கு. நான் போடலையே இன்னும்!  

4ஜி - உங்கிட்ட மட்டுமா? நீ மாட்டேன்னு சொன்னா உடனே என்னைய புடிச்சிக்கும். தங்கச்சி எத்தனை படங்களை, வீடியோவை நம்ம மேல லோட் ஏத்துது? யம்மாடியோவ். எனக்கு முடில...வயசாகிப் போச்சுன்னுதான் உன்னைய போட்டாங்க. உனக்கும் வயசாகிடுச்சு போல..

5ஜி - ஆமா...வயசாகுது. இப்ப பாரு 3, 4 மணிக்கு டீ குடிச்சு நொறுக்குத் தீனிக்குக் கூட போகாம, நொறுக்குத் தீனி வேற சாப்பிடாதாம், என்னைய அமுக்கு அமுக்குன்னு அமுக்குது.

4-ஜி - என்னையும்தான் அமுக்குது....தினம் இதே தான் சோலி.

5-ஜி - அது நம்ம பாஸுங்ககிட்ட கம்ப்ளெயின்ட் கொடுத்தாலும் அவனுங்க நம்மள கவனிக்கறதும் இல்ல. நம்மள இட்டாறதுக்கு ஒரு நல்ல வழி கொடுக்கணும்ல அது கொடுத்தாதானே நாம வேகமா மூச்சுத் திணறாம ஓட முடியும்? எங்க? ம்ஹூம் அதுவும் இல்ல. இதுல இந்த தங்கச்சி அடிக்கற கூத்துல மாட்டிக்கிட்டு முளிக்கணுமா இருக்கு. யம்மாடியோவ்! எம்புட்டு வீடியோ பாக்குது, வாசிக்குது. ஏதோ Reference ஆம், சங்கீதமாம்.....இடைல வம்பு ஒன்னுக்கும் உதவாத வீடியோ வேற...

4ஜி - ரெண்டு பேரையும் மாத்தி மாத்தி உலுக்கி எடுக்குது அது. ஒண்ணு பண்ணுவோம் ரெண்டு பேரும் சும்மா சுத்தி பாவ்லா காட்டி மக்கர் பண்ணிடுவோம். என்ன சொல்ற?

-------------

ஹேய்! என்ன சத்தத்தையே காணும்....ஓ அதுக்குள்ள நீ படுத்திட்டியா....ஸ்பாஆஆஆஆஆவ்...நானும்...

------------

கீதா: ரெண்டுபேரும் இப்படி அலப்பறை பண்ணீங்கனா நான் எப்படி எழுதறதாம்? இன்னும் ரெண்டு பேரும் நான் கொடுத்த படங்களை ப்ளாகர்ல கொண்டு சேர்க்கவே இல்லை.

சரி ஒரு சின்ன பதிவு, எழுத்து மட்டும்தான் அதையாச்சும் போட உதவுவீங்களா? ப்ளீஸ்?

4ஜி - 5 ஜி - எழுத்து மட்டும்தானே? படங்கள் எதுவும் இல்லைதானே? இல்லைனு சொல்லிட்டு ஏத்தினன்னு வை, சுத்தமா வேலை செய்ய மாட்டோம்.

கீதா: இல்லை எழுத்து மட்டும்தான்.

4ஜி - 5ஜி - போனா  போவுது. சரி கொண்டா போடு.

கீதா: ரொம்ப நன்றி ஜிக்களே! சரி....சரி...ம்ம்ம்ம். அடுத்த ஒரு பதிவுக்கு ஒரே அடியா ரொம்ப சுமை கொடுக்காம ரெண்டு ரெண்டு படங்களா ஏத்திவிடறேன், கொஞ்சம் உதவுவீங்களாப்பா?

4ஜி-5ஜி - பாத்தியா! கொஞ்சம் இரக்கப்பட்டதும் மடத்தைப் பிடுங்கற! ரெண்டு ரெண்டானா அதுவும் நிறைய தடவை சுமக்கணும்ல? இதுல நீங்க மூணு பேரு எங்களை யூஸ் பண்ணறீங்க. நீ இருக்கறது தரைத்தளத்துல. உங்க வீட்டாண்ட சுத்தி இண்டு இடுக்கு இல்லாம உசரமா கட்டுமானம். உங்க வீட்டாளுகிட்ட சொல்லி எங்க பாஸ்கிட்ட சண்டை போட்டு ஒழுங்கா லைன் போடச் சொல்லு.

கீதா: சொல்றேன். இப்ப உதவி பண்ணறீங்களா? ப்ளீஸ்

4ஜி 5 ஜி - ம்ம்ம்ம். கொடு. ஆனா நாங்க எங்க இஷ்டத்துக்கு நேரத்துலதான் போடுவோம்.

கீதா: சரிங்க ஜி'ஸ்! ரொம்ப நன்றி.

------------------

எங்கள் வீட்டில் வைஃபை மட்டுமில்ல, சாதாரண தொலை தொடர்பே கிடைத்து அறுபடாமல் பேசுவது ரொம்பக் கடினமாக இருக்கிறது. இந்த வீட்டிற்கு வந்த இந்த 3 1/2 வருடங்களில் சமீபமாகத்தான் அதாவது 7, 8 மாதங்களாகத்தான் இப்பிரச்சனை. காரணம் வீட்டின் பின்னால் முன்பு இருந்த மாடியில்லா தனி வீட்டை இடித்து இப்ப 5 மாடிகள் அடுக்கு மாடிக் குடியிருப்பாகக் கட்டியிருக்கிறார்கள் அதுவும் நம் வீட்டிலிருந்து கை நீட்டி சாமான் பரிமாறிக் கொள்ளும் தூரமே. அது போலத்தான் வலப்பக்கம், இடப்பக்கமும் வீடுகள். அதனால் வீட்டில் எந்த நெட்வொர்க்கும் எடுப்பதில்லை. ஸ்ரீராம், நெல்லை, துளசிக்கு இது நல்லாவே தெரியும். 

நான் அடிக்கடி சொல்வது, "இருங்க நான் கேட் பக்கம் வந்து பேசறேன். விஷயம் ஊருக்கே தெரிய வேண்டாமா?!!!!! இதாவது பொது விஷயங்கள்தான். ஆனால் உறவுகளோடு பேசுவது வீட்டு விஷயங்கள் எல்லாம் இப்படிப் பேச முடியுமா சொல்லுங்க? வெளியில் வந்தால் சாதாரண நெட்வொர்க் நன்றாகக் கிடைக்கும்.

ஸ்ரீராம் சஜஷன்ஸ் கொடுத்தார். நம்மவரிடமும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். ஒன்று வீடு மாறுவோம், இல்லை நெட்வொர்க் சரிசெய்ய வேண்டும் என்று. பார்ப்போம். நல்லது நடக்குமென்று.

அடுத்து ஒரு பயணப் பதிவுக்குப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறேன். இரண்டு ஜி க்களின் கருணையில் தான் இருக்கிறது பதிவு வருவது.


------கீதா

26 கருத்துகள்:

  1. ஆஆஆஆஆஆஆஆ தோ..ஓஓஒ வந்திட்டேன்... நலம்தானே கீதா, துளசி அண்ணன்? நானும் நலம்...
    கொஞ்சம் லேட்டாக வருகிறேன் ஜிக்களின் அலப்பறை எனில் நேரம் எடுத்து ரசிச்சுப் படிக்கோணுமெல்லோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா. நலம். நீங்களும் நலம்தானே.

      வாங்க மெதுவா

      நன்றி அதிரா.

      கீதா

      நீக்கு
  2. இரண்டு ஜிக்களும் சேர்ந்து மிகவும் படுத்துகிறார்களே....... இணைய பிரச்சனைகளை சுவைபட சொல்லி இருக்கிறீர்கள் .

    எனக்கு இணைய பிரச்சனை இல்லை என்றாலும் பதிவிடுவதில் வேறு சில சிக்கல்கள். இன்று வரை தான் schedule செய்து வைத்து இருக்கிறேன். நாளை முதல் தொடர்ந்து பதிவுகள் வெளிவருவதில் சிக்கல்கள் உண்டு. அதனால் தான் மீண்டும் பயணப் பதிவுகளும் இடையில் நின்று இருக்கிறது. விரைவில் சிக்கல்கள் தீர வேண்டும். பார்க்கலாம்.

    வெங்கட் நாகராஜ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட்ஜி, அந்த இரண்டு ஜிக்களும் ரொம்ப தொல்லை.

      சில சமயங்களில் அயற்சி ஆகிவிடுகிறது. இதிலேயே உட்கார்ந்திருந்தால் அப்புறம் மற்ற வீட்டு வேலைகளும் இருக்கிறதே.

      உங்கள் சிக்கல்கள் புரிகின்றது வெங்கட்ஜி.

      எனக்கும் இப்போது இந்த இணையப் பிரச்சனைகளோடு, வேறு சில பிரச்சனைகளும் இருக்கின்றனதான். நானும் அதனால்தான் பயணப் பதிவுகளும் போடாமல் இருக்கிறேன்.

      இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு நாளும் ஏற்றிக் கொண்டு இருக்கிறேன்.

      உங்கள் சிக்கல்களும் விரைவில் தீரும் ஜி.

      எனக்கும் தீரும், நல்லதை நினைப்போம்,

      நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  3. இன்றுதான் ஒரு செய்தி படித்தேன்... 1 ஜிபி டேட்டாவிற்கு இந்தியாவில் 7 ரூபாய் ஆகிறதாம் (வாடிக்கையாளரிடம் வாங்குவது). சைனாவில் 32 ரூ.... மிடில் ஈஸ்டில் 120-300 ரூ, அமெரிக்காவில் 450 ரூ.

    நீங்க 4ஜி 5ஜி பிரச்சனையைச் சொல்லிக்கிட்டிருக்கீங்க. ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நம்ம ஊர்தான் குறைவுதான் நெல்லை. ஆனால் ஒழுங்கா வருவதில்லை. இத்தனைக்கும் நம்மவர் நிறைய வேலைகள் அதில் செய்வதால், (நானும் தான்) unlimited data ஆப்ஷன்.

      நம்ம வீட்டுப் பிரச்சனை அதானே நெல்லை, ஹாஹாஹா. அதைத்தானே எழுத முடியும் இல்லையா.

      கீதா

      நீக்கு
  4. எங்க வீட்டில் ஜியோ சரியா எடுக்காது. அதனால் வாட்சப் கால், நல்லா வரும். இதுல நான் 200 எம்.பிக்கு மாறியிருக்கேன்.

    இருந்தாலும் உங்க வீட்டில் வெளியில் வந்தால்தான் நல்லா ஒர்க் ஆகிறது. என்ன பண்ண?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜியோ டேட்டா நல்லாருக்குன்னு சொல்றாங்களே. ஆனால் normal calls சரியாக எடுப்பதில்லை. எங்க வீட்டுக்குள்ள ரெண்டுமே மக்கர் பண்ணும்!

      இருந்தாலும் உங்க வீட்டில் வெளியில் வந்தால்தான் நல்லா ஒர்க் ஆகிறது. என்ன பண்ண?//

      ஆமாம் நெல்லை. அதான் பிரச்சனை.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  5. வைபை நெட் ஸ்லோ ஆவதற்கு பல காரணங்கள். அதில் ஒரு முக்கியகாரணம் ப்ளூடூத். கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போது கம்ப்யூட்டரில் புளுடூத் முடக்கப்பட்டுள்ளதா என்று கவனிக்கவும்.ஆன் என்றால் ஆப் செய்யவும். ப்ளூடூத் உள்ள மற்ற சாதனங்கள் ஹெட் போன், இயர்போன் போன்றவற்றையும் ஆப் செய்துவிடவும்.

    மேற்கூறிய சங்கதி இல்லை எனில் இரண்டாவதாக அருகில் எத்தனை வைபை இணைப்புகள் ஆன் ஆக உள்ளன என்று கம்ப்யூட்டரில் நோக்கவும். இணைப்புகள் கூடும்தோறும் நெட் ஸ்லோ ஆகும். காரணம் கம்ப்யூட்டருக்கும் மோடத்திற்கும் உள்ள தொடர்பு 2.4 Ghz என்ற ஒரே அலைவரிசையில் தான். ஆக இணைப்புகள் கூடும்தோறும் எல்லா இணைப்புகளின் பெறுதல் அனுப்புதல் என்பவை எல்லா மோடெங்களுக்கும் அனுப்பப்படும். அதனால் மோடம் ஸ்லோ ஆகும். இதற்கு பரிகாரம் அலைவரிசையை மாற்றுவது, 5Ghz அலைவரிசை மோடம் உபயோகிக்கலாம்.
    ஜியோ இணைப்புகள் துரித சேவை என்ற பெயரில் மற்றவர்களின் அலைத்தொடர்புகளை மழுங்கடிக்கும். இதனால் ஒரு பழைய உத்தியான "சத்தம் போட்டு பேசினால் எதிராளியின் சத்தம் அடங்கிவிடும்" என்ற முறைப்படி சிக்னல் ஸ்ட்ரென்த் கூட்டி மற்றவர்களை அமுக்கி விடும்.

    Jayakumar

    Geetha R
    15:43 (1 hour ago)
    to me

    அண்ணா மிக்க நன்றி.

    ப்ளூ டூத் எதுவும் ஆன் ஆகாது நாங்கள் உபயோகிப்பது இல்லை. கணினியிலும் சரி மொபைலிலும் சரி.

    ஹெட் ஃபோனில் ப்ளூ டூத் கிடையாது. நாங்கள் ஃபோனுக்குக் கூட உபயோகிப்பது இல்லை, அண்ணா. என் ஹெட் செட் என்பது ஜஸ்ட் ஆடியோ கேட்பதற்கு அதுவும் கணினியில் மட்டுமே.

    ஒரு சமயத்தில் ஒரு வைஃபைதான் ஆன் ஆகியிருக்கும் ஏர்டெல்லின் 4ஜி அலல்து 5 ஜி மோடம். மொபைல் டேட்டாவோ இல்லை, ஹாட் ஸ்பாட்டோ ஆஃபில்தான் இருக்கும். நம் வீட்டில் ஏர்டெல் மட்டும்தான். ஜியோ எதுவும் இல்லை. என் மொபைல் டேட்டா கூட ஆஃபில்தான் இருக்கும் அதாவது மொபைல் வைஃபை.
    5 ஜி தான் பெரும்பாலும் ஆனால் அது படுத்துவிடும்.

    வீட்டருகில் பலரும் ஜியோ பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிகிறது வைஃபை காட்டும். ஒரு சில ஆக்ட் பயன்படுத்துகிறார்கள்.

    வீட்டின் பின்னால் 5 மாடி அபார்ட்மென்ட் வருகிறது. எங்கள் வீட்டின் முதல் தளத்தில் உள்ளவர்களுக்கும் சின்னதாக எங்கள் அளவு இல்லை என்றாலும், இரண்டாவது தளத்தில் உள்ளவர்களுக்குப் பிரச்சனை இல்லை இருஅருமே ஏர்டெல் தான். அவங்களுக்கு அவங்க உயரத்துக்கு அருகில் வீட்டின் மாடிகள் இல்லை கொஞ்சம் திறந்தவெளி. நாங்கள் தரைத்தளம் என்பதால் நம் வீட்டிலிருந்து ஜன்னல் வழி அவர்கள் வீட்டுகிச்சனில், ஒரு ரூமில் சாமான் மாற்றிக் கொள்ளலாம் என்பதான நெருக்கத்தில் வலப்பக்கமும் இடப்பக்கமும் வீடுகள். வலப்பக்க வீட்டில் மாடி கிடையாது. இடப்பக்க வீட்டில் இரு மாடிகள். தனி வீடு எங்கள் வீடும் தனி வீடு. பின் பக்கம்தான் இப்ப பெரிய அபார்ட்மென்ட். அதுவும் நம் வீட்டின் கிச்சனுக்கு மிகவும் நெருக்கமாக.

    பார்ப்போம்...அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மொபைல் டேட்டா கூட ஆஃபில்தான் இருக்கும் அதாவது மொபைல் வைஃபை.//

      தவறுதலாக அடித்துவிட்டேன். மொபைல் வைஃபை ஆன் லதான் இருக்கும். அப்பதானே மொபைலில் வாட்சப் வேலை செய்யும். மொபைல் டேட்டா வெளியில் போகும் போது ஆனில் இருக்கும்.

      நன்றி ஜெகே அண்ணா

      கீதா

      நீக்கு
  6. அந்த இரண்டு ஜிக்களையும் பார்த்தாலும் பாவமாதான் இருக்கு...  அவங்க என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றங்க!!  அவங்க புலம்பல் தாங்கலையே...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா.....ஸ்ரீராம், அதைச் சொல்லுங்க. ஒழுங்கா லைன் இருந்துச்சுனா அதுங்க ஏன் புலம்பப் போகுதுங்க!

      கணினியில்தான் நிறைய படுத்தல், ஸ்ரீராம். நம்மவருக்கும் ரெக்கார்டிங்க் வேலை சரியாக நடக்காமல் போன மாதம் கொஞ்சம் கஷ்டமாகிப் போச்சு.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. கமலா அக்கா , துரை செல்வராஜூ அண்ணா மாதிரி மொபைல்ல பதிவிட கொஞ்சம் கத்துக்குங்க..  சமயங்களில் டெஸ்க்டாப் நெட்வொர்க்கை விட மொபைலில் வேலை சட்டென முடியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ ஆஆஆஆ....மீக்கு அது ரொம்பக் கஷ்டம் ஸ்ரீராம். வலது கையால் தட்டுவது அதுவும் மொபைலில் ஒற்றைக் கையால் செய்யணும். குரல் மூலம் தட்டச்சுவது எனக்கு வர மாட்டேங்குது. பரவால்ல ஸ்ரீராம், பதிவுகள் தாமதமானாலும் பரவால்ல. என் கைகள் தோள்கள் முக்கியமாச்சே அப்புறம் ஆஸ்பத்திரி செலவு ஆகும்.

      உண்மைதான் ஸ்ரீராம், கணினியை விட மொபைலில் இணையம் பரவால்லதான். ஆனா வீட்டுக்குள்ளருந்து ஃபோனில் பேசுவது சிரமமாக இருக்கு மெசேஜ் அத்தனை பிரச்சனை இல்லை. ஆனால் வாட்சப்பில் சின்ன வீடியோக்கள் அதாவது ஃபார்வேர்ட்ஸ் இல்லை, நான் ஓரிருவருக்குச் செய்து கொடுக்கும் வீடியோஸ் சின்னது கூட வாட்சப் வெப்பில் போக மாட்டேங்குது. மொபைலில் எனக்கு வீடியோக்கள் பண்ண முடிவதில்லை. கணினிதான் எனக்கு வசதியாக இருக்கு

      பார்ப்போம் ஏதாச்சும் நடக்கும்

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. உங்கள் வீட்டருகில் பப்பாளி மரம் இருக்கிறதா?  அது இருந்தால் நெட்வொர்க்கை நன்றாக இழுத்துக் கொடுக்குமாமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!! சும்மா கலாய்க்கறீங்கதானே!

      உண்மையாவா?

      கீதா

      நீக்கு
  9. இரவு படுக்கப் போகும் முன்பு பதிவில் ஏற்ற வேண்டியவைகளை அப்லோடி விட்டு படுத்து விடுங்கள்.  காலை முக்கால் வாசி முடிந்திருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான் நாங்க செய்துகிட்டிருக்கோம் ஸ்ரீராம். பெரும்பாலும் இவர் வீடியோஸ் இல்லைனா நான் செய்து கொடுக்க்ம் வீடியோஸ் ஏறிக் கொண்டிருக்கும். அவை இல்லை என்றால் எங்க பதிவின் படங்கள்.

      அதுவும் பார்த்தீங்கனா, காலைல 10 - 30% தான் ஏறியிருக்கும். சில சமயம் மீண்டும் ஏற்ற வேண்டியிருக்கும்.

      அப்படி ஏறிவிட்டது என்று காட்டிய வீடியோக்களை அனுப்பியிருந்தான் அவை போயிருக்காது. ஸோ மீண்டும் அப்லோட் செய்யணும். அதுதான் மதியம் ஆகிவிடும் ஏறி முடிக்க. அந்தச் சமயத்தில் வலைப்பக்கம் வர முடியாமல் போகிறது.

      என் கணினியும் ரொம்ப பழசுதானே ஸ்ரீராம்.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  10. நடுவில் வைஃபையை சர்ச்சில் - அதாங்க தேடலில் போட்டு..  நீங்கள் பாட்டுக்க பக்கத்துல சர்ச் எதுவும் இல்லையே  ஜீசஸ்னு கவலைப்படாதீங்க...  -  போட்டால் சிலபல நெட்வொர்க்குகள் காட்டும்.  அவை யாருடையவை என்று பார்த்து அருகிலுள்ள வீடுகளின் நெட்வொர்க்கை செலெக்ட் செய்து அவர்கள் பெயரை ஜம்பிள் செய்து பாஸ்வேர்ட் முயற்சியுங்கள்.  திடீரென ஒன்றிரண்டு மாட்டி விடும்!!  எல்லார் வீட்டிலும்தான் நெட்வொர்க் கனெக்சிஜன் இருக்கிறதே என்று சிலர் பாஸ்வேர்டு எதுவும் போடாமல் ஒபன்ல வைத்திருக்கவும் வாய்ப்பு!!!

    பதிலளிநீக்கு
  11. இரண்டு 'ஜி' க்களின் அலப்பறைகள் படிக்க நன்றாக இருக்கிறது.
    இருந்தாலும் ஜிகளின் வழியே உங்கள் கஷ்டங்கள் தெரிந்தன.
    உங்கள் கஷ்டங்களை அழகாய் பதிவாக்கி விட்டீர்கள்.
    தங்கை வீடும் அப்படித்தான், பக்கத்தில் பின்னால், என்று பெரிய கட்டிங்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டது அவள் வீடு அதான்ல் நெட் சரியாக கிடைக்கமாட்டேன் என்கிறது.

    ஏதாவது நல்ல வழி கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிக் காலையில் கருத்து போட்டால் உண்டு. ஆனால் தினமும் இப்படிக் காலையில் உட்கார முடியாதே. இன்று மிக எளிய உணவு. அதனால் முடிகிறது. இல்லைனா இந்த நேரத்தில் வீடியோக்கள் ஏறிக் கொண்டிருக்கும். கணவரின் ரெக்கார்டிங்க் நடக்கும். எனவே முடியாமல் போகும்.

      ஆமாம் பாத்தீங்களா, அக்கா உங்கள் தங்கை வீட்டில் உள்ளது போலவேதான். கொஞ்சம் திறந்தவெளி வேண்டும். மாடியில் இருந்தால் கூடப் பரவால்ல. வரும்.

      வழி பிறக்கும், கோமதிக்கா பார்ப்போம்.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  12. அட போன்ல சும்மா பேசறதுக்கே அரைமைல் வெளியே வரணும் என்னும்போது எதற்கு இந்த நெட்வொர்க்?  உடனடியாக மாற்றுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதைச் சொல்லுங்க.

      வேறு எந்த நெட்வொர்க் சரியா இருக்கும்னு பார்க்கணும் ஸ்ரீராம். எந்த நெட்வொர்க் போட்டாலும் வீட்டின் அமைப்பும் முக்கியமாச்சே. திறந்தவெளி வேண்டுமே ஸ்ரீராம். இங்கு நாங்கள் இருக்கும் இந்த வீட்டின் அமைப்பு மற்றும் ப்ளக் பாயின்ட், கணினி வைத்துக் கொள்ள இடம் இப்ப வைத்திருக்கும் இடம் ஒன்றுதான் எந்தப் பக்கமும் திறந்த வெளி இல்லை வாசல் பக்கம் தவிர அங்கு ப்ளக்பாயின்ட் வேண்டுமே!

      பார்ப்போம் ஏர்டெல் ஃபைபர் நல்லாருக்குன்னு சொல்றாங்க பார்ப்போம்.
      அதற்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  13. இன்று செய்தித்தாளில் ஒரு செய்தி.  செங்கடல் அடியில் ஏதோ நாசவேலை காரணமாக இணையசேவை கேபிள்கள் அறுந்திருக்கின்றனவாம்.   அது காரணமாக இருக்குமோ!

    https://www.dinamalar.com/news/world-tamil-news/cables-damaged-under-the-red-sea-internet-service-outage-in-india/4027186

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்தியை பார்த்தேன் ஸ்ரீராம், அதுவும் காரணமோ? அப்படினா எல்லாருக்கும் பிரச்சனை இருந்திருக்க வேண்டுமே இல்லையா?

      ஏர்டெல் ஏற்கனவே ஒத்துக் கொண்டிருக்கிறதே தங்கள் சேவையில் பிரச்சனைகள் இருக்கின்றன என்று. வைஃபை சேவை உட்பட. அவர்கள் எங்களிடம் சரி செய்ய கேட்ட தேதி கடந்துவிட்டது.

      எனவே ஃபைபர் ஆப்ஷன்ஸ் குறித்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். நம்ம பட்ஜெட்டுக்கு ஒத்துவருமா என்று.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு