இன்றைய பதிவிற்குள் செல்லும் முன், சென்ற பதிவில் விட்ட சில படங்கள்
மறுநாள் 27-04-2024 - 12 மணிக்கு எர்ட்டிகாவில் சிம்லா ரயில்நிலையத்திற்கு வந்து மீண்டும் டாய் ரயிலில் பயணம்.
சிம்லா - கால்கா டாய் ரயில்மறுநாள் காலை 28-04-2024 - 6 மணிக்கு பழைய தில்லி ரயில் நிலையத்தை அடைந்தோம். அங்கும் ஓய்வெடுக்கும் அறையை முன்பதிவு செய்திருந்தேன். கூட வந்த உடல்நலமில்லாதவருக்கு எங்களுடன் ரயிலில் ஊர் நோக்கி 3 நாட்கள் பயணிப்பது சிரமம் என்பதால் அவரது மகள் விமானத்தில் பயணச் சீட்டு எடுத்திருந்தார். தில்லியில் இருக்கும் மருமகன் அவரை மாலை விமான நிலையத்திற்குக் கூட்டிப் போக முடிவானது.
நாங்கள் மெட்ரோ ஏறி குதிப்மினார் சென்றோம். படங்கள், காணொளிகள் எடுத்துக் கொண்டோம்.
குதிப்மினார் கண்டபின், கேரளா ஹவுஸில் மீன் வறுவலுடன் கேரள உணவு உண்டோம். அதன் பின் சாந்தினி சௌக்கில் ஷாப்பிங் செய்தோம்.
பிறகு அறையை அடைந்து கொஞ்சம் ஓய்வெடுத்தோம். 6 மணிக்குக் கிளம்பி புது தில்லி ரயில் நிலையத்தை அடைந்தோம். 3 வது நடைபாதையிலிருந்த கேரளா எக்ஸ்பிரஸில் B1 ல் ஏறி எங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்தோம். இரண்டு இரவுகளும் ஒரு பகலும் என 48 மணி நேரப் பயணம் செய்ய வேண்டும்.
அதற்கு அடுத்த நாள் 30-04-2024, மாலை 3.30க்குத் திருச்சூரை அடைந்து அங்கிருந்து ஷோரணூர் வழியாக நிலம்பூர் செல்லும் ரயிலில் பயணித்து நிலம்பூரில் இறங்கி வீட்டை அடைந்தோம்.
12 நாட்கள் வட இந்திய பயணம். நினைக்கும் போது இப்போதும் இனிக்கிறது. இருந்தாலும் இந்தி மொழி தெரியாதது ஒரு குறைதான். அருணும், எங்களுடன் வந்த ஒருவரும் எல்லா இடங்களிலும் இந்தியில் பேசி எங்களைக் காப்பாற்றினார்கள்.
1960-65 க்கு இடையில் தமிழகத்தில் பிறந்த பலருக்கும் இந்தப் பிரச்சினை, இந்தி தெரியாத பிரச்சனை உண்டுதான். ஒரு சிலர் தனியாகக் கற்றுக் கொண்டிருந்திருக்கக் கூடும். கூடுதலாக ஒரு மொழியைத் தெரிந்து கொள்வது நல்லதுதான். அதில் இந்தியைக் கற்றுக் கொண்டால் இந்தியாவில் எங்கும் தனியாகப் பயணிக்கலாம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக