வெள்ளி, 17 செப்டம்பர், 2021

ஊஞ்சலாடும் எண்ணங்கள்

 ஊஞ்சலாடும் எண்ணங்கள்

“குட்டி! நீ தமிழிலு எழுத்து எழுதுறியே, புறநானூறு ஓர்மையிருக்கா?” (நீ தமிழில் எழுதுகிறாயே புறநானூறு நினைவிருக்கிறதா?) மலையாள பூமியில் இருக்கும் என் அன்புத் தங்கையின் வாட்சப் கேள்வி. 

என்ன இது சம்பந்தமே இல்லாமல் இப்படி ஒரு கேள்வி? ஏதோ உப்புக்குச் சப்பாணியாய் ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவையாய் என்னவோ எழுதுகிறேன் என்பதற்காக நான் என்னவோ தமிழ் இலக்கியத்தையே கரைத்துக் குடித்தவள் போல இப்படி ஒரு கேள்வி.

விளித்தேன். என்ன என்று கேட்டேன்.

“ஓஃபீஸ்ல, ஃப்ரென்ட், சம்சாரிச்சிட்டிருந்தப்ப புறநானூறுல ஒரு பாட்டு சொல்லி கேட்டப்போ, எனக்கு ஓர்மையில்லை. நீ தமிழிலு எழுதறியேன்னு உங்கிட்ட கேட்டுச் சொல்லலாமேன்னு…”

அவள் சொன்ன ஓரிரு சொற்கள் -  புலவர்கள், வறுமை, பரிசில் - கொண்டு கூகுள் களஞ்சிய அலமாறியை, பக்கங்களைப் புரட்டோ புரட்டு என்று புரட்டினேன். புறநானூற்றுப் பாடல்களில் புலவர்கள் தங்கள் வறுமையைச் சொற்களில் தோய்த்து எழுதியிருந்தது தெரியவந்தது. நான் பாடல்களை இங்கு குறிப்பிடவில்லை. கருத்துகள் மற்றும் அதோடு எழுந்த என் கோக்கு மாக்கு கற்பனை மட்டும். 

முற்காலத்தில் புலவர்கள் வறுமையில் வாழ்ந்ததாகப் பல செய்யுள்கள் சொல்கின்றன. சில புலவர்கள் மன்னர்களைச் சும்மானாலும் புகழ்ந்து பாடி, “ஏதேனும் கொடப்பா” என்று பரிசில்கள் வாங்கிச் சென்றதாக எதிலோ வாசித்த நினைவு. 

பரிசில்கள் கிடைக்கவில்லை என்றால் மன்னரைத் தூற்றிப் பாடிய புலவர்களும் உண்டாம். பின்ன கஷ்டப்பட்டு ஏதோ கிடைக்குமே என்று புகழ்ந்து பாடியும் பேமென்ட் கிடைக்கலைனா வீட்டம்மாகிட்ட வசை வாங்கணுமே!

பெருஞ்சித்திரனார் எனும் புலவர் தான் இயற்றிய பாடலைப் பெரும் வள்ளலான அதியமானைத் தேடிச் சென்ற போது அதியமான் இவரைப் பார்க்காமல், பாட்டைக் கேட்காமல், புலவருக்குப் பரிசிலை மட்டும் அனுப்பினானாம்.

புலவர் கொஞ்சம் மானஸ்தன்.

காணாது ஈத்த இப் பொருட்கு யான் ஓர்

வாணிகப் பரிசிலன் அல்லேன்

கடைசி வரி பாருங்க நச்! “நான் வாணிகப் பரிசிலன் அல்லேன்….வியாபாரி அல்லன் என் பாட்டை, அறிவை, புலமையைப் பார்த்து, கேட்டு, தகுதி இருக்கான்னு பார்த்து தந்தா ஓகே....இல்லைனா அட போயா! வேண்டாம்னு சொல்லிவிட்டார். 

அடுத்து, வறுமையில் வாழ்ந்தாலும் தகுதி இல்லாத மன்னரைப் பாடவே மாட்டார்களாம்.

இன்னொன்று, புலவர்கள் பாராட்டிப் பாடும் அளவுக்கு மன்னர்களும் தங்கள் தகுதியை வளர்த்துக் கொண்டனராம்.

மன்னர்களுக்கு அறிவுரை செய்த புலவர்களும் உண்டு! ஔவையார் பற்றி நமக்குத் தெரியும்.

நம்ம மனசு சும்மாருக்குமா? போக்கிரித்தனமாகக் கற்பனை செய்தது. வேண்டாத வேலை!

இப்போதைய கவிஞர்களில் சினிமா பாடல்கள் எழுதுபவர்கள் (அதிலும் ஒரு சிலர் தானோ?) சம்பாதிக்கிறார்கள். ஏனையோர் எப்படியோ? தற்போது கவிஞர்களின் நூல்கள் போணியாகிறதோ?! சரியாகத் தெரியவில்லை. நேற்று மறைந்த கவிஞர் ஜெ. பிரான்ஸிஸ் கிருபா சில திரைப்படங்களிலும் பாடல்கள் எழுதியிருப்பதாக ஏகாந்தன் அண்ணா தன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். கிருபா கவிதைப் புத்தகங்களும் போட்டிருக்கிறார்.  அவர் மறைந்த நிகழ்வு ஜெமோ தளத்தில் அறிந்தது.

ஆனால், ஏனோயொர்? தற்போது புகழ்ந்து பாடி சம்பாதிக்க மன்னர்களும் இல்லையே. சரி, தலைவர்களைப் புகழ்ந்து பாடினால் ஏதேனும் கிடைக்குமோ? 

ஒரு வேளை ஒன்றும் தேறவில்லை என்றால் அக்காலத்துப் புலவர்களைப் போல் தூற்றிப் பாடினால் என்ன ஆகும்?! இல்லை, தலைவர்களுக்குக் கவிஞர்கள் இடித்துரைத்து அறிவுரைகள் வழங்கினால்? கவிஞர்கள் பாடு திண்டாட்டம்தானோ?! 

சத்தியமாய் இது வேறு எதுவுமில்லை, சும்மா ஒரு கோக்கு மாக்கு கற்பனை! தில்லைஅம்பலனே சரணம்! காப்பாத்துப்பா! எனக்குச் சுயமாகப் பாடல் எல்லாம் எழுதத் தெரியாது ஈசா! அதுக்காக என்னைக் கண்டுக்காம இருந்திடாதப்பா, தில்லை அம்பல நடராஜா!

சென்ற மாதம் இந்த மாதிரி வேண்டாத சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்த சமயம், ஜெமோ தளம் அடிக்கடி வாசிப்பதால், மொபைலில் ஜெமோ தளத்தின் பதிவு ஒன்றை சென்ற மாதம் கூகுள் அனுப்பியது. (கூகுளுக்குத் தெரியாம (கூகுள் ஆண்டவர்??!!!) எதுவுமே செய்ய முடியாது போல. நாம் எதைப் பார்க்கிறோமோ அதைப் பற்றி, தளங்கள் பலவற்றை மொபைலுக்கு அனுப்பிடுது!!!) அதில் கவிஞர் விக்ரமாதித்தன் அவர்களுக்கான விஷ்ணுபுர விருது குறித்து. இந்த விருது 2010 லிருந்து கொடுப்பதாகத் தெரிகிறது. கவிஞர்களும் தற்போது கௌரவிக்கப்படுகிறார்கள்! நல்ல விஷயம். தொடர வேண்டும்.

*************

தங்கை வாட்சப்பில் அனுப்பியிருந்த அனந்துவின் படம் அனந்துவுடனான என் முதல் அனுபவத்தை நினைவுபடுத்தியது! பலவருடங்களுக்கு முன், அன்று, என் கற்பனையில் விரிந்ததை என்னவோ அதிசயமாக மூளை சேமித்து வைத்திருந்தது!!  

அனந்துவின் அப்பாயின்ட்மென்ட் கிடைப்பது சிரமம். உங்களுக்கு எப்படியோ தெரியாது. என் அனுபவம் அது. அனந்து பெரும்புள்ளி! மிகவும் பிராபல்யமானவர்! அப்பாயின்ட்மென்ட் கிடைத்தாலும் கெடுபிடிகள் அதிகம். பெரும் கூட்டம் வரும் முன் அதிகாலையில் பார்த்துவிட வேண்டும் என்று அப்பாயின்ட்மென்ட் …

சரி அப்படி அப்பாயின்ட்மென்ட் எதற்கு? 

அதென்ன அப்படி ஒரு கேள்வி? 

பிரபலமானவரை அருகில் பார்க்க விரும்புவோம்தானே. புலம்ப வேண்டாமா? வேறெதற்கு?

ஆனால் பாருங்க, மல்லாக்கப் படுத்துக் கொண்டு, கைகளை விரித்துக் கொண்டு, வலது கையை ஒய்யாரமாகத் தொங்க விட்டு, கண்ணை மூடிக் கொண்டு அஸிஸ்டென்ட்கள் சூழ என்ன ஒரு ரிலாக்ஸ்ட் சயனம்! 

அனந்த சயனம், யோக நித்ரா வாம். நானும் இப்படி சயனிக்கத்தான் நினைக்கிறேன். முடிகிறதோ?! யோக நித்ரா என்று தூங்கிவிடுகிறேனே! மனம் உடனே சிவ யோகம் பற்றியும் பதஞ்சலி முனிவர் பற்றியும் அவர் வழியில் வந்த என் யோகா குருஜி சொன்னதிற்குத் தாவியது. சிவ யோகம் என்பது எளிதல்ல. குருஜியும் எத்தனையோ அறிவுரைகள் சொல்லிக் கற்றுக் கொடுத்தார்.

ஆதியோகி ஈசனின் அத்தனை யோக நிலையும் மனதில் ஓடியது. எப்போதும் கண்மூடி யோகநிலை! நாம் தொழுவது அவர் யோகநிலையைக் கலைக்குமோ! ஸாரி ஆதியோகி! ஹூம் எந்த சிவ யோகமும் வாய்க்கவில்லை! ஒழுங்காகப் பயிற்சி செய்தால்தானே! அதாவது மனம் ஒன்றி! அதுதானே முக்கியம்.

ஹூம்!  உம் ஃப்ரென்ட் ஆதியோகி கண்டு கொள்ளவில்லை!  தாமோ? என்று அனந்துவிடம் புலம்பினால் பதில் சொல்வாரோ? மேலே நோக்கிக் கண்ணை மூடிக் கொண்டு நம்மைத்தான் பார்க்கவே இல்லையே பதில் வராது என்றே நினைத்தேன். இருந்தாலும்….

புலம்பினேன்! உலக யோகம் வேண்டிப் புலம்பத் தொடங்கவில்லை! அனந்துவாவது யோகநித்திரைக்கு அருள் செய்வாரோ என்று! நீங்கள் கண்டிப்பாக நம்ப மாட்டீகள் தெரியும். நானுமேதான். (அருளினாலும் நீயல்லவா பயிற்சி செய்ய வேண்டும்!! என் மனசாட்சி!) மனம் தாவியது.

எங்கு? அனந்து யோகநித்திரை என்றதும், திருமெய்யத்துக்கு. அங்கு சத்யமூர்த்தியும் யோகநித்திரையில்தான். அங்க ஒரே இடத்திற்குள் அடுத்தடுதாற்போல் ரெண்டுபேருமே இருக்கிறார்களே சத்யகிரீஸ்வரர்(சிவன்), சத்யமூர்த்தி! திருச்சுற்று இருவருக்கும் சேர்த்துதான். விண்ணப்பம் ஈசியா கொடுத்துவிடலாம்! ஆனால் பாருங்க நம்ம மனுஷங்கள் ரெண்டு பேருக்கும் நடுல மதிற்சுவர் கட்டிப் பிரிச்சுட்டாங்க என்ன சொல்ல?  நல்லகாலம் சுசீந்திரத்தில் பிரிக்கவில்லை!  சுசீந்திரம் போன மனது உடனே மீண்டும் அனந்துவிடம் வந்து நின்றது.

விண்ணப்பத்தைக் காது கொடுத்துக் கேட்டாரோ, தெரியவில்லை. எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. சரி, எப்போது வேண்டுமானாலும் பார்த்துச் செய்யட்டும், ஆதியோகியிடமும் சிபாரிசு செய்யட்டும், சொல்ல வேண்டியதைச் சொல்லி வைப்போம் என்று அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து……

பார்த்தீர்களா, அனந்துவிடமிருந்து அடுத்து ரங்குவிடம் தாவிவிட்டேன். ரங்குவாச்சும் கொஞ்சம் சைடுல திரும்பி சயனம்! பூலோகத்தர்! நித்திரைன்னு எல்லாம் சொல்லப்படாததால் கண் மலர்ந்து நம்மைப் கொஞ்சம் பார்க்கறாற் போல இருக்கிறாரேன்னுதான்….திருஇந்தளூர் பரிமள ரங்கு விடம் கூட மனம் தாவியது ஆனால் அவர் நெடுந்துயிலாம்! திருமங்கை ஆழ்வாரே கோச்சுக்கிட்டு நிந்தா துதி பாடியிருக்க நம்மளை பார்த்துவிடப் போகிறாரா என்ன?

அனந்து முன்னே நின்று கொண்டு சத்தியகிரீஸ்வரர், சத்தியமூர்த்தி, பரிமளரங்கு, ரங்குவை எல்லாம் நினைக்கலாமா? அதனாலென்ன? எல்லாரும் ஒன்றுதானே. இப்போதைக்கு அனந்துவிடமே சொல்லிடலாம்….டக்கென்று மூளையில் பளிச்! ஓ! யோக நித்திரையாச்சே!! கலைக்கக் கூடாது! எதுவும் வேண்டக் கூடாது, புலம்பக் கூடாது என்று பாட்டி சொல்லிக் கேட்டதுண்டே! 

ஓ! அனந்து! உன் யோக நித்திரைக்குத் தொந்தரவு தரமாட்டேன்! ஸாரி அனந்து! மன்னித்துவிடு! சத்தியகிரீஸ்வரர், சத்திய மூர்த்தியும் யோகநிலை!  பரிமள ரங்குவோ ரொம்ப ரெஸ்டிங்க்! ரங்குவிடமே சொல்லிக் கொள்கிறேன்!

அட! ஏதோ கேட்கிறதே! இத்தனை பேரை பார்க்கலாம்னு சொன்னதும் அனந்து ரெஸ்பாண்டெட்? (இதான் டெக்னிக்?...பாத்துக்கோங்க!) அப்ப ஆதியோகிக்கும் செய்தி போய்விடும்!

“என்ன புலம்பப் போற? இந்த மாசக் காப்பி பொடி வாங்க வழி செய்துடுப்பான்னுதானே!!!”

ஹோ ! என்ன குறும்பு பாருங்க! வெரி நாட்டி!

--------கீதா

ரொம்ப நாள் கழித்து எங்கள் வலைத்தளத்தைத் தூசிதட்டியிருக்கிறோம்/றேன். 

40 கருத்துகள்:

 1. மிகவும் இரசித்துப் படித்தோம்..தொடர வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 2. ஊஞ்சலாடிய எண்ணங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
  தொடர்ந்து எழுதுங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கில்லர்ஜி. தொடர்ந்து எழுத...பார்ப்போம்...

   கீதா

   நீக்கு
 3. வெகுநாட்களுக்குப் பின் வந்ததறிந்து மகிழ்ச்சி. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 4. தங்களின் மூலம் "விஷ்ணுபுர விருது" பற்றி தெரிந்துகொண்டேன்... ரொம்ப நாள் கழித்து உங்கள் வலைத்தளத்தைத் தூசிதட்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள்... இது போதாது. எங்களுக்கு "டஸ்ட்" என்றால் அலர்ஜி... தமிழ் அன்னைக்கும்தான்... எனவே அடிக்கடி தமிழை பதிவு செய்யுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது போதாது. எங்களுக்கு "டஸ்ட்" என்றால் அலர்ஜி...//

   ஹாஹாஹா ரசித்தேன் சகோ..

   எழுத முயற்சி செய்கிறேன்.

   மிக்க நன்றி நாஞ்சில் சகோ

   கீதா

   நீக்கு
 5. //தலைவர்களைப் புகழ்ந்து பாடினால் ஏதேனும் கிடைக்குமோ? // - அண்ணா நகரில் இரண்டு கிரவுண்டு, கிடைத்த நெடுஞ்சாலைகளிலெல்லாம் சொத்துக்குவிப்பு, ரஜினிக்குப் போட்டியா சொத்து வாங்குதல், பலருக்கும் (திரைப்பட, பத்திரிகையாளர்களுக்கு) தலைவரின் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித்தர கட்டிங்...

  பதிலளிநீக்கு
 6. அனந்துவா இருந்தா என்ன? வெங்கியா இருந்தால் என்ன? ரங்குவா இருந்தால் என்ன? யாரிடம் வேண்டுமானாலும் சொல்லலாம்.
  அந்தக் காலப் புலவர்களிலும் பணக்காரப் புலவர்கள் உண்டு போலிருக்கே. ஆனால் பெரும்பாலான புலவர்கள் வறுமையில் தான் உழன்றிருக்கிறார்கள். சத்திமுற்றப் புலவரைப் போல. கையது கொண்டு மெய்யது பொத்தி (குளிருக்குப் போர்த்திக்கச் சரியான வேஷ்டி கூட இல்லை) காலது கொண்டு மேலது தழிஈ, இப்பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழையாளனைக் கண்டனம் எனுமே! என்கிறார். அப்படின்னா அவர் எம்புட்டு ஏழையா இருக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனந்துவா இருந்தா என்ன? வெங்கியா இருந்தால் என்ன? ரங்குவா இருந்தால் என்ன? யாரிடம் வேண்டுமானாலும் சொல்லலாம்.//

   ஆமா அதானே....

   முன்ன பெரும்பான்மையோர் வறுமை //சத்திமுற்றப் புலவரைப் போல. கையது கொண்டு மெய்யது பொத்தி (குளிருக்குப் போர்த்திக்கச் சரியான வேஷ்டி கூட இல்லை) காலது கொண்டு மேலது தழிஈ, இப்பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழையாளனைக் கண்டனம் எனுமே! என்கிறார். //
   ஆமாம் கீதாக்கா நானும் வாசித்ததுண்டு...

   மிக்க நன்றி கீதாக்கா

   கீதா

   நீக்கு
 7. கவிதைகள் பற்றி எழுதி இருந்ததாவது புரிந்தது.  அப்புறம் அனந்து மேட்டர் புரியவில்லை.  முதலில் அனந்து என்றதும் கேபி உதவியாளர் என்று நினைத்து விட்டேன். 

  பொதுவாக அவர் மோனத்தைக் கலைக்க வேண்டாம் என்கிறீர்கள்..  நமக்கு வேண்டியது என்ன, விதிக்கப் பட்டிருப்பது என்ன என்று அவர் அறியாததா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்..சரியா எழுதியிருக்கீங்க. அதனால்தான் அந்தப் பகுதியைப் பற்றிக் குறிப்பிடலை. எனக்கும் இடையில் புரிந்துவிட்டது, ஆனால் எல்லோருக்கும் புரியாது.

   நீக்கு
  2. ஆமாம் ஆமாம் அடைப்புக்குறிக்குள்ளாவது இறைவன் பெயரைச் சொல்லியிருக்க வேண்டும் என்று ஸ்ரீராமின் கருத்தைப் பார்த்த்துமே தோன்றியது நெல்லை.

   ஒரு சிலருக்குத்தான் புரியும் என்பதும் புரிந்தது.

   கீதா

   நீக்கு
  3. துளசியின் பெயரி தளம் என்பதால் எப்பவும் துளசிக்குப் பதிவுகளை அனுப்பிக் கேட்டுவிட்டுத்தான் போடுவேன். சில சமய்ம் அவருக்குப் புரியாதது போல ஏதேனும் இருந்தால் 'இந்த இடம் என்னவோ ஒரு பிரச்சனை இருக்கே' என்று சொல்வதுண்டு. அப்படி சில சமயம் விளக்கங்கள் டிஸ்கஷன் கூட இருக்கும், இந்த முறை என்னவோ துளசி எதுவுமே சொல்லவில்லை. போட்டுவிடு என்று சொன்னதால்..

   நெல்லை நான் பொதுவா சொல்வதுண்டு புரியும் படி எழுத வேண்டும் என்று. ஆனால் குழப்பிட்டேன் போல ஹிஹிஹி மையத்து ஆள் போல??!!!.

   கீதா

   நீக்கு
 8. கவிதைகள் பற்றி எழுதி இருந்ததாவது புரிந்தது. அப்புறம் அனந்து மேட்டர் புரியவில்லை. முதலில் அனந்து என்றதும் கேபி உதவியாளர் என்று நினைத்து விட்டேன். //

  ஹாஹாஹா ஸ்ரீராம் அதானே ஊஞ்சல் போல அங்கும் இங்கும் தாவுதுன்னு ஹிஹிஹி

  //பொதுவாக அவர் மோனத்தைக் கலைக்க வேண்டாம் என்கிறீர்கள்.. நமக்கு வேண்டியது என்ன, விதிக்கப் பட்டிருப்பது என்ன என்று அவர் அறியாததா!//

  அதானே!! பொதுவாக நான் இறைவனிடம் வேண்டும் பழக்கம் கிடையாது. இப்பவும். அதுவும் பாட்டி அனந்த பத்மநாபன் முன் வேண்டிக்காத ஸ்லோகம் மட்டும் சொல்லு என்று சொல்லுவார் நான் பள்ளி படிக்கும் சமயத்தில்

  இது சும்மா அப்ப எனக்கு மனதில் தோன்றியது...யோகநித்திரா என்பதை லிங்க் செய்து...குழப்பிட்டேனோ?!!

  மிக்க நன்றி ஸ்ரீராம்

  கீதா

  பதிலளிநீக்கு
 9. அடுத்து, வறுமையில் வாழ்ந்தாலும் தகுதி இல்லாத மன்னரைப் பாடவே மாட்டார்களாம்.

  இன்னொன்று, புலவர்கள் பாராட்டிப் பாடும் அளவுக்கு மன்னர்களும் தங்கள் தகுதியை வளர்த்துக் கொண்டனராம்.""""இதுதான் மேலானது. நான் ஜெமோ தளம் வாசிப்பதில்லை.
  இனி வாசிக்க வேண்டுமோ:))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுதான் மேலானது.//

   ஆமாம் மக்களும் நம்பிக்கை வைக்க வேண்டிய அளவிற்கு உயர்த்திக் கொள்ள வேண்டும் இல்லையாம்மா.

   ஜெமோ தளத்தில் நிறைய விஷயங்கள் கிடைக்கிறது அம்மா. அது போல எஸ் ரா அவர்களின் தளத்திலும்.

   மிக்க நன்றி வல்லிம்மா

   கீதா

   நீக்கு
 10. எல்லா ரங்கனையும் சேவை செய்ய வைத்து விட்டீர்கள்!!
  யார் ஆதியோகி?
  ஏதோ காட்டு யானைக் கூட்டத்தைத் தடுத்தவரா:)
  அந்தரங்கம் யாவும் அந்த ரங்கனே அறிவான்!!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லா ரங்கனையும் சேவை செய்ய வைத்து விட்டீர்கள்!!//

   ஹாஹாஹா பரிமள ரங்கன் மட்டும் நான் நேரில் (ஹாஹா நேரில் லு சொன்னதுக்குத்தான்!!....இந்தளூர் போனதில்லை) கண்டதில்லை அம்மா. திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களை எங்களுக்குத் திவ்யபிரபந்தம் கற்றுக் கொடுத்த குரு சொல்லித் தரும் போது தன்னைப் பார்க்கவில்லை என்று நிந்தா துதி பாடியதைச் சொல்லும் போது இந்தளூர் பற்றிக் குறிப்பிட்டார். அப்படித் தெரிந்து கொண்டது.

   அம்மா, ஆதியோகி என்று சொல்வது சிவனைக் குறித்து ஈசன் என்று குறிப்பிட்டுள்ளேன் இது என் யோகா குரு சிவயோகம் பற்றிச் லெக்சர் கொடுத்த போது சொன்னது. சிவனின் யோக நிலைகள் அத்தனையும் படம் காட்டி விளக்கினார். ஒவ்வொரு யோகா வும் சொல்லித் தரும் போது அதைப் பற்றிய விளக்கமும் சொல்லிக் கொடுத்ததுண்டு. அந்த போஸ்சரில் இருக்கும் இறைவன் படமும் காட்டுவதுண்டு

   மிக்க நன்றி வல்லிம்மா

   கீதா

   நீக்கு
  2. திருஇந்தளூர் நு நான் சொல்லிருக்க வேண்டும்!!!

   கீதா

   நீக்கு
 11. ஊஞ்சல் ஆடும் மனது. கிளைக்கு கிளை தாவும் பறவை போல (ஒரு இடத்தில் நிறகாமல் பறந்து கொண்டே இருக்கும் பறவை போல.) நிறைய செய்திகளை பகிர்ந்து விட்டீர்கள் ஒன்றிலிருந்து இன்னொன்று என்று மடை திறந்த வெள்ளம் போல வருகிறது.

  தமிழ் புலவர்கள் நிறைய புலம்பி புலம்பியே வாழ்க்கையை வாழ்ந்தனர். பிரிக்கமுடியாதது வறுமையும் புலமையும். என்று தருமி வசனம் உண்மை.
  உங்கள் தங்கை கேட்டதால் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டீர்கள். அவர்களுக்கு நன்றி.
  அடிக்கடி வந்து பதிவு போடுங்கள் கீதா. மீண்டும் தூசி தட்ட வேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கோமதிக்கா இதையும் இடையில் சொல்ல நினைத்து, பாரதியையும் சொல்ல நினைத்து பதிவு நீள்கிறது என்று நிறைய கட் செய்துவிட்டேன்.

   தங்கைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவள் கேட்கப் போய்தான் ஒன்றிலிருந்து ஒன்றாக...ஆமாம் கோமதிக்கா மனம் ஒன்றை நினைக்கும் போது அதற்குத் தொடர்பான வேறொன்றிற்குத் தாவும் முன்பு கல்லூரிக் காலத்தில். அதன் பின் இதுவரை இல்லாமல் இருந்தது தற்போது மீண்டும் வந்திருக்கிறது. பிரார்த்தனை செய்யும் போதும் ஒன்றிலிருந்து ஒன்று தாவுகிறது. அதனால் தான் பதிவு எழுதுவதும் கஷ்டமாக இருக்கிறது.

   மிக்க நன்றி கோமதிக்கா

   கீதா

   நீக்கு
 12. பரிமள ரங்குவை புரட்டாசி மாதம் நினைக்க வைத்து விட்டீர்கள்.

  கடைசியாக பாலசுப்பிரமணியம் சார், அவர் மனைவியுடன் போனது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கோமதிக்கா இப்போது நினைவுக்கு வருகிறது ஜிஎம்பி சார் இந்தளூர் பற்றிக் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

   பரிமள ரங்குவை புரட்டாசி மாதம் நினைக்க வைத்து விட்டீர்கள்.//

   மிக்க நன்றி கோமதிக்கா.

   கீதா

   நீக்கு
 13. எல்லா ரங்கனையும் சேவை செய்ய வைத்து விட்டீர்கள்!!
  யார் ஆதியோகி?
  ஏதோ காட்டு யானைக் கூட்டத்தைத் தடுத்தவரா:)
  அந்தரங்கம் யாவும் அந்த ரங்கனே அறிவான்!!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மா, ஆதியோகி என்று சொல்வது சிவனைக் குறித்து ஈசன் என்று குறிப்பிட்டுள்ளேன் இது என் யோகா குரு சிவயோகம் பற்றிச் லெக்சர் கொடுத்த போது சொன்னது. சிவனின் யோக நிலைகள் அத்தனையும் படம் காட்டி விளக்கினார். ஒவ்வொரு யோகா வும் சொல்லித் தரும் போது அதைப் பற்றிய விளக்கமும் சொல்லிக் கொடுத்ததுண்டு. அந்த போஸ்சரில் இருக்கும் இறைவன் படமும் காட்டுவதுண்டு

   மிக்க நன்றி வல்லிம்மா

   கீதா

   நீக்கு
 14. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. ஊஞ்சலாடும் எண்ணங்களை அழகாக எழுதியுள்ளீர்கள். அந்தக் கால புலவர்கள் காலத்திலிருந்து, இப்போது வரை எழுதுகிறவர்களின் நிலை கஸ்டந்தான். எல்லாவற்றிற்கும் சுக்ர திசை வாய்ப்பு இருந்தால்தான் முன்னேற இயலும். (அதுதான் யோகாம்பாள் என்று நாங்கள் எங்கள் வீட்டில் சொல்வோம்:) )

  /பரிசில்கள் கிடைக்கவில்லை என்றால் மன்னரைத் தூற்றிப் பாடிய புலவர்களும் உண்டாம். பின்ன கஷ்டப்பட்டு ஏதோ கிடைக்குமே என்று புகழ்ந்து பாடியும் பேமென்ட் கிடைக்கலைனா வீட்டம்மாகிட்ட வசை வாங்கணுமே!/

  ஹா.ஹா.ஹா. அதுதானே..! வீட்டிலே தூற்றி பெருக்கி, வகுத்து, கழித்து விடுவார்களே...! நாகேஷ் நடித்த திருவிளையாடல் படம் நினைவுக்கு வந்தது.

  இரண்டாவதாக ஊஞ்சலின் மறுபக்க வீச்சாக அனத்து பற்றி சொல்லிருப்பது வெகு அருமையாக இருக்கிறது. எந்நாளும் ஹரியும் சிவனும் ஒன்றுதானே...! நம் மனதின் பேச்சுக்கள் "அவனுக்கு" புலம்பலாகத்தான் தோன்றும். ஆனால் என்றேனும் அதற்கு பலன் தருவான் என்பதுதான் நம் புலம்பலுக்கு நாம் போடும் முதல் அஸ்திவாரம் கல்.

  உலகிலுள்ள அத்தனை ஜீவராசிகள் அன்றாட எத்தனைப் பேச்சுகளை "அவன்" தினசரி காது கொடுத்து கேட்க வேண்டும். "அட..! சிறிதேனும் அயர்ந்து படுக்க கூட விடமாட்டேன் என்கிறார்களே.. " என்பது "அவன்" மெளன புலம்பலாக இருக்கக் கூடும்.:)

  நீங்கள் ரொம்ப அருமையாக எழுதியிருக்கிறீர்கள். ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் உள்ளத்திலிருந்து எதார்த்தமாக வந்து விழுந்திருக்கிறது. பாராட்டுக்கள். ரசித்துப் படித்தேன். எப்போதும் போல் பதிவுகள் நிறைய எழுதி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.ஹா.ஹா. அதுதானே..! வீட்டிலே தூற்றி பெருக்கி, வகுத்து, கழித்து விடுவார்களே...! நாகேஷ் நடித்த திருவிளையாடல் படம் நினைவுக்கு வந்தது.//

   ஆமாம் கமலாக்கா எனக்கும் பதிவு எழுதும் போது குறிப்பிட்டு அப்புறம் கட் செய்து விட்டேன்.

   இரண்டாவதாக ஊஞ்சலின் மறுபக்க வீச்சாக அனத்து பற்றி சொல்லிருப்பது வெகு அருமையாக இருக்கிறது. எந்நாளும் ஹரியும் சிவனும் ஒன்றுதானே...! //

   ஆமாம். அதே அதே. நன்றி கமலாக்கா..
   நான் குறிப்பிட்ட விதம் நெல்லை சொல்லியிருப்பது போல் எல்லோருக்கும் புரியாதுதான். சிலருக்கு மட்டுமே புரியும். இனி இதையும் நான் எழுதும் போது நினைவில் கொள்ள வேண்டும்!!

   உலகிலுள்ள அத்தனை ஜீவராசிகள் அன்றாட எத்தனைப் பேச்சுகளை "அவன்" தினசரி காது கொடுத்து கேட்க வேண்டும். "அட..! சிறிதேனும் அயர்ந்து படுக்க கூட விடமாட்டேன் என்கிறார்களே.. " என்பது "அவன்" மெளன புலம்பலாக இருக்கக் கூடும்.:)//

   வேண்டும் பழக்கம் எனக்கு இல்லை ஆனால் இப்படியான கற்பனை எனக்கும் ஓடும்!!!

   நீங்கள் ரொம்ப அருமையாக எழுதியிருக்கிறீர்கள். ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் உள்ளத்திலிருந்து எதார்த்தமாக வந்து விழுந்திருக்கிறது. பாராட்டுக்கள். ரசித்துப் படித்தேன். எப்போதும் போல் பதிவுகள் நிறைய எழுதி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

   மிக்க நன்றி கமலாக்கா...

   கீதா

   நீக்கு
 15. இதுபோன்ற எண்ணங்கள் பல பிறக்கட்டும்... பதிவுகள் எங்களுக்கும் கிடைக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி டிடி கருத்திற்கு. பதிவு எழுத முயற்சி செய்கிறேன் டிடி.

   கீதா

   நீக்கு
 16. படித்தோம். ரசித்தோம். நன்றி. தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 17. ரொம்பநாளாயிச்சேன்னு உள்ள வந்தா.. புறநானூற வச்சு விளாசத் திட்டமிட்டதாத் தெரியுது! நமக்கும் சங்குக்கும் , சே , சங்கத்துக்கும் தூரம்.. மேலே போனா, அனந்து, ரங்கு, பரிமள ரங்கு, சத்யமூர்த்தி (புதுக்கோட்டைப்பக்கம் வேறு வர்றீங்க..!) இப்படி சாமி சாமியாத் துரத்துறீங்க..

  புலவர்களின் புலம்பல், கோபம் வேற சீன் காட்டுது.. அதியமான் மேல வச்சிருந்த கொஞ்ச நஞ்சமதிப்பும் போச்சு.

  இடையில் என் பெயருமா கட்டுரையில்? என்ன பாக்யம் செய்துவிட்டேன்! (நேத்திக்கே கவனிச்சேன்.. தில்லையகத்திலேர்ந்து நம்ப வீட்டுக்கு ரூட்டு போட்ருக்காங்களே சிலர், என்னா விசயம்னு) ஓ.. பிரான்சிஸ் கிருபாபற்றிய கட்டுரையா.. அவரப்பத்தி மேலும் கேட்க கேட்க, துக்கமா துக்கமா வருது. கடைசிநாள் காரியத்தில் கலந்துகொண்ட ஜெயமோகன் தன் தளத்தில் எழுதியிருக்கிற கட்டுரையை வாசியுங்கள். படங்களில் சில நெஞ்சைக் கசக்கி எறிபவை. கவிஞரின் ஊரோ (பத்தினிப்பாறை) ஒன்றுமறியா அப்பாவியாய் அதுமாட்டுக்கு இயங்கிகிட்டு இருக்கு ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புறநானூற வச்சு விளாசத் திட்டமிட்டதாத் தெரியுது!//

   ஹாஹாஹா ஏகாந்தன் அண்ணா ஆமாம் ஆனால் அடக்கிவிட்டேன். அதிகம் உள்ளே புகவில்லை.

   நீங்கள் எவ்வளவோ இலக்கியம் எழுத்து என்று அறிமுகம் செய்தும் எழுதுகிறீர்கள். எனக்கு அந்த அளவு கூட இல்லை தூரம் அதிகம் தான். இதுவும் கூகுளைப் புரட்டியதால்தான் இல்லேனா எனக்கெங்கே!!?

   அதியமான் கிட்ட ஔவையும் கோச்சுக்கிட்டாங்களாமே மனோ அக்கா சொல்லிருக்காங்க கீழ..

   இப்படி சாமி சாமியாத் துரத்துறீங்க..//

   ஹாஹாஹாஹா துரத்தியும் கண்டுக்க மாட்டேன்றாரே!!

   //இடையில் என் பெயருமா கட்டுரையில்? என்ன பாக்யம் செய்துவிட்டேன்! (நேத்திக்கே கவனிச்சேன்.. தில்லையகத்திலேர்ந்து நம்ப வீட்டுக்கு ரூட்டு போட்ருக்காங்களே சிலர், என்னா விசயம்னு) //

   ஹாஹாஹாஹா...இப்பத்தானே வலைப்பக்கம் வந்திருக்கிறேன் ரொம்ப நாள் கழித்து...

   ஏகாந்தன் அண்ணா நானும் ஜெமோ தளத்தில் வாசித்துவிட்டேன். ரொம்ப வேதனையாக இருந்தது வாசிக்கும் போது. ரொம்ப ரொம்பச் சிறிய ஊர் அவரது ஊர். அவர் ஊர் மக்களுக்கு இவர் கவிஞர் என்பது கூடத் தெரியாது போலும்.

   மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா

   கீதா

   நீக்கு
 18. புலவர்களைப்பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப்படித்ததும் அந்தக் கால புலவர்கள் பலர் சடசடவென்று நினைவில் வந்தார்கள்! அரசன் அதியமான் கொஞ்சம் பிரச்சினையானவர் போலிருக்கிறது! அவ்வையார் கூட அதியமானின் பாராமுகத்தைக்கண்டு, கோபித்துக்கொண்டு ' எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே' என்று முழங்கி வெளியேறியதாய் படித்திருக்கிறேன்!
  வித்தியாசமான களங்களை எழுத எடுத்துக்கொண்டாலும் வழக்கம்போல தமிழ்நடையும் எழுத்தும் அடைமழைப்போல், பொங்கும் வெள்ளம் போல் அருமையாக வந்திருக்கிறது! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நினைவில் வந்தார்கள்! அரசன் அதியமான் கொஞ்சம் பிரச்சினையானவர் போலிருக்கிறது! அவ்வையார் கூட அதியமானின் பாராமுகத்தைக்கண்டு, கோபித்துக்கொண்டு ' எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே' என்று முழங்கி வெளியேறியதாய் படித்திருக்கிறேன்!//

   ஓ! இப்படியும் இருக்கிறதா! ஔவையும் அதியமானும் நல்ல நட்பு, நெல்லிக்கனி பற்றிதான் அறிந்திருந்தேன்.

   //வித்தியாசமான களங்களை எழுத எடுத்துக்கொண்டாலும் வழக்கம்போல தமிழ்நடையும் எழுத்தும் அடைமழைப்போல், பொங்கும் வெள்ளம் போல் அருமையாக வந்திருக்கிறது! வாழ்த்துக்கள்!//

   இந்த வரிகள் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது ஆனால் ஊக்கம் அளிக்கிறது மனோ அக்கா
   மிக்க நன்றி மனோ அக்கா.

   கீதா

   நீக்கு