திங்கள், 20 ஏப்ரல், 2020

லாக்டவுன் அட்ராசிட்டிஸ் - ரகளைகள்


லாக்டவுன் ரகளை




இவள் பக்கத்து வீட்டுக் குட்டிச் செல்லம் ஜனு. ஐந்து மாதமாக இருந்த போது எடுத்த படம். இப்போது ஒன்பது மாதம் ஆகிறது. இப்போது இந்த மதிலை விட உயரமாகியிருக்கிறாள். வளர்ந்திருக்கிறாள்.

இந்தக் குட்டை மதில்தான் இரு வீட்டையும் பிரிக்கும் எல்லை. எங்கள் வீட்டு வாயில் கதவின் நேரே இந்த மதில்தான். நம் வீட்டிலிருந்து ஒரு காலை அந்தப் பக்கம் வைத்தால் அவர்கள் வீட்டிற்குள். ஆனால் நல்ல காலம் அந்தச் செல்லம் மதில் ஏறி இந்தப் பக்கம் குதிப்பதில்லை! ஆனா நம்ம வீட்டது இருக்கே மதில் ஏறிக் குதிச்சுருமே. அது இன்னொரு பதிவில் சொல்றேன் படத்தோடு. அன்பான அதட்டு போட்டு அடக்கி வைச்சிருக்கேன்.

அந்தக் குட்டிச் செல்லம் இப்படித்தான் மதிலைப் பிடித்துக் கொண்டு எங்களை அழைப்பாள். உடனே சென்று அவளைக் கொஞ்ச வேண்டும். இல்லை என்றால் இப்படிப் பிடித்துக் கொண்டு கூப்பிட்டுக் கொண்டே இருப்பாள். நாங்க மட்டுமா போவோம் பின்னாடியே எங்க வீட்டு செல்ல ராட்சசியும் ஓடி வந்து மதிலைப் பிடித்து நின்று அவள் முகத்திற்கு நேரே முகர்வதோடு உருமவும் செய்வாள். அது பாவம். சமத்து. நம்ம வீட்டுது கொஞ்சம் ஸவுண்டு பார்ட்டி. அதனால செல்லமா ஒரு மிரட்டு போட்டு உள்ளே அனுப்பிவிடுவேன்.

கண்ணழகியின் ரகளைகள்

லாக் டவுன் பத்தி நம்ம வீட்டதுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. இத்தனை நாள் பழகிய, நம் வீட்டின் அந்தப் பக்கம் உள்ள வீட்டுக் குழந்தைகள் கூட இப்போது கேட் பக்கம் வரக் கூடாது. ஸவுன்ட் விட்டு அதுவும் துரத்தும் ஸவுன்ட்! விட்டு துரத்துகிறாள்!


1 படம் நம் கண்ணழகி மொட்டை மாடியின் குட்டை மதிலின் ஓட்டை வழியாக இப்படி எட்டிப் பார்த்து, யாரேனும் மனிதர்கள் ரோட்டில் நடந்தாலே குரைக்கிறாள். இரு செல்லங்கள் ரோட்டில் வந்து விளையாட இவளுக்குப் பொறுக்குமா? 

2 படம்  அப்போது பார்த்து பக்கத்து வீட்டு ஜனுவும் அவர்கள் வீட்டு மாடிப் படிகளில் ஏறி வர இவள் உடனே அங்கு சென்று அவளை மிரட்டல். ஹேய் ஜனு யாரு உன்னை வெளிய விட்டது? லாக்டவுன். வெளிய வரக் கூடாது. இப்பத்தான் அந்த ரெண்டையும் மிரட்டிட்டு வந்தா நீ வேற..உர்ர்ர்ர்ர்ர்

3 படம் ஜனு: நான் எங்க வீட்டு மாடிப்படிலதானே இருக்கேன் ரோட்டுக்குப் போலையே. இப்பத்தான் வெளிய வந்தேன்…திட்டறதையும் மெதுவா திட்டு. உன் சத்தம் கேட்டா அப்புறம் என்னை வீட்டுக்குள்ள போட்டுருவாங்க..

உர்ர்ர்ர்ர்ர்ர் கொஞ்சம் கேட் திறந்தா போதும் சைக்கிள் கேப்ல நீதான் ரோட்டுக்கு ஓடிடுவியே..- இது நம்ம வீட்டது

ஹலோ நீ மட்டும் என்னவாம் என்னை மாதிரி கொயந்தையா இருந்தப்ப எத்தனை தடவை ஓடிருக்க. உங்கம்மா எல்லா கதையும் சொல்லியாச்சு. இந்த மதிலையும் சாடி ஓடி வந்திருக்கியே. நீயும் தானே இப்ப வெளிய இருக்க....சுப்

4 படம் நான்தான் இப்ப இந்த தெருவுக்கு இன்சார்ஜ். இப்ப நீ உள்ள போறியா இல்லையா. பாவம் ஜனு இவள் மிரட்டலில் சாதுவாக ஒதுங்கிப் போய் உட்கார்ந்து கொண்டது. 

5 படம் அங்கு இருந்து என்னைப் பார்த்தது. பாரு உன் பொண்ணு பண்ணுற அட்ராசிட்டிய. ரொம்பத்தான்..

6 படம் கண்ணழகி விடாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க பாவம் ஜனு, ஹூம் நீ பாட்டுக்கு உருமிட்டுரு என்று அந்தப் பக்கமாக திரும்பிக் கொண்டு நின்றாள். கண்ணழகி நல்லா பல்பு வாங்கினா!!!!

******************************************************************************************

கடுப்பு அட்ராசிட்டி

மார்ச் முதல் வாரத்தில் தொற்றின் தாக்கம் அதிகமாகத் தொடங்கிய நேரம். அப்போதே முகக் கவசம், கை கழுவுதல், சோசியல் டிஸ்டன்ஸ், அறிகுறிகள் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும் என்று பேசத் தொடங்கப்பட்டது. அதுவும் பெங்களூரில் தொற்று தொடங்கி அரசு நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியிருந்த நேரம்.  

அந்த நேரத்தில் நாங்கள் சென்னைக்குச் செல்ல ஏற்கனவே திட்டமிடப்பட்டத் தவிர்க்க முடியாத பிரயாணம் என்பதால் ஒரே நாள் சென்னை சென்று வந்தோம். ரொம்பவே எச்சரிக்கையுடன் சென்று வந்தேன். திரும்பி வரும் போது ரயிலில் பக்கத்தில் இருந்தவர் எங்கள் மேல் தெரிக்கும் அளவு தும்மிக் கொண்டும் இருமிக் கொண்டும் வந்தார். 

எங்கள் தெருவிற்குள் நுழைந்ததுமே நம் வீடு. வீட்டு வாசலில் ஒரே பட்டாசுப் பேப்பர் குப்பை. வீட்டில் நுழையும் போது வீட்டைச் சுற்றியும் இருந்தது தெரிந்தது. ராத்திரி 11.30 மணி ஆகிவிட்டதால் குளித்துவிட்டுப் படுத்துவிட்டோம். மறுநாள் காலை வீட்டைச் சுற்றியும், மொட்டை மாடியும் சென்று பார்த்தால் பட்டாசுக் குப்பை.

இவர்களைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். இந்தப் பக்கத்து வீட்டவர்கள் ஓரிரு அமைப்புகளில் உள்ளவர்கள். அவர்கள் வீட்டு மாடியில் உள்ள பெரிய ஹாலை நடன வகுப்பிற்கு வாடகைக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு சில கூட்டங்களும் நடத்தி அவ்வப்போது கேக் கட் செய்வார்கள். குப்பைகள் எல்லாம் எல்லா இடத்திலும் இருக்கும். நடன வகுப்பு என்றால் பாட்டும், நடனமும் அதிரும். தொம் தொம்மென்று. அது அவர்கள் விருப்பம், சுதந்திரம். ஆனால் நம் வீடு வரை அதிரும். தெருவே அதிரும். அதுவும் இரவு 10 மணி வரை கூட நீளும்!

முதல் படத்தில் உள்ள குட்டை மதிலை ஒட்டியேதான் நம் வீட்டு மொட்டை மாடிப்படிகள். வெகு எளிதாக இந்தக் குட்டை மதிலை கால் போட்டுக் கடந்து படிகளில் ஏறிவிடலாம். எனவே நம் வீட்டு மொட்டை மாடியில் நாம் கட்டிய கம்பிகளில்தான் அவர்கள் வீட்டுத் துணிகள் பெரும்பாலும் காயும். சில சமயம் நம் துணிகள் போட முடியாத அளவு! தரையை நாம் பெருக்கிப் போட்டால் அவர்கள் ராகி, அரிசி காய வைத்து சிதறி இருக்கும். நமக்கும் மனிதாபிமானம் உண்டுதான். ஆனால் கம்பியை தழைத்துவிடுவார்கள். தரையில் அரிசி ராகி எல்லாம் சிதறி இருக்கும் ஆனால் சுத்தம் செய்ய மாட்டார்கள். ஏட்டுக்கல்வி மட்டுமே. போனால் பொகட்டும் என்று விட்டுவிடுவது வழக்கமாகிவிட்டது.

சரி இப்போது பட்டாசுக் குப்பைக் கதைக்கு வருகிறேன். இது லாக்டவுன் அறிவிப்பிற்கு முன். என்ன விசேஷம் இப்படி பட்டாசுக் குப்பை என்று நம் வீட்டின் இன்னொருபுறம் உள்ள வீட்டுக் குழந்தைகளிடம் கேட்டால், மார்ச் 8 பெண்கள் தினக் கூட்டம் போட்டிருக்கிறார்கள் இந்தப் பக்கத்து வீட்டவர்கள். கூடவே அவர்கள் சார்ந்த அமைப்பில் உள்ள ஒரு விஐபிக்கு பிறந்த நாளாம். அதனால் நம் வீட்டு வாசலில் பத்து கே வாலா, மொட்டை மாடியில் புஸ்வானம் என்று வெடித்துத் தள்ளியிருக்கிறார்கள். சரி என்னவோ செய்து தொலைக்கட்டும். குப்பையை அகற்றி சுத்தம் செய்திருக்கலாமே. தங்கள் பொறுப்பு என்பது கூடத் தெரியாத படித்த அறிவாளிகள்!

லாக்டவுன் அறிவிக்கப்பட்டதும் ஒரு வாரம் அமைதியாக இருந்தார்கள். அட! என்று எங்களுக்கு வியப்பு. கண்பட்டு விட்டது. மீண்டும் ஏதோ பார்ட்டி, கூட்டம், வாசலில் பேப்பர் கப்புகள், பேப்பர் தட்டுகள். நடன வகுப்புகள். 4, 5 பேர் குழுவாக நின்று பேசுதல். இதெல்லாம் ரோந்து வரும் போலீஸின் கண்ணில் படாதோ? இதோ இப்போது மதியமும் ராத்திரியும் இலவச உணவு. அதற்கொரு குழு.

காலையில் வேறொரு அமைப்பு இலவச உணவு கொடுக்கிறார்கள். இந்த உணவிற்குத்தான் கூட்டம். தானா சேரும் கூட்டம்! கூட்டம் அள்ளும். அந்த மக்களைப் பார்க்கும் போது மனம் வேதனைப்படுகிறது. இந்த ஒரு சின்ன ஏரியாவிலேயே இத்தனை ஏழைகள் என்றால் நாட்டை நினைத்துப் பாருங்கள்!

இதுவும் நம் வீட்டை ஒட்டினாற் போல். கண்ணிற்கு எட்டா தூரம் வரை பெரிய வரிசை. சோசியல் டிஸ்டென்ஸ் என்று கட்டம் வரைந்து வைத்திருந்தாலும் நம் மக்கள் அதில் செருப்பைப் போட்டு இடம் பிடித்துவிட்டு கூட்டம் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். போலீஸ் அறிவிப்பு செய்து கொண்டே மக்களைத் திட்டி இடைவெளி விட்டு நிற்கச் சொல்லிக் கொண்டே செல்வார்கள். சாப்பாடு கொடுக்கும் நேரத்திற்கு 2 மணி நேரம் முன்பே வரிசை தொடங்கிவிடும். 

மதியமும் ராத்திரியும் நம் பக்கத்து வீட்டாரின் அமைப்பு கொடுக்கும் உணவிற்கு அத்தனை கூட்டம் வர்வில்லை. கொடுப்பவர்கள்தான் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டும், போகிறவர் வருபவர்களைக் கூப்பிட்டு கூப்பிட்டுக் கொடுத்துக் கொண்டும் இருந்தார்கள். தானா சேராத கூட்டம்! பக்கத்து வீட்டுக் குழந்தைகள் சொன்னது, காலையில் கொடுக்கப்படும் உணவுதான் நன்றாக இருக்கிறதாம். இந்தப் பக்கத்து வீட்டவர் அமைப்பு கொடுக்கும் மதிய, இரவு உணவு நன்றாக இல்லையாம்! அதனால் இப்போது பக்கத்து வீட்டவர்கள் அமைப்பு வீட்டு காம்பவுன்ட் உள் வாசலில் உணவு சமைக்கிறார்கள். நேற்று இரவு பிரியாணியாம். கொஞ்சம் கூட்டம் சேர்ந்தது. வரிசையில் நிற்க வைத்து வழங்கினார்கள்.

கொடுப்பவர்களும் சரி, வாங்கிக் கொள்பவர்களும் சரி எல்லார் முகத்திலும் ஒரு மாஸ்க் அல்லது ஒரு துணி. பெரும்பாலும் அழுக்காக. மாஸ்கைப் பயன்படுத்தும் முறையும் தெரியவில்லை. சோசியல் டிஸ்டன்ஸ் என்பதும் இல்லை. ஆய பயனென் கொல்? எப்படியோ ஏதோ நல்லது நடந்தால் சரி. கூட்டத்தில் இருமல் சத்தம் கேட்டால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.


தொட்டடுத்த தெருவில் மூன்று பேருக்குத் தொற்று என்று சொல்லி வேன் வந்து அழைத்துச் சென்றதாகக் குழந்தைகள் சொன்னார்கள். உறுதியாகத் தெரியவில்லை. ஏனென்றால் தினமும் எந்த ஏரியாவில் தொற்று கேஸ் என்று போடப்படுவதில் எங்கள் ஏரியா இல்லை. இருந்தாலும் இந்தக் கூட்டத்தைப் பாருக்கும் போது…...

இது போன்ற செய்தி இனி தொடராது! 




            ******************************************************************************************************

அடுக்களை ரகனைகள் - இது தொடரும்

இது நம்ம ஏஞ்சல் போட்ட ரெசிப்பி டர்க்கிஷ் கத்தரி சாலட். நான் பச்சைக் கத்தரி, பஜ்ஜி மிளகாய் போட்டு செய்தேன். மிக மிக டேஸ்டி. மகனும் செய்வானாம் டர்க்கிஷ் சாலட் அவன் ஒரு ரெசிப்பி சொன்னான். அவன் செய்ததைக் கேட்டு செஞ்சு பார்க்கணும்.  

ஏஞ்சல் நீங்கள் செய்தது போல இருக்கா? 



             *******************************************************************

இதுவும் தொடரும்

இப்போது லாக்டவுன் என்பதால் மொட்டை மாடியில் எட்டு போடும் நடைப்பயிற்சி.  காலையிலும், மாலையிலும். அப்போது இப்படி சில படங்கள் எடுத்தேன் அதில் ஒன்று இப்பதிவில். இது காலை நிலா

நிலா காய்கிறது, நேரம் தேய்கிறது
நிலாவும் மறையப் போகுதே
இங்கு ஓடி வந்து ரசியுங்கள்!


-------கீதா



73 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான கதம்பமாய்ச் செய்திகள், படங்கள். செல்லங்களின் செய்தி அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம். செல்லங்களை அதிகம் ரசிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன் அதே போல நீங்களும் சொல்லிருக்கீங்க

      கீதா

      நீக்கு
  2. அன்பு கீதாமா, இனிய காலை வணக்கம்.
    நல்ல ரகளை தான் போங்கள். இப்படியா மிரட்டும் உங்க பொண்ணு.
    சரியான நாத்தனார் பிஹேவியர்:)
    ஜனு ரொம்ப ஸ்வீட்.
    உங்க பக்கத்து வீட்டு ரகளை தாங்க முடியாமல் இருக்கிறதே.

    சொல்ல மாட்டீர்களா. அனியாயத்துக்கு அட்டூழியம் செய்கிறார்கள்.

    கத்திரிக்காய் சாலட் கலர்ஃபுல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிம்மா

      இப்படியா மிரட்டும் உங்க பொண்ணு.
      சரியான நாத்தனார் பிஹேவியர்:)//

      ஹா ஹா ஹா ஹா...ஆமா அப்படி எங்களைக் காக்கிறாளாம்!!!

      ப வீ ரகளை ரொம்ப ஓவர். அதுவும் எல்லாம் விளம்பரத்துக்குன்னு நேத்துதான் தெரிந்தது.

      சொல்ல முடியாதுமா அவங்க சார்ந்த அமைப்பு அப்படி நமக்கு வம்பு வேண்டாம்னு நாம வேற ஊர்க்காரங்க...ஸோ..

      கத்தரிக்காய் சாலட் நல்ல டேஸ்ட் அம்மா அதுக்கு தொட்டுக்க் கொள்ள தயிர்/மோர் ஏஞ்சல் போட்டிருந்த ரெசிப்பி செய்தேன்

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  3. நிலாப்படங்கள் மிக மிக அழகு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. படங்களோடு சொல்லிய கண்ணழகி, ஜனு விடயங்கள் ரசிக்க வைத்தன வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  5. Turkish salad, நம்ம கண்ணழகியின் காமிக்ஸ் ரெண்டுமே சூப்பர்!!

    பதிலளிநீக்கு
  6. வேலை வெட்டி இல்லாமல் இருப்பவர்களிடம் அதிகப்படியான படைப்பாற்றல் மறைந்திருக்கும் என்று அறிஞர்கள் (?) கூறுவது உண்மைதானோ என்று தோன்றுகிறது. கோபிக்கவேண்டாம்! தயவு செய்து கும்பல்களிடம் இருந்து பத்திரமாக இருங்கள். எப்போதுமே பெங்களூர் தமிழர்களுக்குப் பாதுகாப்பான நகரம் அல்ல என்பதை நான் அனுபவபூர்வமாக அறிவேன். கண்ணழகிக்கு எம் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா சார் சிரித்துவிட்டேன்.

      பாதுகாப்பாக இருக்கோம் சார் மிக்க நன்றி.

      சுவையான கருத்திற்கு மிக்க நன்றி செல்லப்பா சார்

      கீதா

      நீக்கு
  7. கண்ணழகியின் ரகளை + காலை நிலா ரசித்தேன்...

    கடுப்பு அட்ராசிட்டி - இங்கு நிறைய... என்னவெல்லாம் நடக்கப்போகுதோ...

    கத்தரி சாலட் - யப்பா...! ஈர்க்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி

      ஓ உங்க இடத்துலையுமா கடுப்பு அட்ராசிட்டி

      கத்தரிக்காய் சலாட் அது நம்ம ஏஞ்சல் போட்டிருந்த ரெசிப்பி செய்தது டிடி

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  8. எத்தனை நாளுக்கு எட்டு நடைப்பயிற்சி தொடரும்?!

    பதிலளிநீக்கு
  9. கண்ணழகி, ஜனு விடயங்கள் ரசிக்க வைத்தன
    காலை நிலா படம் அருமை
    நான் கடந்த இரண்டு வருடங்களாக மாடியில் எட்டு போடும் பழக்கத்தை பின்பற்றி வருகின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ

      ஓ நீங்களும் 8 போடும் நடைப்பயிற்சியா வாழ்த்துகள்!

      கீதா

      நீக்கு
  10. வெளியே செல்ல முடியாத போது சமையலில் திறனை காட்டலாமே ஓஒ அதுதான் செய்து இருக்கிறீர்களில்லையா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜி எம் பி சார்

      இல்லை சார் இது ஏஞ்சல் ரெசிப்பி போட்டதுமே செய்தது. இப்பவும் செய்தேன் தான் ஆனால் இப்படம் முதலில் செஞ்ச போது எடுத்தது.

      கீதா

      நீக்கு
  11. ஹாஹாஆ :)  செல்லங்களின் லாக் டவுன் அட்றாசிட்டிஸ் சூப்பரா இருக்கே :)ஜனூ அழகு அமைதி .உங்க பொண்ணு ஏரியா தாதாவோ :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஆமாம் என் பொண்ணு ஏரியா தாதா மாதிரிதான் நடந்துக்கும்..ஆல்ஃபா!

      ஆனா தொடை நடுங்கி ஹா ஹாஹ் ஆ

      ஜனு செம ஹையோ. ரொம்ப சமத்து. லாப்! ஆனா அவங்களுக்கு வளர்க்கத் தெரியலையா ன்னு தெரியலை பட் கேர் கம்மி. வருத்தமா இருக்கு. லேப் கு நிறைய தூரம் வாக்கிங்க் போணும் ஆனா இவங்க வெளிய கூட்டிப் போறதே இல்லை. வீட்டு காம்பௌன்ட்டுக்குள்ளேயே உச்சா அடிச்சு அதுலயே நடக்குது...டிசிப்ளின் டீச் பண்ணலை அவங்க...அதைப் பார்த்தா பாவமா இருக்கு ரொம்ப ஃப்ரென்ட்லி. லாப் எல்லாமே ரொம்ப ஃப்ரென்ட்லியாதானெ இருக்கும்..

      மிக்க நன்றி ஏஞ்சல்

      கீதா

      நீக்கு
  12. /திரும்பி வரும் போது ரயிலில் பக்கத்தில் இருந்தவர் எங்கள் மேல் தெரிக்கும் அளவு தும்மிக் கொண்டும் இருமிக் கொண்டும் வந்தார்.//
    அத ஏன் கேட்கறீங்க கீதா .கொஞ்சமும் அறிவில்லா மனித ஜென்மங்கள் .
    // இவர்களைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். இந்தப் பக்கத்து வீட்டவர்கள் ஓரிரு அமைப்புகளில் //NOISE நியூசென்ஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கலாம் .இதெல்லாம் .பிறருக்கு தொல்லை தரக்கூடடா என்று பொது உணர்வு அறிவு கூட இல்லா மக்களா//இல்லை மாக்கள்  இருக்காங்க . 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ அதை ஏன் கேக்கறீங்க ஏஞ்சல்...அதே போலதான் இந்தப் பக்கத்துவிட்டதுகளும். ஆனா கம்ப்ள்யெய்ன்ட் எதுவும் கொடுக்க நினைக்கல. நாம எப்பவுமே பேசாம போயிடறது என்னா அவங்க நிலைக்கு நாம் போக வேண்டாம்னுதான்...பொது சென்ஸ் சிவிக் சென்ஸ் எதுவுமே நம்ம ஊர்ல குறைவுதான் ஏஞ்சல். பள்ளியில் இது முதல் பாடமா இருக்கணும்னு நினைப்பதுண்டு. முதல் முதல் பள்ளி வர பிள்ளைகளுக்கு ஏபிசிடி அ ஆ சொல்லிக் கொடுக்கும் முன் இதெல்லாம் தான் முக்கியம். பொது சுகாதாரம், பொது விழிப்புணர்வு, ட்ராஃபிக் ரூல்ஸ் சிவிக் சென்ஸ் எல்லாம் தண்ணிர் சேமிப்பு, மின்சாரம் சேமிப்பு, இயற்கை பாதுகாப்பு, பிற உயிர்களை மதித்தல். செல்லங்கள் காடுகளை நேசித்தல் என்று பல விஷயங்கள் கற்றுக் கொடுக்கணும்னு நினைச்சு எங்க வீட்டுல நானும் நாத்தனாரும் சேர்ந்து ஒரு சின்ன பாப்பா ஸ்கூல் மட்டும். தொடங்கனும்னு ஒரு எண்ணம் இருந்தது நாத்தனார் முதலீடு. அவங்களுக்கு கீழ் போர்ஷன் சும்மா இருந்துச்சு ஸோ அப்ப...நான் என் எண்ணங்கள் முதலீடு ரெண்டு பேரும் கத்துக் கொடுக்கலாம். ரெகுலர் ஸ்கூல் போகும் போது அந்தக் குழந்தைகள் நல்ல எண்ணங்களோடு செல்வது போன்று...என்று ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அதுவும் என் இருப்பு ஒரே இடம் என்று இல்லாததால் விட்டுப் போச்சு..

      மிக்க நன்றி ஏஞ்சல்

      கீதா

      நீக்கு
  13. யெஸ்ஸ்ஸ் கத்திரி சாலட் இப்படித்தான் வந்தது ..நல்லா இருக்கு கூடவே தயிர் வைச்சி சாப்பிடணும் சூப்பர் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ தங்க்க்யூ தங்க்யூ ஏஞ்சல். நல்லாருந்துச்சு..ஆமா கூடவே தயிர் தான் வைச்சு சாப்பிட்டோம் நீங்க சொல்லிருந்தீங்களே உங்க் பதிவுல...அப்படியேதான்...

      மிக்க நன்றி ஏஞ்சல்..

      கீதா

      நீக்கு
    2. என்னச்சு தலைவிய காணும் ஏஞ்சல்?!!!

      கீதா

      நீக்கு
    3. இன்னும் கொஞ்சம் கெட்டியா எடுத்திருக்கணும்னு தோணுது உங்க ரெசிப்பி படத்தையும் பார்த்தேன் ஏஞ்சல்..

      அடுத்த முறை ...

      கீதா

      நீக்கு
  14. கதம்பம் ரசிக்கும்படி இருந்தது.

    ஊரடங்கு அட்ராசிட்டி - அதிகம்தான். இங்க பக்கத்துல நேற்று இரவு பிரச்சனை, ஒரே போலீஸ் கூட்டம். பத்திரிகையில் படித்திருப்பீர்கள். வெளியில் பல இடங்களில் சுத்தம் என்பது பிரச்சனையாக இருந்தாலும் ஓரளவு சோஷியல் டிஸ்டன்ஸ் கடைபிடிக்க முயற்சிக்கிறார்கள். இருந்தாலும் நிறையபேர் படிக்காதவர்கள் என்பதையும் நினைவில் கொள்ளணும்.

    இவ்வளவு வாரமா இன்னும் 8லிருந்து முன்னேற வில்லையா? எப்போ 10, 11லாம் போடப்போறீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லை...

      ஆமாம் நெல்லை ஓவராக இருக்கு இதோ இப்ப கூட கூட்டம் போட்டுருக்காங்க. வாசல்ல எத்தனை வண்டி நிறைய நிக்குது...

      ஓ உங்க ஏரியாவுல பிரச்சனையா? ஹா ஹா ஹா எங்க வீட்டுல நோ பேப்பர், நோ பத்திரிகை....எதுவுமே கிடையாது..நான் கணில பார்த்து தெரிந்து கொள்வதுதான் அல்லது மொபைலில் கூகுள் செய்தி வந்தால் பார்ப்பது. அதுவும் இப்போ உள்ள குறிப்பா அந்த பெயர் சொல்ல விரும்பாத அதன் தாக்கம் பற்றி வாசிப்பதே இல்லை.

      சுத்தம் என்பது சுத்தம். துப்புறாங்க பாருங்க...நெல்லை படிக்காதவங்கன்னு இல்லை படிச்சவங்களும் ரொம்பவே இதெல்லாம் செய்யறாங்க. படிச்சவங்க படிக்காதவங்கன்னு இல்லவே இல்லை.

      இவ்வளவு வாரமா இன்னும் 8லிருந்து முன்னேற வில்லையா? எப்போ 10, 11லாம் போடப்போறீங்க?//

      ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன் நெல்லை..எப்ப ஊரடங்கு தளர்த்தப்படுமோ அப்போதான்...அப்பவும் நான் யோசிச்சுத்தான் வெளிய இறங்குவேன் ஹா ஹா ஹா முன் ஜாக்கிரதை முத்தண்ணி!!!

      கீதா

      நீக்கு
  15. //பிறருக்கு தொல்லை தரக்கூடடா என்று// - இது பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன். இங்கவும் இராமாயணம், மஹாபாரதம் என்று ஃபுல் சவுண்டில் டிவியில் வைத்துவிட்டு கதவு சன்னல்களைத் திறந்துவிடுவார்கள் போலிருக்கு. ஒரு நாள் இரவு ரொம்ப சத்தமாக இருந்தது. ஆனால் பிறர் கம்ப்ளெயின் பண்ணி இப்போ சத்தம் மிஸ்ஸிங். தெருவில் துப்புவர்கள் அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவால்ல நெல்லை கம்ப்ளெயின்ட் கொடுத்து இப்ப கம்மியாகியிருக்குதே...

      இங்க கம்ப்ள்யென்ட் கொடுத்து வேலில போற ஓணானை எதுக்குப் பிடிச்சு விட்டுக்கணும்னு நாங்க பேசாம இருக்கிறோம்.

      கீதா

      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    பதிவு நன்றாக உள்ளது. லாக்டவுன் ரகளைகளை கதம்பமாய் தொகுத்ததில் அருமையாக வந்திருக்கிறது. தங்கள் செல்லம் கண்ணழகி, பக்கத்து வீட்டு ஜனு என இருவரும் அடிக்கும் லூட்டிகளை படங்களாக எடுத்து அதற்கு விளக்கங்களையும் எழுதியிருப்பதைப் ரசித்தேன்.

    பக்கத்து வீட்டில் ஏன் எதற்கெடுத்தாலும் இத்தனைக் கூட்டம்? இந்த நேரத்தில், இப்படி பிரலமடைய நினைப்பதில் தவறு இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரிய வேண்டாமா? ஒருவரை கேட்காமல் அவர்களின் பயன்பாடுடைய பொருள்களை தங்களுடையதாக்கி அனுபவிப்பது குற்றமா செயல் என புரிய வேண்டாமா? என்னவோ மனிதர்கள் இப்படி பல ரகம்..!

    கத்திரி ரெசிபி அழகாய் வந்துள்ளது. மொட்டை மாடி நிலா ஊரடங்கை ரசிக்கிறது போலும். அமைதியாக தண்ணொளி வீசி பகல் மாதிரி காய்கிறது. அந்த படங்களும் அருமை. அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமலா அக்கா.

      ஜனு ரொம்ப சமத்துப் பொண்ணு...எங்க வீட்டது சவுன்ட் பார்ட்டி வடிவேலு ஸ்டைல் பில்டிங்க் ஸ்ற்றாங்க் பேஸ்மென்ட் வீக்...ஹா ஹா ஹா ஹா

      பக்கத்துவீட்டு அது அப்படித்தான் எதுவும் சொல்ல முடியாது...நமக்கு எதுக்கு வம்புன்னு....

      கத்தரிக்காய் ஏஞ்சலுக்குத்தான் நன்றி சொல்லணும்...அவங்க போட்ட ரெசிப்பிதான் நல்லாருந்தது...கூடவே தயிர் ஆனா படம் போடலை..

      ரசித்தமைக்கு மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  17. கண்ணழகியின் அட்டகாசங்கள் அட்டகாசமாய் இருக்கே! தொடரட்டும், நமக்கும் ரசிக்க நிகழ்வுகள் வேணுமே! பக்கத்து வீட்டுக் கூட்டம் அதிசயிக்கவும், கோபப்படவும் வைக்கிறது. காவல்துறைக்கு அங்கே வேலையோ இல்லையோ? கிட்டத்தட்ட நீங்கள் சொல்லும் இதே நிகழ்வுகளை எங்க அம்பத்தூர் வீட்டில் குடியிருந்தவங்க எனக்குச் செய்திருக்காங்க. நான் கொடியில் குழந்தைகளின் பள்ளிச்சீருடையைத் தோய்த்து உலர்த்தி இருப்பேன். எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு அவங்க துணியைப் போடுவாங்க. இத்தனைக்கும் அவங்களுக்கு அவங்க பக்கம் தனியாக் கொடி கட்டிக் கொடுத்திருந்தோம். அது போதாதுனு இங்கே வந்து போடுவாங்க. சாமான்கள் காய வைத்தாலும் அதைத் தள்ளிவிட்டு அவங்க சாமான்களை வைப்பாங்க! நிறைய அனுபவிச்சாச்சு இது போல்! நானும் வாயைத் திறக்க மாட்டேனே! )))) பயம்னு இல்லை. அவங்க அளவுக்குக் கீழே நாமும் இறங்கக் கூடாதுனு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை ஏன் கேக்கறீங்க கீதாக்கா இப்ப ரொம்பவே எல்லாரையும் விரட்டறா...ஆனா நீங்க சொல்வது போல நமக்கு ரசிக்க நிறைய கிடைக்குது. இப்ப காக்கையை எல்லாம் துரத்தறா...ஒரே சிரிப்பா இருக்கும்...

      பக்கத்து வீட்டுக் கூட்டம் அதைப் பத்தி பேச முடியாது அக்கா. நாம நீங்க சொல்றது போல தான் பேசாம போயிடறது நல்லது அவங்க நிலைக்கு நாம போகக் கூடாதுன்னுதான்...அதே பயம் எல்லாம் இல்லை ஆனா சொல்லிப் பயனும் இல்லை..ஏனென்றால் அவங்க....ம்ம்ம் சிலது பொதுவெளியில் பேச முடியாது...

      உங்க அனுபவமும் அதேதான் போல!!

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  18. கத்தரிக்காய் சாலட் நன்றாக இருக்கு பார்க்க. ரசிக்கவும்/சாப்பிடவும் ஆள் இருந்தால் பண்ணிடலாம். மொட்டை மாடிக்கே இப்போப் போவதில்லை. இம்முறை பௌர்ணமி அன்று கூட நினைச்சேன். குடியிருப்பிலும் எல்லோரையும் மாலை வேளை மொட்டை மாடிக்குப் போங்கனு சொல்லி வாட்சப் மூலம் செய்தி அனுப்பி இருக்காங்க. காற்று பிய்ச்சுக்கும் அதனால்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்த்தரிக்காய் சலாட் நன்றாக வந்தது கீதாக்கா...ஆமாம் இங்கு எல்லாமே எல்லாருக்கும் பிடிக்கும் எனவே ஈசியா செஞ்சுரலாம். உங்களுக்கும் கத்தரிக்காய் பிடிக்குமே

      நீங்க முன்ன எல்லாம் மொட்டை மாடி போய் காவேரி ஃபோட்டோ நு எல்லாம் போடுவீங்க. வீட்டுக்கு வரவங்க எல்லாம் மொட்டை மாடி பார்க்காம போக மாட்டாங்களே!

      ஆஹா மொட்டை மாடிக்குப் போங்கனு செய்தியா அப்ப போய்ட்டு படம் எடுத்துப் போடுங்க கீதாக்கா...

      மிக்க நன்றி அக்கா

      கீதா

      நீக்கு
  19. ஆவ்வ்வ் மீ ரொம்ப லேட்டூஊ, ஈவினிங் வருகிறேன் கீதா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவால்லா அதான் வந்திட்டீங்களே இப்ப நான் தான் லேட்டு பதில் சொல்ல...எல்லாரையும் போய் பார்த்துவிட்டு வர வேண்டும் இல்லையா அதான் ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  20. //ஆனா நம்ம வீட்டது இருக்கே மதில் ஏறிக் குதிச்சுருமே. அது இன்னொரு பதிவில் சொல்றேன் படத்தோடு.//

    ஹா ஹா ஹா கீதா மாதிரியேதான் போலும்:))

    கண்ணளகிக்கு எதிர் வீட்டிலும் ஃபிரெண்ட் இருக்குது போலும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா கீதா மாதிரியேதான் போலும்:))//

      ஹா ஹா ஹா ஹா தாயைப் போல் பிள்ளை!!!!!!

      கண்ணளகிக்கு எதிர் வீட்டிலும் ஃபிரெண்ட் இருக்குது போலும்..//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தொட்டடுத்த வீடுன்னு முதல் படத்துலயே சொல்லிருக்கேன் பாருங்க...ஜனு

      அந்தக் கருப்பும் வெள்ளையும் தெருவில் உலாத்தும் பைரவர்கள். எதிர்த்த வீட்டில் யாரும் கிடையாது..கண்ணழகிக்கு ஃப்ரெண்டா ஹா ஹா ஹா இவர் எல்லாரைப் பார்த்தும் கர்ர்ர்ர். தான் நம்ம வீட்டு மக்கள் அப்புறம் ஒரு சிலர் அவளுக்குப் பிடித்தால் மட்டுமே அலவ் செய்வா...இல்லேனா நான் அவகிட்ட சொல்லணும் நம்ம ஃப்ரென்ட் நு சொல்லி அவ முகர்ந்து பார்த்துட்டு உள்ள போய்டுவா.

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  21. //6 படம் கண்ணழகி விடாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க பாவம் ஜனு, ஹூம் நீ பாட்டுக்கு உருமிட்டுரு என்று அந்தப் பக்கமாக திரும்பிக் கொண்டு நின்றாள். கண்ணழகி நல்லா பல்பு வாங்கினா!!!!//
    ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  22. //திரும்பி வரும் போது ரயிலில் பக்கத்தில் இருந்தவர் எங்கள் மேல் தெரிக்கும் அளவு தும்மிக் கொண்டும் இருமிக் கொண்டும் வந்தார்.
    //

    ஆஆஆ...

    // ஆனால் நம் வீடு வரை அதிரும். தெருவே அதிரும். அதுவும் இரவு 10 மணி வரை கூட நீளும்!//
    ஓ இப்படியும் மனிதர்கள், ஆரைப்பற்றியும் சிந்திக்காமல்..

    //எனவே நம் வீட்டு மொட்டை மாடியில் நாம் கட்டிய கம்பிகளில்தான் அவர்கள் வீட்டுத் துணிகள் பெரும்பாலும் காயும்//
    இதென்ன இது? உங்களைக் கேட்காமலேயோ?

    //போனால் பொகட்டும் என்று விட்டுவிடுவது வழக்கமாகிவிட்டது.//
    கண்ணழகியை அவிட்டு விடுங்கோ.. ஒருநாளைக்கு ஒரு உடுப்பைக் கிழிச்சால் அத்தோடு திருந்தி விடுவார்கள் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்கக் கூட மாட்டார்கள். இங்கெல்லாம் பல இடங்களில் அப்படித்தான். உங்கள் ஊரைப் போல அல்ல. இந்த ஊர் மக்களில் சிலர் இப்படித்தான். தமிழ்நாட்டில் கூட அப்படி இல்லை. கேட்பார்கள்.

      கண்ணழகியை அவிட்டு விடுங்கோ.. ஒருநாளைக்கு ஒரு உடுப்பைக் கிழிச்சால் அத்தோடு திருந்தி விடுவார்கள் ஹா ஹா ஹா..//

      ஹா ஹா ஹா ஹா..சிரித்துவிட்டேன்..

      நம்ப பொண்ணு குரைக்கிற நாய் கடிக்காது ரகம்..ஒரு சிலரின் மீதுமட்டும் பாய்கிறால் பல்லை கோரமாகக் காட்டிக்க் கொண்டு. அதென்னவோ அவளுக்கு ஏதாவது தெரியும் போல.

      ஆனால் பலரிடம் குரைத்துவிரட்டுவாள் பாய மாட்டாள். பில்டிங்க் ஸ்ட்ராங்க் பேஸ்மென்ட் வீக்கு கேஸ்..ஹா ஹா ஹா

      ஜனு நிற்கிறாளே அந்த மதில் பக்கத்தில் அவங்க நின்று கொண்டு அப்படியே இங்கு காலை எட்டிப் போட்டுக் கடக்கும் முன், உங்க வீட்டு டாக் உள்ளேதானே இருக்கு வெளிய இருந்தா உள்ள கூட்டிப் போங்கனு சொல்லிட்டு அப்படியே க்ராஸ் செஞ்சுருவாங்க...

      என்ன செய்ய ...

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  23. ஏதோ அரசாங்கமும் தம்மால் முடிஞ்சவரை மக்களுக்குச் செய்கிறது என்பதால பறவாயில்லை.. இருப்பினும் ஆரை எனத்தான் அவர்களாஅலும் கவனிக்க முடியும்..

    ஓ அது அஞ்சுவின் டிஷ் ஆ? அழகாக வந்திருக்குது.. மொட்டைமாடியில் நிலா அழகு... ஆனா நடக்கும் நிலாவின் படத்தைக் காணவில்லையே:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இப்படிச் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். இதோ இன்றும் கூட்டம் பக்கத்து வீட்டில்..

      ஆமாம் ஏஞ்சலின் டிஷ்ஷேதான்...//அழகாக வந்திருக்குது.//

      நன்றி நன்றி....டேஸ்டும் நல்லாருந்துச்சு கூடவே தயிர்/கெட்டி மோர் வைத்துக் கொண்டு..செம டேஸ்ட்..

      //நடக்கும் நிலாவின் படத்தைக் காணவில்லையே:)//

      ஹா ஹா ஹா ஹா...

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  24. ஒரு படைப்புக்கும் இன்னொரு படைப்புக்கும் இடையே விடப்படும் இடைவெளி குறைய வேண்டுகிறேன். கண்ணழகி நான் பார்த்ததை  விட வளர்ந்து விட்டாள் போலிருக்கிறது. சில குழந்தைகள் இம்மாதிரி இடுக்குகளில் தலையை  விட்டுக் கொண்டு எடுக்க முடியாமல் திண்டாடும். கண்ணழகி பத்திரம். நிலா அழகு! உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் போல் இருப்பவர்களை திருத்துவது கொஞ்சம் கஷ்டம்தான். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு படைப்புக்கும் இன்னொரு படைப்புக்கும் இடையே விடப்படும் இடைவெளி குறைய வேண்டுகிறேன்.//

      ஹா ஹா ஹா ஹா பானுக்கா அந்த எண்ணம் உள்ளது என்றாலும் என்னவோ மனதில் பல இருக்கு எழுத ஆனால் எழுத்துவடிவத்தில் வருவது மிக மிகத் தாமதமாகிறது.

      ஆமாம் அக்கா சில குழந்தைகள் அப்படிக் கஷ்டப்பட்டதைப் பார்த்திருக்கிறேன்...சுவரை ஒரு பகுதி சுவரை இடித்து மீட்டதையும் பார்த்திருக்கிறேன்.

      கண்ணழகி பத்திரம்// ஆமாம் அக்கா...கவனமாக இருக்கிறேன். மிக்க நன்றி பானு அக்கா. கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  25. செல்லங்களின் குறும்புகள் - அதற்கான உங்கள் வர்ணனைகள் சிறப்பு. ரொம்பவே ரசித்தேன்.

    படித்த முட்டாள்கள் - ஒன்றும் சொல்வதற்கில்லை.

    சமையல் - ஆஹா... தொடரட்டும் முயற்சிகள்.

    கதம்பமாகத் தொகுத்துத் தந்தவை சிறப்பு. கடைசி படங்கள் - ஆஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்ஜி நீங்க ரொம்ப பொறுப்புள்ள வேலை, பிஸின்னு தெரியும்...அதற்கிடையிலும் இங்கு வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி

      ரசித்தமைக்கு மிக்க நன்றி ஜி

      கீதா

      நீக்கு
  26. பக்கத்து வீட்டுக் குட்டிச் செல்லம் ஜனு அழகு. அது செய்யும் குறும்பு நீங்கள் சொல்லியவிதம் அருமை.

    உங்கள் கண்ணழகியின் ரகளையில் மிக அருமை. கண்ணழகி இடுக்கில் புகுந்து கொண்டு எட்டிப்பார்த்து ஜனுவிடம் பேசுவது அருமை.

    இரண்டுபேரும் பேசிக் கொள்ளும் உரையாடல் அருமை.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா தெரியும் நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள் என்று

      எங்களுக்கு இங்கு நல்ல பொழுது போக்கு ஜனு வெளியில் வந்தால் அல்லது நம்ம ரௌடி பேபி கண்ணழகியின் சில செயல்கள் ஹையோ செம....இவை எல்லாம் தான் நம்மை உயிரோட்டத்துடன் வைக்கின்றன

      மிக்க நன்றி கோமதிக்கா ரசித்தமைக்கு

      கீதா

      நீக்கு
  27. இப்படி அடுத்தவர்களைப் பற்றி கவலைபடாதவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சகித்து பழகி விடுகிறோம் நாம். அண்டைவீட்டாரை பகைத்துக் கொள்ள கூடாது என்ற காரணத்தால். அவர்களே திருந்தினால் தான் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரியாகச் சொன்னீங்க கோமதிக்கா. அண்டைவீட்டாரை பகைத்துக் கொளல் ஆகாது. ஆமாம் அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு. போகட்டும் ....

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  28. /இந்த ஒரு சின்ன ஏரியாவிலேயே இத்தனை ஏழைகள் என்றால் நாட்டை நினைத்துப் பாருங்கள்!/

    ஆமாம் கீதா, கேட்கும் செய்திகளும் பார்க்கும் காட்சிகளும் மனதை வேதனைப் படுத்துகிறது.
    எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.


    /தொட்டடுத்த தெருவில் மூன்று பேருக்குத் தொற்று என்று சொல்லி வேன் வந்து அழைத்துச் சென்றதாகக் குழந்தைகள் சொன்னார்கள். உறுதியாகத் தெரியவில்லை.//

    இருந்தாலும் பத்திரமாய் இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா, கேட்கும் செய்திகளும் பார்க்கும் காட்சிகளும் மனதை வேதனைப் படுத்துகிறது.
      எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.//

      ஆமாம் கோமதிக்கா மனதை மிகவும் வேதனைப்படுத்துகிறது. அதிலும் சிலர் ரொம்பவே நம் மனதைப் பாதிக்கின்றார்கள். பாவம் அக்கா.

      தொற்று இருந்தால் போலீஸ் வந்து தெருவை அடைத்திருப்பார்கள் ஆனால் அப்படி எதுவும் இல்லை. எனவே தெரியவில்லை அக்கா. இங்கு எல்லோரும் இயல்பாக இருக்கின்றார்கள்....என்ன ஒரே ஒரு வித்தியாசம் எல்லார் முகத்திலும் மாஸ்க் - அது எதற்கு என்று தெரியவில்லை. கை ஒன்றும் கழுவிக் கொண்டு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அழுக்கு மாஸ்க் மட்டும் இருக்கிறது என்னவோ போங்க...

      நாங்கள் பத்திரமாக இருக்கின்றோம் அக்கா

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா


      நீக்கு
  29. டர்க்கிஷ் கத்தரி சாலட் பார்க்கவே சுப்பர், ரூசியும் நன்றாக இருந்து இருக்கும்.

    நிலா படங்கள் மிக அழகு. மொட்டை மாடி இருந்த் அபோது நானும் 8 பயிற்சி செய்தேன் இப்படி படங்களும் எடுத்தேன். ஆனால் இந்த வீட்டில் மொட்டை மாடி நம்ககு கிடையாது. பூட்டி வைத்து இருக்கிறார்கள் பைப் லைன் கேஸ் போவதால்.

    பதிவும் படங்களும் நன்றாக இருக்கிரது அடிக்கடி எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா டர்க்கிஷ் சாலட் நன்றாகவே இருந்தது. நம்மூர் டேஸ்ட் தான். ஏஞ்சல் தேவதையின் கிச்சனில் கொடுத்திருந்தாங்க இல்லையா அது. கூடத் தொட்டுக் கொள்ள தயிர்கொஞ்சம் புளித்த கடைந்த தயிர்..

      ஓ கேஸ் பைப் லைன் போனால் மொட்டைமாடி அனுமதி இல்லையோ..

      படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி கோமதிக்கா

      எழுத முனைகிறேன் கோமதிக்கா பார்ப்போம் மிக்க நன்றி கருத்துகள் அனைத்திற்கும்

      கீதா

      நீக்கு
  30. பக்கத்துவீட்டு மகாத்மியம் படித்தேன். நாம் செய்த பாக்யம் என நினைத்துக்கொள்ளவேண்டியதுதான்! நமது ஜனங்கள் அப்படி. அதிகம் யோசித்தால் ரத்தம் அழுத்தமாக ஏறும்!

    தலையை உள்ளே விடாமல் அதுவும் நண்பனை.. பியை எப்படித்தான் பார்க்கும்? நாய் தலைநுழைக்கும் அளவுக்கு யோசித்து ஓட்டை போட்டிருக்கிறார்களோ மாடியில்? நாய்ப் பிரியர் போலும் அந்தக் கட்டிட இஞ்ஜினியர்!

    காலை நிலா என்கிறீர்கள். மின்னுகிறதே. உங்கள் ஃபோன் கேமரா கில்லாடியோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் அண்ணா, பக்கத்துவீட்டு மகாத்மியம் பழகிவிட்டது...கண்டு கொள்வதே இல்லை. நீங்க சொல்லுவது போல் அதிகம் யோசித்தால் அதே அதேதான்..

      //தலையை உள்ளே விடாமல் அதுவும் நண்பனை.. பியை எப்படித்தான் பார்க்கும்? நாய் தலைநுழைக்கும் அளவுக்கு யோசித்து ஓட்டை போட்டிருக்கிறார்களோ மாடியில்? நாய்ப் பிரியர் போலும் அந்தக் கட்டிட இஞ்ஜினியர்!//

      ஹா ஹா ஹா ஹா கண்ணழகி சரியான ரௌடி பேபி மொட்டைமாடியில் சில சமயம் அடிக்கும் ரவுஸு தாங்காது ஹா ஹா

      ஹையோ அண்ணா அது காலை நிலாவேதான். ஃபோன் கேமரா இல்லை அண்ணா...கேமராவில் அதுவும் மிகச் சாதாரண கேமராதான். காலையில் மார்ச், ஏப்ரல் முதல் வாரம் வரை நிலா 6....6.30 மணி வரை தெரிந்தது வருஷப் பிறப்பிற்குப் பின் தெரிவதில்லை. இப்போதெல்லாம் நிலா காலையில் தெரிவதில்லை..

      மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா

      கீதா

      நீக்கு
  31. செல்லப் பிராணி அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு அடம் பிடிக்கும் அழகே அழ்கு. பக்கத்து வீட்டு செல்லத்தை கொஞ்சினால் நம்மதுக்கு பொறாமை வந்ந்து விடும். சுவாரசியமான் செய்திகள் படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா அதே பக்கத்துவீட்டதை க் கொஞ்சினால் எங்க வீட்டது முகத்தைத் திருப்பி வைத்துக் கொள்ளும்...உங்களுக்கும் அந்த அனுபவம் இருந்திருக்கும் தெரியும் நீங்கள் கவிதையே எழுதியிருந்தீங்க

      மிக்க நன்றி முரளி சகோ ரசித்தமைக்கும் கருத்திற்கும்

      கீதா

      நீக்கு
  32. கதம்பச் செய்திகள் அருமை. கொரோனா காலத்தை பயன்படுத்தும் முறை சிறப்பு. (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஐயா உங்கள் கருத்திற்கு. எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது வாருங்கள் ஐயா. உங்கள் பள்ளி நூற்றாண்டு விழா இனிதே ந்டக்க வாழ்த்துகள்.

      கீதா

      நீக்கு
  33. ஹலோ சாரே ... உங்களுக்கு ஏதோ supernatural power இருக்கும்னு நினைக்கிறேன் !!! ஏன்னா நம்ம "யாகவா முனிவர்" மாதிரி உங்களுக்கு விலங்கு மற்றும் பறவை, பட்சி பாஷை எல்லாமே புரியுது பாருங்க... அப்படியே நம்ம 'கொரானோ"விடமும் பேசி உனக்கு இப்போ என்னதான் பிரச்சனை என்று கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் ! .. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ சாரே இல்லை ஜட்ஜ்மென்ட் சிவா!! ஹா ஹா ஹா.. இது கீதா. விலங்குகள் நம்ம கூடவே இருக்குது...ம்ம்ம் தொற்றும் நம்ம கூடத்தான் ஆனா சோசியல் டிஸ்டன்ஸ் அதுவும் மூணு அடி தள்ளியே நிக்கணும்..அதுக்குக் கேக்குமோ? ஹா ஹா ஹாஹ்

      ஆ ஆ நான் பக்கத்துல போகாம தொற்றிடம் பேசிக் கொண்டேதான் இருக்கிறேன் சீகிரம் ஓடிப் போயிடுன்னு. இன்னும் பேசிவிட்டா போச்சு....கேட்டு சொல்லுறேன்...ஹா ஹா ஹா

      உங்கள் தகவலுக்கு...இத்தளத்தில் என் நண்பர் துளசிதரனுன், நானும் எழுதுகிறோம். நண்பர் இனி எழுதுவார். என் கணினி ப்ழுதானதால் எங்கள் பதிவுகள், கருத்துகள் இட முடியாமல் இருந்தது. அத்னாலும் தற்போது நான் கணவரின் கணிணியில் இருந்து வலைப்பக்கம் வருவதால், அதுகிடைக்கும் நேரம் நெட் வரும் சமயம் தான் கருத்து பதிவு எல்லாம் என்பதாலும் நண்பர் அவர் பதிவுகளை, மற்ற பதிவுகளுக்கான கருத்துகளை அனுப்பாமல் இருந்தார். இப்போது நான் சொன்னதும் அவர் கருத்துகள் அனுப்புகிறார். பதிவு இனி வரும். என் பெயர் கீதா. என் பதிவுகள், கருத்த்கள் என் பெயருடனும். துளசியின் கருத்துகள் பதிவுகள் அவர் பெயருடனும் வரும்.

      மிக்க நன்றி ஜட்ஜ்மென்ட் சிவா

      கீதா

      நீக்கு
    2. "உங்கள் தகவலுக்கு...இத்தளத்தில் என் நண்பர் துளசிதரனுன், நானும் எழுதுகிறோம்".... o.k ... நன்றி சிஸ்டர் .... நான் உங்கள் வலைப்பக்கதிற்கு வருவது புதுசு என்பதால் கொஞ்சம் குழப்பம் இருந்துச்சு ... இப்போது நீங்கள் தந்த தெளிவான விளக்கத்தால் குழப்பம் தீர்ந்து தெளிவாயிடுச்சு .... வாழ்த்துக்கள் சகோதரி ! ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

      நீக்கு
  34. படங்கள், காட்சிகள், காலநேரம்
    எல்லாம் சிறப்பு

    பதிலளிநீக்கு
  35. நண்பர்களே, திரு இராய செல்லப்பா அவர்களின் கருத்து முற்றிலும் உண்மை , எந்த கருத்து? அதாங்க வேலை வெட்டி ….
    அடுத்து: லொள்ளு பார்டிகளின் மானசீக பரிபாஷைகள் . ஒரு லொள்ளுவின் மனசு இன்னொரு லொள்ளுக்குத்தானே புரியம். இங்கேய இரண்டாவது லொள்ளு விலங்கு அல்ல உங்களுக்கு விளங்கும் .அடுத்து சந்திரோதயம் அருமை. .
    அடுத்து சமையல் யாருடையது எது ? இரண்டுமே பார்க்கும்போதே மணக்கிறது நெஞ்சிக்குள்ளேயும் எச்சில் ஊற்று.

    கோ

    பதிலளிநீக்கு
  36. அட! இஃது என்ன புது விதமாய் ஒரே பதிவில் பல விதயங்கள்! விகடன் பாணியோ! நன்றாக இருக்கிறது சகோ! இரு வீட்டுச் செல்லங்களின் வழக்கமான சந்திப்புக்கு நீங்கள் கோத்த கற்பனை பழைய சித்திரக்கதைகளை நினைவூட்டியது என்று சொல்லலாம் எனப் பார்த்தால் கீழே உண்மையிலேயே தாம் அண்டு செர்ரி முதலான சித்திரங்களுக்குக் குட்டிக் குட்டித் துணுக்குகள்! அருமை!

    உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் செய்வது அட்டூழியம்! நீங்கள் ஏன் இவற்றைப் பொறுத்துக் கொள்கிறீர்கள் என்பது புரியவில்லை. நான்கு பேர் கேட்டால்தானே திருந்துவார்கள்? இல்லாவிட்டால் உங்களைப் போல் மற்றவர்களுக்கும் அவர்கள் பாதிப்பு ஏற்படுத்தத்தான் செய்வார்கள்.

    நிலா படங்கள் உண்மையிலேயே அழகாக இருக்கின்றன. மற்றபடி சமையலில் எனக்கு ஆர்வம் கிடையாது. வயிறு முட்டத் தின்பதோடு சரி! :-D

    பதிலளிநீக்கு
  37. வித விதமான பதார்த்தங்கள் கொண்ட சாப்பாடு மாதிரி சுவையான பதிவு. நிறைய நாள் வராததினால் கண்ணழகியை மறந்தே விட்டேன் எப்படி இருக்கிறாள்

    பதிலளிநீக்கு