ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

காலம் செய்யும் விளையாட்டு


காலம் செய்யும் விளையாட்டு 

காலம் செய்யும் விளையாட்டு – இது
கண்ணாமூச்சி விளையாட்டு!

மிகவும் வேதனையோடும் பயத்தோடும் கொரோனா-கோவிட்19 எனும் பெயரை இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவரும் உருவிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் என் மனம் எப்போதும் உருவிட்டுக் கொண்டிருக்கும் வரிகள்தான் இவை.  ஒரு உலகப் போருக்குச் சமமான பீதிச் சூழலை கொரோனா-கோவிட் 19 உலகெங்கும் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2019 நவம்பரில் சைனாவிலுள்ள வுஹான் மாமிச மார்க்கெட்டிலிருந்து பரவியதாகச் சொல்லப்படும் இந்த வைரஸ் தொற்று நோய் இன்றைய விவரப்படி 1,90,000 ற்கும் மேல் உயிர்களைக் குடித்திருக்கிறது. கடந்த 1850 வருடங்களில் இது போன்ற தொற்று நோய்களால் இவ்வுலகில் 90 கோடிக்கும் மேல் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கிறதாம். 


AD 541 கான்ஸ்டாண்டிநோபிளில் தோன்றிய ஜஸ்டினியன் ப்ளேக் அன்றைய உலக மக்கள் தொகையின் பாதி பேரான 5 கோடிப்பேரது உயிரைக் குடித்ததாம். அதன் முன்பும் பின்புமாக பல தொற்று நோய்கள் லட்சக்கணக்கான மனிதர்களின் உயிரைக் குடித்திருக்கிறதாம். 1347 தோன்றிய இரண்டாம் ப்ளேக் ஐரோப்பாவில் படர்ந்து 20 கோடிப்பேரை பலிவாங்கியது. 1981 தோன்றிய ஹெச் ஐ வி/எய்ட்ஸ் 3 கோடிப்பேருக்கும் மேலானவர்களைக் கொன்று குவித்தது. இந்த நூற்றாண்டில் ஹெச்1என்1 மற்றும் எபோலாவால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தார்கள்.


இப்போது 2019 ல் கொரோனா. இனி எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்று சொல்ல முடியாத நிலை. என்று வரை தொடரும் என்பதும் ஊகிக்க முடியவில்லை. மருந்து ஏதேனும் கண்டுபிடிக்கப்படும் வரை நோயும் மரணமும் தொடரும் என்றுதான் தோன்றுகிறது. இல்லையேல் ஒவ்வொருவருக்கும் இந்நோயை எதிர்க்கும் எதிர்ப்புச் சக்தி உடலில் இனி தோன்ற வேண்டும். இல்லையேல் கடல் கொந்தளிப்பு தனியே அடங்குவது போல் இந்நோயை இல்லாமற் செய்ய ஒரு சூழலை இயற்கையே உருவாக்க வேண்டும். இப்படி ஏதேனும் நிகழும் வரை நாம் ஒவ்வொருவரும் நம்மை இந்நோயின் பிடியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதைத் தவிர வழியேதும் இப்போதைக்கு இல்லை.


நமக்குத் தெரிந்த தெரியாத எத்தனையோ விபத்துக்களும், விபரீதங்களும், இயற்கையின் சீற்றமும் இவ்வுலகில் இது போல் நிகழ்ந்திருக்கிறதுதான். இது போலவே அப்போதும் இங்கு வாழ்ந்தவர்களையும், வாழ்ந்தவைகளையும் அவை பாதித்துமிருக்கிறதுதான். அது போல் இப்போது கொரோனா-கோவிட்19. லட்சக்கணக்கான மனித உயிர்கள் பலியாவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஒன்றுமட்டும் உறுதி. இதுவும் கடந்து போகும். இன, மத, மொழி, பண வேற்றுமை காரணமாக மனிதம் மறந்து பலவிதமாக யுத்தம் செய்து கொண்டிருந்தவர்கள், பாதுகாப்புச் சுவர் எழுப்பியவர்கள், புதிய சட்டங்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் ஒரு போதும் சிந்தித்துப் பார்த்திராத நிலநடுக்கம், நிலச்சரிவு, சுனாமி, சூறாவளி போன்றவற்றில் சிக்கியது போல் நடுங்கிப்போய் செய்வதறியாது பதறும் நிலை.


இது போல் ஒரு நிலையை இதுவரை மனிதனின் அறிவியல், பொருளாதார அறிவு சிந்தித்துக் கூடப் பார்த்ததில்லை. (ஒரு வேளை எழுத்தாளர்கள் அவர்கள் கற்பனைக் கதைகளில் கண்டிருக்கலாம்.) இது போன்ற ஒரு நிலை எல்லாம் வராது. அப்படி வந்தால் அப்போது அதை எதிர்கொள்வோம்  என்பதுதான் இவ்வுலகோரின் கொள்கை. மனிதனின் அறிவிலும் திறனிலும் நம் எல்லோருக்கும் அவ்வளவு நம்பிக்கை. நம் ஆறிவிற்கும் திறனிற்கும் அப்பாற்பட்ட இயற்கையின் நியதியையும் சீற்றத்தையும் பற்றி அறிந்தும், அறியாதது போல் பாவிக்கும் ஓர் அசட்டுத் தைரியம். அந்த அசட்டு தைரியம் தான் மனிதனை, நாளடைவில் மனிதத்தை மறக்கச் செய்தது.  இயற்கையை அல்லது இயற்கையின் இயக்கமான இறையை மறக்கச் செய்தது. அல்லது செயற்கையின் விளைவால் காலப்போக்கில் உருவாக்கப்பட்ட தவறான அல்லது இறையின் விருப்பங்களை நிறைவேற்றுகிறேன் பேர்வழி என்று உலகிற்கும் உலகத்தவர்க்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களைத் தூண்டியது.


இப்போது அந்த அசட்டுத் தைரியம் ஆட்டம் கண்டுவிட்டது. நாம் பயணிப்பது நடுக்கடலில் என்பதை எல்லோருக்கும் நினைவூட்டிவிட்டது. இவ்வுலகாம் கப்பலில் பயணிக்கும் கப்பித்தான் முதல் கடை ஊழியன் வரை, தரத்திலும், நிறத்திலும் வேற்றுமை இருந்தாலும் கப்பலைக் கடல் கொந்தளிப்பிலிருந்து காப்பாற்றி கரை சேர்க்க வேண்டியது மிக மிக அவசியம் என்பதை உணரச் செய்துவிட்டது. ஒவ்வொருவரும் கப்பலையும் கூடவே தங்களது உயிர்களையும் காப்பாற்ற என்னென்ன செய்ய முயல வேண்டுமோ அதைக் கடல் சீற்றம் தணியும் வரை செய்து கொண்டே இருக்க வேண்டும்.  உறுதியாய் நாம் கரை சேர்வோம். கரை சேர்ந்த பின் மட்டுமல்ல, அதன் பின் தொடரும் கடல் பயணத்திலும். (கப்பல் எப்போதும் கடலில்தான்!) இந்த இக்கட்டான நிலையில், இதுவரை நாம் மறந்திருந்த, இப்போது நாம் மீண்டும் கற்றுக் கொண்ட கட்டுப்பாடு, ஒற்றுமை, மனித நேயம் மற்றும் நம்பிக்கையுடன் (நம்பிக்கை நம் ஒவ்வொருவரிலும் மட்டுமல்ல இயற்கையின் மீதும் இயற்கையை இயக்கும் இறையின் மீதும்) வாழ்க்கைப் படகில் பயணித்துக் காலம் செய்யும் விளையாட்டை இது போல் இனியும் நிகழும்போதெல்லாம் எதிர்கொள்வோம்.

துளசிதரன்

56 கருத்துகள்:

  1. காலத்தின் கருத்து எதுவோ?..

    இயற்கைக்குக் கட்டுப்பட்டு வாழ்வதற்கு இனியேனும் முயல்வோம்!...

    கடவுள் நம்மைக் காப்பாற்றட்டும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கைக்குக் கட்டுப்பட்டு வாழ்வதற்கு இனியேனும் முயல்வோம்!...

      கடவுள் நம்மைக் காப்பாற்றட்டும்!..//

      ஆம் சார் நம்பிக்கையுடன் கடப்போம்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்

      துளசிதரன்

      நீக்கு
  2. அருமையான கட்டுரை நம்புவோம் நம்பிக்கைதான் வாழ்க்கை.

    இறைவனை ஒருங்கிணைந்து மனதுள் தொழுவோம் வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து நம்பிக்கையோடு நேர்மறையாக இறையைத் தொழுது நல்லதை நினைப்போம் நல்லது நடக்கும் கில்லர்ஜி. இதுவும் கடந்து போகும்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  3. நல்ல கருத்து. காத்துக் கொள்வோம் அனைவரையும் சுயக் கட்டுப்பாட்டுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்ஜி நீங்கள் சொல்லியிருப்பது போல் இந்த நேரத்தில் மிகவும் தேவையானது சுயக்கட்டுப்பாட்டுடன், நம்பிக்கையுடன் நம்மைக் காத்துக் கொண்டு நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் காப்போம்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  4. நலமே விளையட்டும்.

    நம்பிக்கை கொள்வோம் - நல்லதே நடக்கும்.

    இன்றைய சூழலை சரியாகச் சொன்னீர்கள். பதிவில் தலைப்பு சேர்க்க வேண்டும் - Untitled என வருகிறது.

    சற்றே இடைவெளிக்குப் பிறகு துளசிதரன் ஜி பதிவு. நல்லது. தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கை கொள்வோம் - நல்லதே நடக்கும்.//

      ஆமாம் வெங்கட்ஜி. நல்லது நடக்கும்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வெங்கட்ஜி

      துளசிதரன்

      நீக்கு
    2. வெங்கட்ஜி மிக்க நன்றி நீங்க இங்கு சுட்டிக்காட்டிய பிறகுதான் தலைப்பு சேர்க்காமல் விடுபட்டிருந்ததைப் பார்த்தேன். உடனே சேர்த்தும்விட்டேன் மிக்க நன்றி வெங்கட்ஜி.

      கீதா

      நீக்கு
    3. சற்றே இடைவெளிக்குப் பிறகு துளசிதரன் ஜி பதிவு. நல்லது. தொடர்ந்து எழுதுங்கள்.//

      எழுத முயற்சி செய்கிறேன். நன்றி வெங்கட்ஜி.

      துளசிதரன்

      நீக்கு
  5. //கட்டுப்பாடு, ஒற்றுமை, மனித நேயம் மற்றும் நம்பிக்கையுடன் (நம்பிக்கை நம் ஒவ்வொருவரிலும் மட்டுமல்ல இயற்கையின் மீதும் இயற்கையை இயக்கும் இறையின் மீதும்) ///

    இவைகள் இருந்தாலே மகிழ்ச்சியாக வாழ்ந்துவிடலாம் .... கொரோனைவையும் கடந்திடலாம் எளிதில்.


    துளசிசாரின் எழுத்தை காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் மதுரை அப்ப நான் எழுதினா??!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    2. ஒருத்தரை உற்சாகப்படுத்தி எழுத வைக்க முயற்சித்தால் அதற்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்????

      நீக்கு
    3. ஹா ஹ ஹா ஹா ஹா மதுரை சிரித்துவிட்டேன்...

      சும்மா உங்கள வம்புக்கு இழுத்தா.......ஹா ஹா

      கீதா

      நீக்கு

  6. துளசி சார் இப்போது உங்களுக்கு நேரம் நிறைய கிடைக்கும் என நினைக்கிறேன் அதனால் பழையபடி எழுத தொடருங்கள்... விசுவும் இப்போது எழுத தொடங்கி இருக்கிறார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத முயற்சி செய்கிறேன் மதுரை தமிழா. கீதாவின் கணினி இல்லாததால் தான் பிரச்சனை. இப்போது அவர் அவரது கணவரின் கணினி வழியாக, அது அவருக்குக் கிடைக்கும் சமயத்தில் தான் வலைத்தளம் வருவதால், என் பதிவுகள் கருத்துகள் அவர் வழியாக இங்கு பதிவாகும் காரணத்தாலும் நான் அனுப்பாமல் இருந்தேன். இப்போது அவரே அனுப்பச் சொன்னதால் பதிவை அனுப்பினேன். இனியும் கிடைக்கும் அவகாசத்தில் எழுத முயற்சி செய்கிறேன்.

      விசு எழுதத் தொடங்கியதையும் பார்த்தேன்.

      மிக்க நன்றி மதுரை தமிழா

      துளசிதரன்

      துளசிதரன்

      நீக்கு
    2. நம்மைப் போன்றவர்கள் எழுதுவதை மறப்பது என்றால் மூச்சுவிட மறப்பது போல் இல்லையா தமிழா!

      துளசிதரன்

      நீக்கு
  7. // ஒரு சூழலை இயற்கையே உருவாக்க வேண்டும் //

    எதிர்ப்பார்ப்பது, வேண்டுவது எல்லாம் இவ்வாறே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே நடக்கும் என்று நம்புவோம் டிடி.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டிடி

      துளசிதரன்

      நீக்கு
  8. // அசட்டு தைரியம் | இயற்கையின் இயக்கமான இறையை | இறையின் விருப்பங்களை நிறைவேற்றுகிறேன் பேர்வழி | தீங்கு விளைவிக்கும் செயல்கள் | வாழ்க்கை + படகு | சீற்றம் தணியும் வரை | //

    யப்பா... இரு பத்திகளில் உள்ள குறிப்புகளை வாசிக்கும் போது, முடிக்கும் தருவாயில் உள்ள எனது அடுத்த பதிவின் உட்கருத்துகள் இங்கே கண்டேன்... வியப்பும் அடைந்தேன்... ஆனால் ஆய்வு வேறு மாதிரி இருக்கும்...

    உற்சாகம் தரும் தரும் பதிவு... நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உற்சாகம் தரும் தரும் பதிவு... நன்றி சகோதரி...//

      டிடி இது துளதியின் பதிவு!

      கீதா

      நீக்கு
    2. மன்னிக்கவும்... கவனிக்கவில்லை... எடுக்கப் போகும் குறும்படத்திற்கு வந்து விடுகிறேன்... ஹிஹி...

      நீக்கு
    3. யப்பா... இரு பத்திகளில் உள்ள குறிப்புகளை வாசிக்கும் போது, முடிக்கும் தருவாயில் உள்ள எனது அடுத்த பதிவின் உட்கருத்துகள் இங்கே கண்டேன்... வியப்பும் அடைந்தேன்... ஆனால் ஆய்வு வேறு மாதிரி இருக்கும்...

      உற்சாகம் தரும் தரும் பதிவு.//

      டிடி, உங்கள் இடுகையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். உங்கள் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டிடி

      துளசிதரன்

      நீக்கு
  9. அருமையான கட்டுரை.

    நலமா? சகோ?

    //கப்பலைக் கடல் கொந்தளிப்பிலிருந்து காப்பாற்றி கரை சேர்க்க வேண்டியது மிக மிக அவசியம் என்பதை உணரச் செய்துவிட்டது. ஒவ்வொருவரும் கப்பலையும் கூடவே தங்களது உயிர்களையும் காப்பாற்ற என்னென்ன செய்ய முயல வேண்டுமோ அதைக் கடல் சீற்றம் தணியும் வரை செய்து கொண்டே இருக்க வேண்டும். உறுதியாய் நாம் கரை சேர்வோம். கரை சேர்ந்த பின் மட்டுமல்ல, அதன் பின் தொடரும் கடல் பயணத்திலும். (கப்பல் எப்போதும் கடலில்தான்!) இந்த இக்கட்டான நிலையில், இதுவரை நாம் மறந்திருந்த, இப்போது நாம் மீண்டும் கற்றுக் கொண்ட கட்டுப்பாடு, ஒற்றுமை, மனித நேயம் மற்றும் நம்பிக்கையுடன் (நம்பிக்கை நம் ஒவ்வொருவரிலும் மட்டுமல்ல இயற்கையின் மீதும் இயற்கையை இயக்கும் இறையின் மீதும்) வாழ்க்கைப் படகில் பயணித்துக் காலம் செய்யும் விளையாட்டை இது போல் இனியும் நிகழும்போதெல்லாம் எதிர்கொள்வோம்.//

    இந்த் வரிகளை படிக்கும் போது பிரளய காலத்தில் பெரிய தோணியில் வந்து அம்மையும் அப்பனும் சகல உயிர்களையும் காப்பாற்றியது நினைவுக்கு வந்து விட்டது. சீர்காழி கோவிலில் பெரிய தோணியில் அம்மையும் அப்பனும் இருப்பார்கள். தோணியப்பர் என்று பெயர் இறைவனுக்கு.

    அது போல் பைபிள் கதையிலும் வரும் படகில் உயிர்களை காப்பது.
    இக்காட்டான காலகட்டத்தில் இறை நம்பிக்கை என்ற துடுப்பால் வாழ்க்கை படகை செலுத்தி செல்வோம்.

    நீங்கள் சொல்வது போல் மனிதநேயம், கட்டுப்பாடு, ஒற்றுமையோடு இந்த இக்காட்டான சூழ்நிலையை வெல்வோம் . நம்பிக்கையோடு இருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலம் சகோதரி. நீங்களும் நலமுடன் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வெகு நாள் கழித்து எல்லோரையும் சந்திக்கிறேன்.

      //இந்த் வரிகளை படிக்கும் போது பிரளய காலத்தில் பெரிய தோணியில் வந்து அம்மையும் அப்பனும் சகல உயிர்களையும் காப்பாற்றியது நினைவுக்கு வந்து விட்டது. சீர்காழி கோவிலில் பெரிய தோணியில் அம்மையும் அப்பனும் இருப்பார்கள். தோணியப்பர் என்று பெயர் இறைவனுக்கு.//

      ஆமாம் தோணியப்பரை தரிசனம் செய்துள்ளேன்.

      ஆம் சகோதரி, உலகாளும் அம்மையப்பன் இதற்கு ஒரு மருந்தாக இதை அழிக்கும் சக்தியாக வருவார்கள் நிச்சயம்.

      சகோதரி கோமதி அரசு, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      துளசிதரன்

      நீக்கு
  10. துளசிதரன், நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக இருப்பீர்கள் என எண்ணுகிறேன். நீண்ட நாட்கள் கழித்துப் பதிவு போட்டமைக்கு நன்றி. அருமையான கருத்துள்ள பதிவு. இயற்கை அன்னையை நாம் ரொம்பவே சீண்டிவிட்டோம். இறை நம்பிக்கை தான் இப்போது நம்மைக் காப்பாற்ற வேண்டும். அது ஒன்றே நம்பிக்கை. கூடுமானவரை சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து இந்த நோயை ஒழிப்போம். இந்த இக்கட்டான சூழல் மாறி மீண்டும் அமைதியுடன் கூடிய நல்லமாதிரியான சூழல் வரப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமுடன் இருக்கிறோம் சகோதரி. நீங்களும் உங்கள் கணவரும் நலமுடன் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

      இயற்கை அன்னையை நாம் ரொம்பவே சீண்டிவிட்டோம். இறை நம்பிக்கை தான் இப்போது நம்மைக் காப்பாற்ற வேண்டும். அது ஒன்றே நம்பிக்கை. //

      ஆமாம் உண்மைதான். அந்த நம்பிக்கைதான் நம்மை வழிநடத்திச் சென்று இக்காலத்தைக் கடக்க உதவிட வேண்டும். நல்ல சூழல் விரைவில் வந்திடும். நம்புவோம் பிரார்த்திப்போம்.

      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதா சாம்பசிவம் சகோதரி.

      துளசிதரன்

      நீக்கு
  11. நண்பரே நலம்தானே
    நம்பிக்கையோடு இருப்போம், கொரோனாவை வெல்வோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமே நண்பரே. நீங்களும் நலம்தானே?

      நம்பிக்கையோடு இருந்து இக்கட்டான சூழலைக் கடப்போம்.

      நண்பர் கரந்தையாரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      துளசிதரன்

      நீக்கு
  12. //உறுதியாய் நாம் கரை சேர்வோம். கரை சேர்ந்த பின் மட்டுமல்ல, அதன் பின் தொடரும் கடல் பயணத்திலும். (கப்பல் எப்போதும் கடலில்தான்!) இந்த இக்கட்டான நிலையில், இதுவரை நாம் மறந்திருந்த, இப்போது நாம் மீண்டும் கற்றுக் கொண்ட கட்டுப்பாடு, ஒற்றுமை, மனித நேயம் மற்றும் நம்பிக்கையுடன் (நம்பிக்கை நம் ஒவ்வொருவரிலும் மட்டுமல்ல இயற்கையின் மீதும் இயற்கையை இயக்கும் இறையின் மீதும்) வாழ்க்கைப் படகில் பயணித்துக் காலம் செய்யும் விளையாட்டை இது போல் இனியும் நிகழும்போதெல்லாம் எதிர்கொள்வோம்.//
    மிக அருமையான வரிகள்!
    பழைய பாடல் ஒன்று இருக்கிறது. ' நாளைப்பொழுது உந்தன் நல்ல பொழுதாக வேண்டுமென்று நம்பிக்கை வைப்பாயடா' என்று! அந்தப்பாடல் தான் நினைவுக்கு வந்தது இந்த வரிகளைப்படித்த போது!
    தீமைகள் விரைவில் அழியுமென்று நம்பிக்கை வைத்து காத்திருப்போம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக அருமையான வரிகள்!
      பழைய பாடல் ஒன்று இருக்கிறது. ' நாளைப்பொழுது உந்தன் நல்ல பொழுதாக வேண்டுமென்று நம்பிக்கை வைப்பாயடா' என்று! அந்தப்பாடல் தான் நினைவுக்கு வந்தது இந்த வரிகளைப்படித்த போது!//

      மிக்க நன்றி. அப்பாடல் நல்ல பாடல். கேட்டிருக்கிறேன்.

      தீமைகள் விரைவில் அழியுமென்று நம்பிக்கை வைத்து காத்திருப்போம்!!//

      ஆமாம் சகோதரி மனோ சாமிநாதன்.

      மீண்டும் இயல்புவாழ்க்கைக்கு உலகம் திரும்பிடும் என்று நம்புவோம்.

      நீங்களும் நலமுடன் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி மனோ சாமிநாதன்.

      துளசிதரன்

      நீக்கு
  13. அன்பு துளசிதரன்,
    நெடு நாட்கள் கழித்து உங்களைக் காண்பதில் மிக
    மகிழ்ச்சி.
    ஆமாம் இயற்கை எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறது.
    நாம் தனியாகச் சென்று பாழ்படுத்தாவிட்டாலும்
    மற்றவர்கள் செய்த பழிக்கு நாம் பங்கு ஆகி இருக்கிறோம். நம்மாழ்வார் சொன்னது போல
    நாம் பொங்கி எழுந்து ஒன்றும் சொல்லவில்லை.
    எங்கோ நடப்பது போல் இருந்துவிட்டோம்.
    இனியாவது விழிப்புடன் இருக்க வேண்டும். மிக நன்றி.நீங்களும்
    குடும்பமும் நன்றாக பத்திரமாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா மிக்க மகிழ்ச்சி அம்மா.

      நீங்களும் நலமுடன் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறோம்.

      //நாம் தனியாகச் சென்று பாழ்படுத்தாவிட்டாலும்
      மற்றவர்கள் செய்த பழிக்கு நாம் பங்கு ஆகி இருக்கிறோம்.//
      எங்கோ நடப்பது போல் இருந்துவிட்டோம்.
      இனியாவது விழிப்புடன் இருக்க வேண்டும். //

      ஆம் அம்மா. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். நாங்கள் நலமாக இருக்கிறோம் வல்லிம்மா.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா

      துளசிதரன்

      நீக்கு
  14. மேலை அறிஞர் நோம் இது ட்ரைலர்தான் உண்மையான அச்சுறுத்தல் குளோபல் வார்மிங்தான் என்கிறார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் எப்போதெல்லாம் இயற்கையை நாம் மீறுகிறோமோ அப்போது இயற்கை சீறும். காலப்போக்கில் நம்மால் நம் வாழ்வில் வரும் மாற்றங்கள் மீறாமல் இருக்க முடியாத நிலை. நம்மை பேணும் இயற்க்கைக்கும் அதனால் சீறாமல் இருக்க முடியாத நிலை.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கஸ்தூரி

      துளசிதரன்

      நீக்கு
  15. “கொரோனா ஒரு பார்வை”..

    மிக அழகாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீங்கள் துளசி அண்ணன், நீங்கள் அனைவரும் நலம்தானே.. நல்லதே நடக்கட்டும்.. அதுவும் விரைவாக நடக்கட்டும் எனக் கடவுளை வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நலம் அதிரா. நீங்களும் நலமுடன் இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

      ஆம் //நல்லதே நடக்கட்டும் அதுவும் விரைவாக நடக்கட்டும். // பிரார்த்திப்போம்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அதிரா

      துளசிதரன்

      நீக்கு
  16. இயற்கையோடு இசைந்து வாழத்தான் வேண்டும்
    இடையிடையே இயற்கை கூட
    பிளேக், சார்சு, கொரோனா என
    மனிதரைத் தின்கிறதே!

    சிறந்த பதிவிது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். விரைவில் நலம் கிட்டும் என நம்பிக்கையுடன் பிரார்த்திப்போம்

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி யாழ்பாவாணன்.

      துளசிதரன்

      நீக்கு
  17. நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம். கொர்னா கட்டுப்பத்த வேண்டிய வைரஸ்§பாரிஸ் கூட முடங்கிப்போய் இருக்கு அண்ணாச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நேசன் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்.

      நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? உங்கள் ஃப்ரான்ஸிலும்/பாரிசிலும் அதிக தாக்கம் என்று அறிய முடிந்தது.

      //பாரிஸ் கூட முடங்கிப்போய் இருக்கு அண்ணாச்சி.// ஆம் செய்தியில் அறிந்தோம்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நேசன். பாதுகாப்புடன் இருங்கள்

      துளசிதரன்

      நீக்கு
  18. தனிமரம் நேசன்
    வசந்தம் வருமா?!!!
    1 ஆண்டு முன்பு
    /டைமன் போய்விட்டது !இப்போது பழைய முகவரியில் வலை பார்வைக்கு இருக்கு.https://thanimaramnesan.blogspot.com/2020/04/blog-post_26.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நேசன் பல நாட்கள் ஆகிவிட்டது. உங்கள் தளம் இடையில் திறக்க முடியாமல் இருந்தது.

      இப்போது இதே தான் இல்லையா. இனி தொடர்கிறோம்.

      மிக்க நன்றி

      துளசிதரன்

      நீக்கு
  19. இயற்கையை பாதுகாக்காமல் அதற்கு அநீதி செய்தோம் இனியாவது இயற்கை நம்மை இயக்கட்டும் .இங்கே கார்கள் பிளேன்கள் எதுவும் ஓடாமல் சத்தமின்றி அழுக்கின்றி  வான்வெளி அழகாய் இருக்கு .தன்னை சுற்றி என்ன நடக்குதுன்னே அறியாமையில் கரன்சி நோக்கி சென்றுகொண்டிருந்த மனிதன் இப்போ இயற்கை பற்றி யோசிக்கிறான் .பூமி என்ற கப்பலை பத்திரமா செலுத்திச்செல்லும் மாலுமிகள் நாம் ஒவ்வொருவருமே .நல்லதொரு பதிவு துளசி   அண்ணா .தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. தன்னை சுற்றி என்ன நடக்குதுன்னே அறியாமையில் கரன்சி நோக்கி சென்றுகொண்டிருந்த மனிதன் இப்போ இயற்கை பற்றி யோசிக்கிறான் .//

      உண்மைதான் சகோதரி ஏஞ்சல். ஆனால் இது தொடரவேண்டும் என்பதுதான் எல்லோரது அவாவும். அதற்குப் பொறுப்பான மாலுமிகள் நாம் தான் நீங்கள் சொல்லியிருப்பது போல்.

      எழுத முயற்சி செய்கிறேன்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி ஏஞ்சல்

      துளசிதரன்

      ஸாரி ஏஞ்சல் துளசி அனுப்பற கருத்தை நான்தானே டைப் செய்கிறேன் செஞ்சுட்டு அந்த ஃப்ளோல கீதா னு போட்டுட்டேன் அதான் டெல் செஞ்சுட்டு மீண்டும் போட்டேன்.

      கீதா

      நீக்கு
  20. நன்றாகத் தொகுத்து எழுதியிருக்கீங்க துளசிதரன் சார். ரொம்ப நாட்கள் கழித்து எழுதியிருக்கீங்க. மிக்க மகிழ்ச்சி.

    இதுவும் கடந்து போகும் என்றாலும் இந்த ஊரடங்கு காலம், சோஷியல் டிஸ்டன்ஸ் இவை எல்லாம் நம் மனதில் வரும் காலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    On a separate note, இந்தத் தடவை மாங்காய், பலாப்பழம், நுங்கு, அனேகமா மாம்பழம் பிசினஸ் இல்லை என்றே சொல்லலாம். எத்தனைபேர் இதனால் பாதிக்கப்பட்டார்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.
      ஆம் பல நாட்கள் கழித்து எழுதியுள்ளேன். காரணம் ஏற்கனவே சொல்லப்பட்டதுதான்.

      நிச்சயமாக இதற்குப் பின்னரும் அட்லீஸ்ட் கொஞ்ச மாதங்கள் மனதில் இருந்துவரும். எல்லோருக்கும் இருக்குமா என்று சொல்லத் தெரியவில்லை.

      மாங்காய், பலாப்பழம் பிஸினஸ் குறையலாம். பலர் பாதிக்கப்படலாம். கடைகளில் இங்கு மாங்காய் பலா கொஞ்சம் இருக்கிறது. எங்கள் வீட்டில் மாங்காய், பலாப்பழம் எல்லாம் நன்றாக விளைந்திருக்கிறது.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    நலமா? தங்கள் கட்டுரை படித்தேன். உண்மை நிலையை விவரித்து எழுதியுள்ளீர்கள். இப்போதுள்ள சூழலில். தாங்கள் கூறியபடி நம்பிக்கையுடன் இறைவனை வேண்டுவோம் இதைத் தவிர இப்போது நம்மால் செய்ய முடிவது வேறொன்றில்லை. ஏதோ உலகிலுள்ள அனைவரின் கஸ்டமான நேரங்களையும், அனைவரின் பிரார்த்தனைகளைக் கொண்டு "அவன்" சரி செய்வான் என நம்பிக்கையுடன் காத்திருப்போம். கூட்டுப் பிரார்த்தனைக்கு என்றுமே ஒரு சிறந்த பலன் நிச்சயம் உண்டு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலம் சகோதரி கமலா ஹரிஹரன். நீங்களும் நலம்தானே?

      நம்பிக்கை ஒன்றுதான் சகோதரி இப்போதைய நிலைக்கு உறுதுணை.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      துளசிதரன்

      நீக்கு
  22. எவ்வளவு கொடுமை இந்த நாட்கள்

    பதிலளிநீக்கு
  23. இதற்கு முன்னாலும் வைரஸ் தாக்கத்தால் பலகோடி உயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது அறிந்து வேதனை ... இதெல்லாம் இயற்கையின் திருவிளையாடல் என்று மனதை சமாதானப்படுத்திக்கொள்ள முடியவில்லை.... எந்த தேசத்தவராக இருந்தாலும் ஒரே மூச்சுக்காற்றை பகிர்ந்துகொண்டு நம்மோடு உறவுகளாக வாழ்ந்து கொண்டிருந்த அந்த இரண்டு லட்சம் உறவுகளின் இழப்பு நம் நெஞ்சை உடைந்துபோக செய்கிறது ... இயற்கை தந்த இந்த பேரிழப்பின் துயரமான வடு மட்டும் நம் நெஞ்சைவிட்டு எப்போதும் அகலப்போவதில்லை என்பது மட்டும் உண்மை.... இந்த தருணத்தில் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் கூட அதை பற்றி கவலைப்படாமல் மனித உயிர்களை காப்பற்ற போராடும் காவலர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், சமூக சேவகர்கள், துப்புரவு சேவகர்கள் அனைவரையும் தெய்வங்களாக வழிபட்டு நன்றி செலுத்துவோம்.... மனிதம் வெல்லும் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் அண்ணா. சில நாட்களுக்கு முன்பு தான் நினைத்தேன் துளசி அண்ணாவின் பதிவுகளைக் காணவில்லையே என்று. மகிழ்ச்சி அண்ணா.
    நல்ல கருத்துக்களைச் சொல்லி இருக்கிறீர்கள்.
    தானே எல்லாம் என்ற மனிதனின் ஆணவம் ஆட்டம் கண்டுவிட்டது. நம்பிக்கையுடன் இப்பொழுது கற்கும் நல்ல பாடங்களுடன் நல்லதொரு உலகம் விரைவில் நனவாகட்டும். இறைவனைப் பிரார்த்தித்து நம்பிக்கையுடன் இருப்போம். கப்பல் கரை சேரும், மீண்டும் பயணங்கள் தொடரும். நன்றி அண்ணா.

    ஹாய் கீதா 😊

    பதிலளிநீக்கு
  25. அன்புள்ள துளசிதரன் ஐயா! மீண்டும் தங்கள் வலைப்பதிவை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நானும் irregular ஆக எழுதிக்கொண்டிருந்தவன், நேற்று முதல் 'பொன்னித்தீவு' என்ற தொடர்கதையை எழுத ஆரம்பித்துவிட்டேன். படியுங்கள். தங்கள் மக்கட்செல்வங்கள் நலமா?

    பதிலளிநீக்கு
  26. நம்பிக்கையூட்டும் பதிவு
    நன்றிகள் தோழரே

    பதிலளிநீக்கு
  27. இயற்கைக்குக் கட்டுப்பட்டு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். உண்மைதான். அதை அவ்வப்போது அதுவே உணர்த்திவிடுகிறது. அருமையான கட்டுரை சகோ

    பதிலளிநீக்கு