மஞ்சளழகி! இது இவளுக்கு நான் வைத்த
பெயர். அவளது பெயர் பெருங்கொன்றை/இயல்வாகை/மஞ்சள் வாகை. அறிவியல் பெயர்: Peltophorum ferrugineum. ஆங்கிலத்தில் காப்பர்
பாட்
(Copperpod), யெலோ ஃபிளேம் (Yellow Flame)
இவள் மலர்ந்திருக்கும் காலத்தில் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. சென்னையில் நான் நடைப்பயிற்ச்சி செல்லும் பாதையில் மஞ்சளழகிக் கூட்டணியின் ஆட்சிதான். இவள் உதிர்க்கும் மஞ்சள் பூக்கள் தரையில் மஞ்சள் நிற கார்ப்பெட் விரித்தது போன்று அத்தனை கொள்ளை அழகுடன் இருக்கும். தூரத்திலிருந்தே தெரியும் அந்த அழகு மனதை அப்படியே கட்டிப் போட்டுவிடும். அதில் கால் வைக்காமல் பூக்கள் எதுவும் மிதிபடாமல் ஒதுங்கி நடப்பேன் அந்த அழகை ரசித்துக் கொண்டே. எடுத்த படங்கள் அந்த ரிப்பேர் ஆன கணினியின் ஹார்டிஸ்கில் என்பதால் பகிர முடியவில்லை. 😔
பங்களூர் வந்தால் ஆஹா வீட்டின் தொட்டடுத்து
முனையிலேயே மஞ்சளழகி. நான் மொட்டை மாடிக்குத் தினமும் செல்லும் போதும், ஊரடங்கு வேளையில்
மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்த போதும் இவளது மேற்பரப்பு அருகாமையில். நான் பேசிய கதைகள் ஏராளம். அணில்கள்
இவளது ஒவ்வொரு கிளைகளிலும் அணிவகுத்து ஓடி தாவி விளையாடுவதை ரசித்திருக்கிறேன். கிளைகளில்
ஏறி பூக்களையும், பட்டைகளையும் துருவி
துருவி உதிர்ப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
காக்கைகள், மைனாக்கள், கருங்குருவிகள்
எல்லாம் அவ்வப்போது வந்து ஓய்வு எடுப்பார்கள். குயில்கள் ஒளிந்திருந்து குக்கூ என்று
பாடிக் கொண்டிருப்பார்கள். சமீபத்தில் பெய்த முதல் மழை நாளன்று அடித்த பெருங்காற்றில்
தெரு முனையில் இருந்த கடையின் கூரைத் தகரங்கள் பறந்தன. அப்படி ஒரு காற்று 20 நிமிடம்
வீசியது. எங்கள் பகுதி உள்ளில் இருந்த மரங்களின் கிளைகள் இலைகள் எல்லாம் வீழ்ந்திருந்தன.
மஞ்சளழகி நல்ல பலமாக இருக்கிறாளே
விழமாட்டாள் என்றுதான் நினைத்தேன். இத்தனை நாள் சூரியனின் கதிர்கள் உள்ளே நுழைய முடியாத
அளவு நல்ல புஷ்டியாக பெருங்குடையாக விரிந்து நல்ல நிழல் கொடுத்து வந்த அப்படியான மஞ்சளழகி
அந்தப் பெருங்காற்றில் உடைந்து விழுந்தாள். அதைப் பார்த்ததும் மனசு ரொம்ப கஷ்டமாகிப் போச்சு.
தெருவின் வாயிலை அடைத்து, மின் கம்பிளைகளைத்
தள்ளிக் கொண்டு விழுந்து இருந்ததால் அந்த உடைந்த கிளையை வெட்டிட, மின்சார வாரிய க்ரேன் வந்து அதில்
ஆள் ஏறி கிளையை வெட்டுவதைப் பார்த்து மனம் வருந்தியது என்றாலும் இயற்கையே இயற்கையை வீழித்தியதால்
நாம் யாரையும் குற்றம் சொல்ல முடியாதே!!!!!!!! அவளை மீண்டும் புஷ்டியாகப் பார்த்திடும் நாளைக்
காண ஆவலுடன் காத்திருக்கிறேன். இப்போது அந்த இடம் முழுவதும் சுத்தமாக நிழலே இல்லை.
இதோ படத்துல பாருங்க. எத்தனை அழகாக
இருந்தாள் என்று. "எப்படி இருந்த நான் இப்படி ஆகிப் போனேனே. ஆனால் பாருங்கள் என் கைகள்
தானே போயிருக்கு, நான் மீண்டும் துளிர்த்து புஷ்டியாவேன். இவ என்னைப் படமெடுத்தும்
போடுவா பாருங்க."
சொன்னால் நம்புவீர்களா? கடுகு அவர்கள் மறைந்த தினத்திற்கு 4,5 நாட்கள் முன்னர்தான் கல்கியிலிருந்து என் மாமனார் தொகுத்து வைத்திருந்த புஷ்பா தங்கதுரை அவர்களின் கடலுக்குள் ஜூலி (80 களில் கல்கியில்) பைண்டிங்கை எடுத்துப் பார்த்த போது அதில் இடையில் கடுகு பதில்கள் என்று இருந்ததும் ஆஹா இவர் நாம் வலையில் வாசிக்கிறோமே அந்த கடுகு அகஸ்தியன் அவர்கள் தானோ என்று ஒரு சந்தேகத்துடனேயே அவர் அளித்த பதில்கள் ஸ்வாரஸியாமாக இருந்தது. இங்கு பகிர நினைத்துக் குறித்து ஃபோட்டோவும் எடுத்து வைத்துக் கொண்டேன். அடுத்த சில தினங்களில் அவரது மறைவு பற்றி எபி வாட்சப் க்ரூப்பில் ஸ்ரீராம் போட்டதும் அந்த டவுட்டு எழுந்து க்ரூப்பில் கேட்டேன் 80 களில் கல்கியில் கடுகு பதில்கள் எழுதிய அவர்தானா இவர் என்று. ரிஷபன் அண்ணா அவரேதான் என்றார்.
இதோ நான் ரசித்த கடுகு பதில்கள். இன்னும் சில அடுத்த பதிவில்
ஜெயலலிதா - மறைந்த முதல்வர் ஜெஜெ?
இந்தக் கதை வெளி வந்ததா?
இன்னும் ஒரு பகுதி சேர்க்கலாம் என்று
எழுதினேன். ஆனால் கரை உடைத்துக் கொண்டு பாய்ந்து நீண்டு விடும் அபாயம்
இருந்ததால் அடுத்த பதிவிற்குச் சேமித்து வைத்துவிட்டேன்!!
Me first?
பதிலளிநீக்குயெஸ்ஸு மதுரை...
நீக்குகீதா
//
நீக்குAvargal Unmaigal8 ஜூன், 2020 ’அன்று’ முற்பகல் 5:20
Me first?///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுக்கு மட்டும் குறைவில்லையாக்கும் ம்ஹூம்ம் :)) ஹா ஹா ஹா
மஞ்சளழகி... நல்ல பெயர். அழகான இந்த மலர்களின் ஒரிஜினல் பேயரையும் சொல்லி இருக்கலாம். கொலாஜ் தவிர தனியாக ஒரு படத்தையும் இணைத்திருக்கலாமோ... சீக்கிரமே வளர்ந்து மலர்ந்து மனம் மயக்கட்டும்.
பதிலளிநீக்குசொல்லி இருக்காங்களே, பெருங்கொன்றை. இது மஞ்சள் கொன்றை. சிவப்புக் கொன்றையும் உண்டு. வாகை மரம் எனச் சொல்லுவோரும் உண்டு. ஆனால் எனக்கு இது கொன்றை தான், அம்பத்தூர் வீட்டில் கொல்லையில் இருந்தது.
நீக்குஸ்ரீராம் மிக்க நன்றி.
நீக்குசொல்லியிருக்கேனே...கீதாக்காவும் சொல்லிருக்காங்க பாருங்க...இப்பக் கூட இணைக்கிறேன் படத்தை
கீதா
ஸ்ரீராம் படம் ஒன்று தனியாகச் சேர்த்திருக்கிறேன் பாருங்க
நீக்குகீதா
கீதாக்கா கொன்றை சரக் கொன்றை விஷுவின் போது சாமி முன் வைப்பதற்குப் பயன்படுத்துவோம். இதுவும் அதன் குடும்பத்தைச் சேர்ந்ததுதான்..
நீக்குமிக்க நன்றி கீதாக்கா
கீதா
தனியான படம் பார்த்தேன்.
நீக்குதனியான படம் பார்த்தேன். //
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
கடுகு பதில்கள் சுவாரஸ்யம். எனக்கும் பார்த்த நினைவு இருக்கிறது. ஜெயலலிதா குமுதத்தில்தான் முதலில் கதை எழுதினர் என்று நினைவு. சில கதைகள் எழுதி இருந்த நினைவு.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் கடுகு பதில்கள் இன்னும் கொஞ்சம் எடுத்து வைத்திருக்கிறேன். அடுத்ததில் பகிர்கிறேன். இந்த ஒரு தொடர் பைண்டிங்கில் மட்டும் தான் பார்த்த நினைவு வேறு பைண்டிங்கிலும் இருக்கா என்று பார்க்க வேண்டும்.
நீக்குஓ அப்ப இது ஜெஜெ இல்லையா? இது கல்கியிலிருந்து ஸ்ரீராம். அப்போ வேறு எழுத்தாளர் ஜெயலலிதா எனும் பெயரில் இருந்தாங்களோ?
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
அதே ஜெயலலிதாதான். அப்போ அங்கேயும் இங்கயுமா கதை எழுதினாங்க...
நீக்குஅதே ஜெயலலிதாதான். அப்போ அங்கேயும் இங்கயுமா கதை எழுதினாங்க...//
நீக்குஓ ஒகே மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
புது வரவு செல்லத்துக்கு வாழ்த்துகள். அழகாய் இருக்கிறது. விஷமங்களைப் பார்க்க ஆவல். குறைந்த நாட்களே எங்களுடன் பழகிய குட்டிச் செல்லப் பூனாச்சுவின் நினைவு வருகிறது.
பதிலளிநீக்குசெம ஸ்வீட் கிட்டி அது ஸ்ரீராம்...நான் சொல்லியிருக்கிறேன் மகனிடம் படங்கள் விஷமங்கள் எல்லாம் சொல்லு வீடியோ எடுத்து அனுப்பு முடிந்தால் என்று ஆனால் அவனுக்கு நேரமே இல்லை. படிப்பு, ரிசர்ச் பேப்பர் ப்ரிப்பரேஷன், க்ளினிக், சர்ஜரி கேஸ் ரெக்கார்ட் பதிதல் என்று போகிறது. இன்று நம் காலை அவர்கள் இரவு இல்லையா அப்ப சாம்பார் அடுத்த இரு நாள்களுக்கு என்று செய்து கொண்டிருந்த போது இந்த செபி அவன் தோளில் உட்கார்ந்து கொண்டு சாம்பார் செய்வதைப் பார்த்துக்க் கொண்டே இருந்ததாம். நான் பேசிய போது அவனும் பேசியதும் செபியும் மியாவ் மியாவ் என்று ஏதேதோ சொல்லிக் கொண்டே இருந்தது...
நீக்குஆமாம் எனக்கும் பூனாச்சு நினைவுக்கு வந்தது. செம வாண்டு இல்லை அது உங்கள் மடியில் எல்லாம் அமர்ந்து...பாஸின் மடியிலேயே அமர்ந்து கொண்டு என்று...பாவம் பூனாச்சு
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
பதிலளிநீக்குகடுகு மறைந்துவிட்டார் என்பதை இப்போதுதான் அறிகின்றேன்... நல்ல நகைச்சுவையாக எழுதுபவர்....அவர் ஒரு தடவை எனக்கு மெயில் அனுப்பி இருந்தார் அதில் நாம் சந்திக்கலாமா என்று.... அந்த மெயிலை காலம் கடந்துதான் பார்த்தேன் ஆனால் சரி என்று சொல்லி பதில் அனுப்பவில்லை... காரணம் வயதானவர் நேரில் சந்தித்தால் பேசிக் கொன்றுவிடுவாரோ என்ற பயம்தான்....அவரின் குழந்தைகளில் யாரோ ஒருவர் நீயூஜெர்ஸியில்தான் வசிக்கிறார் என நினைக்கிறேன்
அவர் ஆத்மா சந்தியடையட்டும்
ஓஹோ உங்களுக்கு மெயில் எல்லாம் அனுப்பியிருக்கிறாரா? நீங்கள் அவரை சந்தித்திருக்கலாம்.
நீக்குநல்ல மனிதர் என்று பலரும் அஞ்சலிகளில் சொல்லியிருந்தாங்க.
மிக்க நன்றி மதுரை
கீதா
//மஞ்சளழகி! இது இவளுக்கு நான் வைத்த பெயர். அவளது பெயர் பெருங்கொன்றை/இயல்வாகை/மஞ்சள் வாகை. அறிவியல் பெயர்: Peltophorum ferrugineum. ஆங்கிலத்தில் காப்பர் பாட் (Copperpod), யெலோ ஃபிளேம் (Yellow Flame)//
பதிலளிநீக்குஎங்கள் வளாகத்தில் இருக்கிறாள் மஞ்சளகி. இதன் பின்னனியில் புறா படத்தைப்பார்த்த அதிரா இதன் பேரை கேட்டார் . கொன்றைவகையை சேர்ந்தது என்றேன். இப்போது அறிவியல் பேரை தெரிந்து கொள்வார்.
இங்கு மழை பெய்தால் அந்த மரத்தடியில் ஒரு தற்காலிக நீச்சல் குளத்தை உருவாக்கிவிடும், அப்போது இந்த மரம் கொன்றை மலர்களை அந்த குளத்தில் உதிர்க்கும் தன் மகிழ்ச்சியை தெரிவிக்க.
அதில் பறவைகள் அமர்ந்து இருப்பதை நிறைய முறை பகிர்ந்து இருக்கிறேன்.
ஓ கோமதிக்கா புறா படத்தைப் பார்த்தப்ப எனக்கும் தெரிந்தது ஆனால் அதிரா கேட்டதைப் பார்க்கவில்லை நான். பார்த்திருந்தால் சொல்லியிருப்பேன்..ஆமாம் கொன்றை வகைதான்.
நீக்கு//இங்கு மழை பெய்தால் அந்த மரத்தடியில் ஒரு தற்காலிக நீச்சல் குளத்தை உருவாக்கிவிடும், அப்போது இந்த மரம் கொன்றை மலர்களை அந்த குளத்தில் உதிர்க்கும் தன் மகிழ்ச்சியை தெரிவிக்க.//
நல்ல ரசனை கோமதிக்கா....
ஆமாம் பறவைகள் நீங்கள் பகிர்ந்திருக்கீங்க...நினைவு வருது
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
ஆஆஆ இதுவும் அதுவும் ஒன்றோ கோமதி அக்கா...
நீக்குநிழல் பரப்பி எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொடுத்த மரம் விழுந்து விட்டால் அது மனதை கஷ்டப்படுத்தும். மீண்டும் துளிர்த்து மகிழ்ச்சி அலைகளை பரப்பட்டும்.
பதிலளிநீக்குகடுகு சாரின் பதில்களை படித்து ரசித்தேன் பகிர்வுக்கு நன்றி.
ஜெஸி, மல்டி, டெய்சி பிள்ளைக்கு புதிய தம்பி வந்து இருப்பது மகிழ்ச்சி.
//எல்லாரும் தம்பிய நல்லா பார்த்துக்கோங்க! சொல்லிவிட்டேன். //
எல்லோரும் நல்லா பார்த்துப்பாங்க .
செபியின் குறும்புகள் பற்றி படங்கள் வரபோவது மகிழ்ச்சி. செபிக்கு வாழ்த்துக்கள்.
நிழல் பரப்பி எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொடுத்த மரம் விழுந்து விட்டால் அது மனதை கஷ்டப்படுத்தும். மீண்டும் துளிர்த்து மகிழ்ச்சி அலைகளை பரப்பட்டும்.//
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா வாழ்த்துகளுக்கு
//ஜெஸி, மல்டி, டெய்சி பிள்ளைக்கு புதிய தம்பி வந்து இருப்பது மகிழ்ச்சி.
//எல்லாரும் தம்பிய நல்லா பார்த்துக்கோங்க! சொல்லிவிட்டேன். //
எல்லோரும் நல்லா பார்த்துப்பாங்க .//
ஹா ஹா ஹா ஹா ஆமாம்
மிக்க நன்றி கோமதிக்கா
செபியின் குறும்புகள் பற்றி படங்கள் வரபோவது மகிழ்ச்சி. செபிக்கு வாழ்த்துக்கள்.//
நான் வரும் என்று நினைக்கிறேன் கோமதிக்கா.. தெரியலை ம்கன் நேரம் கிடைத்து எடுத்து அனுப்ப வேண்டுமே...பார்ப்போம்
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
மஞ்சள்பூக்களின் அழகு தனிரகமே...
பதிலளிநீக்குமரம் விரைவில் தளைத்து வளரட்டும்.
புது வரவுக்கு எமது வாழ்த்துகளும்...
மிக்க நன்றி கில்லர்ஜி வாழ்த்துகளுக்கும் கருத்திற்கும்
நீக்குகீதா
மஞ்சளழகி...ரசனையான பெயர்.
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா கருத்திற்கு
நீக்குகீதா
புது வரவிற்கு அன்பு வாழ்த்துகள்
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தை சகோ வாழ்த்திற்கு
நீக்குகீதா
வணக்கம் மேடம். நானும் எங்கள் வீட்டில் வளர்த்த செல்ல நாய் குட்டியின் நினைவு வந்துவிட்டது.
பதிலளிநீக்குஓ நவீன் உங்கள் வீட்டிலும் பைரவ்க் குட்டி இருந்ததா!! சூப்பர் அதைப் பற்றியும் எழுதுங்க உங்க தளத்துல
நீக்குமிக்க நன்றி நவீன்
கீதா
மஞ்சளழகி... என்றதும் எனக்கு கடல்புறா நாயகி நியாபகம் வந்தது. கடும் காற்று இப்படித்தான் சிலசமயம் நம் மகிழ்ச்சியை அள்ளிக் கொண்டு சென்றுவிடும். கடுகு சார் கேள்வி பதில்கள் இன்றும் பொருத்தமாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது.
பதிலளிநீக்குவாங்க அரவிந்த் ஓஹோ கடல்புறா நாயகி நினைவா...சாண்டில்யன் கதை..
நீக்குகடும் காற்று ரொம்பப் பிடிக்கும் அரவிந் ஆனால் இப்படிச் சேதம் விளையும் போதுதான் நீங்கள் சொல்லுவது போல்...
ஆமாம் கடுகு பதில்கள் ரொம்பவே ஸ்வாரஸ்யம். நீங்கள் அவர் தளம் சென்று வாசித்தால் நிறைய நகைச்சுவைக் கதைகள் வாசிக்கலாம்..
மிக்க நன்றி அரவிந்த்
கீதா
மஞ்சளழகி பெயரும் மனதை கவர்ந்தது...
பதிலளிநீக்குகடுகு அவர்களின் பதில்களும் ரசிக்கத்தக்கவை...
செபி குட்டிப் பையன் செம க்யூட்...!
மஞ்சளழகி பெயரும் மனதை கவர்ந்தது...
நீக்குகடுகு அவர்களின் பதில்களும் ரசிக்கத்தக்கவை...
செபி குட்டிப் பையன் செம க்யூட்...!//
செபி ரொம்ப அழகா இருக்கான்ல..செம விளையாட்டு ...
மிக்க நன்றி டிடி ரசித்தமைக்கு
கீதா
கொன்றை மரம் விரைவில் வளர்ந்து நிழல் பரப்பிப் பூக்களைக்கம்பளம் போல் உதிர்க்கப் பிரார்த்தனைகள். செபி அழகோ அழகு. செபிக்குக் கணினியில் உங்கள் கண்ணழகியைப் பார்க்கத் தெரிகிறது. ஆனால் கண்ணழகிக்குத் தெரியலையா? எங்க பொண்ணு வளர்க்கும் ஷேனிடம் பெண் காமிராவைக் காட்டி, எங்களைக் காட்டிச் சொல்லுவாள். நாங்களும் குரல் கொடுப்போம். அது நன்றாகப் பார்க்கும். குரல் கொடுக்கும். நாங்கள் படுக்கும் அறைக்குச் சென்று பார்க்கும். தேடும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி கீதாக்கா கொன்றை மீண்டும் துளிர்த்துப் பூப்பதற்கு பிரார்த்தனைகளுக்கு..
நீக்குஆஹா உங்கள் ஷேன் பார்க்கிறதா!! மகனும் சொன்னான் சில செல்லங்கள் பார்க்காதாம்...அது பழக்கமும் கூட என்று. ஆனால் பூஸார் பொதுவாக எல்லாமே பார்ப்பார்களாம். பல பைரவ/விகள் பார்க்கும் டி வி கூட பார்க்கும் வீடியோ பார்க்கும் என்றும் சொன்னான். கண்ணழகி முதலில் எல்ல்லாம் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்ப்பாள் அதுவும் அவன் சாமானை எல்லாம் பார்த்துவிட்டு வருவாள். இப்போ வயதாகிவிட்டதாலோ என்னவோ தூக்கம் அதிகமாகி இருக்கு..ஆனால் ட்யூட்டி பார்ப்பதில் ஒன்று குறைச்சலில்லை. ராத்திரி ட்யூட்டி நன்றாகவே பார்க்கிறாள். வம்பு எல்லாம் உண்டு..
ஷேன் பார்ப்பது ஸ்வீட்!!
மிக்க நன்றி கீதாக்கா
கீதா
மஞ்சளழகி... இதோ தில்லியில் எங்கள் வீட்டு அருகிலும் மஞ்சளழகி உண்டு. நேற்று பெய்த மழையில் தெருவுங்கும் மஞ்சள் பூ மெத்தை!
பதிலளிநீக்குகடுகு பதில்கள் ஸ்வாரஸ்யம்.
செபி - ஆஹா.... அழகு.
தில்லியில் எங்கள் வீட்டு அருகிலும் மஞ்சளழகி உண்டு. நேற்று பெய்த மழையில் தெருவுங்கும் மஞ்சள் பூ மெத்தை!//
நீக்குஆஹா பார்க்கவே மனசு சந்தோஷப்படுமே..
கடுகு பதில்கள் ஸ்வாரஸ்யம்.
செபி - ஆஹா.... அழகு.//
மிக்க நன்றி வெங்கட்ஜி
கீதா
மஞ்சள் அழகி துளிர்து வளர்ந்து பூத்து நிழல் தரட்டும்.
பதிலளிநீக்குசெபிக்கு நல்வரவு . இன்னும் எத்தனை தம்பிகள் வரப்போகிறார்களோ :) அனைவரையும் வரவேற்போம்.
வாங்க மாதேவி!! ஹா ஹா ஹா இன்னும் பல தம்பிகள் வருவாங்க ஏற்கனவே ஒரு தங்கை வந்தாச்சு க்ளோயி செபிக்கு அக்கா....டெய்சி, மல்டி ஜெஸ்ஸிக்கு தங்கை!!!
நீக்குமிக்க நன்றி மாதேவி கருத்திற்கு மஞ்சளழகி பூக்கட்டும் என்று நல்வார்த்தை சொன்னதற்கும்
கீதா
அச்சச்சோ என்ன கொடுமை, மஞ்சள் அழகி இப்பூடி விழுந்துவிட்டதே.. ஆனாலும் துளிர்த்து மீண்டும் வரும்தானே, மரத்தோடு சரியவில்லைத்தானே கீதா.
பதிலளிநீக்குஇப்படியான படங்களை கொலாஜ் இல் போடாமல் தனியாகப் போட்டால்தான் பார்க்க முடியும்...
வாங்க பிஞ்சு வானவல்லி!! ஆமாம் மரம் வேரோடு சாயவில்லை அந்தக் கடைசிப் படத்தில் பார்த்தால் தெரியும் பாருங்க ஒரு கிளை மட்டும் நீண்டு இடப்புறம் இருக்குது.
நீக்குதுளிர்த்துவிடும் மீண்டும் கிளைகள் வளரும் என்ற நம்பிக்கை உள்ளது.
தனியாகப் போடலாம் என்று நினைத்தேன் அதிரா..ஆனால் பதிவு ரொம்ப நீளமாகிடுமோ என்று போடாமல் விட்டேன். இனி தனியாகவே போடுகிறேன்...ஏற்கனவே என் பதிவுகள் பெரிசா இருக்கும்னு ஹா ஹா ஹா ஹா ஹா
மிக்க நன்றி அதிரா
கீதா
//சொன்னால் நம்புவீர்களா? கடுகு அவர்கள் மறைந்த தினத்திற்கு 4,5 நாட்கள் முன்னர்தான்//
பதிலளிநீக்குசில சமயங்கள் இப்படித்தான் நடக்கிறது கீதா, ஏதோ ஒரு உள்ளுணர்வால் நாம் அவர்களை நினைப்போம், பார்த்தால் அவர்கள் பற்றிய ஒரு செய்தியோ அல்லது அவர்களிடமிருந்து ஃபோன் ஓ, மெசேஜ் ஓ ஏதும் வரும்...
ஏதோ ஒரு உள்ளுணர்வால் நாம் அவர்களை நினைப்போம், பார்த்தால் அவர்கள் பற்றிய ஒரு செய்தியோ அல்லது அவர்களிடமிருந்து ஃபோன் ஓ, மெசேஜ் ஓ ஏதும் வரும்...//
நீக்குஆமாம் ஆமாம் அதிரா அதே...சப்போஸ் நமக்குத் நட்பு அல்லது தெரிந்தவர் என்றால் உடனே சொல்லிடுவேன் ஆயுஸ் நூறு என்று!!!! ஹா ஹா ஹா
மிக்க நன்றி அதிரா
கீதா
செபி ...ஆஹா மகன் வளர்க்கிறாரா? உங்கள் வீட்டிலதானே இப்போ மகன் இருக்கிறார்.. எனக்கு எழுத்துப் புரியவில்லை..
பதிலளிநீக்குசெபி அழகான குட்டிப் பையன்... நல்ல சுட்டியாகவும் தெரியுது, 2,3 நாட்களில் கண்ணழகியோடு ஃபிரெண்ட் ஆகிடுவார் பாருங்கோ.. எங்களுக்கும் இன்னொரு பேபி வாங்கி வளர்க்க ஆசை.. ஆனா ஹொலிடே போவதை நினைச்சுப் பயத்தில வாங்க நினைப்பதில்லை.
அதிரா மகன் இங்கில்லை. நம் வீடு என்று சொன்னது அவன் அமெரிக்காவில் இருந்தாலும் இங்கிருந்தாலும் நம் வீடுதானே என்ற பொருளில் சொன்னேன்...அங்குதான் வளர்க்கிறார்.
நீக்குஇங்கிருந்தா வளர்த்திருக்க மாட்டோம் அதிரா. கண்ணழகி கொஞ்சம் ஆல்ஃபா. ஸோ வேறு எதுவும் வீட்டில் வளர்க்க இயலாது.
ஆனா ஹொலிடே போவதை நினைச்சுப் பயத்தில வாங்க நினைப்பதில்லை.//
ஆமாம் ரொம்ப சரியா சொன்னீங்க. அது கடினம் தான். மகனோடு இருந்தால் பிரச்சனை இல்லை.
மிக்க நன்றி அதிரா
கீதா
எமக்கும் மிகவும் பிடித்த மலர்...சாலையோரம் பார்க்கையில் மங்களகரமான வரவேற்பாளராக அதை நான் கருதுவதுண்டு...கடுகு சாரின் மறைவு அவர் எழுத்தை தொடர்ந்து படித்து வருபவனாக இருப்பதால் அதிகம் பாதிக்கவே செய்கிறது..படங்கள் மிக அருமை..
பதிலளிநீக்குசாலையோரம் பார்க்கையில் மங்களகரமான வரவேற்பாளராக அதை நான் கருதுவதுண்டு..//
நீக்குநல்ல விஷயம். நிஜமாகவே இதைப் பார்க்கும் போது அத்தனை சந்தோஷம் வரும், இது மட்டுமல்ல இதைப் போன்ற அடர்த்தியாகப் பூக்கும் மரங்கள்...செடிகள் எல்லாமே.
மிக்க நன்றி ரமணி சகோ
கீதா
மஞ்சளழகி! சாண்டில்யனின் ' கடல்புறா' நாவலின் ஒரு கதாநாயகி மஞ்சளழகி! அந்த நாவலைப்படித்ததன் தாக்கமா?
பதிலளிநீக்குஇனி கொன்றைப்பூவைப்பார்க்கும்போது நீங்கள் வைத்த பெயர் தான் ஞாபகம் வரும்!
புதிய வரவிற்கு வாழ்த்துக்கள்!
சாண்டில்யனின் ' கடல்புறா' நாவலின் ஒரு கதாநாயகி மஞ்சளழகி! அந்த நாவலைப்படித்ததன் தாக்கமா?//
நீக்குஹா ஹா ஹா இல்லை மனோ அக்கா சும்மா இப்படி வெள்ளை என்றால் வெள்ளையழகி, ரோஸழகி என்று சும்மா எல்லாத்துக்கும் ஒரு அழகி சேர்ப்பது என் வழக்கம் ஹா ஹா ஹா
அப்படித்தான்.
இனி கொன்றைப்பூவைப்பார்க்கும்போது நீங்கள் வைத்த பெயர் தான் ஞாபகம் வரும்!//
ஹா ஹா ஹா ஹை அப்ப இவள் என்னை நினைவுபடுத்துவாள் இல்லையா !!!!!!
மிக்க நன்றி மனோ அக்கா
ம்ஹூம்ம்ம் நெல்லைத்தமிழன் ஃபுரொபிஸர் எங்கே போயிட்டார்ர்.. இங்கின பலபேர் .. கீதா உட்பட.. டமில்ப்பிழை விட்டிருக்கினம்.. அழகியா? அளகியா எது சரி? அழகிதானே சரி.. கீதாவும் அளகி.. மஞ்சளகி என.. என எழுதியிருக்கிறா கர்ர்:)) இப்போ புரிஞ்சுக்கோங்க... அதிராவுக்குத் தமிழில் டி ஆக்கும் ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா அதிரா சிரிச்சு முடிலப்பா...
நீக்குஹலோ டமில்ல டி இங்க கொஞ்சம் வாங்க!! நான் எங்கு மஞ்சளகி நு எழுதியிருக்கிறேன்...மஞ்சள் + அழகி = மஞ்சளழகி டமில்ல டி!!!
கரீக்டதான் எழுதியிருக்கிறேனாக்கும்!!! ஹா ஹா ஹா ஹா
தப்பு விட்டிருந்தா முதல்ல ஸ்ரீராம் வந்தாரே அவர் சொல்லியிருப்பாரே என்று பார்த்தேன்...
கீதா
மஞ்சள் அழகி தரையில் கொட்டிக்கிடக்கும் அழகே அழகு. அதன்மீது கால் வைக்க யோசிப்பேன்.. மரத்தில் இருப்பதைவிட தரையில் இருப்பதுதான் அழகா இருக்குறதா எனக்கு தோணும்
பதிலளிநீக்குஆமாம் ராஜி....தரையில் அப்படியே கார்ப்பெட் போட்டது போல..நானும் அதன் மீது கால் வைக்காமல்தான் நடப்பேன். //மரத்தில் இருப்பதைவிட தரையில் இருப்பதுதான் அழகா இருக்குறதா எனக்கு தோணும்//
நீக்குஹைஃபைவ் ராஜி அதே. ஆனால் சரக்கொன்றை மரத்தில் தான் செம அழகா தொங்கும் குலுங்கும்!!! காற்றில் அசையும் போது செமையா இருக்கும்..
மிக்க நன்றி ராஜி
கீதா
கொன்றை மரம் நல்லா இருக்கு. உங்க கொலாஜ் அட்டஹாசம் தாங்கலை ஹா ஹா
பதிலளிநீக்குகடுகு பதில்கள் நல்லா இருக்கு. நீங்களாவது ஒரு பைண்ட் பண்ணின (பழைய குமுதம் தொடர்கதை) புத்தகம் ஒண்ணு தாங்க.
உங்க கொலாஜ் அட்டஹாசம் தாங்கலை ஹா ஹா//
நீக்குஹா ஹா ஹா ஹா ஹாஹா ஹையோ நெல்லை சிரிச்சு முடிலப்பா..
நீங்களாவது ஒரு பைண்ட் பண்ணின (பழைய குமுதம் தொடர்கதை) புத்தகம் ஒண்ணு தாங்க.//
ஹா ஹா ஹா ஹா மாமானார் தொகுப்பு சிலதே இருக்கு அதுவும் கல்கி அப்புறம் வேற ஒன்று அது கொஞ்சம் சின்ன சைசா இருக்கு அது குமுதம் இல்லை. ஏன்னா மாமனார் குமுதம் வாங்கியதில்லை. கல்கி, துக்ளக்
நான் இப்ப கடலுக்குள் ஜூலி வாசிச்சிட்டுருக்கேன் புஷ்பா தங்கதுரை எழுதியது.
மிக்க நன்றி நெல்லை.
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. வெகு நாள் கழித்து உங்கள் பதிவில் பசுமை பொங்கும் மஞ்சளழகி பற்றியதை பார்க்கும் போது எனக்குள்ளும் சந்தோஷ பூ பூத்தது. மஞ்சளழகி மரம் படம் அழகு. அது காற்றுக்கு கீழே விழுந்ததை நினைக்கும் போது மனம் வலித்தது. அதற்கும் எப்படி வலித்திருக்கும் என நினைக்கையில் மனம் கஸ்டமாக இருந்தது விரைவில் இங்குள்ள பசுமைக்கு மடமடவென வளர்ந்து செழிக்க என் பிரார்த்தனைகள். இனி வருவது மழைகாலந்தானே...! துளிர் கண்டு விடும்.
மறைந்த திறமையான எழுத்தாளர் கடுகு அவர்களின் கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யமாக உள்ளது. நானும் அகஸ்தியன் என்ற கடுகு என்பவர் எழுதும் நகைச்சுவை கதைகளை முன்பெல்லாம் வார/மாத பத்திரிக்கைகளில் ஒரளவு படித்துள்ளேனே தவிர இங்கு வந்த பின் அவர் வலைத்தளம் சென்று வாசித்ததில்லை. அவர் மறைவுக்குப் பின்தான் அவர் வலைத்தளம் அறிந்து சென்று பார்த்தேன்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களும் நிறைய கதைகள் எழுதியுள்ளார். நானும் இவரின் கதைகளை படித்ததாக நினைவு. படித்த கதையின் பெயர்கள் நினைவில்லை. ஆனால் நன்றாக எழுதுவார்.
உங்கள் வீட்டு புது வரவுக்கு என் வாழ்த்துகள். உங்கள் செல்லும் அழகு. இவரும் மிக அழகாக உள்ளார். இருவரும் கூடிய விரைவில் நண்பர்கள் ஆகி விடுவார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனி வருவது மழைகாலந்தானே...! துளிர் கண்டு விடும்.//
நீக்குஆமாம் கமலா அக்கா வளர்ந்து விடும்.
நானும் அகஸ்தியன் என்ற கடுகு என்பவர் எழுதும் நகைச்சுவை கதைகளை முன்பெல்லாம் வார/மாத பத்திரிக்கைகளில் ஒரளவு படித்துள்ளேனே தவிர இங்கு வந்த பின் அவர் வலைத்தளம் சென்று வாசித்ததில்லை. //
ஓ வாசித்திருக்கீங்களா. அவர் வலைத்தளம் இப்ப கூட சென்று வாசிக்கலாம் கமலா அக்கா நீங்க. பார்த்துவிட்டீர்கள் தானே இனி அங்கு வாசிக்கலாம் நீங்கள்.
//மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களும் நிறைய கதைகள் எழுதியுள்ளார். நானும் இவரின் கதைகளை படித்ததாக நினைவு. படித்த கதையின் பெயர்கள் நினைவில்லை. ஆனால் நன்றாக எழுதுவார்.//
ஓ! நல்ல தகவல். நான் வாசித்ததில்லை கமலா அக்கா. எனக்கு வாசிப்பு அதிகம் இல்லை கமலாக்கா. இப்பத்தான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.
புது வரவிற்கு வாழ்த்துகளுக்கு நன்றி ஆனால் அவன் இங்கில்லை. மகனுடன் இருக்கிறது.
மிக்க நன்றி கமலா அக்கா
கீதா
இந்த பூவை நாங்கள் வாகை, கொன்றை என்போம். கீழே கொட்டியிருக்கும் போது பார்க்க மிகவும் அழகா இருக்கும்.
பதிலளிநீக்குஇயற்கையின் சீற்றத்த அதனையும் பாதித்துவிட்டது. கண்டிப்பாக மறுபடியும் துளிரக்கும் பாருங்கோ.
சுவாரஸ்யமாக கடுகு பதில்கள் இருக்கின்றன.
வாவ்.அழகா இருக்காரே செபிகுட்டி. எனக்கும் மகனாருக்கும் வளர்க்க ஆசை. பிஞ்சு சொன்ன மாதிரி ஹொலிடே டைம் கஷ்டம்.
வாங்க அம்மு!
நீக்குஇது கொன்றை இனம் தான். ஆமாம் கொட்டிக் கிடப்பது அத்தனை அழகா இருக்கும்.
துளிர்க்கும் இயற்கையாக நடந்ததுதானே.
செல்லங்கள் வளர்க்க வேண்டும் என்றால் ஊருக்குப் போகும் போது அவர்களைக் கவனிக்க ஆள் வேண்டும். ஆம்
மிக்க நன்றி அம்மு
கீதா
ரசனைகலின் குவியல்! அழகான பதிவு.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஃபெர்னாண்டோ வருகைக்கும் கருத்திற்கும் ரசித்ததற்கும்
நீக்குகீதா
இந்த மஞ்சள் பூ மரங்கள் இங்க ஏரியிலும் அதிகம் ...
பதிலளிநீக்குகப்பன் பார்க்கிலும் நிறைய இருக்கும் ...
ஆமா அக்கா அந்த வாரம் நல்ல காத்து ...மழை, வீடியோ எடுத்து இருக்கேன் அடுத்த பதிவுகளில் பகிரணும் ...
செபி so cute
ஆமாம் அனு இங்கு பங்களூரில் நிறைய பார்க்கிறேன். கப்பன் பார்க்கிலும் நிறைய உண்டு பார்த்திருக்கிறேன். செமையா இருக்கும் பூ தரையில் இருக்கப்ப
நீக்குஓ நீங்க படம் எடுத்திருக்கீங்களா பகிருங்க
கீதா
மிக்க நன்றி அனு!
நீக்குகீதா
அஆவ் மஞ்சளழகி மீண்டும் பொலிவா வருவா கீதா ..உங்க மகனின் செல்லம் செபி கியூட் .ஸ்வீட்ட்டா பார்க்கிறான் செல்லம் :)கடுகு ஸாரின் பதில்கள் சேமிப்பு அருமை பத்திரமா வைங்க
பதிலளிநீக்குஆம் மீண்டும் துளிர்ப்பாள்..முழுவதும் சாயவில்லை நல்லகாலம்..
நீக்குசெபி ஹையோ ஏஞ்சல் செமையா இருக்கான்...வீடியோவில் பார்த்தேன் மகனின் தோளிலேதான் இருக்கான்.
ஆமாம் கண்டிப்பா பத்திரமா வைப்பேன் ஏஞ்சல்
மிக்க நன்றி ஏஞ்சல் உங்கள் பிஸி ஷெட்யூலுக்கு நடுல வந்து கருத்து சொன்னதுக்கு
கீதா
நான் டில்லியில் இருந்த மூன்றாண்டு காலத்தில் 'பாரதி 200' என்ற அமைப்புடன் கடுகு- அகஸ்தியன் என்பவர் தொடர்பில் இருந்த தகவல் சில ஆண்டுகள் தாமதமாக வே எனக்குத் தெரியவந்தது. ஆனால் அந்த அமைப்பு நடத்திய சுமார் இருபது நிகழ்வுகளில் ஒன்றில் கூட இவரைப் பார்க்க முடிந்ததில்லை. அதேசமயம் டில்லியில் அல்லது காஷ்மீரில் சினிமா ஷூட்டிங் நடத்த விரும்பும் நிறுவனங்களுக்கு மிகவும் சிறப்பான ஏற்பாடுகளை இவர் செய்து தந்ததாக பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். தமிழில் கணவன்-மனைவியைப் பாத்திரமாகக் கொண்ட நகைச்சுவை கதைகளின் முன்னோடி 'நாடோடி' ஆவார். அவரைப் பின்பற்றி கடுகு அவர்களும் அதே genre இல் நகைச்சுவை கட்டுரை கள் எழுத ஆரம்பித்தார். கடந்த மாதம் திடீரென்று தினமணி கதிரில் இம்மாதிரி ஒரு கதை வெளிவந்துள்ளது. அனேகமாக அது மறுஅச்சாகவே இருக்கக்கூடும். முதல் தலைமுறை வாசகர்களுக்கு இவருடைய கதைகள் சுவையாகவே இருக்கும். இவருடைய வலைப்பதிவில் பல இடங்களில் எனது பின்னூட்டத்தை காணமுடியும்.
பதிலளிநீக்குகணினி அறிவியலை உவந்தேற்று, புதிய தமிழ் எழுத்துருவை அவர் உருவாக்கினார் என்பதும் கடைசி மாதம் வரை வலைப்பதிவில் தீவிரமாக இருந்தார் என்பதும் இன்றைய 60+ வயதுள்ள கணினி தெரியாத 'வேடிக்கைமனிதர்'களுக்கு முன்மாதிரியாக இருப்பது உறுதி.
நான் டில்லியில் இருந்த மூன்றாண்டு காலத்தில் 'பாரதி 200' என்ற அமைப்புடன் கடுகு- அகஸ்தியன் என்பவர் தொடர்பில் இருந்த தகவல் சில ஆண்டுகள் தாமதமாக வே எனக்குத் தெரியவந்தது. //
பதிலளிநீக்குதெரிந்திருந்தால் நீங்கள் நிச்சயமாக அவருடன் உரையாடி நட்பு பாராட்டியிருப்பீர்கள் என்பது உறுதி சார்.
அவரைப் பற்றி நிறைய தகவல்கள் கொடுத்திருக்கீங்க சார் மிக்க நன்றி. அதுவும் கடைசி வரிகள்.
நானும் அவரது வலைத்தளத்தில் வாசித்திருக்கிறேன் ஆனால் கருத்து இட்டதில்லை. முன்பு எப்பொதோ கருத்து இட்டதுண்டு.
மிக்க நன்றி செல்லபா சார் நல்ல தகவல்களுக்கு
கீதா
இதுதான் புதிய ப்ளாகர் பதிவா. மிக அழகாக வந்திருக்கிறது.
நீக்குமஞ்சள் கொன்றை மலருக்கு
மகிழ்ச்சி வெள்ளம் பொங்குகிறது உங்கள் பதிவில்.
மகன் தத்து எடுத்திருக்கும் செபி
அழகன்.
வெகு நாட்களுக்குப் பிறகு அனைவரையும் இங்கே
பார்ப்பது மிக ஆனந்தம்:)
மஞ்சள் அழகி என்ற தலைப்பை பார்த்து, வளர்ப்பு பிராணிக்கு ஏதேனும் புதிய அடைமொழிபெயர் வைத்திருப்பீர்களோ என்றுதான் உள்ளே வந்தேன்.
பதிலளிநீக்குஅழகிய மஞ்சள் பூக்களை கண்டு மனம் மகிழ்ந்தேன்.
கடுகு காரம் அருமை. புதிய வரவின்(செபி) பார்வை வெகுளி.
முன்னாள் முதல்வரின் வரலாற்று பதிவை முழுமையாய் வாசிக்க ஆவல்.
கோ
மஞ்சள் அழகி என்ற தலைப்பை பார்த்து, வளர்ப்பு பிராணிக்கு ஏதேனும் புதிய அடைமொழிபெயர் வைத்திருப்பீர்களோ என்றுதான் உள்ளே வந்தேன்.
பதிலளிநீக்குஅழகிய மஞ்சள் பூக்களை கண்டு மனம் மகிழ்ந்தேன்.
கடுகு காரம் அருமை. புதிய வரவின்(செபி) பார்வை வெகுளி.
முன்னாள் முதல்வரின் வரலாற்று பதிவை (முழுமையாய்) வாசிக்க ஆவல்.
கோ