புதன், 3 ஜூலை, 2019

விவேகானந்தம் - குறும்படம்

அனைவருக்கும் வணக்கம்.

எங்கள் குறும்படம் விவேகானந்தம் பற்றி எனது முந்தைய பதிவில், படத்தை யுட்யூபில் பதிவேற்றம் செய்ததும் இங்கும் தருகிறேன் என்று சொல்லியிருந்த நினைவு. ஆனால் தாமதமாகிவிட்டது. முகநூலில் பகிர்ந்திருந்தேன்.  பல பணிகள், பிரயாணங்கள், மகனின் மருத்துவக் கல்லூரி அட்மிஷன் மனதில் குழப்பங்கள் என்று நேரம் டைட்டாகச் செல்கிறது.

இதோ யுட்யூப் சுட்டி. மலையாள வசனங்கள் ஆங்கில சப்டைட்டிலுடன். விவேகானந்த கேந்த்ர படனம் என்ற கல்வி நிறுவனத்தை வளர்த்த ஒரு சிறந்த மனிதரைப் பற்றியது. நேரம் இருக்கும் போது பாருங்கள். பார்த்துவிட்டு உங்கள் மேலான கருத்துகளைப் பதியலாம்.

படத்தில் போதை மருந்து பற்றிய ஒரு உரை வரும் அதைப் பேசுபவர் தான் அம்மனிதர்  பாஸ்கர பிள்ளை சார்.  அவர் தான் இக்கல்வி நிறுவனத்தை நிறுவுபவர்.


மிக்க நன்றி

அன்புடன் துளசிதரன்

11 கருத்துகள்:

  1. முப்பத்தைந்து நிமிடப் படம் என்கிறது. பின்னர் பார்க்கிறேன். அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் பிறகு காண்பேன்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் அண்ணா....பார்த்துவிட்டு இங்கு வருகிறேன் ..

    பதிலளிநீக்கு
  4. நான் முன்பே முகநூலில் இந்த வீடியோவை பார்த்து விட்டு கருத்து சொல்லி விட்டேன்.
    மிக அருமையாக இருக்கிறது.
    தாயும், மகனும் பேசுவது மிகவும் நன்றாக இருக்கிறது.
    உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் குழுவில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    காட்சி அமைப்புகள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  5. ஓட்டலில் உரையாடல் பின்னனியில் பழைய மலையாள பாடல் அருமை.

    பதிலளிநீக்கு
  6. சிறந்த மனிதருக்கு வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  7. அரிய முயற்சிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. முன்பும் பார்த்தேன். இப்பொழுதும் பார்க்கிறேன்.
    சிறந்த படம்.
    ஆகச் சிறந்த மனிதரைப் பற்றி அறியக் கொடுத்ததற்கு மிக நன்றி
    அன்பு துளசிதரன்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    தங்களது பல வேலைகளுக்கு நடுவிலும், சிறிதும் ஆர்வம் குன்றாது உழைத்து தந்த குறும்படத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறந்த மனிதரைப்பற்றி அறிய தந்தமைக்கும் நன்றிகள். இதுபோல் இன்னமும் தாங்கள் நிறைய படங்களை உருவாக்க இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு