“விவேகானந்தம்” தயாராகிவிட்டது. அடுத்த வாரத்தில் முன்னோட்டக் காட்சி திரையிடப்படும் என்று நம்புகிறோம்.
அதன் பின் யுட்யூபில் பதிவேற்றம் செய்யப்படும். எல்லா நட்புகளும், நலன் விரும்பிகளும், உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படத்தைப் பார்த்து உங்கள் விலைமதிப்பற்ற
கருத்துகளைப் பதிய வேண்டுகிறோம்.
இந்தப்
படத்தில் நடுவில் தன் மனைவியுடன் இருப்பவர்தான் திரு கே ஆர் பாஸ்கர பிள்ளை. இப்படத்தின் ஹீரோ.
கல்வி நிறுவனத்தை நிறுவுபவர். நிஜத்தில் உண்மையான கேரக்டரான அவரேதான் படத்திலும் தற்போதைய
பகுதிக்கு வருகிறார்.
நான் இதுவரை எடுத்த எட்டு படங்களில், ஐந்து வரலாறு சார்ந்த படங்கள்
மற்றும் இரண்டு தற்போதைய சமுதாயப் பிரச்சனைகள் சார்ந்தவை. ஆனால்
“விவேகானந்தம்”, வரலாற்றையும், தற்போதைய சமூகப் பிரச்சனையையும் உள்ளடக்கிய ஒன்று.
இக்கதை,
அரசு உதவி பெற்று நடத்தப்பட்ட பள்ளி ஒன்றில் 1964 ஆம் வருடம் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த, கே ஆர் பாஸ்கர பிள்ளை என்ற ஆசிரியரைப்
பற்றியது. அவர், என்னைப் போன்ற இலட்சக்கணக்கான
ஆசிரியர்கள் போன்றவர் அல்லர். சுவாமி விவேகானந்தாவைப் பின்பற்றுபவர்
என்பதால் அவரது பொன்மொழியான “எழுமின், விழிமின்,
குறிக்கோளை அடையும் வரை உழைமின்!” என்பதற்கு ஏற்ப
தன் குறிக்கோளை அடையும் வரை அயராது உழைத்தவர். அவர் உருவாக்கிய
கல்வி நிலைய வளாகத்துள் ஒரு மாணவன்/மாணவி தனது இருபது வருட கல்வியையும்
தொடர்ந்து பெறமுடியும். அதாவது, எல்கேஜி
யிலிருந்து மேல்நிலை பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி வரை பெற்று விடலாம்.
ஏறத்தாழ 7000 மாணவ மாணவிகள் இந்தப் படன கேந்தரத்தில்
கல்வி பயிலுகின்றனர்.
ஆம்!
மிகப் பெரிய தொலைநோக்குப் பார்வையுடனான அண்ணாமலை கல்வி நிறுவனங்கள்,
அழகப்பா கல்வி நிறுவனங்கள், விஐடி கல்வி நிறுவனங்கள்
போன்றவற்றை ஸ்தாபித்தவர்களுக்கு நிகராகப் போற்றப்பட்டு என்றென்றும் நினைவில் வைத்திருக்கப்பட
வேண்டியவர்.
தொடக்கப் பள்ளியைத் சொந்தமாக்கிய பின், 50 வருடங்களுக்குள்,
பல கல்வி நிறுவனங்கள் அடங்கிய ஸ்ரீ விவேகானந்தா படன கேந்த்ரா என்று தற்போது
அறியப்படும் கல்வி நிறுவனத்தை தனது அயராத உழைப்பால் நிறுவி நிலை நிறுத்தியவர்.
இப்படம்,
அப்படி வளர்ந்த ஸ்ரீ விவேகானந்தா படன கேந்த்ரா வைப் பற்றிப் பேசுகிறது.
கூடவே, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் நிலவும்
மிகப் பெரிய ஆபத்தான போதைப் பொருள் பற்றியும், அதிலிருந்து மாணவர்களை
மீட்க சமூகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
அப்படியாக,
இப்படம் “விவேகானந்தம்”, அதன் வரலாறு மற்றும் தற்போதைய சமூகப் பிரச்சனையையும் உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து
கொள்கிறது. நான் காணும் இவ்விரண்டைப் பற்றியும் கண்டபின் இது
போல் உங்களிடம் பகிராமல் இருக்க முடியவில்லை. அதனால்தான் இப்படம்.
படத்தைப் பார்த்து உங்கள் மேலான கருத்துகளைத் தெரிவிக்க மறந்துவிட மாட்டீர்கள்
என்று நம்புகிறேன். எங்கள் யூட்யூப் சானல்
Thulasidharan thillaiakathu https://www.youtube.com/channel/UCQ6LZoqGiZ_chztaUkuexlQ
மிக்க நன்றி அனைவருக்கும்!
அன்புடன்
துளசிதரன்
முன்னுதாரணமானோரை இவ்வாறாக அறிமுகப்படுத்தும்போது, பிறர் அவரைப் பின்பற்றிப் பணியாற்ற வாய்ப்புண்டு. முயற்சிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்ளின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்.
நீக்குமகத்தான மனிதரை அறிமுகம் செய்திருக்கின்றீர்கள்...
பதிலளிநீக்குநல்லார் ஒருவரால் நானிலம் பெறட்டும் நல்வளங்களை...
மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்!
நீக்குபோற்றுதலுக்கு உரிய மாமனிதர்
பதிலளிநீக்குகரந்தை நண்பரே கருத்திற்கு மிக்க நன்றி
நீக்குஅற்புதமான விடயம் வாழ்க வளர்க தங்களது முயற்சி.
பதிலளிநீக்குநிச்சயம் படம் பார்ப்பேன்.
கில்லர்ஜி மிக்க நன்றி கருத்திற்கும் வாழ்த்திற்கும். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
நீக்குநல்ல் விஷயத்தைப் பற்றி எழுதியிருக்கீங்க. படத்தை இன்று காண்கிறேன்.
பதிலளிநீக்குபள்ளி வளாகத்துக்கு அருகில் குட்கா, போதைப் பொருட்களா? இதை கேரளாவில் தடுக்கவில்லையா? (அங்கதான் மாணவர்களிடம் அக்கறை உள்ள அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன்)
நெல்லைத் தமிழன் உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
நீக்குகடந்த வருடம் 1.5 லட்சம் கிலோ போதைப் பொருள் பிடிபட்டு அழிக்கப்பட்டதாக எக்ஸைஸ் கமிஷனர் ரிஷி சிங்க் அறிவித்திருக்கிறார்.. கேரளாவில் முதலில் பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் அசோசியஷனின் உதவியுடன் செக்யூரிட்டி கார்ட்ஸ் நியமிக்கவும், ஒவ்வொரு 10 மாணவர்களுக்கு ஆசிரியர்களில் ஒரு மென்டரை நியமிக்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இப்படி ஒட்டு மொத்த சமுதாயமும் முன்வந்து இந்தப் பேராபத்திலிருந்து மாணவர்களையும், இளைஞர்களையும் போதைப் பொருளிலிருந்து காக்க வேண்டும் என்றும்.
பாராட்டபட வேண்டிய மனிதர் . இவர்களைப் போன்ற சில நல்ல மனிதர்களால்தான் நாடு வாழ்கிறது.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி மாதேவி தங்களின் கருத்திற்கு.
நீக்குமாதேவி இப்ப நீங்க எழுதறதில்லையோ?
நீக்குஎழுதுங்களென் ப்ளீஸ். உங்களின் பழைய பதிவுகளை வாசித்து வருகிறேன். சமையல் பக்கமும் கூட வைச்சுருக்கீங்க.. அப்படியே இலங்கைச் சமையல், யாழ் சமையல் குறிப்புகள் எல்லாம் போடலாமே...இன்னும்
கீதா
சிறப்பு....
பதிலளிநீக்குவாழ்த்துகள்...
மிக்க நன்றி டிடி வாழ்த்திற்கு!
நீக்குநல்லதொரு அறிமுகம். முடிந்தால் படமும் பார்க்கிறேன். நேரம் தான் அமைய வேண்டும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம் தங்களின் கருத்திற்கு. முடிந்தால் நேரம் கிடைத்தால் பாருங்கள்.
நீக்குநல்ல மனிதரை பாராட்ட வேண்டும். அருமையான அறிமுகம்
பதிலளிநீக்குபடம் பார்க்கும் ஆவலை தருகிறது உங்கள் விமர்சனம்.
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு தங்களின் கருத்திற்கு. முடிந்தால் பாருங்கள்.
நீக்குஓ துளசி அண்ணன் நீங்கள் படமும் வெளியிடுறீங்களோ... ஒரு படத்தில் நடிச்சது பார்த்தேன் என நினைக்கிறேன். விவேகானந்தம் என்பது தமிழ்ப் படமோ? தமிழ் என்றால்தான் மீ பார்ப்பேன் ஹா ஹா ஹா .. மலையாளமும் கொஞ்சம் புரியும்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
சகோதரி அதிரா, ஆம் வெளியிடுகிறேன். விவேகானந்தம் மலையாளத்தில் எடுக்கப்பட்ட படம். இது வரை ஆங்கிலத்தில் தான் எடுத்துக் கொண்டிருந்டேன். இதுதான் நான் மலையாளத்தில் எடுத்திருக்கிறேன். ஏனென்றால் இது எங்கள் பகுதியில் சேவை ஆற்றும் பள்ளி என்பதால். ஆங்கில சப்டைட்டிலும் வரும் கூடவே எனவே நீங்கள் பார்ப்பதில் சிரமம் இருக்காது.
நீக்குவாழ்த்திற்கு மிக்க நன்றி
ஒரு சாதனை மனிதரைப் பற்றிய படம் என்பது சிறப்பு. வெற்றியடைய வாழ்த்துகள். நீங்கள் உங்கள் சுவாரஸ்யங்களைக் குறைத்துக் கொள்ளாமல் உங்கள் குறும்படங்களைத் தயாரிப்பதற்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஸ்ரீராம்ஜி மிக்க நன்றி கருத்திற்கு. எங்கள் பகுதியில் அக்காலக்கட்டத்தில் இது மிகப் பெரிய சாதனை. ஏனெனில் எங்கள் பகுதி சிறிய பல கிராமங்களைக் கொண்டது. பல குடும்பங்களில் பள்ளிக்கு ஒரு சில வருடங்கள் அனுப்பிவிட்டு அப்புறம் தொடராமல் விடுவதும் உண்டு. வீடுகள் என்பது அடுத்தடுத்து இருப்பதில்லை. மலைப்பகுதியும் பள்ளத்தாக்கும் அன்பதால் ஆங்காங்கே தான் வீடுகள் இருக்கும். சரியான பாதைகள் கூட இல்லாமல் இருக்கும். எனவே ஒவ்வொரு வருடமும் பள்ளி கோடை விடுமுறையில் ஆசிரியர்கள் கேன்வாசிங்க் செல்வது உண்டு. எதனால் பள்ளிக்கு வர இயலவில்லை என்பதை அறிந்து அதை நிவர்த்தி செய்து பெற்றோர்களிடம் பேசி பள்ளிக்கு வரச் செய்வது என்று இந்த வருடம் வரையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்ஜி பாராட்டிற்கும் வாழ்த்திற்கும்!
வாழ்த்துக்கள் துளசி அண்ணா .நிச்சயம் காணொளி பார்த்து கருத்துக்களை கூறுகிறேன் .
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி ஏஞ்சல். கண்டிப்பாக உங்கள் எல்லோரது கருத்துகளும் செம்மைப்படுத்தும்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்லதொரு மனிதரின் பண்புகளை படமாக்கி தந்திருப்பது நல்ல விஷயம். தங்களது குறும்பட தயாரிப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தாங்கள் மென்மேலும் இவ்விதமான குறும்படங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு சிறக்க இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன். படம் பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன் தங்களின் வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும்
நீக்குநண்பர்கள், சகோதரிகள் எல்லோரும் மன்னிக்கவும். எனது பழைய பதிவுகளுக்கு முழுவதும் பதில் அளிக்க முடியவில்லை. பல தளங்களுக்கும் சென்று வாசிக்க இயலவில்லை. இன்று நீட் முடிவுகள். மகனுக்கு மருத்துவக் கல்லூரி அட்மிஷன் கிடைக்கும் வரை கொஞ்சம் பிசியாக இருக்கும். இடையில் வாசித்துக் கருத்தும் அளிக்க முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி அனைவருக்கும்.
பதிலளிநீக்குதுளசிதரன்
அன்பு துளசி,
பதிலளிநீக்குதங்கள் மகனுக்கு வெற்றி கிடைக்க ஆசிகள். கேட்கவே அற்புதமாக இருக்கும் இந்த நிகழ்வு படமாக வருகிறதென்றால் மகிழ்ச்சி தான். கட்டாயம் பார்க்கிறேன்.
திரு பாஸ்கரன் அவர்கள் நீண்ட காலம் சிறப்புடன் வாழவேண்டும். எழுத்தறிவிக்கும் இறைவன் அல்லவா.
இந்தப் பதிவுக்கு மிக நன்றி. தாமதமாக வந்ததற்கு மன்னிக்கணும்.
மிக்க நன்றி வல்லிம்மா தங்களின் அன்பான கருத்திற்கு. தாமதம் எல்லாம் இல்லை அம்மா.ஏன் இதற்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை எல்லாம். அப்படிப் பார்த்தால் நானும் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இன்னும் உங்கள் பதிவு வாசிக்கவில்லை. பல சமயங்களில் தாமதமாகத்தான் வருகிறேன்.
நீக்குமிக்க நன்றி வல்லி அம்மா
ஒரு மகத்தான மனிதரைப்பற்றி அறிய மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் இருக்கிறது.
பதிலளிநீக்குஒருவரின் சாதனைகளையும் நல்லெண்ணங்களையும் படமாக எடுக்க மனமும் சிந்தனையும் மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும்! சேவை மனப்பான்மை இருக்க வேண்டும்! அவை உங்களிடத்தில் இயல்பாக அமைந்திருக்கின்றன! நிச்சயம் உயரம் தொடுவீர்கள்! மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உங்களுக்கு!
குறும்படத்தைப்பார்த்து விட்டு மறுபடியும் தளத்திற்கு வருகிறேன்!
துளசி ஐயா, செயின்ட் தி கிரேட்டுக்குப் பிறகு உங்கள் அடுத்த திரைப்படைப்பு இதுதான் என நினைக்கிறேன். கண்டிப்பாகப் பார்த்து விட்டுக் கருத்துரைப்பேன். தில்லையகத்து கிரியேஷன்ஸ் என முகப்புப் படத்தில் பெயரைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு முந்தைய உங்கள் குறும்படங்களில் இப்படிப் பெயர் பார்த்ததாக நினைவில்லை. இதன் மூலம் ‘தில்லையகத்து’ எனும் வலைப்பூவின் பெயரைப் பன்முகம் கொண்ட ஊடகமாக நீங்கள் உயர்த்தியிருக்கிறீர்கள். அதற்குச் சிறுவனின் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநல்ல முயற்சி...இன்னும் பல குறும்படங்கள் வரட்டும் தோழர்
பதிலளிநீக்குCongratulations! After viewing the movie, I will post the comment.
பதிலளிநீக்கு