ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 10 - கா....கா....கா என்னை கா! 1

"நான் வெளிய போய் உனக்குச் சாப்பாடு கொண்டு வருகிறேன். அது வரை நீ கூட்டில் பத்திரமாக இருக்க வேண்டும். நான் வந்த பிறகு என் முன்னால் பறக்க முயற்சி செய்தா போதும். தாந்தோன்றித்தனமா பறக்க முயற்சி செய்யாதே” னு அம்மா சொல்லிட்டுத்தான் போனாங்க. நான் கேட்டால்தானே! அதான் நான் பறக்க முயற்சி செய்து இதோ கீழே விழுந்துவிட்டேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. அண்ணன் எங்கு போனானோ அவனையும் காணவில்லை. சரி அதோ ஏதோ தரை தெரிகிறதே! அங்கு போய் பார்ப்போம்னு கொஞ்சம் பறக்க முயற்சி செய்து தத்தி நடக்கத் தொடங்கின்.

ஹப்பா. எப்படியோ தரைக்குப் பக்கத்தில் வந்தாயிற்று. இன்னும் கொஞ்சம் தான் முயற்சி செய்தால் ஏறிவிடலாம். முயற்சி திருவினையாக்கும் னு அம்மா சொல்லிக் கொடுத்தாங்களே! அப்புறம் எங்களைப் பத்தியும் சொல்லறேன். எங்க இனத்துல 40 வகை இருக்காம். நாங்க எங்க வேணா அட்ஜஸ்ட் பண்ணி வாழ்வோமாம். எங்ககிட்டருந்து கத்துக்கோங்க! ஆனா ரொம்ப பனி உறைஞ்ச இடத்துல மட்டும் நாங்க இருக்க மாட்டோமாம். நாங்க உங்களுக்கு ரொம்ப நல்ல நண்பர்களாக்கும்! எங்களுக்குனு ஒரு மொழி உண்டு. ஒவ்வொரு பகுதிக்கேற்ப எங்கள் மொழியும் மாறுபடும்! உங்களைப் போலத்தான்! எங்களுக்கும் சைக்காலஜி தெரியும்! உங்கள் மனதைப் படித்து அதற்கு ஏற்ப நாங்கள் நடந்து கொள்வோம் தெரியுமா?! அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லறேன்! எங்க அம்மா சொன்னாங்க! நாங்க ஏக பத்தினி விரதன்களாம்! ஒரே துணையுடன் தான் வாழ்வோமாம். அம்மா எனக்கு அறிவுரை சொன்னாங்க. மனிதர்கள் நீங்கள் எங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இது!!!
அடடா! தப்பா வந்துட்டேன் போலருக்கே! நாங்க பறவைகளிலேயே மிகவும் சமயோசித புத்தியும், அறிவும் பெற்றவங்க னு எங்க மூதாதையர் பத்தி அம்மா நிறைய கதை எல்லாம் சொன்னாங்களே! எங்க மூதாதையரில் ஒருவர் பறந்துக்கிட்டே இருக்கும் போது அவருக்கு ரொம்ப தாகம் எடுத்ததாம். அப்போது வழியில் ஒரு பெரிய குவளையில் தண்ணீர் இருந்ததாம், ஆனால் அவரது அலகிற்கு எட்டவில்லையாம். உடனே அந்தக் குவளையில் கொஞ்சம் கூழாங்கற்களைப் போட்டு தண்ணீர் கொஞ்சம் மேலெழுந்து அலகிற்கு எட்டிட, தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டாராம். பாருங்கள் என்ன சமயோசித அறிவு!. எங்கள் மூளைப் பகுதியில் "நிபோபொடாலியம்" எனும் மூளையின் செயல்பாட்டுப் பகுதி அமைந்துள்ளதாம். அதான் எங்க அறிவுத்திறனுக்குக் காரணமாம். அப்போ நானும் இப்ப கொஞ்சம் என் மூளையைப் பயன்படுத்தி சரியான பாதையில் போகணுமே! அப்போதானே என் அண்ணனையோ, அம்மாவையோ காண முடியும்! இதோ இறங்கிட்டுப் பேசறேன். 
ஒரு வழியா இறங்கிட்டேன்! இன்னும் கொஞ்ச தூரம் எதிர்ப்புறமாகப் போய் பார்க்கிறேன். வழி தெரிகிறதா என்று. கொஞ்சம் காத்திருங்களேன்!
இவ்வளவு தூரம் வந்துவிட்டேன்! அம்மா, அண்ணா யாருடைய குரலும் கேட்கலையே. இதோ இங்கு தெரியும் சிமென்ட் பாதை சரியான பாதையா? பார்க்கணும்! பார்த்துட்டு வரேன்! களைப்பாக இருக்கிறது. பசி, தாகம் வேறு! அமாவாசை, தீபாவளி, பொங்கல் என்றால் நிறைய சாப்பாடு கிடைக்குமாம்! மற்ற தினங்களிலும் கூட சில நல்ல மனிதர்கள் சாப்பாடு, தண்ணீர் எல்லாம் தருவார்களாம். இன்று அமாவாசையா? அல்லது யாரேனும் ஏதேனும் தருவார்களா? கிடைக்குமா தெரியலை. ஆனால், கிடைத்தாலும் பயமாக இருக்கிறது சாப்பிட. அம்மா ஊட்டியே பழக்கமாகிவிட்டது. இனிதான் தனியாகச் சாப்பிடப் பழக வேண்டும். முதலில் பறக்கணுமே அதற்கு! நாங்கள் ஒற்றுமைக்குப் பெயர் போனவர்களாம். எங்களுக்குச் சாப்பாடு கிடைத்தால் எங்கள் உறவினர், நண்பர்கள் எல்லோரையும் அழைத்து உண்போமாம்! 2 கால் மனிதர்கள் நீங்கள் அப்படிச் செய்வீர்களா? அம்மா சொன்னார், மனிதர்களில் எச்சில் கையால் கூட எங்களை விரட்டாதவர்கள் உள்ளனராமே! ரொம்ப மோசம்!
எப்படியோ கிட்ட வந்தாச்சு! "மியாவ்" ஆ! இது ஏதோ வித்தியாசமான குரலா இருக்கே! இதைப் பத்தி அம்மா ஒன்னுமே சொல்லலியே! இது யார்? என்னையே முறைக்கிறாரே! கடித்துவிடுவாரோ? பயத்தைக் காட்டிக் கொள்ளலாமா? கூடாது. "நீங்க யார்? என்ன சிரிப்பு? எனக்கு வழி தெரியாமல் தவிக்கிறேன்னா? நீங்கள் என்னை எதுவும் செய்ய முடியாது. நான் பறந்துருவேனாக்கும். பறக்கத் தெரியாதுனு இவர்கிட்ட சொல்லக் கூடாது! என்று மனதில் நினைத்துக் கொண்டேன். பார்வை சரியில்லை. தாக்குவதற்குத் தயாராவது போல இருக்கே! ஐயோ! கா...கா...கா...என்னைக் கா! ஹை! என்னைப் பயமுறுத்தியவர் ஓடிவிட்டாரே! எப்படி? யார் விரட்டினார்கள்? ஓ! இங்கு யாரோ நிற்கிறார்களே! இவர்தான் துரத்தி விட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். நன்றி! நன்றி! 
மெதுவாகப் பறக்க முயற்சி செய்கிறேன்! என்னையும் விரட்டிவிடாதீர்கள்! ப்ளீஸ்! உங்களில் பலர் குடும்பம் ஒற்றுமையா இருக்கணும், சகோதரர்கள் பாசமாக இருக்கணும்னு எங்களை வழிபட்டு எங்களுக்குச் சாப்பாடு எல்லாம் வைப்பீங்களாமே! அப்ப நாங்க ரொம்ப நல்லவங்கதான் இல்லையா? சரி இப்படி வழிபாடு செய்யும் நீங்கள் ஏன் எங்கள் இருப்பிடமான மரங்களை எல்லாம் வெட்டுகிறீர்கள்? இந்த வீட்டுல நல்ல காலம் மரம் எல்லாம் வெட்டுவதில்லைனு அம்மா சொன்னாங்க. அதனால இங்கதான் அம்மா எப்பவும் இருப்பாங்களாம். ஆனா எங்க உறவினர், நண்பர் கூட்டமெல்லாம் இடம் இல்லாம தவிக்கிறாங்களாம். நீங்க கட்டடமா கட்டினீங்கனா நாங்க அங்கதானே வந்து இருக்க முடியும்! கொஞ்சம் யோசியுங்க ப்ளீஸ்! சரி இருங்க மீண்டும் பறக்க முயற்சி செய்யறேன்.
ஹும்! நானும் எவ்வளவோ முயற்சி செய்துதான் பார்க்கிறேன்! இதற்கு மேல் எழ முடியவில்லையே! அதோ ஒரு நல்ல செடி தெரிகிறதே! அங்கு நிழல் கிடைக்கும் போலத் தெரிகிறதே! கொஞ்சம் அங்குச் சென்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்..
ஹப்பாடா! எப்படியோ இங்கு வந்தாச்சு! கொஞ்சம் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன். சரியா! என் அம்மா வந்தாங்களா? நான் என் அண்ணனைப் பார்த்தேனா? இல்லை என்னை அப்போ ஒருவர் மிரட்டினாரே அவரிடம் சிக்கினேனா? எல்லாத்தையும் சொல்லறேன். கொஞ்சம் பொறுங்கள்! மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது. கொஞ்சம் காத்திருப்பீங்கதானே!

--------கீதா 





59 கருத்துகள்:

  1. >>> இந்த வீட்டுல நல்ல காலம் மரம் எல்லாம் வெட்டுவதில்லைனு அம்மா சொன்னாங்க..<<<

    எல்லா வீட்டிலும் இப்படி இருந்தால் எப்படியிருக்கும்!..

    காட்சிகளும் கதையும் அருமை!..

    வாழ்க காக்கை!.. வாழ்க அதன் கூட்டுறவு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு சகோ! ஆம் சகோ என் மாமியார் வீடுதான் அது. அங்கு மரங்களை வெட்ட மாட்டார்கள். எல்லா வீட்டிலும் இருந்தால் சுகம் தான் சோலையாக இருக்குமே! ஆனால் அடுக்கு மாடிகளாக அல்லவா வந்துகொண்டிருக்கின்றன! கருத்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  2. படங்களும் காக்கை வழி சொல்லும் கருத்தும் வெகு சிறப்பு. மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அதிகம் ரசித்தேன். பாராட்டுகள். இவை போன்ற பதிவுகளுக்கு நிதானமும் பொறுமையும் தேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா! தங்களின் பாராட்டிற்கும் ரசிப்பிற்கும்

      நீக்கு
  4. நல்ல அறிவுரை படங்களுடன் விவரித்த விதம் அழகு .

    பதிலளிநீக்கு
  5. முதல், மற்றும் மூன்றாம் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. கருத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. 40 வகைக் காக்கைகளா? அட! நம் கண்ணுக்கு எல்லாம் ஒரே மாதிரிதான் தெரிகிறது! நம் பார்வையில் ஜப்பானியர்களைப் பார்ப்பது போல....!!!


    ஏக பத்தினி இல்லாமல் ஏக் பத்தினியா? ஸூப்பர்!


    பூனையிடமிருந்து காக்கையைக் காப்பாற்றியவர் புகைப்படக்காரர்தானா!!! படங்கள் படிப்படியாக எடுக்கப்பட்டு நன்றாயிருக்கின்றன! நான்காம் வாக்கு என்னுதாக்கும்....!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஸ்ரீராம் ஜப்பானியர்கள், சைனாக்காரர்கள், என்று நிறைய பேர் சொல்லலாம் இல்லையா...அடுத்த ஹாஹாஹா ஏக....ஏக் சூப்பர்!! ஆனால் ஏகப்பத்தினி என்று வந்திருக்கணுமோ??!!ஏக பத்தினி என்றால் ஏகப்பட்ட என்ற அர்த்தமாகிவிடும் இல்லையா...

      பூனையிடமிருந்து காக்கைக் குஞ்சுவைக் காப்பாற்றியவர் புகைப்படக்காரரேதான்!!! ஹிஹிஹிஹி...மிக்க நன்றி ஸ்ரீராம் கருத்திற்கு

      நீக்கு
    2. ஆம் ஸ்ரீராம் 40 வகைகளும் பரவலாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா என்று இருக்கின்றன. இங்குமே அண்டங்காக்காய், மணிக்காக்காய் என்று கொஞ்சம் வித்தியாசம் இருக்கே...கரு கரு என்று அண்டமும் அதன் அலகும் கொஞ்சம் தடிப்பாக இருக்கும் கூர்ந்து பாருங்கள் தெரியும்.., கொஞ்சம் சாம்பல் நிறத்துடன் இருப்பவை ஒரு வகை போல ஒருசில வித்தியாசங்களுடன் 40 வகையும் இருக்கும்..

      நீக்கு
  7. அருமை.
    காக்கை சொல்லிய செய்திகள் எல்லாம் அருமை.படங்களும் நன்றாக இருக்கிறது.
    நானும் தாய் காகம் குஞ்சுக்கு உணவளிப்பதை எடுத்து இருக்கிறேன் படம்.ஒரு நாள் பதிவு போடுகிறேன்.
    கூட்டிலிருந்து அவசரப்பட்டு விழுந்து விட்டால் கூட்டுக்கு போக முடியாது. மிரட்டியவரிடம் மாட்டிக் கொள்ளாமல் பறந்து மரத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா. உங்கள் காகத்தையும் காண ஆவலுடன் இருக்கிறேன்...ஆமாம் இக்குஞ்சும் கஷ்டப்பட்டது....அடுத்த பகுதியில் அது சொல்லும்...

      நீக்கு
  8. மியாவ் என்ற சப்தம் கேட்டதும் அதிராதான் வந்து விட்டாரோ என்று பயந்து விட்டேன்.
    வாழ்க காகம் தொடர்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா கில்லர்ஜி நான் அதிராவை மற்றும் ஏஞ்சலின் ஜெஸியை நினைத்துக் கொண்டுதான் மியாவ் என்று எழுதினேன்!!! மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
    2. ///என்னைப் பயமுறுத்தியவர் ஓடிவிட்டாரே! எப்படி? யார் விரட்டினார்கள்? ஓ! இங்கு யாரோ நிற்கிறார்களே! இவர்தான் துரத்தி விட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். நன்றி! நன்றி! ///

      இந்த நன்றிக்குரியவர் கில்லர்ஜி ஆக இருக்குமோ.. ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணு:).

      நீக்கு
  9. காக்கைக் குஞ்சுகளுக்குத் தாய்க்காக்கை/தந்தைக்காக்கை உணவூட்டும்போது தான் குயில் குஞ்சுகளும் கலந்திருப்பதைக் கண்டு பிடிக்கும் காக்கைகள்! உடனே ஒரு அல்லோலகல்லோலம் ஆகும் பாருங்க! ஒரே சத்தம்! கூப்பாடு! எல்லாக் காக்கைகளும் ஒன்று சேர்ந்து குயில் குஞ்சை விரட்டும்! பார்க்கப் பாவமாக இருக்கும். ஆனாலும் ஏன் குயில் காக்கைக் கூட்டில் முட்டையை வைக்கிறதுனு புரியலை! காக்கையார் குஞ்சுக்காக்கையார் அடுத்து என்ன செய்யப் போகிறார்னு பார்க்கக் காத்திருக்கேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா....அந்த அமர்க்களத்தை நான் பாத்திருக்கிறேன். எங்கள் பால்கனியிலிருந்து பார்த்தால் எதிர்விட்டில் இருக்கும் மரத்தில் நீள கம்பு இங்ககிருந்து நீட்டினால் அவர்கள் வீட்டை எட்டும் அளவுதான் தூரம்....அப்போது பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போது கேமரா கிடையாது எனவே படம் எடுக்க முடியவில்லை...குஞ்சுக் காக்கையார் பாருங்கள் அடுத்த பதிவில்...

      மிக்க நன்றி கீதாக்கா

      நீக்கு
  10. ஒவ்வொரு பறவையும் முதன் முதல் பறக்கத் தொடங்கும் போது அதன் தாயும், சுற்றமும் அப்படிப் போ இப்படிப் போ என்று கத்தும். இங்கே அந்த காக்கைக் குஞ்சு கீழே விழுந்தாலும் மற்ற காகங்கள் இதன் குரல் கேட்டு வந்து இருக்க வேண்டும். அடுத்து என்ன ஆயிற்று என அறிய ஆவலாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் இளங்கோ சகோ மிக்க நன்றி!கருத்திற்கு.. ஆம் காகங்கள் வந்துவிடும்....காக்கைக் குஞ்சு சொல்லுவார்!!

      நீக்கு
  11. துரத்தித் துரத்திப் பிடித்திருக்கிறீர்கள்.
    சில வருடங்கள் முன்பு வாட்சப்பில் ஒரு விடியோ வலம் வந்துகொண்டிருந்தது. ஒரு அம்மையார் காக்கையை மணி என்று பேர் சொல்லி கையால் சாதம் ஊட்டுவார். அந்தக் காகம் பிகு செய்தபடி சாப்பிடும். ஆச்சரியமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா...காக்கைக் குஞ்சு தத்தித் தத்திச் செல்ல நான் படம் பிடித்தேன். துரை சார் அப்படிக் காக்கையைப் பழக்கப்படுத்தலாம் சார். இப்போதெல்லாம் காக்கைகள் பயமில்லாமல் அடுக்களை ஜன்னலில் உட்கார்ந்து கொண்டு அல்லது பால்கனி சுவற்றின் மீது உட்கார்ந்து கொண்டு நம் கையிலிருந்து வாங்கிச் செல்லும் அளவு தைரியம் வந்துவிட்டது. மனிதர்களோடு இருப்பதால்.
      பழகிவிடுகின்றன....அவர்களுக்கு மனித மனத்தைப் படிக்கவும் தெரியுமாமே!!

      மிக்க நன்றி துரை சார்

      நீக்கு
  12. ஆவ்வ்வ் இன்று ஒரு பகல் வரவில்லை.. ஆனா அதுக்குள் ஒம்ம்ம்ம்ம்ம்பது பேர் போஸ்ட் போட்டிருக்கினம்.. ஹையோ எப்படிக் கொமெண்ட்ஸ் போட்டு முடிப்பேன்ன்...

    ஆனாலும் கீதா நீங்க ரொம்ப மோசம்:) ஹா ஹா ஹா பயந்திட்டீங்களா? மொபைல் வோட்டுக்கு லிங் இணைக்கவில்லை.. இணைச்சிருந்தால் வோட் ஏழியா போட்டிருப்பேனே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதிரா த ம பெட்டி என் கண்ணுக்கே தெரியலையே அப்போ எப்படி லிங்க் தருவது??!!! நானும் இப்படித்தான் அதிரா நிறைய போஸ்ட் வந்துரும் கமென்ட் எப்படிப் போட்டு முடிக்கனு சில சமயம் திணறுவேன்...ஹாஹாஹா

      நீக்கு
  13. ஹா ஹா ஹா அழகிய ஒரு காதல் கதை:).. வெரி சோரி:) டங்கு கொஞ்சம் டடுமாறுது:).. அழகிய காகக் கதை... பொறுமையா இருந்து படிச்சேன்ன்.. அலட்டல் இல்லாமல் போறிங் இல்லாமல் இருந்துது...

    // நான் கேட்டால்தானே! அதான் நான் பறக்க முயற்சி செய்து இதோ கீழே விழுந்துவிட்டேன்.///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) படத்தில பார்க்க எட்டுக் கழுதை:) வயசானமாதிரித் தெரியுது:) இன்னுமா பறக்கத் தெரியல்ல.. நான் வந்தா தேம்ஸ்ல தள்ளிடுவேன்ன்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹப்பா அலட்டல் இல்லாமல் போரிங்க் இல்லாமல் தங்க்யூ தன்க்யூ....

      ஹாஹாஹாஹாஹா எட்டு கழுதை வயசு..தேம்ஸ்ல தள்ளுதல்....
      ..இல்ல அதிரா அம்மா ஊட்டி ஊட்டி கொழுத்துக் கிடக்க்து குஞ்சு!! செல்லக் குஞ்சுவா இருக்கும்! அதிரா உங்க பூஸாரும் கொழு கொழுவென...ஹையோ கண்ணு படப் போகுதய்யா இல்லப்பா நான் கண்ணு எல்லாம் வைக்கலை...ரொம்பவே ரசித்தேன்...நேத்து நான் பூஸார் படங்கள் எடுத்தேன்...ஸோ ஸ்வீட் கொஞ்சம் கூட பயமே இல்லை பூஸாருக்கு...எல்லாம் நல்ல போஸ் கொடுத்தினம்!!!

      நீக்கு
  14. ////எங்க இனத்துல 40 வகை இருக்காம்.///
    புதுத்தகவல்..

    /// நாங்க எங்க வேணா அட்ஜஸ்ட் பண்ணி வாழ்வோமாம்./// அதிராவைப்போல எண்டு சொல்லுங்கோ கீதா:).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்போ எதுக்கு எல்லோரும் முறைக்கினம்:).

    // ஆனா ரொம்ப பனி உறைஞ்ச இடத்துல மட்டும் நாங்க இருக்க மாட்டோமாம்//
    இது நிஜம்தான், ஆனா எங்கள் நாட்டில் பனிக்காலம் மிகக் குறைவென்பதாலோ என்னமோ.. காகம் உண்டு.. புரட்டாசிச் சனிக்கிழமை சோறு வைப்போமே:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிராவைப்போல எண்டு சொல்லுங்கோ கீதா:)// சைக்கிள் கேப்ல பூஸார் நுழைஞ்சுருவாரே!! குண்டா இருந்தாலும் ஃப்ளெக்சிபிள் உடம்பு ஹிஹிஹிஹி!!

      உங்க ஊர்ல எல்லாம் காகம் உண்டு..ஆமாம் பனி உறைஞ்ச..அண்டார்டிக்கா ஆர்டிக் ரீஜன்ல கிடையாது...புரட்டாசி சனிக்கிழமை மட்டும்தான் சோறு வைப்பீங்களா? ஹிஹிஹி...

      உங்க ஊர் காகம் ப்ரெட் பிஸ்கட் திங்கும்னு நினைச்சேன். இங்க எங்க ஊர் காகம் எல்லாம் இப்போ பிஸா, ப்ரெட் பிஸ்கட் தான் தின்னும்....

      நீக்கு
  15. // எங்க அம்மா சொன்னாங்க! நாங்க ஏக பத்தினி விரதன்களாம்! ஒரே துணையுடன் தான் வாழ்வோமாம். //

    இத்தகவல் கன்போமானதா கீதா? ஏனெனில் நான் அறிந்தது சுவான் மட்டும்தான் அப்படி, துணை இறந்திட்டால் சாகும்வரை தனியேதான் வாழுமாம் என.. காகம் அப்படியா இருக்க வாய்ப்பிருக்கா.. எப்பவும் கும்பலிலேயே கோவிந்தா போட்டுக்கொண்டிருப்பார்கள் அதனால் பார்வைக்கும் தெரிவதில்லை:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா கூட்டத்தோட கோவிந்தா பார்வைக்கும் தெரிவதில்லை...ஹாஹாஹாஹா...ஆம் ஸ்வான் அப்படித்தான். காகமும் அப்படித்தான் என்று காகத் தகவல்கள் சொல்லுகின்றது. மகன் சின்னவனாக இருந்த போது அவனுக்குச் சொல்லிய போது படித்த நினைவு...நீங்கள் சொல்லியிருப்பது போல் அதைக் கன்ஃபெர்ம் செய்து கொண்டு ஒரு வேளை தகவல் தவறாக இருந்தால் இங்குப் பகிர்கிறேன்...

      நீக்கு
  16. // "மியாவ்" ஆ! இது ஏதோ வித்தியாசமான குரலா இருக்கே! இதைப் பத்தி அம்மா ஒன்னுமே சொல்லலியே! இது யார்? என்னையே முறைக்கிறாரே! கடித்துவிடுவாரோ?///

    நோ நோ அது யெல்ப் பண்ணக் கூப்பிடுறார்:) பாவம் குஞ்சுக்காக்கா தப்பா நினைச்சுட்டார்ர்:))...

    //// பயத்தைக் காட்டிக் கொள்ளலாமா? கூடாது. "நீங்க யார்? என்ன சிரிப்பு? எனக்கு வழி தெரியாமல் தவிக்கிறேன்னா? நீங்கள் என்னை எதுவும் செய்ய முடியாது. நான் பறந்துருவேனாக்கும். பறக்கத் தெரியாதுனு இவர்கிட்ட சொல்லக் கூடாது! என்று மனதில் நினைத்துக் கொண்டேன். ///

    ஹா ஹா ஹா இது அஞ்சுவின் மைண்ட் வொயிஸ் ஆக இருக்கே.. நம்புங்கோ சத்தியமா அதே அதே... ஹா ஹா ஹா.. ஹையோ கலைக்கிறா.. மீ ரன்னிங்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைத்தேன் பூஸார் இப்படிச் சொல்லிண்டு வருவார்னு...சரி சரி ஏஞ்சல் வரட்டும் என்ன சொல்லறாங்கனு பார்ப்போம்...அப்போ ஏஞ்சலா காக்கைக் குஞ்சு?!!! ஆ ஆ அஞ்சூ அஞ்சாம ஓடி வாங்க....ஹாஹாஹா

      நீக்கு
  17. /// கொஞ்சம் யோசியுங்க ப்ளீஸ்! ///

    ஹா ஹா ஹா பறக்கத் தெரியல்லியாம் ஆனா இங்கிலீசு எல்லாம் பேசுறாரே காக்கையார்:))... நன்றாக இருக்கு படமும்.. கதையும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா காக்கா இப்போதுமனிதருடன் தானே வாழுது!!! அதனால அவை இங்க்கிலீஸு எல்லாம் பேசும்...சொல்லிருக்கேனே அவங்களுக்கு ரீஜனுக்கு ஏத்தாப்புல மொழி வேறுபடும்னு....அப்போ உங்க ஊர் காக்கா இங்கிலீஸுதான் பேசும் இல்லையா,, ஹாஹாஹாஹா

      நீக்கு
    2. இங்க காக்கா எல்லாம் கா கா கா என்றுதான் கரையும்...அப்போ உங்க ஊர் காகம் காவ் காவ் நு சொல்லுமோ இங்கிலீஸ் அக்சென்டில்??!!! ஹாஹாஹாஹா

      நீக்கு
  18. அட காகத்தின் பின்னணியில் இத்தனை விஷயங்களா! பதிவும் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோவிந்தராஜு ஐயா தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  19. நான் நேத்து போட்ட கமெண்ட்ஸ் எங்கே கே ஏ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காக்கா பதிவு இல்லையா ஏஞ்சல் ஸோ காக்கா உஷ்!! அந்தக் குஞ்சுக் காக்கையிடம் கேட்போமா??!!!! ஹையோ கமென்ட் அல்லாம் போச்சா இப்படி சில சமயம் ஆகுது ஏஞ்சல் கஷ்டப்பட்டு அடிச்சு போட்டு அப்புறம் போயிருக்காது....மீண்டும் அடிக்கணும்னா ...ஹோ...பரவால்ல விடுங்க...

      நீக்கு
  20. அண்டங்காக்கை, காகம் மட்டும்தான் எனக்கு தெரியும்...

    பதிலளிநீக்கு
  21. மரத்தை வெட்டிடனும், தண்ணியை உறிஞ்சிடனும், மணலை அள்ளிடனும், கல்லை கரைச்சுடனும். காசை மட்டும் சேர்த்து வச்சு பசங்கக்கிட்ட கொடுத்துட்டா போதும்ன்னு நினைக்குறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைச் சொல்லுங்க...மனுஷன் புத்தி....இப்படி எல்லாம் செஞ்சுட்டு எச்சக்கையால கூடக் காக்கைய விரட்ட மாட்டோம்...

      நீக்கு
  22. காக்கா சொல்லியாவது திருந்துறமான்னு பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  23. "அம்மா" சொன்னதை யார் கேட்பார்கள்.

    காக்கா படக்கதை அருமை.

    கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "அம்மா" அந்த அம்மா இல்லைஹிஹிஹிஹி....இது நல்ல அம்மா...அதனால்தான் கேட்பதில்லையோ...மிக்க நன்றி கோ

      நீக்கு
  24. காக்கவின் பரிபாஷைகளை உணர்த்து தத்துரூபமாக பதிவிட்டிருக்கும் நீங்கள் போன ஜென்மத்தில் ஒருவேளை....fill in the blanks.

    கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா பரவால்ல பரவால்ல கோடிட்ட இடத்தை நிரப்பிக்கறேன்...போன ஜென்மத்துல காக்கையாக என்று....நல்ல விஷயம்தானே கோ...ரொமப்வே சந்தோஷப்படுவேன்...ஊரையே சுத்தப் படுத்தியிருப்பேன் இல்ல....

      மிக்க நன்றி கோ...ரசித்தேன் கமென்டை...

      நீக்கு
  25. காக்கை எப்போதும் ஒற்றுமையாக வாழும் கூட்டம்))) அரசியல்க்காக்கை பற்றியும் தொடர்ந்து பேசுவீங்க என்ற நம்பிக்கையில் நானும் இப்போது மூச்சு வாங்கிகின்றேன்)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா தனிமரம் நேசன்!! என்னப்பா நீங்க! என்னை அரசியல் பேசச் சொல்லுறீங்க!! அந்தக் காக்கை வேண்டாம்!! இந்த இயற்கையான நல்ல காக்கைகள் போதுமே!! மிக்க நன்றி நேசன் கருத்திற்கு...

      நீக்கு
  26. இப்போதைய சூழ்நிலையில் இது போன்று நின்று நிதானித்து இயற்கையோடு பல விசயங்களை உங்களால் ரசிக்க முடிகின்றது என்றால் நிதானமான வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜோதிஜி! நிதானமான வாழ்க்கைதான்! எத்தனை பரபரப்பாக இருந்தாலும், மனதில் கஷ்டங்கள் இருந்தாலும், இடர்கள் வந்தாலும், மனதில் பல சிந்தனைகள் ஓடினாலும், பிரச்சனைகள் குறித்த சிந்தனைகள் தீர்வுகள் என்று எவ்வளவோ ஓடினாலும்.... நாம் வாழ்க்கையை ஒவ்வொரு மணித் துளியையும் ரசிக்கக் கற்றுக் கொண்டுவிட்டால் நிதானமான வாழ்க்கையை வாழலாம் இல்லையா??!!!...இது நான் என் மாமியார் வீட்டிற்குச் செல்லும் போது அங்கு அவர்களுக்குச் செய்வதை செய்துவிட்டு இடையில் சுற்றிலும் இருக்கும் சிறு தோட்டத்தை வலம் வருவது வழக்கம். அப்படி வரும் போது எப்போதுமே எனது மூன்றாவது கண்ணும் வரும் என்னுடன். ரசிப்பவற்றைப் பிடித்து வைத்துவிடுவேன்...காலையில் நடைப்பயிற்சி செய்யும் போது கூட சுற்றிலும் ரசித்துக் கொண்டே நடப்பது...என்று...

      மிக்க நன்றி ஜோதிஜி! கருத்திற்கு

      நீக்கு
  27. ஆகா...கைபிடித்து கூட்டிபோகும் எழுத்து...!

    பதிலளிநீக்கு